யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/1/18

11 மொழிகளில் 'நீட் 'நுழைவு தேர்வு!!!

தமிழ் உட்பட, 11 மொழிகளில், மருத்துவ படிப்புக்கான, 
'நீட்' தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை நடத்த, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், மத்திய அரசின் சலுகை கிடைக்காததால், 2017ல், 'நீட்' தேர்வின்படியே, மாணவர் சேர்க்கை நடத்தும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு, 'நீட்' தேர்வை, தமிழகம் உட்பட எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. இந்த தேர்வு, மே மாதம் நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில், வினாத்தாள் இருக்கும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, எந்த மொழி என்பதை குறிப்பிட்டால், அந்த மொழியில் வினாத்தாள் வழங்கப்படும். அதே மொழியில், விடைகளை எழுதலாம். இந்த தேர்வுக்கான அறிவிப்பு, இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்!!!

மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு 
உள்ளது.இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுஇருக்கிறது.


ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் அவரது புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதில் 12 இலக்கங்கள் கொண்ட எண்ணும் இடம்பெற்று இருக்கிறது.வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம்கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

இதனால் இதுபோன்றவற்றுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை தெரிவிப்பது மிகவும் கட்டாயம் ஆகிறது.இப்படி பல இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது, அந்த அட்டைதாரரை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் மூலம் வங்கி கணக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் திருடப்படுவதை தடுத்து, தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், ஆதார் அட்டைக்கு மாற்றாக அதேபோன்ற புதிய அடையாள அட்டைமுறையை (மெய்நிகர் ஆதார் அட்டை) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) நேற்று முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் இணையதள முகவரிக்கு சென்று இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை உருவாக்கி பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், பெயர் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் இப்புதிய அட்டையில் இடம் பெற்று இருக்கும்.ஆனால் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணுக்கு பதிலாக இந்த புதிய அடையாள அட்டையில் 16 இலக்க எண் இருக்கும். சம்பந்தப்பட்ட நபரே இந்த எண்ணை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது விரும்பும் குறிப்பிட்ட காலவரை வரை இந்த புதியஅட்டையை பயன்படுத்தலாம். தேவைப்படும் போதெல்லாம் இந்த அடையாள அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை மாற்றி புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அப்படி புதிய அட்டை பெறும் பட்சத்தில், ஏற்கனவே பெற்று இருந்த மெய்நிகர் ஆதார் அட்டை தானாக ரத்தாகிவிடும்.இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான ஆதார் எண் மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படும்.

முக்கியமாக தனிநபர் ரகசியம் காக்கப்படுவதோடு, தகவல் திருட்டும் தடுத்து நிறுத்தப்படுகிறது.ஆதார் அட்டை எந்தெந்த இடங்களில் எல்லாம் தேவைப்படுமோ,அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரும்இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை மோசடியாக தயாரிக்க முடியாது.வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் இந்த மெய்நிகர் ஆதார் அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய தனிநபர்அடையாள ஆணையம் தீர்மானித்து உள்ளது.

 மேலும் ஆதார் அட்டை எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை ஜூன் 1–ந் தேதி முதல் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.மேற்கண்ட தகவல்களை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்து உள்ளது.

இன்ஜி., கல்லூரி தேர்வு தள்ளி வைப்பு!!!

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஜன., 13 முதல், ஏற்கனவே 
விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், ஜன.,12 வரை தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், பஸ் போக்குவரத்து பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு மட்டும், இன்று முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும், 17ம் தேதி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து, அண்ணா பல்கலை உட்பட அனைத்து கல்லுாரி, பல்கலைகளிலும், இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன. 'அண்ணா பல்கலையில், இன்று நடக்கவிருந்த தேர்வுகள், வரும், 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன; 18ம் தேதியில், தேர்வு எதுவும் நடக்காது' என, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா, அறிவித்துள்ளார்.

பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ்-2 செல்லலாம்!!!

பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது
. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும், பிளஸ்-2 தேர்வும் அரசு பொதுத்தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 தேர்வு சாதாரண தேர்வாகத்தான் கடந்த ஆண்டு வரைநடத்தப்பட்டு வந்தது.இதனால் பிளஸ்-1 வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் சரிவர நடத்துவதில்லை என்றும், பல தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 பாடம் அறவே நடத்தப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தன. ஆனால் நீட் தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் உள்ள பாடத்தில் இருந்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கும் 2018 மார்ச் மாதம் முதல் அரசு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பிளஸ்-2 வகுப்புக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் ஆண்டு விரயமின்றிபிளஸ்-2 வகுப்புக்கு செல்லவும், தோல்வியுற்ற பாடங்களைஜூன் மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு தேர்விலோ அல்லது பிளஸ்-2 இறுதி ஆண்டு தேர்வின் போதோ எழுதலாம் எனவும் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!!!

                                 
சென்னை : 'பி.எஸ்.எல்.வி., - சி 40' ராக்கெட் வெற்றிகரமாக 
விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்ட, 'கார்டோசாட் - 2' செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள் ஆகும்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' வர்த்தக ரீதியான ராக்கெட்டுகளை, விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரோவின் வடிவமைப்பான, கார்டோசாட் - 2 ரக செயற்கைக்கோள், இன்று காலை, 9:28 மணிக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டை, விண்ணில் செலுத்துவதற்கான, 28 மணிநேர, கவுன்ட் - டவுன், நேற்று காலை, 5:29 மணிக்கு துவங்கியது.'பி.எஸ்.எல்.வி., - சி 40' ராக்கெட்டில், இந்தியா - 3, அமெரிக்கா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் செயற்கைக்கோள்கள், 28 என, மொத்தம், 31 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.

கார்டோசாட் - 2 செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள். செயற்கைக்கோள் வரிசையில், கார்டோசாட் - 2, ஏழாவது செயற்கைக்கோள்; இதன் எடை, 710 கிலோ. இதில், பூமியின் இயற்கை வளங்களை, பல்வேறு கோணங்களில் படமெடுத்து அனுப்பும் வகையில், சக்தி வாய்ந்த கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ஆறாவது ஊதியக்குழுவில் பெற்று வந்த SPECIAL ALLOWANCE ரூ 500/- ரூ 30,50,60 ஏழாவது ஊதிய குழுவில் தொடர்ந்து பெற்று கொள்ள அனுமதிக்கலாமா ? - RTI


வேலைவாய்ப்பு: என்ஐஆர்டியில் பணி!!!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technician பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Project Technician

காலியிடங்கள்: 5

பணியிடம்: சென்னை

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

ஊதியம்: ரூ.18,000/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், சத்தியமூர்த்தி சாலை, சேத்துப்பட்டு, சென்னை 600 031

கடைசித் தேதி: 1.01.2018

மேலும் விவரங்களுக்கு http://www.nirt.res.in இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

பல்கலைக்கழக 1லட்சம் விடைத்தாள்கள் மாயம்.பேராசிரியர்கள் பகீர் புகார்!!!

போக்குவரத்துத் துறைக்குக் கூடுதலாக ரூ. 2,519 கோடி!

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் போக்குவரத்துத் துறைக்குக் 
கூடுதலாக ரூ. 2519 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம், நேற்றிரவு வாபஸ் பெறப்பட்டதால் இன்று (ஜனவரி 12) காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தற்போது தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் துணை நிதி நிலை அறிக்கையில், ஓய்வூதியப் பலன், தொழிலாளருக்கான நிலுவைத் தொகை, உள்ளிட்டவற்றின் கூடுதல் நிதியாக ரூ. 2519 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டுவருவதால் பொதுமக்களின் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவு மையங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. பயணிகளுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே போக்குவரத்துத் துறை சார்பில் தகவல் மையங்களும், சில இடங்களில் போலீசார் சார்பில் உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையும் ஓரளவு அதிகரிக்கப்பட்டிருந்தது.

முன்பதிவு செய்யத் தேவையில்லை என்பதால் வழக்கமாக வருவது போலவே பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பொங்கல் பண்டிகைக்காக பூந்தமல்லியிலிருந்து தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஆரணி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இங்கிருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களின் வீடுகளில் கழிவறை உள்ள விவரங்களை கோருதல் சார்ந்து-மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!!!

12/1/18

ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு மாங்காய்கள் டெலிவரி; தில்லுமுல்லு செய்த பிளிப்கார்ட்!

                                            
ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு மாம்பழங்கள் டெலிவரி செய்யப்பட்ட
விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சூருச்சரண். இவர் ஏசெஸ் ஸென்போன் என்ற ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் இணையதளத்தில் ஆர்டர் செய்துள்ளார்.


இதன் விலை ரூ.8.099 ஆகும். இதனை மெகா சேல் நாள் அன்று, ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் 2 மாங்காய்கள் இருந்துள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த சூருச்சரண், பிளிப்கார்ட் நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸில் புகார் அளித்தார். அவரின் ஆர்டர் நம்பரை உறுதி செய்து கொண்டனர்.

இதையடுத்து 24 மணி நேரத்தில் பணம் திரும்ப அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் திடீரென்று ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டு விட்டது என்று கூறி, பணம் தர மறுத்துவிட்டனர். இதனால் சூருச்சரண் செய்வதறியாது, மிகுந்த வருத்தத்தில் உள்ளா

ஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது.
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கவும். மேலும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது

பொதுமக்கள் வசதிக்காக பள்ளி ,கல்லூரி பஸ்கள் ஓட்டப்படும்!-அரசு அதிரடி நடவடிக்கை!!!

400 ஊழியர்கள் பணிநீக்கம்: ஏர் இந்தியா அதிரடி!

ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை
ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஏற்கெனவே இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நீக்கிவிட்டு, ஓய்வுபெற்ற ஊழியர்களைப் பணியமர்த்த ஒப்பந்தங்களைப் போட்டது. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவைச் சாராதவர்கள் என ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மத்திய அமைச்சகம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை விற்க அனுமதியளித்தது. இதையடுத்து கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஏர் இந்தியா நிர்வாக இயக்குநரகம், தொழில்நுட்பப் பிரிவு இல்லாத மற்றும் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்தது. இந்தப் பணிநீக்கத்தில் ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா, ஏர் திராஸ்போர்ட் சேவைகள், ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் லிமிடெட், ஏர்லைன் அலைடு சேவைகள் மற்றும் ஏர் இந்தியா என்ஜினீயரிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.

BRC ல் ஆதார் மையம் அமைக்க உத்தரவு!!

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சம்.-மத்திய அரசு பரிசீலனை.!!

8 வது நாளாக நீடித்த போக்குவரத்து ஸ்டிரைக் வாபஸ்!!!


11/1/18

வருமானவரி பிடித்தம் சார்ந்த சுற்றறிக்கை.!





அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், அரசாணை வெளியீடு, அதிகாரிகள் அதிர்ச்சி, கருணை தொகைக்கு முற்றுப்புள்ளி

இணையதள வசதிக்கு ரூ.200 ஒதுக்கீடு : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

மாணவர்களின் விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய, 200 ரூபாய்
மட்டுமே 
ஒதுக்கியுள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள், கல்வி மேலாண்மை தொகுப்பு எனும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு, இணையதள செலவாக, துவக்க பள்ளிகளுக்கு, 200 ரூபாய், நடுநிலை பள்ளிகளுக்கு, 400, உயர்நிலை பள்ளிகளுக்கு, 600, மேல்நிலை பள்ளிகளுக்கு, 800 ரூபாய், ஒருமுறை செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தற்போது, அலுவல் தொடர்பாக, அனைத்து விபரங்களை அனுப்புவது, பெறுவது, கணினி மூலம் நடக்கிறது. இதுமட்டுமின்றி, 'எமிஸ்' இணையதளத்தில், மாணவர்களின் விபரங்களை பதிவேற்ற, பல மணி நேரம் பிடிக்கிறது. சர்வர் கோளாறால், பல நாட்களை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம், தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்தப்பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தது.
தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், ஒரு பள்ளிக்கு, 200 ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ஆண்டு முழுவதும் இணையதள பயன்பாடு தேவைப்படும்போது, 200 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும். துவக்கப்பள்ளிகளுக்கு கணினி வசதியும் இல்லை. இதனால், பிரவுசிங் சென்டர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், கணினி, இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்குவதுபோல், மாதந்தோறும் இணையதள வசதிக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்