யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/12/17

விடைத்தாள் வெளிட்ட விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி கைது!!!

சென்னை: கடந்த 2015ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., விடைத்தாளை வெளிட்ட விவகாரத்தில் 
டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி பெருமாள் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விடைத்தாள் வெளியீடு தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இடைநிலை கல்வியில் பின் தங்கிய ஏழு மாவட்டங்கள்!!!

சேலம் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்!!





விஸ்வரூபம் எடுக்கும் அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு : 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் 
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் புகாரின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள் தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.

டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவந்தது. இதனால் தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் தேர்வு பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர். குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தீவிரவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களை மாற்ற கோர்ட் உத்தரவு!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாதத்திற்குள் தனியார் மருத்துவக் கல்லூரி 
மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரியை நிர்வகிப்பதில் நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாக அக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 17 மாணவர்கள் தங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் தலைமையில் நேற்று(டிசம்பர் 22) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்தபோது, வழக்கறிஞர் என்ற போர்வையில் சிலர் கல்லூரி நிர்வாகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

வழக்கின் உத்தரவில் கூறியிருப்பது: "இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க நேரிடும். மேலும் ஒரு கல்லூரி சரியாக இயங்கவில்லை என்றால் அந்தக் கல்லூரிக்கு அனுமதியளித்த அரசு தான் அங்குப் பயிலும் மாணவர்களின் கல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

தனியார் நிர்வாகத்தின் குளறுபடி காரணமாக இந்தக் கல்லூரியில் 2017-18, 2018-19 ஆகியஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு தடை விதித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அன்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 144 மாணவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கவேண்டும். இதற்கு ஏதுவாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை உயர்த்த ஒரு மாதத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லவில்லை என்பதால் அவர்களின் வருகைப்பதிவேட்டை கருத்தில் கொண்டு அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.

மாணவர்களின் சான்றிதழ்களை அக்கல்லூரி நிர்வாகம் உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். மாணவர்களின் நலன் கருதி காணொலி காட்சி மூலமாக ஜனவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை ,தற்கொலைக்கு தூண்டப்பட்டு இறந்த போன மாணவ மாணவிகளின் விபரங்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

                                          

TNHB JUNIOR ASSISTANT RESULT 2017 TYPIST EXAM RESULT PUBLISHED

                                               


CLICK HERE TO CHECK YOUR RESULTS

பொறியியல் கல்லூரிகளில் 2500 பேராசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: ஏஐசிடிஇ சலுகை எதிரொலி

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் அகில இந்திய 
தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அளித்துள்ள சலுகை காரணமாக, குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 பேராசிரியர்கள் வேலை இழக்க வாய்ப்பு உள்ளதாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏஐசிடிஇ-யின் இந்தச் சலுகை, பொறியியல் கல்வியின் தரத்தை மேலும் குறைக்கவே வழிவகுக்கும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாடு முழுவதும் 3 ஆயிரத்து 224 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 927 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை 523 பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 78 ஆயிரத்து 845 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தக் கல்லூரிகளை ஏஐசிடிஇ கட்டுப்படுத்தி வருகிறது. இந்தக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற்ற பின்னரே, மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். இதற்கென ஒவ்வொரு ஆண்டும், அனுமதி வழிகாட்டுதலை ஏஐசிடிஇ வெளியிடும்.
அதுபோல, 2018-19 கல்வியாண்டுக்கான அனுமதி நடைமுறைகளை ஏஐசிடிஇ இப்போது தொடங்கியுள்ளது. இதற்காக அண்மையில், அனுமதி வழிகாட்டுதலை வெளியிட்டது. அதில், கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:20 ஆக நிர்ணயித்து, ஏஐசிடிஇ அறிவித்திருந்தது. இதற்கு, பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், பொறியியல் கல்லூரி பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், தனியார் கல்வி நிறுவன ஊழியர் சங்க நிர்வாகியுமான கார்த்திக் கூறியது:-

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் இதுவரை 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும் என ஏஐசிடிஇ நிர்ணயித்த போது, பெரும்பாலான கல்லூரிகள் அதைப் பின்பற்றவில்லை. பல கல்லூரிகள் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், சில கல்லூரிகள் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவிலேயே விகிதத்தை அமல்படுத்திவந்தன.
இப்போது இந்த விகிதாசாரத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்து சலுகை அளித்துள்ளது. இது கல்லூரிகளின் நிலையை மேலும் மோசமடையச் செய்யும். இதனால், மாணவர்களை கவனிக்கும் அளவு குறைந்து, கல்வித் தரம் பாதிக்கப்படும்.

இப்போது தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் படிப்படியாக மூடப்பட்டு, ஒருசில ஆண்டுகளில் 300 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நிலைத்திருக்கும். எனவே, ஏஐசிடிஇ-யின் இந்தச் சலுகையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், ஏஐசிடிஇ ஏற்கெனவே 1:15 என்ற அளவில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தை நிர்ணயித்திருந்தபோதே, பெரும்பாலான பொறியில் கல்லூரிகள் 30 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் (1:30) என்ற அளவில்தான் நிர்ணயித்து வந்தன.
எனவே, ஏஐசிடிஇ இப்போது இந்த விகிதத்தை 1:20 ஆக நிர்ணயித்திருப்பதால், எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. பொறியியல் கல்வியின் தரம் இப்போது உள்ளதைப் போலவேதான் நீடிக்கும் என்றார்.

கல்வித் தரம், ஆராய்ச்சி நிச்சயம் பாதிக்கும்

ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்திருப்பது, பொறியியல் கல்வியின் தரத்தை மட்டுமின்றி, உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேம்பாட்டையும் கடுமையாகப் பாதிக்கும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.

இதுகுறித்து தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டி:

பொறியியல் கல்லூரிகளை, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின் அடிப்படையில் ஏ,பி,சி என பிரித்து, அதில் -சி- பிரிவில் வரும் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் ஆசிரியர்-மாணவர் சேர்க்கை விகிதத்தை 1:20 ஆக அறிவித்திருக்க வேண்டும். ஏ, பி பிரிவில் வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு முன்பிருந்தது போல 1:15 என்ற விகிதத்தையே நிர்ணயித்திருக்க வேண்டும்.

ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்து கல்லூரிகளுக்கும் 1:20 என ஏஐசிடிஇ அறிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. ஒரு சில தனியார் பொறியியல் கல்லூரிகளின் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது. இந்தச் சலுகை காரணமாக, பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு மட்டுமே நேரம் இருக்கும். ஆராய்ச்சி அல்லது ஆராய்ச்சி ஊக்குவிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு பேராசிரியர்களுக்கு நேரம் இருக்காது. எனவே, பொறியியல் கல்லூரியின் தரம் மேலும் மோசமடையும் என்பதோடு, ஆராய்ச்சி மேம்பாடும் பாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பலர் வேலை இழக்க நேரிடும் என்றார் அவர்.

தேர்வு முறைகேடு :156 பேர் மீது வழக்குப் பதிவு!

                                                  
பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் நடைபெற்ற 
முறைகேடு குறித்த விவகாரத்தில் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வை நடத்தியது.

இந்தத் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதன்பேரில் தேர்வு முடிவுகள் திறம்ப பெறப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2200 பேரில் பெரும்பாலானோருக்கு மதிப்பெண் வேறுபாடு இருந்தது தெரியவந்தது.

தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகல், இணையதளத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து பலருக்கு நிறைய மதிப்பெண் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து,மதிப்பெண் குளறுபடிகள் ஏற்பட்ட தேர்வர்கள் தேர்வு வாரியத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் முறைகேடு தொடர்பாக 196 பேர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த டிசம்பர் 20 அன்று தெரிவித்திருந்தது.

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த , மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக . விடைத்தாள் திருத்தம் செய்தவர்கள், முறைகேடாக வேலையில் சேர முயன்றவர்கள் என 156பேர் மீது 6 பிரிவுகளில் குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணை ஆணையம் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடு பின்னணி குறித்து தெரியவரும் என்றும் மற்ற அரசு பணி நியமனங்களிலும் ஊழல் குறையும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியள்ளார்.

16/12/17

RTI-மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி ரூ 2500 க்கு தெளிவுரை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் நன்றி திரு.இரவிச்சந்திரன்-கரூர்



TRB Exam - தகுதியற்ற 300 பேருக்கு போலி மதிப்பெண் வழங்கியது அம்பலம். தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!!!

பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை : மீண்டும் அட்டவணை வெளியீடு

சென்னை: 'தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஏற்கனவே அறிவித்த தேதிகளில், எந்த மாற்றமும் இன்றி நடத்தப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், பொதுத் தேர்வு தேதியை, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பரில், அரசு தேர்வுத் துறை அறிவிக்கும். இந்த ஆண்டு, பள்ளிக் கல்விச் செயலர், உதயசந்திரன் உத்தரவில், இறுதி தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே, பொது தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டது. அதனால், தேர்வு நாளை, முன்கூட்டியே கணக்கிட்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்தவும், மாணவர்கள் படிக்கவும் வசதியாக இருந்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, அதே தேதிகளில், திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடக்கும் என, தேர்வுத்துறை, நேற்று அறிவித்துள்ளது



ஸ்காலர்ஷிப்' பெற இன்று திறன் தேர்வு

சென்னை: உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு, அரசின் பல்வேறு திட்டங்களில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில திட்டங்களுக்கு, திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மாநில அளவில் இன்று நடக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்களில் நடக்கும் தேர்வில், ௧.௪௬ லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:30 மணி முதல் பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தர ரூ.4.63 கோடி

சென்னை: அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில், 3,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் நிதியில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இதில், 2016 ஆசிரியர்கள், ஜூலை முதல் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத சம்பளமாக, 7,500 ரூபாய் வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆசிரியர்கள் பணியாற்றிய நாட்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், உமா உத்தரவிட்டுள்ளார்.

குரூப் - 4' தேர்வு பதிவுக்கு 20ம் தேதி வரை அவகாசம்

சென்னை: 'குரூப் - 4' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, வரும், 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

அரசுத்துறைகளில், குரூப் - 4 பதவிகளில், 9,351 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., பிப்., 11ல் போட்டி தேர்வை நடத்துகிறது. இதில், பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு, நவ., 14ல் துவங்கி, டிச., 13ல் முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆன்லைன் பதிவுக்கான அவகாசம், வரும், 20 வரையும், தேர்வு கட்டணம் செலுத்துவது, 21ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயக்குமார் அறிவித்துள்ளார். நேற்று வரை, இத்தேர்வுக்கு, 18.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை நடந்த, குரூப் - 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களில், இதுவே அதிகபட்சம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும், இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளை விட, அதிக விண்ணப்பங்கள், இந்த முறை பதிவாகி உள்ளன.'ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். தேர்வு நடக்கும் தேதியில், எந்த மாற்றமும் இல்லை' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

STATE TEAM VISIT - கோயம்புத்தூர் மாவட்ட பள்ளி குழு பார்வை குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் !



மார்கழி : _ மாதம்

மார்கழி :

மார்கசீர்ஷம் – வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது, உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி உள்ளது என்பதே  ‘மார்கசீர்ஷம்’ என்பதன் உண்மைப் பொருளாகும்.


மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதிகாலை அற்புதம்

மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது என்று  அழைக்கப்படும் அதிகாலை நேரம்தான் மார்கழி. தெளிவான உள்ளத்துடன், உடலில் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும் அந்த  அதிகாலை நேரமே தேவர்களை வழிபடுவதற்கு சிறந்ததொரு நேரமாக கருதப்படுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாகவே கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றன. இதனால் தான் ‘திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம்’ என்று மார்கழியின் மாண்பை எடுத்துரைக்கும் வகையில் கூறிவைத்தார்கள்.

இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்தால், இறைவழிபாட்டில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவே அந்த காலத்தில் நமது  பெரியவர்கள் மார்கழியில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வைக்கவில்லை. இது தவிர மற்றொரு காரணமும் உள்ளது. மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதத்தை சிறப்புடன் கொண்டாட ஏதுவாக, கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைப்பார்கள். இதற்கே அந்த மாதத்தின் பொழுது  சரியாக இருக்கும் என்பதாலும் தான் மார்கழி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளை வைப்பது இல்லாமல் போனது.

சரணாகதியே வழி

பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங் களில்தான் சுப நிகழ்ச்சிகள் இருக்காது. ஆடியில் அம்மன் வழிபாட்டிற்காகவும்,  புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்காகவும், மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டுக்கும் உரியது. இந்த மூன்று மாதங்களும் தெய்வ வழிபாட்டிற்காகவே பக்தர்களால் ஒதுக்கப்பட்ட மாதங்களாகும். இதில் அனைத்து தெய்வ வழிபாடு உள்ள மார்கழி மாதமே மாதங்களில் மிகவும் உயர்ந்த மாதமாக கருதப்படுகிறது.

இறைவனை சுலபமாக அடையும் வழியானது சரணாகதி. ‘உன்னை தவிர என் வாழ்க்கை துணை வேறுயாரும் இல்லை. என்னை  சீக்கிரம் வந்து ஆட்கொள்’ என்று ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளும், பாண்டிய அரசவையில் அமைச்சர் பதவி வகித்தும்,  ‘அரச பணியை விட, ஆண்டவன் பணியே சிறந்தது’ என்று இறைவழி சென்று அவன் புகழ்பாடி தொழுத நாயன்மார்களில்  ஒருவரான மாணிக்கவாசகரும் மேற்கொண்டது இந்த சரணாகதியைத்தான். அதன் வாயிலாகவே அவர்களின் வாழ்வு உயர்வு  பெற்றது.

மதிப்புக்குரிய மார்கழி

மார்கழி மாதத்தை மதிப்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆண்டாளும், மாணிக்கவாசகரும் என்றால் அது  மிகையாகாது. மார்கழி மாதத்தில் பாராயணம் செய்யும்  பாடல்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்க வாசகர்  பாடிய திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி, தொண்டரடி ஆழ்வார் எழுதிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய நான்கும் தான் இடம்பெற்றுள்ளன. பாவை நூல்கள் எனப்படும் இந்த நூல்களை பாராயணம் செய்யத் தொடங்கியதும் விண்ணை முட்டி நின்ற  மார்கழியின் சிறப்பு, விண்ணைத் தாண்டியும் வளரத் தொடங்கி விட்டது.

15/12/17

டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

                                            
பொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 
ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வளக்கமாக வைத்துள்ளோம்.


அதே நேரம் இந்தக் கார்டுகளின் அசலை எப்போதும் தங்களுடன்வைத்து இருக்கும் போது அதனைத் தொலைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

*எனவே பான் கார்டினை தொலைத்துவிட்டால் என்ன செய்வது?*


வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்குகளுடன் இணைக்க எல்லாம் ஆதார் கார்டு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இவ்வளவு முக்கியமான பான் கார்டு தொலைந்து போனால் எப்படி டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.


உங்களது பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது.அதற்காகக் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்பது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற காரணங்களுக்காகப் புகார் அளிக்க என்பதற்காகவே eservices.tnpolice.gov.in இணையதளம் ஒன்றும் உள்ளது.



பான் கார்டில் உங்களது பெயர், புகைப்படம், தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல் இருப்பதால், அதனைப் பயன்படுத்திப் பிற சேவைகளில் உங்களது விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாகப் புகார் அளிப்பது நல்லது.



டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல்(NSDL) அல்லதுயூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித் துறை அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம்.இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்திற்கான இணைப்பு: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களஹ்டு பெயர், பிர்றந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையினை உள்ளிட வேண்டும். அடிப்படை விவரங்கள் உள்ளிட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்ப ஐடி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

பின்னர் அடையாள மற்றும் முகவர் சான்றிதழ் போன்றவற்றைத் தேர்வு செய்து அவற்றினைப் பதிவேற்ற வேண்டும். இதுவே தபால் மூலம் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால் விண்ணப்பம், அடையாள ஆவண நகல் போன்றவற்றை இணைத்து, புகைப்படத்தினை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.



இதுவே பேப்பர் இல்லாமல் விண்ணப்ப முறையினைத் தேர்வு செய்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் வரும்.

அதனை உள்ளிட்டு எளிதாக விண்ணப்பத்தினைச் சரிபார்த்துப் பூர்த்திச் செய்துவிடவும் முடியும்.மேலும் இப்படிச் செய்யும் போது உங்களது கையெழுத்து மற்றும் புகைப்படம் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டியது அவசியமாகும்.


யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) http://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp இணையதளம் மூலமாகவும் மேலே கூறியது போன்றே விவரங்கள் அளித்துப் பான் கார்டினைரீபிரிண்ட் செய்திட முடியும்.

பேஸ்புக், டுவிட்டரில்' காஸ் சிலிண்டர் பதிவு!!!

வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்'
போன்ற, சமூக வலைதளங்கள் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை, இந்தியன் ஆயின் நிறுவனம் அதிகார பூர்வமாக துவக்கியுள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு மற்றும் வணிக பயன்பாடு என, இரண்டு வகை, சமையல் காஸ்சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. தற்போது, வீட்டு வாடிக்கையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களின், கட்டணமில்லா தொலைபேசி, இணையதளம் வாயிலாக, சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற, சமூக வலைதளம் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை, அதிகார பூர்வமாக துவக்கியுள்ளது.
தற்போது, இந்த சேவை, டில்லி உட்பட, வட மாநிலங்களில் மட்டுமே உள்ள நிலையில், ஓரிரு தினங்களில், தமிழகத்திலும் செயல்பாட்டுக்குவருகிறது.

இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சமூக வலைதளத்தில், சிலிண்டர் பதிவு செய்வது எப்படி என்ற விபரம், நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.

நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் சத்தம் போடக் கூடாது-உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டணம்!!