யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/2/18

தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தொழிற்பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தனியார் தொழிற் பள்ளிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 54 நீண்டகால தொழிற்பிரிவுகள், மற்றும் 35 குறுகிய கால தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.ஏற்கெனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் தொழிற்பள்ளிகளுக்கு அங் கீகார நீட்டிப்பு ஆணை வழங்கவும், ஒவ் வொரு ஆண்டும்ஜனவரி 2-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதிவரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.2017-18-ம் ஆண்டு முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல பயிற்சி இணை இயக்குநர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இணையதள முகவரியில் தற்போது 2018-19-ம் ஆண்டு தொழிற்பள்ளிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் புதிதாக தொழிற் பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.

புதிதாக அங்கீகாரம் கோரும் தொழிற்பள்ளிகள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் வழங்கும் முறையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள இணையதளம் வாயிலாகச் செயல்படுத்தப்படுவதால்தொழிற் பள்ளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

Annamalai University - 81st Annual Convocation 2018 - Notification ... ANNAMALAI UNIVERSITY | NOTIFICATION

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு - 2 முக்கிய குற்றவாளிகள் கைது :

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கணேசன் (வயது 38), சேக் தாவூத் நாசர்(32), ரகுபதி(34), சுரேஷ்பால்(34) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம் (32), சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதன்(45) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா? என்றால் முடியாது.

 இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.
பின், நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாத காலத்திற்குள், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,234 ஆய்வக உதவியாளர் பணியிடம், 353 மருந்தாளுனர் பணியிடம் மற்றும் 450 நர்சுகள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 38 கோடி ரூபாய் மதிப்பில், 48 பாராமெடிக்கல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் முதன்முறையாக, 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், பட்ட மேற்படிப்பு துவங்கப்பட உள்ளது. 

'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும், தமிழக அரசு சமர்ப்பித்து விட்டது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்பதாம் வகுப்பு மாணவியை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டு !!

சுற்றுப்புற தூய்மை பற்றிய அக்கறை கொண்ட வேங்கிக்கால் , பொன்னுசாமி நகரைச் சேரந்த சந்திரவாசன், இளையசுதா என்பவர்களின் மகளான   ச.பூஜா என்ற   ஒன்பதாம் படிக்கும் மாணவியை பெருமை படுத்தும் விதமாக நம் மாவட்ட (திருவண்ணாமலை) ஆட்சித்தலைவர் அம்மாணவியை தம் இருக்கையில் அமர வைத்து பெருமை படுத்தினார்.

மாணவர்களுக்கு சலுகை திட்டங்கள் : கல்வி முறையை மாற்ற அதிரடி முடிவு!!!

புதுடில்லி: சிறப்பான தேர்ச்சி பெற்ற முதல், 1,000 பி.டெக்., மாணவர்கள்,
முனைவர் பட்டப் படிப்பில் சேர, 'பெல்லொஷிப்' திட்டம், 24 புதிய மருத்துவக் கல்லுாரிகள் கட்டுதல் உட்பட, பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.


'ஏகலைவா' பள்ளி : மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், கல்விக்கு, 85,010 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், 35,010 கோடி ரூபாய், உயர் கல்விக்கும், 50 ஆயிரம் கோடி ரூபாய், பள்ளி கல்விக்கும் ஒதுக்கப்பட உள்ளது. வரும், 2022க்குள், கல்வி முறையையும், கல்வி கட்டமைப்பையும் முற்றிலும் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுஉள்ளதாக, ஜெட்லி கூறினார்.
எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதத்துக்கு கூடுதலாக வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும், குறைந்தபட்சம், 20 ஆயிரம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும், நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிகராக, 'ஏகலைவா' பள்ளிகள் நிறுவப்படும் என, அவர் தெரிவித்தார்.

சன்மானம் : திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென பிரத்யேகமாக இயங்கும், இரு பள்ளிகளை நிறுவப்போவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கீழ், திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென, 18 பள்ளிகள் செயல்பட உள்ளன. பிரதமர் பெல்லோஷிப் திட்டத்தின் கீழ், சிறப்பாக தேர்ச்சி பெற்ற, முதல், 1,000 பி.டெக்., பட்ட மாணவர்கள், ஐ.ஐ.டி., மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மையத்தில், முனைவர் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மாணவர்களுக்கு, பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு!!!

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, 
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம் : விபரங்களை அனுப்ப உத்தரவு!!!

தேனி: மாநிலத்தில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்கள் குறித்த விபரங்களை
சேகரித்து மார்ச் 5க்குள் அனுப்ப அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 30 மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. 40 ஆண்டிற்கும் மேல் பயன்பாட்டில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்கள் விபரம் சேகரிக்கப்பட்டது. அவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 2002 முதல் 2017 டிசம்பர் வரை மாநிலத்தில் இத்திட்டத்தில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள், மிக மோசமான நிலையில் சேதமடைந்த கட்டடங்கள் உள்ளிட்ட முழு விபரங்களை புகைப்படங்களுடன் மார்ச் 5க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, அனைவருக்கும் கல்விதிட்ட உதவி திட்ட அலுவலர்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்பின் தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு!!!

அரசு பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான
, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7; 10ம் வகுப்புக்கு, மார்ச், 16லும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2வுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. கணிதம், அறிவியல், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பள்ளி ஆய்வகங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. பல பள்ளிகளில் பெயரளவில், செய்முறை தேர்வு நடத்துவது வழக்கமாக உள்ளது. சில பள்ளிகளின் ஆய்வகங்களில், உபகரணங்கள் பெயரளவில் தான் உள்ளன. இந்த முறை, அனைத்து பள்ளிகளிலும், உபகரணங்களை முறையாக வாங்கி பயன்படுத்த வேண்டும். அவற்றை, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இந்த தேர்வில், மாணவர்களுக்கு தோராய மதிப்பெண் வழங்காமல், சரியான மதிப்பெண் வழங்க வேண்டும். தங்களுக்கு பணிவிடை செய்யும் மாணவர்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் வழங்குவது போன்ற முறைகேடுகள் இருக்கக் கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தனித்தேர்வர்களுக்கும், எந்தவித பாகுபாடுமின்றி, பள்ளி மாணவர்களை போன்றே தேர்வை நடத்தி, அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்!!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 
ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.


பின், நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாத காலத்திற்குள், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,234 ஆய்வக உதவியாளர் பணியிடம், 353 மருந்தாளுனர் பணியிடம் மற்றும் 450 நர்சுகள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 38 கோடி ரூபாய் மதிப்பில், 48 பாராமெடிக்கல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் முதன்முறையாக, 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், பட்ட மேற்படிப்பு துவங்கப்பட உள்ளது.
'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும், தமிழக அரசு சமர்ப்பித்து விட்டது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் பொருள்கள்!!!

                                    2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளதால் மொபைல்போன்
மற்றும் டிவி போன்ற மின்சாதனப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்போன்களுக்கான சுங்க வரி முந்தைய 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். டிவி உதிரிப் பாகங்களுக்கான சுங்க வரியும் முந்தைய 7.5 - 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால், மொபைல், டிவி மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மொபைல்போன்களில் சுமார் 81 சதவிகித அளவானது உள்நாட்டில் தயாரிக்கப்படுபவையாக உள்ளது. இந்த அளவு 2018ஆம் ஆண்டில் 90 சதவிகிதத்தைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல்போன்களின் விலையில் உயர்வு இருக்காது. வீடியோ கேம் சாதனங்களின் சுங்க வரி முந்தைய ஆண்டின் 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உணவு பதப்படுத்துதல், மின்னணு சாதனங்கள், கார் பாகங்கள், காலணி மற்றும் மரச்சாமான்கள் போன்ற பொருள்களுக்கான உள்நாட்டு மதிப்புக் கூட்டுதலும் சிறப்பாக உள்ளது.

அதிகக் கட்டணம்: மாணவர்கள் போராட்டம்!

                                            
கும்பகோணத்தில் அதிகக் கட்டணம் கேட்பதாக நிர்வாகத்தின்
மீது குற்றம்சாட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று (பிப்ரவரி 1) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 750 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு இறுதியாண்டு மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்புக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.2,200 கட்டணமாகச் செலுத்த கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தேர்வு எழுதாமல் இருந்தாலும், தேர்வு எழுதித் தோல்வியடைந்தாலும் அபராதம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விதிகள் கல்லூரியில் இருப்பதைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக கடந்த ஜனவரி 31 அன்று தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!!!

                                                 
ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள உதவியாளர் 
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 27

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,150 - 34,990/-

வயது வரம்பு: 20 -28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மொழியியல் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

கடைசித் தேதி: 19.02.2018

மேலும் விவரங்களுக்கு https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTE30012018C4BD15E84BF7477D927549B329231E9B.PDF என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம்-கழிவு மட்டுமே மிஞ்சியது!!!

நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​!!!

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா? என்றால் முடியாது.

 இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

EMIS-Report as on 02.02.2018 - All Districts

கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!

2018 வருமான வரி விண்ணப்பம் தாக்கல் செய்வது தொடர்பாக சார்நிலை கருவூலம் தெளிவுரை!!


CPS NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!!!