யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/6/18

அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி கிடையாது

கர்நாடகாவில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைக் குறைந்து வரும் நிலையில்,


 இந்த ஆண்டு 2,429 புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

இதையடுத்தே மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாகக் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில், அரசுப் பள்ளி இல்லாத பகுதிகளில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை மாநில அரசு பரிசீலித்தது. ஆனால், தனியார் பள்ளிகள் துவக்குவதை தடுத்து, அரசுப் பள்ளிகளை பலப்படுத்த புதிய முடிவை எடுத்துள்ளது.

புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதற்கு பதிலாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், நவீன வசதிகளுடன் கூடிய அரசுப் பள்ளிகளைத் துவக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உபரி ஆசிரியர் கணக்கீடு - சரிதானா?

150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்

பணியிடங்கள் போதும் என்ற கணக்கீட்டில் மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரி என அரசு அறிவித்துள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 5 வகுப்புகள்  உள்ளன.
ஒவ்வொரு வகுப்பிற்கும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என மொத்தம் 25 பாடங்கள் உள்ளன.
ஒரு ஆசிரியர் 4 பாடங்கள் வீதம் 28 பாடவேளைகள்  பாடம் நடத்துவார்.
தலைமையாசிரியர் ஒரு பாடத்திற்கு 7 பாடவேளைகள் பாடம் நடத்துவார்.
ஆக மொத்தம் 5 ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியரும் சேர்ந்து 21 பாடங்கள் நடத்துவர்.
மீதமுள்ள 4 பாடங்களுக்கான (4 x 7 = 28) பாடவேளைகளை மாணவர்களுக்கு யார் நடத்துவார்?
நகர்ப்புறங்களை விட்டு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை.
மேலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது.
அலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இல்லை.
கல்வி இணைச்செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளி மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை.
மேலும் பள்ளிசார்ந்த எல்லா வகையான (அலுவலகப்பணி, கருவூலகப்பணி, கடிதங்களை நேரில் கல்வி அலுவலங்களில் ஒப்படைத்தல் பணி, இன்ன பிற) பணிகளையும் இவ்வாசிரியர்களே செய்யவேண்டும்.
அதனால் மாணவர்களின் கற்றல் பணியில் தொய்வு ஏற்படுகிறது
எனவே, மாணவர்கள் கல்வி கற்கும் பணி தொய்வடையாமல் இருக்க வேண்டும் எனில்
150 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆசிரியர்களும்,
ஒரு தலைமையாசிரியரும்,
ஒரு உடற்கல்வி ஆசிரியரும்,
ஒரு இளநிலை உதவியாளரும்,
ஒரு ஆய்வக உதவியாளரும்,
ஒரு அலுவலக உதவியாளரும்,
ஒரு இரவுக்காவலரும் கட்டாயம் தேவை.
ஏழை கிராமப்புற மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் கோரிக்கையை, தேவையை, அவசியத்தை இவ்வரசு பரிசீலிக்க வேண்டும்.
சிவ. ரவிகுமார்
99944453649

பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி :

பள்ளி மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  திட்டமிட்டு  வருகின்றனர். 
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 36 உயர்நிலைப் பள்ளிகள், 1 உருது  உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப் பள்ளிகள் (தமிழ், தெலுங்கு மற்றும் உருது) 122 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 30  மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 98,857 மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர். 4,041 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் தினமும் ஒரு மணி நேரம் விளையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு  போட்டிகளை மாணவ, மாணவிகளுக்கு கற்று தர ஒரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். 
இருப்பினும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் விளையாட்டை விதிப்படி  முறையாக கற்று கொள்ள முடிவதில்லை. மேலும், கிரிக்கெட், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள்,  போதிய இட வசதியும் இருப்பதில்லை.இதனால்,  மாணவ, மாணவிகள் விளையாட்டில் கவனம் செலுத்துவதில்லை. இந்த குறையை போக்கும்  வகையில் பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு  செய்துள்ளனர். முதற்கட்டமாக, சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு ஆடுகளத்தை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. 
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை  மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். கிரிக்கெட் போட்டிக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். முதற்கட்டமாக, நுங்கம்பாக்கம்  ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச கிரிக்கெட் பயிற்சி தொடங்க உள்ளது. மாணவர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சென்னை  முழுவதும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் கிரிக்கெட் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் கோரி வழக்கு :

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ேக.ரங்கராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நீட் தேர்வில் தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, ‘‘தேர்வு முடிந்ததும் ‘கீ ஆன்சர்’ கூட முறையாக வெளியாகவில்லை. வினா - விடைகள் தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்களால் சுலபமாக புரிந்து கொள்ள முடியாது,’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.டி.செல்வம், ‘‘தமிழக மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் தான் ஏற்கனவே தேர்வு எழுத சென்றனர். எந்த மன நிலையில் தேர்வெழுதியிருப்பார்கள்? இதில், தவறான மொழிமாற்ற வினா-விடைகளை அவர்களால் புரிந்து ெகாள்ள முடியுெமன எப்படி அரசு தரப்பால் யூகிக்க முடிகிறது,’’ என்றார்.அப்போது ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேல், ‘‘ஏற்கனவே தேர்வு முடிவுகள் வௌியிடப்பட்டு விட்டன. தேர்வின்போது வினாத்தாளில் ஏதேனும் தவறு இருந்தால், ஆங்கிலத்தில் சரியாக இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆங்கில வினா-விடைகள் சரியாகவே உள்ளன,’’ என்றார்.
இதையடுத்து, ‘‘தமிழக மாணவர்களின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக செயலர், சிபிஎஸ்இ தலைவர், நீட் தேர்வுக்கான துணைச் செயலர், தமிழக சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். பதில்மனுவை பொறுத்து இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்,’’ எனக்கூறிய நீதிபதிகள், மனு மீதான விசாரணையை ஜூன் 27க்கு தள்ளி வைத்தனர்.
பீகாரில் எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம்
விசாரணையின்போது மூத்த வக்கீல் கூறுகையில், ‘‘பீகார் மாநிலத்தில்  35,641 பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், 37,899 பேர் தேர்ச்சி  பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக  உள்ளனர். நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே, நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க  வேண்டும்’’ என்றார்.

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு :

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விடிய, விடிய உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 பேர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை அங்கேயே தங்கும் வகையில், ஷாமியான பந்தல் அமைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் தினமும் சட்டசபைக்கு செல்லும் சாலை வழியில் இந்த போராட்டத்தை நடத்தினர். ஆனாலும் அரசு சார்பில் இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. 
அரசிடம் நிதியில்லாததால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக பேட்டி அளித்தார். சட்டசபையில் நேற்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக பேசியபோது கூட, ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு மறுத்துவிட்டது.அரசு எப்படியும் பேச்சுவார்த்தைக்கும் அழைக்கும் என்று நம்பிய நிலையில், அதுதொடர்பான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடாததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேச்சுவார்த்தை நடைபெறாததால் நேற்றும் 2வது நாளாக எழிலகத்தில் இரவு முழுவதும் விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தனர். 
முன்னதாக உண்ணாவிரதம் இருந்த பலரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. அங்கன்வாடி பணியாளர் சங்கத்தை சேர்ந்த டெய்சி மற்றும் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த மோசஸ் உள்பட 4 பேர் நேற்று திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களை சக நிர்வாகிகள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இந்த நிலையில், இன்று 3வது நாளாக ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மேலும் பலரது உடல்நிலை மோசம் அடைந்து வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூத்த நிர்வாகிகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், போராட்ட இடத்துக்கு இன்று காலை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். 
நிர்வாகிகள் மாயவன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. அரசு கண்டுகொள்ளாவிட்டாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

நீட்' தேர்வு பயிற்சிக்கு புதிய நிறுவனம் தேர்வு?

'நீட்' நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு, புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி மேல்நிலை பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற, அரசின் சார்பில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.இதற்காக, சென்னையை சேர்ந்த, 'ஸ்பீட் இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்பயிற்சி திட்டத்துக்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்படி, 72 மையங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நீட் பயிற்சி தரப்பட்டது. 


அதேபோல், பிளஸ் 2 தேர்வு முடிந்ததும், சென்னையில், ஐந்து இடங்களில், தங்கும் வசதியுடன், ஒரு மாத சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த, நீட் தேர்வில், அரசின் சிறப்பு பயிற்சி பெற்ற, 4,000 பேரில், ஏழு பேர் மட்டுமே, 306 முதல், 392 வரையில், மதிப்பெண் பெற்றுள்ளனர். 37 பேர், 200 முதல், 295 வரை மட்டுமே மதிப்பெண் பெற்றுள்ளனர். 

மொத்தம், 20 கோடி ரூபாய் செலவு செய்தும், மிக குறைந்த எண்ணிக்கை மாணவர்களே, மருத்துவ படிப்பு வாய்ப்பை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், வரும் ஆண்டில், ஸ்பீட் நிறுவனத்துக்கு பதிலாக, நீட் பயிற்சியில் நல்ல அனுபவம் உள்ள நிறுவனத்தை தேர்வு செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத், பெங்களூரு, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில், பிரபலமாக உள்ள, நீட் பயிற்சி நிறுவனங்களிடம் பேசி, அவற்றில் ஒரு நிறுவனத்தை தேர்வு செய்யவும், பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான, 'டெண்டர்' விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு 15 நாள் பயிற்சி : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்

புதிய பாடத்திட்டத்தில் உருவான பாடங்களை மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பள்ளிக் கல்வித்துறையில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் முதன்மைக் கல்வி அலுவலகங்களை காலி செய்து சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் முதன்மைக் கல்வி அலுவலருக்கான சொந்த கட்டிடம் எழும்பூர் மகளிர் மேனிலைப் பள்ளியில் கட்டப்பட்டது.


நேற்று அந்த அலுவலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து பேசியதாவது: சென்னை சைதாப்பேட்டையில் பனகல் மாளிகையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த முதன்மைக் கல்வி அலுவலகம் இனி சொந்த கட்டிடத்துக்கு மாற்றியதால் அதற்கான நிதியை வேறு திட்டத்துக்கு பயன்படுத்தலாம்.



சிஏ படிப்புக்கான கருத்தரங்கம் நாளை மறுதினம் நடக்கிறது. அதில் 16 மாவட்டங்களை சேர்ந்த 500 பேர் கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் விரைவில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு சிஏ படிப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். அதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியும். மாணவர்களின் திறன் சார்ந்த பயிற்சியை புதியதாக  பாடத்திட்டத்தில் இணைக்க இருக்கிறோம்.

இது போல இன்னும் பல மாற்றங்கள் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். புதிய பாடத்திட்டத்தின் படி 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இக்னோ பல்கலைக்கழகத்தில் 2016 டிசம்பர் அல்லது ஜூன் 2017 இல் பி.எட் முடித்தவர்கள் மட்டும் Convocation பெறுவதற்கு..

11ஆம் வகுப்பு புதிய புத்தகங்கள் PDF LINKS

பொதுத்தமிழ்

ENGLISH
 உயிரியல் விலங்கியல் 1
தாவரவியல்
பொருளியல்
வேதியியல்
இயற்பியல் 
வணிகவியல்

வரலாறு
புவியியல்
கணினி அறிவியல்
வணிக கணிதம்
கணிதவியல்
உயிரியல் தாவரவியல்
உயிரியல் விலங்கியல் 2
விலங்கியல் 2
விலங்கியல் 1

சென்னை மாணவர்கள் 10 பேருக்கு ரூ.1 கோடி சம்பளத்துடன் வேலை:

சென்னை ஐஐடியில் படிக்கும் 10 மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்துடன் 
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது.
நடப்பு ஆண்டில் சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் முக்கியப் பணிகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
 மைக்ரோசாப்ட்,, ரூபாக், உபெர், இண்டீட், இன்டெல் போன்ற பல நிறுவங்கள் அவர்களுக்கு வேலை தர முன்வந்துள்ளன.

சென்னை ஐஐடி நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவுக்கு 256 நிறுவனங்கள் 968 பணி வாய்ப்புகளுடன் வந்தன. அவற்றில் 19 வெளிநாட்டு பணி வாய்ப்புகளும் அடங்கும்.

இந்த ஆண்டு முதல் முறையாக ஆப்பிள் நிறுவனமும் கேம்பஸ் இன்டர்வீயூ மூலம் மாணவர்களை பணிக்குத் தேர்வு செய்ய வந்திருந்தது.
இந்த இன்டர்வியூவுக்கு பதிவு செய்திருந்த மாணவர்கள் மொத்தம் 1,100 பேர்.

இவர்களில் 837 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர். 70% மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகம்.
 கடந்த ஆண்டில் 817 பேருக்கு வேலை வாய்ப்பு அமைந்துள்ளது.
அதிகபட்சமாக சிட்டி நிறுவனம் 25 பேருக்கு வேலை வழங்கியுள்ளது.

 இதற்கு அடுத்து, இன்டெல் (20), ஈ.எஸ்.எல். (19), பிளிப்கார்ட் (18) மற்றும் ஹெச்.சி.எல். (17) ஆகியவையும் அதிக வேலை வாய்ப்புகளைக் கொடுத்துள்ளன.

பிரபலமான நிறுவனங்கள் தவிர 38 ஸ்டார்ட் அப் நிறுவங்கள் 83 பேருக்கு வேலை வழங்கியுள்ளன.aaaaaaaa

இந்தி தெரியாவிட்டால் மத்திய அரசு வேலை இல்லை!

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியில் சேருவதற்கு இந்தி கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று மத்திய அரசின் விளம்பரம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த விளம்பரத்தில், கொல்கத்தாவில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேருவதற்கு இந்தி மொழி குறித்த அடிப்படை அறிவைக் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும். அரசின் கொள்கையின்படி இந்த நிறுவனங்களிலுள்ள ஊழியர்கள் கட்டாயம் தேசிய மொழியை(இந்தி) தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசு ஒரு மொழிதான் தேசத்தை ஒருங்கிணைக்க முடியும் என்று நம்புகிறது. அதனால் இது போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தியைத் தெரிந்திருப்பது கட்டாயமாகிறது. இதுதான் தேசத்தை ஒருங்கிணைப்பதற்கான முதல் நடவடிக்கையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிதியினால் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனங்கள் திருவனந்தபுரத்திலும், திருப்பதியிலும், புனேவிலும், போபாலிலும், கொல்கத்தாவிலும், பெர்ஹம்பூரிலும், மோஹலியிலும் உள்ளன.

இந்தி திணிப்பை நாள்தோறும் பல துறைகளிலும் மேற்கொண்டுவரும் மத்திய அரசு அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் இத்திட்டத்துக்கு இந்தி பேசாத மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, பெங்காலி மொழிக்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் அமைப்பு ஒன்றை நடத்திவரும் கார்கா சட்டர்ஜி கூறுகையில், “இந்தி ஆசிரியர்களுக்கு இந்தி கட்டாயம் என்பது புரிந்து கொள்ளக்கூடிய நடவடிக்கையாகும். ஆனால், மற்ற மாநிலங்களில் இந்தியைக் கட்டாயமாக்குவது என்பது திணிப்பு என்பதைத்தான் தவிர வேறு என்ன நடவடிக்கை?” என்று கேட்டுள்ளார்a

14/6/18

ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
திறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
மேலும் பல மாற்றங்களை கொண்டு வர இருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக ஆசிரியர்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றார்

அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தெரிவித்தார்.பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப் பிய கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கூறிய தாவது:


 இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வழங்கும் 14 வகையான இலவசப் பொருட் கள் குறித்த விழிப்புணர்வு துண் டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5,600 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங் கில வழி கல்விக்காகத்தான் தனியார் பள்ளிகளை பொதுமக்கள் நாடுகின்றனர்.


எனவே, சமூக நலத்துறையுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

இனி காகித சம்பள பட்டியல் தேவையில்லை தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் ஆன்லைன் மயமாகும் கருவூலங்கள்

அக்டோபர் முதல் கருவூலங்கள் ஆன்லைன் மயமாவதால் அரசு துறையில் காகித சம்பள பட்டியல் இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை 1962ல் உருவாக்கப்பட்டது.

 ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தின் பகுதியாக இருந்த இத்துறை, நிதித்துறையின் கீழ் தனி இயக்குனரகமாக, அனைத்து மாவட்டம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், கருவூலம் மற்றும் கணக்குத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.


 கருவூலத்தின் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தையும் கணக்குத்துறை செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 இதனால் அரசு துறைகளில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் அந்தந்தந்த அலுவலக ஊழியர்களின் சம்பளப் பட்டியலை மாவட்ட கருவூலத்திற்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும்.


 இதில் ஊழியர்களின் வருகை பதிவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு காகிதப்பட்டியல் தயாரிக்க வேண்டும். இந்த பட்டியலை மாவட்ட கருவூல அதிகாரிகள் கணக்குத்துறை செயலருக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்நிலையில், மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனித வள மேலாண்மை திட்டம் மூலம் கருவூலம் கணக்குத்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


 இதன் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் சம்பளப்பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.

 எனவே அரசு துறைகளில் அந்தந்த பிரிவுகளில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் காகித சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை.

 இதற்கான பயிற்சி மாவட்டம்தோறும் நடந்து வருகிறது. இதன் பின்னர் வரும் அக்டோபர் முதல் தமிழகத்தில் உள்ள கருவூலம் அனைத்தும் ஆன்லைன் மயமாகிறது.

 மேலும் அரசுத்துறை ஊழியர்களின் பணி வரலாறு முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSA - ONE DAY "TABLET USING" TRAINING FOR BT TEACHERS - SPD PROC

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை 26ல் கவுன்சிலிங் துவக்கம்

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, வரும், 26ல் துவங்குகிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களும், காரைக்கால் கிளையில்,
50 இடங்கள் என மொத்தம், 200 இடங்களுக்கு, 2018- - 19ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, கடந்த ஜூன் 3ம் தேதி, நாடு முழுவதும், 291 மையங்களில் நடத்தப்பட்டது. இத்தேர்வில், 1.56 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, கடந்த 8ம் தேதி, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தரவரிசை அடிப்படையில், இடஒதுக்கீடு பிரிவின் தகுதிபட்டியலும் வெளியிடப்பட்டது. வரும், 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கலந்தாய்வு: முதல் நாளில் பொதுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள், புதுச்சேரி மாற்றுத் திறனாளி பிரிவு இட ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 27ல், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும், 28ல், புதுச்சேரி பொதுப் பிரிவு, ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ., பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது. ஜிப்மர் மருத்துவக் குழுவினர் மூலம், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள் மற்றும் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகளின் உடல் தகுதி குறித்து, மருத்துவ ஆய்வு செய்யப்படும். சான்றிதழ்கள் அவசியம்: ஜிப்மர் கல்வி வளாகத்தின் தேர்வுப் பிரிவில், சான்றிதழ் மற்றும் பயோமெட்ரிக்ஸ் சரிபார்த்தல் நடைபெறும். மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும்போது, தங்களின் அசல் சான்றிதழ் , போனபைட் சான்றிதழ் ( கல்வி நிறுவனத்தின் மூலம் கையொப்பம் இடப்பட்டது), சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட குடியிருப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, நுழைவுச்சீட்டுடன், அனைத்து அசல் மற்றும் நகல் படிவத்தை எடுத்து வர வேண்டும என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாணவர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகத்தை தேர்வு செய்த பின், எந்த சூழ்நிலையிலும் வளாகத்தை மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது. கலந்தாய்வின்போது, ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் மாற்றம் செய்வது அனுமதிக்கப்படாது. ஆதாரமற்ற சான்றிதழை கொண்டுவரும் மாணவர்கள் கலந்தாய்வில் இருந்து நிராகரிக்கப்படுவர். கலந்தாய்வு நடந்த அன்று மதியம், மாணவர்கள் தங்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என, ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, பொது தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு : 'ரிசல்ட்' தேதியும் முன்கூட்டியே வெளியீடு

அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், 
செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.கடந்த ஆண்டை போலவே, நடப்பு கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளையும், அவற்றின் முடிவுகள் வெளியாகும் தேதிகளையும், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, தயார் செய்துள்ளார். அதை, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.* அதன்படி, பிளஸ் 2 தேர்வு, 2019 மார்ச், 1ல் துவங்கி, 19ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், ஏப்., 19ல் வெளியாகின்றன. பிளஸ் 1 தேர்வு, மார்ச், 6ல் துவங்கி, 22ல் முடிகிறது.  தேர்வு முடிவுகள், மே, 8ல் வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 14ல் துவங்கி, 29ல் முடிகிறது. ஏப்., 29ல், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன* கடந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்பில், 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கின்றனர்.  அவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படும்* கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 படித்து, 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, பழைய முறைப்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் வீதம், 1,200 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.  இரண்டு பிரிவினருக்கும், காலையில் தேர்வு துவங்கி, மதியம் முடியும்* இந்த ஆண்டு, புதிதாக அமலுக்கு வந்துள்ள, மொழி பாடத்தாள் குறைப்புப்படி, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், பழைய, புதிய மாணவர்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ஒரு தாளுக்கு மட்டுமே, தேர்வு நடத்தப்படும்.10ம் வகுப்பு தேர்வுஇந்த தேர்வில், மொழி பாடம் மற்றும் ஆங்கில தேர்வுகள் மட்டும், பிற்பகலில் நடக்கும். மற்ற முக்கிய பாட தேர்வுகள், காலையில் நடத்தப்படுகின்றன. 10ம் வகுப்புக்கு மட்டும், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு, தலா, இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வு தேதி விபரம்மார்ச் 14, 18 - மொழி பாடம் இரண்டு தாள்கள்மார்ச் 20, 22 - ஆங்கிலம் இரண்டு தாள்கள்மார்ச் 23 - விருப்ப மொழி பாடம்மார்ச் 25 - கணிதம்மார்ச் 27 - அறிவியல்மார்ச் 29 - சமூக அறிவியல்* ஏப்., 29ல் தேர்வு முடிவுகள் வெளியீடுபிளஸ் 1 தேர்வு: (பழைய பாடத்திட்டம்)* பிளஸ் 1 வகுப்பில், இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு படித்த மாணவர்கள், ஏதாவது ஒரு பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு, பழைய பாடத்திட்டத்தில், இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படும.தேர்வு தேதி விபரம்மார்ச் 6 - மொழிப் பாடம் தமிழ் மற்றும் பிறமொழிகள்மார்ச் 8 - ஆங்கிலம்மார்ச் 12 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் செயல்முறைகள், நர்சிங் - பொது மற்றும் நர்சிங் தொழிற்கல்விமார்ச் 14 - இயற்பியல், பொருளியல், பொது இயந்திரவியல், மின்னணு உபகரணம், வரைவாளர் சிவில், மின் இயந்திரவியல் மற்றும் செயல்பாடுகள், ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்மார்ச் 18 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், பொது இயந்திரவியல் - 2, மின் இயந்திரங்கள், அதன் செயல்பாடுகள், மேலாண்மை கொள்கைகள், செயல் திறன்மார்ச் 20 - வேதியியல், கணக்கு பதிவியல், தொழிற்கல்வி கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்மார்ச் 22 - தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்ஸ்ட் மொழிபாடம் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்* மே 8ல் தேர்வு முடிவுபிளஸ் 1 தேர்வு: (புதிய பாடத்திட்டம்)* பிளஸ் 1 வகுப்பில், இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு, இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வு தேதி விபரம்மார்ச் 6 மொழிப் பாடம் தமிழ் மற்றும் பிறமொழிகள்மார்ச் 8 ஆங்கிலம்மார்ச் 12 கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் செயல்முறைகள், நர்சிங் - பொது மற்றும் நர்சிங் தொழிற்கல்விமார்ச் 14 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்மார்ச் 18 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின் பொறியியல், மின்னணு பொறியியல், கட்டுமான பொறியியல், 'ஆட்டோமொபைல்' பொறியியல், 'மெக்கானிக்கல்' பொறியியல், அலுவலக மேலாண்மை மற்றும் செயலக படிப்புமார்ச் 20 வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்மார்ச் 22 தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், கணினி செயல்பாடுகள், உயிரி வேதியியல், அட்வான்ஸ்ட் மொழிபாடம் - தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்* மே 8ல் தேர்வு முடிவு வெளியீடுபிளஸ் 2 தேர்வு தேதி விபரம் மார்ச் 1 - மொழிப்பாடம் - தமிழ் மற்றும் பிறமொழிகள்மார்ச் 5 - ஆங்கிலம்மார்ச் 7 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், 'டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்', உணவு மேலாண்மை, வேளாண் செயல்முறைகள், நர்சிங் - பொது மற்றும் நர்சிங் தொழிற்கல்விமார்ச் 11 - இயற்பியல், பொருளியல், பொது இயந்திரவியல், மின்னணு உபகரணங்கள், வரைவாளர் சிவில், மின் இயந்திரவியல், 'ஆட்டோ மெக்கானிக்' மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்மார்ச் 13 - வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்மார்ச் 15 - தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், 'அட்வான்ஸ்ட்' மொழி பாடம் - தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்மார்ச் 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை மற்றும் கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல்* ஏப்ரல், 19ல் தேர்வு முடிவு வெளியீடு

கல்வித்துறையில் கோலோச்சும் பணியிடங்களை கைப்பற்ற போட்டி : சிபாரிசு மழையால் திணறல்

கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலரின் (சி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர் (பி.ஏ.,) உட்பட முக்கிய பணியிடங்களை கைப்பற்ற தலைமையாசிரியர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை நிர்வாக மாற்றத்தையடுத்து, மூன்று ஆண்டுக்கும் மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் சி.இ.ஓ., பி.ஏ.,, உதவி திட்ட அலுவலர் (எஸ்.எஸ்.ஏ., - ஏ.பி.ஓ.,), திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஆர்.எம்.எஸ்.ஏ., - ஏ.டி.பி.சி.,), சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், பள்ளி துணை ஆய்வாளர் (டி.ஐ.,) ஆகியோர் கலந்தாய்வு மூலம் மாறுதல் பெற்று, பள்ளிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள், நேற்று முதல் கலந்தாய்வில் பங்கேற்று தலைமையாசிரியராக பள்ளிக்கு மீண்டும் மாறுதல் பெறுகின்றனர். காலியாகும் இடங்களுக்கு நியமனம் செய்ய வழிகாட்டுதல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிகாரிகள் போல் கோலோச்சும் இப்பணியிடங்களை கைப்பற்ற சி.இ.ஓ., மற்றும் அரசியல்வாதிகள் சிபாரிசுகளை தலைமையாசிரியர் பெற்று வருகின்றனர். இதில் பேரம் நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பல மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் போல் பி.ஏ.,க்கள் உள்ளிட்டோர் செயல்பட்டு கோலோச்சினர். முறைகேடுகள் நடந்தன. இதனால்தான் அவர்களை மாற்ற கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் நடவடிக்கை எடுத்தார். தகுதி, திறமையுள்ளவர்களை னியாரிட்டி அடிப்படையில் இப்பதவிகளில் நியமிக்க வேண்டும். சிபாரிசு அடிப்படையில் நியமித்தால் மீண்டும் முறைகேடு நடக்கும், என்றனர்.

ஜாக்டோ ஜியோ சென்னை காலவறையற்ற உண்ணாவிரதம், மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் இரண்டாம் நாள் நிகழ்வு நாளிதழ்களில்

ஜாக்டோ ஜியோவுடன் பேச முதல்வர் மறுப்பு, பேரவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு