யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/8/17

வேலை நிறுத்தம் நடக்குமா? : அரசு ஊழியர்கள் இன்று முடிவு

அடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை
நடத்துகின்றனர்.

அரசுஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த அமைப்பு, செப்., ௭ முதல், தொடர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுத்திருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், போராட்டம் நடத்தினால், அரசு தரப்பில் யாரும் பேச்சு நடத்த முன்வர மாட்டார்கள் என, தெரிகிறது. அதனால், போராட்டத்தை நடத்தலாமா அல்லது தள்ளிவைக்கலாமா என்ற குழப்பம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜாக்டோ - ஜியோ அமைப் பினர், இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர்; சங்க நிர்வாகிகளிடம், இதுகுறித்து கருத்து கேட்கப்படுகிறது. அதன்பின், தொடர் வேலைநிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும் என, ஆசிரியர், ஊழியர் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர்-2017 பள்ளி நாட்காட்டி..

No automatic alt text available.

Last date extended to 30.09.2017 for online applications under the Pre / Post Matric Scholarship

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குறிப்பிட்ட குறைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன - நிவர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள TRB அனுமதி.


முதுகலை ஆசிரியர்கள் தற்போது நடைபெறும் (28.08.2017 முதல்) சான்றிதழ் சரிபார்ப்பில் நீதிமன்ற உத்தரவின் படி "சேலம் விநாயகா மிஷன்" பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் கலந்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதிஅளித்துள்ளது.
பணிநியமனம் நீதிமன்ற இறுதி தீர்புக்கு உட்பட்டது.

எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி
உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.




ஒருமாணவரின் பெயர் உட்பட முழு விபரம் சேகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் கல்வித்துறையில் ’எமிஸ்’ (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இப்பணி நுாறு சதவீதம் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.


குறிப்பாக, பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள மாணவர்கள் பெயர்களை இணைப்பது, கல்வியாண்டு இடையிலேயே வேறு பள்ளி அல்லது வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கையாவது, இடைநிற்றல் மாணவரை கண்டறிவது, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சில குளறுபடிகள் என பல காரணங்களால், நுாறு சதவீதத்தை எட்ட முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர்.


மேலும் ’எமிஸ்’ பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் பழமையானதாகவும், அதிக விபரங்களை ஏற்று தக்க வைக்கும் திறன் குறைவானதாகவும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.


இதனால் சிறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், சென்னை தலைமை தொகுப்பு அலுவலகத்தில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.


இதுபோன்ற காரணங்களால் போதிய தகவல்களை தக்க வைக்கும் வகையிலான நவீன மென்பொருள் உருவாக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து செயலராக இருந்த உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கையால், புதிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.


கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:


பத்து ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்த மென்பொருள் மூலம் ’எமிஸ்’ பணிகளை முடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கையை விட ’எமிஸ்’ எண்கள் எண்ணிக்கை அதிகரித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.



இதையடுத்து உதயசந்திரன் எடுத்த நடவடிக்கையால், தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே திருத்தம் செய்யும் வசதியும் ஏற்படும். இதன்மூலம் நுாறு சதவீதம் ’எமிஸ்’ பணிகளை எட்ட முடியும். மாணவர்கள் ’ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதும் எளிதாகும், என்றார்.

EMIS: DOWNLOAD OFFICIAL- EMIS STUDENT NEW DATA SHEET

FLASH NEWS : சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் - அரசுக்கு பரிந்துரை

*நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக 
செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய வசதிகள் இல்லாத காரணங்களால் கடந்த 2010- 2014 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக குறைந்து விட்டதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் தனியார்
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BRC LEVEL TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS



FLASH NEWS : CPS-ஐ இரத்து செய்யும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ அதிரடி அறிவிப்பு

ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது.*

*செப்டம்பர் 7 வட்டார தலைநகரங்களிலும்* 

செப்டம்பர் 8 மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் செய்யப்பட வேண்டும்.*

*9&10 சனி ஞாயிறு விடுமுறை.*


*செப்டம்பர் 11 முதல் வேலைநிறுத்தம் தொடரும். மறியல் குறித்து
சனிக்கிழமை அன்று அறிவிக்கப்படும்.*

அரசுப் பள்ளிகளில் 'மாணவர் கலைத் திருவிழா': 150 பிரிவுகளில் போட்டி நடத்த அரசாணை வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களின் கலை, இலக்கிய, தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் கலைத்திருவிழா என்ற
தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கலை, இலக்கியம், நுண்கலை உள்ளிட்ட 150 பிரிவுகளில் பள்ளி, ஒன்றிய, கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் கொண்ட மாணவர் கலைத் திருவிழா அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.4 கோடி செலவிடப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை:
4 பிரிவுகளில் போட்டிகள்: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகள் பள்ளி நிலையில் தொடங்கி அடுத்தடுத்த நிலைகளான கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாநில அளவில் நடைபெறும். ஒவ்வொரு நிலையிலும் தேர்வு பெற்றவர்கள் அடுத்தடுத்த நிலைகளில் கலந்துகொள்ளலாம். இருப்பினும் பிரிவு 1-ன் கீழ் நடைபெறும் போட்டிகள் ஒன்றிய நிலையிலும், 2-இன் கீழ் நடைபெறும் போட்டிகள் கல்வி மற்றும் வருவாய் மாவட்ட அளவிலும், பிரிவு 3-இன் கீழ் நடைபெறும் போட்டிகள் மாநில அளவிலும் நிறைவு பெறும்.
வெற்றி பெற்றால் மதிப்பெண்: போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோருக்கு தரமதிப்பு (கிரேடு) வழங்கப்படும். 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் ஏ கிரேடு மற்றும் 5 புள்ளிகள், 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் பி கிரேடு மற்றும் 3 புள்ளிகள், 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் சி கிரேடு மற்றும் 1 புள்ளி வழங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான போட்டிகளில் அதிக மதிப்பெண் பெறும் 3 போட்டியாளர்களுக்கு ஒரு போட்டிக்கு முறையே ரூ.2,000, ரூ.1,500, ரூ.1,000 வீதம் வழங்கப்படும். இது தவிர அந்தந்தப் பிரிவுகளுக்கு உரிய பரிசுகளும் வழங்கப்படும். இததற்குத் தேவைப்படும் ரூ.4 கோடி நிதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து பெறுவதற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பள்ளிக் கல்வி நிறுவன இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைசி வாரம் அல்லது பள்ளிக் கல்வித் துறையின் ஆணைக்கு ஏற்றவாறு போட்டிகள் நடத்த வேண்டும். போட்டிகளின் முடிவுகள் குறித்து மேல்முறையீட்டு மன்றம், மலர் தயாரிப்பு, பரிசுப் பொருள்கள் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்! - நிதிஆயோக் பரிந்துரை

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்
என்று மத்திய அரசுக்கு நிதிஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
தனியார்-பொதுத்துறை கூட்டு (PPP) என்ற திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறைந்த மற்றும் சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று கூறியிருக்கிறது நிதிஆயோக். இதுதொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாண்டு செயல்திட்டத்தின் கீழ் இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ’கடந்த 2010-2014-ம் ஆண்டு இடைவெளியில் 13,500 அரசுப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டன. ஆனால், இதே காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.3 கோடி அளவுக்கு குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.85 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 3.7 லட்சம் அரசுப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இது மொத்த அரசுப் பள்ளிகளில் 36 சதவிகிதம் ஆகும்.

ஆசியர்கள் வருகைப் பதிவு குறைவு, பயிற்றுவித்தலில் குறைவான நேரமே செலவிடுவது, தரமில்லாத கற்றல் முறைகள் ஆகியவைகளே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய முக்கிய காரணங்கள். இதனால் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்லத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையை மாற்ற ஈடுபாடு கொண்ட மாநிலங்கள் உதவியுடன் பணிக்குழு ஒன்றை உருவாக்கி அனைத்து சாதகமான சூழல்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

* தினேஷ் ராமையா

DEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்களுக்கு- CPS தொகை பெற்று வழங்கப்பட்ட விவரம் கோருதல் சார்பு

ஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரைப்
போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும்  நடைபெற்று வருகின்றன..

இந்தஆண்டிற்கான போட்டி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..

பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டி :
*கனவு ஆசிரியர்*

ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி :
*என்னைச் செதுக்கிய புத்தகம்*

ஆர்வலர்கள் & பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டி :
*எங்க ஊரு.. எங்க பள்ளி..*

*குறிப்பு :*

👉 படைப்புகள்  A4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்..

👉🏼ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்ப வேண்டும்..

👉🏼படைப்புகள் புதியதாகவும் பங்கேற்பாளரின் சொந்த படைப்பாகவும் இருப்பது அவசியம்..

👉🏼போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்..

👉🏼சிறந்த படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் விஞ்ஞானச் சிறகு, துளிர், விழுது போன்ற இதழ்களில் பிரசுரிக்கப்படும்..

👉🏼 படைப்புகள் செப்.10 க்கு முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்..

👉🏼ஒவ்வொரு மாவட்ட வாரியாக பங்கேற்பாளர்கள் பட்டியலையும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற படைப்புகளையும் ஆசிரியர் தின போட்டிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு செப்.15 க்கு முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்..

*மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் விபரம் செப்.24 ல் நடைபெறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழுவில் அறிவிக்கப்படும்..

*www.tnsf.co.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படும்..

📞மேலும் விபரங்களுக்கு…
சாஸ்தா சுந்தரம்
மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின போட்டிகள் 2017
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

அலைபேசி: 9942190845

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் - அரசுக்கு பரிந்துரை :

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய வசதிகள் இல்லாத காரணங்களால் கடந்த 2010- 2014 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக குறைந்து விட்டதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் தனியார்
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ அறிவிப்பு:

திட்டமிட்டபடி 7.9.17 முதல் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பு.
7ஆம் தேதி வட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம்
8ஆம் தேதி ஆட்சியர் அலுவலக எதிரில் ஆர்ப்பாட்டம்
10ஆம் தேதி உயர்மட்டக்குழு கூட்டம்.

29/8/17

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு

 பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. 

 நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கானகால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது மட்டுமல்லை, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது.

21/8/17

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

அரசுபள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம், 700 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசின், அனைவருக்கும்
கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், 2012ல், தமிழக அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

முதலில், 5,000 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்பட்டது. பின், 2014ல், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, 700 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்க, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு, 9,200 ரூபாய் மாத ஊதியம் நிர்ணயித்துள்ளது. அந்த தொகையை, தமிழக அரசு முறையாக பெற்று, அதை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்