யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/6/17

பயோமெட்ரிக்' பதிவு பள்ளிகளுக்கு வருமா?

பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டை தாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள்ளிக்கு வந்து, கையெழுத்து போட்டு விட்டு, ஏதாவது ஒரு காரணம்
சொல்லி, சொந்த வேலையை பார்க்க, ஆசிரியர்கள் கிளம்பி விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை, 2016ல், தமிழக அரசு அறிவித்தது.

சோதனை முறையில், பெரம்பலுார் மாவட்டத்தில், பயோமெட்ரிக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக, 140 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்வு முறை மாற்றம், பாடத்திட்டம் மாற்றம் என, பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், பள்ளிகளில், ஆசிரியர்கள் இருப்பதில்லை என்பதால், சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம்

புதுடில்லி: ஏ வரிசை கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர்
8-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு மிகுந்த தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. தற்போது புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் தட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைத்து வருகிறது. இந்நிலையில், 'ஏ' சீரியல் கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே புழகத்தில் உள்ள 'இ' சீரியல் கொண்ட நோட்டுகள் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாறுதல்கள் புதிதாக நோட்டுகளில் 2017-ம் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இரண்டு மாறுதல்கள் தவிர, நவம்பர் 8-ம் தேதி அச்சடிக்கபட்ட நோட்டுகள் மாதிரி தான் இந்த நோட்டுகளும் உள்ளது.

PRESS RELEASE- தொடக்கக் கல்வி பயிலச் செல்லும் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்

13/6/17

பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் நாளை முதல் பதிவு : ஆர்வமுள்ள கல்வியாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் :பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் நாளை முதல் பதிவு : ஆர்வமுள்ள
கல்வியாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்
:
பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடங்களில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுட்டுள்ளது. இதையடுத்து பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் ஆர்வமுள்ள கல்வியாளர்கள்  www.tncscert.org  என்ற தளத்தில் நாளை முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கல்விக்குழுக்களின் பரிந்துரை, வரைவுகள் குறித்து ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

NEW FORM FOR NHIS FOR PENSIONERS (INCLUDING SPOUSE)/ FAMILY PENSIONERS, 2014

EMIS-Data entry, update, transfer/admit is enabled for all classes For the academic year 2016-17 only

NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது

NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை.நீட்தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், இந்த
உத்தரவைப் பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்காலத் தடையை நீக்கியுள்ளது. மேலும், மாநில உயர்நீதிமன்றங்கள் நீட் தேர்வு வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு, சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதினார்கள். இதனிடையே நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தமிழ் மொழி வினாத்தாளிலும் ஆங்கில மொழி வினாத்தாளிலும் மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக, தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதேபோல பெங்காலியிலும் மாறுதல்கள் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வு நடத்தப்பட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து, கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்தத் தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. மேலும், தடை காரணமாக ஒட்டுமொத்த மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையும் பாதிக்கப்படுவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு, தடை விதிக்க வேண்டுமென சிபிஎஸ்இ மனு அளித்திருந்தது.

இந்தமனுவின் விசாரணை, இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், நீட் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், நீட் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மாறுமா பள்ளி நேரம்?

அன்று காலை வழக்கம்போல் என் மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு வீட்டிலிருந்து திடீரென சிறுவன் ஒருவன் கணநேரத்தில் சாலையை கடந்தான். அவனுக்கோ, அவனின்
பெற்றோருக்கோ சாலையின் இருபுறமும் வந்து கொண்டிருந்த வாகனங்களை பற்றியோ, சாலை விதிகள் பற்றியோ எந்தவித அக்கறையும் இருந்ததாக தெரியவில்லை.


 தனது வீட்டுக்கு எதிரே ஒலி எழுப்பியபடி நின்று கொண்டிருந்த பள்ளி வேனில் மேலும் தாமதிக்காமல் ஏறிவிட வேண்டும் என்பது மட்டுமே அந்தச் சிறுவனின் இலக்காக இருந்தது.

ஒருபூனைக்குட்டி சாலையின் குறுக்கே ஓடுவதைப் போன்று சட்டென அந்தச் சிறுவன் எனது வாகனத்தின் முன் எதிர்ப்பட்டான். இருப்பினும், நான் உடனே வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அன்றாடம் காலை வேளையில் பள்ளி வேனை பிடிக்க, பிள்ளைகள் அவசர அவசரமாக கிளம்புவதும், கேட் மூடப்படும் கடைசி நிமிடத்திற்குள்ளாவது தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்ற முனைப்பில், அவர்களது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் பந்தய குதிரைகளாய் பறந்து, சாலையில் விழுந்து எழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாக உள்ளன.

பெருநகரங்கள் தொடங்கி நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் வரை, இன்றும் அரசுப் பள்ளிகளில் காலை ஒன்பது மணியளவில் இறை வணக்கம் முடிந்த பிறகு, ஒன்பதரை மணிக்குதான் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன.

இதனால், இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் காலை பள்ளிப் பாடங்களை படித்துவிட்டு, ஆற அமர சிற்றுண்டி சுவைத்துவிட்டு பதற்றமின்றி பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்களோ? அவசர கதியில் பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவஸ்தையை தினமும் அனுபவித்து வருகின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலை 8.30 மணிக்கே வகுப்புகள் ஆரம்பித்துவிடுவதுதான் மாணவர்களின் இந்த அவதிக்கு காரணம். இதற்கு மாநகரங்களில் பீக் -ஹவர்ஸ் நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பள்ளிகளில் மாலை நேரத்தில் நடத்தப்படும் தனி வகுப்புகள் ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன.

காலையில் சீக்கிரம் பள்ளிக்கு வரும் மாணவர்கள், மாலையில் 3, 3.30 மணிக்கே வீடு திரும்பி விடுகின்றனரே என்று நாம் சமாதானம் சொல்லலாம்.
தினமும் காலை பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரம் இதுதான் என்பது தெரிந்தும், அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு புறப்படாமல், அடித்துப் பிடித்து பள்ளிக்கு சென்றால் அது யார் தவறு என சிலர் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கலாம்.

ஆனால், பள்ளிக்கு அனுப்புகிறோம் என்ற பெயரில், ஆரம்ப கல்வி பயிலும் பிள்ளைகளை தினமும் அதிகாலையில் எழுப்பி, காலை கடன்களை முடித்தும் முடிக்காமல், அவர்களுக்கு காக்கை குளியல் போட்டுவிட்டு, அந்த வேளையில் அவர்களால் சிற்றுண்டி உண்ண முடிகிறதோ இல்லையோ, பெயருக்கு உணவை ஊட்டிவிட்டு, 7.30 மணிக்கே அந்த பிஞ்சுகளை பள்ளி வேன்களில் அடைப்பதும்கூட குழந்தைகள் மீது அன்றாடம் செலுத்தப்படும் ஒருவித வன்முறைதான்.

இரவுஉணவுக்கு பிறகு அடுத்த வேளை உணவுக்கு நீண்ட இடைவேளை இருப்பதால் காலை சிற்றுண்டியை தவிர்க்கக்கூடாது என மருத்துவ உலகம் அறிவுறுத்தி கொண்டே இருக்கிறது.

மேலும், குழந்தைப் பருவம் தொடங்கி, வளர் இளம் பருவம் (டீன் ஏஜ்) வரை மனிதனின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான காலகட்டம். இந்த காலக்கட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தருவது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இன்றைய தலைமுறை குழந்தைகளில் பெரும்பாலோருக்கு, காலை சிற்றுண்டியை முறையாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
காலைஏழு மணிக்கு என்ன சாப்பிட முடியும்? சரி முடிந்தவரை சாப்பிடு எனக் கூறி, பிஸ்கட், பழத்துடன் ஒரு டம்ளர் பாலை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, காலை சிற்றுண்டி முடிந்துவிட்டதாக பெற்றோரும் சமாதானம் அடைந்துவிடுகின்றனர்.

இந்தப் போக்கு தொடரும்போது, நாளடைவில் பிள்ளைகளுக்கு வயிற்று புண் (அல்சர்) ஏற்படுவதுடன், அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகளுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுகிறது. உடல் வளர்ச்சி பாதிக்கும் அபாயமும் உள்ளது.

அடுத்து, மாலை, இரவு நேரங்களில் பள்ளிப் பாடங்களை படிப்பதைவிட, அதிகாலையில் படிக்கும்போது, நாம் படிப்பது மனதில் ஆழமாக பதியும் என்பது படிப்பாளிகள் பலரின் கருத்து.

ஆனால், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை எழுந்ததும் பள்ளிக்கு புறப்படவே நேரம் சரியாக இருப்பதால், இந்த வேளையில் பள்ளிப் பாடங்களை படிக்கும் வாய்ப்பை இவர்கள் இழந்துவிடுகின்றனர்.

மேலும், அன்றாட வீட்டுப் பாடங்களை இரவு உறங்குவதற்கு முன்பே முடித்துவிட வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு உள்ளது. இதனால், மாலையில் விளையாடுவதற்கான நேரத்தையும் இவர்கள் படிப்புக்கே செலவிட வேண்டியதாகிறது. இதன் காரணமாக, "காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு' என்ற வரிகள் இவர்களுக்கு பொருந்தாது.

பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.


குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கும் நேரத்தையாவது காலை 10 மணிக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும்.

ஜூலை முதல் வாரத்தில் TET தேர்வு முடிவுகள்

ஆசிரியர் தகுதிக்கான, ‘டெட்’ தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம்
துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், ‘டெட்’ தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர்.

கொள்குறி என்ற, ‘அப்ஜெக்டிவ்’ வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக் குறிப் புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர்.

இந்தகடிதங்களை, ஆசி ரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறா கவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்த தும் தெரிய வந்தது. இதை யடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது.

ஜூலைமுதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது

த.அ.உ.ச - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு

RTI- பதவி உயர்வு பணித்துறப்பு-குறித்து -தொடக்க கல்வி இணை இயக்குனர் -பதில்

உயர் நிலை/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உயர்கல்விபயில தலைமைஆசிரியரிடம் அனுமதிபெற்றால் போதும் என்பதற்கான செயல்முறை.

செல்போனில் லீவு சொல்லக் கூடாது - ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

வாட்ஸ் அப் அதிரடி அறிவிப்பு?

பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி ஓ.எஸ்., நோக்கியா S40, நோக்கியா S60,
உள்ளிட்ட மொபைல்கள் பழைய பிளார்ட்ஃபார்ம்களை கொண்டுள்ளதால் இந்த வகை ஃபோன்களில் வரும் ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம்ஆண்டு வாட்ஸ்-அப் தொடங்கப்பட்ட காலத்தில், பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியாவின் இயங்குதள அமைப்புகள் சந்தையில் 70 சதவீதம் ஆதிக்கம் செலுத்தின. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்கள் 25 சதவீதத்திற்கும் குறைவாக இயங்கின. மொபைல்ஃபோன்களின் உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது நோக்கியா. அதேபோல், பிளாக்பெர்ரி மொபைல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. என்னதான் முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நோக்கியா, பிளாக்பெர்ரியின் நிலைமை மாறியது. இதனால், இந்த வகை ஃபோன்களுக்கு வாடிக்கையாளர்களின் விகிதம் குறையத் தொடங்கியது. இந்நிலையில். வாட்ஸ்-அப் அறிவித்துள்ள இந்த முடிவு பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியாவிற்கு மேலும், பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

வாட்ஸ் அப்பின் அறிவிப்பால் பிளாக்பெர்ரி நோக்கியா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், மற்ற ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் “அப்பாடா இந்த செய்தி எனக்குரியது இல்லை“ என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அந்த அளவிற்கு வாட்ஸ்-அப் மக்களை வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறது.

தொகுப்பு (2004-2006) ஊதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் குமுறல் !

2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தொகுப்பூதிய காலத்தில் நாம்
பெற்ற எண்ணிலடங்காத துயரங்கள்....

எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.. ஆனால் ஏனோ எல்லோரும் அமைதியாய் இருக்கின்றோம்....

2004 முதல் 2006 வரை, 20 முதல் 22 மாதங்கள் வரை நாம் பெற்ற ஊதியம் 3000 மடடுமே....ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை இழந்தோம்
இரண்டு வருடம் சேர்த்து ஈட்டிய விடுப்பு ( E.L.) ஒப்படைப்பு இழந்தோம்..
இரண்டு வருட பணிக்காலத்தில் ஆண்டு ஊதிய உயர்வை இழந்தோம்...
இரண்டு வருட பணிக்காலத்தில் வருடத்திற்கு இரு முறை என அரசு உயர்த்தி வழங்கிய D.A. அனைத்தையும் இழந்தோம்.

தொகுப்பூதிய காலத்திற்கான இரண்டு வருட service இழந்தோம்..
இரண்டு வருட மருத்துவ விடுப்பை இழந்தோம்..
2004 ம் ஆண்டு பணியேற்று 2014 ல் தேர்வு நிலை பெற வேண்டிய நாம் தொகுப்பூதிய காரணத்தினால் 2016 ல் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தேர்வு நிலைக்குப் பெற வேண்டிய 3%,3%=6% ஊதிய உயர்வை இழந்துள்ளோம்.2014 ம் ஆண்டிலிருந்து 2016 ம் ஆண்டிற்கு தள்ளப்படுவதால் ஏற்படும் ஊதிய இழப்பு எண்ணிப்பாருங்கள். தேர்வு நிலை போன்று சிறப்பு நிலையும் 2024ல் இருந்து 2026 க்கு தள்ளிப் போகும். அவ்வாறு இடைப்பட்ட காலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகள் நிலை.அதனை சரி செய்வது யாரோ ??
பணியாற்றிய காலத்திற்குரிய ( 2004 to 2006 ) முழுமையான ஊதியத்தை இழந்தோம்...

பணியாற்றுகின்ற காலத்தில் தற்போது 4200 தர ஊதியத்தை இழந்து போராடிக்கொண்டிருக்கி-றோம்..

எதிர்காலத்தில் ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியமும் இல்லை என்ற நிலையில் இருக்கிறோம்...

இந்தநிலை மாற...மாற்ற என்ன செய்ய வேண்டும் என எண்ணிப் பாருங்கள். ஏற்பட்டுள்ள இழப்பு நமக்கே என உணர்ந்து செயல்படுங்கள்....
" இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல...
அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் " என்னும் மாவீரன் "நெப்போலியன் " கருத்தை மனதில் இருங்கள்.
ஆசிரியர் சமூகம்.... இது என் சமூகம்... என் நணபர்கள் அல்லல்படுவதை நான் எதிர்த்து கேட்காமல் வேறு எவன் கேட்பான் ? என்பதை தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள்...

இனிமேலும் அமைதியாக இருந்து...
நம்மையும், நம் பேரினத்தை ஏமாற்றும் எவருக்கும்...
மறைமுக ஆதரவளிக்காமல்..

எதிர்த்து குரல் கொடுத்து ஆசிரியர் சமுதாயத்தை காத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

உங்களில் நானும் ஒருவனே !!

அரசின் திட்டங்களால் அழியப்போகும் அரசுப்பள்ளிகள்*

 அரசின் 25% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளியில் முதல்வகுப்பிற்கு வரவேண்டிய சுமார் 89000 குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இப்படி ஆண்டுதோறும் சென்றால் அரசுப்பள்ளியை மூட வேண்டியதுதான்....


🌴 அரசுப்பள்ளியில் வசதிகளை அதிகப்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட வேண்டும்.

🌴 அரசுப்பள்ளிக்கு ஆபத்தாக இருக்கும் 25% இடஒதுக்கீடு, ஐந்தாம் வகுப்பில் திறமையான SC/ST மாணவர்களை தேர்ந்தெடுத்து தனியார் பள்ளிகளில் படிக்க ஊக்குவிப்பது போன்ற திட்டங்களை அடியோடுகைவிட வலியுறுத்த
வேண்டும். சங்கங்கள் முயற்சி எடுத்து அரசுப்பள்ளியின் எதிர்காலத்தை காக்கவேண்டும்

🌴 அரசின் திட்டங்கள் அரசுப்பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமே தவிர , தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்க கூடாது.

🌴  மூவாயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்
கான   மாணவர்களை அரசுப்பள்ளியில் சேரவிடாமல் செய்துள்ளது.

🌴 இவ்வாண்டு மட்டும்  சுமாராக இரண்டாயிரம் ஆசிரியர்கள் பணியிடங்கள் மாணவர் இல்லை என அரசு தொகுப்பில் சரண் செய்யப்பட்டுள்ளன.


🌴  இதுபோன்ற ஆபத்தான திட்டங்கள் தொடராமல் இருக்க சங்கங்கள் வலியுறுத்த  வேண்டும்

நீட் தேர்வு விடைத்தாள் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, ‘நீட்’ தேர்வு, கடந்த மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடந்த இந்த தேர்வுக்கான
வினாத்தாள், ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் இருந்தன.
இந்நிலையில் ”நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், வினாக்கள் கேட்கப்படவில்லை என புகார் தெரிவித்து, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீட் தேர்வு விடைத்தாள் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.
விடைத்தாளில் ஆட்சேபம் இருந்ததால் நாளை 5-மணிக்குள் தெரிவிக்கலாம் என்றும், அதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 15ந்தேதி மாணவர்களின் விடைக் குறிப்பு வெளியாகும் என சிபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

12/6/17

DEE PROCEEDINGS- குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்- 12.06.2017 அன்று அனுசரித்தல் - நாளை அனைத்து பள்ளிகளிலும் காலை 11 மணிக்கு உறுதிமொழி எடுத்தல் - தொடர்பாக



கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

15ல் அதிரடி அறிவிப்பு - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

''கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன. வரும், 15ல் இதற்கான
அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார். 


 ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சாதனையாளர்கள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

இந்தஅரசு வெளிப்படை தன்மையோடு, கல்வித்துறையில் நடைபோட்டு கொண்டிருக்கிறது. ரேங்க் அடிப்படையில், தனியார் பள்ளிகள் வீரநடை போட்டன. அதை முறியடித்து காட்டியது இந்த அரசு. பிளஸ் 1 தேர்வுக்கு, கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து, சிந்தித்து செயலாற்றி வருகிறது.

வரும், 15ல் பள்ளி கல்வித்துறையில், இந்த அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. அப்துல்கலாம் கனவை நிறைவேற்ற, நாங்கள் துடித்து கொண்டிருக்கிறோம்.


தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் உள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், சிறந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, மனித நேயத்தோடு சிந்திக்க கூடியவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை எளிதாகத் தொடர்பு கொள்ள உதவும் இணையதளத்தை வாசர்களுக்குக் கொண்டு செல்லும் கடமையுணர்வுடன் இந்தத் தகவலை வெளியிடுகின்றோம்.

லஞ்சம் எங்கு எங்கு எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கு எல்லாம் சட்டம் வளைந்து நெளிந்து போகின்றது. இதனால் தான் பல குற்றச் செயல்கள்
தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது அரசின் தவறு அல்ல. ஒரு சிலரின் தவறே. நமது நாடு லஞ்ச லாவண்யம் இன்றி நேர்மையாக செயல்பட்டாலே உலக அளவில் முதன்மை நாடாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அரசுஅதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே http://www.dvac.tn.gov.in/என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கு லஞ்சம் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் முதல் செல்போன் எண் வரை அத்தனையும் இந்த இணையதளத்தில் தெளிவாக உள்ளது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து வருவதைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம். இந்த நிலையில் லஞ்ச பேய் பிடித்த அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தெரிவிப்பது நமது தலையாய கடமையாகும். இதைச் செய்ய பலருக்கும் குழப்பம், தயக்கம். அந்த குழப்பத்தையும், தயக்கத்தையும் போக்கியே ஆக வேண்டும்.


யாராவது அதிகாரி லஞ்சம் கேட்கிறாரா உடனே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். புகார் கொடுத்தால் என்னவாகுமோ என்று அஞ்ச வேண்டாம்.