யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/9/17

சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்: சாம்சங் விற்பனை யுக்தி!

                                                                                            
                                            
   சாம்சங் அதிகாரப்பூவ இணைய தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது
. இந்த விற்பனை வரும் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

ஸ்மார்ட்போன்களை தவிர்த்து ஸ்மார்ட்வாட்ச் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளிட்ட சாதனங்களையும் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைத்துள்ளது.  
# சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (4ஜிபி ராம்) ஸ்மார்ட்போன் ரூ.60,900-க்கும், கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் ரூ.53,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
# சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.15,900-க்கும், 64 ஜிபி கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ரூ.13,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   
# சாம்சங் கேலக்ஸி ஆன் 7 ப்ரோ, கேலக்ஸி ஜெ3 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ரூ.7,590 மற்றும் ரூ.7,090 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  
# கேலக்ஸி ஆன் 7, கேலக்ஸி ஆன் 5 ப்ரோ, கேலக்ஸி ஆன் 5  ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.6,590, ரூ.6,490, ரூ.5,990-க்கு  விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  

மதுரையில் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியைக்கு கத்திக்குத்து ஆராய்ச்சி படிப்பு மாணவர் கைது!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் துறையின் இணைப்பேராசிரியர்
மற்றும் துறைத்தலைவராக இருப்பவர் ஜெனீபா செல்வின் (வயது 45).

பல்கலைக்கழகத்தின் சினிமா கல்வியியல் துறையில் பகுதிநேர ஆராய்ச்சி மாணவராக இருப்பவர், குலமங்கலத்தை சேர்ந்த ஜோதிமுருகன் (32). இவர் பேராசிரியை ஜெனீபாவின் துறையில் நேர அடிப்படையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

ஜோதிமுருகனின் நடத்தை, வகுப்பு எடுப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்த கல்வியாண்டில் அவருக்கு கவுரவ பேராசிரியர் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் துறைத்தலைவரான பேராசிரியை ஜெனீபாவை அடிக்கடி சந்தித்து வேலைவாய்ப்பு குறித்து வற்புறுத்தி வந்தார்.

இருப்பினும், மாணவ–மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து அவருக்கு பணி வழங்க முடியாது என ஜெனீபா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் துறைத்தலைவர் அலுவலகம் முன்பு ஜோதிமுருகன் நின்றிருந்தார்.

அப்போது, பேராசிரியை ஜெனீபா தனது அறைக்கு வந்தார். அவருடன் ஜோதிமுருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெனீபாவை குத்தினார். அவரது கழுத்து உள்பட உடலின் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு மாணவ–மாணவிகள் சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர்.

அங்கு, கத்தியுடன் நின்று கொண்டிருந்த ஜோதிமுருகனை மாணவ–மாணவிகள் சரமாரியாக தாக்கினர். பின்னர் ஜெனீபாவை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி செய்தனர். அதன்பிறகு, பீபிகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக கொண்டு போய்ச் சேர்த்தனர்.

தகவலறிந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆராய்ச்சி மாணவர் ஜோதிமுருகனை கைது செய்தனர்.

ஜோதிமுருகன் இதே பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி, எம்.பில்., படிப்புகளை முடித்த பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்திக்குத்து சம்பவம் நடந்த இடம் துணைவேந்தர் அலுவலகத்தின் அருகில் உள்ள தமிழ்த்துறையின் 2–வது மாடியில் அமைந்துள்ளது. சம்பவம் நடந்த போது மு.வ.அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் தனியார் நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்து கொண்டிருந்தது. இதனால் பல்கலைக்கழக வளாகம் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது.

தகவல் அறிந்ததும், துணைவேந்தர் செல்லத்துரை ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, பேராசிரியை ஜெனீபாவை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆஸ்பத்திரியில் பேராசிரியைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையை கடந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் பூரண குணமடைந்து விரைவில் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன்.

வேலைவாய்ப்பு கேட்ட ஆராய்ச்சி பிரிவு மாணவர் மீது பல்வேறு புகார்கள் வந்த காரணத்தால் அவருக்கு மீண்டும் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கவில்லை. அதற்காக பேராசிரியையை கத்தியால் குத்துவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தகுதியும், திறமையும் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும். இதை மாணவ–மாணவிகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களுக்கு ஏதேனும் மிரட்டல்கள், ஆபத்து இருப்பதாக தெரிந்தால் எனது கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் சுற்றறிக்கையாக அனைத்து துறைத்தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை !!

7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.

இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்மையில் நடத்திய வேலைநிறுத்த்தில் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.

நிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் 25 சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

27/9/17

FLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது

Image may contain: 10 people, people smiling, people standing and indoor7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து இறுதி அறிக்கை- நிதித்துறை செயலாளர் சண்முகம்
முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார்.
Image may contain: 1 person, text

FLASH NEWS:- CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தம் தொடங்கியது!!


JACTO GEO CASE -COURT ORDER COPIES - 7th Sep,12th Sep ,15th Sep and 21st Sep

மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

Image may contain: 1 person, textமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில்
புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்
*ஆதார், ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்வி நிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

*எளிமையான முறையில் நகல் சான்றிதழ் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது: அமைச்சர்

JACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்க கூடாது மதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்!





குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சேர்க்கை இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் 10.10.2017 நீட்டிக்கப்பட்டுள்ளது.



தொடக்கக்கல்வி - B.Ed Teaching Practice - அருகாமையில் உள்ள பள்ளியிலும் ஊதிய இழப்பின்றி ஒரு பாடவேளை கற்றல் பயிற்சி மேற்கொள்ளலாம் - இயக்குநர் தெளிவுரை




பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தகவல்

தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும்
நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட தொடக்க கல்வித்துறை சார்பில் 1 - 8 வகுப்புகளை சேர்ந்த 1,28,436 மாணவ, மாணவிகளுக்கு 2,71,697 புத்தகங்கள், 5,49,504 நோட்டுக்கள் வழங்கப்படும் பணிகளை கார்மேகம் ஆய்வு செய்தார். தொடக்க கல்வி அலுவலர் தியாகராஜன் உடன் இருந்தார்.


கார்மேகம் கூறுகையில், "மாநிலம் முழுவதும் செப்., 27க்குள் நோடல் மையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். வினியோக பணியில் தாமதமோ, புகார்களோ எழாமல் தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்," என்றார்

சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக குறைப்பு: பாரத ஸ்டேட் வங்கி

பாரதஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச
தொகை 5000 ரூபாயில் இருந்து  ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள், 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் ஓய்வூதியதார்களுக்கும் குறைந்த பட்ச தொகை வைத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காமராஜரின் நண்பர் தொடங்கிய பள்ளிக்கு நிலம் விற்றது தொடர்பான வழக்கு : 6 வாரங்களுக்குள் விசாரிக்க உத்தரவு !!

முன்னாள் முதல்வர் காமராஜரின் நண்பர் தொடங்கிய பள்ளிக்கு சொந்தமான சொத்துகளை சட்டவிரோதமாக நிலம் விற்றது தொடர்பான புகாரை 6 வாரங்களுக்குள் விசாரிக்க பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காமராஜரின் விருப்பப்படி அவரது
 நண்பர் சங்கு கணேசன் என்பவர் நெல்லை வடக்கன்குளத்தில் பள்ளி ஆரம்பித்தார்.


பள்ளிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வாகி அருள்ராஜன் சட்டவிரோதமாக விற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி சங்கு கணேசனின் பேரன் நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைப்பு !!!

2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
குழுவில் மூத்த மத்திய அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐஐடி பேராசிரியர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது....

எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுக்கு தமிழக டி.ஜி.பி.உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்குமாறு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்குமாறு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

இன்றும், நாளையும் நகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமாண்டோ உள்ளிட்ட அனைத்து சிறப்பு காவல் படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அசாதாரண சூழ்நிலைகளில் பிறப்பிக்கப்படும் இதுபோன்ற உத்தரவு தற்போது திடீரென வெளியாகியுள்ளதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடுப்பில் சென்றுள்ள காவலர்கள் உடனடியாக முகாம்களுக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

CPS COMMUNICATION ADDRESS

01.04.2003 முதல CPS திட்டத்தில் பணியாற்றுபவர் மற்றும் ஓய்வு பெற்றோர் / மரணம் அடைந்தோர் பற்றிய விபரங்களை தெரிவிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை! !

இரண்டுக்கு மேல் குழந்தைகள்: நீதிபதி பதவி பறிப்பு!!!

மத்தியப் பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றதால் 
இரண்டு நீதிபதிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் சட்டப் பிரிவு 196இல் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், 26 ஜனவரி 2001ஆம் ஆண்டுக்குப் பின் அரசு அதிகாரிகள், நீதித் துறையில் பணியாற்றுவோர் ஆகியோர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, இச்சட்டத்தின் கீழ் 2 பயிற்சி நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார். மற்றொருவர் கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி. இத்தகவலை போபால் உயர் நீதிமன்றப் பதிவாளர் முகமது ஃபாஹிம் அன்வர் நேற்று (செப். 25) தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் சட்டத்தை மீறி 3ஆவது குழந்தை பெற்றதையடுத்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார். பதவியை இழந்த நீதிபதிகள் இருவரும் கடந்த ஆண்டுதான் கூடுதல் மாவட்ட நீதிபதிக்கான தேர்வு எழுதி நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

26/9/17

பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'

பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபியில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்; ௧௦ கி.மீ.,க்குள் மையங்கள் இருக்கும். அதன்படி, நடப்பாண்டில், 1,000 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.
இதனால், தேர்வு சமயத்தில், மன உளைச்சல் இருக்காது. 'நீட்' தேர்வை பொருத்தவரை, தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்பது தான், மாநில அரசின் கொள்கையாக உள்ளது. மத்திய அரசின், எந்த பொதுத்தேர்வையும் சந்திக்கும் அளவுக்கு, மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், இதற்கான பணி துவங்கும். தமிழகத்தில் கற்றல் குறைபாடு, மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், அக்.,௧௫ முதல் வகுப்பறைகளில், பயிற்சி அளிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., பயிலும் மாணாக்கர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, 32 நுாலகங்களில், பயிற்சி அளிக்கப்படும். தற்போது, இதற்காக பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக, 2.17 கோடி ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த மனு விவரம்: நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 23 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (ஐஐடி), 31 தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (என்.ஐ.டி), 7 இந்திய அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) இயங்கி வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதில்லை.
மேலும் இடஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படுவதில்லை. ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிப்பதில் பல்வேறு முரண்பாடுகளும் உள்ளன. ஓய்வுபெற்ற பேராசிரியர்களை நியமிக்கும் இந்தக் கல்வி நிறுவனங்கள், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பான 35 வயதை தளர்த்துவது இல்லை. இந்தக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றும் வகையில் கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை மாற்றியமைக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். 
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குத் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் அக். 13- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.