யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/7/17

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு உண்டா?நாளை தெரியும்.. திமுக எம்பி திருச்சி சிவா!

நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புகேள்விக் குறியாகியுள்ளது.
இதையடுத்து நீட் தேர்வில்தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஆளும் கட்சி அமைச்சர்கள் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்தனர். அப்போது நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மத்திய அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நீட் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.மேலும் பதவிப் போராட்டத்தால் அதிமுகவினர் கடமையை மறந்து விட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு தேவையில்லை என்பதே திமுகவின் நிலை என்றும் திருச்சி சிவா கூறினார்.மேலும் வட இந்திய மாணவர்களுக்கு ஏற்றவாறு நீட் தேர்வில் கேள்வி கேட்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நிலைஎன்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜே.பி.நட்டா கூறினார் என்றும் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறினார்.

NEET EXAM : முதல்வர் நம்பிக்கை

மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது,'' என, தமிழக முதல்வர், பழனிசாமி கூறினார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக,டில்லி வந்த, தமிழக முதல்வர் பழனிசாமி, நிருபர்களிடம்கூறியதாவது: 'நீட் நுழைவுத் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்

அரசு பள்ளிகள் தரம் உயர்வு: கோட்டை விட்டது மதுரை : முதல்வர் தொகுதி முதலிடம்

தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதில், மதுரையில் ஒரு பள்ளிக்கு மட்டும்வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களை கவலையடைய செய்துள்ளது.
அதேநேரம் முதல்வர் பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில்,ஏழு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.கல்வித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 150 நடுநிலை, உயர் நிலையாகவும், 100 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

 மேல்நிலையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும், உயர்நிலையில், 750 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும். இதில், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக, 100 பேருக்கும், 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர், உயர்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.மூன்று ஆண்டுகளாக பள்ளிகள் தரம் உயர்த்தப்படாத நிலையில், இக்கல்வியாண்டு, அறிவிப்பு மட்டும் வெளியாகிய நிலையில், பள்ளிகள் பெயர் பட்டியல் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதற்கு காரணம், 'தகுதி இல்லாத பள்ளிகளையும் தரம் உயர்த்த ஆளும் கட்சியினர் கல்வி அதிகாரிகளை கட்டாயப்படுத்தியது தான்,' என தகவல் வெளியாகியது. ஆனாலும் கல்வி செயலாளர் உதயசந்திரன், தகுதியான பள்ளிகளை மட்டுமே தரம் உயர்த்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.தற்போது 100 மேல்நிலை பள்ளிகள் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், மதுரையில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பல பள்ளிகளுக்கு வாய்ப்பு இருந்தும், கொட்டாம்பட்டி அரசு உயர்நிலை பள்ளி மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இத்துடன் பரிந்துரைக்கப் பட்ட களிமங்கலம், அவனியாபுரம் அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தேர்வு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் சேலம் -7, திருவள்ளூர் - 7, வேலுார் - 6, விழுப்புரம் -6, காஞ்சிபுரம் -5, விருதுநகர் -6 என பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் நிர்வாகிகள் கூறியதாவது:பள்ளிகளுக்கு இடையே, மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் துாரம், ஒரு மேல்நிலை பள்ளிக்கு அருகே குறைந்தபட்சம் 2 அல்லது 3 உயர்நிலை பள்ளிகள் இருக்க வேண்டும், மாணவர் எண்ணிக்கை ஆகிய அடிப்படையில் தரம் உயர்த்த தகுதிகளாக கணக்கிடப்படுகின்றன. செயலாளர்உதயச்சந்திரனும் இதை கண்டிப்பாக பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.ஆனால், அரசியல் குறுக்கீடால் பள்ளிகளை தேர்வு செய்ய கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வேறு வழியின்றி தகுதியில்லாத பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டியதாயிற்று. குறிப்பாக ஊமச்சிகுளம், வண்டியூர், ஆனையூர் பகுதிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.

 இப்பகுதிகள் தி.மு.க., எம்.எல்.ஏ.,வின்தொகுதிக்குள் வருவதால் இவை பரிசீலிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் மூன்று பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால், 30 ஆசிரியர் பணியிடங்கள் மதுரைக்கு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை மதுரை கோட்டை விட்டது, என்றனர்.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மேலும், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்தும் பாடிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடலை எப்படியாகினும் வாரத்தில் ஒரு நாள் அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாரத்தில் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையன்று வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.அதே சமயம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில்மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும் என்றும், வந்தே மாதம் பாடலை பாட விருப்பமில்லாதவர்களை எந்த விதத்திலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் தீர்ப்பில்நீதிபதி குறிப்பிட்டார்.ஆசிரியர் வாரியம் நடத்திய தேர்வில் வந்தே மாதம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு வங்கமொழி என பதில் அளித்தும் மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.அப்போது, அந்த கேள்விக்கு மதிப்பெண் அளித்து, வீரமணிக்கு ஆசிரியர் பணி வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு எழுதிய கே.வீரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இரண்டாம் தாளுக்கான 'டி' வகை வினாத்தாளில் கேள்வி எண் 107 இல் 'வந்தே மாதரம்' என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? எனக் கேட்கப்பட்டு இருந்தது.அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. ஆனால், அனைத்து பிஎட் பாடப் புத்தகங்களிலும் 'வந்தேமாதரம்' வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.
அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், இந்த குழப்பத்தை தீர்க்க 'வந்தே மாதரம்' எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி, 'வந்தே மாதரம்' சமஸ்கிருத வாய் மொழி பாடல் என்றும், ஆனால் முதலில் எழுதப்பட்டது வங்க மொழியில்தான் என்றும் விளக்கம் அளித்தார்.இதைப் பதிவு செய்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வழக்கின் தீர்ப்பை இன்று அளித்துள்ளார்

Flash News - NEET தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு.

நீட் தேர்விலிருந்து 2 வருடங்களுக்கு விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு.

*சட்டத்தின் வரைவு நகலை மத்திய சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக வழங்கியது தமிழக அரசு.

*2 அமைச்சங்களின் ஒப்புதலுக்கு பிறகு உள்துறைஅமைச்சகம் மூலமாக குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற திட்டம்.

அப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு?

இதை புரிந்துக் கொள்ளுங்கள்!!!!!

9300 grade pay 4200 வாங்க வேண்டிய இடைநிலை ஆசிரியர்கள்
5200-2800 என்ற பத்தாம்வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதிய கட்டில் வைக்கப்பட்ட தேதி
1-06-2009.

ஆனால் 2008 ல் பணிநியமனம் செய்யப்பட்டவர்களும் இதே ஊதியத்தில் வைக்கப்பட்ட போதும் அவர்களின் ஊதிய விகிதம் 1.86 ஆல் பெருக்கித்தரப்பட்டது.
இதனால் 2008 ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதியம் 9300-4200 என்ற நிலையை கடந்தது ஆனால் அவர்களின் தற்போதைய கிரேடு பேவும் 2800 தான்.
அதற்கு பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அதாவது 2009 ஜீனில் 5200-2800 பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதியத்தில் வைக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டார்கள்.அவர்களின் கிரேடு பத்தாம் வகுப்புக்கான கிரேடு ஆகும்.

இதுமட்டுமின்றி 2008 ல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் 12000
( DA இல்லாமல்)
2009 ல் பணிநியமனம் பெற்றவர்களின் அடிப்படை ஊதியம் வெறும் 5200+2800= 8000
ஆகவே அடிப்படை ஊதியத்திலேயே இழப்பு கிட்டதட்ட
ரூ 4000...
இதற்கான அகவிலைப்படியோடு சேர்த்து 2009  இடைநிலை  ஆசிரியர்களின் மொத்த ஊதிய இழப்பு அதே 2009 ல் 8000.
தற்போதைய  முரண்பாடு( 2008 க்கும் 2009 க்கும் இடையே)
11000 க்கும் மேல்...
பிறகு பணிநியமனம் பெற்ற 2012 ,2014 இடைநிலை ஆசிரியர்களுக்கு 13000 ஊதிய இழப்பு.
இது தான் ஊதிய முரண்பாடு.
இந்த ஊதிய இழப்புக்கான முக்கிய காரணம்

1) டிப்ளோமா கல்வித்தகுதிக்கான 9300-4200 என்ற ஊதிய கட்டில் இடைநிலை ஆசிரியர்கள் வைக்கப்படாமல் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதிய கட்டில் 5200-2800 வைக்கப்பட்டது
( பத்தாம் வகுப்பு கல்வித்தகுக்கான சில பணியிடங்களும் அதன் ஊதியமும்
இரண்டாம் நிலை காவலர் கிரேடு 1900, பள்ளி இரவு காவலர் 1900,இளநிலை உதவியாளர் 2400,
ஆய்வக உதவியாளர் 2400)
அப்போது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கு 5200-2400 வரை ஊதியம் என்றால் இடைநிலை ஆசிரியர்கள் படித்த
+2 க்கு ,டிப்ளோமாவிற்கு ஊதியம் எங்கே???
அல்லது அவர்கள் டிப்ளோமா படிக்கவே இல்லையா????
இது அரசுக்கு தெரியாதா?
தமிழ்நாட்டில் டிப்ளோமா முடித்துள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் தற்போது 9300-4200 கொடுக்கப்படுக்கிறது .
Diploma in teacher education படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு?

25/7/17

அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு அறிவிப்பு

அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைகக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.          தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு மாணவர் சேர்க்கை மத்திய அரசின் நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா  பல்கலைகழக தரப்பில் அறிவிக்கப்பட்டது. 
பி.ஆர்க் கலந்தாய்வில் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்களும் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு  தரப்பில் அறிவிக்கப்பட்டது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க்  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ள  இடங்கள் நீங்கலாக மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்த அண்ணா பல்கலைகழக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் முழுவதும் 6 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 12ம் தேதி பி.ஆர்க் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இதற்காக  எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவு மாணவர்கள் 1,000 பிற பிரிவு மாணவர்கள் 2,000 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 

இதுதொடர்பாக  அறிவிக்கை ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் ஆன்லைன் பதிவு தொடங்கும். ஜூலை 31ம் தேதி, ஆன்லைன் பதிவு செய்ய கடைசி  நாளாகும். ஆகஸ்ட் 7ம் தேதி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 12ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கும். ஆகஸ்ட் 18ம் தேதி  நுழைவுத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

வாட்ஆப் முலமாக தவறான தகவல் பரப்பியதற்காக ஆசிரியருக்கு விசாரணைக் கடிதம் - நாமக்கல் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றத் திட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாக உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. சேர்க்கையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவர் அளித்த பேட்டி:
அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பிறகு, அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதலாக இருக்கும் ஆசிரியர்கள், அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மாற்றப்படுபவர்கள், 3 ஆண்டுகள் ஒப்பந்தப் பணி அடிப்படையிலேயே மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.
அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதனால், கடும் நிதி நெருக்கடியை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சந்தித்து வருகிறது. எனவே, அந்த மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அவ்வாறு அந்தக் கல்லூரி நேரடி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டாலும், பிற அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதுபோன்ற கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படமாட்டாது. இப்போது அந்தக் கல்லூரியில் என்னவிதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்றார்.
ரூ. 80 கோடி நஷ்டத்தில் இயங்கும் மருத்துவக் கல்லூரி: இதற்கிடையே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரியானது கடந்த 2016-17 கல்வியாண்டில் ரூ. 63 கோடி நஷ்டத்திலும், நிகழாண்டில் ரூ. 80 கோடி நஷ்டத்திலும் இயங்கி வருகிறது என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. 100 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.

இதில் எம்.பி.பி.எஸ். மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்மும், பிடிஎஸ் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால், ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பிற செலவுகளுக்கென ஆண்டுக்கு ரூ. 100 கோடி வரை மருத்துவக் கல்லூரிக்குச் செலவாகிறது. இதனால், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மற்ற நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுசெல்வது என்பது வரவேற்கத்தக்க விஷயம் என பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
TNTET : புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
புதிதாக துவங்கப்படவுள்ள 250 அரசுப் பள்ளிகளுக்கு,ரூ7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கும்படி பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாகபகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு ஊழியர்கள் தவிர அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களில் தினக்கூலி, ஒப்பந்த, அவுட்சோர்சிங் தொழிலாளிகளை வைத்தே பணிகளை நிறைவேற்ற அரசு முயன்று வருகின்றது.இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்16549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு மாதம் ரூ.5000/- தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.பிறகு இரண்டு ஆண்டுகள் முடிந்து தொகுப்பூதியம் ரூ.2000/- உயர்த்தி 2014ம் ஆண்டு முதல் ரூ.7000/-ஆக சம்பளம் தரப்படுகிறது. ஆண்டு வாரியாக ஊதிய உயர்வை அரசிடம் இருந்து கேட்டு வாங்க முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நடந்து முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15000/- தொகுப்பூதியம், அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலை தரவேண்டி கேட்டதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ரூ.700/- உயர்த்தி தொகுப்பூதியம் ரூ.7700/-வழங்கிவருவதாக பதிலளித்துள்ளார். ஆனால் ஊதிய உயர்வுக்கான அரசாணை எதுவும் இதுவரை அரசு வெளியிடவில்லை. சமவேலை, சமஊதியம் என்ற சமநீதியை அரசு அமுல் செய்தால் ஒழிய, ஒப்பந்தப் பணி செய்பவர்களின் வாழ்வு ஒருபோதும் முன்னேறாது.அது போல ஒப்பந்த பணி செய்பவர்களுக்கு சட்டத்தில் சொல்லப்பட்ட குறைந்தபட்ச சம்பளம், மருத்துவ வசதி, குடும்பநலநிதி, இன்சூரன்ஸ் வழங்க அரசு முன்வரவேண்டும்.

ஒப்பந்த பணிசெய்பவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் விதமாக வருங்கால வைப்புநிதி பங்கீட்டுத் தொகையை பிடித்தம் செய்து அதற்கான தொகையை அளித்து பணி ஓய்வுபெறும் போது பென்சன் வழங்கவேண்டும். 58வயது முடிந்து பணிஓய்வில் சென்றவர்களுக்கும், பணியில் சேர்ந்து இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கும், அரசு மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து குறைந்தபட்சமாக ரூ.3 இலட்சம் உடினடியாக வழங்கவேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IGNOU B.ED ENTRANCE EXAM 2017 FULL DETAILS:

2,200 ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை!

Inauguration Ceremony of New Academic Curriculum by SCERT:

புதிய பாடத்திட்டம் உருவாக்குதல் சம்மந்தமாக சென்னையில்மூன்று நாள் கருத்தரங்கு நடைபெற்றது . தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை புதியதாக மெருகூட்டவும், ஆறாம் வகுப்பு முதல் ICT மூலம் கற்றுக்கொடுக்க புதிய பாடத்திட்டம் அமைக்கவும் இந்த கருந்தரங்கை அமைத்திருந்தனர்.
முதல் நாள் கருத்தரங்கு கல்வித்துறை செயலர் வரவேற்புரையோடு ஆரம்பித்தது. தமிழ்நாடு புதிய பாடத்திட்ட குழுவின் தலைவர் புதிய பாடத்திட்ட தேவையினை விளக்கினார். NCERT இயக்குநர் தேசிய கலைத்திட்டத்தை சார்ந்து தமிழக பாடத்திட்டம் எப்படி இருக்கவேண்டும் என்று தன் கருத்தை பகிர்ந்து கொண்டார். 
மெரூசியஸ் முன்னாள் கல்வி அமைச்சர் Armogum Parasurament மெரூசியஸ் நாட்டில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களை பகிர்ந்து கொண்டார். பின்பு மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் தன்னுடைய வாழ்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை கூறி அதன்மூலம் பாடத்திட்டம் எவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்பதை விளக்கினார். Consule Genral of Germany அவர்கள் புதிய பாடத்திட்டம் உருவாக்குவதற்கு சில கருத்துக்களை கூறினார். கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் புதிய பாடத்திட்டம் சிறந்த பாடதிட்டமாக உருவாக வாழ்த்துக் கூறினார். SCERT இயக்குநர் விழாவுக்கு நன்றி சொன்னார்.
முதல் நாள் மதியம் கல்வித்துறை செயலரின் மென்மையான உணர்வுமிக்க பேச்சோடு ஆரம்பித்தது. எனக்கு மிகவும் பிடித்த இறையன்பு அவர்களின் நேர்மறையான சிந்தனைச் சிதறல்கள் அந்த அரங்கை அலங்கரித்தது. தொடர்ந்து பேராசிரியர் ராமானுஜம், டாக்டர்.பாலகுருசுவாமி, தியோடர் பாஸ்கரன், ஆஸ்திரேலிய ஆராய்ச்சிக் கல்வி கவுன்சிலில் இருக்கும் சாரா , பேராசிரியர் காமகோட்டி ஆகியோர் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறவேண்டிய முக்கியமான கூறுகளை தங்களுடைய அனுபவங்களுடம் பகிர்ந்து கொண்டனர்.
கலைவாணர் அரங்கில் முதல் நாள் நிகழ்வு நடைபெற்றது. அடுத்த இரண்டு நாள் நிகழ்வுகள் பாடவாரியாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. தமிழ் பாடத்திற்கு அண்ணா நூலகத்திலும் மற்ற பாடப்பிரிவினருக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் நடை பெற்றது.
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அந்த பாடப்பிரிவில் மிகச்சிறந்த ஒரு வல்லுநர், இரண்டு முதன்மை கருத்தாளர்கள் அமர்த்தப்பட்டனர். மேலும் நிஜமான கழத்தில் இருக்கும் இரண்டு ஆசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பாடமும் பத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஐந்து பிரிவுகள் முதல் நாளும் ஐந்து பிரிவுகள் இரண்டாம் நாளும் நடத்தப்பட்டன. ஒவ்வெரு பிரிவிலும் இரண்டரை மணிநேரம் விவாதிக்கப்பட்டு கருத்துக்கள் தொகுக்கப்பட்டன.
நான் ICT மூலம் கற்றுக்கொடுக்க புதிய பாடத்திட்டம் அமைக்கும் குழுவில் அங்கு விவாதிக்கும் கருத்துக்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். இரண்டாம் நாள் முதல் அமர்வில் அறிவியல் பாடத்திட்டக் குழுவில் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். நான் அங்கு பகிர்ந்துகொண்ட கருத்துக்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
1. தற்போதய அறிவியல் பாடப்புத்தகம் கற்றுக்கொடுப்பதற்கு உகந்ததாக இருக்கிறது. கற்றுக்கொள்ள உகந்ததாக இல்லை. பாடப்புத்தகம் ஆசிரியர் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கிறது. மாணவர்கள் பயன்படுத்த இடம் குறைவாக இருக்கிறது.
2. புத்தகம் ஆசிரியருக்கு தனியாகவும் மாணவர்களுக்கு தனியாகவும் இருந்தால் நல்லது. மாணவர் பாடப்புத்தகத்தில் மாணவர் செயல்பாடு அதிகமாகவும், ஆசிரியர் பாடப்புத்தகத்தில் பாடத்திற்கான விளக்கம் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
3. அறிவியல் செயல்பாடுகளும் அறிவியல் சோதனைகளும் ஏராளமாக புத்தகத்தில் கொட்டிக்கிடக்குது. ஆனால் அதை செய்து பார்த்து எழுதுவதற்கு புத்தகத்தில் இடம் எதுவும் ஒதுக்கவில்லை. தனி நோட்டுப்புத்தகத்தில் எழுதலாம். ஆனால் புத்தகத்திலேயே அதற்கான இடத்தை ஒதுக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
4. ”வரையறை” களை குறைத்து செயல்பாடுகளை அதிகரிக்கவேண்டும். உதாரணமாக திசைவேகத்தை இடப்பெயற்சி / காலம் என வரையறுப்பதை விட மாணவன் ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடக்க வைத்து அந்த தூரம் எவ்வளவு மணிநேரத்தில் கடக்கப்பட்டது என்பதையும் கண்டு பிடித்து திசைவேகத்தை கண்டுபிடித்து அதை புத்தகத்தில் ஒவ்வொரு மாணவர்களும் எழுதவேண்டும். அப்போது அவர்களுடைய திசைவேகம் தெரிந்து கொள்வதோடு திசைவேகத்தை அவர்களாகவே வரையறுப்பார்கள்.
5. தமிழ் கதைகள் படிக்கும் போது ஒவ்வொரு வரியாக படிக்கும் போதும் அந்த வரி காட்சியாக மனதில் ஓடும். குதிரை ஒன்றின் மேல் அரசர் ஒருவர் விரைந்து செல்கிறார் என்று வரிகளை படிக்கும் போது மனத்திரையில் அந்த காட்சி ஓடும். ஆனால் அறிவியல் பாடத்தை படிக்கும் போது அந்த காட்சியமைப்பு மனதில் வருவதில்லை. அந்த காட்சிப்படுத்தல் மனதில் தோன்றும் விதமாக சில விளக்கப்படங்கள் கொடுக்கப்படவேண்டும்.
6. அறிவியல் சோதனைகள் வகுப்பறையில் செய்யும் போது குழுவாகவே மாணவர்கள் செய்கிறார்கள். தனித் தனியாக அறிவியல் செய்முறைகளை செய்யும் போது தான் உண்மையான அறிவியல் கற்றல் நடக்கும். தினம் வீட்டில் ஒரு அறிவியல் சோதனை என்ற பகுதியை புத்தகத்தில் சேர்க்கலாம். வீட்டில் அன்றாடம் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி சோதனை செய்யும் வகையில் அவை அமைந்திருக்க வேண்டும்.
7. அறிவியல் பயிற்சிப் புத்தகம் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும். மாணவர்களுக்கென்றே தனியாக பாடப்புத்தகம் வழங்கினால் பயிற்சி புத்தகம் தேவையில்லை. அதிலுள்ள செயல்பாடுகளை மாணவர்களே செய்யவேண்டும். பதில்கள் திறந்த பதில்களாக இருக்க வேண்டும்.
8. புத்தகங்களில் பெறும் மாற்றத்தை விட கேள்வித்தாள்களில் மாற்றம் வேண்டும். மனப்பாடம் செய்து எழுதும் கேள்விகளை குறைந்து புரிந்து திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான கோள்விகளை குறைக்கவேண்டும்.
9. புத்தகத்திற்கு பின்னால் கேட்கப்படும் கேல்விகளை தவிர்க்கலாம்.
10. அறிவியல் பாடங்களில் வரும் நிகழ்வுகளை நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தக்கூடிய சம்பவங்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.
இந்த புதிய முயற்சி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.நிச்சயம் வெற்றி பெரும் என்பதில் ஐயம் இல்லை வாழ்த்துக்களுடன் கல்விக்குரல் ..
Thanks to Bergin G Kadayal FB friend:

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை: மத்திய அரசு!

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, இனி பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை
என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதில் தொடர்ந்து பலருக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டுவருகின்றன. அதில், பிறப்புச் சான்றிதழும் ஒன்று. இதுகுறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்வகையில், இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.ஏ.சிங், பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை என அறிவித்துள்ளார். மேலும், பிறப்புச் சான்றிதழுக்குப் பதிலாக, ஆதார் கார்டு அல்லது பான் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாக இருப்பின், அவர்களைப் பராமரித்த காப்பகத்திடமிருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை அளிக்கலாம். மேலும், புதிய பாஸ்போர்ட்டில் தனிநபர் விவரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். எட்டு வயதுக்குக் கீழ் மற்றும் 60 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தில் பத்து சதவிகிதம் சலுகை அளிக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது, தாய் அல்லது தந்தையில் யாராவது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டால் போதும். திருமணம் ஆனோர் திருமணச் சான்றிதழ்களைச் சமர்பிக்கத் தேவையில்லை'' எனவும் அமைச்சர் வி.ஏ.சிங் தெரிவித்திருக்கிறார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக CM CELLக்கு அனுப்பட்ட மனுவின் விவரம்!!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


G.O.No.220, Dated , Dated , Dated 20thJuly2017 -Tamil Nadu Pension Rules, 1978 – Proviso to Rule 9 (1) (b) – Omitted - Orders – Issued.

21/7/17

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு?

வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்


அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதைக் குறைத்து வருகின்றன. மேலும், செயல்திறன் அடிப்படையில் கட்டாய பணிவிடுப்பையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தான் அதிகளவில் அரசு ஊழியர்களைக் கொண்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் 4,29,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 6.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. ஹரியானா மாநிலத்தில் 3,28,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 4.7 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,800,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் 7.4 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. அதேபோல உத்திரகாண்ட் மாநிலத்தில் 2,00,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 7.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது.



இந்தியாவில் மாதந்தோறும் மில்லியன் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. குறைந்த அளவில் தான் தொழில்கள் தொடங்கப்படுகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அரசுகள் சில வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 50 ஆகக் குறைக்கவும் திட்டமிட்டு வருகின்றன. ஹரியானா, பஞ்சாப், உத்திரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து குறைக்க திட்டமிட்டுள்ளன. உத்திரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராமசாமி அரசின் எல்லாத் துறைகளிலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் செயல்திறன் குறித்த அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளார். இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கூடுதாலாக பணி வழங்க முடியும் என்று மாநில அரசுகள் கருதுகின்றன.




இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளது. மாநில அரசைப் போல மத்திய அரசும் வேலையின்மையைப் போக்குவதில் சரிவையே கண்டு வருகிறது. பாரதிய ஜனதா பொறுப்பேற்பதற்கு முன்பு வேலையின்மை 3.8 சதவிகிதமாக இருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டிலேயே வேலையின்மை 5 சதவிகிதமாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

7 PAY COMMISSION : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசியதாவது: தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்
குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழு கடந்த ஜூன் 30-ம் தேதி அறிக்கைஅளித்திருக்க வேண்டும். ஆனால், குழுவுக்கு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை அளிக்காத நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு புதிய ஊதியம் அமலாகுமா என்ற சந்தேகம் உள்ளது.

லோக்பால் சட்டப்படி தமிழகத் தில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. நாடாளு மன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் அங்கு சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. எனவே, லோக் ஆயுக்தாவை கொண்டுவர எந்தத் தடையும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ''லோக்பால் சட்டத்தை அமல்படுத்த எந்தப்பிரச்சினையும் இல்லை. மத்திய அரசு அதில் திருத்தம் கொண்டுவர உள்ளது.


 திருத்தம் கொண்டுவரப்பட்ட பின், தமிழகத்தில் லோக்பால் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதிய வரையறையை நிர்ணயித்த மத்திய அரசு, படிகள் தொடர்பான தெளிவான வரையறையை அளிக்கவில்லை. அதனால்தான் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரை 3 மாதங்களில் அமல்படுத்தப்படும்'' என்றார்

FLASH NEWS : 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை !!

ரேங்க் முறை மாணவர்களிடையே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது:
அமைச்சர் செங்கோட்டையன்

*9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை:
அமைச்சர் செங்கோட்டையன்.

புதிய பாடத்திட்டம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.