யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/8/17

பி.எப்., விபரங்கள் அறிய எளிய நடைமுறை அறிமுகம்!!!

சம்பளம் பெறும் ஊழியர்கள், பி.எப்., நிலவரம் அறியவும், தொகை பெறவும், 'ஆன்-லைன்' மூலம் 
விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.மாத சம்பளம் பெறும் ஊழியர்களிடம், பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதில், 4.5 கோடி
சந்தாதாரர்கள், 45 லட்சம் ஓய்வூதியர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த சேமிப்பு கணக்கு விபரங்கள், முந்தைய ஆண்டு செலுத்திய தொகை, அதற்கான வட்டி மற்றும் இருப்பு விபரங்கள் ஆகியவை, ஊழியர்களுக்கு, நிறுவனம் மூலம், பிப்., மாதம் வழங்கப்படும்.
தற்போது, 'இ--கவர்னன்ஸ்' முறையில், எளிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு
உள்ளன. 'ஆன்ட்ராய்டு' போன் மூலம், இ.பி.எப்.ஓ., என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இணையதளத்தில் நுழைந்தால், சந்தாதாரருக்கு வழங்கப்பட்டுள்ள, யு.எ.என்., எண் மூலம் தங்கள் வைப்பு நிதி பாஸ் புக்கை காணலாம். கடைசியாக செலுத்தப்பட்ட, பி.எப்., தொகை மற்றும் இருப்பு தொகை விபரங்களையும் பெற முடியும்.தற்போது, பி.எப்., தொகை திரும்ப பெறுதல் மற்றும் கடன் பெற, இந்த செயலி வழியாக விண்ணப்பிக்கும் வகையில், நடைமுறை
எளிதாக்கப்பட்டுள்ளது. இதனால், இதில் இணைந்துள்ள ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும் 2 ஊக்க ஊதிய உயர்வு : பள்ளி கல்வித் துறை உத்தரவு

நான்கு ஆண்டுபோராட்டத்திற்கு பின்பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும், உயர்கல்விக்கு 2 ஊக்க ஊதிய உயர்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது.
தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உயர் கல்வி தகுதிகளுக்கு ௨ ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., (அ) எம்.எஸ்சி.,க்கு முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., க்கு இரண்டாவது ஊக்க ஊதியமும் பெற்று வந்தனர்.சில ஆண்டுகளுக்கு முன் பல்கலை.,கள் தொலைதுாரகல்வியில் இருந்து எம்.எட்.,ஐ நீக்கின. இதனால்ஆசிரியர்கள் தொலைதுார கல்வி மூலம் எம்.எட்., படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எம்.எட்.,க்கு பதிலாக எம்.பில்., (அ) பி.எச்டி., முடித்திருந்தாலும் ௨வது ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என, 2013, ஜன.,1 ல் பள்ளி கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.

தமிழாசிரியர்களை பொறுத்தவரை பி.லிட்., முடித்தோர் எம்.ஏ.,க்கு ஒரு ஊக்க ஊதியமும், பி.எட்.,க்கு இரண்டாவதுஊக்க ஊதியமும் பெற்று வந்தனர். ஆனால் பி.ஏ., பி.எட்., முடித்து பட்டதாரி தமிழாசிரியராக சேர்ந்தோருக்கு எம்.ஏ.,க்கு மட்டும் ஒரே ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வந்தது.'மற்ற பட்டதாரி ஆசிரியர்களைப்போல் தங்களுக்கும் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,' என வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து ஒரு ஆசிரியர் தங்களது பணிக்காலத்தில் உயர்கல்விக்கு ௨ ஊக்க ஊதிய உயர்வு பெறலாம். அதன்படி பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் எம்.எட்., (அ)எம்.பில்., (அ) பி.எச்டி முடித்திருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம். இந்த உத்தரவை அரசாணை வெளியிட்ட 2013, ஜன.,1லிருந்து செயல்படுத்த வேண்டுமென, பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

நீட்'தேர்வு விவகாரம் : சுருதி மாறும் தமிழக அரசு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என, இந்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன், கூறினார்.
நீட் தேர்வு,ஒரு வாரத்தில்,முடிவு,தெரியும்,சுருதி மாறும், தமிழக அரசுமருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டுமென வலியுறுத்துவதற்காக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அடிக்கடி டில்லி வந்து செல்கிறார்.தனி ஆர்வம்
நேற்று, மீண்டும் அவர் டில்லி வந்தார்.வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற, ரக் ஷா பந்தன் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டதால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர்கள் எவரும், அலுவலகங்களுக்கு வரவில்லை. ஆனாலும், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து தங்கியிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரை, காலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார்.நீட் விவகாரம் தொடர்பாக, நிருபர்களுக்கு பேட்டியளிப்பதில், விஜயபாஸ்கரும், தம்பிதுரையும், எப்போதும் தனி ஆர்வம் காட்டுவது வழக்கம்.மத்திய அமைச்சர்களை, இவர்கள் சந்திக்கும் புகைப்படங்களும், பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விலக்கு கிடைக்குமா

ஆனால், விஜயபாஸ்கர், நேற்று டில்லி வந்த தகவல் கூட, பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. நீட் தொடர்பான அமைச்சரின் டில்லிபயணங்கள் குறித்த, ஊடகங்களின் விமர்சனங்களே, இதற்கு காரணம் என தெரிகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சரே, நேற்று டில்லியில் இருந்தும், வழக்கத்துக்கு மாறாக, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிருபர்களை சந்தித்தார்.அப்போது, அவர் கூறியதாவது: நீட் விவகாரம் தொடர்பாக, 85 சதவீத ஒதுக்கீட்டை பெறுவதற்கான சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு நடவடிக்கைகள், தீவிரமாக நடக்கின்றன. எனவே, நீட் விவகாரத்தில், தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது, இந்த வாரத்துக்குள் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.இதுவரை, நீட் தொடர்பாக உறுதியாக போராடி வருவதாகவும், நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என, தமிழக அரசு கூறிவந்த நிலையில், தற்போது, மாநில அரசின் சுருதி மாறத் துவங்கியுள்ளது, கவனிக்கத்தக்கது.

கவுன்சிலிங் எப்போது?

நாடுமுழுவதும் உள்ள, அரசுமருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி, 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், முடிந்தது.இந்நிலையில், தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய, 85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங், ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.அதேபோல், இந்தாண்டு, 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வரும், 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கைமுடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

போர்க்கொடி..! கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு -சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி

பள்ளிக் கல்வி துறையில், 155 நாட்களில், எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ள, செயலர் உதயசந்திரனை மாற்றினால், அது, 1.5 கோடி மாணவர்களை பாதிக்கும்' என, கல்வியாளர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து உள்ளனர்; 'அவரை மாற்றக் கூடாது' என்றும் வலியுறுத்தியுள்ளனர்.கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு - சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி
தமிழக பள்ளிக் கல்வி துறை, பல ஆண்டுகளாக, பாடத்திட்டத்தை மாற்றாமலும், நவீன தொழில்நுட்பத்துக்கு மாறாமலும், தடுமாறி வந்தது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தும், எந்த மாற்றமும் நிகழாமல் இருந்தது.
பாராட்டு :
இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையனும், செயலராக உதயசந்திரனும் பொறுப்பேற்ற பின், தேசிய அளவில், தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு, புதிய பிம்பம் கிடைத்து உள்ளது. 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமே, தமிழக அரசின் முயற்சியை பாராட்டி உள்ளது. மார்ச், 6ல், பள்ளிக்கல்வி செயலராக பொறுப்பேற்ற உதயசந்திரன்,அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை படி, நேற்று வரையிலான,155 நாட்களில், எண்ணற்ற பணிகளை துறையில் செய்துள்ளார்.இந்நிலையில், பெற்றோர், மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், செயலர் உதயசந்திரனை இடம் மாற்றம் செய்ய, முதல்வர் பழனிசாமி அரசிடம், சிலர் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பல்கலை துணைவேந்தர்கள், பள்ளி தாளாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர், மாணவர் பேரவையினர் என, அனைத்து தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'செயலர் உதயசந்திரனை மாற்றக்கூடாது' என, அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் வலியுறுத்த துவங்கிஉள்ளனர்; இதுதொடர்பாக, அரசுக்கு கடிதங்களும் எழுதி வருகின்றனர்.

துவக்கம்:

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தேசிய அளவில், 'கோமா' நிலையில் இருந்த, தமிழக பள்ளிக் கல்வி துறை, அதிலிருந்து மீண்டு, நாட்டிற்கு முன்மாதிரியாக மாறுவதற்கான பயணத்தை துவக்கி உள்ளது. தற்போது, நடுவழியில் கப்பலை கவிழ்த்து விடுவது போல, பள்ளிக்கல்வி செயலரை மாற்றும் முயற்சியில், அரசியல்வாதிகளும், வணிக நோக்கில் செயல்படும் ஏஜென்டுகளும், அரசுக்கு அழுத்தம் தருவது தெரிய வந்துள்ளது. அவர் மாற்றப்பட்டாலோ அல்லது அவரதுசெயல்பாடுகளை முடக்கினாலோ, தமிழகத்தில் படிக்கும், 1.5 கோடி மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் இருளில் தள்ளப்படும். இது போன்ற அதிகாரிகளுக்கு, கூடுதல் ஆதரவு கொடுத்து, பணிகளை முடிக்க, அமைச்சரும், அரசும் உதவ வேண்டும். மாறாக, சுய கவுரவம், லஞ்சம், ஊழலில்ஈடுபடுவதற்காகவும், யாரையாவது திருப்திபடுத்தவும், அவரை மாற்ற முயற்சித்தால், முதல்வர் பழனிசாமியின் அரசு, மாணவர்களுக்கு துரோகம் இழைப்பதாகி விடும். எனவே, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரனின் கூட்டுப் பணி, துறையில் தொடர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டணியின் 155 நாள் சாதனைகள் :

* பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தனியார் பள்ளிகள், வியாபார பொருளாக பயன்படுத்திய, மாநில, மாவட்ட, 'ரேங்க்' முறை, அதிரடியாக ஒழிக்கப்பட்டது.
* மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார்பள்ளிகளில், ஏழை மாணவர்கள் இலவச இடம் பெற, 'ஆன்லைன் அட்மிஷன்' முறை கொண்டு வரப்பட்டது.
* புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்து, பாதி பாடம் முடிந்த பின், ஆகஸ்டில் ஆசிரியர்களை இட மாற்றம் செய்யும் கவுன்சிலிங் முறை ஒழிக்கப்பட்டு, கல்வி ஆண்டு துவங்கும் முன்னரே, வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
* 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும்; 150 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
* டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில், ஆன்லைன் விண்ணப்ப முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வு முறையும், விரைவில், 'ஆன் லைன்' மயமாகிறது.
* 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் திட்டமிட்டு படிக்கும் வகையில், பள்ளி திறக்கும் நாளிலேயே, பொது தேர்வு நடக்கும் தேதியும், தேர்வு முடிவு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* மதிப்பெண் சான்றிதழ்களின் விபரங்கள், தமிழில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ்களை, மத்திய அரசின் டிஜிட்டல் இணையதளத்தில்,பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* அண்ணா நுாலக நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, முதல் முறையாக, தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடிப்பிடித்து, விருதுக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* கிடப்பில் போடப்பட்ட, சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராமதாஸ் வலியுறுத்தல்

 'நேர்மையாக செயல்படும் கல்வித் துறையின் இரு செயலர்களையும் இடமாற்றம் செய்யும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலராக, உதயசந்திரன், மார்ச்சில் நியமிக்கப்பட்டார். அதன்பின், அத்துறை, புதிய பாதையில் பயணிக்கத் துவங்கியது. பொதுத் தேர்வுகளில், தர வரிசையை ஒழித்தது; பிளஸ் 1க்கும், பொதுத் தேர்வை அறிமுகம் செய்தது; பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட, உதயசந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவர். அவர் பொறுப்பேற்று, ஐந்து மாதங்களே முடிந்துள்ள நிலையில், அவரை, அத்துறையிலிருந்து மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை,தமிழக அரசு துவங்கி உள்ளது. இதற்கு காரணம், ஆட்சியாளர்களின் ஊழலுக்கு, உதயசந்திரன் ஒத்துழைக்க வில்லை என்பது தான்.ஆசிரியர்களை இடமாறுதல் செய்வதில் எழுந்த சிபாரிசு பிரச்னையால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.பாரதியார் பல்கலையில் நடந்த ஊழல்கள் தொடர்பாக, துணைவேந்தர் கணபதி மீது விசாரணை நடத்த, உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவிட்டார். பெரியார் பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை ஆகியவற்றில் நடந்த ஊழல்கள் குறித்து, விசாரணை கமிஷன் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும், அவர் செய்து வருகிறார். அவரையும் மாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படை தேவை, தரமான கல்வி வழங்குவது தான். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள, இரு அதிகாரிகளை மாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட, கல்வி வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். எனவே, கல்வித் துறையின் இரு செயலர்களையும் இடமாற்றும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

கல்லூரிகளை போல் பள்ளிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து : நுழைவுத்தேர்வை சமாளிக்க 'தினமலர்' வெளியீட்டாளர் ஆலோசனை

தமிழக மாணவர்கள், அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும் வகையில், பள்ளிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு, தமிழக அரசுக்கு, 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய பாடத்திட்ட தயாரிப்புக்கு உதவும்வகையில், 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி, கருத்துரு ஒன்றை உருவாக்கி உள்ளார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனை நேரில் சந்தித்து, புதிய பாடத்திட்ட கருத்துருவை வழங்கினார். இதுகுறித்து, பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரனையும், பாடத்திட்ட கலைத்திட்டக்குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணனையும் சந்தித்து, ஆலோசனை தெரிவித்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

* பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் மேற்பார்வையில், கல்லுாரிகள் அளவில், 25 ஆண்டுகளாக தன்னாட்சி முறை சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வியிலும், தன்னாட்சி முறை கொண்டு வந்தால், கல்வி முறையை இன்னும் மேம்படுத்தலாம்

* கல்வித் தரம் உயர, கல்வி நிறுவனங்களுக்கும், அவற்றை நடத்துபவர்களுக்கும் சுதந்திரம் தர வேண்டும் என, 1986 மற்றும், 1992ம் ஆண்டு, தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்ட உள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கு, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம்

* கல்லுாரிக்கு தன்னாட்சி தர, யு.ஜி.சி., சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. ஒரு கல்லுாரி, குறைந்தபட்சம், 10 ஆண்டுகளாவது தொடர்ந்து இயங்க வேண்டும்; மாணவர்களின் கல்வித்தரம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி, ஆய்வக, நுாலக, விடுதி வசதிகள், உள்கட்டமைப்பு போன்ற தகுதிகள்நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிக் கல்விக்கும் விதிகள் கொண்டு வரலாம்

* தன்னாட்சிக்கு விரும்பும் பள்ளிகளின் விண்ணப்பத்தை, நிபுணர் குழு, 30 நாட்களில் பரிசீலித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதன்படி, தன்னாட்சி குறித்து, அரசு முடிவு எடுக்கலாம்

* தன்னாட்சி அந்தஸ்து பெறும் பள்ளிகள், தனியாக நிர்வாக குழு, நிதிக்குழு, கல்விக்குழு, பாடத்திட்ட குழு, தேர்வு மற்றும் மதிப்பீட்டுக்குழு போன்றவற்றை உருவாக்கி கொள்ள வேண்டும்

* பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம். மேம்படுத்தப்பட்ட கல்வியை, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வழங்கும் போது தான், அது பெரும் சுமையாகவோ, திறமைக்கு அப்பாற்பட்டதாகவோ இருக்காது

* பாடத்திட்ட குழுவில் இடம் பெற்றுள்ள, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தொழிற்துறையினர் சேர்ந்து, அவ்வப்போது, பாடத்திட்டத்தை புதுப்பித்து கொள்ளலாம்

* தரமான பாடத்திட்டம், மாணவர்களின் செயல்திறன் பரிசோதனை, தேர்வு முறையில் மேம்பாடு போன்ற அனைத்திலும், பள்ளிகளுக்கும், அரசுக்கும் உரிய ஒத்துழைப்பு இருந்தால், சாதாரண பள்ளியையும், தரம் மிக்க பள்ளியாக மாற்றலாம்

* பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நியமிக்கப்பட்டுள்ள,உயர்மட்டக் குழுவையே தன்னாட்சி முறைக்கான நடைமுறைகளை வகுக்கச் செய்யலாம். அதற்கான விதிகளை, இந்த ஆண்டு, டிச.,க்குள் முடித்தால், 2018 ஜன., யில் விண்ணப்பங்கள் பெறலாம். 2018, ஜூன் முதல் தன்னாட்சி வழங்கலாம்

* இந்த திட்டத்தின் மூலம், சி.பி.எஸ்.இ., மற்றும் சர்வதேச பாடத்திட்டம் மீதுள்ள மோகம் குறைந்து விடும். ஜே.இ.இ., - நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு, நாமே பாடத்திட்டம் உருவாக்கலாம். இதன்மூலம், கல்விப்புரட்சி ஏற்பட்டு, இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக மாறும்.இவ்வாறு,அந்த கருத்துருவில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தையும் பகிரலாம்! :
* பள்ளிகளுக்கான தன்னாட்சி குறித்த கருத்துரு மற்றும் பாடத்திட்ட மாற்றம் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துகளை, 'தினமலர்' வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். தங்களின் எண்ணங்கள், கருத்துகளை, rlp@dinamalar.in என்ற,'இ - மெயில்' முகவரியில் தெரிவிக்கலாம்.

கல்வித்துறை செயல்பாடுகள்' சவாலுக்கு 12-ந் தேதி நான் தயார்: அன்புமணி

இதுகுறித்து பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கை வெளியிட்டார். அதில் தெரிவித்ததாவது:
பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், 
அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி விவாதத்திற்கான நாளையும், இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அமைச்சர் அதை விடுத்து விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் நாங்களே செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து விவாதம் நடத்தத் தயாரா? என சவால் விடுத்தது அமைச்சர் செங்கோட்டையன் தான். அவரது சவாலை நான் ஏற்றுக் கொண்ட நிலையில் அதற்கான இடத்தையும், தேதியையும் முடிவு செய்ய வேண்டியது அமைச்சர் தான். ஆனால், அதையும் நானே முடிவு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருப்பது பெருந்தன்மையா... பயமா? என்று தெரியவில்லை. ஆனாலும் அவரது இந்த அறைகூவலையும் ஏற்று விவாதத்திற்கான ஏற்பாடுகளை பாமக மேற்கொள்ளும்.

பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதும், சவால்களை எதிர்கொள்வதும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிதல்ல. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி என்ற பதத்தையே மருத்துவர் அய்யா அவர்கள் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி, தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு காரணமாக இருந்தார். 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் சென்னையில் ‘இன்றையத் தேவைக்கு ஏற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி, அதில் 24 முன்னாள் துணைவேந்தர்களை அழைத்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து விவாதித்தது. அதுமட்டுமின்றி ‘பள்ளிக்கல்வி: இன்றையத் தேவைக்கேற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் ஆவணம் தயாரித்து வெளியிட்டோம். இந்த ஆவணத்தை அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்து கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியது.

ஆனால், செங்கோட்டையன் அங்கம் வகிக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் கல்வித்துறைக்கு செய்த சேவை என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க அவருடனான விவாதம் உதவியாக இருக்கும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அனுமதித்து கல்வியை கடைச்சரக்காகவும், தரமற்றதாகவும் மாற்றியது அதிமுக தான். இப்போதும் கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றவுடன், சொந்த வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக நடத்திய ஆசிரியர்கள் இடமாற்ற ஊழலால் பின்தங்கிய மாவட்டங்களில் ஏழைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும்போது அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

எனினும், செங்கோட்டையனும், அவருக்கு முன்பு இருந்த அமைச்சர்களும் ரூ. 5 லட்சத்தை அளவீடாகக் கொண்டு இடமாற்ற ஆணைகளை வழங்கியதால் இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 60% காலியாக உள்ளன. அதேநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ஈரோடு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.

இவை குறித்து விவாதிப்பதுடன், தமிழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் தெரிவிக்க இந்த விவாதம் சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்விவாதத்தை ஆக்கப்பூர்வமான வகையில் நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதன்படி, அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டவாறு வரும் 12.08.2017 மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும். இதையேற்று இவ்விவாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன். செங்கோட்டையன் தேவையில்லாத வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் விரும்பினால் அதுகுறித்தும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாக தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றிருந்தது.

11th Public Exam ஐ எதிர்த்த வழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது.

11th Public Exam ஐ எதிர்த்து மதுரை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.வாதம் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு  ஒத்தி வைக்கப் பட்டது.11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த அரசு பிறப்பித்துள்ள அரசாணையைய ரத்து செய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அடுத்த கல்வியாண்டு முதல் 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அப்போது அரசு சாார்பில் தாக்கல் செய்த மனுவில், போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில்தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம்.பல பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடத்தை கற்றுக்கொடுக்காமல், பிளஸ் டூ பாடங்களை கற்றுக்கொடுக்கிறார்கள்.பொதுத்தேர்வுஅறிமுகமானால்தான் 11வது வகுப்பு பாடத்தை கற்பிப்பார்கள்.11வது வகுப்பு பாடத்தை கற்காததால் போட்டித்தேர்வுகளின்போது மாணவ, மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். இவ்வாறு வாதிடப்பட்டது.இதனிடையே, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரும் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையாக நியமிக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்



2013 TET TEACHERS RELATED NEWS:

2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பின் சார்பில் தங்களுக்கு பணி வழங்கவேண்டும் என திருச்சி   முதன்மை கல்வி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் செய்து சாலையை மறித்து சாலையில் தங்களது கோரிக்கைகளை எழுதி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது.*

8/8/17

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இணையதளங்கள் பற்றிய தகவல்.

பள்ளிக்கல்வி இயக்குநரக இணையதளம் http://dse.tnschools.gov.in என்ற முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளது. இயக்குனரக இணையதளத்தில் இருந்து
32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலக இணையதளம் மற்றும் உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக முதன்மை கல்வி அலுவலக இணையதளம் செல்ல
http://dse.tnschools.gov.in/districtname என்ற URL பயன்படுத்தலாம். District name  டைப் செய்யும் போது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும். நேரடியாக பள்ளிகளின் இணையதளம் செல்ல
http://dse.tnschools.gov.in/udisecode என்ற URL பயன்படுத்தலாம். இங்கு udisecode என்பது பள்ளியின் 11 இலக்க Udise எண்  ஆகும். இணையதளத்தில் தெரிய வேண்டிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை Login செய்து பதிவேற்றிக்கொள்ளலாம். 
இதேபோன்ற அமைப்பு தொடக்கக்கல்வி இயக்குரகத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

http://dee.tnschools.gov.in என்ற URL பயன்படுத்தலாம்.

நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி
கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
 முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், நாடு முழுவதும் ஆசிரியர் தின மாக கொண்டாடப்படுகிறது. இதில், மாநிலங் களில் தனித்தனியாகவும், தேசிய அளவில் தனியாகவும், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்தஆண்டு, மாநில அளவில் விருது பெறு வோரின் பட்டியலை, வரும், 20க்குள், மாநில குழுவுக்கு அனுப்பும்படி, மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், 'மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத் திய, முன்மாதிரியான ஆசிரியர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.'அவர்கள் விண்ணபிக்க வில்லை என, விட்டு விடக்கூடாது. புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை பரிந்துரைக்க கூடாது' என, தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, நல்லாசிரியர் விருது வழங்கியதில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. அதிகாரிகளின் உறவினர்கள், மேல் அதி காரிகளுக்கு வேண்டியவர்கள், ஆசிரியர் சங்கத் தினருக்கு நெருங்கியவர்கள், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருக்கு, இந்த விருது வழங்க, சிபாரிசு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்தநடைமுறை, பள்ளிக்கல்வி செயலர், உதய சந்திரன், இயக்குனர், இளங்கோவன் கூட்டணி யில், மாற்றப்படும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ள னர். அதேபோல, 2016 குழுவில் இடம் பெற்ற அதி காரிகளே, தங்கள் பெயரை சிபாரிசு செய்த

சம்பவங்களும் நடக்காது என, நம்பிக்கையில் உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரி யர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறுகை யில், ''பாடம் நடத்துவதிலும், மாணவர்கள் மீதும், பள்ளிக்கல்வியின் உண்மையான வளர்ச் சியில் அக்கறை காட்டுவோருக்கும் நல்லா சிரியர் விருது, வழங்கப்பட வேண்டும். ''எனவே, இதற்கான விதிகளை, பொதுமக்களின் கருத்து கேட்டு மாற்றுவது அவசியம்,'' என்றார்.

நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்.

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 23ம் தேதி வரை வினியோகம் செய்யப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 
தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும்,பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி(செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல் பட்டப்படிப்பு)பி.எஸ்சி ரேடியோலஜி, இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய படிப்புகளில் இந்த ஆண்டு மாணவ மாணவியரை சேர்க்கை நடக்க உள்ளது.இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 23ம் தேதி 22 வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 24ம் தேதிக்குள் வரை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நேரில் பெற விரும்புவோர் அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு விண்ணப்ப மனுவுடன்விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டுக்கு கட்டணம் ரூ. 400க்கான டிடி கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ‘‘செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10’’ என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், தாழ்ப்பட்டோர்(்அருந்ததியர்), பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்ப படிவக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.

TNPSC Group 2A 2017 Exam Level Analysis / Cut off Marks :

Today GROUP-2A Question Scenario

*.TAMIL– Normal Paper, Without careless mistakes one Can score 95+.
*.GENERAL ENGLISH– Similar to Tamil Paper, One Can score 95+.
*.GMA(MATHS)– Standard Paper can score 22+.
*.CURRENT AFFAIRS– 2016 to Very Recent like President Election. (very factual)
*.GENERAL STUDIES– Good Paper as many Qns were Tricky and outside School Text Books-Good Trend.
#155_Plus seems to a good score.

புதிய பாடத்திட்டம் தயாரிப்பு - 4 இடங்களில் கருத்து கேட்பு

புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, மதுரை, கோவைஉட்பட, நான்கு இடங்களில், கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கலைத்திட்ட வடிவமைப்புக்குழு மற்றும் உயர்மட்டக்குழு என, இரு குழுக்களை, தமிழக அரசு அமைத்துள்ளது.இந்தக் குழுக்களின் ஆலோசனை கூட்டம், ஜூலையில் நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாவது முறையாக, டி.பி.ஐ., வளாகத்தில், கலைத்திட்டக்குழு கூடி ஆலோசித்தது.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடமும், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, வரும், 9ல், மதுரை; 11ல், கோவை; 22ல், சென்னை; 24ல், தஞ்சாவூர் என, நான்கு இடங்களில் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி விபரம் பெறலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, பாடத்திட்டம் குறித்து, கருத்துக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

11 லட்சம் பான் கார்டுகளை முடக்கிய அரசு: | உங்கள் பான் அட்டையின் நிலை தெரிய வேண்டுமா?


மத்திய அரசு சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர்சந்தோஷ் குமார் காங்வார் வெளியிட்டுள்ளார்.
ஒரு நபரின் பெயரிலேயே பலபான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், "பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பது வழிகாட்டி கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின் படி, உயிருடன் இல்லாத நபர்அல்லது பொய்யான அடையாளம்கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன" என்றார். மேலும், உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு வசதி செய்துள்ளது.

உங்கள் ஆதார் அட்டை குறித்து அறிந்துகொள்ள, முதலில், 

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html

என்ற Link-ஐ Click  செய்யுங்கள். அடுத்ததாகத்திறக்கும் வலைப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைத்(உங்கள் பெயர், துணைப்பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை) தகுந்த இடங்களில் நிரப்பவும். இதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் ஓ.டி.பி-யை பதிவு செய்தால், உங்களின் பான் அட்டை குறித்த அத்தனை நிலவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்

7/8/17

PGT,HSHM TO HSSHM PROMOTION COUNSELLING ANNOUNCED - அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது.


2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில்   நடைபெற உள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 120  தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டியுள்ளதால்,  இந்த சுழற்சி   பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை  இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் தவறாமல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ள அம்சங்கள் என்ன? கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தகவல்

புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ள அம்சங்கள் என்ன? என்பது குறித்து கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த 
கிருஷ்ணன் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் வடிவமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்ததும் கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு பாகம், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மற்றொரு பாகமாக பிரித்து பாடத்திட்டங்கள் தயார் செய்யும் பணி நடைபெறுகிறது. இதில் அடிப்படை மாற்றங்கள் கொண்டுவர வேண்டி இருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படும் என்பதை எதிர்கால திட்டத்துடன் மாணவர்களுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

பாடத்திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாகவும் ஆலோசனை கேட்க இருக்கிறோம். இந்த ஆலோசனை கூட்டம் 9-ந்தேதி மதுரையிலும், 11-ந்தேதி கோவையிலும், 22-ந்தேதி சென்னையிலும், 24-ந்தேதி தஞ்சாவூரிலும் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து பேச வேண்டும்.

இதில் பொதுமக்கள் மட்டுமல்லாது மாணவர்களும் கலந்துகொள்ளலாம். அவர்கள் கூறும் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படும். நாங்களும் சில பள்ளிக்கூடங்களுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடமும் கருத்து கேட்க இருக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

எல்லா பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை சுற்றுலா அமைத்து செல்ல தடை , பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு