யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/10/18

அன்பார்ந்த பெற்றோர்களே., தங்களுடைய குழந்தைகள் இன்றைய கல்வி மாற்றத்திற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டுமா?

அதற்காகவே நாங்கள் QB365 App உருவாக்கியுள்ளோம்.
இந்த App மூலம் தங்கள் குழந்தைகளுக்கு நீங்களே ஒரு ஆசிரியராக செயல்பட்டு அவர்களுக்கு வழிகாட்டவும்,  வழி நடத்தவும் உதவுகிறது.
மேலும் புத்தக வினா இன்றி மேலும் பல கூடுதல் வினாக்கள் உடன் அவர்களை தயார் செய்ய இந்த செயலி முழுக்க முழுக்க பயன்படுகிறது. இதன் மூலம் தங்களுடைய குழந்தைகள் பள்ளியின் முதல் மாணவனாக திகழலாம்.
இந்த அரிய செயலியை பெற இந்த QB365 APPlink ஐ click செய்யவும்.

10/10/18





நீதிக்கதை

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்


அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது. மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது. சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன. அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.
இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, “உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?” என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. “ஏன் இந்த முடிவு?” என்றது சிங்கம். தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையடபடும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது. இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும். இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம். அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது. ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது. அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது. என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது. அதற்கு “சிங்கராசா” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது. பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது. முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.

10, 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு அதிரடி மாற்றம் இந்த ஆண்டு அமல்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, முன்கூட்டியே தேர்வு நடத்துதல் உள்ளிட்ட மாற்றங்கள், இந்த ஆண்டு அமலுக்கு வருகின்றன.
மத்திய இடைநிலை கல்வி பாடத்திட்டமான, சி.பி.எஸ்.இ., முறையை பின்பற்றும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதாவது, தொழிற்கல்வி பாடங்களுக்கு, ஏப்ரலுக்கு பதில், பிப்ரவரியில் தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற முக்கிய பாடங்களுக்கு, மார்ச்சில் நடத்தப்பட உள்ளன. தேர்வு முடிவுகள், மே மாதம் வெளியிடப்படும்.பிளஸ் 2 துணை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மதிப்பெண் வழங்க தாமதமாகும் போது, அவர்களால், அதே கல்வி ஆண்டில், கல்லுாரிகளில் சேர முடிவதில்லை. எனவே, டில்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, முன்கூட்டியே தேர்வுகள் நடத்தும் வகையில், புதிய மாற்றத்தை அமல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, பிளஸ் 2வில், ஆங்கில வினாத்தாளில் மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதுவரை, 40 கேள்விகள் இடம் பெற்ற நிலையில், ஐந்து கேள்விகள் குறைக்கப்பட்டு, இனி, 35 கேள்விகள் மட்டுமே இடம்பெறும். இதற்கான மாதிரி வினாத்தாள் பட்டியலை, cbseacademic.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இதற்கிடையில், 10ம் வகுப்புக்கு, 'தியரி' என்ற கருத்தியல் மற்றும் செய்முறை தேர்வில், தனித்தனியே, 33 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற விதி, நடைமுறையில் இருந்தது. கடந்த, 2017ல், 10ம் வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகமானதால், இந்த விதி தளர்த்தப்பட்டு, இரண்டிலும் சேர்த்து, 33 சதவீதம் மதிப்பெண் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த ஆண்டும், இந்த சலுகை தொடருமா என, சி.பி.எஸ்.இ., தரப்பில், அதிகாரபூர்வ தகவல் இல்லாததால், மாணவர்கள் இடையே, குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கலாம் பிறந்த நாளில் பள்ளிகளில் தண்ணீர் பரிசோதனை போட்டி

சென்னை: மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒட்டி, பள்ளி மாணவர்களுக்கு, தண்ணீர் பரிசோதனை திறன் போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி, மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மத்திய - மாநில அரசுகள் சார்பில், பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகளில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தேசிய அளவில், தண்ணீர் பரிசோதனை திறன் போட்டியை, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., வழியாக, பள்ளிகளில், இந்த போட்டிகள் நடத்தப்படும். தமிழகத்தில், மொத்தம், 402 பள்ளிகளில், கலாம் பிறந்த நாளில், அறிவியல் மற்றும் தண்ணீர் பரிசோதனை திறன் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளி கல்வி இணை இயக்குனர், நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட பள்ளி களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், '402 வட்டாரங்களில், தலா, ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு, தேசிய போட்டிக்கு அனுப்பப்படும்' என, குறிப்பிட்டுள்ளார்.இந்த திட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஏரி அல்லது குளத்து நீர், நிலத்தடி நீர் என, மூன்று வகையான நீர் மாதிரியை பயன்படுத்தி, மூன்று வகை பரிசோதனைகள் செய்ய வேண்டும். ஒன்பது முதல், பிளஸ் 2 வரையில் உள்ள மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம்

டிஸ்லெக்சியா' மாணவரை நீக்க தடை

சென்னை: 'டிஸ்லெக்சியா என்ற, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை, கட்டாயப்படுத்தி, பள்ளியில் இருந்து வெளியேற்ற கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
'டிஸ்லெக்சியா' மாணவர்கள் விஷயத்தில், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்த திட்டப்படி, முதல் கட்டமாக, சென்னை மாவட்டத்தில், 1,088 ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில், சிறப்பு பயிற்சிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கான நிகழ்ச்சி, ராயப்பேட்டை, வெஸ்லி மேல்நிலை பள்ளியில் நடந்தது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர், அறிவொளி பேசியதாவது: மாணவர்களின் அடிப்படை திறனை புரிந்து, அதை வெளிக்கொணர வேண்டும். கற்றல் குறைபாடு இருந்தால், அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், அதற்கான பயிற்சி தருவது முக்கியம். தனியார் பள்ளிகளில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கணக்கெடுத்ததில், ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தபட்சம், 20 சதவீதம் பேர் படிக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, ஆசிரியர்களோ, சம்பந்தப்பட்ட பள்ளிகளோ, பயிற்சி தருவதில்லை.மாறாக, மதிப்பெண் குறைவாக வாங்கினால், அவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இனி, எந்த பள்ளியும், கற்றல் குறைபாடுக்காக, மாணவர்களை வெளியேற்ற கூடாது. அவர்களுக்கு, அரசின் சார்பில், இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும், டிஸ்லெக்சியா மாணவர்களுக்கான ஆசிரியர்கள், கட்டாயம் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினா

11.57 லட்சம் மாணவர்களுக்கு கையடக்கக் கணினி வழங்க திட்டம்: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 11.57 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கையடக்கக் கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 285 மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி அவர் மேலும் பேசியது: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 82 லட்சம் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில் 41 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றன. நாங்கள் உங்களுடன் போட்டியிடுவதாகக் கருதக்கூடாது. உங்கள் பணி இன்னும் சிறக்கத் தேவையான உதவிகளை அரசு செய்து தரும்.
மெட்ரிக் பள்ளிகளுக்கு மூன்றாண்டு காலத்துக்கு அங்கீகாரம் வழங்கலாம் என கருதி அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், சிபிஎஸ்இ- சுயநிதிப் பள்ளிகளின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தடையாணை உள்ளதால், தற்போது ஓராண்டு காலத்துக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகத்தில் 500 சுயநிதிப் பள்ளிகளுக்கும் தற்காலிக அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இணையதள வசதியை அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிசம்பர் மாத இறுதிக்குள் மாநிலத்தில் 672 பள்ளிகளில் அடல் அறிவியல் ஆய்வகத் திட்டத்தின் கீழ் தலா ரூ.20 லட்சத்தில் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசு நடத்தும் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் 132 கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருந்தாலும் 2.85 லட்சம்பேர்தான் பட்டயக் கணக்காளர்களாக உள்ளனர். எனவே, தலைசிறந்த பட்டயக் கணக்காளர்களைக் கொண்டு, மாநிலத்தில் 25,000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் செங்கோட்டையன்.
விழாவுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை வகித்து பேசினார். கேரளத்துக்கு அதிக நிவாரண நிதி வழங்கியவர்களைப் பாராட்டி மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி பேசினார்.
விழாவில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 285 பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரப்படுகிறதா ?:கண்காணிக்க சிறப்புக்குழு

பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு வரை, வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுவது குறித்து கண்காணிக்க, சிறப்பு குழுக்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இரண்டாம் வகுப்பு வரை, பள்ளிக்குழந்தைகளுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அமல்படுத்தும் வகையில், தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது. தமிழக அரசால் அனுமதிக்கப்படாத பாடப்புத்தகம், குறிப்பேடுகள் பயன்படுத்தக்கூடாது. உடல் எடையில், 10 சதவீதத்துக்கும் மேல், புத்தகப்பையின் எடை இருக்கக்கூடாது உள்ளிட்டவற்றை, அனைத்து கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

இதை கண்காணிக்க, சார்நிலை அலுவலர்களை கொண்டு, சிறப்பு கண்காணிப்பு குழுவை உருவாக்கியும், பள்ளி ஆய்வின் போது, கவனம் செலுத்தவும், முதன்மைகல்வி அலுவலர்கள்

ராணுவ பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் காலி: விண்ணப்பிக்க ராணுவம் அழைப்பு

நாட்டில் உள்ள 137 ராணுவப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க உள்ளதாக ராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது.  நாட்டில் ராணுவப் பயிற்சி மையங்கள் உள்ள இடங்களில் 137 ராணுவப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் என 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப ராணுவ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதுநிலைப் படிப்பு மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பயிற்சி முடித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிபிஎஸ்இ பள்ளிகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். பணி அனுபவம் அதிகம் உள்ளவர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த பிறகு தகுதிகளை சோதித்த பிறகு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய தளம் வழியாக 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  இதற்கான தேர்வு முறைகள் நவம்பர் 17, 18ம் தேதிகளில் நடக்கும். இது தொடர்பாக கூடுதல் விவரம் வேண்டுவோர் http://aps-csb.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் கவனத்திறனை பரிசோதிக்கலாமா?

மாணவர்களின் கவனத்திறன் எப்படி?

 மாணவர்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா?

அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...

சிறந்த மாணவர்களின் பண்புகளில் ஒன்று கவனத்திறன். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும், நாமாக பாடம் படிக்கும்போதும் கவனம் சிதறாமல் இருந்தால் நமக்கு எளிதில் பாடங்கள் விளங்கிவிடும். நன்றாகப் படித்தும் பாடங்கள் நினைவில் நிற்காமல் போவதற்கு கவனச்சிதறல் காரணமாக இருக்கலாம். உங்களின் கவனத்திறன் எப்படி? உங்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா? அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...


கேள்விகளுக்கு செல்லலாமா?

1. ஒரு பாடம் அல்லது பயிற்சி சிரமமாக இருந்தால் அதை உடனே நிராகரிப்பீர்களா?

அ. ஆமாம், அதுதான் எனக்கு தெரியவில்லையே.
ஆ. முயற்சித்துப் பார்க்கிறேன், ஆனாலும் விளங்கவில்லை.
இ. இல்லை. அதை நிச்சயம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ஆசிரியரிடம் விளக்கம் கேட்பேன்.

2. பேனா, பென்சில் போன்றவற்றை அடிக்கடி மறந்துவிடுகிறீர்களா? இவற்றை இரவல் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?

அ. மறதி இயல்புதானே, நண்பர்களிடம் இரவல் கேட்பதில் தவறில்லையே.
ஆ. மறந்துவிட்டால் இரவல் வாங்கித்தானே ஆக வேண்டும்.
இ. மறக்கமாட்டேன், என்னிடம் அவசர தேவைக்கான கூடுதல் பேனா, பென்சில்கூட இருக்கும்.

3. ஆசிரியர் பாடம் நடத்தும்போது எழும் சிறு சத்தம் அல்லது வெளிப்புற நிகழ்வு உங்களை ஈர்க்கிறதா?

அ. அது என்ன? என்று ஜன்னலில் பார்ப்பேன். நண்பனிடம் பேசுவேன்.
ஆ. ஆசிரியரை கவனிப்பேன். எல்லோரும் வேடிக்கை பார்த்தால் நானும் பார்ப்பேன்.
இ. மற்றவற்றை கவனிக்க மாட்டேன், திடீர்நிகழ்வுகளை மற்றவர் சொன்னால் கேட்டுக் கொள்வேன்.

4. நீங்கள் படிக்கும் இடத்தில் டி.வி. ஓடுகிறதா?

அ. வீட்டில் எல்லாம் இருக்கத்தானே செய்யும். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பேன்.
ஆ. டி.வி. ஓடும், சத்தத்தை குறைக்க சொல்லிவிட்டு படிப்பேன்.
இ. படிப்பதற்கு தனி இடம் செல்வேன். படிக்கத் தொடங்கினால் டி.வி. போடமாட்டார்கள்.

5. பாடம் நடத்தும்போது எடுத்த கிறுக்கல் குறிப்புகளை, பின்னர் உங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறதா?

அ. குறிப்பு எடுக்க சொன்னதற்காக எழுதுவேன். பிறகு புரிவதில்லை.
ஆ. விவரமாக குறிப்பெடுக்க நினைப்பேன் முடிவதில்லை.
இ. ஆம், என் கிறுக்கல்கள், எனக்கு விஷயங்களை விளக்கிவிடும்.

6. யாராவது பேசும்போது குறுக்கீடு செய்து பேசுகிறீர்களா?

அ. ஆமாம். நான் என் கருத்தை சொல்ல வேண்டாமா?
ஆ. பேச தயக்கமாக இருக்கும்.
இ. இடையில் பேச மாட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது என் கருத்துகளை சொல்வேன்.

7. வகுப்பறை சலித்துவிட்டதா?

அ. ஆம். ஓய்வே இல்லையே.
ஆ. வேறு வழியில்லையே.
இ. படிக்கத்தானே வந்திருக்கிறோம். படிப்பதில்தான் விருப்பம் அதிகம்.

8. ஒரு கேள்வி கேட்கும் போதே பதிலை உளறிக் கொட்டுவது உண்டா?

அ. பதில் தெரிஞ்சா சொல்ல வேண்டியதுதானே.
ஆ. பதில் தெரிந்தாலும் சொல்வதற்கு கூச்சப்படுவேன்.
இ. என்னை பதில் சொல்ல அழைத்தால் பதில் சொல்வேன். அல்லது அனுமதி பெற்று பதிலளிப்பேன்.

9. குறிப்புகளை படிக்காமல் விடையளித்திருக்கிறீர்களா?

அ. தேர்வே பிடிக்காது. விடை எழுத சிரமப்படுவேன்.
ஆ. குறிப்புகளை மறந்து நிறைய வினாக்களுக்கு விடை எழுதியிருக்கிறேன்.
இ. இல்லை. குறிப்புகளை படித்த பின்புதான் விடையளிக்க ஆரம்பிப்பேன்.

10. வீட்டுப்பாடத்தை எப்போது எழுதுவீர்கள்?

அ. பள்ளி கிளம்பும் முன்பு.
ஆ. இரவில் தூங்கும் முன்பு
இ. வீட்டுப்பாடம் முடித்துவிட்டுத்தான் வேறுவேலை.

11. ஒரு புதிய பயிற்சி வழங்கினால் அதை சரியாக, சீராக செய்து முடிப்பதில் சிரமம் இருக்கிறதா?

அ. ஆம், அதிக பயிற்சியால் அவதிப்படுகிறேன்
ஆ. சிரமமாக இருந்தாலும் செய்து முடிப்பேன்.
இ. இல்லை, புதிய புதிய பயிற்சிகள் உற்சாகம் தருகின்றன

12. இணையதளத்தில் ஒரு வேலை கொடுத்தால், நீங்களாகவே முயன்று முடித்துவிடுவீர்களா?

அ. ம்ஹூம், இன்டர்நெட் என்னை குழப்பிவிடும், நண்பர்களின் உதவியுடன்தான் கேட்டு செய்வேன்.
ஆ. செய்ய முயற்சிப்பேன், சந்தேகம் வந்தால் நண்பர்களிடம் கேட்பேன்.
இ. என்னால் அது முடியும். தேவையான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன்.

CBSE - 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் வகையில், புதிய மதிப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வில் 33% மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33% மதிப்பெண் பெறுவது கட்டாயமாக உள்ளது. புதிய திட்டத்தில் எழுத்துத்தேர்வு, செயல்முறைதேர்வு இரண்டிலும் சேர்த்து 33% மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

மூன்றாம் வகுப்பு தமிழ் வாசித்தல் மற்றும் எழுதுதல் பயிற்சி!



தற்செயல் விடுப்பு போராட்ட நாளுக்கு சம்பளம் பிடித்தம் செய்தால் வழக்கு: ஆசிரியர் சங்கங்கள் முடிவு :

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு போராட்டம் தீவிரம் அடைந்தது. அதற்கு பிறகு அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், ஒரு நபர் குழுவின் பரிந்துரையை வெளியிடுவதாகவும் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காத நிலையில் இந்த ஆண்டும் தொடர் போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, கடந்த 4ம் தேதி அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் மூலம் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, அக்டோபர் 4ம் தேதி முறையான காரணத்தின் பேரில் சாதாரண விடுப்பு எடுத்திருந்தால், அதன் உண்மைத்தன்மை அறிந்து அந்த விடுப்பை அனுமதிக்கலாம் என்றும், முன் அனுமதி இல்லாமல் அக்டோபர் 4ம் தேதி எடுக்கும் தற்செயல் விடுப்பை ‘‘நோ ஒர்க்; நோ பே’’ என்ற அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்என்றும் தெரிவித்து இருந்தார். இதனால், கடந்த 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.

இதற்கு மேற்கண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். மேலும், சாதாரண விடுப்பை பயன்படுத்துவது என்பது, அடிப்படை விதிகளுக்கு உட்பட்ட விடுப்புஅல்ல. இந்த விடுப்பு பணியாளர்களுக்கு ஒரு சலுகைபோன்றது. ஒரு அரசு ஊழியர் சில நேரங்களில் அரசுப் பணி செய்ய இயலாத நிலை ஏற்பட்டால், அரசுப் பணி செய்ய இயலாத நாட்களை முறைப்படுத்திக் கொள்ள இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விடுப்பை அரசு விடுமுறை நாட்களுடன் சேர்த்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த விதிகள் அடிப்படை விதி எண் 85(3)ன்படி பார்த்தால் கடந்த 4ம் தேதி அரசுப் பணி செய்யாமல் இருந்துவிட்டு, அந்த நாட்களுக்கு சாதாரண விடுப்பு விண்ணப்பத்தை அந்தந்த அதிகாரிகளுக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பும் கடிதங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாதாரண விடுப்பாகத்தான் கருத வேண்டும். எனவே, அந்த நாளை ‘நோ ஒர்க்; நோ பே’ என்று  தீர்மானிப்பது அடிப்படை விதி எண் 85(3)க்கு எதிரானது.

சாதாரண விடுப்புக்கு காரணங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. 4ம் தேதி பணிக்கு வராத பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாக காரணத்தை குறிப்பிட்டு மனு செய்திருந்தால் மட்டுமே அவர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டார் என்று கருத முடியும். எனவே தலைமைச் செயலாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை அரசு பரிசீலிக்கவில்லை என்றால், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்

9/10/18

அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி: அம்பானி!

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிவேக இணைய இணைப்பு வசதி அளிக்க ரூ.4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் சூறாவளியையே ஏற்படுத்தியிருக்கிற முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 2,385க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அதிவேக இணைய இணைப்பு வசதிகள் அளிக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக ரூ.4,000 கோடியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உத்தராகண்டில் அக்டோபர் 7ஆம் தேதி நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முகேஷ் அம்பானி, “சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிற தொழில்கள் மற்றும் நிறுவனங்களை ஜியோ ஊக்குவிக்கும். தேவபூமியாக இருக்கிற உத்தராகண்டை டிஜிட்டல் தேவபூமியாக மாற்றுவோம். ஜியோவால் உத்தராகண்டின் சுற்றுலாத் துறை நிலையான வளர்ச்சி பெறும். சுகாதாரத் துறை, கல்வி மற்றும் அரசு சேவைகள் விநியோகத்தை ஜியோ மேம்படுத்தும்.

உத்தராகண்டில் உள்ள 2,185 அரசுப் பள்ளிகள் மற்றும் 200க்கும் அதிகமான கல்லூரிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இணைய இணைப்புகளை வழங்குவோம். இதன்மூலம் மக்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகளும், வருவாயும் கிடைக்கும். உத்தராகண்ட் மக்களுக்குத் தரமான டிஜிட்டல் சேவைகளை வழங்க வேண்டுமென்பதில் ஜியோ உறுதி பூண்டுள்ளது” என்றார்

தற்செயல் விடுப்பை "No Work No Pay" என்று தீர்மானிப்பது சரியா?

முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் சிக்கல் :

அரசு பள்ளிகளில், பணி நியமனத்தின் போதே, ஊதிய உயர்வு கோரிக்கை எழுந்துள்ளதால், 1,400 ஆசிரியர்களை நியமிப்பதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், தினசரி ஊதியம், சிறப்பு தொகுப்பூதியம் என, பல ஊதிய முறைகளில், ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தொகுப்பூதியங்களில் நியமிக்கப்படுவோர், பணிக்கு சேர்ந்த சில ஆண்டுகளில், சங்கமாக உருவாகி, பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில், பாடம் நடத்த, 11 பாடங்களுக்கு, 1,400 ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறை செயலகம் அனுமதி அளித்துள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி நியமனம் துவங்கியுள்ள நிலையில், பணிக்கு சேர்ந்தவர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், ஊதிய உயர்வு கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம், 7,700 ரூபாய் சம்பளம் தரும் போது, முதுநிலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, 'வாட்ஸ் ஆப்' வழியாக பிரசாரம் துவக்கியுள்ளனர்.இந்த நிலை நீடித்தால், புதிய ஆசிரியர்கள் பணிக்கு சேர்ந்த சில மாதங்களில், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

அரசுப் பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் மீண்டும் ஆசிரியர் நியமனம் :

தொகுப்பு ஊதிய அடிப்படையில் பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் மூலம் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் 16,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது மாதம் ரூ7500 வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் மீண்டும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ7500 ஊதியத்துடன் நியமிக்கவும்  தெரிவிததுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும் 
அதற்கான கால தாமதம் கருதி தொகுப்பு ஊதிய அடிப்படையில் மேற்கண்ட பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதுநிலை ஆசிரியர்கள் ஆறு மாதத்துக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் குழு அமைத்து 1474 ஆசிரியர்களை நியமிக்கலாம்.

தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகவியல்,ெபாருளியல், பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆசிரியர்கள் பெற்றோர் -ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி மாதம் ஒன்றுக்கு ரூ7500 என தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

இதன்படி சென்னை மாவட்டத்தில்  14, திருவள்ளூர் மாவட்டத்தில்  106, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  77 உள்பட மொத்தம் 1474 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்