யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/6/18

பள்ளி தரம் உயர்த்த நிபந்தனை !!! விதிகளை மாற்ற வலியுறுத்தல்!!!

'பள்ளிகளை தரம் உயர்த்த, பொதுமக்கள் பங்களிப்பாக,
குறிப்பிட்ட தொகையை
செலுத்த வேண்டியுள்ளது.
இந்தவிதிமுறையை நீக்க வேண்டும்,'' என, தி.மு.க., -
எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - மாணிக்கம்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி
ஒன்றியம், கருப்பட்டி உயர்நிலைப் பள்ளியை,
மேல்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: விதிமுறைகள்
பூர்த்தியாகாததால், தரம் உயர்த்த இயலாது.

மாணிக்கம்: விதிமுறைகளை பூர்த்தி செய்கிறோம்.
தரம்உயர்த்த, அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: கண்டிப்பாக நடவடிக்கை
எடுக்கப்படும்.

காங்., - வசந்தகுமார்: களக்காடு பகுதியில் உள்ள
மேல்நிலைப் பள்ளியில், இரு பாலாரும் படிக்கின்றனர்.
அதை, ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என, பிரிக்க
வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: முதலில்,
உயர்நிலைப் பள்ளியாக பிரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - பூங்கோதை: ஆரம்பப் பள்ளிகளில்,
மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆங்கில
மோகத்தால், குழந்தைகளை, ஆங்கிலப் பள்ளிகளில்
சேர்க்கின்றனர். எனவே, ஆரம்ப கல்வியில், தமிழ்
வழிக் கல்வியை போல், ஆங்கில வழி பள்ளிகளை
கொண்டு வர வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்:
இதுகுறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.

தி.மு.க., - தங்கம் தென்னரசு: நடுநிலைப் பள்ளியை,
உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, பொதுமக்கள்
பங்களிப்பாக, ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி
உள்ளது. அதே போல், உயர்நிலைப் பள்ளியை
மேல்நிலையாக தரம் உயர்த்த, இரண்டு லட்சம்
ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.அந்த காலத்தில்,
அந்தவிதி தேவையாக இருந்தது. தற்போது, மத்திய
அரசுபல்வேறு திட்டங்களின் கீழ், நிதி ஒதுக்குகிறது.
மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது.எனவே, பொதுமக்கள்
பங்களிப்பு தேவையில்லாதது. இந்த நிதியை திரட்ட
சிரமமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் பங்களிப்பு
தேவைஎன்ற விதியை நீக்க, அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நல்ல கருத்து.
இதுகுறித்து, முதல்வர் மற்றும் துணை முதல்வருடன்
கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்ததுaa

1,2,3,4,5 PRIMARY TIME TABLE - PEDAGOGY METHOD






வருவாய் மாவட்டந்தோறும் அரசுத் தேர்வுத்துறை அலுவலகங்கள் அமைவதற்குரிய கட்டிடங்கள் தேர்வு செய்வதை உறுதிப்படுத்துவது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம்.

Flash News : Higher Secondary HM Seniority List As on 01.01.2018

BE - 1.59 லட்சம் மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் வெளியீடு: ஜூலை 6-இல் கலந்தாய்வு தொடக்கம் :

பொறியியல் படிப்பில் சேர ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த 1.59 லட்சம் மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்') செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 6- ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதன் முறையாக இந்த ஆண்டு ஆன்-லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3- ஆம் தேதி தொடங்கி ஜூன் 2-ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 1,59,631 பேர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிடக் கூடுதலாகும்.
சம வாய்ப்பு எண் வெளியீடு: இந்த நிலையில், ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சம வாய்ப்பு எண் வெளியிடும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர், செயலர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், துணைவேந்தர் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரிடமிருந்து தலா இரண்டு மூல (சீட்) எண்கள் பெறப்பட்டு, அதிலிருந்து கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்குமான சம வாய்ப்பு எண் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 
செல்லிடப்பேசி எண்ணுக்கும்...: இந்த சம வாய்ப்பு எண் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதோடு, மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். இதில், சம வாய்ப்பு எண்ணுடன், சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம், தேதி, நேரம், டோக்கன் எண் உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இதை மாணவர்கள் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும்.
சம வாய்ப்பு எண் எதற்கு?: பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளோரில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருக்கும்போது, இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ்-2 நான்காவது பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த பாட மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
கடந்த ஆண்டில் 27 மாணவர்களுக்கு...: கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் தரவரிசைப் பட்டியல் தயாரிப்பதற்கு 27 மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது. எனவே, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்போது நிகழ் கல்வியாண்டில் எத்தனை மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வரும்.
ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடத்தப்படும்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும். அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
தரவரிசைப் பட்டியல் எப்போது?: சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும்.
இடங்கள் எவ்வளவு? : 2018-19-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 509 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி. ஆகிய மூன்று துறைகளில் 9,110 இடங்கள், அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 1,020 இடங்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 4,960 இடங்கள், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 1,362 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,61,679 இடங்கள் என மொத்தம் 1,78,131 பி.இ., பி.டெக். இடங்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இது கடந்த ஆண்டைவிடக் குறைவாகும்.
கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டு பி.இ. கலந்தாய்வில் 1,82,214 பி.இ., பி.டெக். இடங்கள் இடம்பெற்றிருந்தன என அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
கலந்தாய்வு எப்போது?: பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வைப் பொருத்தவரை வரும் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். முதல் கலந்தாய்வுக்குப் பின்னரே இந்த தேதி இறுதி செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
26 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம் 
வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் குறைப்பு நடவடிக்கை, ஊதியக் குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பி.இ. படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
இதன் காரணமாக, மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டு 26 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. 
இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், 2018-19-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெறுவதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கும் 26 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை. அதன்படி, இந்த 26 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இருக்காது என்றார் அமைச்சர் அன்பழகன்.

பள்ளிகள் தரம் உயர்வு: மக்கள் பங்களிப்புத் தொகையை விலக்க திமுக கோரிக்கை

பள்ளிகளின் தரம் உயர்வுக்காக பொது மக்களிடம் இருந்து பெறப்படும் பங்களிப்புத் தொகையை விலக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கை தொடர்பாக, முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து நடந்த விவாதம்:-
பூங்கோதை (திமுக): தமிழகத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. எனவே, ஆங்கிலமும் தமிழும் கலந்து போதிக்கும் இருமொழி கற்றல் வகுப்புகளை சோதனை அடிப்படையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அமைச்சர் செங்கோட்டையன்: ஆங்கில வழியிலான தொடக்கப் பள்ளிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சமூக நலத் துறை அமைச்சருடன் கலந்து பேசி ஆய்வு செய்து வருகிறோம்.
தங்கம் தென்னரசு (திமுக): பள்ளிகளைத் தரம் உயர்த்தும் போது, பொது மக்களின் பங்களிப்பாக நிதி கோரப்படுகிறது. குறிப்பாக, நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த ரூ.1 லட்சமும், உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த ரூ.2 லட்சமும் பொது மக்களின் பங்களிப்பாகக் கோரப்படுகிறது.
ஆனால், இப்போது அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் போன்ற திட்டங்களின் வழியாக மாநில அரசுகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகளவு இருக்கும்போது பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்காகப் பொது மக்களின் பங்களிப்பாக நிதி வசூலிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
அரசு சார்பில் நிதி கோரப்படும் போது, அதனைச் சேகரிப்பதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே, பள்ளிகள் தரம் உயர்வுக்கு பொது மக்களின் பங்களிப்பாக நிதி வழங்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: பொது மக்களிடம் இருந்து பெறப்படும் நிதியானது, புதிய கட்டடங்கள், இருக்கைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், உறுப்பினரின் கோரிக்கை சரியான கருத்து. இது தொடர்பாக, முதல்வர், துணை முதல்வரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.aaaaaa

ஜூலை முதல் வாரத்தில் அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தமிழக அரசின் சார்பில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.59 லட்சத்து, 631 பேர் விண்ணப்பித்துஉள்ளனர். இவர்களில், 59 ஆயிரத்து, 416 பேர் மாணவியர். கவுன்சிலிங்கில், தரவரிசை பட்டியல் தயார் செய்வதற்கான, 'ரேண்டம்' எண், நேற்று வெளியிடப்பட்டது.
உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன், முதன்மை செயலர், சுனில் பாலிவால் ஆகியோர், ரேண்டம் எண் பட்டியலை வெளியிட்டனர். 
பின், அமைச்சர் அளித்த பேட்டி: 
மாணவர்களின் தரவரிசை பட்டியலை நிர்ணயிக்கும் போது, ஒரே மதிப்பெண் உள்ள மாணவர்களை வரிசைப்படுத்துவதற்கு, ரேண்டம் எண் உருவாக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங் முறையில், விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்வதன் வழியாக, மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கான கவுன்சிலிங்கை, ஜூலை, 6ம் தேதி துவங்க திட்டமிட்டுள்ளோம். 
மருத்துவ கவுன்சிலிங் தேதிக்கு ஏற்ப, இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி மாறுபடும்.கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 18 ஆயிரத்து, 500 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 631 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ஜூன், 8 முதல், 14 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் பிரச்னைக்கு உளவியல் தீர்வு குழு :

உளவியல் பிரச்னைக்கு  தீர்வு  காண, குழு அமைக்கப்பட்டுள்ளது' என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார்.தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை: பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க, மாநில அளவில் பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழு கூட்டத்தில் சமூக, பொருளாதார வேறுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, சமூக ஆதரவின்மை, பெற்றோரின் மதுப் பழக்கம்,ஒழுக்கமின்மை,படிப்பில் போதிய கவனமின்மை உட்பட மாணவர்களின் பல்வேறு உளவியல் ரீதியான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன.தீர்வு காண ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு, தகுதியான ஒரு ஆசிரியரை பொறுப்பாசிரியராக நியமித்து உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். அவர்களுக்கு பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளி கல்வி இயக்குனருக்கு பாராட்டுக்களை நீதிமன்றம் தெரிவிக்கிறது'என்றார்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்போம் ‘ஜாக்டோ-ஜியோ’ அறிவிப்பு :

ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் (மே) 8-ந் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.


இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் கூறியதாவது.

‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம். 11-ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் ‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார் கள்.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் பணி நேரம் முடிந்த பிறகு மாலை நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட ‘ஜாக்டோ- ஜியோ’ பொறுப்பாளர்கள் சென்னையில் உண்ணாவிரத பந்தல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

உண்ணாவிரத போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை) அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம்.

கடந்த 4-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்திற்காக மாவட்ட அளவில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வாரியாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் நீட் தேர்ச்சி விவரம் :

தமிழகத்தில் ஜனவரி முதல் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது? இதோ பட்டியல் :

தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இன்று ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
அதில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கடும் மாசுபாடு ஏற்படுவதால், தமிழகத்தில் 2019ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஷ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் மற்றும் தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டின் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986ன் கீழ் தடை செய்ய அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் இந்த பொருட்களை தடை செய்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்தபழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல் 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை நம் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம்..

TET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று
வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்று காலிப்பணியிடத்துக்கேற்ப தரவரிசை பட்டியலில் இடம்பெற்றால்தான் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...!

சளி, இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம்.
பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.

கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம்.
சளியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும். 

நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1ம் தேதி முதல் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும், இந்நிலையில் தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்பே (மே 29) தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வந்தது. 
இதனையடுத்து  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தென்மாவட்டங்களில் நாளை முதல் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. கர்நாடக கடலோரப் பகுதிகளில் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாளை முதல் 10 நாட்களுக்கு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களை பொருத்தவரை வெப்பச்சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை மழைக்கு இப்போது வாய்ப்பு குறைவு என்றும் வெப்பநிலை இயல்பு வெப்பநிலைக்கு மாதிரி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் (1 முதல் 410முடிய)

1.6.2017 ல் கலந்தாய்வுமுலம் பணயில் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த ஆண்டு நடக்கும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்புக்கள் !

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவிப்புக்கள் வரலாம்.ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை தயார் செய்து  CEO அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.பலமாவட்டங்களில் விண்ணப்பங்கள் பெறபட்டுள்ளது.
இவண்
ந.கமலக்கண்ணன்
மாவட்டசெயலாளர்
TNPGTA
KANCHI

6/6/18

இன்ஜி., கவுன்சிலிங் ரேண்டம் எண் வெளியீடு

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், 'ரேண்டம்' எண், இன்று வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க, இம்மாதம், 2ம் தேதியுடன்விண்ணப்ப பதிவு 
முடிந்தது. இதில், 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2017ஐ விட, இந்தாண்டு, 19 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று காலை, 9:00 மணிக்கு, அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஒரே, 'கட் - ஆப்' இருக்கும் மாணவர்களுக்கு, இந்த ரேண்டம் எண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

நீட்' தேர்வில் சென்னை மாணவிக்கு, 12ம் இடம்; கடந்த ஆண்டை விட தமிழகம் அதிக தேர்ச்சி

நீட்' தேர்வில், தேசிய அளவில், பீஹார் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா மாணவர்களும், அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா, 12ம் இடம் பெற்றுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வில், 13 லட்சம் பேர் பங்கேற்று, 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு, அதிகபட்சமாக, 691 மதிப்பெண் எடுத்து, பீஹார் மாணவி, கல்பனா குமாரி, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த, ரோஹன் புரோஹித், டில்லியை சேர்ந்த, ஹிமாஷு ஷர்மா ஆகியோர் இரண்டாம் இடமும், டில்லியை சேர்ந்த, ஆரோஷ் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த, பிரின்ஸ் சவுத்ரி ஆகியோர், 686 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
கீர்த்தனா சாதனை :

தமிழக மாணவி, கே.கீர்த்தனா, 676 மதிப்பெண் பெற்று, 12ம் இடம் பெற்றுள்ளார். இவர், சென்னை கே.கே.நகரில் உள்ள,பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவி.

'சி.பி.எஸ்.இ., பாடத்தில் இருந்து, அதிக கேள்விகள் இடம்பெற்றதும், இரண்டாண்டுகளுக்கு மேல், தொடர் பயிற்சி எடுத்ததும், வெற்றிக்கு காரணம்' என கீர்த்தனா கூறினார்.

தமிழக அரசு பள்ளிகளில், மூன்று மாதம் சிறப்பு பயிற்சி பெற்ற, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். தமிழக பாட திட்டத்தில், சென்னை கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளி மாணவர் சரண், எந்த பயிற்சியும் இல்லாமல், நீட் தேர்வில், 416 மதிப்பெண் எடுத்துள்ளார்.

மாநில அளவிலான தேர்ச்சியை பொறுத்தவரை, 74 சதவீதத்துடன், ராஜஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது. டில்லி, 74; ஹரியானா, 73 சதவீதம் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. ஆந்திரா மாநிலம், 73 சதவீதம் பெற்று, நான்காம் இடம் பெற்றுள்ளது.

மாநிலங்கள் அளவில், அதிக எண்ணிக்கையில், 1.77 லட்சம் மாணவர்கள், நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா மாநிலம், 40 சதவீதத்துடன், 34ம் இடம் பெற்றுள்ளது. தமிழகம், 33ம் இடம் பெற்றுள்ளது. 

கர்நாடகா, 64 சதவீதத்துடன், ஒன்பதாம் இடமும்; தெலுங்கானா, 69 சதவீதம் பெற்று, ஆறாம் இடமும், கேரளா, 67 சதவீதத்துடன் ஏழாம் இடமும்; புதுச்சேரி, 40 சதவீதம் பெற்று, 32ம் இடமும் பெற்றுள்ளன.

மற்ற மாநிலங்களில், பல ஆண்டுகளாக, மருத்துவ நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எழுதி வந்தனர். தமிழக மாணவர்கள், இந்த ஆண்டு தான் முழுமையாக நுழைவு தேர்வு எழுத பதிவு செய்தனர். 

முதல் ஆண்டில், பெரிய அளவில் பயிற்சி எடுக்காமல், 40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, இந்த ஆண்டு முதன்முதலாக, நீட் தேர்வில் பங்கேற்ற, புதுச்சேரி மற்றும் மஹாராஷ்டிரா மாணவர்களும், 40 சதவீதமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் நுழைவு தேர்வுக்கு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி, நுாற்றுக்கணக்கான மாணவர்கள், மருத்துவ நுழைவு தேர்வுக்கான, தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். 

தமிழகத்தில், 2017ல், 32 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அதை விட, 13 ஆயிரம் அதிகமாக, 45 ஆயிரம் பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

SCHOOL EDUCATION DEPATMENT-TAMILNADU-CENTRALLY SPONSORED SCHEME -REGISTRATION FORM 2018-19 FOR NMMS EXAM PASSED STUDENTS

அதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன்! இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம்!

அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு 
இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் கழக நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிக்கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 100 வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இதேபோல, 1000 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு வணிகவியல் மாணவர்களுக்கு 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் சிஏ தொடர்பான வழிகாட்டுதல்கள், பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை இந்த திட்டம் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தவில்லை என்றும், இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். a