நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வாடகை வாகனம்
ஓட்டினால் ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில சாலை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளாதாவது:-
சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டில் 17,218 பேரும், 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 14,077 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துகள் குறித்து புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் 90% விபத்துகள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களுக்கு உண்டாகும் களைப்பு மற்றும் மன உளைச்சல்களால் ஏற்படுவது என்பது தெரியவந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஓட்டுநர்கள் ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும் வாகனங்களை ஓட்ட வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுற்றுலா வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் ஒரு பணி முடிந்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த பணி செய்ய வலியுறுத்தக் கூடாது. ஆண்டுந்தோறும் மருத்துவ பரிசோதனை மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும். சட்ட விதிகளை மீறும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.