யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/6/17

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் இல்லை-உச்சநீதிமன்றம்.

ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசு உத்தரவுக்கு உச்சநீதி மன்றம்
இடைக்கால தடை விதித்துள்ளது.

WhatsApp New Updates – தவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம் – அசத்தலான புதிய வசதிகள்!!!!

வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக்கூட இன்றைய தலைமுறையினரால் கடத்திவிட முடியாது. அலுவலகப்பணி காரணமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடவும் வாட்ஸ்அப் தான் அதிகம்
பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 120 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.



வாட்ஸ்அப் – புதிய வசதிகள்

வாட்ஸ்அப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், டெஸ்ட்டர்களுக்கான பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தி சோதிப்பது வழக்கம். அதன்பின் தான் புதிய வசதிகள் அனைத்தும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும். சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Beta Version – 2.17.210), அசத்தலான சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படலாம்.

மெஸேஜை திரும்பப்பெறலாம் :

வாட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெஸேஜை அனுப்பிவிட்டு, அதை நீக்கவோ அல்லது திரும்பப்பெறவோ முடியாமல் சிரமப்பட்டிருப்போம். மெஸேஜை டெலீட் செய்தால் அனுப்பியவரின் சாட்டில் மட்டுமே அது நீக்கப்படும். ஆனால், ரிசீவர் மொபைலில் அந்த மெஸேஜ் அப்படியே இருக்கும். பீட்டா வெர்ஷனில் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது வாட்ஸ்அப். மெஸேஜை திரும்பப்பெற்றுக்கொள்ள ‘Unsend’ என்ற ஆப்ஷன் பீட்டா வெர்ஷனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரும்பப்பெற நினைக்கும் மெஸேஜை செலக்ட் செய்ததும், திரையின் மேலே மெனு ஒன்று தோன்றும். அதில் ‘Unsend’ ஆப்ஷனை கிளிக் செய்தால், உடனடியாக மெஸேஜ் திரும்பப்பெறப்படும். ஆனால், மெஸேஜ் அனுப்பி ஐந்து நிமிடங்களுக்குள் மட்டுமே அதைத் திரும்பப்பெற முடியும். அதற்கு மேல் நேரமாகியிருந்தால் மெஸேஜை திரும்பப்பெற முடியாது. ரிசீவர் மொபைலில் இருந்தும் அந்த மெஸேஜ் உடனடியாக நீக்கப்பட்டு, அன்சென்ட் செய்யப்பட்ட விவரம் மட்டும் தெரிவிக்கப்படும்.

லைவ்லொக்கேசன் :

வாட்ஸ்அப்பில் ஓர் இருப்பிடத்தின் மேப்பை எளிதாகப் பகிர்ந்துகொள்ளக்கூடிய லொக்கேசன் ஆப்ஷன் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த மேப்பில் குறிப்பிட்ட இடம் எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இதே போல, நடமாடும் ஒரு நபரின் அப்போதைய இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் ‘லைவ் லொக்கேசன்’ ஆப்ஷனையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நபர் தனது லைவ் லொக்கேசனை மற்றொரு நபருக்கு அனுப்பினால், அதன் மூலம் அந்நபர் பயணிக்கும் இருப்பிடங்களின் லொக்கேசனை அறிந்துகொள்ள முடியும். பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் லைவ் லொக்கேசனைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் :


வாழ்வின் அத்தனை இனிமையான தருணங்களையும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தான் தற்போதைய ட்ரெண்ட். புகைப்படம், வீடியோ, Gif போன்ற எந்த ஃபார்மட்டிலும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். 24 மணிநேரம் இந்த ஸ்டேட்டஸை மற்றவர்களால் பார்க்க முடியும். இந்த பீட்டா வெர்ஷனில் டெக்ஸ்ட் (Text) வடிவில் கலர் பேக்ரவுண்ட் உடன் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மெஸேஜில் Bold, Italic, Strike Through போன்ற எழுத்துருவின் வடிவங்களை மாற்றிக்கொள்வது போல, டெக்ஸ்ட் ஸ்டேட்டஸிலும் மாற்றிக்கொள்ளலாம்

EMIS - Student Application Form

9/6/17

அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!!

அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் குழந்தைகளை அரசு பள்ளியில்
சேர்க்குமாறு உத்தரவு வரவிருக்கிறதா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்தார்.

சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை வழங்கினார். விழாவில் அவர் கூறியதாவது:

தமிழக அரசு வெளிப்படைத்தன் மையுடன் செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் வெளிப்படையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப் பட்டன என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஆசிரியர்கள் எந்தவிதமான மன உளைச்சலும் இல்லாமல் நல்ல முறையில் பணியாற்ற இந்த அரசு என்றும் துணை நிற்கும். தற்போது கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கை யையும் மக்கள் கூர்ந்து கவனிக் கிறார்கள். கல்வித்துறையை மேம் படுத்துவதன் மூலம் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும்.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 20 லட்சம் பேருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு களை அனுப்பினோம். இது இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சரித்திர சாதனை ஆகும். பாகுபாடு காரணமாக மாணவர் களுக்கு ஏற்படும் மன உளைச் சலைத் தடுக்கும் வகையில் பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறையை இந்த ஆண் டிலிருந்து ரத்து செய்துள்ளோம். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு களுக்கான தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிட்டிருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட் டையன் கூறினார்.

விழாவில் தென்சென்னை எம்பி டாக்டர் ஜெ.ஜெயவர்தன், தி.நகர் எம்எல்ஏ சத்யா, விருகம்பாக்கம் எம்எல்ஏ விருகை ரவி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாண வர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு கள், சீருடை, காலணி, லேப்-டாப், சைக்கிள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. தற்போது முதல்கட்டமாக பாடப்புத்தகம், நோட்டு, சீருடை ஆகிய மூன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. எஞ்சியவை விரைவில் வழங்கப்படும். பள்ளி திறந்த முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 3 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, சீருடை வழங்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு வைக்கப்போகிறார்களே, வினாத்தாள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மாணவர்களுக்கு இருக்கிறது. அவர்களின் அச்சத் தைப் போக்கும் வகையில் ஒரு வாரத்தில் அவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். அப் போதுதான் அதற்கேற்ப ஆசிரியர் கள் பயிற்சி அளிக்க முடியும். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாண வர்களைத் தயார்படுத்த அவர்க ளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முடிவுசெய்துள்ளோம். இதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட இடத்தை தேர்வுசெய்து அங்கு சனிக்கிழமை தோறும் 3 மணி நேரம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

அரசுஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து கேட்கிறீர்கள். கல்வி என்பது ஒருவரின் மனநிலையைப் பொறுத்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெறுவோர் பெரும்பாலும் அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகளில் படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் கூட தயாராக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். ஜூன் 15-ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது 40-க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பழையபஸ் பாஸ் பயன்படுத்தலாம்


அரசுபள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், புதிய பஸ் பாஸ் வழங்கப்படும்வரை, மாணவர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி அரசு பஸ்களில் பயணம் செய்யலாம். இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

PRESS RELEASE- நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைப்பு நாளை முதல் அமல்

முறையான கணினி ஆசிரியர்கள் இல்லாமல் காட்சி பொருளாகும் கம்ப்யூட்டர் உபகரணங்கள்

Image may contain: text

"SCIENCE EXPRESS TRAIN" - 15.06.2017 - 30.06.2017 வரை மாணவர்கள் பார்வையிடுவதற்காக தமிழக்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் - மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு - நிற்கும் இடங்கள் மற்றும் செயல்முறைகள்

கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகச் செலுத்த வேண்டும்: மத்திய அரசின் அடுத்த அதிரடி!

பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இனி கல்விக்
கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே பெறவேண்டும்' என்று மத்திய அரசின் மனிதவளத்துறை, கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.
கல்விக் கட்டணங்கள் பிரகாஷ் ஜவடேகர்
மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 'பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனைத்துக் கட்டணங்களையும் இணையத்தின் வழியாகப் பெறுவதற்குத் தேவையான ஆலோசனைகளை, அனைத்து பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் வழங்க வேண்டும்' என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
'கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கான கல்விகட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்ற இதர கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகவே பெற வேண்டும். சம்பளம் மற்றும் இதர செலவினங்களையும் டிஜிட்டல் வழியில் மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் உள்ள கேன்டீன்களிலும் மற்றும் இதர கடைகளிலும் ஆன்லைன் வழியே பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பீம்ஸ் செயலியையும், இந்தச் செயலியுடன் மாணவர் வங்கி கணக்கையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். கல்வி வளாகத்தில் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திட வேண்டும். இதற்காக, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஒரு சிறப்பு அலுவலரை நியமித்து, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற விவரத்தை ஒவ்வொரு மாதமும் அனுப்பிவைக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதில் முன்னோடியாக, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகச் செலுத்த அறிவுறுத்தியிருப்பது நல்ல விஷயமே. அரசின் வழிகாட்டுதல் இல்லாமலேயே, ஏற்கெனவே பல உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் வங்கிகளின் வழியாகப் பெறப்படுகின்றன. இப்போது, அரசின் வழிகாட்டுதலை ஏற்படுத்தி இருப்பதன்மூலம், இனி வரும் காலங்களில் இதைத் தனியார் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கொண்டுவருவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. அரசு கொண்டுவரும் மாற்றங்கள் வழியே மக்களுக்கு நல்லது நடந்தால் பாராட்டுவோம்.

கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும் குறிப்புகள்!!

ஆசிரியர்களே..!


1.எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான திறன் கொண்டிருப்பதில்லை. அவரவர் திறனுக்கேற்ற எதிர்பார்ப்புகள்
மட்டுமே கொண்டவராகவும்
ஊக்குவிப்பவராகவும் இருங்கள்.

2.படிப்பே வராத குழந்தை என்ற போதும் .. தன்னம்பிக்கை
இழந்து விடாதவாறு அதனிடம்
பேசிப் பழகுங்கள்.

3.மதிப்பெண் நிறைய எடுக்க முயற்சிப்பது நல்லதுதான். ஆனால், முயற்சியையும் தாண்டி அது முடியாத போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து..உணர்த்துங்கள்.

4.கற்றலில் குறையுள்ள குழந்தையை எதற்கும் உதவாததென முத்திரை குத்தவோ மற்றவர் முன் அதைச்
சொல்லி அவமானப் படுத்தவோ கூடாது.அவர்களுக்கு உதவுங்கள்.

5.வீட்டுப் பாடம் அளவாக தினமும் கொடுக்கலாம்.அது நன்கு கற்பிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.

6.Meanings Test என்பது வீட்டுப் பாடம் என்றால் ...வகுப்பில் அது நன்கு விளக்கப் பட்ட பிறகு ரஃப் நோட்டில்  எழுதச் செய்து பிறகு
வீட்டுப் பாடமாகத் தரலாம்.

7.அடுத்த நாளில் உடனே தேர்வு வைக்காமல் வாய் மொழியாக ஒவ்வொருவரிடமும் கேட்டு நல்ல பயிற்சி கொடுத்த பிறகு
எழுதச் சொல்லலாம்.

8.இவ்வாறு நல்ல பயிற்சிக்குப்
பிறகு வகுப்பில் எழுதும் சிறு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்  பெறும் வகையில் கவனம் கொண்டால்  அது கற்றலின் மீது குழந்தைக்குப் பிரியம் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும்.

9.பாடங்களை கற்பிக்க நிறைய நேரம் எடுத்து புரியும்படி கற்பிக்க வேண்டும். ஏனோ தானோவென்று பாடம் நடத்தி விட்டு தேர்வு வரை மனனம் செய்ய வைத்து கூடுதல் மதிப்பெண் பெற வைப்பது பயனற்றது... அருவருக்கத் தக்கது.

10.முதல் வகுப்பு முதலே மொழிப் பாடங்களில் சிறு சிறு சொற்றொடர் சொந்தமாக எழுதப் பயிற்சி அளித்து பிறகு சிறு கட்டுரைகள் எழுத வைத்து மொழித் திறனை வளர்க்கலாம்

11. பாராட்டும், ஊக்குவிப்பும்,அன்பான அணுகு முறையுமே ஒரு நல்லாசிரியரின்
பண்புகள்.

12.எழுத்துக்களும், அடிப்படை இலக்கணமும் சரிவரக் கற்பிக்கப் பட்டால் பிழையின்றி எழுதவும் தவறின்றி மொழியைக் கையாளவும் செய்வார்கள்.

13.ஒவ்வொரு பாடம் கற்பிக்கும் முன்பும், பின்பும் அந்தப் பாடத்தை படிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். வேகமாகப் படிக்க முடிந்தால்தான் புரிதல் சாத்தியம்.

14. பாடங்களை சிறு நாடகமாக்கி எல்லாக் குழந்தைகளும் பங்கேற்கும் வண்ணம் நடிக்கச் செய்தால் நல்ல புரிதலுடன் மகிழ்ச்சி யான கற்றல் நிகழும்.

15.பாடப்புத்தகம் தாண்டியும் வாசிக்கும  பழக்கம் உருவாக உறுதுணையாக இருங்கள்.

16.ஆடல், பாடல், பேச்சு, வரைதல் போன்ற தனித் திறமைகள் கண்டறியப பட்டு ஊக்குவிக்கப் பட வேண்டும்.
போட்டி என்பது பரிசு பெற மட்டுமல்ல..பங்கு பெறவும்
யார்வென்றாலும் மனமாறப் பாராட்டி மகிழவும் என்று உணர்த்துங்கள்.

17.பரிசு  எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

18.பள்ளி வளாகத்தில்.. முதலில் பாதுகாப்பு...பிறகுதான் கற்பித்தல்.

19.அடி வாங்கி வளரும் குழந்தை கோழை அல்லது கொடூரன் ஆக மாறும் அபாயம் உள்ளது.

20.சமூக வன்முறைகளுக்கும், அவலங்களுக்கும் பள்ளி நாற்றங்காலாகி விடாமல் இருப்பதில் உங்கள் பங்கு முக்கியமானது.

21.மனக்காயங்கள் இல்லாத குழந்தைப் பருவம்குழந்தைகளின் அடிப்படை உரிமை.

22.பின்னாளில் நினைவு கூரும் போதெல்லாம் இனிய தென்றலாக நினைவலைகள் வந்து தழுவிச் செல்வதாக பள்ளிப் பருவம் அமைவது ஆசிரியர்களாகிய உங்களால் மட்டுமே சாத்தியப் படுத்தக் கூடிய ஒன்று.

23.உங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பது உயிர்ப்புடன் கூடிய நிகழ் காலங்கள்...நாட்டின் நம்பிக்கைக்குரிய எதிர்காலங்கள்..!

***
ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் நம் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்னும் துவங்கா ததால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அரசுமற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், 'நீட்'
நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.

இடைக்கால தடை :

தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் எழுதியு உள்ளனர். இங்கு, அரசு மற்றும் தனியார் மருத் துவ கல்லுாரிகளில் உள்ள,5,650 எம்.பி. பி.எஸ்., இடங்களுக்கு, மே மாதத்தில் விண்ணப்பங்கள்

வினியோகிக்கப்பட்டு, ஜூலை யில், மாணவர் சேர்க்கை, 'கவுன்சிலிங்' நடத்தப் படுவது வழக்கம். இந்தாண்டு, மற்ற மாநிலங்களில், விண் ணப்பங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தமிழகத் தில், இன்னும் வழங்கப் படவில்லை.

அதற்கு, தமிழக அரசு,'நீட்' தேர்வு குறித்து, தெளி வான முடிவு எடுக்காததே காரணம். இந்நிலையில், 'நீட்' நுழைவுத் தேர்வில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வினாத்தாள்களில், மாறு பட்ட கேள்விகள் கேட்கப் பட்டத்தை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில்,'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட, இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
திட்டவட்டம் :
தற்போது, இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத் துக்கு மாற்றப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு பின் தான், எம்.பி.பி.எஸ்., விண்ணப்பங்கள் வினியோகிக் கப்படும் என, தமிழக சுகாதாரத் துறை திட்டவட்ட மாக தெரிவித்து விட்டது. தற்போது, இன்ஜினியரிங் விண்ணப்பம் வினி யோகிக்கப் பட்டு, கவுன்சிலிங் துவங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், விண்ணப்பங்கள் வினியோகிக் கப்பட்டு, சேர்க்கை நடந்து வருகிறது. தற்போதைய
சூழலில், மற்ற படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பிய பின் தான், எம்.பி.பி.எஸ்., விண்ணப் பங்கள் வினியோகிக்கப்படும் என, தெரிகிறது. இதனால், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைக்காத மாணவர்கள், மற்ற படிப்புகளில் சேர முடியா மல், ஓராண்டை வீணாக்கும் நிலைமை ஏற்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறுகையில், ''மூன்று வித விண்ணப்பங்கள் தயார் நிலையில் உள்ளன. நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்த மறுநாளே, விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என்றார். - நமது நிருபர் -

RTI 2005இன் கீழ் TRB சில தகவல் வழங்கவில்லை. அதனால் தகவல் ஆணையத்திடம் TRB மீது வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கில் அனைத்து தகவலையும் TRB இணைய தளத்தில் வெளியிட வேண்டுமென ஆணை பெற்றுள்ளேன். அதன் விவரம் பின்வருமாறு

Thanks : Mr JAYAPRAKASH




கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..

தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு விபரங்கள் (Employment Registration)சரியாக உள்ளதா என அவ்வப்போது சரிபார்க்கவும்…


For UG with Bed…  இளநிலை பட்டங்களை (BCA / B,Sc(CS) / B.Sc(IT))
தங்களுடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விபரங்களின் அடிப்படையில் Seniority Date, Major & Subject, Medium போன்றவைகள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்…


NCO Code பற்றி எதுவும் குழப்பமடைய தேவையில்லை. ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் (Degree) இது வேறுபடும்… NCO Code என்பது பதிவு (Register) செய்யும்போது தரவுதளம் கொடுக்கும் ஒரு Random Number – ஆகும். NCO Code பற்றிய மேலான விபரங்களுக்கு தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனுகவும்…


For PG with BEd & MEd… தென்மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மதுரையிலும், வட மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னையிலும் தங்களுடைய முதுநிலை பட்டங்களை (MCA / M.Sc(CS) / M.Sc(IT)) பதிவு செய்யவும் (சில ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளில் தெளிவாக இருப்பதில்லை).

UG + BEd., மற்றும் PG + BEd., + MEd., போன்ற கல்வித்தகுதிகள் சரியான பதிவுமூப்பு தேதியின்படி இருக்கிறதா என அவ்வப்போது சரிபார்க்கவும்…

Both UG and PG…. கணினி அறிவியல் (CS) Computer Science எனவும், கணினி பயன்பாட்டியல் (BCA / MCA) Computer Applications எனவும், தகவல் தொழில்நுட்பவியல் (IT) Information Technology எனவும் இடம் பெற்றிருக்கும்…

 இந்த விபரங்கள் பிழையாக (Mistake) இருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று திருத்தம் செய்து கொள்ளவும் (நீங்களாகவே இந்த பிழைகளை இணையத்தில் திருத்த முயற்சிக்க வேண்டாம்; அப்படி திருத்தும் பட்சத்தில் Seniority Date மாறும் அபாயம் உள்ளது என்பதை மறவாதீர்கள்)

 பெண் கணினி ஆசிரியைகள் திருமணத்திற்கு பின்னர் Address மற்றும் Initial-இவைகளை வேலைவாய்ப்பு அலுவலங்களில் திருத்தம் செய்ய வேண்டாம். ஏனெனில், பதிவுமூப்பு (Seniority) அடிப்படையில் பணி நியமனம் பெறும் பட்சத்தில் இந்த திருத்தங்கள் குழப்பமாகி வேலை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வெ.குமரேசன்
9626545446
மாநிலப் பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ® *பதிவு எண் : 655 / 2014.

ஆங்கில வழி கல்வி: 59 பள்ளிகள் பொதுத்தேர்வுக்கு தயார்!

அரசுஆங்கில வழி கல்வித்திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வை, 59 பள்ளிகளில் இருந்து மாணவர்கள்
பங்கேற்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில், அரசுப்பள்ளிகளில் ஆங்கில கல்வித்திட்டம், கடந்த 2012-13 கல்வியாண்டில் துவங்கப்பட்டது. ஒன்று, ஆறாம் வகுப்புகளில், தனி பிரிவாக துவங்கப்பட்டு, ஆங்கிலவழி கல்விக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. குறைந்தபட்சம் 5 முதல், 15 மாணவர்கள் சேர்ந்தால் கூட, வகுப்பு நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி, வரும் கல்வியாண்டில், 59 பள்ளிகள்,பொதுத்தேர்வை சந்திக்க உள்ளன.கோவை மாவட்டத்தில், 21 அரசுப்பள்ளிகளில், ஏற்கனவே ஆங்கில வழி பிரிவுகள் உள்ளன. இதுதவிர, 50 அரசு ஆங்கில வழிப்பள்ளிகள், பத்தாம் வகுப்பில், தற்போது காலடி எடுத்து வைத்துள்ளன.மேலும், 9 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், வரும் 2017- 18 கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வை சந்திக்கின்றன. இவர்களுக்கு, மொழித்திறன் மேம்படுத்துதல், சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம், தேர்வுக்கு தயார்ப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசுப்பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் கையாள, பிரத்யேக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் நடைமுறை பின்பற்றப்படுவதால், மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒன்பதாம் வகுப்பிலும், 'பெயில்' போட உத்தரவு இல்லை. இவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கொண்டு தான், ஆங்கில வழி பள்ளிகளின் கற்பித்தல் தரம் பரிசோதிக்கப்படும்.'கோவை மாவட்டத்தில், வரும் 2017-18 கல்வியாண்டில், 50 அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் இருந்து, 450 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஒன்பது அரசு ஆங்கில வழி பள்ளிகள் பங்கேற்கவுள்ளன,'' என்றார்.

8/6/17

ஜூலை 17ல் குடியரசுத் தலைவர் தேர்தல்...தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி: டெல்லி: நாட்டின் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டின் 13வதுகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம்
ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதன்படி குடியரசுத் தலைவர் நடப்பட உள்ளது.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம்ஜைதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறும்; ஜூலை 20ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்தப்படும் இந்தத் தேர்தலில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களிப்பார்கள். நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 120 எம்எல்ஏக்களும், மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும் உள்ளனர்.

மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி, எம்எல்ஏக்களின் வாக்குகள் மதிப்பிடப்படும். சட்டப்பேரவை செயலாளர்கள் தேர்தல் அதிகாரிகளாகவும், மக்களவை, மாநிலங்களவை செயலர்கள் தேர்தல் துணை அதிகாரிகளாக செயல்படுவார்கள். ECI may anniunce President elections date today

BREAKINGNEWS : PGTRB நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

முதுநிலை ஆசிரியருக்கான நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க
வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை...

நியமனங்கள் கோர்ட் உத்தவுக்கு உட்பட்டது என்ற உத்தரவு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

CCE Resource Material

DGE-SSLC Exam Takkal

DGE- HSE Exam 2017 (Tatkkal)

DSE ; BT TRB REGULARISATION ORDER

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு ‘தட்கல்’ மூலம் விண்ணப்பிக்கலாம்

ஜூன், ஜூலை மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 சிறப்பு துணை
பொதுத்தேர்வு எழுத அலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் 8.6.2017 (இன்று), 9.6.2017 (நாளை) ஆகிய 2 நாட்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மார்ச்–2017 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வு எழுதாதவர்கள் தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் (ஹால் டிக்கெட்) விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான கட்டணத்தை விண்ணப்பம் பதிவு செய்யும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு தட்கல் திட்டத்தில் அனுமதிக்கப்படும் தேர்வர்களுக்கு நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.