யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/6/17

தமிழ்நாடு வனத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை




 தமிழ்நாடு அரசு வனத்துறையில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கான அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 பணி: இளநிலை வரைதொழில் அலுவலர் 

 காலியிடங்கள்: 15 

 பணியிடம்: தமிழ்நாடு 

 தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

 வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும். 

 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 

 தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானாவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
 வன அலுவலர், சென்னை வனக்கோட்டம், 3வது தளம், டி .எம் எஸ் வளாகம், சென்னை - 600 006 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2017 

 மேலும் கூடுதல் விவரங்கள் அறிய www.forests.tn.nic.inhttp://www.forests.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வருமான வரித் துறையில் வரி உதவியாளர், MTS வேலை




 இந்திய வருமான வரி துறையில் 2017 ஆம் ஆண்டிற்கான 58 வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், ஸ்டேனோகிராபர் கிரேடு II, மல்டி பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  

 மொத்த காலியிடங்கள்: 58 

 பணியிடம்: இந்தியா முழுவதும் 

 பணி - காலியிடங்கள் விவரம்: 
 பணி: Income Tax Inspector - 09
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.4600

 பணி: Tax Assistant - 19
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.2400

 பணி: Stenographer Grade II - 01
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.1800

 பணி: Multi Tasking Staff (MTS) - 29  
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.1800

 தகுதி: +2, பட்டம் மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

 வயதுவரம்பு: 01.06.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். 

 தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“The Asstt. Commissioner of Income-tax (Hqrs.-PersonneI) (Non-Gazetted),
Room No. 378, C.R. Building,
I.P. Estate, New Delhi-110002

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2017 

 மேலும் கூடுதல் விவரங்கள் அறிய http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/06/Income-Tax-Department-Recruitment-2017-58-Tax-Assistant-MTS-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

+2 தகுதிக்கு யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள 390 பணியிடங்கள்




 மத்திய அரசு சார்ந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை யு.பி.எஸ்.சி., செய்து வருகிறது. தற்போது தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள 390 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 தேசிய பாதுகாப்பு அகாடமியில் 335 இடங்களும் ( தரைப்படை 208, கப்பல்படை 55, விமானப்படை 72), 

 நேவல் அகாடமி (பிளஸ்-2 என்ட்ரி) தேர்வு மூலம் 55 இடங்களும் என மொத்தம் 390 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


 பாதுகாப்பு துறையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 


 வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 2-1-1999 மற்றும் 1-1-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 


 கல்வித்தகுதி: பிளஸ் 2 படிப்பை முடித்த திருமணமாகாத ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


 வயது: விண்ணப்பதாரர்கள் 1999 ஜன., 2க்கு பின்பும் 2002 ஜன., 1க்கு முன்பும் பிறந்திருக்க வேண்டும். 


 தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு கணிதம் மற்றும் பொது அறிவு என இரண்டு தேர்வுகளை கொண்டது. இதற்குப்பின் எஸ்.எஸ்.பி., நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். 


 உடல்தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 என்ற அளவிலும், கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவிலும் இருக்க வேண்டும். விரிவான விபரங்களுக்கு இணையதளத்தில் பார்க்கலாம். 


 விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

 இத்தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய். (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை). 


 விண்ணபிக்க கடைசி நாள்: 30-06-2017 .


 மேலும் கூடுதல் விபரங்களுக்கு _http://upsc.gov.in/sites/default/files/Notice_NDA_NA%20_II_%20Exam_2017_English_%20Final.pdf என்ற இணையபக்கத்தை பார்க்கவும்.

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை இப்போது Active ஆக உள்ளது. 31.8.2017 வரை இதை ஆன்லைனில் விண்ண்ப்பிக்கலாம்.



📡விண்ணப்பிக்க வேண்டிய தளம் :

http://www.scholarships.gov.in

இதில் Students Login ல் அக்கவுண்ட் open செய்து கேட்கப்படும் அனைத்து சான்றிதல்களை ஸ்கேன் செய்து upload செய்ய வேண்டும். 

1ம் வகுப்பு முதல் PhD வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். 


📡11ம் மற்றும் 12ம் வகுப்புக்கு ₹7000 முதல் 10000 கிடைக்கும்.

📡Engineering-க்கு ₹25000 முதல் ₹30000கிடைக்கும்.

(எவ்வாறு விண்ண்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து தகவல்களும் தளத்தில் உள்ளது)

மொத்தம் 60000 பேருக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.  முதலில் வருவோருக்கே முன்னுரிமை. ஆகையால் துரிதமாக விண்ணப்பிக்கவும். 
(ARN செய்திகள்:9094830243)

இந்த கல்வி உதவித் தொகை பற்றி தகவல் தெரியாததால் சென்ற வருடம் தமிழ்நாட்டில்  இருந்து 1075 முஸ்லீம்கள் மட்டுமே இதை பெற்றுள்ளனர். 

இந்த நலவாய்ப்பை பெற இந்த தகவலை அனைத்து சிறுபான்மையினருக்கும் அனுப்பவும். 
மிழ்நாடு வனத்துறையில் வேலை

தமிழ்நாடு வனத்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் சிவில்/மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளோமோ படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு 32. 

வன அலுவலர், 
சென்னை வனக்கோட்டம், 
3வது தளம், DMS வளாகம், 
சென்னை - 6 
(ARN செய்திகள்:9094830243)
என்ற முகவரிக்கு 20.6.17 க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்




சென்னை, ஜூன் 14 சென் னையில் உள்ள அரசினர் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல விடுதிகளில் சேர்க்கைக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட் டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், அய்டிஅய் படிப் புகளில் பயிலும் மாணவ, மாண வியர் சேர்க்கைக்கு விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்பங்களை உணவு மற்றும் இருப்பிட வசதியுடன் உள்ள விடுதிகளின் காப்பாளர் களிடமிருந்தோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத் தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர் களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை ஜூலை 15-ஆம் தேதிக் குள் விடுதிகளின் காப்பாளர் களிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத் தப்பட்டோர், மிக பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப் பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044- 25241002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

14/6/17

CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு 6 மாதத்திற்குள் (அதாவது 180 நாட்களுக்குள் ) எடுக்கலாம்.

CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது 12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக வெளியிடப்பட்ட
அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே.


*எனவே ,CRC பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெயவிடுப்பானது, 180 நாட்களுக்குள் (அதாவது 6 மாதத்திற்குள்) துய்த்து கொள்ளலாம்

*ஈடுசெய் விடுப்பு அரசாணை எண் 2218 நாள் 14/12/81
எனவே,கடந்த கல்வியாண்டு CRC ஈடுசெய் விடுப்பை தற்போது துய்க்கலாம்.

*அரசாணை எண் 62 நாள் 13/3/15- ல் விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க உத்தரவு போடப்பட்டுள்ளது.அரசாணை எண் 62 என்பது அரசாணை 29 நாள் :12/2/2008 உள்ள மூன்றாம் பத்தியை மாற்றீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணை

* 28/01/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 26/7/17 க்குள் துய்க்கலாம்


* அதேபோல் 04/03/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 01/09/17 க்குள் துய்க்கலாம்

பணி நிரந்தரம் பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

3 மாதத்தில் 300 சாதனை: பள்ளி கல்வித் துறை பட்டியல்

தமிழக சட்டசபையில், நாளை பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை
விவாதத்தில், சாதனை பட்டியல் வாசிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அ.தி.மு.க., ஆட்சியில், ஏழு அமைச்சர்கள் மாறினர். இரண்டு முறை செயலர்களும், இயக்குனர்களும் மாற்றப்பட்டனர்.

இதில், அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் ஆகியோர் பதவியேற்ற பின், பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சட்டசபையில், நாளை பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது. இதில், மேலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட உள்ளார்.

மூன்று மாதங்களில், முந்நுாறு சாதனைகள் என்ற அளவுக்கு, சாதனை பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயார் செய்துள்ளது.

சத்துணவு சாப்பிடுபவர் எண்ணிக்கை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவு

சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கை குறித்து தினமும் குறுஞ்செய்தி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 42,970 மையங்களில்
மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். சத்துணவு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, ஒவ்வொரு பள்ளிகளிலும் தினசரி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் இந்த விபரங்களை மாநில அளவில் சேகரித்து கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் 155 250 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கு சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.தமிழகம் முழுவதும், இந்த நடை முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் உள் ஒதுக்கீடு?

நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதில், அரசு மற்றும் கிராமப் பகுதி பள்ளி
மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.


'அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், 'நீட்' நுழைவு தேர்வு மூலம், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்துவதை, தமிழக அரசு விரும்பவில்லை.

எனவே, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, அவசர சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, தேர்வு முடிவுகள் வெளியிட, அனுமதி வழங்கியது. அதனால், அடுத்த வாரம், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேறு வழியின்றி, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'நீட்' தேர்வில், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய பாடத்திட்ட மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் ஆகியோர், 'ரேங்க்' பட்டியலில் முன்னிலை வகிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரவில்லை; 'நீட்' தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தமிழக அரசு கருதுகிறது.

எனவே, 'நீட்' தேர்வு அடிப்படையில், அரசு பள்ளி மற்றும் கிராம மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மத்திய அரசிடம், இதற்கு ஒப்புதல் பெற, தமிழக சுகாதார துறை அதிகாரிகள், டில்லியில் முகாமிட்டுள்ளனர்.


இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய சூழலில், 2,500க்கும் மேற்பட்ட இடங்களை, சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பெற வாய்ப்புள்ளது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவர். இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்றி, அரசு மற்றும் கிராம மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதிய எண்ணிக்கைக்கு ஏற்ப, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாய்ப்புகள் உள்ளதால், ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயோமெட்ரிக்' பதிவு பள்ளிகளுக்கு வருமா?

பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டை தாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள்ளிக்கு வந்து, கையெழுத்து போட்டு விட்டு, ஏதாவது ஒரு காரணம்
சொல்லி, சொந்த வேலையை பார்க்க, ஆசிரியர்கள் கிளம்பி விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை, 2016ல், தமிழக அரசு அறிவித்தது.

சோதனை முறையில், பெரம்பலுார் மாவட்டத்தில், பயோமெட்ரிக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக, 140 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்வு முறை மாற்றம், பாடத்திட்டம் மாற்றம் என, பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், பள்ளிகளில், ஆசிரியர்கள் இருப்பதில்லை என்பதால், சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம்

புதுடில்லி: ஏ வரிசை கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர்
8-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு மிகுந்த தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. தற்போது புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் தட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைத்து வருகிறது. இந்நிலையில், 'ஏ' சீரியல் கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே புழகத்தில் உள்ள 'இ' சீரியல் கொண்ட நோட்டுகள் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாறுதல்கள் புதிதாக நோட்டுகளில் 2017-ம் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இரண்டு மாறுதல்கள் தவிர, நவம்பர் 8-ம் தேதி அச்சடிக்கபட்ட நோட்டுகள் மாதிரி தான் இந்த நோட்டுகளும் உள்ளது.

PRESS RELEASE- தொடக்கக் கல்வி பயிலச் செல்லும் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்

13/6/17

பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் நாளை முதல் பதிவு : ஆர்வமுள்ள கல்வியாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் :பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் நாளை முதல் பதிவு : ஆர்வமுள்ள
கல்வியாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்
:
பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடங்களில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுட்டுள்ளது. இதையடுத்து பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் ஆர்வமுள்ள கல்வியாளர்கள்  www.tncscert.org  என்ற தளத்தில் நாளை முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கல்விக்குழுக்களின் பரிந்துரை, வரைவுகள் குறித்து ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

NEW FORM FOR NHIS FOR PENSIONERS (INCLUDING SPOUSE)/ FAMILY PENSIONERS, 2014

EMIS-Data entry, update, transfer/admit is enabled for all classes For the academic year 2016-17 only

NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது

NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை.நீட்தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், இந்த
உத்தரவைப் பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்காலத் தடையை நீக்கியுள்ளது. மேலும், மாநில உயர்நீதிமன்றங்கள் நீட் தேர்வு வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு, சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதினார்கள். இதனிடையே நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தமிழ் மொழி வினாத்தாளிலும் ஆங்கில மொழி வினாத்தாளிலும் மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக, தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதேபோல பெங்காலியிலும் மாறுதல்கள் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வு நடத்தப்பட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து, கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்தத் தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. மேலும், தடை காரணமாக ஒட்டுமொத்த மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையும் பாதிக்கப்படுவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு, தடை விதிக்க வேண்டுமென சிபிஎஸ்இ மனு அளித்திருந்தது.

இந்தமனுவின் விசாரணை, இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், நீட் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், நீட் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மாறுமா பள்ளி நேரம்?

அன்று காலை வழக்கம்போல் என் மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு வீட்டிலிருந்து திடீரென சிறுவன் ஒருவன் கணநேரத்தில் சாலையை கடந்தான். அவனுக்கோ, அவனின்
பெற்றோருக்கோ சாலையின் இருபுறமும் வந்து கொண்டிருந்த வாகனங்களை பற்றியோ, சாலை விதிகள் பற்றியோ எந்தவித அக்கறையும் இருந்ததாக தெரியவில்லை.


 தனது வீட்டுக்கு எதிரே ஒலி எழுப்பியபடி நின்று கொண்டிருந்த பள்ளி வேனில் மேலும் தாமதிக்காமல் ஏறிவிட வேண்டும் என்பது மட்டுமே அந்தச் சிறுவனின் இலக்காக இருந்தது.

ஒருபூனைக்குட்டி சாலையின் குறுக்கே ஓடுவதைப் போன்று சட்டென அந்தச் சிறுவன் எனது வாகனத்தின் முன் எதிர்ப்பட்டான். இருப்பினும், நான் உடனே வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அன்றாடம் காலை வேளையில் பள்ளி வேனை பிடிக்க, பிள்ளைகள் அவசர அவசரமாக கிளம்புவதும், கேட் மூடப்படும் கடைசி நிமிடத்திற்குள்ளாவது தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்ற முனைப்பில், அவர்களது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் பந்தய குதிரைகளாய் பறந்து, சாலையில் விழுந்து எழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாக உள்ளன.

பெருநகரங்கள் தொடங்கி நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் வரை, இன்றும் அரசுப் பள்ளிகளில் காலை ஒன்பது மணியளவில் இறை வணக்கம் முடிந்த பிறகு, ஒன்பதரை மணிக்குதான் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன.

இதனால், இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் காலை பள்ளிப் பாடங்களை படித்துவிட்டு, ஆற அமர சிற்றுண்டி சுவைத்துவிட்டு பதற்றமின்றி பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்களோ? அவசர கதியில் பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவஸ்தையை தினமும் அனுபவித்து வருகின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலை 8.30 மணிக்கே வகுப்புகள் ஆரம்பித்துவிடுவதுதான் மாணவர்களின் இந்த அவதிக்கு காரணம். இதற்கு மாநகரங்களில் பீக் -ஹவர்ஸ் நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பள்ளிகளில் மாலை நேரத்தில் நடத்தப்படும் தனி வகுப்புகள் ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன.

காலையில் சீக்கிரம் பள்ளிக்கு வரும் மாணவர்கள், மாலையில் 3, 3.30 மணிக்கே வீடு திரும்பி விடுகின்றனரே என்று நாம் சமாதானம் சொல்லலாம்.
தினமும் காலை பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரம் இதுதான் என்பது தெரிந்தும், அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு புறப்படாமல், அடித்துப் பிடித்து பள்ளிக்கு சென்றால் அது யார் தவறு என சிலர் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கலாம்.

ஆனால், பள்ளிக்கு அனுப்புகிறோம் என்ற பெயரில், ஆரம்ப கல்வி பயிலும் பிள்ளைகளை தினமும் அதிகாலையில் எழுப்பி, காலை கடன்களை முடித்தும் முடிக்காமல், அவர்களுக்கு காக்கை குளியல் போட்டுவிட்டு, அந்த வேளையில் அவர்களால் சிற்றுண்டி உண்ண முடிகிறதோ இல்லையோ, பெயருக்கு உணவை ஊட்டிவிட்டு, 7.30 மணிக்கே அந்த பிஞ்சுகளை பள்ளி வேன்களில் அடைப்பதும்கூட குழந்தைகள் மீது அன்றாடம் செலுத்தப்படும் ஒருவித வன்முறைதான்.

இரவுஉணவுக்கு பிறகு அடுத்த வேளை உணவுக்கு நீண்ட இடைவேளை இருப்பதால் காலை சிற்றுண்டியை தவிர்க்கக்கூடாது என மருத்துவ உலகம் அறிவுறுத்தி கொண்டே இருக்கிறது.

மேலும், குழந்தைப் பருவம் தொடங்கி, வளர் இளம் பருவம் (டீன் ஏஜ்) வரை மனிதனின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான காலகட்டம். இந்த காலக்கட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தருவது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இன்றைய தலைமுறை குழந்தைகளில் பெரும்பாலோருக்கு, காலை சிற்றுண்டியை முறையாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
காலைஏழு மணிக்கு என்ன சாப்பிட முடியும்? சரி முடிந்தவரை சாப்பிடு எனக் கூறி, பிஸ்கட், பழத்துடன் ஒரு டம்ளர் பாலை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, காலை சிற்றுண்டி முடிந்துவிட்டதாக பெற்றோரும் சமாதானம் அடைந்துவிடுகின்றனர்.

இந்தப் போக்கு தொடரும்போது, நாளடைவில் பிள்ளைகளுக்கு வயிற்று புண் (அல்சர்) ஏற்படுவதுடன், அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகளுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுகிறது. உடல் வளர்ச்சி பாதிக்கும் அபாயமும் உள்ளது.

அடுத்து, மாலை, இரவு நேரங்களில் பள்ளிப் பாடங்களை படிப்பதைவிட, அதிகாலையில் படிக்கும்போது, நாம் படிப்பது மனதில் ஆழமாக பதியும் என்பது படிப்பாளிகள் பலரின் கருத்து.

ஆனால், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை எழுந்ததும் பள்ளிக்கு புறப்படவே நேரம் சரியாக இருப்பதால், இந்த வேளையில் பள்ளிப் பாடங்களை படிக்கும் வாய்ப்பை இவர்கள் இழந்துவிடுகின்றனர்.

மேலும், அன்றாட வீட்டுப் பாடங்களை இரவு உறங்குவதற்கு முன்பே முடித்துவிட வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு உள்ளது. இதனால், மாலையில் விளையாடுவதற்கான நேரத்தையும் இவர்கள் படிப்புக்கே செலவிட வேண்டியதாகிறது. இதன் காரணமாக, "காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு' என்ற வரிகள் இவர்களுக்கு பொருந்தாது.

பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.


குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கும் நேரத்தையாவது காலை 10 மணிக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும்.

ஜூலை முதல் வாரத்தில் TET தேர்வு முடிவுகள்

ஆசிரியர் தகுதிக்கான, ‘டெட்’ தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம்
துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், ‘டெட்’ தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர்.

கொள்குறி என்ற, ‘அப்ஜெக்டிவ்’ வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக் குறிப் புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர்.

இந்தகடிதங்களை, ஆசி ரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறா கவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்த தும் தெரிய வந்தது. இதை யடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது.

ஜூலைமுதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது