யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/7/18

3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி

அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 
அமைக்கப்படுகின்றன.அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது.இதன்படி, 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும். மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்.இதற்கான நடவடிக்கைகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் மேற்கொண்டுஉள்ளது. இவற்றுடன், ஒரு பள்ளிக்கு, 10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.சென்னை உட்பட, எந்த முக்கிய நகரங்களில் இருந்தும், கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், 'டேப்லட்' பயன்படுத்தி, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், ஸ்மார்ட் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்த முடியும்.இந்த ஸ்மார்ட் வகுப்பில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில், 'ரைம்ஸ்' என்ற, பள்ளி குழந்தைகளுக்கான பாடல்கள், ஒழுக்க நெறி கதைகள் போன்றவையும், வீடியோவாக வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரசு

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் மாற்றம் செய்வதால், விண்ணப்பம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும், அவரது பிறந்த நாளான, செப்.,5ல், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதை, தமிழகத்தில், 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்ற பெயரில், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குகின்றனர்.இதற்கான விண்ணப்பம், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, நல்லாசிரியர் விருதுக்கு, இன்னும் விண்ணப்பம் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தினத்துக்கு, ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், விண்ணப்ப வினியோகம் தாமதம் ஆகியுள்ளது. விருது வழங்குவதற்கான விதிகள், பெரிய அளவில் மாற்றப்படுவதாகவும், அதனால் தான், விண்ணப்ப அறிவிப்பு தாமதம் ஆவதாகவும், தகவல்கள் வெளியாகிஉள்ளன.ஏற்கனவே, தேசிய அளவில் ஆசிரியர் விருதுக்கு, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், நேரடியாக, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், மாநிலங்களுக்கான விருதுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழகத்தில் தனியாக, 'கனவு ஆசிரியர் விருது' அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நல்லாசிரியர் விருதை, பல்வேறு நிபந்தனைகளுடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வெறும் அனுபவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், ஆசிரியர்களின் திறமை, மாணவர்களை உருவாக்கிய விதம், ஒழுக்க நடைமுறைகள், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய விதம் போன்றவற்றையும், ஆய்வு செய்ய உள்ளனர்.ஒவ்வொரு மாவட்டங்களிலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் சிபாரிசுகளுக்கு இடம் தராமல், தகுதி அடிப்படையில், விருது வழங்கப்பட உள்ளது.விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை புகுத்துவதுடன், விண்ணப்ப பரிசீலனையில், கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் தலையீடு இன்றி, பட்டியல் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி -பாடத்திட்டம் – மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு – தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

Special Teachers TRB Exam 2012-2016 C V List Published by TRB

27/7/18

Kalvi Sevai

மனிதராக பிறந்து.. மேதையாக உயர்ந்து.. மறக்க முடியாத மகானாக மறைந்த டாக்டர் கலாம்!

Abdulkalam death anniversary today
சென்னை: மறைந்த பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு நாட்டு மக்கள் அனைவராலும் - குறிப்பாக மாணவர்கள் மற்றும் குழந்தைகளாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர் டாக்டர் கலாம். சிறந்த விஞ்ஞானியாக - அதிலும் குறிப்பாக அணுசக்தி துறையின் ஆற்றல் மிக்க வல்லுனராக - தேசத்தின் திறமைமிக்க நிர்வாகியாக - எதிர்காலத்தின் எழிலார்ந்த இந்தியாவிற்காக தினம் தினம் கனவு காணும் தேசபக்தராக திகழ்ந்தவர் டாக்டர் கலாம். இந்திய திருநாட்டின் முதல் குடிமகனாக - ஜனாதிபதியாக - பதவி வகித்த 5 ஆண்டுகளும் மறக்க முடியாதவை. குடியரசு தலைவர் மாளிகையை "மக்கள் மாளிகை"யாக மாற்றி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் கலாம். ஜாதீய பலமோ - மதத்தின் பின்பலமோ - கோடீஸ்வர பின்னணியோ இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இந்தியாவின் கடைகோடியில் பிறந்து - குடியரசு தலைவர் வரை சொந்த உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்தவர் டாக்டர் கலாம். விடியற்காலையில் விழித்தெழுந்து, வீடு வீடாக செய்தித்தாள்களை விநியோகித்து - தமிழ்மொழியில் பயின்று - விஞ்ஞான மேதையாக வளர்ந்தவர் டாக்டர் கலாம். குடியரசு தலைவராய் திகழ்ந்த காலத்தில் உலக நாடுகளிலும், அனைத்துலக அமைப்புகளிலும் அபாரமான சிந்தனைகளுடன் அற்புதமாய் உரையாற்றி அறிஞர் பெருமக்களையே அசத்தியவர் டாக்டர் அப்துல் கலாம். தனது ஆற்றல் மிக்க உரைகளால் மறைந்த வி.கே.கிருஷ்ணமேனனுக்குப் பிறகு உலக நாடுகளை தனது சிந்தனை மிக்க உரைகளால் இந்தியாவையே நிமிர வைத்தவர் அப்துல்கலாம். பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தன் கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து பாடுபட்டவர் டாக்டர் அப்துல் கலாம். நாட்டை பற்றியும், எதிர்காலம் குறித்தும் இளைஞர்களுக்கு ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், வழங்கியவர் டாக்டர் அப்துல்கலாம். இதுவரை எல்லா குடியரசு தலைவர்களும் ஓய்வுபெற்ற பிறகு, உண்மையாகவே ஓய்வு பெற்று பொதுவாழ்விலிருந்து ஒதுங்கியே வாழ்ந்தாலும் ஓய்வு பெறாமல் பொதுவாழ்விற்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர் டாக்டர் கலாம். தேசத்தின் மிக முக்கிய இரண்டு பிரச்சனையான முல்லை பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனைக்கு மிக முக்கிய ஆலோசனைகளையும் மகத்தான தீர்வுகளையும் முன்வைத்தவர் டாக்டர் கலாம். 100 கோடி மக்களின் அதிகாரப்பூர்வ அதிபர் என்ற உயர் பதவியில் இருந்தும் கூட சாதாரணமாகவும், இயல்பாகவும் நேசப்பூர்வமாகவும் மாணவர்களோடும், குழந்தைகளோடும் உரையாடிய உயர்ந்த உள்ளம் உடையவர் டாக்டர் கலாம். உடம்பில் ஓடும் ஒவ்வொரு ரத்தத் துளியிலும் தேசபக்த உணர்வை இழைத்து கொண்டு மக்கள் ஜனாதிபதியாக மலர்ந்தவர் டாக்டர் கலாம். இளைஞர்களும், மாணவர்களும் தடுமாறி விழும்போதெல்லாம் அவர்களை தன் பொன்மொழிகளால் இன்றுவரைதாங்கி பிடித்து வரச் செய்பவர் டாக்டர் கலாம் குழந்தைகளுக்கு நேருவாகவும், பெரியவர்களுக்கு நவீன காந்தியாகவும் திகழ்ந்தவர் டாக்டர் கலாம். இப்படிப்பட்ட மகான்மேல் ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை ஒரு துரும்பளவுகூட ஒருவரும் எக்காலமும் மீது சுமத்த முடியாது. ஏனெனில் இவர் அரசியல்வாதி இல்லை!

SCERT - 2 Days Training For PG Teachers - Dir Proc

ஆசிரியர்கள் ,தலைமை ஆசிரியர்களின் -கல்விப்பணி திருப்திகரமாக இல்லை யெனில் ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தம் -முதன்மைக் கல்வி அதிகாரி எச்சரிக்கை

No automatic alt text available.

இனி தனியார் பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை??? அரசாணைவெளியிட்ட தமிழக அரசு!

ஆங்கில வழி கல்வி என்ற முறையை தனியார் பள்ளிகள் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுகொண்டு இருந்தன. இதனால் தமிழக அரசு பள்ளிகளின், தமிழ் வழி கல்வி முறையை புறக்கணித்து, தமிழக மக்கள் ஆங்கில மோகம் கொண்டு தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர். 


இதனை பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள்,அதிகபட்ச கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்திருந்தது.இதனை அடுத்து தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விமுறை சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தமிழ்வழி கல்விமுறையில் நிறைய மாற்றங்களையும் கொண்டுவந்தது. இதற்க்கு நல்ல வரவேற்பு பெருகவே, அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்கஅனுமதி கோரி விண்ணப்பித்தது.

இதற்கிடையே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்தார்.இந்நிலையில், நேற்று அதற்கான அரசாணையை தமிழக அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

 அந்த அரசாணையில், ''ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக'' தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ''ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதைஉறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும்''. உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, 1.5 கோடி விடைத்தாள்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் திருத்தப்பட்டன.இவற்றில், 66 ஆயிரத்து, 876 பேர், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.

 இதில், 4,632 பேருக்கு மட்டும், மறுமதிப்பீட்டில் மதிப்பெண்கள் மாறின.இந்நிலையில், மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கு, ஏற்கனவே விடைத்தாள் திருத்தியவர்களின் பட்டியலை, சி.பி.எஸ்.இ., சேகரித்தது. இதில், மதிப்பீட்டில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள்,  'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாகச் சீரமைப்பா ? கூடுதல் பணிச்சுமையா ? ஓர் விரிவான பார்வை

வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் மத்திய அரசு தீவிர பரிசீலனை

வதந்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் எனப்படும் தகவல் பரிமாற்ற சேவையை, உலகம் முழுவதும், 130 கோடி பேர், பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டில் மட்டும், 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர்.இதன் வாயிலாக, தவறான தகவல்களும், வதந்திகளும் எளிதில் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும், பல அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், சமீபத்தில் நடந்தன.இதையடுத்து, வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்துக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலர், அஜய் பிரகாஷ் சாஹ்னியை, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மாத்யூ ஐடிமா, நேற்று சந்தித்து பேசினார்.வாட்ஸ் ஆப் வாயிலாக வதந்திகள் பரவுவதை, உடனடியாக கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து, இருவரும் விவாதித்தனர்.அப்போது, வாட்ஸ் ஆப் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்ததாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், வாட்ஸ் ஆப் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள், எங்கு பாதுகாக்கப்படும் என்பதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டியதாக கூறப்படுகிறது.தகவல்கள் அனைத்தும், இந்தியாவில் தான்பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை, மத்திய அரசு முன் வைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

26/7/18

ஜூலை 27 இரவில் எப்போது தொடங்கும் சந்திர கிரகணம்?



வெள்ளி இரவு தொடங்கி சனிக்கிழமை காலை 4 மணி வரை நீடிக்கும் இரட்டை சந்திர கிரகணங்கள்

Lunar Eclipse 2018 Date and Time: இந்த நூற்றாண்டின் அதிசய நிகழ்வான மிக நீளமான சந்திர கிரகணம் வரும் வெள்ளிக் கிழமை இரவு நடைபெற இருக்கிறது.

வெள்ளி இரவும் சனிக்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் முதல் சந்திர கிரகணம் முழுதாக 103 நிமிடங்கள் வரை நிகழும்.

இந்த நிகழ்வின் போது, ப்ளட் மூன் என்ற நிகழ்வும் நடைபெற உள்ளது. அதாவது சூரியனுக்கும், நிலவிற்கும் நடுவில் பூமி பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும்.

Chandra Grahan 2018 Date, Timing in India and Significance of The Lunar Eclipse

பிளட் மூன் என்றால் என்ன? 

இந்தியாவில் இந்த அதிசய நிகழ்வினை பார்ப்பதற்கான நேரம் எது?

நிலவின் மீது பூமியின் நிழல் விழும் நிகழ்வினை அம்புரா என்று அழைப்பார்கள். இந்த நிகழ்வு வரும் வெள்ளி இரவு, இந்திய நேரப்படி, சரியாக 11.44 நிமிடங்களுக்கு நிகழ ஆரம்பிக்கும்.

இந்தியாவில் எங்கிருந்து இந்த சந்திர கிரகண நிகழ்வினை காணலாம்?

இந்தியாவில் இந்த நிகழ்வினை டெல்லி, புனே, மும்பை, மற்றும் இதர நகரங்களிலும் காண இயலும். ஆனால், இது பருவமழை காலம் என்பதால் மழை பெருவதற்கான வாய்ப்புகளும் இதில் அதிகம். சனிக்கிழமை அதிகாலை 2.43 நிமிடங்களுக்கு பின்னர், மெதுவாக புவியின் நிழலில் இருந்து வெளிவர ஆரம்பிக்கும்.

இரண்டு சந்திர கிரகணங்கள்

இந்த நிகழ்வில் எக்கச்சக்க அதிசயங்கள் நிகழ உள்ளன. மிக நீளமான சந்திர கிரகணம், ப்ளட் மூன், தொடர்ச்சியாக இரண்டு சந்திர கிரகணங்கள் நடைபெற இருக்கிறது.

இரண்டாவது சந்திர கிரகணம் அதிகாலை 2.43 நிமிடங்களுக்கு ஆரம்பித்து 3.49 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு




🏀அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன


 🏀தேர்வு கால விடுமுறை மற்றும் பள்ளி திறக்கும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது


🏀பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்ற பின், தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பிளஸ் 1க்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது


🏀இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடக்கும் தேதிகள், பள்ளி துவங்கிய நாளே அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகளும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டன


🏀நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வுகள் தேதி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன


இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அனைத்து பள்ளிகளுக்கும், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் கையேட்டை அனுப்பியுள்ளார்


 இதில், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன


தேர்வு கால அட்டவணைவகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு


1 முதல் 8 வரை செப்.17 - 22 டிச.17 - 22 ஏப்., 10 - 18


9 முதல் பிளஸ் 2 வரை செப்.10 - 22 டிச.10 - 22 ஏப்., 8 - 18


தேர்வு விடுமுறை

செப்.23-அக்.2

 டிச.23 - ஜன.1

 ஏப்., 19 - ஜூன் 2

மாணவர் தன் விவரப்படிவம் 2018-19:

மாணவர்களின் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கான தேர்வு கால அட்டவணை (மாறுதலுக்குட்பட்டது)

மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள்:

மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய 20 வழிமுறைகள்


ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும்
எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அதனால், இனி பள்ளி, கல்லுாரி படிப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.


ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்'  தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவிப்பின்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிகளுக்கு, தகுதி தேர்வான, 'டெட்' கட்டாயம் ஆகியுள்ளது.தமிழகத்தில், 2012ல், டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர், பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படித்திருப்பதுடன், கூடுதலாக, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பள்ளி, கல்லுாரி கல்வி சான்றிதழ் அடிப்படையிலான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையால், பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு, வேலை கிடைப்பதில் பிரச்னை இருந்தது.எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதிய அரசாணை

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு மட்டுமின்றி, கூடுதலாக போட்டி தேர்வும் நடத்தப் படும். போட்டி தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என,
தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த அரசாணையை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார்.அதன் விபரம்:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன் படி, டெட் தேர்வில், தேர்ச்சிபெற்றவர்களையே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.டெட் தேர்வில், அதிக தரம் பெற்றவர்களை, இனவாரி சுழற்சியில், ஆசிரியர் பணிக்கு நியமிக்கும்போது, அதே தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றவர்களும், தங்களுக்கு ஆசிரியர் பணி வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.இந்த நிலையை மாற்ற, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளது போல, டெட் தேர்வு என்பதை தகுதி தேர்வாக நடத்தி விட்டு, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, தனியாக போட்டி தேர்வு நடத்தலாம்.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், இந்த தேர்வில் பங்கேற்க நிபந்தனை விதிக்கலாம் என, பொதுப்பள்ளி கல்வி வாரியம் பரிந்துரைத்தது.இந்த பரிந்துரைகளை, அரசு ஆய்வு செய்ததில், சில விபரங்கள் பரிசீலிக்கப் பட்டன.டெட் தேர்வின் தேர்ச்சி என்பது, ஏழு ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது என்ற நிலையில், வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி யவர்கள், டெட் தேர்விலா வது அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, மீண்டும் மீண்டும், டெட் தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதனால், தேர்வர் களுக்கு சிரமம் ஏற்படுகிறது.விண்ணப்பதாரர்களின் கல்விசான்றிதழ் அடிப்படையில், வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பின்பற்றுவதால், பல ஆண்டுகளுக்கு முன், அடிப்படை கல்வித் தகுதி பெற்றவர்கள், சமீபத்தில் படித்தவர்களை விட, வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக பெறும், முரண்பாடான நிலை ஏற்படுகிறது.மேலும், ஆண்டுதோறும் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் வேறுபடுவதால், வெயிட்டேஜ் முறையின் படி,தரவரிசை பட்டியல்
தயாரிப்பதில், தேர்வு நடத்தும் அமைப்புக்கும், இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

'வெயிட்டேஜ்' இனி இல்லை


எனவே, ஆந்திரா போன்ற மாநிலங்களில், இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. டெட் தேர்வுடன், போட்டி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.இந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சில முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வை தனியாகவும் நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

விதிமுறை


போட்டி தேர்வை எழுது வதற்கு விண்ணப்பிப்பவர்கள், டெட் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, விதிமுறைப்படி காலியிடங்களை நிரப்பும்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது