யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/7/18

ஒரே வங்கி கணக்கிற்குள் இனி "பீம்" மூலம் பணம் அனுப்ப முடியாது:-வரும் 1- ந்தேதி முதல் கெடுபிடி!

தமிழகம் முழுவதும் சொத்து வரி 50 - 100 சதவீதம் உயர்வு

சென்னை : தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகம்,முழுவதும்,சொத்து வரி,50 - 100 சதவீதம்,உயர்வு
இடத்திற்கேற்ப சொத்து வரி விதிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகிறது. முறைப்படி 2008க்கு பின் சொத்து வரி ஏற்றப்படவில்லை. சிலஉள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரிஅவ்வப்போது உயர்த்தப்பட்டது. பல பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்குபெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுத்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு சார்பில்அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இதன்படி குடியிருப்பு பகுதி, வாடகை குடியிருப்பு பகுதி, குடியிருப்பு அல்லாத பகுதி என மூன்று விதமாக சொத்து வரி விதிக்கப்படஉள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம்; வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்; குடியிருப்புஅல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் 'ஏ, பி, சி' என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, சதுர அடி முறையில் தனித்தனியே சொத்து வரி விதிக்கப்பட்டு உள்ளது.அவை அனைத்தும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி நடப்பு ஆண்டு முதல் வசூலிக்கப்படும்.
தி.மு.க.எதிர்ப்பு
வரி உயர்வுக்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி எம்.எல்.ஏ., சுப்பிரமணியன் அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய 3,500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை ஊழல்கள் அனைத்து துறைகளையும் விஞ்சி நிற்கிறது. அதை தடுக்க முடியாத அமைச்சரும் முதல்வரும் சொத்து வரியை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கை. சொத்து வரி உயர்த்தப்பட்டதும் உடனடியாக பாதிக்கப்படுவோர் வாடகை குடியிருப்புதாரர்கள் தான். 
மாநகராட்சி பகுதிகளோடு புதிதாக இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த விதமான புதிய வசதிகளையும் ஏற்படுத்தாமல் மாநகர் பகுதிகளுக்கு இணையாக சொத்து வரியை மட்டும் உயர்த்தியது கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர்கள் 01.08.2017அன்றையநிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரிஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணநிரவல் செய்யப்பட்டமைபணியிலிருந்து விடுவித்த மற்றும் சேர்ந்த அறிக்கை பெறாப்படாதவர்கள்பட்டியல் அனுப்புதல் சார்பு CEO - செயல்முறைகள்!!

தனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும்.
இப்படிப்புகளை தொலைதூரக் கல்வி வழியாகவோ அல்லது தனியாகவோ எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தகுதியான படிப்புதான் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ராஜி உள்ளிட்ட சட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாநில பாடத் திட்டத்தின்படி 10 அல்லது பிளஸ் 2 தேர்வுகளை எங்களில் சிலர் தனித் தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளோம். ஒரு சிலர் 10-ஆம் வகுப்பை முடித்த பிறகு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள என்ஐஓஎஸ்' எனும் தேசிய திறந்தவெளி பள்ளியில் 2 ஆண்டு படிப்பை முடித்துள்ளோம். பின்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் 3 ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகம் மூலமாக 3 ஆண்டு சட்டப்படிப்பையும் படித்து முடித்துள்ளோம். நாங்கள் 10 அல்லது பிளஸ் 2 தேர்வை தனியாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதால், எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மறுக்கிறது.

எனவே, எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.தலைமை நீதிபதி விசாரணை: இந்த மனு மீதான விசாரணை தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முழுஅமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 மற்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இதே போன்று 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் வழியாகப் பெற்றிருக்க வேண்டும். அந்த படிப்புகளை அவர்கள் தொலைதூரக்கல்வி வழியாகவோ அல்லது தனியாக எழுதியோ தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்யத் தகுதியான படிப்புதான்.

10, பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை உரிய வழிகளில் இல்லாமல் திறந்தவெளி பல்கலைக்கழங்கள் மூலமாகவோ நேரடியாகவோ படித்து பட்டம் பெற்றிருந்தால் அவர்கள் மட்டுமே வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய முடியாது. எனவே, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை தனியாகத் தேர்வு எழுதி தற்போது சட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ள, மனுதாரர்களான இந்த மாணவர்களை வழக்குரைஞர்களாக 3 மாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

9ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: 40 ஆண்டுகளில் இல்லாத புது முயற்சி

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல, தமிழக பள்ளி கல்வியிலும், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, 10 வகுப்புக்கும், தொழிற்கல்வி, விருப்ப பாடமாக நடத்தப்படுகிறது.

ஒப்புதல்
இதை பின்பற்றி, தமிழ கத்திலும், இடைநிலை கல்வியில் முதன்முதலாக, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ.,வின் முன்னாள் இயக்குனருமான, ராமேஸ்வர முருகன், இந்த திட்டத்துக்கான கோப்பை தயாரித்து, மாநில அரசிடம் தாக்கல் செய்திருந்தார். அதற்கு ஒப்புதல் கிடைத்து உள்ளது.

இதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், முதற்கட்டமாக, 67 பள்ளிகளில், 9ம்வகுப்பிற்கு மட்டும், தொழிற்கல்வி பாடம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, பள்ளி அளவிலான தேர்வாக அல்லாமல், அரசின் பொது தேர்வுத்துறை வழியாக, தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு பின், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பின், மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன் கூறியதாவது:தமிழகத்தில், 1978 - 79ல், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, அவை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அமலுக்கு வந்தன.
வேலை வாய்ப்பு

ஆனால், இடைநிலைமாணவர்களுக்கும், தொழிற்கல்வி துவங்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. அதை நிறைவு செய்யும் வகையில், 9ம் வகுப்பில், தொழிற்கல்வி பாடம் அமலுக்கு வந்துள்ளது.இதில், தானியங்கி ஊர்தி பொறியியல், வீட்டு அலங்காரம் செய்தல், விவசாயம், அழகு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 

இந்த நடவடிக்கையால், உயர்கல்விக்கு செல்லாமல், பள்ளிப்படிப்பை மட்டும் முடிக்கும் மாணவர்களுக்கும், தொழில் திறனும், வேலை வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். மத்திய திட்டத்தை பின்பற்ற உத்தரவுதொழிற்கல்வி பாடத்தை, சி.பி.எஸ்.இ.,யை போல, தமிழக மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

சி.பி.எஸ்.இ., பின்பற்றும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் பாடத்திட்டப்படி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த மத்திய பாடத்திட்டத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது

பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வின் முடிவு, இன்று வெளியாகிறது.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, உடனடி துணை தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. 
இந்தத் தேர்வு முடிவு, http://www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில், இன்று வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வு முடிவில் சந்தேகம் உள்ளவர்கள், நாளை முதல் இரண்டு நாட்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு பயணமாகும் சேலம் அரசு பள்ளி மாணவர்

அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,745 மாணவ - மாணவியர்
படிக்கின்றனர். இப்பள்ளியில், அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, ஒன்பதாம் வகுப்பு மாணவர் மேகநாதன். சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவி ராகவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக, தானியங்கி வேகத்தடை கட்டுப்பாட்டு கருவியை, மாணவர் மேகநாதன் கண்டுபிடித்துள்ளார். ஆம்புலன்ஸ் வேகமாக வரும் போது, வேகத்தடை, தானாக, சமமான சாலையாக மாறி விடும். பின், மீண்டும், வேகத்தடையாக மாறிவிடும்.போக்குவரத்து சிக்னலும், பச்சை விளக்குக்கு மாறி, மற்ற சிக்னல்கள் சிவப்பு விளக்குக்கு மாறிவிடும். மேலும், செல்லக்கூடிய மருத்துவமனைக்கு, முன்னதாகவே அலாரம் அடிக்கக்கூடிய வகையில் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளார்.பண்ணப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் கூறுகையில், ''பல்வேறு அறிவியல் கண் காட்சியில், மேகநாதன் வெற்றி பெற்றுஉள்ளார். ''சேலம் மாவட்டம், பெருமை கொள்ளும் வகையில், அவர் வெளிநாடு செல்ல தேர்வு பெற்றது, மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.மாணவர், எந்த நாட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

அரசாணை (நிலை) எண். 149 Dt: July 20, 2018 -பள்ளிக் கல்வி-தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது


12-ம் வகுப்பு முடித்ததும் பி.எட் பட்டதாரி ஆகலாம்- அடுத்த ஆண்டு முதல் புதிய கல்வித் திட்டம்

தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில 
திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்

பாராளுமன்றத்தில் இதன் மீதான விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார்

 ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது

24/7/18

முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும்-. தலைமையாசிரியர்கள் தவிப்பு

கடையநல்லூர்: அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக 28 பாட வேளைகளை ஒதுக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பல பள்ளிகளில் இந்த அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.
 போதிய பாடவேளைகள் இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுவதால், அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருவதாக மாநில கணக்காயர் தணிக்கையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நிதி இழப்பை சரி செய்யும் நோக்கில், கல்வித் துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டது.
 இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (ந.க.எண்.055838-நாள் 18-4-2018) சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர்கள், மேல்நிலை வகுப்புகளில் 28 பாடவேளைகள் போதிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் போதிய பாட வேளை இல்லை என்றால் அந்த முதுகலை ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புகளுக்கு, அதாவது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு பாடங்களை கற்பிக்கும் வகையில் பாட வேளைகள் ஒதுக்க வேண்டும்.
 மேல்நிலைப் பிரிவுகளை பொருத்தவரை, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளி அமைந்திருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப் பிரிவுகளை நீக்கிவிட்டு, அதில் பயின்று வரும் மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 ஆங்கிலவழிப் பிரிவுகள்
 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுவது போன்றே, ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனியே ஆசிரியர்கள் நிர்ணயம் செய்திட வேண்டும். ஆங்கிலவழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால், அந்த மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கிலப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 1 முதல் 6-ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 60 மாணவர்கள் இருப்பின் இரண்டு ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் வரை இருப்பின் 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் வரை இருந்தால் 4 ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு 30 மாணவருக்கும் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தால் அதை ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஐம்பதுக்கு மேல் மாணவர்கள் இருந்தால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து, கூடுதல் பிரிவை ஏற்படுத்தலாம்.
 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 5 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை 60க்கு மேல் கூடினால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
 வாரத்துக்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளைகள் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 காற்றில் பறக்கும் அறிவிப்புகள்
 நிதி இழப்பை சரிசெய்யும் நோக்கில் கல்வித் துறை எடுத்துள்ள முடிவை பொதுமக்கள் வரவேற்று வரும் நிலையில், பல பள்ளிகளில் இத்தகைய அறிவிப்புகளை பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. முதுகலை ஆசிரியர்கள் பலர் மேல்நிலை வகுப்புகளில் போதிய பாடவேளைகள் இல்லாதபோதும், கீழ் வகுப்புகளுக்கு செல்வதை கெüரவக் குறைச்சலாக பார்க்கும் நிலை உள்ளதால், பட்டதாரி ஆசிரியர்களே வழக்கம் போல் அந்தப் பாட வகுப்புகளுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 இதனால், குறைந்தபட்சமாக 28 பாடவேளைகள் கூட இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையே பல பள்ளிகளிலும் தொடருகிறது. சில பள்ளிகளில் கண்துடைப்பாக நீதி போதனை வகுப்புகள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
 கல்வித் துறையில் உயரிய அதிகாரியான இயக்குநரின் உத்தரவைக் கூட செயல்படுத்த முடியாமல் சில தலைமையாசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
 ஏற்கெனவே, நிதி நெருக்கடியில் தவித்துவரும் அரசு, நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 - வி. குமாரமுருகன்

சொத்து வரி, குடிநீர் வினியோகம் உயர்வு-மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி உட்பட்ட சொத்து வரி மற்றும் குடிநீர் வினியோகம் உயர்வுக்காண ஆணை



பள்ளிகளில் 'எமிஸ்' பதிவு பணி: வரும் 31க்குள் முடிக்க உத்தரவு

அனைத்து வகை பள்ளிகளும்,வரும், 31க்குள், எமிஸ் பதிவு பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு இணையதளத்தில் (எமிஸ்), பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் மாணவர்களின் பதிவு, புதிய மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், இதில் ஆண்டுதோறும் பதிவேற்றம்

செய்யப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல், தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளும், எமிஸ் பதிவு அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, முறையான, முழுமையான பதிவுகளை, பள்ளி தலைமையாசிரியர்கள் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016

பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ளஇணைப்பில் புதிய   அடையாள அட்டையைத் தரவிறக்கம்செய்து கொள்ளலாம்.

CLICK HERE TO DOWNLOAD THE NHIS CARD

அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதி

இழப்பைக் கருத்தில் கொண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக 28 பாட வேளைகளை ஒதுக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பல பள்ளிகளில் இந்த அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.
 போதிய பாடவேளைகள் இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுவதால், அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருவதாக மாநில கணக்காயர் தணிக்கையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நிதி இழப்பை சரி செய்யும் நோக்கில், கல்வித் துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டது.
 இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (ந.க.எண்.055838-நாள் 18-4-2018) சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர்கள், மேல்நிலை வகுப்புகளில் 28 பாடவேளைகள் போதிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் போதிய பாட வேளை இல்லை என்றால் அந்த முதுகலை ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புகளுக்கு, அதாவது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு பாடங்களை கற்பிக்கும் வகையில் பாட வேளைகள் ஒதுக்க வேண்டும்.
 மேல்நிலைப் பிரிவுகளை பொருத்தவரை, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளி அமைந்திருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப் பிரிவுகளை நீக்கிவிட்டு, அதில் பயின்று வரும் மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 ஆங்கிலவழிப் பிரிவுகள்
 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுவது போன்றே, ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனியே ஆசிரியர்கள் நிர்ணயம் செய்திட வேண்டும். ஆங்கிலவழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால், அந்த மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கிலப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 1 முதல் 6-ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 60 மாணவர்கள் இருப்பின் இரண்டு ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் வரை இருப்பின் 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் வரை இருந்தால் 4 ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு 30 மாணவருக்கும் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தால் அதை ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஐம்பதுக்கு மேல் மாணவர்கள் இருந்தால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து, கூடுதல் பிரிவை ஏற்படுத்தலாம்.
 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 5 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை 60க்கு மேல் கூடினால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
 வாரத்துக்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளைகள் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 காற்றில் பறக்கும் அறிவிப்புகள்
 நிதி இழப்பை சரிசெய்யும் நோக்கில் கல்வித் துறை எடுத்துள்ள முடிவை பொதுமக்கள் வரவேற்று வரும் நிலையில், பல பள்ளிகளில் இத்தகைய அறிவிப்புகளை பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. முதுகலை ஆசிரியர்கள் பலர் மேல்நிலை வகுப்புகளில் போதிய பாடவேளைகள் இல்லாதபோதும், கீழ் வகுப்புகளுக்கு செல்வதை கெüரவக் குறைச்சலாக பார்க்கும் நிலை உள்ளதால், பட்டதாரி ஆசிரியர்களே வழக்கம் போல் அந்தப் பாட வகுப்புகளுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 இதனால், குறைந்தபட்சமாக 28 பாடவேளைகள் கூட இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையே பல பள்ளிகளிலும் தொடருகிறது. சில பள்ளிகளில் கண்துடைப்பாக நீதி போதனை வகுப்புகள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
 கல்வித் துறையில் உயரிய அதிகாரியான இயக்குநரின் உத்தரவைக் கூட செயல்படுத்த முடியாமல் சில தலைமையாசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
 ஏற்கெனவே, நிதி நெருக்கடியில் தவித்துவரும் அரசு, நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 - வி. குமாரமுருகன்

கால்நடை மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வு நாளை தொடக்கம்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ

அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) தொடங்க உள்ளது.

மொத்தம் 460 இடங்கள்: இளநிலை கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக். உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்கள் உள்ளன.

ஜூலை 24 முதல் கலந்தாய்வு: இளநிலை கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) மற்றும் உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இந்தப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வு ஜூலை 24-ஆம் தேதி தொடங்குகிறது.

சிறப்புப் பிரிவினருக்கு...முதல் நாளான செவ்வாய்க்கிழமை பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பு மற்றும் பி.டெக் படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். காலை 11.30 மணிக்கு பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பில் தொழில்கல்வி பிரிவினருக்கான ஒதுக்கீடு நடைபெறும். இந்த ஒதுக்கீட்டுக்கு 18 இடங்கள் உள்ளன.

பொதுப் பிரிவினருக்கு...

பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும். பி.டெக் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அழைப்புக் கடிதம்: சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை மாணவர்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in  ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அழைப்புக் கடிதம்: சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை மாணவர்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,

2017ல் வழங்கப்பட்ட, தேர்ச்சி மதிப்பெண் சலுகை, இந்த ஆண்டு கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, 2 011 முதல், பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளி அளவிலான தேர்வு நடத்தப்பட்டது. இந்த நடைமுறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்தது. அதனால், 2017 - 18ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்புக்கு மீண்டும் பொது தேர்வு கட்டாயமானது. அப்போது, மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு பாடத்திலும், அகமதிப்பீடாக, 20 மதிப்பெண்ணும், தேர்வில், 80 மதிப்பெண்ணும் பெற வேண்டும். இவை ஒவ்வொன்றிலும், குறைந்தபட்சம், 33 சதவீதம் மதிப்பெண்பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. பின், இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, இரண்டிலும் சேர்த்து, 33 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என, சலுகை வழங்கப்பட்டது.
இந்த சலுகை, ஓராண்டுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டதால், நடப்பு கல்வி ஆண்டில், குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை கிடையாது என, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. எனவே, இதுபற்றிய விபரத்தை மாணவர்களுக்கு தெரிவித்து, அகமதிப்பீட்டிலும், தேர்விலும் குறைந்த பட்சம், 33 சதவீதம் மதிப்பெண் பெற வைக்க முயற்சிக்க வேண்டும் என,ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் CPS கணக்கு சீட்டு ஆன்லைனில் வழங்கப்படும்:

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இடம்
பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் ரசீது வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக் கான, பழைய ஓய்வூதிய திட்டம், 2004ல் நிறுத்தப்பட்டு, புதிதாக சேர்வோருக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.
இத்திட்டத்தில், இடம் பெற்றவர்களுக்கு, சம்பளத்தில் பிடித்தம் செய்ததற்கு ரசீது வழங் கா மலும், பணப்பயன் கிடைக்காமலும் இருந்தது. எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய, ஆசிரி யர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். இந்நிலையில், பங்களிப்பு திட்ட விபரங்கள் அனைத்தும், தமிழக அரசின் கருவூலத்துறை சார்பில், ஆன்லைனில் இணைக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத்துக்கு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, வரும், 23ம் தேதி முதல், ஆன்லைனில் ரசீது வழங்கப்படும் என, கருவூலத்துறை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Click Here & Download Your CPS Account Slip

ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை!

புதிய பாடத்திட்டம் பற்றி ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி தேவை என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் “மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 11ஆம் வகுப்புக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாகத் தயாரிக்கப்பட்டிருப்பதால் அவற்றை மாணவர்கள் புரிந்துகொள்வதில் பல தடைகள் உள்ளன. பெரும்பாலான ஆசிரியர்களால் முற்றிலும் புதிதாகத் தோன்றும் இப்பாடங்களை நடத்த முடியவில்லை. புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது இத்தகைய சிக்கல்கள் எழுவது இயல்புதான்.

இந்த நிலையில், பல மாணவர்கள் கடினமான பாடங்களை படிக்கத் தயங்கி வேறு படிப்புகளுக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் இருந்து விலகி, வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். வேறு பலர் 11ஆம் வகுப்பிலிருந்து விலகி பல தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பாடத்திட்ட பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற இயலாது என்ற அச்சம்தான் மாணவர்கள் வேறு படிப்புகளில் சேருவதற்குக் காரணம் ஆகும். புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, புதிய பாடங்களை மாணவர்களுக்குப் புரியும் வகையில் நடத்துவதற்கு வசதியாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புதிய கல்வியாண்டு தொடங்கி 50 நாட்களுக்கு மேலாகியும் ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்னும் நிறைவடையவில்லை.

செப்டம்பர் முதல் வாரத்தில் 11ஆம் வகுப்புக்கு காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு இன்னும் பயிற்சியளித்து முடிக்கப்படவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித் துறை எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பல இடங்களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குக் கூட பாடங்களில் ஐயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, புதிய பாடத்தின் மீதான புரிதல் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதற்கேற்றவாறு ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்A

23/7/18

TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா?

டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு ஏன் என்று ஜாக்டோ ஜியோ பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ச்சியடைந்து, அதற்குப்பின் தகுதித்தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு செய்து 2013ம் ஆண்டு முதல் பணிக்காகக் காத்திருப்போர் தமிழக அரசு அண்மையில் தந்துள்ள புள்ளிவிவரப்படி 82 ஆயிரம் பேர்களாவர்.
தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கே மீண்டும் ஒரு தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் முறை இரண்டையும் எதிர்த்துப் போராடியதால் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் ஆசிரியர் பணிநியமனத்திற்குக் கடைப்பிடித்து வந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்திருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தித்தான் பணியளிக்கப்போவதாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

இனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது

 நீட், ஜெ.இ.இ தேர்வுகளுக்கு ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று இனி மற்றொரு மாணவரின் கேள்வித்தாள் அமையாது. கணினி சாப்ட்வேர் உதவியுடன் புதிய வடிவிலான கேள்வித்தாள் வரும் டிசம்பரில் நடக்கும் ‘நெட்’ தேர்வில் அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள் உயர் கல்வி பயிலுவதற்கான தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அண்மையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டது.
இதில் நீட், ஜெஇஇ மெயின், யுஜிசி மெயின், ஜிமாட், ஜிபாட், ஜிமெயின், நெட் உள்ளிட்ட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும். நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும், நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே என ஆண்டுக்கு இரண்டுமுறை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொரு மாணவரின் கேள்வித்தாள் அமையாது. பயிற்சி மையங்கள், பழைய கேள்வித்தாள்களை கொண்டும், கேள்வி-பதில்களை மட்டும் மனப்பாடம் செய்தும் படிக்கின்றவர்களுக்கு புதிய தேர்வு முறை பயன்தராது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற நெட் தேர்வில் புதிய முறை அமலுக்கு வருகிறது. அதன் சிறப்புகள் தொடர்பாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
* மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு (நீட்), பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வு (ஜெஇஇ), கல்லூரி பேராசிரியர்களுக்கான தேர்வு (நெட்) ஆகியவற்றை எழுதுகின்ற மாணவ மாணவியருக்கு இனி தனித்தனி கேள்வித்தாள் இடம்பெறும். ஒன்று போல் மற்றொன்று அமையாது.
* தேசிய தேர்வு முகமை வரும் டிசம்பரில் நடத்துகின்ற ‘நெட்’ தேர்வில் இந்த புதிய முறையை கொண்டுவர உள்ளது. இந்த தேர்வு எழுதுவோருக்கு தனித்தனி கேள்வித்தாள் கிடைக்க செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
* பொதுவாக ஒன்று முதல் நான்கு வரையான கேள்வித்தாள் தயார் செய்து மாற்றி மாற்றி வழங்குவதை விட்டுவிட்டு லட்சக்கணக்கில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு இதில் இருந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உதவியுடன் ஒவ்வொரு தேர்வருக்கும் தனித்தனி கேள்வித்தாள் தயார் செய்து வழங்கப்படும்.
* கேள்வித்தாள் தயார் செய்யப்படுவதற்காக ஓராண்டுகாலம் வரை செலவிடப்படும். பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சாப்ட்வேர், வினாத்தாளில் ரகசிய குறியீடுகள் போன்றவையும் வினாத்தாள் வெளியாவதை தடுக்கும் வகையில் இருக்கும்.
* கேள்விகள், பதில்கள் தயார் செய்ய சாப்ட்வேர் உதவி நாடப்படும். சிலபஸ் முழுவதும் படிக்காமல் கேள்வி பதில்களை மட்டும் படிக்கின்ற மாணவர்கள், தேர்வு மையங்களின் தீவிர பயிற்சியை மட்டும் நம்பியுள்ள மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை பெரும் சவாலாக அமையும்.
* தேர்வர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கேள்விக்கு ஒன்றுபோல் உள்ள பல விடைகள் வழங்கப்படும். அவற்றின் இருந்து சரியானதை தேர்ந்ெதடுக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் முழுமையான சிலபஸ் படித்த மாணவர்கள் மட்டுமே தேர்வுகளில் ஜொலிக்க இயலும். இவ்வாறு உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன