யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/10/18

750 PP - ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயத்தில் எந்த ஆணை சரியானது? - முதல்வர் தனிப்பிரிவில் மனு!

மாணவிகளின் பள்ளி வருகை குறித்து பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் புதிய வசதி கல்வித்துறையில் அறிமுகம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு மகளிர் பள்ளிகளில் மாணவிகள் பள்ளிக்கு வந்துசெல்வதை பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப் பேட்டை பி.என்.தவான் ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நேற்று நடைபெற் றது. இதில், பள்ளிக்கல்வி அமைச் சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 257 பள்ளிகளின் நிர்வாகி களுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார். அவர் நிகழ்ச்சிநடைபெற்ற மேடையை விட்டு இறங்கி நிர்வாகிகள்அமர்ந் திருந்த இடத்துக்கே சென்று ஆணையை வழங்கியதை அனை வரும் பாராட்டினர்.அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ‘‘அங்கீகாரம் இல் லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர் களின் நலனை கருத்தில்கொண்டு கட்டிட வரன்முறை பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் அளித்து வருகிறோம்.

இதுவரையில் 1,183 பள்ளிகளுக்கும், தற்போது 257 பள்ளிகளுக்கும் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் 412 பள்ளிகளுக் கும் ஆணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்றார்.நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மெட்ரிக்குலேஷன் பள்ளி கள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன், இணை இயக்குநர் உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள் எஸ்.திருவளர்செல்வி (சென்னை), ஆஞ்சலோ (காஞ்சிபு ரம்), தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு அமைச் சர் செங்கோட்டையன் நிருபர்களி டம் கூறியதாவது: மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவர்கள் பள்ளிக்கு வந்து செல் வதை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கும் திட்டத்தை அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் செயல் படுத்த உள்ளோம்.

‘ஆர்எப்ஐடி’ தொழில்நுட்பம் :

தற்போது சோதனை அடிப் படையில் சென்னை போரூர்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதி மூலம் தங்கள் குழந்தைகள் எப்போது பள்ளி சென்றனர். எப்போது அங்கிருந்து புறப்பட்டனர் என்பதை பெற்றோர் செல்போன் எஸ்எம்எஸ் தகவல் உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். இதில் ‘ஆர்எப்ஐடி’ என்ற தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம் முழுவ தும் சுமார் ஆயிரம் அரசு மகளிர் பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து ஆசிரியர்களும் வகுப்பறைக்கு கற்பித்தல் துணைக்கருவியுடன் செல்ல வேண்டும் - CEO Proc (10.10.2018)

அரசு ஊழியர்கள் ஓய்வூதியமா...?? எங்களுக்கு தெரியாது... கைவிரித்த ஆணையம்...!!

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக அறிமுகம் படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்புகளை சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் என்னென்ன?

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதித்தன்மை - பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!


மோமோ சேலஞ்ச்' விளையாட கூடாது : கல்வித்துறை எச்சரிக்கை:

இணையதள விபரீத விளையாட்டான, 'மோமோ சேலஞ்ச்' பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தொடக்ககல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இணையதள, 'புளூவேல்' விளையாட்டு, பல இளைஞர்களை தற்கொலைக்கு துாண்டியதால், அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மோமோ சேலஞ்ச் என்ற மற்றொரு விபரீத விளையாட்டுக்கு, சிறார் ஆட்படுவது தெரியவந்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்திஉள்ளார்.'மோமோ சேலஞ்ச், வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்படுவதால், விளையாட்டாக மொபைல் போன்களில் பதிவிறக்கி, மாணவர்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஒருமுறை இந்த விளையாட்டில் உறுப்பினராக சேர்ந்தால், அடுத்தடுத்த நிலைகளில் விளையாட, துாண்டப்படுவதாக கூறப்படுகிறது. 'இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வைப்பதால், இது சார்ந்து, விரிவாக மாணவர்களுக்கு விளக்க வேண்டும்' என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அடிப்படை வசதி இல்லாத பள்ளிக்கு, 'சீல்' :

திருவண்ணாமலை அருகே, மாவட்ட நீதிபதி உத்தரவுப்படி,
அடிப்படை வசதி இல்லாத பள்ளிக்கு, 'சீல்' வைக்கப்பட்டது
*திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில், காந்தி இண்டர்நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில், மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லை என, மாவட்ட நீதிபதிக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், மாவட்ட நீதிபதி மகிழேந்தி, கடந்த, 6ல், பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார
*அப்போது, அடுக்குமாடி கட்டடத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமல் செயல்படுவது தெரிய வந்தது. வகுப்பறையில் கதவுகள், ஜன்னல்கள் பொருத்தப்படவில்லை
*மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், அடிப்படை வசதியின்றி முட்புதர் மண்டி இருந்தது. பள்ளி வளாகத்தில் மூடப்படாத நிலையில், கிணறு இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.இவை மாணவர்களின் பாதுகாப்பிற்கு, அச்சுறுத்தலாக இருந்தது
*அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட, அதிக சேர்க்கை இருந்ததும் தெரியவந்தது
*இதையடுத்து, பள்ளிக்கு சீல் வைக்க மாவட்ட நீதிபதி மகிழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், நேற்று பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பள்ளிகளில் உறுதிமொழி: ஆட்சியர் உத்தரவு :

குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமைக்கு
எதிராக வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வாரத்தின் முதல் நாள் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்
*நாட்டில் பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21ஆகவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்களை குழந்தைத் திருமணமாகும்


*தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்ததை அடுத்து, அதைத் தடுக்க 2006-ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது


*இச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக நல அலுவலர் தலைமையில் அதிகாரிகள் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்


*எனினும், இதுவரை குழந்தைத் திருமணங்கள் முழுமையாக தடுக்க முடியாமல் உள்ளது.வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 63 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்


*இதன்படி, இம்மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

*இதன்தொடர்ச்சியாக, குழந்தைத் திருமணங்கள், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் வாரத்தின் முதல்நாள் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்


*இதுதொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது


*வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடையே குழந்தைத் திருமணத் தடைச்சட்டம், பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகிறது


*குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் பொது நிகழ்ச்சியாகவே கருதப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது


*எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் வாரந்தோறும் முதல் வேளை நாளின் காலை கூட்டத்தில் குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், உறுதிமொழி ஏற்கவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வட்டார வள மையங்களில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளிக்கு மாற்றம் :

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில்
413 வட்டார வள மையங்கள் செயல்படுகின்றன


*இங்கு மாதம் ரூ.7,700 சம்பளத்தில் 11,191 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 6, 7, 8 வகுப்புகளில் 100 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்



*இந்த வகுப்புகளில் 100 மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு ஓவிய ஆசிரியர் மற்றும் தையல், இசை,கணிதம், கட்டடக்கலை, ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு ஒரு ஆசிரியர் வீதம் மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி 6,7,8 வகுப்புகளில் 100 மாணவர்கள் இருந்தால் அந்த வகுப்புகளில் மூன்று பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கலாம், என கூறப்பட்டுள்ளது


*இந்த சட்டத்தை பின்பற்றி தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


*இதையடுத்து, வட்டார வள மையங்களில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் அடுத்த வாரம் முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது

ஆசிரியர் பணி தகுதி தேர்வு : கவுன்சிலுக்கு அதிகாரம்:

ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வில், மாநில கல்வியியல் கவுன்சிலின் கருத்தை கேட்ட பின், பாடத்திட்ட மாற்றம் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, 'டெட்' என்ற மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு மற்றும், பி.எட்., மட்டும் படித்தால் போதாது; டெட் தேர்விலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகளுக்கு செல்லும்.இந்த ஆண்டு, அக்டோபரில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட இருந்தது. ஆனால், பாடத்திட்ட மாற்றம், அரசு பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்கள் மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது எழுந்த முறைகேடு புகார்கள் போன்றவற்றால், தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது.ஆனால், அரசு பணிக்கு ஆள் எடுக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் சேர்வோருக்காக, டெட் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதன்படி, இன்னும் மூன்று மாதங்களுக்குள், டெட் தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த தேர்வுக்கு, பாடத்திட்டத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.பாடத்திட்டம் மாற்ற வேண்டும் என்றால், பாடத்திட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்களை புத்தகமாக தயாரிக்க வேண்டும். இதற்காக, புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகம் தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், அறிவொளியிடம், டி.ஆர்.பி., சார்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவரது கருத்து கிடைத்த பின், அடுத்த நடவடிக்கை துவங்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன

நீதிக்கதை


கரும்பு விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது.
அவர்கள் அடிக்கடி, ""அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.
ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, ""நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?'' என்றார்.
உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, ""சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்,'' என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார்.
அமைச்சரோ ""அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்,'' என்றார். இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார்.
அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, ""கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்,'' என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான்.
""அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?'' என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார்.
தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, ""நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்,'' என்று புகழ்ந்தார்.
கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.

750 PP - ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயத்தில் எந்த ஆணை சரியானது? - முதல்வர் தனிப்பிரிவில் மனு!

மாணவிகளுக்கு கழிவறை கட்டும் பணிக்காக ஆசிரியர் ரூ.50,000 நிதி உதவி!

மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பட்டம் - புதுவித முயற்சியில் கலக்கும் அரசு பள்ளி!



கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்பாகவும் மலர்கள், கனிகள், காய்கறிகள், மரங்கள் மற்றும் அறிஞர்களின் பெயர்களை சூட்டும் விழா நடைபெற்றது. அதேபோல,ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வு வைத்து ஒரு ஐ.ஏ.எஸ்,ஒரு ஐ,பி.எஸ் மாணவர்களையும் தேர்ந்தெடுத்து அசத்தி இருக்கிறார்கள்.


அரசு பள்ளி

 கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்தான் இத்தகைய வியப்பூட்டும் முயற்சியை செய்திருக்கிறார்கள். மிகவும் பின்தங்கிய கிராமமான இந்த தொட்டியப்பட்டியில் உள்ள இந்த பள்ளி மாணவர்கள் நல்ல அடிப்படை கல்வியை பெற வேண்டும் என்ற உந்துதலில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஸ்பான்ஸர்கள் மூலம் பள்ளிக்கு தேவையான கட்டடங்கள்,கணினிகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறார். அதோடு, பாடங்களை கணினி மற்றும் இணையம் வாயிலாக காட்சிகள் மூலம் நடத்தி மாணவர்களிடம், கல்வி குறித்த புரிதலை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில்தான்,வட்டார கல்வி அலுவலரை அழைத்து வந்து, இப்படி மாணவர்களுக்கு பெயர்சூட்டும் விழாவை விமர்சையாக நடத்தினார். அதோடு,15,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளை நிற சீருடைகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.


பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தியிடம் பேசினோம். "இது மாவடத்தின் கடைகோடி பகுதியில் உள்ள ஊர். இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை சிங்கிள் டிஜிட்டில் இருந்தது. நான் இங்கு பணிக்கு வந்ததும், பல்வேறு முயற்சிகள், வளர்ச்சிகளை ஏற்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். மாணவர்கள் மத்தியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வேலை பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலேயே ஏற்படுத்த தான் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் வருட ஆரம்பத்திலேயே பொது அறிவு சம்மந்தமான கேள்விகளை உள்ளடக்கிய தேர்வை வைக்கிறோம். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரண்டு இடங்கள் வரும் மாணவர்களை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்களாக்கி அவர்களுக்கு அப்படி அடையாள அட்டை தருவோம்.

தினமும் அந்த அடையாள அட்டைகளைதான் அந்த மாணவர்கள் அணிந்து வர வேண்டும். கிளாஸை ஒழுங்குபடுத்துவதில் இருந்து பள்ளி வளர்ச்சி விசயத்தில் உரையாடுவது வரை அந்த மாணவர்கள் பங்கெடுப்பார்கள். அதேபோல், மாணவர்களுக்கு மரம், கனி, மலர்களின் பெயர்கள் நினைவில் நிற்க என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம். அப்பதான் மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி அந்த பெயர்களை சேர்க்கலாம்ன்னு முடிவு பண்ணி இந்த விழாவை நடத்தினோம். முதலாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி மலர்களின் பெயர்களை சூட்டினோம்.

இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி கனிகளின் பெயர்களையும், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி காய்கறிகளின் பெயர்களையும் சேர்த்து சூட்டினோம். அதேபோல், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி முறையே மரங்களின் பெயர்களையும், அறிவியல் அறிஞர்களின் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தோம். இந்த முயற்சிகளை பார்த்துட்டு, கல்வித்துறை அதிகாரிகள், 'நல்ல முயற்சி. புதுமையான முயற்சியும்கூட. இத்தகைய முயற்சிகள் மாணவர்களிடம் நல்ல மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும்'ன்னு வாழ்த்தினார்கள். அதோடு,இந்த கல்வியாண்டில் இதுவரை விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு வந்த இரண்டு மாணவர்களை பாராட்டி பரிசும், சான்றிதழும் வழங்கினோம். எல்லா ஆசிரியர்களும் சேர்ந்துதான் இந்த முயற்சிகளை எடுக்கிறோம்" என்றார்

UGC NET EXAM 2018 - விண்ணப்பங்களை திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி - கடைசி தேதி : அக்டோபர் 14 :

யூஜிசி நெட் தேர்வு எனும் தேசிய தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி அளித்துள்ளது. திருத்தம் செய்பவர்கள் http://www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 14ம் தேதி இரவு 11.50 வரை திருத்தம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

அரசாணை எண் 200 பள்ளிக்கல்வித்துறை நாள்:26.09.2018- தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு



சித்தா மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 2018 - வெளியீடு...!

சித்தா மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும், 20 முதல், கவுன்சிலிங் துவங்க உள்ளதுசித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா போன்ற, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இந்த படிப்பில் சேர, 3,670 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளிஇடப்பட்டுள்ளதுஇதில், 3,471 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். வரும், 20 முதல், மாணவர் சேர்க்கையை நடத்த, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவதுஆயுஷ் அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகள், இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படவில்லை. அந்த பட்டியல், ஓரிரு நாளில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, வரும், 20 முதல், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

Amazon Festival Special Offer - ரூ.50,000 தள்ளுபடியுடன் 5 ஸ்மார்ட் டிவிகள் விற்பனை...!

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன் கோலாகல விற்பனை இன்று முதலே துவங்கிவிட்டது, ஆனால் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தத் துவக்க விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரிமே வாடிக்கையாளர்களுக்கு மட்டும், ஒரு நாள் முன்னரே அமேசான் நிறுவனம் தனது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனைக்கு முன்அனுமதி வழங்கியுள்ளது. பலராதரப்பட்ட தயாரிப்புகளுக்கு ஏராளமான சலுகைகளுடன் ஒரு நாள் முன்னரே அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


ரூ.50,000 வரை சலுகை

புதிதாக டிவி அல்லது ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், கட்டாயம் இந்த அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனை சலுகை பட்டியலைப் பார்க்க தவறிவிடாதீர்கள்.இந்த பெஸ்டிவல் சேல்ஸ் திட்டத்தில் அமேசான் நிறுவனம் ரூ.50,000 வரை சலுகை வழங்குவதுடன் ரூ.22,000 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்குகிறது.

பானாசோனிக் 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி டிவி TH-49FX600Dஅமேசான் நிறுவனம் பானாசோனிக் 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி TH-49FX600D டிவிகளுக்கு ரூ.46,010 வரை சலுகை வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் சந்தை விலை ரூ.99,000 ஆகும், தற்பொழுது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்சேல் விற்பனையின் சலுகை விலையாக 52,990 என்று விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ.18,900 வழங்கப்படுகிறது.

பானாசோனிக் 55' இன்ச் எல்.இ.டி டிவி TH-55FX650Dபானாசோனிக் இன் இந்த மாடல் டிவி 32% சலுகையாக ரூ.41,910 விலை குறைக்கப்பட்டு ரூ.87,990 விற்கப்பட்டும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் ரூ.18,900 எக்ஸ்சேஞ் சலுகையும் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. 6 மணிக்கு மேல் ரூ.69,900க்கு விற்பனை செய்யப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சோனி 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டிடிவிசோனி நிறுவனத்தின் அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் டிவி ரூ.14,910 சலுகை வழங்கப்பட்டு இந்த பெஸ்டிவல் சேல்ஸ் கொண்டாட்டத்தில் வெறும் ரூ.69,990 என்ற விற்பனை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.84,900 என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் 32' இன்ச் 4 சீரிஸ் 32N4310 எச்.டி ரெடி எல்.இ.டி டிவிசாம்சங் 32' இன்ச் 4 சீரிஸ் 32N4310 எச்.டி ரெடி எல்.இ.டி டிவியின் அசல் விலை ரூ.33,900 இல் இருந்து ரூ.9000 சலுகை வழங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் கூடுதல் ரூ.9000 எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்கப்படுகிறது.

சாம்சங் 55' இன்ச் Q சீரிஸ் 55Q7FN 4K எல்.இ.டி ஸ்மார்ட் டிவிசாம்சங் நிறுவனத்தின் 55' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியா சந்தையில் ரூ.2,57,900 க்கு விற்கப்பட்ட இந்த மாடல் ஸ்மார்ட் டிவி தற்பொழுது ரூ.78,910 சலுகை வழங்கப்பட்டு வெறும் ரூ.1,78,990 க்கு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது

11/10/18

பள்ளியில், 'டிஜிட்டல்' வருகைப்பதிவு: பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் :

பள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவேடு முறை, விரைவில் அமலுக்கு வரும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சென்னை, போரூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பு கட்டடத்தை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.


அவர் அளித்த பேட்டி: இலவச சைக்கிள் மற்றும்
, 'லேப்டாப்' அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். இணையதள இணைப்புடன் கூடிய, ஐ.சி.டி., என்ற, கணினி முறை கல்வி வகுப்பு, 3,000 பள்ளிகளில், நவம்பர் இறுதிக்குள் அமைக்கப்படும்.அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், டிஜிட்டல் முறையில், வருகை பதிவேடு திட்டம் வர உள்ளது. சில பள்ளிகளில், பரீட்சார்த்த முறையில், அமலுக்கு வந்துள்ளது. எந்தெந்த பள்ளியில், இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என, முதல்வருடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும்.
ஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை, டிசம்பர் இறுதிக்குள் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், தமிழக அரசின் நகரமைப்பு மற்றும் திட்டமிடல் துறையான, டி.டி.சி.பி., அங்கீகாரம் பெறாத கட்டடங்களில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு, மே, 2019 வரையில், ஓராண்டுக்கு அங்கீகார நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை, பள்ளி நிர்வாகிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.