யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/7/18

தேன்கூடு SCi 11

தேன்கூடு உளவியல் New

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

Kalvi Sevai

நமது ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாமே அறிந்துகொள்ளலாம் - YouTube

7 லட்சம் பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் திருட்டு. நடவடிக்கை கோரி கமிஷ்னர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் புகார்!!!

தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு TAB பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

Welfare Schemes for students: 20 J-directors in field work:

மாணவர்களுக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய 20 இணை இயக்குநர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிறப்பித்துள்ள அரசாணை: பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும், அரசால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இணை இயக்குநர்களை மாவட்டங்களுக்குச் சென்று களப்பணியை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கோரியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாகப் பரிசீலித்து அதை ஏற்கலாம் என முடிவு செய்து பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து இணை இயக்குநர்களையும் களப்பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி -பாடத்திட்டம் – மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு – தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் விற்பனையா போலீசில் அரசு தேர்வுத் துறை புகார்

தமிழக பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள், 'லீக்' ஆனது குறித்து, விசாரணை நடத்தும்படி, சென்னை போலீசில், அரசு தேர்வுத் துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.'நீட்' தேர்வு எழுதிய சி.பி.எஸ்.இ., 
மாணவர்களின், தனிப்பட்ட விபரங்கள், தனியார், 'டேட்டா பேஸ்' நிறுவனங்களின் வழியாக, லீக் ஆனதாக, இணையதளம் ஒன்றில், சில தினங்களுக்கு முன், செய்தி வெளியானது. இதற்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம்மறுப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறையில் படித்த, பிளஸ் 2 மாணவர்களின் தனிப்பட்ட விபரங்கள், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, மாவட்டத்துக்கு, 2,000 ரூபாய்; ஒரு மாணவர் விபரத்துக்கு, ஒரு ரூபாய் என விற்கப்படுகின்றன.இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றில், இரண்டு நாட்களுக்கு முன், செய்தி வெளியானது.எனவே, இதுபற்றி விசாரணை நடத்தும்படி, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதில், 'மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் முகவரியுடன், தனிப்பட்ட விபரங்களை, 'மார்கெட்டிங்' நிறுவனங்கள் விற்று வருகின்றன.'இந்த தகவல்கள், எங்கிருந்து பெறப்பட்டன; திருடப்பட்டதா அல்லது வேறு யாரிடமும், அதிகாரப்பூர்வமாக வாங்கப்பட்டதா என, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையில், மார்கெட்டிங் நிறுவனங்கள் விற்கும் தகவல்கள், தேர்வுத் துறையிடம் உள்ள தகவல்கள் இல்லை என, தெரிய வந்துள்ளது. ஆனால், அவை, பள்ளி மாணவர்களின் விபரங்கள் என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.பல்வேறு வழிகளில், இந்த விபரங்கள் பெறப்பட்டிருக்கலாம் என்பதால், எங்கிருந்து பெறப்பட்டது என, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசின் தேர்வுத் துறை நடத்தும், அனைத்து தேர்வுகளின், 'டிஜிட்டல்' விபரங்கள் மற்றும், 'ஆன்லைன்' நடவடிக்கைகள், சென்னையில் உள்ள, 'கே லேப்ஸ்' என்ற நிறுவனத்தால் கையாளப்படுகின்றன.தேர்வுக்கான மதிப்பெண் பதிவு விபரங்கள், தமிழக அரசின் தகவல் தொகுப்பு மையம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன், அவர்களது விபரங்கள், 'நாமினல் ரோல் என்ட்ரி' என்ற வகையில், ஒவ்வொரு பள்ளி வாரியாக, தேர்வுத்துறை வழங்கியுள்ள, 'சாப்ட்வேரில்' பதிவு செய்யப்படுகின்றன.இந்த தளங்களை செயல்படுத்தும் உரிமை மற்றும் கட்டுப்பாடுகள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், தேர்வுத்துறை மண்டல அலுவலகம், இணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றுக்கு உள்ளன.தேர்வு முடிவுகள் அனைத்தும், தனியார் நிறுவனம் வழியே, 'பல்க் எஸ்.எம்.எஸ்.,' என்ற, ஒட்டுமொத்த குறுஞ்செய்தியாக, தேர்வுத்துறை சார்பில், மாணவர்களுக்கு அனுப்பப்படும்.அந்த தனியார் நிறுவனத்துக்கு, மாணவர்களின் பெயர், பள்ளி, பதிவு எண், மொபைல் போன் விபரங்கள் வழங்கப்படும்.மேலும், அரசின் பல்வேறு துறைகளின் உதவி தொகைக்காக, மாணவர் விபரங்கள், அந்த துறைகளுக்கு, முழுமையாக வழங்கப்படுகின்றன.மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, தமிழக அரசு வழங்கும் உதவி தொகையை பெறுவதற்கு, 'பவர் பைனான்ஸ்' நிறுவனத்துக்கு, வங்கி கணக்கு எண்ணுடன், மாணவர் விபரங்கள் தரப்படுகின்றன.'பஸ் பாஸ்' வழங்குவதற்காக, மாணவர்களின் வீட்டு முகவரி உள்பட அனைத்து விபரங்களும், போக்குவரத்து துறைக்கு தரப்படுகின்றன.தனியார் நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி மையங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், இலவச பயிற்சி நிகழ்ச்சி, இலவச நீட் தேர்வு பயிற்சி, பல்வேறு அமைப்புகள் சார்பில், பரிசு, உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும், மாணவர் விபரங்கள் தரப்படுகின்றன.பல்வேறு கல்லுாரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் போன்றவை, மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி தருவதாக கூறி, தகவல் திரட்டை பெறுகின்றனர்.பல்கலைகள், மத்திய அரசின் பல்வேறு உதவி தொகை வழங்கும் நிறுவனங்கள், மாணவர் தகவல் திரட்டை, பள்ளிக் கல்வித் துறையில் பெறுகின்றன.இவற்றிற்கு எல்லாம் மேலாக, அந்தந்த தனியார் பள்ளிகளிடம், அவரவர் மாணவர் விபரங்கள் உள்ளன. மேலும், பல்வேறு தனியார் மாணவர் நிகழ்ச்சிகளில், மாணவர்களே தங்களின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை தருகின்றனர்.இவற்றை எல்லாம் நிறுத்தி, ரகசியம் காப்பாற்றினால் மட்டுமே, மாணவர் விபரங்கள் ரகசியமாக இருக்கும். தற்போதைய நிலையில், தகவல் திரட்டு என்பது, வெளிப்படையானதாகவே உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி

அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 
அமைக்கப்படுகின்றன.அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது.இதன்படி, 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும். மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்.இதற்கான நடவடிக்கைகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் மேற்கொண்டுஉள்ளது. இவற்றுடன், ஒரு பள்ளிக்கு, 10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.சென்னை உட்பட, எந்த முக்கிய நகரங்களில் இருந்தும், கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், 'டேப்லட்' பயன்படுத்தி, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், ஸ்மார்ட் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்த முடியும்.இந்த ஸ்மார்ட் வகுப்பில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில், 'ரைம்ஸ்' என்ற, பள்ளி குழந்தைகளுக்கான பாடல்கள், ஒழுக்க நெறி கதைகள் போன்றவையும், வீடியோவாக வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரசு

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் மாற்றம் செய்வதால், விண்ணப்பம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும், அவரது பிறந்த நாளான, செப்.,5ல், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதை, தமிழகத்தில், 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்ற பெயரில், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குகின்றனர்.இதற்கான விண்ணப்பம், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, நல்லாசிரியர் விருதுக்கு, இன்னும் விண்ணப்பம் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தினத்துக்கு, ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், விண்ணப்ப வினியோகம் தாமதம் ஆகியுள்ளது. விருது வழங்குவதற்கான விதிகள், பெரிய அளவில் மாற்றப்படுவதாகவும், அதனால் தான், விண்ணப்ப அறிவிப்பு தாமதம் ஆவதாகவும், தகவல்கள் வெளியாகிஉள்ளன.ஏற்கனவே, தேசிய அளவில் ஆசிரியர் விருதுக்கு, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், நேரடியாக, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், மாநிலங்களுக்கான விருதுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழகத்தில் தனியாக, 'கனவு ஆசிரியர் விருது' அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நல்லாசிரியர் விருதை, பல்வேறு நிபந்தனைகளுடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வெறும் அனுபவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், ஆசிரியர்களின் திறமை, மாணவர்களை உருவாக்கிய விதம், ஒழுக்க நடைமுறைகள், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய விதம் போன்றவற்றையும், ஆய்வு செய்ய உள்ளனர்.ஒவ்வொரு மாவட்டங்களிலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் சிபாரிசுகளுக்கு இடம் தராமல், தகுதி அடிப்படையில், விருது வழங்கப்பட உள்ளது.விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை புகுத்துவதுடன், விண்ணப்ப பரிசீலனையில், கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் தலையீடு இன்றி, பட்டியல் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி -பாடத்திட்டம் – மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு – தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

Special Teachers TRB Exam 2012-2016 C V List Published by TRB