யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/6/18

2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் (1 முதல் 410முடிய)

1.6.2017 ல் கலந்தாய்வுமுலம் பணயில் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த ஆண்டு நடக்கும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்புக்கள் !

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவிப்புக்கள் வரலாம்.ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை தயார் செய்து  CEO அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.பலமாவட்டங்களில் விண்ணப்பங்கள் பெறபட்டுள்ளது.
இவண்
ந.கமலக்கண்ணன்
மாவட்டசெயலாளர்
TNPGTA
KANCHI

6/6/18

இன்ஜி., கவுன்சிலிங் ரேண்டம் எண் வெளியீடு

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், 'ரேண்டம்' எண், இன்று வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க, இம்மாதம், 2ம் தேதியுடன்விண்ணப்ப பதிவு 
முடிந்தது. இதில், 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2017ஐ விட, இந்தாண்டு, 19 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று காலை, 9:00 மணிக்கு, அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஒரே, 'கட் - ஆப்' இருக்கும் மாணவர்களுக்கு, இந்த ரேண்டம் எண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

நீட்' தேர்வில் சென்னை மாணவிக்கு, 12ம் இடம்; கடந்த ஆண்டை விட தமிழகம் அதிக தேர்ச்சி

நீட்' தேர்வில், தேசிய அளவில், பீஹார் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா மாணவர்களும், அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா, 12ம் இடம் பெற்றுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வில், 13 லட்சம் பேர் பங்கேற்று, 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு, அதிகபட்சமாக, 691 மதிப்பெண் எடுத்து, பீஹார் மாணவி, கல்பனா குமாரி, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த, ரோஹன் புரோஹித், டில்லியை சேர்ந்த, ஹிமாஷு ஷர்மா ஆகியோர் இரண்டாம் இடமும், டில்லியை சேர்ந்த, ஆரோஷ் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த, பிரின்ஸ் சவுத்ரி ஆகியோர், 686 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
கீர்த்தனா சாதனை :

தமிழக மாணவி, கே.கீர்த்தனா, 676 மதிப்பெண் பெற்று, 12ம் இடம் பெற்றுள்ளார். இவர், சென்னை கே.கே.நகரில் உள்ள,பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவி.

'சி.பி.எஸ்.இ., பாடத்தில் இருந்து, அதிக கேள்விகள் இடம்பெற்றதும், இரண்டாண்டுகளுக்கு மேல், தொடர் பயிற்சி எடுத்ததும், வெற்றிக்கு காரணம்' என கீர்த்தனா கூறினார்.

தமிழக அரசு பள்ளிகளில், மூன்று மாதம் சிறப்பு பயிற்சி பெற்ற, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். தமிழக பாட திட்டத்தில், சென்னை கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளி மாணவர் சரண், எந்த பயிற்சியும் இல்லாமல், நீட் தேர்வில், 416 மதிப்பெண் எடுத்துள்ளார்.

மாநில அளவிலான தேர்ச்சியை பொறுத்தவரை, 74 சதவீதத்துடன், ராஜஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது. டில்லி, 74; ஹரியானா, 73 சதவீதம் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. ஆந்திரா மாநிலம், 73 சதவீதம் பெற்று, நான்காம் இடம் பெற்றுள்ளது.

மாநிலங்கள் அளவில், அதிக எண்ணிக்கையில், 1.77 லட்சம் மாணவர்கள், நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா மாநிலம், 40 சதவீதத்துடன், 34ம் இடம் பெற்றுள்ளது. தமிழகம், 33ம் இடம் பெற்றுள்ளது. 

கர்நாடகா, 64 சதவீதத்துடன், ஒன்பதாம் இடமும்; தெலுங்கானா, 69 சதவீதம் பெற்று, ஆறாம் இடமும், கேரளா, 67 சதவீதத்துடன் ஏழாம் இடமும்; புதுச்சேரி, 40 சதவீதம் பெற்று, 32ம் இடமும் பெற்றுள்ளன.

மற்ற மாநிலங்களில், பல ஆண்டுகளாக, மருத்துவ நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எழுதி வந்தனர். தமிழக மாணவர்கள், இந்த ஆண்டு தான் முழுமையாக நுழைவு தேர்வு எழுத பதிவு செய்தனர். 

முதல் ஆண்டில், பெரிய அளவில் பயிற்சி எடுக்காமல், 40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, இந்த ஆண்டு முதன்முதலாக, நீட் தேர்வில் பங்கேற்ற, புதுச்சேரி மற்றும் மஹாராஷ்டிரா மாணவர்களும், 40 சதவீதமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் நுழைவு தேர்வுக்கு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி, நுாற்றுக்கணக்கான மாணவர்கள், மருத்துவ நுழைவு தேர்வுக்கான, தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். 

தமிழகத்தில், 2017ல், 32 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அதை விட, 13 ஆயிரம் அதிகமாக, 45 ஆயிரம் பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

SCHOOL EDUCATION DEPATMENT-TAMILNADU-CENTRALLY SPONSORED SCHEME -REGISTRATION FORM 2018-19 FOR NMMS EXAM PASSED STUDENTS

அதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன்! இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம்!

அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு 
இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் கழக நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிக்கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 100 வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இதேபோல, 1000 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு வணிகவியல் மாணவர்களுக்கு 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் சிஏ தொடர்பான வழிகாட்டுதல்கள், பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை இந்த திட்டம் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தவில்லை என்றும், இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். a

FLASH NEWS:DOWNLOAD-GPF ACCOUNT STATEMENTS FOR THE YEAR 2017-2018 RELEASED

5/6/18

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்வான சுமார் 45"ஆயிரம் மாணவர்களும் மருத்துவராகி விடுவார்களா..



என்றால்! முடியவே முடியாதென்பதே உண்மை!

வழக்கம்போல் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் (40%) தேர்வான தமிழகம் மட்டுமல்ல..
இந்தியா முழுவதும் தேர்வான 
யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்

வழக்கம்போல் விற்பனை சூடுபிடித்து ஒருகோடி ரூபாய்வரை மீண்டும் விற்க்கப்படும் டாக்டர் சீட்..
சுமார் 4000"முதல் 5000வரை மட்டுமே இங்கு காலியிடம் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏன்?
45"ஆயிரம்பேரை தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிக்கவேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்தால்
மருத்துவசீட் பலகோடிக்கு விற்கப்போவது நான் சொன்னது சரியாகப்படும்

இங்குமட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒருலட்சத்தை மட்டுமே எட்டிய காலியிடங்களுக்கு
பல லட்சம்பேரை பாஸ் செய்ய வைத்தது ஏன் என்றும் சிந்தித்தால் 
எளிதாகப்புரியும்

OBC BC FC 
110/760 
SC ST
90/760
இவ்வளவு குறைவான மதிப்பென் எடுத்தவர்
தேர்தவர் என்று முடிவுகளை அறிவிக்க
 காரணம் என்ன?
இனி யாராவது
கோடிகளை கொள்ளையடித்த
தனியார் கல்லூரிகளுக்கு மோடி ஆப்பதடித்தார் என்றால்...

இந்த விளக்கத்தை சொல்லி
திருப்ப ஆப்படியுங்கள்..

இத்தேர்வு முடிவின் மூலம் தெரியவந்தது என்னவென்றால்
பிராந்திய மொழிகளில் தேர்வெழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம்   
இந்தியா முழுவதும் 1.86%/ மட்டுமே

குறிப்பாக தமிழ்வழி எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 0.86% மட்டுமே
இவர்களும் கட்ஆப்பில் மற்றவர்களோடு ஓப்பிடும்போது 
ஒரு அரசுப்பள்ளி தமிழ்வழி மாணவனுக்கு கூட இடம் கிடைக்காது என்பது எதார்த்த களநிலவரம்

இதைத்தான் சொன்னோம்
கிராமப்புர மாணவர்கள் இனி மருத்துவராக முடியாது என்றும்
கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவரும் கிடைக்கமாட்டார்கள் என்று!

DSE PROCEEDINGS-NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை கோருதல் சார்பான இயக்குநர் அறிவுரைகள்.


1, 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது: வருகிறது சட்ட மசோதா

பள்ளிகளில் 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்ட மசோதா கொண்டுவரப்படவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
 பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைக்கவும், 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே 30-ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், ஜாவடேகர் இவ்வாறு கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
 சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன். அந்த உத்தரவை ஆய்வு செய்து வருகிறோம்; தேவையான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்வோம். 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டுவர உள்ளோம்.
 குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் 2009-க்கு இணங்கியதாக இருக்கும் இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தடையின்றி நிறைவேறும் என்று நம்புகிறோம். குழந்தைகள் குதூகலத்துடன் கல்வி பயில வேண்டும் என்பதே நமது விருப்பம். கல்வி கற்பதில் அவர்களுக்கு எந்த நெருக்கடியும் அளிக்கப்படக் கூடாது.
 உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி, குழந்தைகளுக்கான நெருக்கடியை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். ஒரு பள்ளிக் குழந்தையின் புத்தகச் சுமையானது, அந்தக் குழந்தையின் எடையில் 10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கடந்த மாதம் 30-ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

ஜிப்மர் MBBS நுழைவுத் தேர்வு: 1.54 லட்சம் பேர் எழுதினர்

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுவை ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் 1,54,491 பேர் தேர்வு எழுதினர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள், அதன் காரைக்கால் கிளையில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்ப அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 3-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 751 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை, மதியம் என இரு பிரிவுகளாகத் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற முதல் பிரிவு தேர்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களில் 81,886 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற 2-ஆவது பிரிவு தேர்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களில் 72,605 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இரு பிரிவுகளாக நடைபெற்ற தேர்வில் மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் கலந்து கொண்டனர். இது 78.12 சதவீதமாகும்.
புதுச்சேரியில் 90 சதவீதம் பேர் பங்கேற்பு: புதுச்சேரியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, புதுச்சேரி பொறியியல் கல்லூரி, ஆல்பா பொறியியல் கல்லூரி, கிறிஸ்ட் பொறியியல் கல்லூரி, கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி உள்பட 7 மையங்களில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
முதல் பிரிவு தேர்வில் 901 பேரும், 2-ஆவது பிரிவு தேர்வில் 895 பேரும் என மொத்தம் 1,796 பேர் கலந்து கொண்டனர். இது 90.02 சதவீதமாகும்.
தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில், ஆதார் அட்டை மூலம் விவரங்கள் சரிபார்ப்பு, பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு, புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தரைதளத்திலேயே தேர்வு எழுத வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்தத் தேர்வு முடிவுகள் வருகிற 20-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெறும். வகுப்புகள் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கும்.
இதுதொடர்பாக கூடுதல் விவரம் அறிய www.jipmer.puducherry.gov.in / www.jipmer.edu.in என்ற இணையதளத்தை மாணவ, மாணவிகள் பார்வையிடலாம்.ர்

வாட்ஸ் ஆப், பேஸ்புக் பயன்படுத்தினால் வரி:

கம்பாலா : உகாண்டா நாட்டில் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றை பயன்படுத்தும் நபர்களுக்கு வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் படி இந்த சமூகவலைதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்துபவர்கள் நாள் ஒன்றிற்கு 200 சில்லிங் (ரூ. 3.54) வரிகட்ட வேண்டும்.

சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான தகவல், வதந்திகள் பரப்புவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

6- தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஜூன் -15 க்குள் வெளியாகும் என டி.என்.பிஎஸ்சி தகவல் !!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5mbfkImWFa-kkiuWUe_i9cbDslYqp1ByNvJpmhvvyflIbAYu7qzGR3s4Oq_jYza0CAoQnTQkvZzU_iQzmGTAFWGLH2V2DQEGlOQHkW968tDrLHVI_eZJHZur1aAJoAvHhKci85pi0WzU/s1600/IMG-20180603-WA0052.jpg

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.259 கோடி வினியோகம்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஏப்., 19ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலனாக, 259 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டு உள்ளது.அரசுத்துறையில், 2003க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள, ஐந்து லட்சம் பேருக்கு, மாத ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவை இல்லை. 

பணிக்காலம் முடிந்ததும், மொத்த, 'செட்டில்மென்டாக' பணப்பலன் வழங்கப்படுகிறது.இதன் காரணமாகவே, இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி, போராட்டங்கள் தொடர்கின்றன. 
இது குறித்து, தகவல் உரிமை சட்டத்தில் தகவல் பெற்ற ஆசிரியர், பிரெட்ரிக் கூறுகையில், ''2003க்கு பின் பணியில் சேர்ந்து, மரணம், ஓய்வு, பணித்துறப்பு பிரிவுகளில், ஓய்வூதிய பலன்கள் கோரி, 8,323 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 6,478 பேருக்கு, 258.91 கோடி ரூபாய் ஓய்வூதிய பணப்பலன் வினியோகிக்கப்பட்டுள்ளதாக, ஆர்.டி.ஐ., மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன. 
''மேலும், கருவூலத் துறையில், துறைவாரியான தகவல்கள் இல்லை என்றும், மாதந்திர ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆணைகள் பெறப்படவில்லை என்றும், தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன,'' என்றா

கல்வித்துறை அலுவலகங்களில் களையெடுப்பு : 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு சிக்கல்

பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களில் அலுவலர்கள் மட்டுமே அடிக்கடி மாற்றப்படுகின்றனர். அவர்களுக்கு கீழே பணிபுரியும் சிலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். 
அவர்கள் ஆசிரியர்கள் இடமாறுதல், பணப்பலன் வழங்குதல், நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் அடிக்கடி தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது.இதனை தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், பள்ளி துணை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இருக்கைப் பணி கண்காணிப்பாளர், உதவியாளர், இளைநிலை உதவியாளர்களை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.

இதற்கான பணியை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருவதால், பணியாளர்கள் கலக்கமடைந்தனர்.

ஜூன் 11ல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணியிட மாறுதல் கவுன்சிலிங் :

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணியிட மாறுதல் கவுன்சிலிங், வரும், 11ம் தேதி துவங்குகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும் பணியிட மாறுதல் கவுன்சிலிங், மே மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டு, 15 நாட்கள் தாமதமாக, வரும், 11ல், துவங்க உள்ளது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன், 11லும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன், 12ம் தேதியும், கவுன்சிலிங் துவங்கும் என, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். 

இந்த கவுன்சிலிங், ஜூன், 21 வரை நடத்தப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள், அரசு பள்ளிகளிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் கிடைக்கும் என, கூறப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங்கிற்கு முன்னும், பின்னும், நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ள, கல்வித்துறை இயக்குனர்களுக்கு முழு அதிகாரம் அளித்து, பள்ளிக்கல்வித்துறை அரசாணையில், வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

MBBS படிப்புக்கு விண்ணப்பம் எப்போது?

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம், நீட் தேர்வு முடிவுக்கு பின், வினியோகிக்கப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,050 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், 456 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. மீதமுள்ள, 2,594 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு முடிவு, நாளை வெளியாக உள்ளது.இதனால், நடப்பாண்டு, மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என்ற, எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல் குறிப்பேடு, இதுவரை வழங்கப்படவில்லை; உடனே வழங்க, மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓரிரு நாட்களில்,தகவல் குறிப்பேடு சமர்ப்பிக்கப்பட்டு, அரசு ஒப்புதல் அளித்தபின், ஒரு வாரத்தில், விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என்றனர்.

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ கடின மற்றும் புதிய வார்த்தைகள்

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ கடின மற்றும் புதிய வார்த்தைகள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்காக அனைத்து பாடங்களும்.
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி FA(a) and FA(b) செயல்பாடுகள் 
இவை அனைத்தும் ஒரே கிளிக்.


...CLICK HERE TO - DOWNLOAD

Rule 9 cannot be INVOKED to promoted PG's*. பட்டதாரி ஆசிரியர் மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வருவதற்கு தகுதி உண்டு .பழைய நிலையில் தொடர HIGH COURT ORDER RELEASED.


4/6/18

ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா?



தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?

நல்ல வேலைக்கு போவா?

ஆங்கிலம் சரளமாக பேசவா?

குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??

ஏன்?
எதற்கு?
என்று சிந்தித்ததுண்டா??

Pre kg 25000 ல் துவங்குகிறது 
Lkg 40000
Ukg 50000
1st.60000
2ND 70000
3D. 80000
4TH 90000
5TH 100000
6TO8 1.20000
9TO10. 150000
11TO12 200000 லட்சம் ஆக மொத்தம்
9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.

சரி!
இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?

உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்

அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?

 ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவளித்து??

தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வரமுடியுமா?
சரி!
இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?

CBSE கல்லூரியிலா??
அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே??

அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான் இல்லையா?

இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,
மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?

இல்லை!
இல்லவே இல்லை!

இப்போது உங்கள் பிள்ளைகளோடு,அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?

பத்துலட்சத்திற்கு மேல் செலவளித்து படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் பிடிக்கவில்லையா?

இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?

 உங்கள் பிள்ளை சாதனையாளனா?

 இல்லை பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?

உங்களுக்கு தெரியுமா?

 TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதப்பேர் அரசுப்பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று?

TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?

 இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?

ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?

உங்களால் ஆனித்தரமாக எடுத்துக்கூற முடியுமா? CBSE ,மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?

அந்த பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்களாம் ??

இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே?

அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்??

வாருங்கள் குரல் கொடுப்போம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள்(உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் கடைநிலை அலுவலக ஊழியர்களின் பிள்ளைகள் வரை) அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம்.

அப்படி சட்டம் இயற்றுவார்களா?

இயற்றினால் என்ன நடக்கும்?

அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடனும், கலெக்டர் மகனுடனும் நம்பிள்ளைகளும் படிப்பார்கள்.

கட்டட வசதிகள் அதிகமாகும்.

 சத்துணவு சத்தான உணவாகும்.

 நவீன  முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.

நம் செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப்படும்.

சிந்திப்போம்!
மற்றவரின் சிந்தனையைத்தூண்டுவோம்! 

என்றும் அன்புடன்,

அரசு பள்ளி நலன் விரும்பி