யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/7/17

2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு?

நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவை, மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.
இதனால், மருத்துவ படிப்புகளில், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85
சதவீதமும், இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு, 15 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை பிறப்பித்தது.இதற்கு சென்னை உயர் நீதிமன்றம்தடை விதித்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், 'நீட்' தேர்வில் விலக்கு கோரும் சட்டத்துக்கு ஒப்புதல் பெற, முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

நிரந்தர விலக்கு அளிக்கும், தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. எனினும், மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசு முன் வந்துஉள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிய தாவது: 'இந்தாண்டு மட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க, சட்டத்தில்வாய்ப் புள்ளதா என, பரிசீலிக்கப்படும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.


இதற்காக, சட்ட நிபுணர்களுடன், தமிழக அதிகாரிகள், ஆலோசித்து வருகின்றனர். அத்துடன், குறைந்தது இரண்டு ஆண்டுகள் விலக்கு பெறும் முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!

படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற
உத்தரவைப் பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும்.
பொறியியல் பட்டம்

"இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது" என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள்.

"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000 கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால் போதும். இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக கவனமும் செலுத்த முடியும்" என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

'பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக உயர்கல்வி துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் 'பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது' என்கிறார்கள் உயர்கல்வி துறையினர்.

இந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் எனத் தெரிகிறிது.பொறியியல் சுனில் பாலிவால்

"இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் தனி அமைப்புகள் நிறுவ ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம்.

இதன்மூலம் துணைவேந்தர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியும். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள் கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்" என்கிறார் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால்.

Posted Date : 21:34 (26/07/2017) Last updated : 21:34 (26/07/2017)
அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!
ஞா. சக்திவேல் முருகன் ஞா. சக்திவேல் முருகன்

படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப் பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும்.

பொறியியல் பட்டம்

"இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது" என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள்.

"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000 கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால் போதும். இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக கவனமும் செலுத்த முடியும்" என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

'பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக உயர்கல்வி துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் 'பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது' என்கிறார்கள் உயர்கல்வி துறையினர்.

இந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் எனத் தெரிகிறிது.பொறியியல் சுனில் பாலிவால்

"இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் தனி அமைப்புகள் நிறுவ ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம் துணைவேந்தர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியும். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள் கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்" என்கிறார் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால்.



இதுவரை பள்ளிக் கல்வித்துறையில் மட்டுமே மாற்றங்கள் குறித்த செய்தியை அறிந்த கல்வியாளர்கள், முதல்முறையாக உயர்கல்வி துறையில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.

கலாம் நினைவகத்திற்குள் என்ன இருக்கிறது

ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல்கலாம் தேசிய நினைவகம், நான்கு புறமும் 50க்கு 50 மீட்டர் அளவில் சதுர வடிவில் அமைந்துள்ளது. நினைவகத்தை சுற்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து கொண்டு வரப்பட்ட அழகு செடிகள்,
நிழல் தரும் மரக்கன்றுகள் ஊன்றி அழகுபடுத்தி உள்ளனர்.

நினைவகத்தின் பின்புறத்தில் கலாம் கண்டு பிடித்த அக்னி ஏவுகணை, எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரி வைக்கப்பட்டும், நினைவகத்திற்குள் நான்கு பக்கங்களிலும் மின் ஒளியில் கலாமின் ஓவியங்கள், சிலைகள் உள்ளன. ஒரு மூலையில் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், கலாம் நிற்பது, எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரியை கலாம் அறிமுகப்படுத்துவது, ராணுவ வீரர்கள் அணிவகுப்பை கலாம் ஏற்பது போன்ற தத்ரூபமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.மற்றொரு புறத்தில் கலாம் ஐ.நா., சபையில் பேசுவது, ஜனாதிபதி மாளிகையில் கலாம் நிற்பது, குழந்தைகளிடம் கலாம் கைகொடுத்து சிரித்து பேசுவது போல் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளனர்.

95 ஓவிய படங்கள் : கலாம் குழந்தை பருவம் முதல் ஜனாதிபதி வரை பல முகபாவனையுடன் கூடிய 95 ஓவியம் 4 முதல் 15 அடி உயரமும், ஜனாதிபதியாக கலாம் அமர்ந்திருப்பது போல் சிலிக்கானில் உருவான கலாம் சிலையும் உள்ளது.


மேலும் கலாமின் 700 புகைப்படங்கள் உள்ளன. கலாம் சமாதி முன் சுவரில் 15 அடி உயரத்தில் சிறுவயதில் கலாம் பேப்பர் விற்பது, கோயில், கடற்கரை, படகுகள் நிறைந்த அழகிய ஓவியம் இடம் பெற்றுள்ளது. நினைவகம் மேற்கூரையில் புகழ் பெற்ற ராஜஸ்தான் ஓவியம் வரைந்து, கலாம் நினைவகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நீ.. நீயாக இரு...! இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் - வாழ்க்கை வரலாறு

Image result for apj abdul kalam thoughts in tamilஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும்
அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

மரணம்: ஜூலை 27, 2015

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

��இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:   

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம்ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:   

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.


 விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2020எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.


உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தொடக்கக்கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துக்கொள்வது தொடர்பாக இயக்குநர் அவர்களின் புதிய அறிவிப்பு

உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்துக்கொள்வதை விரும்பாத நிலை ஏற்படுமானால் அந்த ஒன்றியத்தில் உள்ள மற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் அவர்களை
ஈர்த்துக்கொள்ள  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் உத்தரவினை அனுப்பியுள்ளார்கள். ஒரு பணியிடத்திற்கு பலர் விரும்பினால் பணிமூப்பு அடிப்படையில் பணியில் மூத்தோரை ஈர்த்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள்.

Syllabus of Special Teachers

பிஇ படிப்பில் இந்தாண்டு புதிய பாடத்திட்டம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வி மன்றக்குழுக் கூட்டம், உயர்கல்வித்துறை செயலர் சுனில்பாலிவால் தலைமையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது. கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த
கூட்டத்தில் 2017-2018ம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் திருத்தி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், முதலாம் ஆண்டு பிஇ படிப்பவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அண்ணா பல்கலைக் கழக கல்வி மன்ற இயக்குநர் மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வருமான கீதா கூறியதாவது:
அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில் 41 பிரிவுக்கும், முதுநிலைப் பட்டப் படிப்பில் 57 பாடப்பிரிவுக்கும் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு புதிய பாடத்திட்ட குழு தயாரித்துள்ள புதிய பாடத்திட்டம் இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது. மேலும், கலைத் திட்டம், அடிப்படை அறிவியல், பொறியியல் அறிவியல், தொழில் கல்வி தொடர்பான பாடங்கள், தற்போது பிஇ, பிடெக் பட்டப்படிப்புடன் கலை அறிவியல் பிரிவுகளை எடுத்து படிக்கும் மானவர்கள் தொழில்நுட்ப பாடங் களைவிருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம்.
அதேப்போல் பிடெக் படிப்பவர்கள் கலை அறிவியல் பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம். இதனால் மாணவர்களுக்கு வேலைத் திறன் பெற வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண் அளிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தில் தோல்வியுற்றால், அது மதிப்பெண் பட்டியலில் தோல்வி என்று இடம் பெறாது. ஆனால் அவர்கள் தோல்வி அடைந்த அந்த பாடத்தை அடுத்த முறை எழுதும் போது அகமதிப்பீடு மற்றும் எழுத்து தேர்வும் சேர்த்து எழுத வேண்டும். மாணவர்–்கள் படிக்கும் போது இடையில் விட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பட்டப் படிப்பை செமஸ்டர் முறையில் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒருபட்டப் படிப்பை முடிப்பதற்கான காலக் கெடு முடிந்த பிறகும் அடுத்த 3 ஆண்டுக்குள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள 14 செமஸ்டர்கள் கொண்ட படிப்பை அதற்கு பிறகு 3 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். பிற்சேர்க்கை திட்டத்தில்(Lateral Entry) 12 செமஸ்டர்கள் கொண்ட படிப்பில் சேர்வோருக்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்

26/7/17

இன்ஜி., பொது கவுன்சிலிங்: கம்ப்யூ., சயின்சுக்கு கிராக்கி 'நீட்' தேர்வால் காலியிடம் குறைய வாய்ப்பு

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 1.75 லட்சம் இடங்களுக்கு பொது கவுன்சிலிங் நேற்று துவங்கியது. 
முதல் நாளில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவுகளுக்கு, மாணவர்கள் முன்னுரிமை கொடுத்தனர்.

அண்ணா பல்கலையின், இணைப்பு கல்லுாரி களில், இன்ஜி., படிப்புக்கான கவுன்சிலிங், ஜூலை, 17ல் துவங்கியது. முதலில் தொழிற் கல்வி, மாற்றுத் திறனாளி மற்றும் விளையாட்டு பிரிவுக்கு, மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.

பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கு, நேற்று முதல் கவுன்சிலிங் துவங்கியது. மொத்தம், 518 கல்லுாரிகளில், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 339 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இதில், ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 197 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.நேற்று முதல் நாளில், 2,898 பேர் அழைக்கப்பட்டனர்.

முதல் அமர்வுக்கு அழைக்கப்பட்ட, 162 பேரில், 116 பேர் பங்கேற்றனர். பெரும்பாலானோர்,
அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி, கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் மதுரை தியாகராஜர் கல்லுாரிகளையும் தேர்வு செய்தனர்.

பெரும்பாலான, 'டாப்பர்ஸ்' மாணவர்கள், மெக்கா னிக் படிப்பை விட, கம்ப்யூ., சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்கம்யூனிகேஷன்ஸ் படிப்புகளையும், சிலர், சிவில் இன்ஜி., படிப்புகளையும் தேர்வு செய்தனர்.

கிண்டி இன்ஜி., கல்லுாரியில் முதல் நாளே, இந்த நான்கு பிரிவுகளிலும், பெரும்பாலான இடங்கள் நிரம்பின.இந்த ஆண்டு, மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வால், மருத்துவ கவுன்சிலிங் எப்போது என, தெரியாத நிலை உள்ளது. அது போல், மருத்துவத் துக்கான, 'நீட்' தேர்வில், பெரும்பாலான மாணவர் கள், போதிய மதிப்பெண் பெறவில்லை.அதனால், பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற, கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள், பெரும் பாலும், இன்ஜி.,படிப்பை தேர்வு செய்கின்றனர்.

இது குறித்து, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் கூறுகையில், ''மருத்துவ படிப்பில், 'நீட்' பிரச்னை இருப்பதால், இந்த ஆண்டு பெரும்பாலான மாணவர்கள், இன்ஜி.,படிப்பை நம்பிக்கையாக எடுத்துள்ளனர். அதனால், முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் அதிக மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது,'' என்றார்.

'டாப்பர்ஸ் சாய்ஸ்'

இன்ஜி., கவுன்சிலிங் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற, முதல் மாணவர்களில் நேற்று, நான்கு பேர் இன்ஜி., கவுன்சிலிங்கில் இடம் தேர்வு செய்யவில்லை. நேற்றைய கவுன்சிலிங் கில் முதல், 10 இடங்களில், முன்னேறிய பிரிவை சேர்ந்த இரண்டு பேர், பிற்படுத்தப்பட் டோர் வகுப்பில், ஏழு பேர் மற்றும் ஒரு முஸ்லிம் மாணவர் இடம் பெற்றனர்.இவர்கள், 200க்கு, 200, 'கட் ஆப்' மதிப்பெண் எடுத்ததால், ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு இல்லாத, பொதுப்பிரிவில் இடங்களை பெற்றனர்.

அவர்களில், ஒன்பது பேர், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரி யையும், ஒருவர், கோவை, பி.எஸ்.ஜி., கல்லுாரியையும் தேர்வு செய்தனர். பாடப் பிரிவை பொறுத்தவரை, ஐந்து பேர், கம்ப்யூ., சயின்ஸ்; மூன்று பேர், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்; ஒருவர், எலக்ட்ரிகல்; ஒருவர், சிவில் பிரிவுகளையும் தேர்வு செய்தனர்

2017 - 18ஆம் ஆண்டுக்கான 15,332 குரூப் "ஏ" அதிகாரி மற்றும் குரூப் "பி" அலுவலக உதிவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு !!

தற்போது எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படுகிறதோ இல்லையோ, வங்கிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக வங்கித்துறை மாறியுள்ளது இதற்கு வங்கிகள் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை அதிகரித்தும்
எளிதானதாக மாற்றம் செய்து வருவதே காரணம் என கூறலாம். வங்கிகள் துறைகளில் இருந்து வெளிவரும் அறிவிப்புகள் இன்றைய இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுபோன்ற அரிய வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.

21 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து ஆறாவது முறையாக 2017 - 18ஆம் ஆண்டுக்கான 15,332 குரூப் "ஏ" அதிகாரி மற்றும் குரூப் "பி" அலுவலக உதிவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: இந்தியாவில் உள்ள 56 கிராம வங்கிகளில் காலியாக உள்ள 15332 ஆயிரம் காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்லவன் கிராம வங்கி, பாண்டியன் கிராம வங்கி என இரண்டு வங்கிகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 590 இடங்கள் உள்ளன.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக பள்ளி, கல்லூரிகளில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
Office Assistant (Multipurpose) பணிக்கு தோராயமாக மாதம் ரூ.19000-22000
Officer Scale - I பணிக்கு தோராயமாக மாதம் ரூ.30000-36000
Officer Scale - II பணிக்கு தோராயமாக மாதம் ரூ.36000-42000
Officer Scale - III பணிக்கு தோராயமாக மாதம் ரூ.41000-47000

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: 600 ரூபாய் (எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 100 ரூபாய்). இதனை ஆன்லைன், வங்கி சலான் ஆகிய 2 வழிகளில் செலுத்தலாம். ஜூலை 12 முதல் ஆக., 1 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலான முதல்நிலை தேர்வு (பிரிலிமினரி) மற்றும் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) என இரு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பிரிலிமினரி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர்.

மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரி பதவிக்கு எழுத்துத்தேர்வு 2017 செப்டம்பர் 9, 10 மற்றும் 16 ஆம் தேதி நடைபெறும். உதவியாளர் பதவிக்கு எழுத்துத்தேர்வு 2017 செப்டம்பர் 17, 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்ப பதிவில் தவறுதலாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை இன்று முதல் 24.07.2017 முதல் 14.08.2017 வரை திருத்தம் செய்துகொள்ளலாம்.

மேலும் வயதுவரம்பு, தகுதிகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/6/30/IBPS-RRB-VI-Recruitment-2017-14192-Officers-Office-Assistant-Posts.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து தெரி்ந்து விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு உண்டா?நாளை தெரியும்.. திமுக எம்பி திருச்சி சிவா!

நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புகேள்விக் குறியாகியுள்ளது.
இதையடுத்து நீட் தேர்வில்தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஆளும் கட்சி அமைச்சர்கள் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்தனர். அப்போது நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மத்திய அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நீட் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.மேலும் பதவிப் போராட்டத்தால் அதிமுகவினர் கடமையை மறந்து விட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு தேவையில்லை என்பதே திமுகவின் நிலை என்றும் திருச்சி சிவா கூறினார்.மேலும் வட இந்திய மாணவர்களுக்கு ஏற்றவாறு நீட் தேர்வில் கேள்வி கேட்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நிலைஎன்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜே.பி.நட்டா கூறினார் என்றும் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறினார்.

NEET EXAM : முதல்வர் நம்பிக்கை

மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது,'' என, தமிழக முதல்வர், பழனிசாமி கூறினார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக,டில்லி வந்த, தமிழக முதல்வர் பழனிசாமி, நிருபர்களிடம்கூறியதாவது: 'நீட் நுழைவுத் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்

அரசு பள்ளிகள் தரம் உயர்வு: கோட்டை விட்டது மதுரை : முதல்வர் தொகுதி முதலிடம்

தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதில், மதுரையில் ஒரு பள்ளிக்கு மட்டும்வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களை கவலையடைய செய்துள்ளது.
அதேநேரம் முதல்வர் பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில்,ஏழு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.கல்வித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 150 நடுநிலை, உயர் நிலையாகவும், 100 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

 மேல்நிலையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும், உயர்நிலையில், 750 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும். இதில், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக, 100 பேருக்கும், 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர், உயர்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.மூன்று ஆண்டுகளாக பள்ளிகள் தரம் உயர்த்தப்படாத நிலையில், இக்கல்வியாண்டு, அறிவிப்பு மட்டும் வெளியாகிய நிலையில், பள்ளிகள் பெயர் பட்டியல் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதற்கு காரணம், 'தகுதி இல்லாத பள்ளிகளையும் தரம் உயர்த்த ஆளும் கட்சியினர் கல்வி அதிகாரிகளை கட்டாயப்படுத்தியது தான்,' என தகவல் வெளியாகியது. ஆனாலும் கல்வி செயலாளர் உதயசந்திரன், தகுதியான பள்ளிகளை மட்டுமே தரம் உயர்த்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.தற்போது 100 மேல்நிலை பள்ளிகள் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், மதுரையில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பல பள்ளிகளுக்கு வாய்ப்பு இருந்தும், கொட்டாம்பட்டி அரசு உயர்நிலை பள்ளி மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இத்துடன் பரிந்துரைக்கப் பட்ட களிமங்கலம், அவனியாபுரம் அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தேர்வு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் சேலம் -7, திருவள்ளூர் - 7, வேலுார் - 6, விழுப்புரம் -6, காஞ்சிபுரம் -5, விருதுநகர் -6 என பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் நிர்வாகிகள் கூறியதாவது:பள்ளிகளுக்கு இடையே, மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் துாரம், ஒரு மேல்நிலை பள்ளிக்கு அருகே குறைந்தபட்சம் 2 அல்லது 3 உயர்நிலை பள்ளிகள் இருக்க வேண்டும், மாணவர் எண்ணிக்கை ஆகிய அடிப்படையில் தரம் உயர்த்த தகுதிகளாக கணக்கிடப்படுகின்றன. செயலாளர்உதயச்சந்திரனும் இதை கண்டிப்பாக பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.ஆனால், அரசியல் குறுக்கீடால் பள்ளிகளை தேர்வு செய்ய கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வேறு வழியின்றி தகுதியில்லாத பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டியதாயிற்று. குறிப்பாக ஊமச்சிகுளம், வண்டியூர், ஆனையூர் பகுதிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.

 இப்பகுதிகள் தி.மு.க., எம்.எல்.ஏ.,வின்தொகுதிக்குள் வருவதால் இவை பரிசீலிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் மூன்று பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால், 30 ஆசிரியர் பணியிடங்கள் மதுரைக்கு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை மதுரை கோட்டை விட்டது, என்றனர்.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மேலும், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்தும் பாடிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடலை எப்படியாகினும் வாரத்தில் ஒரு நாள் அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாரத்தில் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையன்று வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.அதே சமயம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில்மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும் என்றும், வந்தே மாதம் பாடலை பாட விருப்பமில்லாதவர்களை எந்த விதத்திலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் தீர்ப்பில்நீதிபதி குறிப்பிட்டார்.ஆசிரியர் வாரியம் நடத்திய தேர்வில் வந்தே மாதம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு வங்கமொழி என பதில் அளித்தும் மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.அப்போது, அந்த கேள்விக்கு மதிப்பெண் அளித்து, வீரமணிக்கு ஆசிரியர் பணி வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு எழுதிய கே.வீரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இரண்டாம் தாளுக்கான 'டி' வகை வினாத்தாளில் கேள்வி எண் 107 இல் 'வந்தே மாதரம்' என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? எனக் கேட்கப்பட்டு இருந்தது.அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. ஆனால், அனைத்து பிஎட் பாடப் புத்தகங்களிலும் 'வந்தேமாதரம்' வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.
அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், இந்த குழப்பத்தை தீர்க்க 'வந்தே மாதரம்' எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி, 'வந்தே மாதரம்' சமஸ்கிருத வாய் மொழி பாடல் என்றும், ஆனால் முதலில் எழுதப்பட்டது வங்க மொழியில்தான் என்றும் விளக்கம் அளித்தார்.இதைப் பதிவு செய்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வழக்கின் தீர்ப்பை இன்று அளித்துள்ளார்

Flash News - NEET தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு.

நீட் தேர்விலிருந்து 2 வருடங்களுக்கு விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு.

*சட்டத்தின் வரைவு நகலை மத்திய சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக வழங்கியது தமிழக அரசு.

*2 அமைச்சங்களின் ஒப்புதலுக்கு பிறகு உள்துறைஅமைச்சகம் மூலமாக குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற திட்டம்.

அப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு?

இதை புரிந்துக் கொள்ளுங்கள்!!!!!

9300 grade pay 4200 வாங்க வேண்டிய இடைநிலை ஆசிரியர்கள்
5200-2800 என்ற பத்தாம்வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதிய கட்டில் வைக்கப்பட்ட தேதி
1-06-2009.

ஆனால் 2008 ல் பணிநியமனம் செய்யப்பட்டவர்களும் இதே ஊதியத்தில் வைக்கப்பட்ட போதும் அவர்களின் ஊதிய விகிதம் 1.86 ஆல் பெருக்கித்தரப்பட்டது.
இதனால் 2008 ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதியம் 9300-4200 என்ற நிலையை கடந்தது ஆனால் அவர்களின் தற்போதைய கிரேடு பேவும் 2800 தான்.
அதற்கு பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அதாவது 2009 ஜீனில் 5200-2800 பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதியத்தில் வைக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டார்கள்.அவர்களின் கிரேடு பத்தாம் வகுப்புக்கான கிரேடு ஆகும்.

இதுமட்டுமின்றி 2008 ல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் 12000
( DA இல்லாமல்)
2009 ல் பணிநியமனம் பெற்றவர்களின் அடிப்படை ஊதியம் வெறும் 5200+2800= 8000
ஆகவே அடிப்படை ஊதியத்திலேயே இழப்பு கிட்டதட்ட
ரூ 4000...
இதற்கான அகவிலைப்படியோடு சேர்த்து 2009  இடைநிலை  ஆசிரியர்களின் மொத்த ஊதிய இழப்பு அதே 2009 ல் 8000.
தற்போதைய  முரண்பாடு( 2008 க்கும் 2009 க்கும் இடையே)
11000 க்கும் மேல்...
பிறகு பணிநியமனம் பெற்ற 2012 ,2014 இடைநிலை ஆசிரியர்களுக்கு 13000 ஊதிய இழப்பு.
இது தான் ஊதிய முரண்பாடு.
இந்த ஊதிய இழப்புக்கான முக்கிய காரணம்

1) டிப்ளோமா கல்வித்தகுதிக்கான 9300-4200 என்ற ஊதிய கட்டில் இடைநிலை ஆசிரியர்கள் வைக்கப்படாமல் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதிய கட்டில் 5200-2800 வைக்கப்பட்டது
( பத்தாம் வகுப்பு கல்வித்தகுக்கான சில பணியிடங்களும் அதன் ஊதியமும்
இரண்டாம் நிலை காவலர் கிரேடு 1900, பள்ளி இரவு காவலர் 1900,இளநிலை உதவியாளர் 2400,
ஆய்வக உதவியாளர் 2400)
அப்போது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கு 5200-2400 வரை ஊதியம் என்றால் இடைநிலை ஆசிரியர்கள் படித்த
+2 க்கு ,டிப்ளோமாவிற்கு ஊதியம் எங்கே???
அல்லது அவர்கள் டிப்ளோமா படிக்கவே இல்லையா????
இது அரசுக்கு தெரியாதா?
தமிழ்நாட்டில் டிப்ளோமா முடித்துள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் தற்போது 9300-4200 கொடுக்கப்படுக்கிறது .
Diploma in teacher education படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு?

25/7/17

அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு அறிவிப்பு

அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைகக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.          தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு மாணவர் சேர்க்கை மத்திய அரசின் நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா  பல்கலைகழக தரப்பில் அறிவிக்கப்பட்டது. 
பி.ஆர்க் கலந்தாய்வில் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்களும் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு  தரப்பில் அறிவிக்கப்பட்டது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க்  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ள  இடங்கள் நீங்கலாக மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்த அண்ணா பல்கலைகழக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் முழுவதும் 6 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 12ம் தேதி பி.ஆர்க் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இதற்காக  எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவு மாணவர்கள் 1,000 பிற பிரிவு மாணவர்கள் 2,000 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 

இதுதொடர்பாக  அறிவிக்கை ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் ஆன்லைன் பதிவு தொடங்கும். ஜூலை 31ம் தேதி, ஆன்லைன் பதிவு செய்ய கடைசி  நாளாகும். ஆகஸ்ட் 7ம் தேதி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 12ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கும். ஆகஸ்ட் 18ம் தேதி  நுழைவுத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

வாட்ஆப் முலமாக தவறான தகவல் பரப்பியதற்காக ஆசிரியருக்கு விசாரணைக் கடிதம் - நாமக்கல் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றத் திட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாக உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. சேர்க்கையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவர் அளித்த பேட்டி:
அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பிறகு, அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதலாக இருக்கும் ஆசிரியர்கள், அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மாற்றப்படுபவர்கள், 3 ஆண்டுகள் ஒப்பந்தப் பணி அடிப்படையிலேயே மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.
அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதனால், கடும் நிதி நெருக்கடியை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சந்தித்து வருகிறது. எனவே, அந்த மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அவ்வாறு அந்தக் கல்லூரி நேரடி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டாலும், பிற அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதுபோன்ற கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படமாட்டாது. இப்போது அந்தக் கல்லூரியில் என்னவிதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்றார்.
ரூ. 80 கோடி நஷ்டத்தில் இயங்கும் மருத்துவக் கல்லூரி: இதற்கிடையே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரியானது கடந்த 2016-17 கல்வியாண்டில் ரூ. 63 கோடி நஷ்டத்திலும், நிகழாண்டில் ரூ. 80 கோடி நஷ்டத்திலும் இயங்கி வருகிறது என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. 100 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.

இதில் எம்.பி.பி.எஸ். மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்மும், பிடிஎஸ் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால், ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பிற செலவுகளுக்கென ஆண்டுக்கு ரூ. 100 கோடி வரை மருத்துவக் கல்லூரிக்குச் செலவாகிறது. இதனால், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மற்ற நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுசெல்வது என்பது வரவேற்கத்தக்க விஷயம் என பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
TNTET : புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
புதிதாக துவங்கப்படவுள்ள 250 அரசுப் பள்ளிகளுக்கு,ரூ7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கும்படி பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாகபகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு ஊழியர்கள் தவிர அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களில் தினக்கூலி, ஒப்பந்த, அவுட்சோர்சிங் தொழிலாளிகளை வைத்தே பணிகளை நிறைவேற்ற அரசு முயன்று வருகின்றது.இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்16549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு மாதம் ரூ.5000/- தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.பிறகு இரண்டு ஆண்டுகள் முடிந்து தொகுப்பூதியம் ரூ.2000/- உயர்த்தி 2014ம் ஆண்டு முதல் ரூ.7000/-ஆக சம்பளம் தரப்படுகிறது. ஆண்டு வாரியாக ஊதிய உயர்வை அரசிடம் இருந்து கேட்டு வாங்க முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நடந்து முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15000/- தொகுப்பூதியம், அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலை தரவேண்டி கேட்டதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ரூ.700/- உயர்த்தி தொகுப்பூதியம் ரூ.7700/-வழங்கிவருவதாக பதிலளித்துள்ளார். ஆனால் ஊதிய உயர்வுக்கான அரசாணை எதுவும் இதுவரை அரசு வெளியிடவில்லை. சமவேலை, சமஊதியம் என்ற சமநீதியை அரசு அமுல் செய்தால் ஒழிய, ஒப்பந்தப் பணி செய்பவர்களின் வாழ்வு ஒருபோதும் முன்னேறாது.அது போல ஒப்பந்த பணி செய்பவர்களுக்கு சட்டத்தில் சொல்லப்பட்ட குறைந்தபட்ச சம்பளம், மருத்துவ வசதி, குடும்பநலநிதி, இன்சூரன்ஸ் வழங்க அரசு முன்வரவேண்டும்.

ஒப்பந்த பணிசெய்பவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் விதமாக வருங்கால வைப்புநிதி பங்கீட்டுத் தொகையை பிடித்தம் செய்து அதற்கான தொகையை அளித்து பணி ஓய்வுபெறும் போது பென்சன் வழங்கவேண்டும். 58வயது முடிந்து பணிஓய்வில் சென்றவர்களுக்கும், பணியில் சேர்ந்து இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கும், அரசு மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து குறைந்தபட்சமாக ரூ.3 இலட்சம் உடினடியாக வழங்கவேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.