உளவியல் பிரச்னைக்கு தீர்வு காண, குழு அமைக்கப்பட்டுள்ளது' என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார்.தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை: பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க, மாநில அளவில் பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழு கூட்டத்தில் சமூக, பொருளாதார வேறுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, சமூக ஆதரவின்மை, பெற்றோரின் மதுப் பழக்கம்,ஒழுக்கமின்மை,படிப்பில் போதிய கவனமின்மை உட்பட மாணவர்களின் பல்வேறு உளவியல் ரீதியான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன.தீர்வு காண ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு, தகுதியான ஒரு ஆசிரியரை பொறுப்பாசிரியராக நியமித்து உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். அவர்களுக்கு பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளி கல்வி இயக்குனருக்கு பாராட்டுக்களை நீதிமன்றம் தெரிவிக்கிறது'என்றார்.