யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/6/18

ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள மாவட்டத்திற்கு முன்னுரிமையில் மாறுதல்: பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு!

அலுவலர்கள் பணியிடங்கள் கல்வித்துறை உத்தரவுக்கு காத்திருப்பு நிர்வாக மாற்றத்தில் குழப்பம்

தமிழகத்தில் சீரமைக்கப்பட்ட கல்வித்துறை நிர்வாகம் இன்றுமுதல் (ஜூன் 1) செயல்படவுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கல்வி அலுவலக பணியிடங்களுக்கான உத்தரவு வெளியாகாததால் குழப்பம் 
ஏற்பட்டுள்ளது.தொடக்க, மெட்ரிக் இயக்குனரகங்களுக்கு கீழ் இயங்கிய பள்ளிகள், அலுவலகங்கள் கல்வி இயக்குனரின் கீழ் செயல்படும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டது. அனைத்து பள்ளிகளும் முதன்மை கல்வி (சி.இ.ஓ.,) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,) கட்டுப்பாட்டில் வருகின்றன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டு டி.இ.ஓ.,க்களாக மாற்றம் செய்யப்பட்டன.இந்நிலையில் சி.இ.ஓ., டி.இ.ஓ., மற்றும் பிரிக்கப்பட்ட கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. ஆனால் அதற்கான உத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அலுவலக பணியிடங்கள் நிர்ணயத்திற்கு உத்தரவு வராததால், முழு அளவில் சீரமைக்கப்பட்ட நிர்வாகம் இன்று முதல் செயல்படுவதில் சிக்கல் நீடிக்கும். மெட்ரிக், தொடக்க கல்வி அலுவலகங்களில் ஏற்கனவே பணியில் இருந்த கண்காணிப்பாளர், பள்ளி துணை ஆய்வாளர், டி.இ.ஓ., நேர்முக உதவியாளர் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான பணியிடம், தற்போது இவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் இருந்தும் பணியாற்ற முடியாத மனவேதனையில் உள்ளனர், என்றார்.

40 தலைமை ஆசிரியர் ஒரே நாளில் ஓய்வு

தர்மபுரி மாவட்டத்தில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 40 பேர், நேற்று ஓய்வு பெற்றனர்.

உதவி தலைமை ஆசிரியர், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக செயல்பட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

*தமிழகம் முழுவதும், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தர்மபுரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில், 100 மேல்நிலை, 112 உயர்நிலை, 837 நடுநிலை, 325 தொடக்கப் பள்ளிகள் உள்ளன

*இவற்றில், 19 மேல்நிலைப் பள்ளி, நான்கு உயர்நிலைப் பள்ளி, 17 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என, மொத்தம், 40 பேர், நேற்று ஓய்வு பெற்றனர்.இதையடுத்து, அந்தந்த பள்ளிகளில், உதவி தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

*தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், பதவி உயர்வுக்கான பட்டியலில், முதல் இடத்தில் உள்ள ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக செயல்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம் நாளையுடன் முடியுது அவகாசம்

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு, நாளையுடன் முடிகிறது. இதற்கு மேல் அவகாசம் இல்லை என்பதால், விரைந்து பதிவு செய்ய, மாணவர்கள் 
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, தமிழக அரசு நடத்தும், கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். 2017 வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிவதாக அறிவிக்கப்பட்டது. துாத்துக்குடி கலவரத்தால், இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால், தென் மாவட்ட மாணவர்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், கவுன்சிலிங் பதிவுக்கான அவகாசம், நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நேற்று வரை, 1.39 லட்சம் பேர் பதிவு செய்துஉள்ளனர். நாளை நள்ளிரவு, 11:59 மணியுடன், ஆன்லைன் பதிவு முடிய உள்ளது. எனவே, இதுவரை பதிவு செய்யாதவர்கள் விரைந்து பதிவை முடித்து கொள்ளும்படி, அண்ணா பல்கலைஅறிவுறுத்தியுள்ளது

பகுதி நேர பி.இ., நாளை கலந்தாய்வு

பகுதி நேர, பி.இ., -- பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நாளை நடக்கிறது.மாநிலத்தில், ஒன்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பகுதி நேர, பி.இ., -- பி.டெக்., படிப்புகளுக்கு, 
1,465 இடங்கள் உள்ளன. இக்கலந்தாய்வுக்கு, 725 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பங்கேற்கும் அனைவருக்கும், இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.நாளை காலை, 7:00 மணியளவில், ஜவுளி மற்றும் சிவில் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு துவங்கவுள்ளது.கலந்தாய்வு செயலரான, கோவை, சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் செல்லதுரை கூறியதாவது:பகுதி நேர கலந்தாய்வு, ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும். தகுதியுடைய, 725 பேர் பங்கேற்க உள்ளனர்.காலை, 7:00 மணியளவில், ஜவுளி, சிவில் படிப்புகளுக்கும், 9:30 மணிக்கு மெக்கானிக்கல் பிரிவுக்கும், மதியம், 2:00 மணியளவில், இ.இ.இ., --- இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடக்கும். தரவரிசை பட்டியல் படி, குறிப்பிட்ட சமயத்தில், மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

5 ஆண்டு சட்டப்படிப்பு: இன்று முதல் விண்ணப்பம்

ஐந்து ஆண்டு சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது.

தமிழ்நாடு, அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில், 11 சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்பில் சேருவதற்கான, விண்ணப்ப பதிவு, மே, 28ல் துவங்கியது.இந்நிலையில், ஐந்தாண்டு ஹானர்ஸ் அல்லாத சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது. இன்று முதல், 29ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து தரலாம்.

இந்த ஆண்டு முதல், ஆன்லைனிலும் சட்டப் படிப்பு விண்ணப்ப பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் விருப்பம் இல்லாதவர்கள், சட்ட கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து தரலாம் என, அம்பேத்கர் சட்ட பல்கலை அறிவித்து உள்ளது.

1/6/18

வீடு வீடாக சென்றது வீணா? - அரசின் அறிவிப்பால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி...










தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய  குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம், அதனால்  அரசுப்பள்ளிக்கு வர  வேண்டியவர்களை தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கனும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. 

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால்,  புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால்  தலைமையாசிரியர்  மற்றும் ஆசிரியர்கள் அதற்கான காரணம் கூற வேண்டுமாம் இப்படியும் ஒரு  ஆணை..

தனியார் பள்ளியில் அரசே சேர்க்க ஆணையிடுகிறதெனில் விடுமுறை  நாட்களில் மாணவர்களை சேர்க்க வீடு வீடாக சென்று அரசு பள்ளியில் சேர்க்க  சொல்லி சேர்க்கை பேரணிகள்  பிரச்சாரங்கள் செய்வதெல்லாம் வீணா. 


தனியார்  பள்ளிகளைவிட அரசு பள்ளிகள் சிறந்து விளங்கினாலும் தனியார் பள்ளிகளைவிட  அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினாலும் கற்பித்தாலும், கற்றல்  கற்பித்தல் பணிகளுக்கு சொந்த பணத்தை போட்டு சில வசதிகளை அரசை  எதிர்பாராமல் தாமே உருவாக்கிக்கொடுத்தாலும் தனியார் பள்ளிகளின் மீதுள்ள  மோகத்தால்  பணமுள்ளவர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்லும் இன்றைய  காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்த முடியாத  பணமில்லாதவர்கள் வசதியற்றவர்கள் தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். 

அவ்வாறு வருபவர்களையும் இந்த அரசு தடுக்கின்ற வகையில் நீ உன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை அரசே தனியார் பள்ளிகளுக்கு  பணத்தை செலுத்தும் என்று கூறுவது ஏற்புடையதா .எங்கேயாவது இப்படி நடக்குமா?? 

தனியார் பள்ளியில் மாணவர்கள்  சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்  என்றும் ஒரு ஆணை. அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் அதற்கான காரணம் கேட்கப்படும்  என்றும் ஓர் ஆணை.. இரண்டு ஆணைகளையும் போடுவதும் ஒரே நபர்!!! என்னன்னு சொல்றது இதை..



தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு செலுத்தும் பணத்தை அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு  பயன்படுத்துமேயானால்
அரசு பள்ளி நலன் பெறுமே!! தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை அரசு பள்ளிகளில் இந்த அரசால் ஏற்படுத்தி தர இயலாதா.. 

பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பல தனியார் பள்ளிகளில் போதிய வசதிகளே இல்லாத பள்ளி. அப்பள்ளிகளைவிட கற்றல் கற்பித்தலில், நம் பள்ளி 100% உயர்வானது.  நம் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் போதிய கல்வி தகுதியோடு உள்ளவர்கள். கற்றல் கற்பித்தலில் சிறந்தவர்கள். 


ஆனால் தனியார் பள்ளிகளில் அப்படியா உள்ளது.. தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது. 10 &12ம் வகுப்பு தேர்ச்சியா.. அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா.. வாசித்தல் திறன் ஆய்வு உண்டா. 

அரசுப்  பள்ளிகளில் பராமரிக்கும் ஏகப்பட்ட பதிவேடுகள் அங்குண்டா.. ABL SALM ALM முறைகள் உண்டா.. இங்கிருக்கும் நடைமுறைகள் அங்கு எதுவும் இல்லாதபோது அரசு பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடுவது எவ்வாறு.. என்ன அரசோ.. என்ன ஆணையோ...

2018-19 கல்வியாண்டு கல்வி செயல்பாடுகள்:

   
 ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தபின் செய்யவேண்டியவை:
🔹SABL இல்லை.                

🔹படிநிலை(Ladder) இல்லை                           

🔹 அடைவுத்திறன் அட்டவணை இல்லை.    

🔹1 முதல் 3 வகுப்புகள் PILOT METHOD.                        

🔹4 முதல் 5 வகுப்புகள் SALM METHOD.            

 🔹ஈராசிரியர் பள்ளிகள் 1 -3 வகுப்புகள் -ஒருவர்      4-5 வகுப்புகள்-ஒருவர்            

🔹மூன்றாசிரியர் பள்ளிகள்                      1-2 வகுப்புகள் ஒருவர்        3-4 வகுப்புகள் ஒருவர்   5 ம் வகுப்பு ஒருவர்.        3ம் வகுப்பில் மட்டும்  எண்ணிக்கை அதிகமாக இருப்பின் - ஒருவர்                            4-5 வகுப்பில் ஒருவரும் எடுக்கலாம்.                      

🔹 1 முதல் 3 வகுப்புகள் வாரந்தோறும் பாடக்குறிப்புகள் எழுத வேண்டும். (Pilot Method)                          

🔹9.30 முதல் 11.00 மணி வரை முதல் பாடவேளை                  

🔹11.10 முதல் 12.40 மணி வரை இரண்டாம் பாடவேளை                  

🔹1.15 முதல் 1.50 மணி வரை கல்வி இணைசெயல்பாடுகள்

🔹2.00மணி முதல் 3.20 மணி வரை மூன்றாம் பாடவேளை                  

🔹3.30 மணி முதல் 4.10 வரை யோகா,Phonetics CD பயன்பாடு.              

🔹    ஒவ்வொரு பாடத்திற்கும் துணைக்கருவிகள் கட்டாயம்.                         

🔹4 முதல் 5 வகுப்புகள் SALM முறைப்படி பாடக்குறிப்புகள் வாரந்தோறும் எழுத வேண்டும்.               
    🔹CCE சார்ந்த அனைத்து மதிப்பீடுகளும் உண்டு.( FA(a) , FA(b),SA )

பிளஸ் 1 தேர்வில், 'ஜீ பூம்பா' தேர்ச்சி எகிறியது எப்படி?

பிளஸ் 1 தேர்வில், வினாக்கள் மிக கடினம் என, மாணவர்கள் புலம்பிய நிலையில், 'ஜீ பூம்பா' மந்திரம்போல், தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகரித்துள்ளது.தமிழக பாடத்திட்ட மாணவர்கள், தேசிய அளவிலான 
போட்டி தேர்வு களில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, நீண்ட காலமாக உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு, முதல் முறையாக நடந்த பொது தேர்வில், வினாத்தாளில் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் இடம்பெற்றன. ஐ.ஐ.டி., நடத்தும், ஜே.இ.இ., மற்றும் மருத்துவ கவுன்சில் நடத்தும், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகள் போன்று, பிளஸ் 1 பொது தேர்வில், வினாக்கள் கேட்கப்பட்டன. அதனால், பெரும்பாலான மாணவர்கள், பதில் எழுத திணறினர்.வினாக்கள் கடினமாக இருந்ததாக, பெற்றோரும், ஆசிரியர்களும் கவலை தெரிவித்தனர். அதனால், சலுகை மதிப்பெண் தேவை என்றும், கோரிக்கை எழுந்தது. ஆனால், தேர்வுத் துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், பிளஸ் 1 தேர்வில், 91.3 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது, எப்படி நிகழ்ந்தது என, ஆசிரியர்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். 40 சதவீதத்துக்கும் மேல், மாணவர்களின் தேர்ச்சி பாதிக்குமோ என, விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள், அச்சத்தில் இருந்தனர். ஆனால், அனைத்துக்கும் நேர்மாறாக, தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வு முறையும், வினாத்தாள் முறையும் மிக கடினமாக இருந்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் முயற்சி, இறுதியில் மாறி விட்டதாக தெரிகிறது. வழக்கம்போல், அரசியல் ரீதியாக, தேர்ச்சி சதவீதம் காட்டப்பட்டதோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. விடை திருத்தத்தில் வராத மதிப்பெண், இறுதி பட்டியலில், அதிகம் வந்ததுபோல் தெரிகிறது.எனவே, மதிப்பெண்ணை பதிவு செய்வதில், 'டேட்டா என்ட்ரி' முறை பின்பற்றப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.பொது தேர்வு முறையில், எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மதிப்பீடு முறையும், மதிப்பெண்ணை இறுதியாக பதிவு செய்யும் முறையும், வெளிப்படை தன்மையுடன் நடந்தால் மட்டுமே, மாணவர்களின் சரியான கல்வித் திறன் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

பிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பிளஸ் 1 தேர்வில், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5ல் துவங்க உள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியானது. இதில், 8.7 சதவீதம் பேர் தேர்ச்சி 
பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணை தேர்வு எழுதலாம். அவர்களுக்கு, ஜூலை, 5 முதல் சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் தேதி, பின், அறிவிக்கப்படும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.பட்டியல் எப்போது?தேர்வு எழுதியவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், ஜூன், 4 முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். மேலும், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். அரசு தேர்வுத்துறையால், அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே, இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும், தனித்தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரும், சான்றொப்பம் அளித்தால் மட்டுமே, மதிப்பெண் பட்டியல் செல்லும். எனவே, மதிப்பெண் பட்டியலில் சான்றொப்பம் பெற வேண்டும்.மறுகூட்டல்பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், ஜூன், 1, 2 மற்றும், 4ம் தேதிகளில், பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.மொழி பாடம் ஒன்றுக்கு, தலா, 550 ரூபாயும், முக்கிய பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் மறுமதிப்பீடு தேவை என்றால், அவர்கள் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதை ஆய்வு செய்து, மறுமதிப்பீடு தேவை என்றால் விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் கேட்பவர்கள், மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்று, மறுமதிப்பீடு தேவையா அல்லது மறுகூட்டல் தேவையா என்பதை முடிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டல், மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் ஒப்புகை சீட்டை பாதுகாக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–

அரசுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் உடனடியாக வரும் ஜூன் மாதத்திலே மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம். அதிலும் தவறும் மாணவர்களுக்காக அவர்கள் பயின்ற பள்ளியிலேயே மீண்டும் பயில்வதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது.

தற்போது தரப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள், எளிதில் தீப்பிடிக்காத, கிழியாத வகையில் உள்ளன. ரூபாய் நோட்டுகளில் இருப்பதுபோல 11 ரகசிய குறியீடுகள் கொண்ட பாதுகாப்பு அம்சங்கள்கூடிய மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மாணவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

1, 6, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2018–2019–ம் ஆண்டுக்கான புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் என்ற இலக்கை, இந்த ஆண்டிலேயே அடையத் தீர்மானித்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்களில் உள்ள தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றை ஒரே தாளாக மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது.

நீட் தேர்வுக்கு 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் 9 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 26 நாட்களுக்கு, ஸ்பீடு, சைதன்யா, ஆலன் போன்ற சிறந்த நிறுவனங்களுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், மருத்துவ நுழைவுத் தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 150 நடுநிலைப் பள்ளிகளும், 100 உயர்நிலைப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டன. இந்த ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் தொகை அதிகமுள்ள பள்ளிகள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் 20 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் 2,373 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

128 பள்ளிகளுக்கு ரூ.1 கோடியே 92 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 1 லட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

அதுபோல 192 ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது.

8 முதல் 12–ம் வரை பயிலும் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய ஒவ்வொரு துறையிலிருந்தும் தலா 25 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 112 பேர் ரூ.3 கோடி செலவில் வெளிநாட்டு கல்விச்சுற்றுலா அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தற்போது முதல்கட்டமாக, பின்லாந்து அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 50 மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பின்லாந்து, சுவீடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதற்காக அதன் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு 68 மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக வசதிக்காக 120 மாவட்ட கல்வி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.

ரூ.200 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், தளவாடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், குடிநீர்வசதி மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தூய்மைப் பணிகளை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிக் கல்வி இயக்கக டி.பி.ஐ. வளாகத்தில் எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் பெயரில், ஒரு லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.39.90 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கல்வித் துறைக்கான கட்டிடம் கட்டும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

3 ஆயிரத்து 90 உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளுடனும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகளுடனும் கூடிய ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.60 கோடி செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசுப் பள்ளிகளில் உலகத்தர தொழில்நுட்பத்தோடு ரோபாடிக் பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்க பரிசீலித்து வருகிறது.

கடைசியாக எடுத்த புள்ளி விவரத்தின்படி, இந்தியாவின் எழுத்தறிவு நிலை 74.04 சதவீதமாகும். தமிழகத்தின் எழுத்தறிவு சதவீதம் 80.3 ஆகும். தற்போதும்கூட, பள்ளிகளே இல்லாத பகுதிகளில் 20 புதிய தொடக்கப் பள்ளிகள் திறந்து அரசு சாதனை புரிந்துள்ளது. 2020–ம் ஆண்டிற்குள் நூலகங்களில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகத் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பதிலளித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:–

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகைப் பதிவு, பயோமெட்ரிக் என்ற தொட்டுணர் கருவி மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும்.

பாடத் திட்டத்துடன் திறன் சார்ந்த கல்வியைப் பெறும் வகையில் 2018–19–ம் ஆண்டில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும்.

1896–ம் ஆண்டு கட்டப்பட்டு, 122 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கன்னிமாரா பொதுநூலகம் புதுப்பிக்கப்படும். காஞ்சீபுரம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்ட நூலகங்கள் நவீன வசதியுடன் கூடிய மாதிரி நூலகமாக மேம்படுத்தப்படும்.

மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு ஈர்க்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அனைத்து ஒன்றியத் தலைமையிடங்களிலும் மாணவர்களுக்கான ஆதார் சேர்க்கை மையங்கள் உருவாக்கப்படும்.

ஒரு மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 32 மாவட்டங்களில் விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும். மாவட்ட மைய நூலகங்களில் பார்வையற்ற வாசகர்களுக்கென்று தனிப்பிரிவு தொடங்கப்படும்.

அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்படும்.

பேராசிரியர்களின் வழிகாட்டுதலைப் பெறும் வகையில் உயர் கல்வி நிறுவனங்களுடன் அரசுப் பள்ளிகள் இணைக்கப்படும்.

பிற மாநில அறிவியல், தொழில்நுட்பம், கல்வி சார்ந்த தேசிய நிறுவனங்களைப் பார்வையிட தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் கீழ், ரூ.160 கோடி திட்ட மதிப்பீட்டில், செயல்படுத்தப்படும் கற்கும் பாரதம் என்ற திட்டத்தின் நிதி விவரங்களை நிர்வகிக்க உதவிக் கணக்கு அலுவலர் என்ற பணியிடம் உருவாக்கப்படும்.

படித்த இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்களைப் பெறுவதற்காக மென்பொருள் உருவாக்கப்படும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை மாவட்ட நூலகங்களில் வைபை வசதி ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைத்தொடர்பு மூலம், கல்வி சார்ந்த காணொலிக் காட்சிகள் ஒளிபரப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி-2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

பொது மாறுதல் விண்ணப்பம் 07-06-2018 - க்குள் அலுவலகத்தில் தர வேண்டும்.- பொது மாறுதல் 2018-2019 விண்ணப்பித்தல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!





31/5/18

கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்

ஒரு மாதமாய்  மௌனம் காத்த பள்ளிப்பூங்கா நாளை முதல் பேசப்போகிறது

கரும்பலகைகள் முகம்கழுவி தயாராய் இருக்கும் வண்ணப்பொட்டு இட்டுக்கொள்ள

வகுப்பறைகள் உங்களை சுவாசிக்க காத்திருக்கும் 
விளையாட்டு மைதானமோ பசுமை போர்த்தி துள்ளி குதிக்கும்..

கல்வி அரும்புகளே
கட்டிக்கரும்புகளே
உங்கள் புன்னகைக்கூடம் நாளை முதல் இந்த பள்ளிக்கூடம்

ஒருபடி முன்னேற்றம் கண்ட உங்களுக்கு வெற்றிப்பூங்கொத்து..
தவறிய உள்ளங்களுக்கு தாங்கி தைரியம் சொல்லும் நம் பள்ளி உண்மையில் செம கெத்து

யாவும் உண்டு இங்கு
கல்வியோடு ஒழுக்கம் அறி
எதிர்கால வாழ்வுக்கு அது ஒன்றே சரி
அனைவரிடமும் அன்பு காட்டு 
உலகம் உய்ய அதுவே உயர்நெறி

ஆசான்களே
புதுமைகளின் விளைநிலங்களே
ஓய்வறியா சூரியன்களே
அறிவால் அகிலமாள கற்பிக்கிற கற்பக தருக்களே

சிலையைத் துடைத்து பொலிவாக்குவதல்ல உமது பணி
உடைந்த கல்லையும் கலையாக்குவதே கல்விப்பணி

நேரம் தாண்டி உழைப்பதை உலகம் பெரிதனப்  பேசாது
நேரம் தவறி பள்ளி வந்தால் விமர்சிக்கும் வாய்கள் கூசாது

காலம் அறிவோம்
கடமை உணர்வோம்
மாணவர்களின் கதாநாயகர்கள் நீங்கள்
உங்களிலிருந்தே
உயர் எண்ணச் சிறகுகளை மாணவர்கள் ஏந்தி பறப்பர்..

உங்கள் உள்ளங்களின் ஏழைகளின் வலியை ஏற்றி அவர்களுக்கு எதிர்காலத்திற்கான நல்வழிதனைக் காட்டுங்கள்..

இவ்வாண்டு
பயணம் புதிது பாடதிட்டமும் புதிது
பழமைகளை புறந்தள்ளி புதுமைகளை படைக்க காத்திருக்கும் உங்களுக்கும் என் நெஞ்சம்நிறை வாழ்த்துகள்..

இயந்திர உலகில் இதயங்களோடு பேசுகிற நீங்களே பாக்கியவான்கள் 
புதிய உலகம் பிறக்கட்டும் உங்களில் இருந்து..

இனிய கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்

நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்- ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் - Important Points Highlights

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல்
தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!

4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்
 ஒன்றியத்திற்குள்

 (புதிய) கல்வி மாவட்டத்திற்குள்

 மாவட்டத்திற்குள் (கல்வி மாவட்டங்களிடையே)

 மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதல் வழங்கும் அதிகாரம்

 ஒன்றியம் & கல்வி மாவட்டத்திற்குள் : மாவட்டக் கல்வி அலுவலர்

 மாவட்டத்திற்குள் : முதன்மைக்கல்வி அலுவலர்

 மாவட்டம் விட்டு மாவட்டம் : இயக்குநர்.
சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு

 50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)

 50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)

 1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (V)

 5 வருடங்களுக்குக் கீழ் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (VIII)

 1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது *5 ஆண்டுகள் / அதற்கும்மேல்* பணிபுரிந்தோர் (X)
பிறமுக்கிய கூறுகள்

 1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.

 1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.

 மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும்.

 2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.

 2018-19 முதல் முன்னுரிமை விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.

 இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 மலைச் சுழற்சி நடைபெற வேண்டும்.

 அலகு விட்டு அலகு இல்லை.

 மாநிலச் சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, மாறுதல் & பதவி உயர்வில் வெளிமாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.

 ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை.
வழக்கத்திற்கான மாற்றம்

 நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.

அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்ற வல்லுநர் குழு அமைப்பு

அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுத்திட மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் முன் வைக்கப்பட்ட பள்ளி கல்வி துறை கொள்கை விளக்கு குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு பொது பாடத்தின்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மாநில பள்ளிக்கல்வி பொதுப்பாட சட்டம் 2010-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 6 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கட்டணத்தை கல்வி கட்டணக் குழு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பள்ளியால் நிர்ணயிக்கப்ட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த ரூ.63,86,290 ரூபாயை மாணவர்களிடம் திரும்ப வழங்க கட்டண நிர்ணய குழு ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது

பள்ளிக்கல்வித்துறை 2018 - 2019 ஆம் கல்வியாண்டு வாராந்திர செயல்திட்டம் வெளியீடு

NMMS தேர்வில் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

பள்ளி ஆய்வின் போது CEO, DEO, BEO, EDC, SSA APO, BEO, BRC SUPERVISOR, BRTE, DI, DPEI, ECO ஆகிய கல்வித்துறை அதிகாரிகளின் பணிகள் என்ன? - செயல்முறைகள்

ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, உக்க் - உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

மொழி பாடங்கள் தாள் 1,  தாள்2 என்ற முறையை மாற்றி‌ ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.

*முதல்வரின் உத்தரவுபடி அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு ரூ.9 கோடியில் பயோமெட்ரிக் முறை திட்டம் நிறைவேற்றப்படும்*


*ரூபாய் 9 கோடி செலவில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் இல்லாமல் அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கப்படும்

*அரசு பள்ளிகளில் LKG, UKG  வகுப்புகளை துவக்க நடவடிக்கை.

*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில்  காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.
  
*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.

*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில்  வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

*கன்னிமாரா நூலகம் புதுப்பிக்கப்படும்

சட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். 

சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.