யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/17

OTP மூலம் செல்போனை ஆதாருடன் இணைக்கும் வசதி-ஜனவரி 1முதல்..

குமரியில் 25,000 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு!!!

ஆசிரியர் கல்வி கவுன்சிலில் பணியிடங்கள்!!!

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் பணியிடங்கள்

மெட்ரோ ரயில் கழகத்தில் பணிகள்!

DSE PROCEEDINGS- அங்கீகாரமின்றி தொடங்கி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு!!!




வீடு-மனைகளுக்கான பத்திரப்பதிவு நடைமுறை

வீடு மற்றும் மனை ஆகியவற்றை விற்பது 
அல்லது வாங்குவது போன்ற வர்த்தக பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி இங்கே காணலாம். குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட புல எண்கள் அமைந்துள்ள இடங்களுக்கு, அவற்றின் சந்தை மதிப்புகளை பொறுத்து அரசின் வழிகாட்டி மதிப்பு (Guide line value) வெவ்வேறு விதங்களில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கலாம். அந்த மதிப்பிற்கேற்ப ஆவணங்களை தயார் செய்யும்போது, முழு மதிப்பிற்கும் முத்திரைத்தாள் வாங்க முடியாத நிலையில், குறிப்பிட்ட மதிப்புக்கு வாங்கிவிட்டு மீதி உள்ள மதிப்பை சார்பதிவாளர் அலுவலகத்திலும் செலுத்தலாம்...!*

*பதிவு கட்டணம்*

*▪மேற்கண்ட கட்டணத்தை செலுத்த 41 என்ற படிவத்தில் வாங்கப்பட்ட முத்திரைத்தாள் மதிப்பு, வாங்க வேண்டிய முத்திரைத்தாள் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய கட்டணம் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து பத்திரத்துடன் இணைத்து தாக்கல் செய்யவேண்டும். மீதி கட்டணம் ரூ. ஒரு ஆயிரத்துக்கும் மேற்பட்டிருந்தால் ‘கேட்பு வரைவோலையாக’ (DEMEND DRAFT) மீதி தொகையை செலுத்த வேண்டும். அரசு வழிகாட்டி மதிப்பிலிருந்து பதிவுக் கட்டணம் ஒரு சதவிகிதம் மற்றும் கணினி கட்டணம் ரூ. 100 ஆகியவற்றையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையில் ரூ. ஒரு ஆயிரம் வரை பணமாகவும், அதற்கு மேற்பட்ட கட்டணத்தை ‘கேட்பு வரைவோலையாகவும்’ செலுத்தவேண்டும்...!*

*பத்திர பதிவு*

*▪முத்திரை தாள்கள் அடங்கிய ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்புறம் சொத்து வாங்குபவர் மற்றும் சொத்து விற்பவர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் புகைப்படம், அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரி பார்த்தபின்னர், சார்பதிவாளர் பத்திரத்திற்கான பதிவு எண்ணை குறிப்பிடுவார். பின்னர் விற்பவர் மற்றும் வாங்குபவர் புகைப்படங்கள் முதலாவது முத்திரைத்தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு, கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவதோடு, ஆவணத்திற்கான சாட்சிகள் இருவரது கையொப்பமும் பெறப்பட்டு, பதிவு நிறைவு பெறும்...!*

 *பத்திரம் பெறுதல்*

*பதிவுக் கட்டணம் செலுத்திய ரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் ஆகியோர் கையொப்பமிட்டு, குறிப்பிட்ட நாள்கள் கழித்து, இரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து தமது பத்திரத்தை சொத்து வாங்கியவர் பெறலாம். வேறொருவர் வாங்க வேண்டியதிருந்தால், ரசீதில் அவர் கையொப்பமிட வேண்டும்...!*

*‘பெண்டிங் டாக்குமெண்ட்’*

*▪பத்திரப்பதிவின் போது அரசு வழிகாட்டி மதிப்பிற்கேற்ப முத்திரைத்தாள் வாங்குவது அவசியம் என்றாலும், அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பு அதிகம் என்று கருதுபவர்கள் அவர்களே சொத்திற்கான மதிப்பை நிர்ணயம் செய்து அதன் மதிப்பிற்கேற்ப குறிப்பிட்ட சதவிகிதத்தை கணக்கிட்டு முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அந்த ஆவணத்தை சார்பதிவாளர் பதிவு செய்த பின்னர் ‘pending document' என்று முத்திரை இடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பிரிவின் அலுவலர் மூலம் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தையும், சுற்றிலும் அமைந்துள்ள மற்ற சர்வே எண்களின் மதிப்பையும் கணக்கிட்டு, முன்னர் குறிப்பிட்டிருந்த அரசு வழிகாட்டி மதிப்பில் வித்தியாசம் உள்ளதா..? என்பதை முடிவு செய்வார் அல்லது அவரே மதிப்பை நிர்ணயம் செய்வார்...!*

*வித்தியாச கட்டணம்*

*▪ஒரு வேளை அரசு வழிகாட்டி மதிப்பு சரியாக இருப்பதாக தெரியும் பட்சத்தில் அந்த தொகைக்கும், நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாச தொகையில் குறிப்பிட்ட சதவிகித தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாச தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டணமாக செலுத்தவேண்டும். அதன் பிறகு பத்திரம் சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47-கி பிரிவு என்று சொல்லப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்திரம் அனுப்பப்பட்டு, அங்கு சென்று வித்தியாச கட்டணத்தை செலுத்தி பத்திரத்தை பெற்று கொள்ளலாம்...!*

R.K.நகர் தொகுதி Ballot paper

                                                 
Click Here
https://drive.google.com/file/d/11UjomBsIHhn2r_jlzBfXcrZ8vHlQH9Si/view?usp=drivesdk

9/12/17

இதுக்கு மேல் கார் ஓட்டினால் உரிமம் ரத்து; அரசு உத்தரவால் ஓட்டுநர்கள் அதிர்ச்சி!!!

நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வாடகை வாகனம் 
ஓட்டினால் ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநில சாலை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளாதாவது:-
சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டில் 17,218 பேரும், 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 14,077 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துகள் குறித்து புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் 90% விபத்துகள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களுக்கு உண்டாகும் களைப்பு மற்றும் மன உளைச்சல்களால் ஏற்படுவது என்பது தெரியவந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஓட்டுநர்கள் ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும் வாகனங்களை ஓட்ட வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுற்றுலா வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் ஒரு பணி முடிந்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த பணி செய்ய வலியுறுத்தக் கூடாது. ஆண்டுந்தோறும் மருத்துவ பரிசோதனை மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும். சட்ட விதிகளை மீறும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4G வசதியுடன் லேப்டாப்!

Asus நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினிகள் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை 
தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதுவரை அதிக பேட்டரி வசதிகள்கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை உற்பத்தி செய்துவந்த இந்த நிறுவனம், முதன்முறையாக புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் (டிசம்பர் 6) Asus நிறுவனம் NovaGo என்ற புதிய மாடல் மடிக்கணினி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக 4G நெட்வொர்க் வசதியுடன் செயல்படும் வகையில் இந்த மடிக்கணினி வெளியாகி உள்ளதால் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் ஸ்னேப்டிராகன் 835 ப்ராசெஸ்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4GB RAM மற்றும் 64GB அல்லது 256GB இன்டெர்னல்கள் கொண்டு இரண்டு விதமான மாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் சிம் பயன்படுத்துவதற்காகத் தனியே வசதி இணைக்கப்பட்டுள்ளது. எனவே வைஃபை இல்லாத நேரங்களிலும் இதில் இன்டர்நெட் வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்தப் புதிய மடிக்கணினியானது முக்கியமாக 4G நெட்வொர்க் வசதியின் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகவும் மெல்லியதாகவும், எடைக்குறைந்த ஒன்றாகவும் இந்த மடிக்கணினி உள்ளதால் இதை எளிதில் எங்கும் எடுத்து செல்ல இயலும். இதன் பேட்டரி சக்தியைக்கொண்டு சுமார் 22 மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இதன் விற்பனையை விரைவில் தொடங்கவும் Asus நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க...

நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி 
மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை.

👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன

👉ஆண்டு வருமான அடிப்படையில் வரி கணக்கிட்டுநாம் அட்வான்ஸ்டு டாக்ஸ் செலுத்த வேண்டும் .

👉எப்போது செலுத்த வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா?அதற்கு விதிமுறை உள்ளதா?

👉ஆம் நம்து மொத்த வரித்தொகையில்

1.ஜூன் 15 க்கு முன்னதாக 15%

2. செப்டம்பர் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 45%

3.டிசம்பர் 15க்கு முன்னதாக மொத்தத்தில் 75%

4. மார்ச் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 100 % அதாவது வரி முழுமையான அளவில் செலுத் வ்வாறு செலுத்தும் போது தான் நாம் சரியாக வரி கட்டுகிரோம் என பொருள் கொள்ளப்படும்.

👉இவ்வாறு செலுத்தாவிடில் நாம் irregular tax payer list ல் வைக்கப்படுவோம்.

👉அதனால் என்ன விளைவு? நாம் இவ்வாறு செலுத்தாத தொகைக்கு வட்டி அபராத வட்டி செலுத்திதான் செப்டம்பர் 30க்குள் வருமானவரி க்கணக்கு தாக்கல் செய்யமுடியும்.

👉எவ்வளவு வட்டி( அபராதம்) தெரியுமா ரூ 10000 முதல் 50000 வரை டாக்ஸ் அமொண்ட் எனில் 500 முதல் 2500 வரை வரும்.அதாவது ரூ 50000 வரை 5% வட்டி,அதற்கு மேல் எனில் 6 முதல் 10% வட்டியாக வசூலிக்கப்படும்.

👉 மார்ச் 15 க்குமேல் செலுத்தப்படும் வரிக்கு 10 முதல் 20 சத்வீதம் வரை வட்டி வசூலிக்க வாய்ப்புண்டு.

👉மாத ஊதிய தாரர்கள் என்ன செய்ய வேண்டும் நாம் கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி வரி அடைவு வரும் வகையில் மாத ஊதியத்தில் இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்யலாம்

👉அல்லது சலான் மூலம் அட்வான்ஸ் டாகஸ் என கொடுக்கப்பட்ட தேதிக்குல் நமது பான் கணக்கில் வங்கியில் செலுத்தலாம் அல்லது அத்தகைய கணக்கிட்டின் படி அட்வான்ஸ் டாக்ஸ் தொகையை இண்டர் நெட் பாங்கிங் மூலம் நேரடியாக நமது பான் என்னிலே செலுத்தலாம். ஆக

👉விழிப்படைவோம்.

👉நமது பான் என்னிலே உடனேஅட்வான்ஸ் இன்கம்டாக்ஸ் இண்டர்நெட் பாங்கிங் மூலம் செலுத்தி அபராதம் மற்றும் irregular tax payer என்ற அப வாதத்தையும் தவிர்ப்போம்

எந்த வேட்பாளருக்கு சென்றது நான் போட்ட ஓட்டு?? தீர்வுகளை முன்வைக்கிறார் மென்பொருள் நிபுணர்!!!

                                       

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி காலம் நீட்டிப்பு!!!

                                               

மாணவர்களின் தற்கொலை சம்பவங்களுக்கு தீர்வு:நடமாடும் உளவியல் ஆலோசகர் மூலம் கவுன்சிலிங் ஏற்பாடு-கல்வித்துறை அதிரடி உத்தரவு

                                       

விரைவில் ஸ்டிரைக்!!!

                                      

பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் குளறுபடி

சென்னை: பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் உள்ள
குளறுபடியால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் தமிழ் 2-ம் தாளிலும் கேட்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மெயில் மூலம் மாற்று வினாத்தாள் அனுப்பப்பட்டு ஜெராக்ஸ் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

105 MBBS மாணவர்கள் நீக்கம்-இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடி!!!

                                                    

ஆசிரியர் கண்டித்ததால் பள்ளிகட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

                                          

நாடுமுழுவதும் 27 ந்தேதி ஸ்டிரைக்!!!

                                            

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள்!

                                    
ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் 
இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக் கூடாது என்று பொது விநியோகத் துறை உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க `ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி 60 சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குளறுபடிகள் காரணமாக இன்னும் 40 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கவில்லை.

இந்நிலையில் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை வரும் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொது விநியோகப் பொருட்கள் வழங்க வேண்டும். பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு பொது விநியோகத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

எனவே, ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை பெற முடியும். என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டனர். எனவே ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலமும், பொது விநியோகத் துறை மூலமும் அதிக பிழைகளோடு வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இன்று (டிசம்பர் 08) தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது எனவும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது. அத்துடன் டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் கொடுத்து முடிக்கப்படும் எனவும் அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.