யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/7/18

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியீடு

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவ படிப்பு தரவரிசை
பட்டியல் கடந்த மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மருத்துவ படிப்பு கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி (இன்று) தொடங்கும் என்று தெரிவித்தார். அதன்படி, கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இதுதொடர்பான கால அட்டவணை மருத்துவ தேர்வுக்குழு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு - சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், விளையாட்டு வீரர்கள் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

2-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 1 முதல் 100 வரையிலும், 11 மணிக்கு 101 முதல் 356 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 357 முதல் 597 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

3-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 598 முதல் 848 வரையிலும், 11 மணிக்கு 849 முதல் 1103 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 1104 முதல் 1417 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

4-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 1418 முதல் 1667 வரையிலும், 11 மணிக்கு 1668 முதல் 1872 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 1873 முதல் 2380 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

5-ந்தேதி(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 2381 முதல் 2738 வரையிலும், 11 மணிக்கு 2739 முதல் 3164 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 3165 முதல் 4312 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 4313 முதல் 4905 வரையிலும், 11 மணிக்கு 4906 முதல் 5203 வரையிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு, பிற்பகல் 2 மணிக்கு சாதி தரவரிசை 241 முதல் 389 வரை இடம்பிடித்த தாழ்த்தப்பட்ட முஸ்லீம் பிரிவு மாணவர்களுக்கும், 3 மணிக்கு சாதி தரவரிசை 961 முதல் 1128 வரை இடம்பிடித்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சாதி தரவரிசை 1129 முதல் 1389 வரையில் இடம்பிடித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், 11 மணிக்கு சாதி தரவரிசை 263 முதல் 566 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 567 முதல் 867 வரையில் இடம்பிடித்த எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கும், 3 மணிக்கு சாதி தரவரிசை 26 முதல் 184 வரையில் இடம்பிடித்த எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கும், 4 மணிக்கு சாதி தரவரிசை 5 முதல் 96 வரையில் இடம்பிடித்த எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு சில அறிவுரைகள், நிபந்தனைகளை மருத்துவ தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்துக்கு சென்று கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பிரத்தியேகமாக அழைப்பு கடிதம் யாருக்கும் அனுப்பவில்லை.

* கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு மாணவர்கள் கலந்தாய்வு அறையில் இருக்க வேண்டும்.

* கலந்தாய்வுக்கு வரும்போது, மாணவர்கள் அதற்கான கட்டணமான ரூ.500-ஐ ‘ secretary, selection committee, chennai100 ’ என்ற முகவரிக்கு டி.டி.யாக எடுத்து வரவேண்டும்.

* கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் நீட் ஹால்டிக்கெட், நீட் மதிப்பெண் அட்டை, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆளறி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து இருந்தால் இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

* தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து இருந்தால், அந்த மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க எஸ்.எஸ்.எல்.சி, 12-ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, தொழிற்சார்ந்த படிப்புகள் தொடர்பான சான்றிதழ்களில் ஏதாவது ஒன்றும், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வருமான சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.

* கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்கள் அனைவருக்கு ஒதுக்கீடு கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. கலந்தாய்வு அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை நன்றாக வாசிக்க வேண்டும்.

* அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும், கலந்தாய்வு குறிப்பிடப்பட்டு இருக்கும் நேரத்தில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

* அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காவிட்டால், அடுத்து வரும் கலந்தாய்வில் அனுமதிக்க இயலாது.

* கலந்தாய்வு நடைபெறும் அறைக்கு செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருடன் அவருடைய பெற்றோரில் ஒருவர் மட்டுமே கூட செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளிக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு

திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' என, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார்.

கூட்டத்தில், காணொளிக்காட்சி மூலம், சி.இ.ஓ., ஜெயக்குமார் பேசியதாவது:

பள்ளி வளாகத்தில், தினமும் இறைவணக்க கூட்டத்தில், பசுமை உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரும், ஜூலை, 31க்குள் முற்றிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்.

100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத சிறந்த பள்ளிக்கு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில், ஒரு லட்சம் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை, பள்ளி முகப்பில் தெரியும்படி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்

ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் நடத்துவதில் தனி சிக்கல்கள்!!

ஒரு ஆசிரியர் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு பாடம் !

No automatic alt text available.

28/6/18

புத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம் - கர்நாடக தொடக்கக்கல்வி அமைச்சர்!

வருங்காலங்களில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என்று கர்நாடக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். மஜத கூட்டணியில் இருந்த சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மகேஷ் என்பவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி அமைச்சராக மகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், சாம்ராஜ் நகரில் நடந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர், ஒரு கருத்தை தெரிவித்தார்.

பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் புத்தகத்தை பார்த்து குறிப்புகள் எடுக்கின்றனர். ஆனால், மாணவர்கள் மட்டும் ஏன் புத்தகத்தை பார்க்காமல் தேர்வு எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். விரைவில், தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு நடக்க இருக்கும் தேர்வுகளில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும்.

அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்படும்.
இதுகுறித்து பல நிபுணர்களிடமும், மனோதத்துவ மருத்துவர்களிடமும் ஆலோசித்து வருவதாகவும் மேடையில் பேசினார். இந்த பேச்சு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

CBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க புதிய நடைமுறை

கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் வகையில் கேள்வித் தாள்களை மின் அஞ்சல் மூலமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. 

அண்மையில் நடைபெற்ற சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மறுதேர்வுகள் அடுத்த மாதம் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்கும் வகையில் மின் அஞ்சல் மூலமாக கேள்வித் தாள்களை அனுப்பி வைக்கும் முறையை சோதனை செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இவை 1000 மாணவர்களுக்கு குறைவாக தேர்வு எழுதும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தேர்வு கூட கண்காணிப்பாளர் பாஸ்வர்ட் மூலமாக ஒரு பிரிண்ட் எடுத்து பின்பு மாணவர்களுளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜெராக்ஸ் எடுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒவ்வோரு தேர்வு மையத்திற்கும் சிபிஎஸ்இ சார்பில் ஒரு மேற்பார்வையாளர் இருப்பார். மேலும் ஒவ்வொரு  மையத்திற்கு தனிப்பட்ட கடவுசொல் வழங்கப்படும். இந்த சோதனையில் எதிர்பார்த்த விளைவு வந்ததால், அடுத்த வருடம் நடைபெறும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளின் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு!

திருத்தப்பட்ட ஆசிரியர்- மாணவர்கள் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப கல்லூரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் குறைக்கக்கூடாது என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் பெற்ற அமைப்பு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ). இந்த அமைப்பு ஆசிரியர்கள்- மாணவர்கள் தொடர்பான விகிதாசாரங்களை சமீபத்தில் மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டது. 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்த விதியை மாற்றி, 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அமைத்து உத்தரவு வெளியிட்டது. இந்நிலையில் ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம் மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்களை ஆட்குறைப்பு செய்வதை ஏஐசிடிஇ ஒருபோதும் அனுமதிக்காது. ஏஐசிடிஇயின் கீழ் அங்கீகாரம் பெற்ற எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக ஆசிரியர்கள் ஓய்வு பெறுதல் அல்லது சுயவிருப்பத்தின்பேரில் ராஜினாமா செய்தால் மட்டுமே விகிதாசாரத்தை ஈடு செய்ய வேண்டும்.

வேறு எந்த வகையிலும் ஆட்குறைப்பு செய்து இந்த விகிதாச்சாரத்தை ஈடு செய்யக்கூடாது. ஏஐசிடிஇ அங்கீகரித்த எந்த கல்வி நிறுவனமும் திருத்தியமைக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் காரணமாக ஆசிரியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கை இல்லை என்பதை மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ஏஐசிடிஇ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்க 11 பேர் குழு

சென்னை: நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ கல்லுாரிகளில், கணிசமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநில அரசு நியமித்துள்ள, கல்வி கட்டண நிர்ணய குழு, நிகர்நிலை பல்கலையில் இயங்கும் கல்லுாரிகளுக்கு, கட்டணம் எதுவும் நிர்ணயிக்கவில்லை.
எனவே, நிகர்நிலை பல்கலை நடத்தும் மருத்துவ கல்லுாரிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான, ஜவஹர்லால் சண்முகம் தாக்கல் செய்திருந்திருந்தார்.இந்த மனுவை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, பி.டி.ஆஷா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்து, 'யு.ஜி.சி., அமைக்கும் கட்டண நிர்ணய குழு, விரிவான ஆய்வு மேற்கொண்டு, கல்வி கட்டணத்தை பரிந்துரைக்க வேண்டும். 'அதுவரை, தற்போது சேர்க்கப்படும் மாணவர்களிடம், ௧௩ லட்சம் ரூபாய், நிபந்தனை அடிப்படையில் பெறலாம்' என, இடைக்கால உத்தரவிட்டது.இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர், பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகி, ''நிகர்நிலை பல்கலையில் இயங்கும் மருத்துவ கல்லுாரிகளில், கட்டணத்தை ஒழுங்குபடுத்த, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குனரான, பேராசிரியர் ஆர்.சி.தேக்கா தலைமையில், ௧௧ பேர் அடங்கிய குழுவை, யு.ஜி.சி., நியமித்துள்ளது. ''இக்குழு, கல்லுாரிகள், மாணவர்கள் என, சம்பந்தப்பட்டவர்களுடன் விவாதித்து, நான்கு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்,'' என்றார்.

ஓவர்டைம்' படி ரத்து : மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: அரசு ஊழியர்களுக்கு, 'ஓவர் டைம்' எனப்படும், பணி நேரத்தை விட கூடுதலான நேரம் பணியாற்று வோருக்கான, படி வழங்குவதை நிறுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில், ஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரை அறிக்கையில், 'ஆப்ரேஷனல் ஸ்டாப் எனப்படும், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தவிர, மற்றவர்களுக்கு, 'ஓவர் டைம்' படிகள் வழங்குவதை நிறுத்தலாம்' என, கூறப்பட்டுள்ளது.சில ஆண்டுகளில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.இந்த பரிந்துரையை, மத்திய பணியாளர் துறை அமைச்சகம் ஏற்று, பணி நேரத்துக்கு கூடுதலான நேரத்தில் வேலை செய்வதற்கு வழங்கப்படும் படிகளை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதையடுத்து, எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பணிகளில் ஈடுபடுவோர் உள்ளிட்ட ஊழியர்கள் பட்டியலை தயாரிக்கும்படி, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

6 முதல் 8 வகுப்புகள் வரை படைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியான ஒப்பீட்டு படிவம்!!!

பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு

அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், அமைச்சர், செங்கோட்டையன், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம், பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களின் பணி நிர்வாகத்தை சீரமைப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது என, பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்து உள்ளன.தற்போது, பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த, அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர், செங்கோட்டை யன், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.கடித விபரம்:தமிழகத்தில் உள்ள, நர்சரி, பிரைமரி பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், வளாகத்தின் துாய்மையை மேம்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்களை அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்திலுள்ள, இரு பாலின கழிப்பறைகளையும் முழுமையாக துாய்மைப்படுத்தி, மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை, ஒரு வாரத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

27/6/18

பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : CEO க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்


பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது

முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும் பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்

தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன

அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன

அதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்

பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது

அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது

இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்

மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நாமக்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன

இவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும்

அரசாணைஇணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்

இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன

விரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது

ALM, TLM, MINDMAP முறையாக பயன்படுத்தவில்லை - 4 ஆசிரியர்களுக்கு MEMO - விளக்கம் அளிக்காதபட்சத்தில் மேல்நடவடிக்கை - CEO செயல்முறைகள்



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள்: அரசாணை வெளியீடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை புதிதாகத் தோற்றுவிக்கவும் நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கல்லூரி கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று, 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும், இந்தப் பாடப் பிரிவுகளை கையாள புதிதாக உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி, 61 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 75 இளநிலை, 53 முதுநிலை, 65 எம்.பில்., 71 பி.எச்டி. என மொத்தம் 264 புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், இந்தப் பாடப் பிரிவுகளைக் கையாள 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கியும் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பில் அஞ்சல் துறை நடத்தும் கடிதப் போட்டி: ரூ.50,000 முதல் பரிசு:

பொதுமக்கள் மத்தியில் குறைந்துவிட்ட கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கில், என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்னும் தலைப்பில் கடிதம் எழுதும் போட்டியை இந்திய அஞ்சல் துறை நடத்துகிறது.
பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு முதன்முறையாக அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. மகாத்மா காந்திக்கு எழுதும் கடிதம்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில், அகில இந்திய அளவில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் 4 பிரிவுகளில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழாண்டுக்கான கடிதப் போட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. ரபீந்திரநாத் தாகூரின் ஆமார் தேஷேர் மாதி' என்ற பெங்காலி மொழி தேசபக்திப் பாடலின் அடிப்படையில் என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பு தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான கடிதத்தை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம். கடிதத்தை, முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேல், அஞ்சல் துறைக் கடிதப் போட்டி என்று தவறாமல் குறிப்பிட வேண்டும்.
4 பிரிவுகளில்: இந்தப் போட்டி 4 பிரிவுகளாக நடைபெறும். 18 வயது வரையில், இன்லாண்டு லெட்டர் பிரிவு (உள்நாட்டு கடிதம்), என்வலப்பிரிவு (கடித உறை) என்ற இரண்டு பிரிவுகளும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இன்லாண்டு லெட்டர் பிரிவு (உள்நாட்டு கடிதம்), என்வலப் பிரிவு (கடித உறை) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறும்ய
கடிதத்தின் அளவு: என்வலப் பிரிவில் எழுதுவோர் ஏ-4 அளவு வெள்ளைத் தாளில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அஞ்சலகங்களில் விற்கப்படும் கடித உறை அல்லது வேறு உறைகள், தேவையான அளவு அஞ்சல் தலை ஒட்டப்பட்டவை மற்றும் இன்லாண்டு கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கூரியர் மூலம் அனுப்பப்படும் தபால்களோ, நேரில் தரப்படும் கடிதங்களோ ஏற்கப்பட மாட்டாது.
ரூ.50,000 பரிசு: மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.25,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.10,000-மும், மூன்றாவது பரிசாக ரூ.5,000-மும் வழங்கப்படும். அகில இந்திய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாவது பரிசாக ரூ.25,000, மூன்றாவது பரிசாக ரூ.10,000 அளிக்கப்படும்.
வயது சான்றிதழ் அவசியம்: இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஆர்.ஆனந்த் கூறியது:
இந்தப் போட்டிக்கான கடிதங்களை செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். போட்டியில் பங்கு பெறுவோர், கடிதத்தின் மேல், 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதியன்று, தங்களின் வயது 18 -க்கு மேல், 18 -வயதுக்குகீழ் என்று சான்றளிக்கிறேன்' என்று வாசகத்தை எழுதி கையெழுத்திட வேண்டும். வெற்றி பெறும் போட்டியாளர்களின் வயதுச் சான்றிதழ் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பரிசுக்கு பரிந்துரைக்கப்படும். கட்டுரைகள் புலமை வாய்ந்த நபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் படித்து, சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்வர்.
கடிதம் எழுதும் போட்டியில் கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து மொத்தம் 99,513 பேர் பங்கேற்றனர். இதில், சென்னை மண்டலத்தில் மட்டும் 29, 407 பேர் பங்கேற்றனர். இவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் வீதம் மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாநில அளவில் பரிசு தொகை வழக்கப்பட்டது. மேலும், அகில இந்திய அளவில் 12 பேரின் கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் நாகை மாவட்டத்தை சேர்ந்த சௌந்தரராஜன், ரங்கநாயகி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றனர் என்றார் அவர்

11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creative கேள்விகள் : மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை:

11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில்20 விழுக்காடு வினாக்கள் சிந்தனை மற்றும் உயர் திறன் சார்ந்து சிந்தித்து விடையளிப்பவையாக இருக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 இதுதொடர்பாக அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள், மற்றும் பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர்திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு கேள்வித் தாள் நடைமுறையில் மாற்றமில்லை.

11ம் வகுப்பு தமிழ் புத்தக அட்டை படத்தில் செங்கீரை மண் குதிரை தேர்வானது எப்படி?

                                                         
அரிமளம் அருகே உள்ள கிராம கோயில் மண் குதிரை 11ம் வகுப்பு தமிழ்ப்பாட புத்தகத்தில் அட்டைப் படமாக வந்துள்ளது. இது எங்கள் கிராம திருவிழாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

 புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம், திருமயம் பகுதியைச் சுற்றியுள்ள அரண்மணைபட்டி, விராச்சிலை, பனையப்பட்டி, சாஸ்தார்கோவில், செங்கீரை, ராயவரம், நம்பூரணிபட்டி, கீழாநிலைக்கோட்டை, புதுநிலைப்பட்டி, கே.புதுப்பட்டி, ராயவரம், புலிவலம், மிரட்டுநிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அய்யனார் கோயில்களில் வருடம் தோறும் குதிரை(புரவி) எடுப்பு திருவிழா நடத்துவது வழக்கம். வருடம் தோறும் குதிரை எடுப்பு திருவிழா நடத்தி இரவு நேரங்களில் கோயில் அருகிலேயே புராண நாடகம், கலை நிகழ்ச்சி நடத்தி அய்யனாரை வழிபட்டு வருகின்றனர்.

இதனிடையே நடப்பு வருடம் தமிழக அரசு 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் 11ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள அட்டை படம் அரிமளம் அருகே உள்ள செங்கீரை தலைகுடை அய்யனார் கோயில் மண் குதிரை அச்சிடப்பட்டிருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இது எங்கள் கிராம கோயில் விழாக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுவதாக அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இது பற்றி செங்கீரையைச் சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, எங்கள் ஊரில் நடைபெறும் விழாக்களில் ஊர் காவல் தெய்வமான தலைகுடை அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழா மிக முக்கியமானது. பெரும்பாலும் திருவிழா வைகாசி மாதம் கடைசி தேதிகளில் நடைபெறும். திருவிழா தொடங்குவதற்கு 2 மாதம் முன்னர் மண் குதிரை செய்யும் வேளார் இனத்தவர்களிடம் அய்யனார் குதிரை செய்து தர வேண்டி பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.


அதன்படி அரண்மனை மற்றும் 5 ஊர் சார்பில் 1 குதிரையும் செய்வதோடு பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு ஏற்ப குதிரைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை தொடர்ந்து விழாவுக்கு முதல் நாள் ஊரார்கள், பக்தர்கள் வேளார் வீட்டுக்கு சென்று அங்குள்ள குதிரைகளை தோளில் சுமந்து வந்து செல்லாயி அம்மன் மந்தையில் வைத்து புஜை செய்து, சாமியாட்டம் நடைபெறும். அடுத்த நாள் குதிரை எடுப்பு விழா நடைபெறும். அப்போது ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் குதிரைகள் செங்கீரையில் உள்ள தலைகுடை அய்யனார், செல்லாயி அம்மன், முன்னோடி கருப்பர், அடைகலம்காத்தான் ஆகிய கோயில்களுக்கு குதிரைகள் பிரித்து அனுப்பட்டு கோயில் வாசலில் காவலுக்கு வைக்கப்படும். இந்நிலையில் எங்கள் கிராம கோயில் மண் குதிரை தமிழக அரசு பாடப் புத்தகத்தில் வந்தது பெருமையாக உள்ளது என்றனர்.

இதுபற்றி புதுக்கோட்டை கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வனிடம் கேட்டபோது, 11ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தில் தமிழர்களின் கலாசாரம், மரபு, பாரம்பரியம், வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும் விதமாக அட்டை படம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் துணை இயக்குனர் அருள்முருகன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும் தெரிவித்தார். மேலும் கிராமங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாவான குதிரை எடுப்பு திருவிழாவில் உள்ள சுட்ட மண் குதிரை படம் இருந்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள சுட்ட மண் குதிரையை போட்டோ எடுத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனடிப்படையில் திருமயம், அரிமளம் பகுதி கிராமங்களில் அய்யனார் கோயில் வாசலில் உள்ள சுட்ட மண் குதிரைகளை போட்டோ எடுத்து சுமார் 150க்கும் மேற்பட்டவை  அனுப்பப்பட்டது. இதில் அரிமளம் அருகே உள்ள செங்கீரை கிராம அய்யனார் கோயில் குதிரை சிலை தேர்வு செய்யப்பட்டு பாடப்புத்தகத்தில் அட்டை படமாக அச்சிடபட்டுள்ளது மகிழ்ச்சி அளித்தது. செங்கீரை அய்யனார் கோயில் குதிரை தேர்வு செய்ததற்கு அதன் ஆபரணம் போன்ற வடிவமைப்பு, வர்ண பூச்சு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்

11ஆம் தமிழ் பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சிகள் (66 கானொளிகள்)

மருத்துவ படிப்பில் கூடுதல் இடங்கள்!!

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு,
 3,355; தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.

அதேபோல, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,095; தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 690 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதற்கான தரவரிசை பட்டியல், வரும், 28ல் வெளியிடப்படுகிறது. முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறுகிறது.மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு, ஏழு, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, ஐந்து, எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. நடப்பாண்டில், 10, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிறுவயதிலேயே பெண் குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவைகள் :

யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ,மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.


உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள்,நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.