வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. புதிய புயலுக்கு இந்திய வானிலை மையம் டிட்லி என்று பெயர் சூட்டியுள்ளது.
டிட்லி என பெயரிடப்பட்டுள்ள புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஒடிசா கோபால்பூருக்கு 530 கி.மீ தொலைவிலும், கிலிங்கப்பட்டிணத்திற்கு 480 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்திற்கு மித மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய, வங்க அரபிக்கடலுக்கு அக்.13ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.