யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/8/18

EMIS பதிவு, 31ம் தேதி கடைசி

EMIS பதிவு, 31ம் தேதி கடைசி அரசு உதவி பெறும் பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி வாரியாக மாணவர்களின் விபரங்கள், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கப்படுகின்றன.

அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின், எமிஸ் மாணவர் சேர்க்கை விபரங்கள், பள்ளிக்கல்வி நிர்வாக இணையதளத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித்துறை கெடு விதித்துள்ளது.குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், மாணவர்களின் விபரங்கள், எமிஸ் பதிவு வழியாகவே எடுக்கப்படும் என்பதால், விபரங்களை தவறின்றி பதிவு செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

25/8/18

உதயச்சந்திரன் அவர்களுக்கு கிடைத்த பரிசா ??

உதயச்சந்திரன் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.

 உதயச்சந்திரன் ஒரு சாதாரண கல்வி அதிகாரி கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மீது தனி காதல் உடையவர். பள்ளி கல்வி மீது அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் நிறைந்தவர். அதனால்தான் அவர் தமிழக பள்ளிக்கல்வி செயலாளராக நியமித்தபோதுகூட சாமான்ய மக்களும் சந்தோஷப்பட்டார்கள்.

ஒளிர்ந்த அண்ணா நூற்றாண்டு
அவர் பணியில் அமர்ந்தவுடன் பள்ளிக்கல்விதுறை செப்பனிடப்பட்டு, சீரமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, பிரகாசமாக மிளிரும் என எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்தது. அதற்கேற்றாற்போல், ஆள், அரவம் இல்லாமல், இருண்டுபோய் கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஒளி ஊட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் உதயச்சந்திரன்.

அன்பை வாரிகொண்டார்
காலங்காலமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், மதிப்பெண்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்று என்ற மாயையைம் உடைத்தெறிந்தார். புதிய புதிய அணுகுமுறைகள், வழிமுறைகள், எளிய நடை உரைநடைகளை உதயச்சந்திரன் பாடத்திட்டத்தில் புகுத்தினார். இதனால் அரசியல் பேதமின்றி ஒட்டுமொத்த தமிழக தலைவர்கள், பெரியவர்கள், குழந்தைகளின் ஆதரவையும் அன்பையும் வாரிக்கொண்டார்.

வெளிப்படைத்தன்மை
ஆனால் நல்லது என்று நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாத நலம் விரும்பிகள் புராண காலத்திலிருந்தே உண்டு. அப்படி இருக்கும்போது உதயச்சந்திரனுக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வராதா என்ன? சிலருக்கு உதயச்சந்திரனின் செயல்பாடுகள் எரிச்சலை தந்தன. வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் சிலருக்கு ஆத்திரத்தை மூட்டின.

நீதிமன்றத்தில் வழக்கு
அதனால் எந்நேரமும் இடமாற்றம், பணி மாற்றம் செய்யப்படலாம் என்ற கருத்தும் ஆழமாக வேரூன்றியே நிலவியது. அதற்கேற்றாற்போல் நீதிமன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு நடைபெற்றும் வந்தது. ஒத்திவைப்பு, விசாரணை என சம்பிரதாயங்களும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருந்தன.

EMIS - Staff Information Form - PDF

பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
 இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 கேரள வெள்ள பாதிப்புக்கு சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் 4 கண்டெய்னர்கள் மூலமாகவும், ஆசிரியர்கள் இணைந்து வழங்கிய ரூ.1 கோடி நிதி காசோலையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரள மாநிலத்துக்கான நிவாரணப் பொருள்கள் விரைவில் மாவட்டந்தோறும் பெறப்பட்டு அனுப்பப்படும்.
 மாதிரிப் பள்ளி: தற்போது சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாதிரிப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. அதில் எல்.கே ஜி., யூ.கே ஜி. வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் 412 மையங்களில் இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அதற்காக தற்போது ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வு நடைபெறும் தேதி குறித்து வரும் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர்.
 இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

EMIS - அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர் விவரம் :ஆக. 31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

தமிழகம் முழுவதும் அரசு, அரசுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆக.31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:இஎம்ஐஎஸ் 18 - 19ம் ஆண்டிற்கான இணையதள பதிவேற்றத்தை எந்த ஒரு மாணவரும் விடுதல் இன்றியும், இரட்டிப்பு பதிவு இன்றியும் முடிக்க வேண்டும். ஏதேனும் விடுதல் இருப்பில் அதை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து வட்டார வள மைய பிஇஒக்கள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்கள் சரியாக உள்ளதாக என ஆசிரியர்களின் விவரங்களை நேரில் எடுத்து வரக்கூறி ஆசிரியர் பயிற்றுநர் உதவியுடன் சரிபார்க்க வேண்டும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வரிசை எண் இஎம்ஐஎஸ் மூலம் எடுக்க இருப்பதால் எஸ்எஸ்எல்சி, பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவிகள் விவரம் கணினி ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரைக் கொண்டு துல்லியமாக சரிபார்த்து மாற்றங்கள் இருப்பின் அதை சரி செய்ய வேண்டும்.பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு குரூப் கோடு சரிபார்க்க வேண்டும்.

இந்த பணிகள் அனைத்தும் ஆக.31க்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும். ஆசிரியரின் முழு விவரம் புதிதாக பதிவேற்றம் செய்யவோ, ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆசிரியரை நீக்கவோ முடியாது. எனவே ஏற்கனவே உள்ள ஆசிரியர் விவரத்தை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

நடப்பாண்டு, பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். 

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், 437.86 கோடி ரூபாய் செலவில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், 5.06 லட்சம் மாணவர்கள், 6.49 லட்சம் மாணவியர்; அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் படிக்கும், 18 ஆயிரத்து, 506 மாணவர்; 4,394 மாணவியர் என, மொத்தம், 11.78 லட்சம் பேருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், நிலோபர் கபில், ராஜலட்சுமி, வளர்மதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

24/8/18

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிரூபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
பாடச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசு பணியிலிருந்துஓய்வு பெற்றவர்கள் 33 வருடம் பணி முடித்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு30 வருடம்பணிமுடித்தால் முழு ஓய்வூதியம் வழங்குவது போல் 30.6.1996க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் அவ்வாறே வழங்கவேண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது. 

63 இன்ஜி., கல்லூரிகள் நடப்பாண்டில் மூடல்?

மாணவர்கள் சேர்க்கை குறைந்ததன் காரண மாக, தமிழகத்தில், 63 இன்ஜினியரிங் கல்லுாரி கள் மூடும் நிலையில் உள்ளதாக, அண்ணா பல்கலை தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.
63, இன௠ஜி., கல௠லூரிகள௠ , நடப௠பாண௠டில௠, மூடல௠?

63, இன்ஜி., கல்லூரிகள் , நடப்பாண்டில், மூடல்?


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, அண்ணா பல்கலை வழியாக, பொது கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு, மாணவர்களை, சென்னைக்கு வரவழைக்காமல், 'ஆன்லைன்' முறையில், அவர்கள் விரும்பிய கல்லுாரியில், இடங்களை தேர்வு செய்ய, வசதி செய்யப் 

பட்டது.இதற்காக, மாநிலம் முழுவதும், 42 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. 


கவுன்சிலிங்கை, 'ஆன்லைன்' வழியாக நடத்து வதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், பெரிய சர்ச்சையின்றி, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பொது கவுன்சிலிங்கில், 72 ஆயிரத்து, 648 இடங்கள் உட்பட, தொழிற்கல்வி, விளையாட்டு மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளையும் சேர்த்து, 74 ஆயிரத்து, 601 இடங்களே நிரம்பியுள்ளன. 97 ஆயிரத்து, 980 இடங்கள், மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன.


மொத்தம், 136 கல்லுாரி கள் மட்டுமே, 50 சதவீத இடங்களை, கவுன்சிலிங் வழியாக நிரப்பியுள்ளன. மற்ற கல்லுாரிகளில், சேர்க்கை அளவு சரிந்து உள்ளது. எனவே இனி, கல்லுாரிகளை தொடர்ந்து நடத்த முடியுமா என, தனியார் கல்லுாரி நிர்வாகங் கள், ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் போது, 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள் இருப்பதாக,அண்ணா

பல்கலை கூறியிருந்தது. -தற்போது, 487 கல்லுாரிகள் மட்டும் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து, 63 கல்லுாரிகள் மூடப் படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


மேலும்,இந்த ஆண்டு,47 கல்லுாரிகளில், வெறும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே, மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எனவே, இந்த கல்லுாரிகளும், இந்த ஆண்டு மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பல்கலையில் தேங்கும் பைல்கள் மாணவர்கள் தவிப்பு

மதுரை, மதுரை காமராஜ் பல்கலையில் கன்வீனர் கமிட்டி கூடுவதில் இழுபறி நீடிப்பதால் நுாற்றுக்கணக்கான பைல்கள் தேங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இப்பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டபின், பல்கலை நிர்வாகத்தை நடத்த சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம் தலைமையில் உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், ராமகிருஷ்ணன் கொண்ட கமிட்டியை உயர்கல்வித்துறை நியமித்தது.துணைவேந்தர் இல்லாத நிலையில் இக்கமிட்டியின் 3 பேருமே பைலில் கையெழுத்திட வேண்டும். ஆனால் பூவலிங்கம், சந்தோஷ்குமார் சென்னையில் பெரும்பாலும் இருப்பதால் மூவரின் கையெழுத்தும் ஒருசேர கிடைப்பதில்லை. இதனால் ஏராளமான பைல்கள் தேங்கிக் கிடக்கின்றன. துறைகள், புலங்கள் வாரியாக மாணவர் சார்ந்த திட்டங்கள், முடிவுகள் மேற்கொள்ள முடியாமல் சிக்கல்கள் ஏற்படுகின்றன.பேராசிரியர்கள் கூறியதாவது:கன்வீனர் குழு அமைக்கப்பட்டாலும் அது இல்லாதது போன்ற நிலை தான் உள்ளது. கமிட்டி கூடாததால் மூவரின் கையெழுத்துக்களும் பைலில் பெறுவது அரிதாக உள்ளது. குறிப்பாக, எம்.பில்., பி.எச்.டி., படிப்பிற்கான நுழைவு தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில் பலர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வழிகாட்டிகள் (கைடு) இல்லை. துணைவேந்தர் இருந்திருந்தால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் கமிட்டி இதுகுறித்து அக்கறை காட்டவில்லை. இதுபோல் ஒவ்வொரு துறைகளிலும் ஏராளமான பைல்கள் தேங்கிக்கிடக்கின்றன, என்றனர்.

தனி ஊதியம் 750ஐ பதவிஉயர்விற்கு பிறகும் அடிப்படை ஊதியத்தோடு இணைந்து பெற்ற கூடுதல் தொகையை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட SHOWCASE NOTICE


How to Delete Whatsapp Backup from Google Drive?

ஸ்மார்ட்போன் லொகேஷனை ஆஃப் செய்திருந்தாலும்,
பயனர்கள் செல்லும் இடங்களை டிராக் செய்வதாக கூகுள் சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பு பயனர்களின் டேட்டா பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை உலகம் முழுக்க சுமார் 200 கோடி பேரும், ஐபோன்களில் கூகுள் மேப்ஸ் மற்றும் சர்ச் அம்சம் பயன்படுத்தும் சில லட்சம் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவை அனைத்திறஅகும் மத்தியில் கூகுள் உங்களது வாட்ஸ்அப் டேட்டாவையும் சேமித்துக் கொள்கிறது. அந்த வகையில் உங்களது சாட்கள் -- மல்டிமீடியா ஃபைல்கள் உள்ளிட்டவை சேமிக்கப்படுகின்றன.

எனினும் இவை கூகுள் டிரைவில் இடத்தை அடைத்துக் கொள்ளாது. அந்த வகையில் உங்களின் குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் க்கள் நீங்கள் சின்க் செய்திருக்கும் கூகுள் டிரைவ் அக்கவுண்ட்டில் கூகுள் உங்களுக்கு வழங்கிய 15 ஜிபி டேட்டாவில் சேமிக்காது.


கிளவுட் போன்ற தளங்களில் டேட்டா இருக்கும் போதும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய மடியாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி கூகுள் டிரைவில் இருக்கும் உங்களது வாட்ஸ்அப் டேட்டாவை அழிக்கலாம்:


1. கூகுள் டிரைவ் வலைத்தளத்திற்கு (https://drive.google.com) உங்களது டெஸ்க்டாப் மூலம் சென்று கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக் இன் செய்யவும்


2. ஸ்மார்ட்போனில் இந்த இணைய முகவரியை பயன்படுத்தினால், இடதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் டெஸ்க்டாப் வெர்ஷன் "Desktop Version" எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்


3. இனி வலதுபுறம் மேல்பக்கம் இருக்கும் கியர் ஐகானை க்ளிக் செய்யவும்





4. செட்டிங்ஸ் சென்று மேனேஜ் ஆப்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

5. கீழே ஸ்கிரால் செய்து வாட்ஸ்அப் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

6. வாட்ஸ்அப் மெசன்ஜர் ஆப்ஷனின் கீழ் "Hidden app data" ஆப்ஷன் தெரியும் வரை காத்திருக்கவும்


7. ஆப்ஷன்களை க்ளிக் செய்து Delete hidden app data ஆப்ஷனை க்ளிக் செய்யவும்


8. டிரைவ் உங்களை ஒருமுறை மட்டும் எச்சரிக்கும், இதில் உங்களின் __ஜிபி வாட்ஸ்அப் மெசன்ஜர் டேட்டா டிரைவில் இருந்து அழிக்கப்பட்டு விடும். மீண்டும் டெலீட் ஆப்ஷனை க்ளிக் செய்து உறுதிப்படுத்தவும் என்ற தகவல் தெரியும். இப்போது இறுதியாக ஒருமுறை Delete ஆப்ஷனை க்ளிக் செய்து உறுதிப்படுத்தவும்.

அறிவியல் உண்மை -மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?

மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?
பகல் நேரங்களில் மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இரவில் மரங்களும் காற்றிலுள்ள பிராண வாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன.

அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு, சுவாசிக்கத் தேவையான அளவுக்கு வேண்டிய பிராண வாயு கிடைக்காது. கரியமில வாயுவையே சுவாசிக்க நேரும். அதனால், இரவில் மரத்தடியில் படுப்பவரின் உடல்நலம் பாதிக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சனிக்கிழமை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கு வேலைநாள்

23/8/18

அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் - தடை கோரி வழக்கு:

மதுரை, திருமால்புரத்தை சேர்ந்த வக்கீல் எர்னஸ்ட்  டி பிரகாஷ் லிவிங்ஸ்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை (ஹைடெக் லேப்) ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 3,090 உயர்நிலைப்பள்ளிகளிலும், 2,939 மேல்நிலைப்பள்ளிகளிலும் செயல்படுத்த முடிவாகியுள்ளது.  இதேபோல் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை கற்பிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் வகுப்பறை என்ற அடிப்படையில் அறிவுத்திறன் (ஸ்மார்ட்)  வகுப்பறைகள் துவங்கப்பட உள்ளன.
இந்த இரு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களை செயல்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. பெரியளவிலான டெண்டர் பணிகளை பாடநூல் கழகம் இதுவரை கையாண்டதில்லை. இதுபோன்ற டெண்டர் பணிகளை அரசின் எல்காட் மூலமே மேற்கொள்ள வேண்டும். 
குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல தகுதியான நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெண்டர் அறிவிப்பு அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பு சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்ய வேண்டும். 
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், அரசுத் தரப்புக்கு அவகாசம் அளித்து மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா ?

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடத்தை நிரப்ப இரண்டாம் கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் தலைமையாசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதல், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் காலிப்பணியிடம் இல்லை எனக் கூறி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தவில்லை.

ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராகவும், பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளிலும் இதுவரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, காலிப்பணியிடத்தை நிரப்ப பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறுகையில்,' தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் அப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும்' என்றார்.

நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு


பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ‘நீட்’  தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஒருமுறைக்கு பதிலாக 2 முறை நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் எனக்கூறிய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இந்த தேர்வுடன் என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறினார். இந்த தேர்வுகள் முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய திறனாய்வு நிறுவனம், இந்த தேர்வுகளை நடத்தும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக, நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019  மே மாதம் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும், JEE நுழைவுத்தேர்வு 2019 ஜனவரி 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும்!

நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு
மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியிருந்ததை, மத்திய அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீட் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், “அடுத்த வருடம் முதல் (2019) நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும். மேலும் அனைத்துத் தேர்வு முறையும் கணினி மயமாக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், பிரகாஷ் ஜவடேகரின் கருத்தில் மாறுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "ஊரக மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதனால் அதிக அளவில் அவதியுறுவார்கள். மேலும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் பிப்ரவரி மாதம் தான் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர் கொள்வார்கள்.
அதனால் அவர்களால் நீட் தேர்வை முழுக்கவனத்துடன் எழுத இயலாது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தக் கூடாது. 2019ஆம் ஆண்டில் நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டும் நடைபெறும். அத்தேர்வு ஆன்லைன் முறைக்குப் பதிலாக, தேர்வு மையங்களில் வழக்கமான பேப்பர்-பேனா முறையிலேயே நடத்தப்பட வேண்டும்" என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.
இதை தொடர்ந்து, மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், ஆன்லைன் முறையில் இல்லாமல் வழக்கமான முறையிலே நீட் தேர்வு நடத்தப்படும் என்று இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான பதிவுகளைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினைபள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில்உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும். 
நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்களது பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (SSLC Mark Sheet Xerox) / உங்கள்பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (HSC Mark Sheet Xerox) மற்றும் உங்கள் மாற்றுச் சான்றிதழின் ஒளிப்பிரதி (TC Xerox) ஆகியவற்றுடன் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பக்கடிதத்தையும் அனுப்ப வேண்டும்.
10 நாட்களுக்குள் உங்களுக்கான தமிழ் வழி சான்றிதழ் நீங்கள்பகிர்ந்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும்.
நீங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்சான்றிதழ் சரி பார்ப்பு அல்லது கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்டுஇருந்தால் அந்த குறிப்பாணையின் ஒளிப்பிரதியையும் ( CV or Counselling Memo) இணைத்து அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Director of Government Examination,
DPI campus,
College Road,
Nungampakkam,
Chennai - 600 034.
Ph: 044-2827 8286, 044-2822 1734.
email: dgedirector@gmail.com
Web: www.tn.gov.in/dge

Diksha Mobile App - New Version Updated ( 20.08.2018 ) :