யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/2/18

CPS நண்பர்களின் கவனத்திற்கு....

                                        

ஓய்வூதிய வல்லுநர் குழுவின் 
அறிக்கையை தமிழக அரசிடம்  தாக்கல் செய்யக்கோரி  திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று 21.02.2018  விசாரணைக்கு  வருகிறது.*

For order
வரிசையில் 52வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கேள்விகள் குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு ேநரமும் குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 கோவை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 312 இடங்களில் வைபை வசதி அறிமுகம் செய்யப்படஉள்ளது.இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்முறையாக அரசு பள்ளிகளில் வைபை வசதி கிடைக்கும். மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்தின் மூலம் விபத்திற்கு ரூ.1 லட்சம், பெரிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரம் என 48 மணி நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்வழி ஏற்படுத்தும் விதமாக 16 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு புத்தக வடிவில் கவுன்சலிங் மேற்கொள்ள உள்ளோம்.தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை மாற்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்.

10 வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்விற்கு கேள்விகள் குறைக்கப்பட்டு, தேர்வு நேரமும் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித பயமுமின்றி தேர்வை சந்திக்கலாம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

பிப்ரவரி 21 இன்று உலக தாய்மொழி தினம் - தாய் மொழி காக்க உறுதியேற்போம்..

தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’


ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி கல்வி என்பது மிகவும் அவசியமாகும். ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் தொழில் வளர்ச்சியில் மேலோங்கி இருப்பதற்கு முக்கிய காரணம், அவர்களின் சொந்த தாய்மொழியில் கல்வி கற்பது மட்டுமே என்று உலக வரலாற்றில் பொன்னொழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக திகழ்கிறது. 

உலகில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளது. சமீபத்தில் எடுத்துள்ள ஆய்வின் படி நாள் ஒன்றுக்கு ஒரு மொழி அழிந்துவருவதாக கண்டறியபட்டுள்ளது. நமது நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துள்ளதாக மொழி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருமொழி அழிந்தால் அதன் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், நாகரீகம் ஆகியவையும் அழிந்துவிடும்.

தாய்மொழி என்பது நமது தாய்க்கு நிகரானது. நம் தாய்மொழியை அழிப்பது, தாய்க்கு செய்யும் துரோகம் என்பதில் சந்தேகமில்லை. தாய் மீது அன்பு செலுத்தவோ அல்லது அவளின் தேவையை சந்திக்கவோ இன்னொருவரின் ஆலோசனை அவசியமில்லை. அதேபோல் தான் தாய்மொழியும், நமது மொழியை காப்பாற்ற வேண்டும். “தாய்மொழியை சுவாசியுங்கள், பிறமொழியை நேசியுங்கள்“ என்று தேசியகவிஞர் குவெம்பு சொல்லியுள்ளதை நூற்றுக்கு நூறு மனத்தில் தாங்கி ஒவ்வொரு மொழியினரும் செயல்பட வேண்டும்.

ஆங்கிலம் உள்பட பிறமொழிகள் மீது நான் பற்றுகொள்வதின் மூலம், சொந்த மொழியை அழித்துவருகிறோம். வர்த்தக ரீதியில் தற்போது ஆங்கிலம் உள்பட பல மொழி கல்வி நிறுவனங்கள் பிராந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழிகளை நீச மொழியாக பாவிப்பதுடன், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அவர்கள் சொந்த மொழியில் பேசுவதற்கும் தடை விதித்து வருகிறார்கள். சில பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறுமொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

அதன் மூலம் தங்களின் மூல அடையாளத்தை தொலைத்து வருகிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் உள்பட பிறமொழியில் கல்வி கொடுத்தாலும், வீட்டில் தாய்மொழியை கற்றுகொடுக்க வேண்டும். உலக தாய்மொழி தினமான இன்று அதற்கான உறுதிமொழியை ஏற்போம்.

1, 9ம் வகுப்புகள் புதிய பாடத்திட்டத்திற்கான குறுந்தகடுகள் வெளியீடு.

ஏப்ரல் மாதம் இறுதிக்குள் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்கட்டமாக 1, 9ம் வகுப்புகள் புதிய பாடத்திட்டத்திற்கான குறுந்தகடுகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 மத்திய அரசு தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பாடத்திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஆதார் இல்லையா - பரவாயில்லை நீங்களும் NEET தேர்வு எழுதலாம்!

மத்திய கல்வி வாரியம் (CBSE) ஆனது 2018-ஆம் ஆண்டிற்கான மருத்துவ தகுதி(NEET) தேர்விற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் என அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பில் பல குழப்பங்கள் நிலவியது,
காரணம் ஜம்மு-காஷ்மீர், மேகாளயா, ஆஸாம் மாநில மக்கள் ஆகியோர்களால் ஆதார் அட்டையினை பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கையில் NEET தேர்விற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற குழப்பம் நிலவியது.இந்நிலையில் இந்த குழப்பங்களுக்கு விடையளிக்கு வகையில், ஆதார் இல்லாமலும் NEET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஆதார் அட்டை இல்லாத ஜம்மு-காஷ்மீர், மேகாளயா, ஆஸாம் மாநில மாணவர்கள் தங்களது பாஸ்போர்ட் எண், ரேஷன்கார்டு எண், வங்கி கணக்கு விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசாங்க ஒப்புதல் பெற்ற ஒரு அடையாள ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம் எனவும். மற்ற மாநில மாணவர்கள் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட UIDAI  கொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.மேலும் "NEET (UG) -2018 விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க ஆதார் எண் தேவைபடுகிறது எனவும், NEET (UG) -2018 -க்கான தேரவாளர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துவதன் மூலம் தேர்வாளரின் விவரங்களை துல்லியமாக கண்டறியவும் ஆதார் எண் அவசியம் என்ற முறைகொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல், தேர்வின் போது தேர்வாளர்களை அடையாளம் கண்டு உறுதி படுத்திக்கொள்ள இந்த முறை பயன்படுத்தப்படும் எனவும் NEET (UG) -2018 தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!


NEET தேர்வாளரா நீங்கள், அப்படியென்றால் இதை கவணத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...​​ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தில் நகல் குறைந்தப்பட்சம் 3 கையில் வைத்துக்கொள்ளுங்கள்!கட்டணம் செலுத்தியதற்கான சான்று (அதாவது உறுதிப்படுத்தல் பக்கத்தின் மூலம் ஆதரிக்கப்படும் வங்கி பரிவர்த்தனை விவரங்கள்).ஒத்த பாஸ்போர்ட் அளவு கொண்ட குறைந்தது 5 புகைப்படம், அதேப் புகைப்டத்தினை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்றவாறு மென் நகல் (Scan Copy)J & K மாநிலத்தை சேர்ந்த தேர்வாளர்களை பொறுத்தவரை, அகில இந்திய அளவிலான 15% ஒதுக்கீட்டிற்கான சுய பிரகடனத்தை உருவாக்கிய அமைப்பு.ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில தேர்வாளர்களை பொறுத்தவரை அகில இந்திய அளவிலான 15% ஒதுக்கீட்டிற்கான சுய பிரகடனத்தை உருவாக்கிய அமைப்பு.

(குறிப்பு: முன்னதாக் இம்மாநில மாணவர்களிடம்இருந்து இச்சான்று கோரப்படவில்லை)

1, 6, 9, 11 வகுப்புகள்: புதிய பாட நூல்கள் தயாரிப்புப் பணி தீவிரம்

தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டத்துக்கான பாடநூல்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்தப் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் அரசின் சார்பில் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து புதிய வரைவுப் பாடத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி வெளியிட்டார். இது குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மூலம் இணையதளம் வழியாக கருத்துகள், திருத்தங்கள், கோரிக்கைகள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட கருத்துகளில் ஏற்க தகுந்த விஷயங்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 
இதையடுத்து 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புத்தகம் எழுதும் பணி தொடங்கியது. மொத்தம் 69 பாடப் பிரிவுகள், பிறமொழிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடநூல்கள் எழுதப்பட்டுள்ளன. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் இந்தப் பணியை ஏராளமான பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர். முதல் கட்டமாக இந்தப் பாட நூல்கள் ஆங்கில வடிவில் தயாராகியுள்ளன. 
இதையடுத்து தமிழ் வடிவில் பாடநூல்கள் தொகுக்கும் பணி நடைபெறும். இந்தப் பணி சில நாள்களில் முடிவுறும். இதைத் தொடர்ந்து பாடநூல் குறித்தத் தகவல்கள் சி.டி.க்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும். 
இந்தப் பணிகள் முடிவடைந்ததும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் புதிய பாடநூல்கள் அச்சடிக்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளது. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் மாதம் பள்ளி திறக்கும்போது 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின்படி கற்றல் பணிகள் தொடங்கும் எனப் பாடத்திட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 19,000 பேருக்கு சம்பளம், 'கட்'

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட, 19 ஆயிரம் பேருக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.ஊதிய உயர்வை விரைவாக இறுதி செய்யக்கோரி, மின் வாரியத்தில் உள்ள, மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட, சில சங்கங்கள், பிப்., 16ல், வேலை நிறுத்தம் செய்தன. 
இதையொட்டி, 'ஒரு நாள் பணிக்கு வராவிட்டாலும், அவர்களின் எட்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என, மின் வாரியம் எச்சரித்திருந்தது.அதை பொருட்படுத்தாமல், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் அறிவித்த தினத்தன்று, 19 ஆயிரம் பேர் விடுப்பு எடுத்து, பணிக்கு வரவில்லை.
இதனால், மின் கட்டணம் வசூல், மின் வினியோக பணிகள் பாதிக்கப்பட்டன.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு, எட்டு நாள் சம்பளம் பிடிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. 
இருப்பினும், போராட்டத்தில் பங்கேற்ற வர்களுக்கு, சம்பளம் பிடிப்பது குறித்து, இறுதி முடிவு எடுக்கவில்லை. அதே சமயம், 'வேலை செய்யவில்லை; சம்பள மும் இல்லை' என்பதற்கு ஏற்ப, போராட்டம் நடந்த நாளில், பணிக்கு வராதவர்களுக்கு, ஒரு நாள் சம்பளம் உறுதியாக பிடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்... சென்டம் எடுக்க சிம்பிள் டிப்ஸ்!

பத்தாம் வகுப்பு மாணவர்களே...! கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்தால், சமூக அறிவியல் பாடத்திலும் சென்டம் எடுத்து, வரலாற்று சாதனைப் படைக்கலாம். சுமாராகப் படிக்கும் மாணவர்களும் சூப்பர் மதிப்பெண் எடுக்கலாம். அதற்கு வழிகாட்டுகிறார்கள் இந்த ஆசிரியர்கள். 


ராணி மங்கம்மாள், குருவப்பா மேல்நிலைப் பள்ளி, நெய்க்காரப்பட்டி, பழனி.

1. வரலாறு 17 பாடங்கள், புவியியல் 10 பாடங்கள், குடிமையியல் 4 பாடங்கள், பொருளாதாரம் 2 பாடங்கள் என உள்ளன. இவற்றில், வரலாறு பிரிவில் முதல் 9, புவியியலில் முதல் 5, குடிமையியலில் முதல் 2, பொருளாதாரத்தில் முதல் பாடம் ஆகியவற்றைப் படித்தாலே சென்டம் வாங்கிவிடலாம். 

2. ஒரு மதிப்பெண் கேள்விகள் 24 கேட்கப்படும். நோ சாய்ஸ். ஆனால், புக் பேக் கேள்விகள் 22 கேட்கப்படும். 2 மட்டுமே பாடங்களின் உள்ளிருந்து வரும். 

3. 2 மதிப்பெண் கேள்விகள் 20 கேட்கப்படும். அவற்றில், வரலாறு மற்றும் புவியியலில் தலா 8 கேள்விகள் கேட்கப்படும். தலா 4 கேள்விகளுக்குப் பதில் எழுதினால் போதும். இதேபோல, குடிமையியல் மற்றும் பொருளாதாரத்தில் தலா 2 கேள்விகள் வரும். இதில், தலா ஒன்றுக்குப் பதில் எழுதினால் போதும்....

4). 2 மதிப்பெண் கேள்விகளைப் பொறுத்தவரை, சென்டம் எடுக்க முதல் பாயின்ட்டை ஃபாலோ செய்யுங்கள். அது முடியாத பிள்ளைகள் குறைவான வார்த்தைகள் இருக்கிற பதில்களைத் தேடித் தேடிப் படியுங்கள். 

5. முந்தைய வருடக் கேள்வித்தாள்களில் திரும்பத் திரும்ப வந்த 4 மதிப்பெண்களை ஒன்றுவிடாமல் படித்துவிட்டால், அந்தப் பகுதியில் மொத்த மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம். 

6. 5 மதிப்பெண் கேள்விகளில் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளாதாரம் என ஒவ்வொரு பாடத்திலும் தலா 3 கேள்விகள் கேட்கப்படும். தலா ஒரு கேள்விக்குப் பதில் எழுதினால் போதும். 

7. பொருளாதாரத்தில் முதல் பாடத்தைப் படித்தாலே 8 மதிப்பெண் பெற்றுவிடுவது உறுதி. 

8. 'இந்திய நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறி' என்கிற கேள்விக்கு, இந்திய நிகழ்வுகளா அல்லது வெளிநாட்டு நிகழ்வுகளா என்று கவனித்து எழுதுங்கள். சில மாணவர்கள் அவசரத்தில் தவறாக எழுதி, 5 மதிப்பெண்களை இழந்துவிடுகிறார்கள். 

9. வரைபடத்தைப் பொறுத்தவரை, வரலாற்றில் 5 மதிப்பெண், புவியியலில் 10 மதிப்பெண் கிடைக்கும். புவியியலில் முதல் பாட மேப்பை கட்டாயம் மனப்பாடம் செய்துவிடுங்கள். 

10. ஒரு மதிப்பெண், மேப், 2 மதிப்பெண், 4 மதிப்பெண் ஆகியவற்றை முடித்துவிட்டு, 5 மதிப்பெண் கேள்விகளைக் கடைசியாக எழுதுங்கள். 

சாரதா நரேந்திரநாத், சி.பி.எஸ்.சி. பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம், சென்னை. 

1. வரலாறு, புவியியல், குடிமையியல் என மூன்று சப்ஜெக்டிலும் சேர்த்து 22  பாடங்கள் இருந்தன. இதில், 2 பாடங்களைப் படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டதால், 20 பாடங்களைப் படித்தால் போதும். தவிர, 20 மார்க் இன்டர்னல் போக, 80 மதிப்பெண்ணுக்கு எழுதவேண்டும். இதில், தியரிக்கு 75 மதிப்பெண், மேப்புக்கு 5 மதிப்பெண். 

2. வரைபடத்தைப் பொறுத்தவரை வரலாற்றிலிருந்து 2 மதிப்பெண், புவியியலிலிருந்து 3 மதிப்பெண் என ஐந்து மதிப்பெண் கேட்பார்கள். வருட ஆரம்பத்திலிருந்தே பாடப்புத்தகத்தில் இருக்கும் 28 வரைபடங்களுக்கும் பயிற்சி தந்திருப்பதால், 5 மதிப்பெண்ணையும் நிச்சயம் எடுத்துவிடலாம். 

3. வரலாற்றில் கொஞ்சம் பலவீனமான மாணவர்கள், முதல் நான்கு பாடங்களையாவது கட்டாயம் படித்துவிடுங்கள். புவியியல் மற்றும் குடிமையியலில் எல்லாப் பாடங்களையும் படித்தே ஆக வேண்டும். 

4. அப்ளிகேஷன் டைப் கேள்வி அதிகம் வரும் என்பதால், இவற்றை மிஸ் பண்ணாமல் படித்துவிடுங்கள். 

5. சி.பி.எஸ்.சி. வெப்சைட்டில் இருக்கும் மாதிரி கேள்வித்தாள்களை ரிவைஸ் செய்யுங்கள். 

6. பேப்பர் கரெக்‌ஷனுக்கு செல்கிற மூத்த ஆசிரியையாக, பரீட்சை எழுதுவதில் சில டிப்ஸ் சொல்ல ஆசைப்படுகிறேன்... 

(அ) சமூக அறிவியலைப் பொறுத்தவரை, நிறைய எழுதவேண்டி வரும். எனவே, திருத்துகிற ஆசிரியர்களுக்குப் புரியும்படி தெளிவாக எழுதுங்கள். 

(ஆ) முக்கியமான பாயின்ட்களை பென்சிலால் அடிக்கோடிடுங்கள். 

(இ) 3 மதிப்பெண் கேள்வி என்றால், 3 சப்டைட்டில் கொடுத்து எழுதுங்கள். 5 மதிப்பெண் என்றால், 5 சப்டைட்டில் கொடுங்கள். இதெல்லாம் உங்கள் பேப்பரைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு, நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். அது உங்கள் மதிப்பெண்ணிலும் வெளிப்படும்.

க.மணி மாறன்,ப.ஆ.,

நேய்க்காரப்பட்டி.சேலம்

TNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION

மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவிக்குத் தேர்வுசெய்யப்படுவோர் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-1), ஆர்டிஓ, துணை ஆணையர், இணை ஆணையர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்த நிலையில், தற்போது மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தேவையான தகுதி ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளமா முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதோடுபெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின் வாகனங்களில் குறைந்தபட்சம் ஓராண்டாவது பணிபுரிந்த அனுபவம் வேண்டும். மேலும், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், கனரகச் சரக்கு வாகனங்கள், கனரகப் பயணிகள் வாகனங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்களாவது கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவமும் தேவை. வயது 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்.சி., எஸ்.டி, பிசி, எம்.பி.சி., டி.என்.சி.) வயது வரம்பு கிடையாது. தகுதியுடையவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும். என்ன கேட்பார்கள்? முதல் தாளில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் 100 கேள்விகள், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண் 300. இரண்டாவது தாள் பொது அறிவுத் தாள். இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200. பொது அறிவுத் தாள், பிளஸ் டூ தரத்தில் அமைந்திருக்கும். நேர்முகத் தேர்வுக்கு 70 மதிப்பெண். உரிய வயதுத் தகுதி, கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதிகள் உடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பம், சான்றொப்பம் பெறப்பட்ட ஆவணங்களின்நகல்களை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். | DOWNLOAD

20/2/18

தமிழகத்தின் "ஸ்லெட்" தகுதி தேர்வில் லஞ்சம்

No automatic alt text available.

CM CELL REPLY-Govt Servants and Teachers who are under probation are eligible for 12 days casual leave and Restricted Holidays (3 days) during probation

க்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் அறிவிப்பு

புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில்
முடியும்; அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.


இதுகுறித்து, தலைமை செயலகத்தில், அவர் கூறியதாவது:


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 318 பள்ளிகளுக்கு, இணையதளம் வழியே, 'வை - பை' வசதியை, தனியார் நிறுவனம், இலவசமாக செய்து கொடுத்துள்ளது. பூமிக்கு கீழே கேபிள் பதிக்கப்பட்டு, இவ்வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


இது, கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களை, மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிந்து விடும்; அந்த மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் முதல் வாரத்திற்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கும் மேலான, பாடத்திட்டம் உருவாக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


இந்தஆண்டு, ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பிளஸ்1 வகுப்பிற்கு பாடத்திட்டம் மாற்றப்படும். அதற்கடுத்த ஆண்டு, அனைத்து வகுப்புகளுக்கும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.மாணவர்களுக்கான உதவி மையத்திற்கான பிரத்யேக எண் துவக்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு வாரம் எவ்வாறு செயல்படுகிறது என, பார்த்த பின், இந்த சேவையை, முதல்வர் துவக்கி வைப்பார்.


திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்று, மாணவர்களுக்கு, 'ரோபோ' பயிற்சி அளிக்கிறது; அறிவியல் ஆய்வகத்தில், பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அதே போல, 96 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம், எதிர்காலத்தில், 500 பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.a

Pedagogy pilot schools book details.....

Pedagogy pilot schools book details*
👍 *முதல் வகுப்பு*
🌹தமிழ் பாடப்புத்தகம்
🌹பயிற்சிப் புத்தகம்
🌹English book with work book
🌹English book
🌹English work book.
*தமிழ் வழி*
🌹கணக்கு புத்தகம்
🌹கணக்கு பயிற்சிப் புத்தகம்
🌹சூழ்நிலையியல் புத்தகம்
🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்.
👍 *English medium*
🌹Mathematics book
🌹Work book
🌹EVS book
🌹EVS work book
🌹முதல் வகுப்பு ஆசிரியர் கையேடு.
🌹English medium
Teacher hand book

*இரண்டாம்வகுப்பு* 🌹தமிழ் பாடப்புத்தகம்
🌹பயிற்சிப் புத்தகம்
🌹English book with work book
🌹Enlish book
🌹English work book

*தமிழ் வழி*
🌹கணக்கு புத்தகம்
🌹பயிற்சிப் புத்தகம்
🌹சூழ்நிலையியல் புத்தகம்
🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்

*English medium*
🌹Mathematics book
🌹Mathematics work book
🌹EVS book
🌹EVS work book
இரண்டாம்வகுப்பு ஆசிரியர் கையேடு
English medium Teacher hand book

🌹 மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கையேடு
🌹English medium Teacher hand book

👍 *1&2 வகுப்புக்குரியது*

🙏 *New pedagogy pilot school இல் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பின் கீழ்காணும் முறையில் வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெறுதல் வேண்டும்*

🌷 *9.30 to 11. 00 - 90 நிமிடங்கள் முதல் பாடவேளை*

🌷 *9.30 to 10.00 - 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள்*

🌷 *10.00 to 10.30 - 30 நிமிடங்கள் இணைச்செயல் பாடுகள்*

🌷 *10.30 to 11.00 - 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள்*

🌷 *இது போன்றே முதல் 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள் அடுத்த 30 நிமிடங்கள் குழுச் செயல்பாடுகள், அடுத்த 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள் என வகுப்பறை யில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று பாடவேளை யும் நடைபெற வேண்டும்*

🌷 *11.10 to 12.40*
*இரண்டாம் பாடவேளை*

🌷 *2.00 to 3.30 மூன்றாம் பாடவேளை*

🙏 *ஒரு நாளைக்கு 3 பாடவேளை என 5 நாட்களுக்கு 15 பாடவேளை*

🌷 *தமிழ் 4 ஆங்கிலம் 4 கணக்கு 4 சூழ்நிலையியல் 3*
a

இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவற்றுக்கு சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது -நிதித்துறையின் விளக்கக்கடிதம்



அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானம்:முன்னாள் தலைமை ஆசிரியை தாராளம்

பவானி, அரசுப்பள்ளி கட்டடம் கட்ட நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்த முன்னாள் பெண் தலைமை ஆசிரியைக்கு
பாராட்டு விழா நடந்தது.ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.தற்போது ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை, 486 மாணவியர் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 2 வகுப்பு துவங்கவுள்ளது.

ஆனால்,போதிய இடவசதியில்லை.இந்நிலையில் சித்தோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பொன்மணிதேவி, 80, தன் சொந்த நிலம்ஒரு ஏக்கரை தானமாக வழங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு நான்கு கோடி ரூபாய்.இவர், 1964 முதல் ஆசிரியையாக பணிபுரிந்தார்.கோபி, மொடச்சூர் பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் 1996ல் ஓய்வு பெற்றார்.இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். ஒரே மகன் மயூரா கார்த்திகேயன் டாக்டருக்கு படித்தார். அவரும் எதிர்பாராதவிதமாக இறந்தார்.இதனால் தன்சகோதரி மாரத்தாள்அவரின் மகன்கள்அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.கடந்த 2006ல் பிற்
படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியருக்கு விடுதி கட்டடம் கட்ட 25 சென்ட் நிலம் வழங்கினார்.தற்போது சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகஅளித்துள்ளார்.இவருக்கு நேற்று பாராட்டு விழாநடந்தது. விழாவில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிலத்தை தானம் செய்வதற்கான பத்திரத்தை பொன்மணி தேவி வழங்கினார்.

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள்உருவாக்கப்படும் என்று பள்ளி
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளதாக நாமக்கல்லில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

DEE - தொடக்கக் கல்வித் துறையில் 31.08.2017-ன் படி நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் விவரம் | ஒன்றியம் வாரியாக...

19/2/18

சொத்து கணக்குடன் வருவாய்க்கான ஆதாரத்தையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ‘லோக் பிரஹாரி’ என்ற தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து கணக்குகளை ஆய்வு செய்ததில், 26 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 257 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்து இருப்பதாக வருமான வரித்துறையும், மத்திய நேரடி வரிகள் வாரியமும் தெரிவித்துள்ளன. மேலும், 9 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 42 எம்.எல்.ஏ.க்களின் சொத்து கணக்கை ஆய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
தகுதி இழப்பு

சொத்து கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறியபோதிலும், வருவாய்க்கான ஆதாரத்தை தெரிவிப்பதை கட்டாயம் ஆக்கவில்லை.

ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ வர்த்தக தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது அரசு ஒப்பந்தம் பெற்றிருந்தாலோ அத்தகைய வேட்பாளர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள் என்று முன்பு இருந்த 7டி பிரிவில் கூறப்பட்டு இருந்தது. அந்த பிரிவை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும். மேலும், அத்தகைய வர்த்தக தொடர்பு வைத்திருப்பவர்கள், அதை தங்களது பிரமாண பத்திரத்தில் தெரிவிக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வருவாய் ஆதாரம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது சொத்து கணக்குடன், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துகளை வாங்கியதற்கான வருவாய் எப்படி வந்தது? என்பதையும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதன்மூலம், அந்த சொத்துகள் சட்டரீதியாக வாங்கப்பட்டதா? இல்லையா? என்பதை வாக்காளர்களே தெரிந்து கொள்ள முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு சுற்றுலா திட்டம் :

கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க, இரு மாவட்டங்களின் சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தி உள்ளனர்.

மலைவாழ் மாணவர்கள்உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகையில், தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆனாலும், தமிழக கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்கள், சுற்றுலா சார்ந்த விஷயங்களை 
அறியாதவர்களாக உள்ளனர். எனவே, கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை, நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்ல, கோவை, நீலகிரி மாவட்ட சுற்றுலா துறை திட்டமிட்டுள்ளது. 

முக்கியத்துவம்இதற்காக, கோவை மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ - மாணவியரை, வால்பாறை, ஆழியாறு, பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கும், நீலகிரி மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ - மாணவியரை, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம், மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தால், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்திராத கிராமப்புற மாணவ - மாணவியர், அவற்றை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்தும், அவர்கள் அறிந்து கொள்வர். எனவே, 'சுற்றுலா துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து, இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களும், பெற்றோரும்வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் மாற்றம் பதிவாளர் தகவல்

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்ட மேற்படிப்பு 
படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்வு மற்றும் 
மாணவர்களுக்கான பட்டமேற்படிப்பு முடித்ததற்கான 
பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் 
நேற்று நடந்தது. பதிவாளர் ஆர்.சீனிவாசன் தலைமை 
தாங்கி, மாணவர்களுடைய குறைகளை தீர்த்து 
வைத்ததுடன், பட்டங்களையும் வழங்கினார்.

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.சீனிவாசன், கூடுதல் 
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.டி.சந்தானகிருஷ்ணன் 
மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் 
பலர் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம்

பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:-

நவீன யுகத்துக்கு ஏற்றார் போன்று பல்கலைக்கழகத்தில் 
பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை எளிய முறையில் 
கொண்டு செல்வதற்காக தகவல் தொழில்நுட்பத்தை 
2018-2019-ம் கல்வியாண்டு முதல் முழுமையாக அறிமுகப்படுத்த
 திட்டமிட்டு உள்ளோம். குறிப்பாக தற்போது பாட திட்டங்கள் 
அனைத்தும் அச்சடித்த புத்தகங்களாக மாணவர்களுக்கு 
வழங்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் 
மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதள முகவரி
 மூலமும் பாடங்கள் வெளியிடப்படும்.

இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் 
போதிப்பதுடன், பல்கலைக்கழக இணையதளம்
 மூலமாக வெளியிடப்படும் பாடங்களை மாணவர்கள் 
தங்களுடைய வீடுகளில் உள்ள கணினி, செல்போன் 
மற்றும் டேப்-லெட் மூலமாகவும் எளிதாக படிக்க முடியும்.

பேராசிரியர்களுடன் நேரடி பேச்சு

அத்துடன் ‘ஸ்கைப்’ வசதி மூலம் பல்கலைக்கழக 
ஆசிரியர்களிடம், மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே 
பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து 
கொள்ள முடியும். இதற்காக குறிப்பிட்ட நாளில் பகல் 
2 மணி முதல் 4 மணி வரை ஆசிரியர்கள் தயார் நிலையில் 
இருப்பார்கள்.

மாணவர்கள் ‘ஸ்கைப்’ மூலம் பாடத்தில் உள்ள 
சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் 
வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 
அடுத்த தலைமுறைக்கான நவீன தொழில்நுட்ப வசதி 
பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கூடுதல் பாடம் படிக்கும் வசதி

மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தில் கூடுதலாக 
பிற பாடங்களையும் சேர்த்து படிக்க விரும்பும் தேர்வு 
சார்ந்த அமைப்பு (சாய்ஸ் பேஸ்ட்டு கிரெடிட் சிஸ்டம்) 
என்ற முறை கொண்டு வரப்பட உள்ளது. பி.எஸ்சி. 
பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிக்கும் 
மாணவர்கள் பி.காம் பாடத்தில் கணக்குப்பதிவியலில் 
உள்ள ஏதாவது ஒரு பாடத்தை கூடுதலாக படிக்க 
விரும்பினால் அதனையும் சேர்த்து படிக்க முடியும்.

அவ்வாறு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடித்து பட்டம் வழங்கும் போது 4 அல்லது 6 ‘கிரெடிட்’ என்ற பெயரில் கூடுதலான மதிப்பெண் வழங்கப்படுகிறது. அவ்வாறு 3 ஆண்டுகளில் 140 ‘கிரெடிட்’ மதிப்பெண்கள் பெறும் பட்டதாரி படிப்பு மாணவர்களுக்கும் 91 ‘கிரெடிட்’ மதிப்பெண் பெறும் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கும் கூடுதலாக பி.ஏ., மற்றும் எம்.ஏ. பட்டம் வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் பட்டப்படிப்புகளில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.

அஞ்சல் வழி கல்வியில் மாற்றம்

அதேபோன்று அஞ்சல் வழி கல்வி முறையிலும் சில மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. வேலை பார்த்துக் கொண்டே அஞ்சல் வழி மூலம் கல்வி பயின்று வருபவர்கள், வேலையை துறந்துவிட்டு கல்லூரியில் சேர்ந்து நேரடியாக (ரெகுலர்) வகுப்பில் சேர்ந்து படிக்கவும், நேரடியாக படித்து வருபவர்களுக்கு திடீரென்று வேலை கிடைத்து விட்டால், அவர்கள் அஞ்சல் வழியில் சேர்ந்து படிக்கவும் வசதி அளிக்கும் புதிய முறையும் கொண்டு வரப்பட உள்ளது.

இந்ததிட்டம் மூலம் மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு செல்லும் முறை தவிர்க்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்த 3 திட்டங்களையும் 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதன்முறையாக இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்