யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/2/18

சி.இ.ஓ.,க்கள் கூட்டம் மாற்றம்!!!

மதுரை: மதுரையில் தேர்வுத்துறை சார்பில் நடக்க இருந்த, அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னைக்கு மாற்றப்பட்டது.
மார்ச் 2018, பொதுத் தேர்வுகள் தொடர்பாக, அனைத்து சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டம், மதுரையில், பிப்.,9ல் நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதிகாரிகள் தங்குவதற்கு, ஓட்டலில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், 'பிப்., 9ல் சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்' என, கல்வி இயக்குனர், இளங்கோவனும் அறிவித்தார். ஒரே நாளில், இரண்டு இயக்குனர்களும் கூட்டம் நடத்த முடிவு செய்ததால், மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அமைச்சர், செயலர் பங்கேற்க முடிவு செய்துள்ளதால், கடைசி நேரத்தில், சென்னையில் நடத்த கல்வித்துறை முடிவு செய்தது' என்றார்

நீட்' தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

சென்னை: 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் 
என்ற தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திங்களன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமம் இல்லை. இவ்வாண்டு 'நீட்' தேர்வில் அரசின் பயிற்சி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட வாரியாக பயிற்சி மையங்களில் தேர்வு செய்யப்படும் 2000 மாணவர்களுக்கு சென்னையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியின் மூலம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம்; மத்திய அரசின் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

வங்கியில் ரூ.2,410; கையில் ரூ.1,520... முதல்வரின் சொத்து இது!

புதுடில்லி : திரிபுரா முதல்வர், மாணிக் சர்க்கார், தன் வங்கிக் கணக்கில், 2,410 
ரூபாயும், கையிருப்பாக, 1,520 ரூபாயும் இருப்பதாக, தேர்தல் கமிஷனிடம் வழங்கி உள்ள சொத்து கணக்கில் குறிப்பிட்டு உள்ளார்.

முடிவு

வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில், முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில், மார்க்.கம்யூ., ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து, 20 ஆண்டுகளாக, திரிபுராவின் முதல்வராக, இவர் பதவி வகிக்கிறார்.

திரிபுராவில், 18ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச், 3ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இந்நிலையில், தன்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், முதல்வர் மாணிக் சர்க்கார், தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்களை பார்த்து, பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.மாணிக் சர்க்கார், தன் வங்கிக் கணக்கில், 2,410 ரூபாயும், கையிருப்பு தொகையாக, 1,520 ரூபாயும் வைத்திருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். 2013 சட்டசபை தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விபரத்தில், வங்கிக் கணக்கில், 9,720 ரூபாய்வைத்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய அரசு ஊழியர் முதல்வராக ஆட்சியில் இருந்த போதும், ஐந்து ஆண்டுகளில், அவரது வங்கி சேமிப்பு, 7,310 ரூபாய் குறைந்துள்ளது. மேலும், அவருக்கு சொந்தமாக வாகனம்எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.


மாணிக் சர்க்காரின் மனைவி, பாஞ்லி பட்டாசார்ஜி, மத்திய அரசு ஊழிய ராக பணியாற்றினார்.

அவரிடம், 20 ஆயிரத்து, 140 ரூபாய் கையிருப்பாகவும், 12 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பாக இருப்பதாகவும், 20 கிராம் தங்க நகைகள் வைத்து உள்ளதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : எல்லை விரிவாக்க அரசாணை வெளியீடு!!!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்க அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள சில கிராமங்களும் சிஎம்டிஏ உடன் இணைக்கப்பட்டுள்ளது. தரமான உள்கட்டமைப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு சென்னை நகரத்தின் எல்லையில் விரிவாக்கப்படும் என்று சென்ற ஆண்டு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1974-ம் ஆண்டு சிஎம்டிஏ செயல்பட தொடங்கிய போது சென்னை பெருநகர எல்லை 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. 40 ஆண்டுகளாக சென்னை பெருநகர எல்லையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது சென்னை பெருநகரத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் அரக்கோணம் தாலுக்காவும் இணைக்கப்படவுள்ளன.

இதனால் சென்னையின் எல்லை 8,878 சதுர கிலோமீட்டராக பிரம்மாண்ட வடிவம் பெற இருக்கிறது. சென்னை பெருநகர விவரிவாக்கத்தின் முறையான திட்ட அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை 1.30 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக பெருநகர விரிவாக்கம் பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு : லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி!

                                      


லக்ஷ்மி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள தலைமை நிதி அதிகாரி 
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : தலைமை நிதி அதிகாரி

பணியிடம் : சென்னை

கல்வித் தகுதி : சி.எ., முடித்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி : 14.02.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1OQR4RcZFRAD0fuGqnWwAcvBwONXOr3HJ/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தமிழக அரசில் ஆய்வக உதவியாளர் பணி!!!

டில்லி மெட்டோவில் 1896 பணியிடங்கள்!!!

CRC LEVEL TRAININGS SCHEDULE 2018 - 2019 (PRIMARY TEACHERS)

CRC LEVEL TRAINING SCHEDULE 2018 - 2019 (UPPER PRIMARY TEACHERS)

ஸ்கூட்டர் மானியத்திற்கு கால அவகாசம் நீடிப்பு!!!

CM CELL REPLY- A,B பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தற்போது வழங்க இயலாது - தமிழக அரசு பதில்


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப்.13 உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.


கனவு ஆசிரியர்' விருதுக்கு ஆன் லைன் விண்ணப்பம்?

கனவுஆசிரியர்' விருது குறித்து எழும் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அமல்படுத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் துடிப்பான,
இளம் ஆசிரியர்களுக்கு, நடப்பாண்டில் முதன்முறையாக, 'கனவு ஆசிரியர்' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க, ஜன., 29ம் தேதியுடன், அவகாசம் முடிந்த நிலையில், நேற்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தலா, 12 ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப, இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, விருதுக்கு தகுதியானோர் பட்டியல், அனுப்ப வேண்டாமென, நேற்று காலை தெரிவிக்கப்பட்டது. இதோடு, கனவு ஆசிரியர் விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்படும் எனவும், தகவல் வெளியாகி உள்ளது. முதன்மை கல்வி அலுவலர், அய்யண்ணனிடம் கேட்ட போது, ''கனவு ஆசிரியர் விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து, அதிகாரபூர்வ தகவல் இல்லை. ஆனால், விரைவில் தகவல் வெளியாகலாம்,'' என்றார்

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப் படுத்தப்படுமா ? டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை

6/2/18

TNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்

அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : விரைவில் அரசாணை

'சிவகங்கை: அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள்
அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் இணை உணவும், மாநில அரசு திட்டத்தில் மதிய உணவும் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு இல்லை.பெரும்பாலான மையங்களில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையே உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு அம்மை, கொப்புளங்கள் போன்ற வெப்ப நோய் தாக்குகின்றன. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்லும் நிலை உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறை கேட்டு அங்கன்வாடி மைய ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆண்டில் 300 நாட்களும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விடுமுறை விட அரசு தயக்கம் காட்டியது. கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு பிப்., 6 முதல் பிப்., 8 வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.பிப்., 1 சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊதிய முரண்பாடுகளை களைவதாகவும், மையங்கள் மூடாதபடி மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் விடுமுறை விடப்படும் என, தெரிவித்தனர். விரைவில் விடுமுறைக்கான அரசாணை வெளியாக உள்ளது.

'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

எய்ம்ஸ் கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில் சேர, மே,
26, 27ல் நுழைவு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு, இன்று துவங்குகிறது.
நாட்டின் உயரிய மருத்துவ கல்வி நிறுவனங்களாக, மத்திய அரசின், 'எய்ம்ஸ்' கல்லுாரிகள் செயல்படுகின்றன. மத்திய சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுதி, தேர்ச்சி பெறவேண்டும். வரும் கல்வி ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, மே, 26 மற்றும், 27ல் நடத்தப்படும் என, எய்ம்ஸ் நிறுவனம் அறிவித்துஉள்ளது. அதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்குகிறது. இந்த ஆண்டு, கணினி வழியில் மட்டுமே, நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் பங்கேற்க, இன்று முதல் மார்ச், 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதுடில்லி, பாட்னா, புவனேஸ்வர், குண்டூர் உட்பட, ஒன்பது இடங்களில் உள்ள கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, இந்த நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, https://www.aiimsexams.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

இன்ஜி., முதல் பருவ தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு!!!

சென்னை: அண்ணா பல்கலையில், முதல் பருவ தேர்வு முடிவுகள், இன்று
வெளியிடப்படுகின்றன. 1.33 லட்சம் மாணவர்களுக்கு மொபைல் போனில், 'ரிசல்ட்' அனுப்பப்படுகிறது.
அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், தன்னாட்சி கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு, நவம்பர், டிசம்பரில் நடந்தது. இந்த தேர்வில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பல்கலையின் தேர்வுத்துறையில், மாணவர்களின் மொபைல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த மொபைல் எண்களுக்கு, மாணவர்களின் தேர்வு முடிவுகள், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா தெரிவித்துள்ளார். 'எந்தெந்த கல்லுாரிகள் சார்பில், தேர்வு கட்டணம் செலுத்தவில்லையோ, அந்த கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்' என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

pay matrix single page

மாவட்ட கருவூலத்திற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்க கிடப்பில் போடப்பட்ட முதன்மை செயலர் பரிந்துரை!!!

மதுரை, பிப். 5--மதுரை மாவட்ட கருவூலத்தில் ஊழியர் பற்றாக்குறையால் ஒருவர் 4 ஆயிரம் 
ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கும் அவலம் நிலவுகிறது. கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக, மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கருவூலத்தில் 1980 க்கு முன்பு வரை தேவையான ஊழியர்கள் இருந்தனர். இங்கிருந்த ஊழியர்கள் 1980 ஜன., 24 துவங்கப்பட்ட திண்டுக்கல் கருவூலம், 1987 செப்., 1 துவக்கப்பட்ட மதுரை சம்பளக்கணக்கு அலுவலகம், 2000 அக்., 1 துவங்கப்பட்ட தேனி கருவூலத்திற்கு பிரித்து அனுப்பப்பட்டனர். புதிய அலுவலகங்கள் துவங்கிய போதெல்லாம் இங்கிருந்து ஊழியர்கள் மாற்றப்பட்டதால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை மட்டும் 44 ஆயிரம் உள்ளது. மாதந்தோறும் 100 பேர் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற துவங்குகின்றனர். தற்போது ஒரு கருவூல அலுவலர், ஒரு உதவி அலுவலர், 10 கணக்கர்கள், 5 கண்காணிப்பாளர்கள் தான் பணிபுரிகின்றனர். இவர்கள் 44 ஆயிரம் ஓய்வூதியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் சம்பளம் உட்பட அனைத்துப் பணிகளையும் கவனிக்கின்றனர். ஒரு கணக்கர் குறைந்தது 4 ஆயிரம் ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு ஊழியர் 750 ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கிறார். எனவே கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை.மூத்த குடிமக்கள், ஓய்வூதியர் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: ஓய்வூதிய வழங்கும் அலுவலகத்தின் அவசியத்தை உணர்ந்து கருவூலத்துறை முதன்மை செயலர் ஜவஹர் நிதித்துறையினருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் நிதித்துறையில் அவரது பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதிய பணிகளில் மந்தம் நிலவுகிறது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.