யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/9/18

நீதிக்கதை :



நன்றி ஓடுகளே!
   


ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
   



  "முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
   


ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

நீதிக்கதை


முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.
அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.
"மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.
தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.
அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.
மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.
"நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.
"மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.
சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.
இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன்
பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.
"என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.
"கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.
அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது.
"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த
கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.
"எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.
அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து
 விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து.
"நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.
உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.
"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''
"எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.
"அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.
"எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.
சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.
"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.
"நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.
நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.


நீதி: ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.

தேர்வு வினாத்தாள் : பள்ளிகளுக்கு அறிவுரை

சென்னை: காலாண்டு தேர்வில், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, தனியார் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தமிழக பாடத்திட்டத்தில், மாநிலம் முழுவதும், நேற்று காலாண்டு தேர்வு துவங்கியது. அரசு பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு துவங்கியது. எட்டாம் வகுப்பு வரை படிக்கும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, வரும், 17ல் தேர்வு துவங்க உள்ளது.இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளும், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான முன் தயாரிப்பு பயிற்சி வழங்கும் வகையில், பள்ளி கல்வியின் வினாத்தாளை பயன்படுத்த, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இந்தாண்டு, பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிளஸ் 2 படிப்புக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கு பதில், 100 மதிப்பெண்களுக்கான தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது.அதேபோல், 'ப்ளூ பிரின்ட்' என்ற வினாத்தாள் கட்டமைப்பு முறையும் நீக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்யவும், தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனில் முழு அடைவை எட்டாத ஆசிரியர்களுக்கு மெமோ

DEE PROCEEDINGS-சிறுபான்மையர் உதவித்தொகை பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

குரூப்-2 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 1,199 பணி இடங்களுக்கு 6½ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

குரூப்-2 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 1,199 காலிப்பணியிடங்களுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 535 பேர் போட்டி போடுகிறார்கள்.
அரசுத்துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்பி வருகிறது. அதன்படி அரசு துறைகளில் காலியாக உள்ள சப்-ரிஜிஸ்டர் கிரேடு-2 காலிப்பணியிடங்கள் 73, தமிழ்நாடு கூட்டுறவுகழகங்களில் சீனியர் ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்கள் 599, தமிழ்நாடு வேளாண்மை மார்க்கெட்டிங் மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் 118, தொழிலாளர் கூட்டுறவு அதிகாரி காலிப்பணியிடங்கள் 30, உதவி தொழிலாளர் ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் 28 உள்பட 23 வகையான 1,199 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது.


இந்த தேர்வுக்காக கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி ஆன்லைனில் பட்டதாரிகள் விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க கடந்த 9-ந்தேதி கடைசி நாள் ஆகும். கடைசி நாள் வரை இந்த தேர்வுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்திற்கு 535 பேர் போட்டிப்போடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தேர்வுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி நடைபெறுகிறது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்படும்.


அந்ததேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆசிரியர்கள் அதிர்ச்சி புத்தகத்தின் உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்ட 80% வினாக்கள்

காலாண்டு தேர்வில் 80% கேள்விகள் புத்தகத்தினுள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டு இருந்ததால் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.


கேள்வித்தாளை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்  மாணவர்களை சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 1 பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு காலாண்டு தேர்வு துவங்கியது. பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாட திட்டத்தில் பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திலும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

 பிளஸ் 2வில் இதற்கு முன் இருந்த கேள்வித்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு புதிய முறையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அதிகாரப்பூர்வமாக கேள்வித்தாள் வடிவமைப்பு பிளஸ் 1 பிளஸ் 2 என இரண்டு வகுப்புகளுக்கும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இணையதளம், வாட்ஸ்அப் போன்றவற்றில் சில தனியார் ஆசிரியர் அமைப்பினர் கேள்வித்தாள் வடிவமைப்பை கடந்த வாரம் வெளியிட்டர். இதை வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் மாணவ மாணவியருக்கு பயிற்சி அளித்தனர்.

 இதற்கு முன் புத்தகத்தின் பின் பகுதியில் உள்ள கேள்விகள் தான் தேர்வில் 95% கேட்கப்படும். ஆனால் இந்த ஆண்டில் இருந்து அனைத்து கேள்விகளும் புத்தகத்தினுள் பகுதியில் இருந்துதான் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் எந்த பாடத்தில் எங்கிருந்து கேள்விகள் வரும் என புரியாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிளஸ் 1 பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத கேள்விகள் புத்தகத்தில் உள் பகுதியிலிருந்துதான் கேட்கப்பட்டிருந்தது.

 புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திலும் இறுதியில் வெளியான ஒரு சில கேள்விகள் மட்டும் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது.  இந்த வினாத்தாளை பார்த்து அரசு பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவ மாணவியர் கலக்கமடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர்.

 கேள்வித்தாள் மாணவர்களுக்கு சற்று கடினமாக தான் இருந்திருக்கும் என முதுகலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முதுகலை ஆசிரியர்கள் கூறியதாவது

அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி? எவை தவறு?

வரைவுகளில் பிழை தவிர்ப்போம்.: அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி எவை தவறு என்பன குறித்து இங்கு காண்போம்.


அலுவல் சம்பந்தமான செய்தி
வரைவுகளில் பிழை தவிர்ப்போம்.:

அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி எவை தவறு என்பன குறித்து இங்கு காண்போம்.

1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் "அவர்களின்" என்கிற வார்த்தை தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக..
வேலூர் மண்டல இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு.



வேலூர் மண்டல இணை இயக்குநரின் செயல்முறைகள் என்பது சரி.

இதற்குப் பின்னர் பிறப்பிப்பவர் திரு. இராஜாராம் என்று எழுதவேண்டும்.

2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ வாக்கியங்களையும் அவற்றுள் எது தவறு, எது சரி என்பதையும், இணையான தமிழ்ச் சொற்களையும் பின்வருமாறு தருகிறேன்.

பார்வை 1 - ல் கண்ட = தவறு
பார்வை 1 - இல் கண்டுள்ள = சரி

30 - ம் தேதி என்பது தவறு
30 - ஆம் தேதி என்பது சரி.

கடிதப் பொருள் குறித்து எழுதும் போது அதன் இறுதியில் குறித்து, சார்பாக என்று எழுதுதல் தவறு.

தொடர்பாக என்று எழுதுவதே சரி.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு = தவறு
ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு = சரி

பயணத்திட்டம் = தவறு
பயண நிரல் = சரி.



அய்யா = தவறு.
ஐயா = சரி.

ஊதியப் பட்டியல் = தவறு.
ஊதியப் பட்டி = சரி.

அனுப்புனர் = தவறு.
அனுப்புநர் = சரி.

இயக்குனர் = தவறு
இயக்குநர் = சரி.

நகல் = தவறு.
படி = சரி.

கட்டிடம் = தவறு.
கட்டடம் = சரி.

விபரம் = தவறு.
விவரம் = சரி.

ஆவண செய்யுமாறு = தவறு.
ஆவன செய்யுமாறு = சரி.
( சிலர் ஆவணம் செய்யுமாறு என்று கூட எழுதிவிடுகின்றனர்.)

நிர்வாகம் = தவறு.
நிருவாகம் = சரி.

பொருப்பு = தவறு.
பொறுப்பு = சரி.



விடுமுறை விண்ணப்பம் = தவறு.
விடுப்பு விண்ணப்பம் = சரி.

சில்லறைச் செலவினம் = தவறு.
சில்லரைச் செலவினம் = சரி.

ஆரம்பம், துவக்கம் = தவறு.
தொடக்கம் = சரி.

அனுமதி = தவறு.
இசைவு = சரி.

தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட நிலை, சார்நிலை, தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சித் துறையின் சார்நிலை அலுவலகப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு முறையே முதற்பரிசாக ரூபாய் 3000/-ம், 2ஆம் பரிசாக ரூபாய் 2000/-ம், 3ஆம் பரிசாக ரூபாய் 1000/-ம் வழங்கப்படுகின்றன. இதேபோன்று தெரிவு செய்யப்பெற்ற தலைமைச் செயலகத் துறைகள், துறைத்தலைமை அலுவலகங்கள், அரசுப் பொதுத்துறை நிறுவனத் தலைமை அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அரசாணை எண். 1134. நாள்: 21.06.1978 இல் ஆணையிடப்பட்டுள்ளது

மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனில் முழு அடைவை எட்டாத ஆசிரியர்களுக்கு மெமோ

இந்திய சந்தையைக் குறிவைக்கும் Whatsapp!

ஜியோ ஃபீச்சர் போன்-2வில் வரும் 20ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் சேவை அறிமுகமாகவுள்ளது.


இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், ஃபீச்சர் போன்-2வை அறிமுகம் செய்து தனது அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகி வருகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் வசதிகளைக் கொண்டு KaiOS தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஜியோ ஃபீச்சர் போன்-2 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜியோ ஸ்டோரில் அறிமுகமானது. தற்போது இந்தப் போனுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் செயலி வரும் செப்டம்பர் 20ஆம் தேதியன்று வெளியாகும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ போன், ஜியோ போன்-2வைப் பயன்படுத்தும் பயனர்கள் இந்தப் பிரத்யேகச் செயலியை ஜியோ ஸ்டோரில் சென்று நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன் மாடல்களில் உள்ள வாட்ஸ் அப் சேவையைப் போலவே இதிலும் end-to-end encryption வசதி உள்ளது. வாய்ஸ் ரெக்கார்ட், வாய்ஸ் மெசேஜ் சேவைகளைக் கொண்டுள்ள இந்தப் போனில் வாய்ஸ் கால், வீடியோ கால் சேவை கொடுக்கப்படவில்லை.
இந்த செயலியின் வெளியீடு குறித்து ஊடகத்திற்குப் பேட்டியளித்த வாட்ஸ் அப் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ், "இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள், இந்தியா முழுவதும் இனி ஜியோ போனில் வாட்ஸ் அப் ப்ரைவேட் மெசேஜ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். KaiOS இயங்குதளத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த பிரத்யேக செயலியைக் கொண்டு ஜியோ பயனர்கள், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் சிறந்த சேவையை அனுபவிக்கமுடியும்" என்று தெரிவித்துள்ளார்.



வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 20 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த புதிய சேவையை அடுத்து இந்த எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய சந்தையில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.

DEE PROCEEDINGS-சிறுபான்மையர் உதவித்தொகை பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

நீதிக்கதை :



நன்றி ஓடுகளே!
   


ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
   



  "முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
   


ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு-

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு*


_🔵15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் இல்லை._

*🔵15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-25000/-*

*🔵101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-50000/-*

*🔵251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-75000/-*

*🔵1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-1,00,000/-*

*🔵2017-2018 ஆம் ஆண்டு uDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு.*

*30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும்.*

M.Ed சேர்க்கைக்கு கடைசி தேதி 17-09-2018 ஆகும் -தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழக கடிதம்


ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பயிலும் நாகை மாணவிக்கு காமராஜர் விருது :


நாகையில் 11ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பிரீத்தாவிற்கு காமராஜர் விருது கிடைத்துள்ளது. நாகையில் ஒரு தொண்டு நிறுவனம் எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் தொடங்கியுள்ளது. இதில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் தத்து எடுத்து குடும்ப சூழ் நிலையை போல் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.


  இந்த குழந்தைகள் கிராமத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் தாய், தந்தையை இழந்த பிரீத்தா என்ற மாணவியை அரசு மூலம் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறார். இவர் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறார்.


   இந்நிலையில் பிரீத்தா நன்றாக படிப்பதோடு நடனம், கேரம் விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். இவருக்கு நடனம், கேரம் விளையாட்டுகளில் பங்குபெற்று அதிக பரிசுகளை பெற்றுள்ளார்.


  இதையடுத்து தமிழக அரசு பிரீத்தாவிற்கு படிப்பு மற்றும் நடனம், கேரம் போன்றவற்றில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றதை அடிப்படையாகக்கொண்டு காமராஜர் விருது வழங்கியது. விருது சான்றிதழுடன் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசை கடந்த 5ம்தேதி சென்னையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி வழங்கினார்.


  காமராஜர் விருது பெற்ற மாணவி பிரீத்தாவை நடராஜன் தமயந்தி மேல் நிலைப் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள், மற்றும் எஸ்.ஓ.எஸ். தொண்டு நிறுவன நிர்வாகிகள், அங்கு தங்கியுள்ள சக மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

காலாண்டு தேர்வு வினாத்தாள் : பள்ளிகளுக்கு அறிவுரை :

காலாண்டு தேர்வில், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, தனியார் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தமிழக பாடத்திட்டத்தில், மாநிலம் முழுவதும், நேற்று காலாண்டு தேர்வு துவங்கியது. அரசு பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு துவங்கியது. எட்டாம் வகுப்பு வரை படிக்கும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, வரும், 17ல் தேர்வு துவங்க உள்ளது.


இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளும், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான முன் தயாரிப்பு பயிற்சி வழங்கும் வகையில், பள்ளி கல்வியின் வினாத்தாளை பயன்படுத்த, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இந்தாண்டு, பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிளஸ் 2 படிப்புக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கு பதில், 100 மதிப்பெண்களுக்கான தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது.அதேபோல், 'ப்ளூ பிரின்ட்' என்ற வினாத்தாள் கட்டமைப்பு முறையும் நீக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்யவும், தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

T.N.O.U. செப் .30 வரை அட்மிஷன் :

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பதிவாளர், சுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், தொலைநிலை படிப்புகளில், ஆகஸ்ட், 31 வரை, மாணவர்கள் சேரலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையை, 30ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் நீலகிரியில் உள்ள, பல்கலையின் மண்டல மையங்களில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது www.online.tnou.ac.in என்ற, இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்!





11/9/18

234 தொகுதியிலும் நீட் தேர்வு மையம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

'தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நீட் தேர்வு மையம் உருவாக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு இரண்டு அல்லது மூன்று என நீட் தேர்வு மையங்கள் இருக்கும். வீடியோ கான்பரன்சிங் கிடைக்காத நிலையில் ஒரு நீட் தேர்வு மையமாவது செயல்படும். எல்லா தொகுதியிலும் நீட் தேர்வு மையம் இருக்கும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.


மாதிரி பள்ளிகள், 32 மாவட்டங்களிலும் துவங்க உள்ளது. முதன் முறையாக அரசு சார்பில் தலா 50 லட்சம் ரூபாய் என 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மலை மாவட்ட மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க கல்வித்துறை, 'அதிரடி'

மலை மாவட்ட மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், 4,343 மாணவர்களுக்கு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரியை பொறுத்தவரை, வனப்பகுதிகள், போக்குவரத்து வசதி கள் இல்லாத இடங்களில் உள்ள குழந்தைகள், பள்ளிக்கு வருவதில்லை என்ற புகார் உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், 6 முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
நடப்பு கல்வியாண்டில், நீலகிரி மாவட்ட பகுதிகளில், தொலைவில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த மாணவர்களை, பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், 142 பள்ளிகளைச் சேர்ந்த, 3,331 மாணவர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வனம், வன விலங்குகள் அச்சுறுத்தல் உள்ள, 92 பள்ளிகளைச் சேர்ந்த, 1,012 மாணவர்களுக்கு பாதுகாப்பாளர்கள் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, பள்ளிகள் வங்கி கணக்கில், 67 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.