யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/6/18

'பயோமெட்ரிக்" கொண்டு வருவதில் சிக்கல் - மாற்றாக Mobile App Attendance

பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது.
பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.
அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'டி.என்., அட்டனென்ஸ்' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம். ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.

மேலும் பாடப்புத்தகத்தில் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் எந்தந்த பாடங்களை அன்றைய தினம் கற்பித்தார் என்பதை கண்காணிக்கலாம். அவர் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்யவில்லை எனில் பாடம் எடுக்கவில்லை என, கருதப்படும்.
தரவுகள் அனைத்தும் அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால் ஆசிரியர்கள் வருகை பதிவு, பாடம் நடத்தியது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனேவே 'எமிஸ்,' 'டீச்சர் புரைபைலில்' சேகரிக்கப்பட்ட மாணவர், ஆசிரியர்கள் விபரங்கள் உள்ளன. மேலும் ஆசிரியர்களின் அலைபேசி எண் விபரம் சேகரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் முறையாக பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் சிக்குவர்,' என்றார்a

24/6/18

1,200 அரசு பள்ளிகளை இணைக்க திட்டம்:தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம்!!!

மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க, தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது

. அத்துடன்,, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை,, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி, 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள், படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர்.

இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய, பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மாவட்ட செயலாளர் முருகவேள் கூறியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 20 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகள் உள்ளதாக, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தற்போது, 10 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.

செப்டம்பருக்குள், 1,200 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை, அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்கt, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இங்கு பணிபுரியும் உபரி ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யவுள்ளனர். இதில், சேலத்தில், 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைக்கப்படவுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், ரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில், 2,800 ஆசிரியர்கள் காலிப்பணியிடம் உள்ளது.

இதனால், அந்த எட்டு மாவட்டங்களில், கடந்த, 21ல் நடந்த தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர் கலந்தாய்வில், மற்ற மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவுக்கு, தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

குழப்பத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பழைய முறை தொடர்கிறதா, கல்வி இணை செயல்பாடுகள் தொடர்கிறதா, cce பதிவேடுகள் பராமரிப்பதா?

இந்த கல்வி ஆண்டில் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது குறித்து தெளிவான பயிற்சியோ, வழிகாட்டுதலோ, குறிப்புகளோ தரப்படவில்லை.
                      பழைய முறை தொடர்கிறதா, கல்வி இணை செயல்பாடுகள் தொடர்கிறதா, cce பதிவேடுகள் பராமரிப்பதா என்பதைக் குறித்து எந்தவித தெளிவான குறிப்புகளும் இல்லை.                                          மாவட்டத்திற்குடாரத்திற்கு வட்டாரம் ,ஆசிரிய பயிற்றுனர்களுக்கு பயிற்றுனர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி பதிவேடுகளை பராமரிக்க சொல்லி ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர் .   புதிய கற்பித்தல் முறையில் பாட குறிப்பு( notes of lesson )எழுதுவதா இல்லையா என்பதை உறுதி செய்யாமல் தாங்கள் அறிந்த கருத்துக்களை சொல்லி வருவது ஆசிரியர்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. வரும் ஜூலை மாதம் பயிற்சி அளிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தற்போது பார்வைக்கு செல்லும் அதிகாரிகளும், ஆசிரிய பயிற்றுனர்கள் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முறையான வகையில்      ஆசிரியர்களுக்கு    வழிகாட்டுதல்கள் தரப்படும்போது மட்டும்தான் தெளிவான முறையில் கற்பித்தலை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள இயலும்.       கடந்த ஆண்டு பரிசோதனை முறையில் புதிய கற்பித்தல் முறை தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து ஒரு சில மாற்றங்களுடன் கற்பித்தல் முறை      அறிமுகப்படுத்தப்படலாம். தெளிவான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் தரப்படும் வகையில் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் வந்துள்ளது என கூறி பதிவேடுகளை பராமரிக்க சொல்லி  கட்டாயப்படுத்தி வருவது  ஆசிரியர்களுக்கு மன உளைச்சலையும், நெருக்கடியையும் அதிகரிக்கச் செய்கிறது. ஆகவே ஆசிரிய நண்பர்களே தெளிவான பயிற்சிகள் தரப்படும் வரையில் சுய கருத்துக்களை யூகமாக சொல்லி ஆசிரியர்களிடம் குழப்பத்தை உண்டாக்காமல் இருப்பதே ஆசிரியர்களுக்கு நல்லது

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு!

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லை என்றால் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.

 பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் மேல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் உங்களது ஐடிஆர் எனப்படும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். அவ்வாறு இணைத்துவிட்டால் வருமான வரிக் கணக்கை எளிதாக தாக்கல் செய்து விடலாம். இல்லை என்றால் மிகவும் கஷ்டம் என்று மத்திய நேரடி வரி வருவாய்த் துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி என முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிறகு இது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ஜூன் 30ம் தேதிக்குள் நிச்சயமாக இணைத்து விடுங்கள். இதன் மூலம் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படாது.
இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. இவ்விரண்டு எண்களையும் இணைக்காமல் ஒருவர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இயலாது. மத்திய நேரடி வரி வருவாய்த் துறையின் அறிக்கை இதனை தெளிவுபடுத்துகிறது. எனவே அனைவரும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் ஜூன் 30ம் தேதிக்குள் இணைத்து விட வேண்டும். அப்போதுதான் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டிய அவசியமில்லை.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெரும் சரிவு

கோவை: 'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில்,விண்ணப்ப வினியோகப்பணி தாமதமாக துவங்கியதால் நடப்பாண்டிலும், 40 சதவீத இடங்கள் நிரம்ப வாய்ப்பில்லை' என, முதல்வர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

ரூ.2,000 கட்டணம் : மாநிலத்தில், 46 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இதில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவை முக்கிய துறைகளாக உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். அரசு கல்லுாரிகளில் ஆண்டுக்கு, 2000 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச லேப்டாப், பாடபுத்தகங்கள், பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் மற்றும் ஆண்டுக்கு, 8,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு, 10 நாட்களுக்கு முன்பிருந்தே, விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, 10 நாட்களுக்கு பிறகே விண்ணப்ப பணி துவக்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டிற்கான கலந்தாய்வு, இதுவரை துவங்கவில்லை. கல்லுாரிகளிலுள்ள இடங்களை காட்டிலும், குறைவான விண்ணப்பங்களே பெரும்பாலான கல்லுாரிகளில் பெறப்பட்டுள்ளன.இதனால், இந்தாண்டு, 40 சதவீத இடங்கள் நிரம்ப வாய்ப்பில்லை.
கலந்தாய்வு : கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:ஊட்டி கல்லுாரியில், 520 இடங்களுக்கு, 400 விண்ணப்பங்களும், கோவையில், 380 இடங்களுக்கு, 340 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்நிலைதான், 95 சதவீத கல்லுாரிகளில் ஏற்பட்டு உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை இதை விட குறையும் என்பதால்,மாணவர்கள் சேர்க்கை மொத்தமாக சரிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தொழில்நுட்ப கல்வி இயக்கக முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பொறுப்பாளர் லாவண்யா கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளில், புதிதாக கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. இக்கல்லுாரிகளுக்கான அங்கீகாரம், ஏ.ஐ.சி.டி.இ., வழங்க தாமதம் ஆகியது. ''அக்கல்லுாரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதால், விண்ணப்ப வினியோக பணி தாமதம் ஆனது,'' என்றார்.

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் போலிகளை தடுக்க புதிய விதிமுறைகள்

சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில், மருத்துவ கல்வி இயக்ககம், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.


மருத்துவ, படிப்பு ,மாணவர்,சேர்க்கையில்,போலிகளை,தடுக்க புதிய,விதிமுறைகள்


தமிழகத்தில், 2017ல் நடைபெற்ற, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஒன்பது மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்ததாக, புகார் எழுந்தது. இதனால், நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், மருத்துவ கல்வி இயக்ககம், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.


அதன் விபரம்: * தமிழக ஒதுக்கீட்டு 

இடங்களுக்கான, கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், 'தமிழர்' என, இடம் கோரமுடியாது


* 'நீட்' நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பத்தில், வேறுமாநிலத்தை, தன் சொந்த மாநிலமாக குறிப் பிட்டவர்கள், தமிழக இடங்களுக்கு, உரிமை கோர முடியாது


* தமிழகத்தில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள், இருப்பிட சான்றிதழ் சமர்பிக்க வேண்டாம். ஆனால், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, வேறு மாநிலங்களில் படித்திருந்தால், கட்டாயம் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்


* அந்த மாணவரின் பெற்றோர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிவிக்க, அவர்களது பிறப்பு சான்றிதழ், 10ம் வகுப்பு சான்றிதழ்,பிளஸ் 2 சான்றிதழ், டிப்ளமா அல்லது இளநிலை கல்வி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். 


சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள், 


பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்.


* வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்து, தமிழகத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்திருந்தால், நீட் தேர்வுக்கான விண்ணப்பத் தில், தமிழகத்தை சொந்த மாநிலமாக குறிப் பிட்டாலும், அவர்கள், பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்

* போலியான சான்றிதழ்கள் கொடுத்து, படிப் பில் சேர்ந்தது தெரிய வந்தால், மாணவர்கள், கல்லுாரிகளில் இருந்து உடனே நீக்கப்படுவர். மேலும், மாணவர் மீதும், பெற்றோர் மீதும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வு: 25, 26 -இல் அறிவியல் செய்முறை தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், பங்கேற்காத தேர்வர்கள் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத்தேர்வில் பங்கேற்கலாம் எனஅரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர்  வெளியிட்ட அறிவிப்பு


கடந்த மார்ச் -ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகை புரிந்து, ஆனால் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளத் தவறிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோர் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்புப் துணைப் பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளலாம் - இதுகுறித்த முழு விவரங்களையும் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் முகவரிக்கு இது குறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப்படமாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது

பிளஸ் 1ல் 1,002 பக்கத்துக்கு உயிரியல் பாடம்: தலைசுற்றுவதால் வேறு பிரிவுக்கு மாணவர்கள் ஓட்டம்

நீட்' தேர்வுக்கு, உயிரியல் பாடப்பிரிவில், கூடுதல்
பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், 1,002 பக்கங்கள் உள்ளதால், பலரும், வேறு பிரிவுகளுக்கு ஓட்டம் பிடிக்கின்றனர்.



தமிழகத்தில், இரு ஆண்டுகளாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில், மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்றியமைக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.

 நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 பாடத்துக்கு, புது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயிரியலில், இதுவரை இருந்ததை விட, இரு மடங்கு பாடம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. தாவரவியல், 545, விலங்கியல், 457 என, 1,002 பக்கங்கள் கொண்ட, பாடமாக மாற்றப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தை முழுமையாக புரிந்து படித்தால் மட்டுமே, சிந்திக்கும் திறன் வினாக்களுக்கு பதிலளிக்க முடியும். மனப்பாட முறை ஒழிக்கப்பட்டுள்ளதால், இப்பாடம் பெரும் சுமை என மாணவர்கள் கருதுகின்றனர்.

 இதனால், ஏற்கனவே உயிரியல் பாடத்தை தேர்வு செய்த மாணவர்கள், வேறு பிரிவுகளுக்கு ஓட்டம் எடுக்கின்றனர்.இதுகுறித்து, உயிரியல் ஆசிரியர்கள் கூறியதாவது:

 உயிரியல் பாடம், கணித பாடப்பிரிவு, பியூர் சயின்ஸ் எனும் அறிவியல் பாடப்பிரிவில் இடம்பெறுகிறது. மருத்துவம், இன்ஜினியரிங் பிரிவு செல்ல விரும்புவோர், உயிரியல் பாடமுள்ள கணிதப்பிரிவை தேர்வு செய்வர்.

மருத்துவத்தை மட்டுமே குறிக்கோளாக உள்ளவர்கள், அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்வர். தற்போது, புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள உயிரியல் பாடத்திட்டம் மிகச்சிறப்பானது.


 ஆனால், அவற்றை, ஒரே ஆண்டில் முழுமையாக நடத்தவோ, புரிந்துகொள்வதோ சிரமம். நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே, இது சாத்தியம்.

பல பள்ளிகளில், தங்கள் பணியிடத்தை தக்க வைத்துக்கொள்ள, உயிரியல் பாட ஆசிரியர்கள், சராசரி மாணவர்களை, இப்பிரிவுகளில் சேர்த்துவந்தனர். இப்போது, அப்படி சேர்க்கும் போது, தேர்ச்சி விகிதம் சரியும்.

 புது பாடப்புத்தகத்தை பார்த்த பின், பல மாணவர்களை, ஆசிரியர்களே, வேறு பாடப்பிரிவுக்கு செல்ல அறிவுறுத்தும் நிலை உருவாகியுள்ளது. உயிரியல் பாடம் எடுத்து படிப்பவர்களில், 40 சதவீதம் பேர் கூட, நீட் எழுதுவதில்லை.

ஆனால், அனைவருக்குமான பாடத்திட்டத்தில், சுமையை ஏற்றியுள்ளதால், மாணவர்களின் பாடு திண்டாட்டமாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், ஒரு வாரமாக நடந்தது. இந்த முறை, மாணவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு, ஆசிரியர்களின் தேவையை அறிந்து கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டது.இதற்காக, கல்வி மேலாண்மை தகவல் தொழில்நுட்ப திட்டமான, 'எமிஸ்' வாயிலாக, ஆதார் விபரங்களுடன் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை; 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இதில், 5.64 லட்சம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 16 ஆயிரத்து, 114 ஆசிரியர்களே தேவை. ஆனால், 33 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதனால், கூடுதலாக உள்ள, 17 ஆயிரம் ஆசிரியர்களின் விபரங்கள், மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்டன. அவர்கள் அனைவரையும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் நியமிக்க, பணி நிரவல் கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது. ஆனால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, போதுமான அளவுக்கு பள்ளிகளில் காலியிடங்கள் இல்லை.இதனால், காலை, 9:00க்கு வரவழைக்கப்பட்ட ஆசிரியர்கள், இரவு, 10:00 மணி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் காத்திருந்தனர். மாநிலம் முழுவதும், 2,500 காலியிடங்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, நள்ளிரவில், உபரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.அதிலும், 2,500 ஆசிரியர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் வழங்கப்பட்டது. மீதமுள்ள, 14 ஆயிரத்து, 500 ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் வழங்க முடியாததால், தற்போது அவரவர் பணியாற்றும் பள்ளிகளிலேயே, பணியை தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 17 ஆயிரம் ஆசிரியர்களுக்கும், ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.'இந்த சிக்கலுக்கு தீர்வு காண, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது எத்தனை நாட்கள் EL எடுக்கலாம்...??? (EL பற்றிய முழுவிபரம்)



* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10= 170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் . *
மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.

* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச மாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாக இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்க வேண்டும்.

* ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும் தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும் பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில் அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத் தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம் 240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம். 180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

Jun 24, 2018 QR கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் ஆசிரியர் பாடம் போதிக்க வில்லை என கணக்கிடப்படும் - கல்வித்துறையில் அடுத்தடுத்த அதிரடி!

                                                           
அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை


ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை.
வந்தாலும் பாடம் நடத்துவது இல்லை.

பள்ளிக்கு லேட்டாக வந்து முடியும் முன்னரே சென்று விடுகின்றனர்.

 ஈராசிரியர் பள்ளியில் முறை வைத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

தலைமை ஆசிரியர்கள் அந்த வேலை,இந்த வேலை என ஆன் டியூட்டி போட்டுவிட்டு சொந்தவேலை செய்கின்றனர்.

இவைபோன்று பல புகார்கள் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து கல்வித்துறை பல நடவடிக்கைகள் எடுத்து இவற்றிற்கெல்லாம் நவீன ஸ்மார்ட் போன் உதவியுடன்   முடிவு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள
தாக தெரிகிறது.

EMIS
தற்போது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS என்னும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது EMIS வலைதளம் மிக வேகமாக செயல்பாட்டில் உள்ளதை கவனித்தீர்களா..!!

ஏன் தெரியுமா ? EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டு விட்டது .இனி EMIS வலைதளம் எப்போதுமே அதிவேகத்திலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை

EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி அதனைப்பயன்படுத்தும் பல ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் உருவாக்கப்பட உள்ளது.
அதற்குண்டான தரவுகள் அனைத்தும் இனிமெயின் சர்வருடன் பங்கிட்டுக் கொள்ளப்படும்.

அதற்கு உதாரணம் தான் சென்ற ஆண்டு மாணவர்களுக்கான அடையாள அட்டை ஆப்ஸ் ஆகும்.
நாம் அதைப்பயன்படுத்தியே மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தோம் அல்லவா..??

அதுபோலவே தற்போது TN ATTENDANCE எனும் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இதனைக்கொண்டு மாணவர் வருகைப்பதிவை நாம் மேற்கொள்ள வேண்டும்.
சரி இதனால் என்ன பயம்.
ஆம் பயமொன்றும் இல்லை.ஆனால் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன.
அதாவது...
பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்க வேண்டும். தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் அவரவர்  கைபேசி கொண்டு வருகை பதிவிட வேண்டும்.

விடுப்பு எடுக்கும் ஆசிரியரின் வகுப்பிற்கு மட்டும் நாளில்தான்  அடுத்த ஆசிரியர்  பிற ஆசிரியர் வகுப்பிற்கு வருகை பதிவிட வேண்டும்.

முன்னரே...
 அதாவது...

 ஒவ்வோரு கைபேசி எண்ணும் அதற்குண்டான ஆசிரியர் பெயருடன் இணைத்து தரவுகள் சேகரிக்கப்படும்.


அதனைக்கொண்டு பள்ளிக்கு வராமலேயே.. அடுத்த ஆசிரியர்
போன் மூலம் யார் யார் வருகை பதிவு மேற்கொண்டனர் என வகைப்படுத்தப்படும்.

 இதன் மூலம் அவரவர் வகுப்பிற்கு அவரவரே கைபேசி மூலம் வருகைப்பதிவு செய்தால் தான் ஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார் என அர்த்தம் இல்லையேல் அவர் வரவில்லை என கணக்கெடுக்கப்படும்.


அதாவது அவரது வருகை போலி என கணக்கிடப்படும். இதன்மூலம் இரு ஆசிரியர் எந்த எந்த வகுப்பிற்கு அன்றைய தினம் கையாண்டு உள்ளார் என அறியலாம்

QR  கோடுகள் ஸ்கேன் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஆசிரியர்கள் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும்.

ஆசிரியர்களின் கைபேசி எண்கள் ஏற்கனவே மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அவர் போதிக்கும் போது பயன்படுத்திய QR  கோடுகள் மூலம் அவர் என்ன என்ன பாடங்கள் போதித்தார் என.. தானகவே பதிவு செய்யப்பட்டு அத்தகவல் மெயின் சர்வருடன் இணைத்து  கண்காணிக்கப்படும்.

 அவர் QR  கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் பாடம் போதிக்க வில்லை சும்மா இருந்ததாக கணக்கிடப்படுமாம்.

பாடம் சம்மந்தப்பட்ட QR  கோடுகள் ஸ்கேன் செய்ய அரசு சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு
ஏற்கனவே ஆசிரியர் விவரங்கள் TEACHER PROFILE என்ற முறையில் தகவல்கள் திரட்டப்பட்டு தயாராக உள்ளன.இதனை EMIS,DISE தரவுகளுடன்  இணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஈரிரு வாரங்களில் இப்பணி முடிவடைந்ததும் ஆசிரியரின் வருகைப்பதிவிற்கு என தனி ஆண்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட உள்ளது.

  இந்த ஆப்பில் ஆசிரியர் தன் கைரேகையை காலை 9.00-9.15 க்குள்ளும்  பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும் பதிய வேண்டும்.

இதில் என்ன வென்றால் பள்ளியின் அமைவிடம் குறித்த அட்ச , தீர்க்க ரேகை விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் கைரேகை பதிவிடும் போது அவர் இருக்கும் இடத்தின் அட்ச தீர்க ரேகையுடன் பதிவாகும் வகையில் இந்த ஆப் தயாரிக்கப்பட உள்ளதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைவிடத்துடன் ஒப்பிட்டு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் இது செயல்பட உள்ளதாம்.100 மீட்டர் வேறுபாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பதியாவிட்டால் விடுப்பு விவரங்கள் பதிவிட வேண்டும்.

அத்தரவுகள் உடனுக்குடன் தொகுத்து உயரதிகாரிகளின் பார்வைக்கு ஆட்டோமேட்டிக்காக  தினமும் காலை மாலை  என  விவரங்கள் (இதற்கென தனியாக அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்ட தனி ஆப்ஸ்-ல் )தகவல்கள் பரிமாறப்படும்.

ஆசிரியரின் வருகை வாராந்திர ,மாதாந்திர அறிக்கைகள் பள்ளியின் DISE எண்ணை தெரிவு செய்தால் போதும் கிடைத்துவிடும்.அதேபோல் அவர் கையாண்ட வகுப்பு, நடத்திய பாடங்கள் என்ன? போன்ற விவரங்களும் கிடைத்துவிடும்.

இனி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன்ராய்டு போன் தான் உண்மை விளம்பி மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஸ்பை.

 நம்மை கேட்காமலேயே நம் செயல்பாட்டை  கண்காணிக்க நமது போன் தான் அதிகாரிகளுக்கு தரவுதரும் கருவியாகிறது.

 உண்மையாக உழைக்கும் ஆசிரியருக்கு பாதிப்பேதும் இல்லை..

 ஆனால் உழைக்கத்தயங்குவோர் உழைத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.


இவை எல்லாம் மாணவர் நலன் நோக்கியே..

வரவேற்போம்.. மாற்றத்தை...

இன்னும் பல புதிய தகவல்கள் வரவிருக்கிறது..

அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது தமிழகக் கல்வித்துறை



 அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை

ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை.
வந்தாலும் பாடம் நடத்துவது இல்லை.

பள்ளிக்கு லேட்டாக வந்து முடியும் முன்னரே சென்று விடுகின்றனர்.

 ஈராசிரியர் பள்ளியில் முறை வைத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

தலைமை ஆசிரியர்கள் அந்த வேலை,இந்த வேலை என ஆன் டியூட்டி போட்டுவிட்டு சொந்தவேலை செய்கின்றனர்.

இவைபோன்று பல புகார்கள் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து கல்வித்துறை பல நடவடிக்கைகள் எடுத்து இவற்றிற்கெல்லாம் நவீன ஸ்மார்ட் போன் உதவியுடன்   முடிவு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள
தாக தெரிகிறது.

EMIS
தற்போது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS என்னும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது EMIS வலைதளம் மிக வேகமாக செயல்பாட்டில் உள்ளதை கவனித்தீர்களா..!!

ஏன் தெரியுமா ? EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டு விட்டது .இனி EMIS வலைதளம் எப்போதுமே அதிவேகத்திலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை
EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி அதனைப்பயன்படுத்தும் பல ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் உருவாக்கப்பட உள்ளது.
அதற்குண்டான தரவுகள் அனைத்தும் இனிமெயின் சர்வருடன் பங்கிட்டுக் கொள்ளப்படும்.

அதற்கு உதாரணம் தான் சென்ற ஆண்டு மாணவர்களுக்கான அடையாள அட்டை ஆப்ஸ் ஆகும்.
நாம் அதைப்பயன்படுத்தியே மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தோம் அல்லவா..??

அதுபோலவே தற்போது TN ATTENDANCE எனும் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இதனைக்கொண்டு மாணவர் வருகைப்பதிவை நாம் மேற்கொள்ள வேண்டும்.
சரி இதனால் என்ன பயம்.
ஆம் பயமொன்றும் இல்லை.ஆனால் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன.
அதாவது...
பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்க வேண்டும். தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் அவரவர்  கைபேசி கொண்டு வருகை பதிவிட வேண்டும்.

விடுப்பு எடுக்கும் ஆசிரியரின் வகுப்பிற்கு மட்டும் நாளில்தான்  அடுத்த ஆசிரியர்  பிற ஆசிரியர் வகுப்பிற்கு வருகை பதிவிட வேண்டும்.

முன்னரே...
 அதாவது...
 ஒவ்வோரு கைபேசி எண்ணும் அதற்குண்டான ஆசிரியர் பெயருடன் இணைத்து தரவுகள் சேகரிக்கப்படும்.

அதனைக்கொண்டு பள்ளிக்கு வராமலேயே.. அடுத்த ஆசிரியர் 
போன் மூலம் யார் யார் வருகை பதிவு மேற்கொண்டனர் என வகைப்படுத்தப்படும்.

 இதன் மூலம் அவரவர் வகுப்பிற்கு அவரவரே கைபேசி மூலம் வருகைப்பதிவு செய்தால் தான் ஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார் என அர்த்தம் இல்லையேல் அவர் வரவில்லை என கணக்கெடுக்கப்படும்.

அதாவது அவரது வருகை போலி என கணக்கிடப்படும். இதன்மூலம் இரு ஆசிரியர் எந்த எந்த வகுப்பிற்கு அன்றைய தினம் கையாண்டு உள்ளார் என அறியலாம்

QR  கோடுகள் ஸ்கேன் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஆசிரியர்கள் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும்.

ஆசிரியர்களின் கைபேசி எண்கள் ஏற்கனவே மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அவர் போதிக்கும் போது பயன்படுத்திய QR  கோடுகள் மூலம் அவர் என்ன என்ன பாடங்கள் போதித்தார் என.. தானகவே பதிவு செய்யப்பட்டு அத்தகவல் மெயின் சர்வருடன் இணைத்து  கண்காணிக்கப்படும்.

 அவர் QR  கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் பாடம் போதிக்க வில்லை சும்மா இருந்ததாக கணக்கிடப்படுமாம்.

பாடம் சம்மந்தப்பட்ட QR  கோடுகள் ஸ்கேன் செய்ய அரசு சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு
ஏற்கனவே ஆசிரியர் விவரங்கள் TEACHER PROFILE என்ற முறையில் தகவல்கள் திரட்டப்பட்டு தயாராக உள்ளன.இதனை EMIS,DISE தரவுகளுடன்  இணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஈரிரு வாரங்களில் இப்பணி முடிவடைந்ததும் ஆசிரியரின் வருகைப்பதிவிற்கு என தனி ஆண்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட உள்ளது.

  இந்த ஆப்பில் ஆசிரியர் தன் கைரேகையை காலை 9.00-9.15 க்குள்ளும்  பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும் பதிய வேண்டும்.

இதில் என்ன வென்றால் பள்ளியின் அமைவிடம் குறித்த அட்ச , தீர்க்க ரேகை விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் கைரேகை பதிவிடும் போது அவர் இருக்கும் இடத்தின் அட்ச தீர்க ரேகையுடன் பதிவாகும் வகையில் இந்த ஆப் தயாரிக்கப்பட உள்ளதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைவிடத்துடன் ஒப்பிட்டு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் இது செயல்பட உள்ளதாம்.100 மீட்டர் வேறுபாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பதியாவிட்டால் விடுப்பு விவரங்கள் பதிவிட வேண்டும். 

அத்தரவுகள் உடனுக்குடன் தொகுத்து உயரதிகாரிகளின் பார்வைக்கு ஆட்டோமேட்டிக்காக  தினமும் காலை மாலை  என  விவரங்கள் (இதற்கென தனியாக அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்ட தனி ஆப்ஸ்-ல் )தகவல்கள் பரிமாறப்படும்.

ஆசிரியரின் வருகை வாராந்திர ,மாதாந்திர அறிக்கைகள் பள்ளியின் DISE எண்ணை தெரிவு செய்தால் போதும் கிடைத்துவிடும்.அதேபோல் அவர் கையாண்ட வகுப்பு, நடத்திய பாடங்கள் என்ன? போன்ற விவரங்களும் கிடைத்துவிடும்.

இனி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன்ராய்டு போன் தான் உண்மை விளம்பி மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஸ்பை.

 நம்மை கேட்காமலேயே நம் செயல்பாட்டை  கண்காணிக்க நமது போன் தான் அதிகாரிகளுக்கு தரவுதரும் கருவியாகிறது.

 உண்மையாக உழைக்கும் ஆசிரியருக்கு பாதிப்பேதும் இல்லை..

 ஆனால் உழைக்கத்தயங்குவோர் உழைத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.

இவை எல்லாம் மாணவர் நலன் நோக்கியே..

வரவேற்போம்.. மாற்றத்தை...

இன்னும் பல புதிய தகவல்கள் வரவிருக்கிறது..

WAIT AND SEE..🤔🤔🤔

புதிய பாட திட்டம் - ஜூலை முதல் வாரத்தில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடங்களை நடத்துவதற்காக 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில் பயிற்சி தொடங்க உள்ளது.


கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் ெசய்யப்படாமல் இருந்தது. இதையடுத்துமுதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பாடங்களை நடத்துவதற்கான வழி முறைகளையும் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 


இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் இந்த பயிற்சி தொடங்க உள்ளது.

1, 6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் நடத்த உள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பகுதி வாரியாகவும், மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகளாக  பணி அமர்த்தப்பட உள்ளனர்


தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, நிர்வாக சீர்திருத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது

இந்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பணியிடங்களை சீர்திருத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது

இதன்படி ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் பணி நிரவல் செய்து உபரி ஆசிரியர்களை காலியாக உள்ள இடங்களில் நியமித்து வருகின்றனர்

அதன்படி 7 ஆயிரம் உபரி இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கு பிறகு தமிழகத்தில் ஆசிரியர் பணியிடம் தேவை ஏற்படாது என்று கூறப்படுகிறது.

அதனால் புதிய ஆசிரியர் நியமனங்கள் இனி இருக்காது. புதிதாக பணி அமர்த்தினால் ஏற்படும் நிதிச்சுமையும் கிடையாது.

அடுத்தகட்டமாக, பள்ளிக் கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக 4 அல்லது 6 மண்டலங்களாக பிரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தற்போது தலா ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருக்கிறார்.

அந்த மாவட்டங்கள் தலா 4 மாவட்டங்களாக ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்.

பள்ளிக் கல்வித்துறையில் சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது பணியில் உள்ள 12 இணை இயக்குநர்கள் மேற்கண்ட மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்


இவர்கள் கட்டுப்பாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வருவார்கள். இவர்கள் மேற்பார்வையில் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கண்காணிக்கப்படும்

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அதிகாரிகள் கொண்ட சீர்திருத்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Diksha app,YOUTUBE போன்றவற்றை வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு பயன்படுத்தும் முன் செய்ய வேண்டியவை-ஆசிரியர்களின் கவனத்திற்கு

இன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக  
Smartphones பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager போன்ற Android அப்ளிகேஷன்களையும் You tube யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம்.

எனவே 

முன்னச்செரிக்கையாக

phone ல் செய்ய வேண்டியது 

1) play store சென்று settings ல் parent control optionஐ on செய்யவும்.

2) அதன் கீழே உள்ள Apps and Gamesஐ கிளிக் செய்து 12+ ல் டிக் செய்யவும். 

3) அடுத்ததாக  Films ஐ கிளிக் செய்து  U என்பதை டிக் செய்யவும்.

இப்போது  உங்கள் Smartphone  தேவையற்ற விளம்பரங்கள், Videoக்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  பாதுகாப்பானதாக இருக்கும். 

4)அதேபோல் YOU TUBE  settings ல் Restriction  modeஐ on செய்யவும்,

 இவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்.

வேளாண் படிப்பு தரவரிச வெளியீடு திண்டுக்கல் மாணவி ஆர்த்தி முதலிடம்

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இளநிலை படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில், திண்டுக்கல் மாணவி ஆர்த்தி, 'கட் ஆப்' மதிப்பெண், 200 பெற்று முதலிடம் பிடித்துஉள்ளார். 


முதல், 10 இடங்களில், மாணவியர் எட்டு இடங்களை பிடித்துள்ளனர். 'ஆன்லைன்' முறைகோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின்கீழ், 14 உறுப்பு மற்றும் 26 இணைப்புக் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் வழங்கப்படும், 13 இளநிலை வேளாண் படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' முறையிலான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், மே, 18 முதல் ஜூன், 17 வரை பெறப்பட்டன.அதன்படி, 2018 - 19ம் கல்வியாண்டு ஒதுக்கப்பட்ட, 3,422 இடங்களுக்கு, 48 ஆயிரத்து, 676 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கலந்தாய்வுஜூலை, 7ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கவுள்ள நிலையில், பல்கலை துணைவேந்தர் ராமசாமி நேற்று, தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 

இதில், திண்டுக்கல் மாணவி ஆர்த்தி, கட் ஆப் மதிப்பெண், 200 பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.கொடுமுடி மாணவி ஸ்ரீகார்த்திகா, 199.67 பெற்று இரண்டாம் இடத்தையும், கோவை மாணவி மேகனா, 199.5 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துஉள்ளனர். துணைவேந்தர் ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:ஜூலை, 7ல் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ந்து, 9 முதல், 13ம் தேதி வரை முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு, 23 முதல், 27ம் தேதி வரை நடக்கிறது. கல்லுாரிகள் ஆக., 1ம் தேதி துவங்குகின்றன. ஆக., 31க்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்படுகிறது.இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'ஸ்லைடிங்' முறையில் தேவையான பாடப்பிரிவையும், கல்லுாரியையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

திட்டமிட்டு படித்ததால் வெற்றி!இரண்டாம் இடம் பிடித்த கொடுமுடியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீகார்த்திகா கூறுகையில், ''பள்ளியில் ஆரம்பம் முதலே நன்கு படித்தேன். வீட்டிலும், பள்ளியிலும் திட்டமிட்டு படித்ததால் நல்ல மதிப்பெண் எடுக்க முடிந்தது. இளநிலை வேளாண் படிப்பை தேர்வு செய்யவுள்ளேன்,'' என்றார்.மூன்றாம் இடம் பிடித்த கோவை மாணவி மேகனா கூறுகையில், ''நான், 'டியூஷன்' செல்லாமல் வீட்டிலும், பள்ளியிலும் நன்கு படித்தேன். குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள் நன்கு பயிற்றுவித்தனர். பயிற்சிக்கு கிடைத்த பலன் தான் இது. இளநிலை தோட்டக்கலை பாடத்தை தேர்வு செய்யவுள்ளேன்,'' என்றார்.

தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய துவக்கப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளியை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:


திருப்பூரில் பள்ளி இல்லாத இடத்தில், துவங்கியுள்ள அரசு பள்ளிக்கு, 98 பேர் வந்துள்ளனர். இது, கல்வித்துறையின் மீது, மக்கள் வைத்துஉள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகளின் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.தற்போது, ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் அமலாகிய பின், பிளஸ் 2 முடித்து, வெளியே வருவோருக்கு, வேலை கிடைக்கும் நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ''பள்ளிகளுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த, நடப்பாண்டு, 1,800 கோடி ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுஉள்ளது. ''கட்டடம் இல்லாத பள்ளிகளுக்கு, தேவையான புதிய கட்டடங்கள், நபார்டு திட்டத்தின் கீழ் ஜூலை இறுதிக்குள் கட்டப்படும். காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிப்பு அரசாணை வெளியீடு

பல வருடங்களுக்கு முன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள்-மாணவிகள்சேருவதை விட என்ஜினீயரிங் கல்லூரிகளில் அதிகம் சேர்ந்தார்கள். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு பெரிதும் காணப்பட்டது. என்ஜினீயரிங் படித்தாலே வேலை. மேலும் கை நிறைய சம்பளம் என்ற நிலை இருந்தது.


அந்த நிலை படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் வழக்கம் போல பி.காம். படிப்பில் சேர கடும்போட்டி நிலவியது.
கடந்த 18-ந்தேதி பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள் பல ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை முடித்தன. கல்லூரிகளின் வாசலில் மாணவர்களுடன் பெற்றோர்களும் காத்துக் கிடந்தனர். கல்லூரிகளில் மகள் அல்லது மகனுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. இடம் கிடைத்துவிட்டால் ஏதோ பணப்புதையல் கிடைத்தது என்று நினைக்கும் நிலையும் உருவானது.
இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையொட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால் உத்தரவிட்டார்.
இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அரசாணை நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கு இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் திடீர் சிக்கல்

கல்வித்துறையில் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு வெளியிடப்படாததால் ஆசிரியர், அலுவலருக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 ஜூன் 1 முதல் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை பள்ளிகளும் சி.இ.ஓ.,க்கள் கீழ் கொண்டு வரப்பட்டது. 17 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.,) அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்வி ஒன்றியங்களை மாற்றியமைத்து புதிதாக 52 டி.இ.ஓ., அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இப்புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் உட்பட அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களுக்கும் இதுவரை அனுமதி இல்லை. இந்நிலையில் டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்கள், இடம் பெற்ற பள்ளிகள் விவரம் குறித்த எல்லை வரையறைக்கான அரசு உத்தரவும் வெளியாகவில்லை.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதை மாவட்ட, உதவி கருவூலங்கள், சம்பள கணக்கு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் தான் ஆசிரியர், அலுவலருக்கான சம்பளம் வழங்கப்படும். வரையறை உத்தரவு பிறப்பிக்கப்படாததால் இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், என்றார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மெட்ரோ ரயில்வே சார்பில் இலவச கல்வி சுற்றுலா

                                          


சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்ட்ரல்- விமான நிலையம், டி.எம்.எஸ் விமான நிலையம் வரையில் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மெட்ரோ ரயிலின் கட்டமைப்பு, வசதிகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் அரசு பள்ளி மற்றும் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகளை இலவசமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இதை மெட்ரோ ரயில் நிர்வாகமே ஏற்பாடு செய்யும்.

இந்நிலையில், 2018-19ம் கல்வி ஆண்டிற்கான கல்வி சுற்றுலா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கல்வி சுற்றுலாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்ட்ரல்-விமான நிலையம், டி.எம்.எஸ்-விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மெட்ரோ ரயில் அதிகாரிகள், மாணவர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மெட்ரோ ரயிலின் அமைப்பு, சிறப்பம்சம், மெட்ரோ ரயில் செல்லும் வேகம் ஆகியவற்றை தெளிவாக எடுத்துக்கூறினர்