யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/11/18

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தல்: சிறப்பு வகுப்பறைகள் அமைக்க திட்டம் :

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பறைகளை ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து, ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, சேர்க்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கில வழி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பறையில் தமிழ்வழி மாணவர்களுடன் அமர வைத்து வகுப்புகள் கையாளப்படுகின்றன.
ஆனால், பிளஸ் 2 வகுப்புகளில், இந்த முறையை பின்பற்றுவதில் சிக்கல் உள்ளது. இதனால், சில பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழி கற்பித்தல் தொடங்கப் படவில்லை. மாணவர் சேர்க்கை இருந்தும் வகுப்பறை இல்லாததால் ஆங்கில வழி பிரிவுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக சென்னையில் அண்மையில் நடைபெற்ற கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி சேர்க்கை குறித்த விவரங்கள் மாவட்ட வாரியாக, சேகரிக்கப்பட்டு வருகின்றன

கனமழை - 8 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு!!

கனமழை - 8 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு!! 

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
காஞ்சிபுரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.
திருவள்ளூர் பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு
விழுப்புரம்  பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.
நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை)   விடுமுறை அறிவிப்பு
சென்னை  பள்ளிக் கல்லூரிகளுக்கு   விடுமுறை  அறிவிப்பு.
திருவாரூர் பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு  விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு

22/11/18

புயலில் சிக்கிய 40 பள்ளிகள் சேதம் இயக்குனருக்கு சி.இ.ஓ., அறிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் 'கஜா' புயலில் சிக்கி 40 பள்ளிகள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனருக்கு சி.இ.ஓ., அறிக்கை அளிக்க உள்ளார்.


'கஜா'வின் கோரத்தாண்டவத்துக்கு பள்ளிக்கூடங்களும் தப்பவில்லை. பல இடங்களில் பள்ளிகள் மீது மரங்கள் விழுந்து கட்டடங்கள் சேதம் அடைந்தன. இப்பள்ளிகளின் விவரம், சேத மதிப்புகளை பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கோரி இருந்தார்.திண்டுக்கல்லை பொறுத்தவரை 40 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன.

குறிப்பாக, அய்யலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நின்ற 45 மரங்கள் 'கஜா'வின் ஆட்டத்தால் சாய்ந்தன. செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் மீது 4 மரங்கள் சாய்ந்து விழுந்தன. செட்டியப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 120 மீட்டர் நீளத்துக்கு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

கொடைக்கானலில் 10க்கும் அதிகமான பள்ளிகள் மரம் விழுந்து சேதம் அடைந்தன. சேத விவரங்களை சி.இ.ஓ., சாந்தகுமாருக்குதலைமை ஆசிரியர்கள் அனுப்பினர்.அவர் கூறும்போது, 'திண்டுக்கல் மாவட்டத்தில் 40 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக கொடைக்கானலில் மரம் விழுந்ததில் 6 பள்ளி கட்டடங்களில் விரிசல் விழுந்து மழை நீர் ஒழுகுகிறது. இது குறித்து கலெக்டர், பள்ளி கல்வி இயக்குனருக்கு அறிக்கை அளித்துள்ளோம். விரைவில் அரசின் உதவியோடு சீரமைப்பு பணி துவங்கும்' என்றார்.

ஒரு லட்சம் ஏடிஎம்-கள் நாடு முழுவதும் மூடப்படும் அபாயம்... தனியார் நிறுவனம் தகவல்

2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் 1.15 லட்சம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்-களை நி்ர்வகிக்கும் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2 லட்சம் ஏ.டி.எம் கள் உள்ளன. இவைகளை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் ஏ.டி.எம் நிர்வகிக்கும் அமைப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏ.டி.எம்-களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டு வேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது செயல்படும் ஏடிஎம்-களில் பாதிக்கும் மேற்பட்டடை மூடப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏ.டி.எம்-களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 
சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள் மற்றும் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. இதனை வங்கிகள் ஈடு செய்யாத பட்சத்தில் பெரிய அளவிலான  மூடலுக்கு வழி வகுக்கும் என்று ஏ.டி.எம் நி்ர்வகிக்கும் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

வட்டார கல்வி அலுவலர்களுக்கு, புதிய முறையில் கற்பித்தல் தொடர்பான பயிற்சி கூட்டம்

ஈரோடு வட்டார கல்வி அலுவலர்களுக்கு, புதிய முறையில் கற்பித்தல் தொடர்பான பயிற்சி கூட்டம் நடந்தது.
ஈரோடு, காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கூட்டம் நடந்தது. ஈரோடு சி.இ.ஓ., பாலமுரளி தலைமை வகித்தார். ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் கற்பித்தல், அணுகுமுறை குறித்தும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு எளிய படைப்பாற்றல், கற்பித்தல் முறை குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்டத்தில், 14 யூனியன்களை சேர்ந்த வட்டார கல்வி அலுவலர், வட்டார கல்வி மேற்பார்வையாளர் உட்பட, 140 பேர் பங்கேற்றனர். பாடம் கற்பித்தல் குறித்து, தொடக்க கல்வி மாணவ, மாணவியர், 15க்கும் மேற்பட்டோரையும், கூட்டத்துக்கு வரவழைத்து, மாதிரி வகுப்பு நடத்தப்பட்டது

நீதிக்கதை



ஏன் சிரிக்கிறாய் ?


ஒரு பண்ணையில் ஆண் கழுதையொன்றும், பெண் கழுதையொன்றும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை பகலில் கடுமையாக உழைக்கும். பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலை தங்குமிடம் வந்ததும் அங்கு கிடக்கும் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும்.


பெண் கழுதை எந்த வேலையும் பார்ப்பதில்லை. பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி எழும். மிகவும் மகிழ்ச்சியாக, வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது.

ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்து சேர்ந்தது. களைப்பின் மிகுதியால் வந்தவுடனே படுத்தும் விட்டது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை பரிதாபப்பட்டது.

“”உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது!” என கிண்டல் செய்தது.

“”என்ன செய்வது என் நிலை அப்படி, உழைத்தால் தான் முதலாளி விடுவார்!” என்றது ஆண் கழுதை.

இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது.

“”ஏன் சிரிக்கிறாய்?”

“”சிரிக்காமல் என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? நான் மட்டும் கஷ்டப்பட்டு வேலையா செய்கிறேன்!”

ஆண் கழுதை அதை ஆச்சரியத்துடன் பார்த்தது.

“”ஆமாம்… நானும் இதைப் பற்றி உன்னிடம் கேட்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். அதை முதலில் கூறு!”

“”பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் அப்படிப் போய் விட மாட்டேன்!”

“”பிறகு என்ன செய்வாய்?”

“”அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பொறுத்துக் கொண்டு படுத்துக் கொள்வேன். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்!” என்றது பெண் கழுதை.

“”இவ்வளவுதானா!” ஆச்சரியமாகக் கேட்டது ஆண் கழுதை.

“”ஆமாம்… நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான். எல்லாம் நம் கையில்தான் உள்ளது!” என அறிவுரை வழங்கியது.

காலைப் பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். இன்று ஆண் கழுதை படுத்துக் கொண்டு சண்டித்தனம் செய்தது.

பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழுவதாய்த் தெரியவில்லை. பண்ணையாள் பல விதங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டு, முதலாளியிடம் சென்றான்.

“”அய்யா! இந்த ஆண் கழுதை என்றுமில்லாமல் சண்டித்தனம் செய்கிறது!” என்றான்.

“”சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ!” என்றார்.

பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லைக் கொண்டு வந்து போட்டான்.

பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக் கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டதை எண்ணி மிகவும் வருந்தியது பெண் கழுதை.

கால நீட்டிப்பிலே காலம் தள்ளும் வல்லுனர் குழு -பழைய ஓய்வூதிய திட்டம் பணாலா ? அரசு ஊழியர்கள் டென்ஷன் :

பள்ளியில் போலி சிறப்பாசிரியர்களுக்கு 'செக்' :

பள்ளிகளில் போலி சிறப்பாசிரியர்கள் யாரேனும் பணியில் சேர்ந்தார்களா என்பதை கண்டுபிடிக்க சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது.தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஓவியம், விளையாட்டு, இசை, தையல், கணினி போன்ற பயிற்சிகள் அளிக்க சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் சிறப்பாசிரியர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து அறிக்கை அளிக்க அனைத்து சி.இ.ஓ.,க்களுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்தது.திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 463 சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். முதற்கட்டமாக பழனி, வேடசந்துார் கல்வி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்கும் பணி, திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி பள்ளியில் நேற்று நடந்தது. சி.இ.ஓ., சாந்தகுமார் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய 9 குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். நவ.,22ல் திண்டுக்கல், வத்தலக்குண்டு கல்வி மாவட்டங்களுக்கு நடக்க இருக்கிறது.சி.இ.ஓ., கூறும்போது, 'சிறப்பாசிரியர்களின் 10, 12 வகுப்பு மற்றும் அவர்கள் சார்ந்த துறை படிப்புகளுக்கான சான்றிதழ்களை சரி பார்க்கிறோம். அரசு கேட்டு இருக்கும் சான்றிதழ்கள் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆய்வு செய்கிறோம். நாங்கள் அறிக்கை அளித்த பிறகு அரசு தான் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்' என்றார்

தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி துவக்கம் :

விழுப்புரம் மாவட்டத்தில் 1,072 தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை கண்டவறிதற்கான சரிபார்ப்பு பணிகள் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., முனுசாமி தலைமையில் 9 குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.இப்பணி 22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 1,072 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றது. இப்பணியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கண்காணிப்பாளர், அலுவலக எழுத்தர் ஈடுபடுகின்றனர்.

ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும என C.E.O உத்தரவு !!

ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்,'' என முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறினார்.காரைக்குடி அழகப்பா பல்கலை வளாகத்தில் மாவட்ட அளவிலான அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்., பள்ளி முதல்வருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:6,7,8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வைக்கு செல்ல வேண்டும். காலை 9:15 முதல் மாலை 4:15 மணி வரை வகுப்பு நடத்தப்பட வேண்டும்.பள்ளி நேரத்தில் அலுவல் நிமித்தமாக ஆசிரியர்கள் வெளியே செல்ல நேர்ந்தால், ஆசிரியர் இயக்க பதிவேட்டில் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும், இவற்றை தலைமை ஆசிரியர்கள் முறையாக கடை பிடிக்க வேண்டும். அலுவலக பணியாளர் இல்லாத பள்ளிகளில் மாற்று பணியில் அலுவலக பணியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.நிகழ்ச்சியில் தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, திருப்பத்துார் கல்வி அலுவலர் பரமதயாளன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் முனியாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

எல்லா வங்கிகளிலும் ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் திறக்கலாமா?

வங்கி கணக்கில் குறைந்தபட்ச
இருப்பு தொகையினை நிர்வகிக்கவே தனியாக சம்பாதிக்க வேண்டும் போல... இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் சரியான தீர்வு. எனவே, ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் குறிந்து தெரிந்துக்கொள்ளுங்கள்... ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை அனைத்து இந்தியாவின் முக்கிய அரசு மற்றும் தனியார் வங்கிகளில் திறக்கலாம். அதேபோல் ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை யார் வேண்டுமானால் திறக்கலாம்.ரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை திறக்க பணம் ஏதும் தேவையில்லை. குறைந்தபட்ச இருப்பு தொகையினை நிர்வகிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனிநபர் கணக்கு, ஜாயிண்ட் கணக்கு போன்ற சேமிப்பு கணக்கு சேவைகள் அனைத்தும் ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கில் கிடைக்கும். அனைத்து வகை சேமிப்பு கணக்குகளுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் கிடைக்கும்.


ரூபே டெபிட் கார்டு வேண்டும் என்றாலும் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்கு ரூ.10 முதல் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கிற்கும் இணையதள வங்கி சேவை அனுமதிகள் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜிரோ பேலன்ஸ் வங்கி கணக்கை மூட சில வங்கிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பு: ஜிரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை வைத்துள்ளவர்களால் அதே வங்கி நிறுவனத்தில் வேறு சேமிப்பு கணக்கை திறக்க முடியாது. பிற சேமிப்பு கணக்குகள் திறந்தால் 30 நாட்களுக்குள் ஜிரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை மூட வேண்டும்

பள்ளி-கல்லூரிகளில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள செல்போன் கோபுரங்களை அகற்ற வேண்டும் :

பெங்களூருவில் செல்போன்கோபுரங்கள் அமைப்பது குறித்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, கர்நாடக மாநிலத்தில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி களுக்கு 50 மீட்டர் தொலைவில் தான் செல்போன் கோபுரங்கள் அமைக்க வேண்டும்.


பெங்களூருவில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலுத்தி அதற்கான உரிமத்தை பெற வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு ரூ.15 ஆயிரம் செலுத்தி அதற்கான உரிமத்தை பெற்று கொள்ளலாம். முன்பு செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்க 45 நாட்கள் வரை ஆகும். ஆனால் தற்போது 15 நாட்களில் அதற்கான அனுமதியை பெற்று செல்போன் கோபுரங்கள் அமைத்து கொள்ளலாம்.


பள்ளி, கல்லூரி, ஆஸ்பத்திரிகளில் இருந்து 50 மீட்டருக்குள் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் கோபுரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் கோபுரங்களுக்கு 3 மாதங்களுக்குள் உரிய அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, துைண முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மற்றும் பெருமழை ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில், தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர வாய்ப்புள்ளதால், இப்பகுதிகளில் மழை பொழிய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநரான பாலச்சந்திரன், இன்று (நவம்பர் 20) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். “தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் பெருமழை பொழியவும் வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.

காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், காரைக்கால், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பொழிந்தது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 8 செ.மீ. மழை பதிவானது. “சென்னையில் மேகமூட்டம் காணப்படுவதோடு அவ்வப்போது மழை பொழியவும் வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார். தமிழகக் கடற்கரையின் தென்மேற்கு பகுதிகளிலும், மன்னார் வளைகுடாவிலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

80 சி பிரிவின் வருமானவரி விலக்கு பெற எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா?

வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் திட்டமிட்டு சேமித்தால்,
நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும். இன்றைக்கு பணம் சம்பாதிக்கும் பலருக்கும் 80 சி பிரிவு பற்றி தெரிந்திருக்கும். அதே நேரத்தில் எந்தெந்த திட்டங்களின் கீழ் சேமித்தால் வருமான வரி விலக்கு பெற முடியும் என்று தெரிவதில்லை.

வருமான வரிப்பிரிவில் 80 சி பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒன்றரை ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரையாகும்.

நம்முடைய அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பதற்காகவே சில ரசீதுகளைக் கேட்பார்கள். குழந்தைகளின் கல்விக்கட்டணம், எல்ஐசி முதலீடுகள், மியூட்சுவல் பண்ட், கட்டுவதற்கான ரசீதுகளை அனுப்பினால் வரி பிடித்தம் குறைவாக இருக்கும். இல்லையெனில் நாம் வாங்கும் சம்பளத்தில் வரி இவ்வளவு கட்ட வேண்டுமா என்று யோசித்தே மண்டை குழம்பிவிடும். வரி சேமிப்புக்கான திட்டங்களை படித்து அதில் முதலீடு செய்யுங்கள்.

நாம் சேமிக்கக்கூடிய திட்டங்களில் அதனுடைய கால அவகாசம், அதற்கு கிடைக்கும் வருமானம் பார்த்து நாம் வருட ஆரம்பத்திலேயே திட்டமிட்டால், வருமான வரி கட்டுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும். சிறிது சிறிதாக சேமிக்கக்கூடிய தொகை நாளடைவில் நல்ல பலன் தரும். நாம் வாங்கும் சம்பளத்தில் முதல் செலவே நமது சேமிப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

தேசிய ஓய்வூதிய சிஸ்டம் ( என்பிஎஸ்)


தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தது 500 ரூபாய் பங்களிக்க வேண்டும், ஆண்டுக்கு குறைந்தது 6000 ரூபாய் பங்களிக்க வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்ய அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய குடியுரிமை இல்லாதவர்களும் பதிவு செய்யலாம். தேசிய ஓய்வூதிய திட்டத்தில், கணக்கு வைத்திருப்போரின் வசதிக்கேற்ப, சேர்த்து வைத்த பணத்தை நிறுவன கடனாக, சமபங்காக, அரச பத்திரங்களாக மாற்றிக்கொள்ளலாம். ஓய்வூதிய திட்டத்தில் பணம் முதலீடு செய்வதற்கு வருமான வரிச் சட்டம் 80 சியின் படி ஆண்டிற்கு 1.5 லட்சம் வரை உள்ள முதலீட்டிற்கு வரி விலக்கு பெற முடியும்.


மியூட்சுவல் பண்ட் ( இஎல்எஸ்எஸ்)


மியூட்சுவல் பண்ட் எனப்படும் இதிலும் ஒன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். 3 வருட காலம் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது லாக் இன் காலமாகும். இது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்யலாம். ஒரு வேளை 3 வருடத்திற்கு பிறகு, நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் கட்டாயம் தொடர வேண்டிய முதலீட்டு காலம் குறைவு

தேசிய சேமிப்பு பத்திரம் ( என்எஸ்சி)


தேசிய சேமிப்பு பத்திரம் எனப்படும் இதில் முதலீடு செய்தால் ஐந்து வருடம் கழித்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதில் கிடைக்கும் வட்டி 8.5%. குறைந்தது 100 ரூபாய் முதல், ஒன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். இதை தபால் நிலையத்தில் வாங்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி ( பிபிஎஃப்)

பொது வருங்கால வைப்பு நிதியில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். ஒவ்வொரு வருடமும் வட்டியை புதிதாக நிர்ணயம் செய்வார்கள். இதில் 3 வருடத்துக்கு பிறகு, 5 வருடத்திற்குள் கடன் வாங்க முடியும். அதே மாதிரி 6 வருடத்திற்கு பிறகு சிறிது பணம் எடுத்துக்கொள்ளலாம், நிபந்தனைக்குட்பட்டது.

சுகன்யா சம்ரிதி யோஜனா ( எஸ்எஸ்ஒய்)

பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் இது. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் தபால் நிலையங்களில் தொடங்கலாம். 250 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மாதம் சேமிக்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 21 வயதுவரை சேமிக்க வேண்டும். ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். பணம் முதிர்வடைந்த பின்னர் வட்டிக்கு வரி கிடையாது.

வங்கி, போஸ்ட் ஆபிஸ் வைப்பு நிதி

பணத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்பவர்கள் வங்கிகளில் ஐந்து வருடம் முதலீடு செய்யலாம், இதற்கு வருமான வரி விலக்கு ஒன்றரை லட்சம் வரை உண்டு. இதில் குறைந்தது ஐந்து வருடம் இணைந்திருக்க வேண்டும். இதுவும் அஞ்சலக டெர்ம் டிபாசிட்டும் ஒரே மாதிரியானவை.

யூலிப் (யுனிட் லிங்க் இன்சூரன்ஸ் திட்டம்)


ஆயுள் காப்பீடு திட்டங்களில் ஒன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். இதில் எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் யூலிப் திட்டங்கள் பிரசித்தி பெற்றவை. முறையே 6% முதல் 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. 5ஆண்டு காலம் லாக் இன் செய்ய வேண்டும். நடுவில் பாலிசியை சரண்டர் செய்யும்போது பெரிய அளவு இழப்பு நேரிடும். நாம் கட்டிய தொகையைவிட குறைவாக கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது

அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பா?

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்,
அரையாண்டு தேர்வை தள்ளி வைக்கும்படி, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதால், பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கஜா புயலால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில், பள்ளிகளின் மேற்கூரைகள் சரிந்துள்ளன; வகுப்பறை கட்டடங்கள் இடிந்துள்ளன.


சில பகுதிகளில், அரசின் நிவாரண முகாம்கள்,  அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் செயல்படுகின்றன. அதனால், இந்த மாவட்டங்களில், நவ., 15 முதல் 5 நாட்களாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல ஊர்களில் மாணவ - மாணவியர் தங்களின் நோட்டு புத்தகம், புத்தக பை உள்ளிட்டவற்றை இழந்து விட்டதால்,பள்ளிக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது; பள்ளிகளை திறப்பதும் தாமதமாகிறது.

இந்நிலையில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்குள், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, மாணவ - மாணவியர் புத்தகம், நோட்டுக்கள் பெற்று, தேர்வுக்கு தயாராக முடியுமா என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பெற்றோர் கூறியதாவது: ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டும். பள்ளிகளை திறந்து, குறுகிய காலத்தில், அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை நடத்த முடியாது. எனவே, அரையாண்டு தேர்வை,இந்தாண்டுக்கு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, பள்ளி கல்வி உயர் அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அறிக்கை பெற உள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களுக்கு, அரையாண்டு தேர்வை,ஒரு மாதம் கழித்து நடத்தலாமா அல்லது தேர்வை ரத்து செய்யலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, முடிவு செய் வர் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கஜா புயல் பாதிப்பு - 22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை :

22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்குவிடுமுறை.
தலைமைஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும், பள்ளியில் கஜா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகளை அகற்றி விட்டு பள்ளியை செயல்பாட்டுக்கு கொண்டு வர விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் : பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலக அறிவிப்பு

உணவுப்பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும் :

என நம்பி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவே நஞ்சானால் என்ன செய்வது? ஒரு காலத்தில் ஆடம்பரத் தேவையாக இருந்த குளிர்சாதனப் பெட்டி, தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இன்றோ மீதமான உணவுகளைப் பாதுகாக்கவே பயன்படுத்துகிறொம்.

 வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் உணவு கள் உண்மையில் ஆரோக்கியமானவை தானா? எந்தந்த உணவுப்பொருட்களை எத்தனை நாள் வைக்க வேண்டும்? நாம் எப்போதும்ஒரு டஜன் முட்டையை வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது ஏறக்குறைய எல்லார் வீட்டிலும் வழக்கம். ஆனால் அப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது என புதிய ஆய்வு கூறுகிறது.முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும். கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பேக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது. பேக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.

இது சால்மோனெல்லா பேக்டீரியா வளர தட்ப வெப்ப நிலை சாதகமாக குளிர்சாதனப் பெட்டி தருகிறது. மிகவும் குளிர்ந்த ஈரப்பதம் உடைய தட்ப வெப்ப நிலையில் சால்மோனெல்லா பலமடங்கு பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கிறது. இருமடங்கு பெருகுகிறது.

சாதாரண அறைவெப்பத்தில் (37டிகிரி) இந்த பேக்டீரியா இனப்பெருக்கம் செய்ய முடியாது.

அவை இறந்துவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பேக்டீரியா சாதரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.


வாரக்கணக்கில் காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் அடைத்து வைக்கக்கூடாது. ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள், புற்றுநோய்க்கு கீமோதெரபி எடுத்துக்கொள்பவர்கள், ஹெச்ஐவி வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள் பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது. ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

                                   

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் நிலைகொள்ளும்.

அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

முதல்வரின் புயல் சேத ஆய்வு பாதியிலேயே ரத்து.. காரணம் மழை!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் 8 சென்டி மீட்டர், மணிமுத்தாறு பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு பரவலாக மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

(22.11.18) விடுமுறை அறிவிப்பு* 7*மாவட்ட ஆட்சியர்கள்* VILLUPURAM

பள்ளி விடுமுறை

*1.திருவாரூர் (பள்ளிகளுக்கு மட்டும்)*

*2.நாகை (கோட்டத்திற்கு மட்டும்)*

*3.புதுச்சேரி (பள்ளிகளுக்கு மட்டும்)*

*4.சென்னை (பள்ளி கல்லூரிகளுக்கு)*

*5. காஞ்சிபுரம்(பள்ளி கல்லூரிகளுக்கு)*

*6. விழுப்புரம் (பள்ளி கல்லூரிகளுக்கு)*

*7.திருவள்ளூர்(பள்ளி கல்லூரிகளுக்கு)

21/11/18

நீதிக்கதை

பெரிய குளம்

ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது.

வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப் பிடித்து உணவாகக் கொள்ள அதற்கு இயலவில்லை.

அதனால் மீன்களைச் சிரமப்படாமல் பிடித்து தின்ன உபாயம் ஒன்று செய்தது.

ஒருநாள் கொக்கு தண்ணீருக்கு அருகாமையில் சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.

மீன்கள் அதன் காலடிப் பக்கமாக வந்தபோதுகூட அது அவற்றைப் பிடித்து உண்ணவில்லை.

அந்தக் காட்சி மீன்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

கொக்கின் அமைதியான தோற்றத்தைக் கண்டு அதிசயப்பட்ட ஒருநண்டு அதன் அருகே வந்து, "ஐயா, கொக்குப் பெரியவரே, வழக்கம்போல மீன்களைப் பிடித்துத் தின்னாமல் இன்று அமைதியாக இருக்கிறீர்களே, என்ன சமாச்சாரம்" என விசாரித்தது.

கொக்கு தன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டு, "நண்டுக் குழந்தாய், எனக்கோ வயதாகி விட்டது. இதுவரை செய்த பாவம் போதும் என்று இனி எந்த உயிரையும் கொல்லுவதில்லையெனத் தீர்மானித்து விட்டேன். இனி மீன்களுக்கு ஒரு தொந்தரவு தர மாட்டேன். ஆனால் நான் மட்டும் மீன்களிடம் அன்பாக நடந்து என்ன. இவைகளுக்கெல்லாம் பேராபத்து ஒன்று வர இருக்கிறதே" என்று கொக்கு போலி சோகத்துடன் கூறிற்று.

"கொக்கு தாத்தா, மீன்களுக்கு ஒரு ஆபத்து என்றால் என்னைப் போன்ற நண்டுகளுக்கும் ஆபத்து என்று தான் அர்த்தம். அதனால் தயவு செய்து என்ன ஆபத்து யாரால் ஏற்படப் போகிறது என்று கூறுங்கள்" என்று நண்டு திகிலுடன் கேட்டது.

இன்று காலை சில செம்படவர்கள் இந்தப் பக்கம் வந்து உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனக் கவனித்தேன்.

இந்த ஏரியில் ஏராளமான மீன் கிடைக்கும் போலிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களில் நமது கூட்டத்தார் அனைவரையும் அழைத்து வந்;து ஒரே நாளில் எல்லா மீன்களையும் பிடித்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த ஏரியில் உள்ள அத்தனை மீன்களின் உயிரும் பறி போய்விடப் போகிறதே என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது" என்று போலிக் கண்ணீர் வடித்தது கொக்கு.

கொக்கு சொன்ன தகவல் கொஞ்ச நேரத்திற்குள் அந்த ஏரியில் இருந்த நீர் வாழ் பிராணிகளுக்கெல்லாம் எட்டிவிட்டன.

அவையெல்லாம் திரண்டு கொக்கு இருக்குமிடம் வந்தன.

கொக்கு தாத்தா, எங்களுக்கு வரவிருக்கின்ற பேராபத்திலிருந்து தப்பிக் பிழைக்க வழியொன்றுமே இல்லையா? என அவை பரிதாபமாக கொக்குவிடம் கேட்டன.

"என் மீது உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருந்தால் நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். தொலைதூரத்தில் ஒரு காட்டின் நடுவே பெரிய குளம் இருக்கின்றது. அதிலுள்ள நீர் வற்றுவதில்லை காட்டுக்குள் இருப்பதால் செம்படவர்கள் அவ்வளவு தூரம் வரமாட்டார்கள் என் யோசனையை நீங்களெல்லாம் கேட்பதாக இருந்தால் ஒவ்வொரு நாளும் உங்களில் சிலரை என் முதுகின் மீது சுமந்து சென்று அந்தக் குளத்தில் சேர்த்து விடுகின்றேன். இரண்டொரு நாட்களில் உங்கள் அனைவரையும் அந்தக் குளத்தில் கொண்டு சென்று சேர்த்துவிட முடியும். செம்படவர்கள் வந்தால் ஏமாந்து போவார்கள்" என்று நயவஞ்சகமாக தந்திரமாகப் பேசிற்று.

எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணிய மீன்கள் கொக்கு சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டன.

கொக்கு ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவுக்கு மீன்களைச் சுமந்து கொண்டு ஒரு மலைப் பகுதிக்குச்சென்று ஒரு பாறையில் போட்டு முடிந்தமட்டில் அவற்றைத் தின்று வயிற்றை நிரப்பிக் கொண்டது.

மீதமிருக்கும் மீன்களை பின்னாளில் உண்பதற்காக பாறையின் மீது பரப்பி வெய்யிலில் உலர வைத்தது.

கொக்கு ஒவ்வொரு நாளும் புதியபுதிய பொய்களைச் சொல்லி மற்ற மீன்களை நம்ப வைத்து அவற்றைத் தன் உணவுக்காக கடத்திக் கொண்டு சென்றது.

ஒருநாள் அந்த ஏரியில் வசித்து வந்த நண்டுவுக்கு அந்த இடத்தைவிட்டு கொக்கு கூறும் குளத்திற்குச் செல்ல விரும்பி தன் எண்ணத்தைக் கொக்குவிடம் கூறிற்று.

கொக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது, இத்தனை நாட்களாக மீன்களை ருசி பார்ப்பதற்கு மாறாக அன்று நண்டை ருசி பார்ப்போம் என்று தீர்மானித்து நண்டைத் தன் முதுகின்மீது ஏற்றிக் கொண்டது.

கொஞ்ச நேரம் கொக்கு பறந்து சென்றதும், நண்டு கொக்கை நோக்கி, "நீங்கள் சொல்லும் குளம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்" என்று கேட்டது.

நண்டு இனி தப்பிவிட முடியாது என்ற எண்ணத்தில் கொக்கு தான் மீன்களைக் காயவைத்திருக்கும் பாறையின் பக்கம் காண்பித்து, "அதுதான் குளம்" என்று ஏளனமாகக் கூறிற்று.

மீன்கள் உலர்த்தப்பட்டிருப்பதையும், பாறையைச் சுற்றிலும் மீன்முட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்ட நண்டுவிற்கு விஷயம் விளங்கிவிட்டது.

மற்ற மீன்களை ஏமாற்றித் தின்றதைப் போல தன்னையும் தின்னுவதற்காகவே அது சதி செய்து அழைத்து வந்திருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்துக் கொண்ட நண்டு கொக்கின் முதுகிலிருந்து மேலேறி அதன் கழுத்துப் பகுதியை தனது கொடுக்குகளால் அழுத்தமாகப் பிடித்து இறுக்கியது.

நண்டிடமிருந்து தப்பித்துக் கொள்ள கொக்கு எவ்வளவோ பாடுபட்டும் இயலவில்லை.

நண்டு அதன் கழுத்தைத் தனது கொடுக்கு முனையில் துண்டித்து அதன் உயிரைப் போக்கிவிட்டது.

கெடுவான் கேடு நினைப்பான்.