யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/6/17

முதுகலை ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு, பணி நியமன ஆணை வழங்கக்கூடாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் மொத்தப் பதவிகளில் 4 சதவீதம் ஒதுக்க வேண்டும். அச் சட்டத்தின்படி 4 சதவீதம் என்ற அளவீட்டில் 67 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவு வருமாறு:

கடந்த மே 9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கிரேட்-1 பணிக்கான விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தொடங்கலாம். ஆனால், எந்த நியமனத்தையும் ெசய்யக்கூடாது. வழக்கு வரும் 16ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

''நீட் உட்பட, மத்-திய அரசின் நுழைவு தேர்-வு-களுக்கு, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறிஉள்ளார்.

தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கும் விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள, ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.


மாதிரி வினாத்-தாள் : இதில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று பேசி-யதா-வது: மாண-வர்க-ளுக்கு யோகா மற்றும் சாலை விதி-கள் குறித்த பயிற்-சி-கள் தரப்படும். 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்-வு-களுக்கு எப்-படி வினாத்-தாள் வர உள்ளது என்-பது குறித்து, ஆசி-ரி-யர்கள், மாண-வர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.


இந்த பணி-கள், இன்னும் ஒரு வாரத்தில் முடியும். பிளஸ் 1 மாண-வர்க-ளுக்கு மாதிரி வினாத்-தாள் வழங்கப்படும்.


42 அறி-விப்-பு : நீட் - ஜே.இ.இ., போன்ற மத்-திய அரசின் அனைத்து நுழைவு -தேர்வுக-ளை-யும் சந்-திக்க, ஒன்-றி-யத்-துக்கு ஒரு இடம் வீதம், சனிக்கிழமையில், சிறப்பு பயிற்சி அளிக்கப்-ப-டும். கல்-வித்-துறை குறித்து, 42 அறி-விப்-பு-களை, வரும், 15ம் தேதி, பள்-ளிக் கல்வி மானி-யக் -கோ-ரிக்கையில் எதிர்-பார்க்க-லாம். இவ்வாறு அவர் பேசினார்.


அரசு ஊழியர் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு? : 'அரசு ஊழி-யர்க-ளின் பிள்-ளை-கள், அரசு பள்-ளி-யில் சேர்க்கப்-பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படுமா?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''அரசு பள்-ளி-களில் மாணவர் சேர்க்கை குறித்து, விழிப்-பு-ணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு, 1 லட்-சம் மாண-வர்கள் கூடு-த-லாக சேர்ந்துள்ளனர். அரசு பள்ளி, கல்லுாரிகளில் இருந்தே, சிறந்த கல்-வியாளர்கள் தேர்வாகி உள்ளனர்; அதற்கான பட்-டி-யலை தர தயார். எனவே, எல்-லா-ரும் இதற்கு ஒத்-து-ழைப்பு தருவர்,'' என்றார்.


ஐகோர்ட்டில் முறையீடு : மருத்துவ படிப்புக்கான நுழைவு தகுதி தேர்வு, 'நீட்'க்கு விலக்கு அளிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று முறையிடப்பட்டது.உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' கூடியதும், மூத்த வழக்கறிஞர் விஜயன், ''கடந்த ஆண்டில் விலக்கு அளிக்கப்பட்டது போல், இந்த ஆண்டும், 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; இது குறித்து தாக்கல் செய்யும் மனுவை, அவசரமாக விசாரிக்க வேண்டும்,'' என்றார். மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, ''உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலம், 30ல் முடிகிறது; எனவே, அது தொடர்பான வழக்கையும் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.


இது குறித்து, மனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், அதை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

7/6/17

தமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது.

2018-ம் ஆண்டிற்கான  பொது தேர்வு தேதிகள்  அறிவிப்பு*

*2018ம் ஆண்டு நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு நடைப்பெறும் தேதிகளை தமிழக அரசு அறிவித்தது.*


*தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியும் அறிவிப்பு.*

*10ம் வகுப்பு தேர்வு 16.3.2018 தொடங்கி 20.4.18 முடியும் என அறிவிப்பு*

*10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.5.2018 வெளியிடப்படும்.*

*11ம் வகுப்பு தேர்வு 7.3.2018 தொடங்கி 16.4.18 வரை நடைப்பெறும்*

*11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 30.5.18 வெளியிடப்படுகிறது.*

*12ம் வகுப்பு தேர்வு 1.3.2018 தொடங்கி 6.4.18 முடியும்.*

*12ம் வகுப்பு தேர்வு முடிவு 16.5.18 வெளியிடப்படுகிறது.*

2018ம் ஆண்டு 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, தேர்வு முடிவுக்கான தேதிகள் அறிவிப்பு

தொடக்கக் கல்வி -அரசு நலத்திட்டங்கள் 2012-2013 கல்வியாண்டு முதல் 2017-2019 கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல் -தொடர்பாக




TET' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம் - ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம்
துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடந்தது.


இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக்குறிப்புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர்.


இந்தகடிதங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறாகவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது.



ஒருவாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்கு கிறது. ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது

இண்டர்நெட் திட்டங்களுக்கு இனி ஒரு வருஷம் வேலிடிட்டி: மொபைல் சேவை நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் ட்ராய்!

மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று
'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது.


பொதுவாக 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்)  பரிந்துரைக்கும் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள்  இருப்பதை, மொபைல் சேவை  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பதே இல்லை. எனவே குறைந்த செலவில் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பிய ட்ராய், தற்பொழுது மொபைல் சேவை  நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.


இதுதொடர்பாக ட்ராய் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:


மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் வழங்கும் இண்டர்நெட் திட்டங்களில்,  ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள ஒரு இன்டர்நெட் சேவை திட்டமானது கண்டிப்பாக இடம்பெற வேண்டும். அத்துடன் அந்த திட்டமானது அதிக அளவு டேட்டா பயன்பாடு கொண்டாதாகவும் இருக்க வேண்டும்.


நாடுமுழுவதும் தொலை தொடர்பு சேவையை விரிவு படுத்தும் பொருட்டும், டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டும், ட்ராய் அறிமுகப்படுத்தும் இந்த திட்டத்தினை, அனைத்து மொபைல் சேவை  நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு  வழங்குவார்கள்;என்று எதிர்பார்க்கிறோம்.


ட்ராய் அமைப்பானது இது தொடர்பாக விரைவில் மொபைல் சேவை  நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை கூட்டங்கள் நடத்த உள்ளது. அலைபேசி நுகர்வோர் அமைப்புகளும் இத்தகைய ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலமே வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தினை நாங்கள் அறிந்து கொள்ள முடியும்.



இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக 2012-13ம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்பட்டவர்கள் - நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்

தொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் 06.06.2017க்குள் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவு

தரம் உயரும் பள்ளிகளுக்கான அரசாணை தாமதம் : 50 ஆயிரம் இடங்கள் வீணாகும் அபாயம்

நடப்பு கல்வியாண்டில், தரம் உயர்த்தப்படும், 250 பள்ளிகளுக்கான அரசாணை வெளியாவதில் தாமதமாவதால், 50 ஆயிரம் மாணவர்களின் சேர்க்கை
வீணாகும் அபாயம் உள்ளது.


 'நடப்பு கல்வியாண்டில், 150 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும்; 100 உயர்நிலைப் பள்ளி கள், மேல்நிலைப் பள்ளி களாகவும், தரம் உயர்த்தப் படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 'எந்தெந்த இடங்களில் தரம் உயர்வு தேவை என்பதை ஆய்வு செய்து, பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும்' என, தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர், சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் குறித்த பட்டியலும், அது தொடர்பான அரசாணையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் எதுவென தெரியாமல், மாணவர்கள் சேர்க்கை நடக்கவில்லை. மேலும், பள்ளிகளை தாமதமாக தரம் உயர்த்து வதால், 50 ஆயிரம் மாணவர்களின் சேர்க்கை வீணாகும் அபாயம் உள்ளது. அதாவது, 100 மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு பாடப்பிரிவுகளில், 20 ஆயிரம்; 150 உயர்நிலைப் பள்ளிகளில், ஒன்பது, ௧௦ம் வகுப்புகளுக்கு, 30 ஆயிரம் இடங்கள் என, ௫௦ ஆயிரம் இடங்களில், மாணவர்களே இல்லாமல், ஓர் ஆண்டை கழிக்கும் நிலை உருவாகியுள்ளது.


இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஏதோ சில காரணங்களுக்காக, அரசாணையை வெளியிடுவதில், அரசு தாமதம் செய்கிறது. பள்ளிகளை தரம் உயர்த்த, ௫௦௦ கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப் படலாம். 'இதனால், அந்த நிதி வீணாவதுடன், தரம் உயரும் பள்ளிகளில், நடப்பு ஆண்டில், மாணவர்கள் சேர முடியாத நிலைமையும் உருவாகும்' என்றனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று...திறப்பு!

ஐம்பது நாள் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் இலவசங்களை, உடனடியாக கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிகளில், முதல் நாளான இன்று, மாணவர் கள், புதிய வகுப்புக்கு மாற்றம் செய்யப்படுகின் றனர். பின்,அரசு மற்றும் அரசு உதவி பள்ளிக ளில், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம் மற்றும் நோட்டுகள், இன்றே வழங்கப்படுகின்றன.


அறிவுறுத்தல்


மேலும், 8ம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை களும் வழங்கபட உள்ளன.இவற்றை எல்லாம் உடனடியாக வழங்கும்படி, அரசு உத்தர விட்டு உள்ளது. இலவசங்கள் வினியோகத் திற்கு பின், பள்ளிகளுக்கு விடுமுறை விடப் படும். நாளை

முதல், வழக்கம் போல வகுப்பு கள் துவங்கும். தனியார் பள்ளிகளில், புதிய மாணவர்களை வரவேற்றும், புதிய வகுப்புக்கு மாறும் மாணவர் களை வாழ்த்தியும், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதல் நாள் என்பதால், மாணவர்கள், சீருடை அணிந்தே வர வேண்டும் என, பள்ளிகள் அறி வுறுத்தி உள்ளன.இதற்கிடையில்,ஓரிரு மாவட் டங்களில் மட்டும், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு விஷயத்தில், உள்ளூர் நிலவ ரத்திற்கு ஏற்ப, அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவெடுக்கலாம் என, அரசு ஏற்கனவே கூறியுள்ளது.


பழைய'பஸ் பாஸ்'


'பள்ளி மாணவர்கள், புதிய, 'பஸ் பாஸ்' வழங்கப் படும் வரை, கடந்த ஆண்டு பாசை பயன்படுத்தி, இலவசமாக பயணம் செய்யலாம்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் வழங்கும் பணி, இன்னும் துவங்கவில்லை. அதனால், மாணவர் கள், பழைய பஸ் பாசை பயன்படுத்த லாம் என, அரசு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து

உள்ளனர்.பழைய பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, பஸ்களில் அனுமதிக்கும்படி, நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு


புதுச்சேரி:''வெயில் தாக்கம் குறையாததால், புதுச்சேரியில் கோடை விடுமுறை நீட்டிக்கப் பட்டு, 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்,'' என, அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார். இதுகுறித்து, முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசித்த பின் கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:

விடுமுறை விடாமல் பள்ளியை தொடர்ந்து நடத்தினால் தான், ஓராண்டு பாடங்களை நடத்தி முடிக்க முடியும். கடந்த ஆண்டு மழை பெய்யாததால், மழை விடுமுறை விடப்பட வில்லை. இந்த ஆண்டு, கனமழை இருக்கும் என, கூறப்படுகிறது.


விடுமுறை விட்டால், சனிக்கிழமை தோறும் பள்ளிகள் திறக்க வேண்டிய சூழல் ஏற்படும். இருந்தும், கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுப்பதாலும், பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும், 12ல், பள்ளிகள் திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு


2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு

5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்


1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு

பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கான உணவு கட்டணம் உயர்வு : முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு 2017-18ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.


 அதன்படி, விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.755லிருந்து ரூ.900ஆகவும், கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.875 லிருந்து ரூ.1000 ஆகவும்  உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.


இந்தஉயர்த்தப்பட்ட உணவுக் கட்டணம், 2017-18ம் கல்வியாண்டு ஜூன் 2017 முதல் மாணவ, மாணவியருக்கு வழங்கிட முதல்வர் அனுமதி வழங்கியதோடு, அதற்கான கூடுதல் செலவினத் தொகையான 12 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 750 ரூபாய்க்கு  நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 1338 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 86,807 மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள்.

10-வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு தலா ரூ.10,000 பரிசு - உத்தரபிரதேச அரசு அதிரடி

உத்தரபிரதேசத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு தலா ரூ. 10,000 பரிசு தொகையாக வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத்
உத்தரவிட்டுள்ளார்.


 உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் யோகி ஆதித்யநாத் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் ஒவ்வொரு மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அம்மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் ஷர்மா இந்த அறிவிப்பை வெளியிட்டார். கன்யா வித்யா தன் யோஜனா (KVDY) முறையின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுபான்மையினருக்கும் உதவி செய்யும் வகையில் ஏழை முஸ்லிம் பெண்களின் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க யோகி அரசு முன்வந்துள்ளது.


100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் சிறுபான்மையினர் சேர்த்துள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மோகினி ராசா தெரிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத்தின் 45-வது பிறந்தநாளையொட்டி 100,000 பெண்களை கவுரவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

TET - 1111 ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் - நாளை சான்று சரிபார்ப்பு

அரசுதொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1111 பட்டதாரி ஆசிரியர், சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதிப் பட்டியலை பிப்ரவரி மாதம் தயாரித்தது.


 மேலும், சந்தேகம் இருப்பின், கடந்த மார்ச் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.


இந்தபட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பட்டியலில் உள்ளவர்களுக்கு சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடக்க இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

G.O.335, date 2.6.2017-அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை இறைவணக்க கூட்டம் நடத்துதல் குறித்து வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு..

5/6/17

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்

தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ. 700 சிறப்பு ஊதியம் வழங்கப்படுவதோடு, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

பாடத்திட்ட மாற்றத்திற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும்

தமிழக பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக இன்னும் 2 நாட்களில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், ஒரு பாடத்திற்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் பொதுவான சராசரி மதிப்பெண் கணக்கிடப்பட்டு ஒரே சான்றிதழ் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் இந்திய அரசியல் சாசனத்தில் உள்ளது போல இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக மாணவர்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் பழனிச்சாமியின் ஒப்புதலோடு ஜூன் 6 அன்று வெளியாகவுள்ள கல்வி சார்ந்த அறிவிப்புகளைப் பார்த்து நாடே வியப்படையும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், பத்திரப் பதிவுத் துறையிலும் நல்ல அறிவிப்பு வெளிவர இருக்கிறது எனவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 491 தனியார் மெட்ரிக், 40 நர்சரி பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்று வழங்கும் விழா காட்பாடி தனியார் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்று வழங்கி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
வேலூர், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு கல்வி மாவட்டம் ஏற்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. பிளஸ் 1 பாடத் திட்டம் குறித்த கமிட்டியில் இடம்பெற உள்ள கல்வியாளர்கள் குழு குறித்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 17,000-த்துக்கும் மேற்பட்ட மெட்ரிக். மற்றும் 3,000 நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் நிர்வாகிகள் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.

அதேபோல, தனியார் தொழிற்சாலைகள் உதவியுடன் கட்டப்பட்டு வரும் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெறும்.
யோகா, தேசப் பற்று, சாலைவிதி, பெற்றோரை மதிக்கும் நிலை, விளையாட்டு ஆகிய 5 அம்சங்களை உள்ளடக்கிய வகுப்பறைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரப் பதிவுத் துறையிலும் நல்ல அறிவிப்பு வர இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கும் அரசாக இருப்பதால் 5 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்றார்.
நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்.பி. கோ.அரி, எம்எல்ஏ-க்கள் என்.ஜி.பார்த்திபன், சு.ரவி, ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்

7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் படி, மத்திய அரசு ஊழியர்களின் மாத வருமானம் ரூ .7,000 இலிருந்து ரூ. 18,000 ஆக குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் திருத்தப்பட்ட வருமானம் 9,300 முதல் 34,800 ஊதியம் வரை அதிகரித்துள்ளது. 4200, 4600, 4800 மற்றும் 5400 ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் ஊதியம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது மேலும் 40 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
 *5,200-20,200 ஊதிய குழுவினால் மத்திய அரசாங்க ஊழியர்கள் வகுப்பு 1800 முதல் 2800 வரை ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இது மேலும் 40 மட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்.
   *7th Pay Commission: Revised pay matrix under all pay bands for central government employees.    
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம் பாதுகாப்பு பணம் மேட்ரிக்ஸ்.    *பாதுகாப்பு பேட் மேட்ரிக்ஸ், முந்தைய 24 நிலைகளாக பிரிக்கப்பட்டது இப்போது சிவில் பே மேட்ரிக்ஸ் போன்ற 40 நிலைகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 7 வது ஊதியக் குழுவின் கீழ் திருத்தங்கள் செய்ய அனுமதி அளித்தது.  *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்.  
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம் ஓய்வூதிய திருத்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2016 க்கு முந்தைய ஓய்வூதியம் பெறும் மத்திய ஊதியக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட ஓய்வூதிய மதிப்பீட்டு முறையை மாற்றியமைத்துள்ளது.