யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/11/18

50 ஆண்டுகளாக மாணவியர் இன்றி இயங்கும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி :

                           
ராணிப்பேட்டையில் இயங்கிவரும்  இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி.
ராணிப்பேட்டையில் கடந்த 50 ஆண்டுகளாக மாணவிகள் சேர்க்கை இல்லாமல் மாணவர்கள் மட்டுமே படிக்கும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளியை இருபாலர் பயிலும் பள்ளியாக மேம்படுத்த கல்வித் துறை நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 1926-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை ஆகிய 2 நகரங்களுக்காக இருபாலர் அரசுப் பள்ளி தொடங்கப்பட்டது. தொடர்ந்து, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வகுப்பறைக் கட்டடங்கள், விளையாட்டு மைதானத்துடன் மேம்படுத்தப்பட்ட பள்ளியாக மாற்றப்பட்டது. இப்பள்ளியில் 1,500 மாணவ, மாணவியர் வரை சேர்க்கை நடைபெற்று, மாநில, மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பள்ளியாகவும் உருவெடுத்தது.
இதைத் தொடர்ந்து 1970-ஆம் ஆண்டுகால கட்டத்தில் ராணிப்பேட்டை நகரில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே கிறிஸ்துவ அமைப்பின் சார்பில் 2 அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அப்போது ராணிப்பேட்டை சுற்று வட்டாரத்தில் ஆண், பெண் என தனித்தனியாக அரசுப் பள்ளிகள் இல்லாத சூழலில், அரசு நிதி  உதவி பெறும் 2 தனியார் பெண்கள் பள்ளிகளில் பெண் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் முன்வந்தனர்.
அதன் காரணமாக பெரும்பாலான மாணவிகள் அரசுப் பள்ளியில் இருந்து அரசு நிதி உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தனர்.
அதன்பிறகு தற்போது வரை ராணிப்பேட்டையில் இயங்கிவரும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை இன்றி, மாணவர் மட்டுமே படிக்கும் இருபாலர் பள்ளியாக கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கையும் வெகுவாக குறைந்து தற்போது 400 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரித்தனர்.
தற்போது பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, தனது சொந்த செலவிலும், தனியார் சேவை அமைப்புகளின் நிதி உதவியாலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர உள்ளதாக உறுதியளித்துள்ளார். அதேநேரத்தில் மாநில பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட உள்ளதாக பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.அன்பழகன் தெரிவித்தார். மேலும், வரும் கல்வி ஆண்டில் மாணவிகளின் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இரு பாலர் கல்வித் திட்டத்தின் அடிப்படையே ஆணும், பெண்ணும் மாணவப் பருவத்தில் தோழமையோடு இணைந்து படித்து வளர வேண்டும் என்பதுதான். தமிழகப் பள்ளிகள் குறித்து எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்குப்படி, ஒரு பாலர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் காட்டிலும், இரு பாலர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் தலைசிறந்து விளங்குவதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
இப்பள்ளியில் மாணவியரின் சேர்க்கைக்கு மாவட்டக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

சித்தா, 1,235 இடங்கள் நிரம்பின :

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா படிப்புகளுக்கு, 1,235 இடங்கள் நிரம்பின.
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 1,482 இடங்கள் உள்ளன.
 இந்த இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், நவ., 19ல் துவங்கியது. நேற்று நிரம்பிய, 183 இடங்களுடன், இதுவரை, 1,235 இடங்கள் நிரம்பியுள்ளன.இதுகுறித்து, தேர்வு குழு அதிகாரிகள் கூறியதாவது:முதற்கட்ட கவுன்சிலிங்கில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், 247 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இந்த இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், www.tnhealth.org என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் அரசு பள்ளிகள் :

கணினி அறிவியல் பாடத்தில் தமிழக அரசு பள்ளிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் தற்போது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய  பாடங்கள் உள்ளன. இதே பாடப்பிரிவுகள்தான் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளிலும் உள்ளது. மேல்நிலை பள்ளிகளில் அதாவது பிளஸ் 1 வகுப்பு சேரும்போது மட்டுமே கம்ப்யூட்டர் தொடர்பாக படிக்க கம்ப்யூட்டர் சயின்ஸ்  என்ற தனி குரூப் உள்ளது. 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்த அறிமுகம் இணைப்பு பாடமாக மட்டுமே உள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் கணினி பயன்பாடு இல்லாத இடங்களே  இல்லை. ஆனாலும், அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் எட்டாக்கனியாகவே உள்ளது. எல்லா மாணவர்களும் கணினி அறிவு பெறவேண்டும் என்ற நோக்கில், கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் பாடத்திட்டம்  கொண்டுவரப்பட்டது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு, கணினி அறிவியல் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன. ஆனால், பின்னர் வந்த அதிமுக அரசு அரசியல்  காரணங்களுக்காக சமச்சீர் பாடத்திட்டத்தில் இருந்து கணினி அறிவியல் பாடத்தை எவ்வித காரணமும் இன்றி நீக்கிவிட்டது. இதனால் பல லட்சம் செலவிட்டு அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் குப்பையில்  வீசப்பட்டன. அதேசமயம், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலும், அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஒரு தனிப்பாடமாக உள்ளது. அண்டை மாநிலம் மற்றும் தனியார்  பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கணினி அறிவு இல்லாமலேயே தங்களது பள்ளிக்கல்வியை தொடர்கின்றனர். கணினி குறித்த அடிப்படை அறிவுகூட இவர்களுக்கு  புகட்டப்படவில்லை. கணினி பற்றிய தகவல் தெரியவேண்டுமானால், மேல்நிலை பள்ளிகளில் மட்டுமே தெரிந்துகொள்ளவேண்டிய நிலை உள்ளது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்க செய்யும் செயலாகவே உள்ளது  என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஜமுனாராணி கூறியதாவது: அண்டை மாநிலமான கேரளாவுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வி  நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் என்பது கேரளாவில் 1ம் வகுப்பில் இருந்தே உள்ளது. ஆனால், தமிழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற பாடப்பிரிவு 11ம் வகுப்பில்தான் உள்ளது. கணினி  அறிவியல் பாடத்தில் பின்தங்கி இருப்பதால்தான் நமது மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.  தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்,  அரசு பள்ளிகளில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழகத்தில் உயர்நிலை பள்ளிகளாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட 700 மேல்நிலை பள்ளிகளில் இன்னும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்படவில்லை. இதேபோல், 850  மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் காலிப்பணிடம் நிரப்பப்படாமல் உள்ளது. பள்ளிகளில் ‘’ஸ்மார்ட் கிளாஸ்’’ திட்டமும் முழு வீச்சில் துவங்கப்படவில்லை. ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு மட்டுமே  மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் குறித்த அறிவை தராது. கணினி அறிவியலை, தனிப்பாமாக கொண்டுவந்தால் மட்டுமே நம் மாணவர்களால் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட முடியும். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள  முடியும். 12ம் வகுப்பு முடித்த பிறகே அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. அதுவும், எப்படி பயன்படுத்த வேண்டும் என சொல்லிக்கொடுப்பது இல்லை. கணினி அறிவியல் பாடத்தில்  இப்படி பின்தங்கியிருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு ஜமுனாராணி கூறினார்.

SSLC மதிப்பெண் பட்டியலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க திட்டம் :

எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.)திட்டமிட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியலை லேமினேட் செய்து தருவதோடு கே.எஸ்.இ.இ.பி. தனது பணியை முடித்துக் கொள்கிறது. ஆனால், லேமினேட் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல் எதிர்காலத்தில் பாழாவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் முக்கியமான ஆவணமாக கருதப்படுவதால், அதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.), எஸ்எஸ்எல்சி தேர்வுகளை நடத்தி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை வழங்கி வருகிறது. தற்போது வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்த கே.எஸ்.இ.இ.பி. 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கும் தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு எளிதில் கிழிக்க முடியாத, நீரில் பாழாகாத, தீயில் சுட்டுப்போகாத மதிப்பெண் பட்டியலை வழங்கதிட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கே.எஸ்.இ.இ.பி. இயக்குநர் வி.சுமங்கலா கூறியது: எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் எல்லா மாணவர்களுக்கும் விலைமதிப்பில்லாதது மட்டுமல்லாது முக்கியத்துவம்வாய்ந்ததாகும். மாணவர்கள் முதல்முறையாக எழுதும் பொதுத்தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலாகும். எனவே, 2018-19-ஆம் கல்வியாண்டில் எளிதில் கிழியாத, நீரில் கசங்காத, தீக்கு இரையாகாத மதிப்பெண் பட்டியலை வழங்க யோசித்துவருகிறோம்.
இதுதொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் மதிப்பெண் பட்டியலில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிய திட்டமிட்டுள்ளோம். அந்த விவரங்கள் கிடைத்தவுடன், அதை சோதனைக்குள்படுத்தி, சிறந்த முறையில் பின்பற்றப்படும் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக முடிவெடுத்தவுடன் மதிப்பெண் பட்டியல் தயாரிப்புக்கு ஒப்பந்தப்புள்ளி கோருவோம். வாரியத்துக்கு மாநில அரசிடம் இருந்து நிதி ஆதாரங்கள் கிடைப்பதில்லை. மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தேர்வுக் கட்டணங்களில் இருந்துதான் மதிப்பெண் பட்டியலுக்கும் செலவிடப்படுகிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பதால், கூடுதல் செலவு ஆகும். எனவே, செலவை சமாளிக்க எல்லா பாதுகாப்பு அம்சங்களையும் நிகழாண்டிலே அறிமுகப்படுத்தாமல், ஆண்டுக்கு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துவோம் என்றார்.

கஜா புயல் பாதிப்பு…!4 மாவட்டங்களை சேர்ந்த 650 மாணவர்களுக்கு ரூ.48 கோடி கல்விக்கட்டணம் விலக்கு …!

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது எஸ்ஆர்எம் பல்கலைக்கழங்களின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழங்களின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொண்டார்.அதன் பின் அவர் கூறுவகையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது.படிப்பு முடியும் வரை அவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். 4 மாவட்டங்களை சேர்ந்த 650 மாணவர்களுக்கு  ரூ.48 கோடி கல்விக்கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இதனால்  650 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்?

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை போட வேண்டும் என்று சொல்கிறார்கள். அது பின்னணி என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்?
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்க வேண்டும் இல்லையென்றால் சாமி குத்தம் ஆகிவிடும் என்று பல பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டு.

ஆனால் அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?
நாம் அம்மாவின் கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்ற தண்ணீர் நிறைந்த சூழலில் இருந்திருக்கிறோம். அதில் உள்ள கழிவுகள் தலையில் தேங்கியிருக்கும். சாதாரணமாக கடல்நீரில் 5 நிமிடம் கை வைத்திருந்தாலே கை கழுவிய பிறகும் கூட உப்பின் ருசி ஒட்டியிருக்கும், கை ஊறி போய்விடும். அப்படி இருக்கையில் 10 மாதம் தண்ணீரிலே இருந்து வந்த குழந்தையின் உடல் எந்தளவு ஊறியிருக்கும். உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால் தலையில் தேங்கிய கழிவுகள் முடியில் வேர் கால்கள் வழியாகத் தான் வெளியேறும்.  

அதனை வெளியேற்ற என்ன வழி மொட்டை அடித்தால் மட்டுமே அந்த வேரின் வழியாக தேங்கியிருக்கும் கழிவுகள் வெளிவரும். இது தான் உண்மையான காரணம். ஆனால் இப்படி கூறினால் யாருடைய செவிக்கும் எட்டாது. இதையே சாமி கண்ண குத்தும், தெய்வம் பார்க்குது, குலதெய்வ வேண்டுதல் என பட்டியலிட்டு கூறினால் அனைவரும் கேட்பர்.

எதையும் தெய்வீக ரீதியாக கூறினால் நம் மக்களின் செவிக்கு எட்டும். இதே போல் 3 வயதிலும் ஒரு மொட்டை அடிப்பர் அதற்கு காரணம், ஒரு வயதில் அடித்த மொட்டையில் சில கழிவுகள் வெளிவராமல் இருக்கும். அப்படி வராமல் இருக்கும் கழிவுகள் 3 வயதில் அடிக்கும் மொட்டையில் வந்துவிடும்.

இதற்காகவே ஒரு வயதிலும், மூன்று வயதிலும் மொட்டை சாமியின் பெயரில் அடிப்பர். இதன் உண்மை பின்னணியே இதுதான். முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பின் ஒரு அறிவியல் பின்னணி இருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.

அதை கண்டுகொள்ளாமல் மொட்டை அடித்து கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டால், பிற்காலத்தில் குழந்தைக்கு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.   

மாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம்.
மாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...

காட்சி உலகம்...

இன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர்கள் ஈர்க்க முடியும். ஆகையால் பாடங்களைத் தாண்டிய விஷயங்களில் கருத்துப் பகிர்வு செய்ய சில நிமிடங்களை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டும்.

பெற்றோரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்து தங்கள் குழந்தைகளை ஈர்க்கவும் வழி நடத்தவும் வேண்டும். மல்டிமீடியா மூலமாக குறுவீடியோக்கள், காட்சிப பகிர்வு மூலம் அவசியமான அறிவு வளர்ச்சி விஷயங்களை மாணவர்களின் மனதில் பதிக்க வேண்டும். இது அவசியமற்ற முறையில் அவர்கள் பொழுதுபோக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும். புரிதலை வளர்க்கும். மல்டிமீடியா நுட்ப அறிவையும் அவர்களுக்கு வளர்க்கும்.

இணையக் கல்வி அவசியம்

பயிற்சி வகுப்புகளையும், தகவல் தொடர்பையும் தற்காலத்திற்கு ஏற்றபடி இணைய வழிக்கு மாற்றினால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றலில் கவனம் செலுத்துவார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைத்து தகவல்களையும் இணைய தரவுகளாக மாற்றவும், பாடங்கள் மற்றும் பயிற்சிமுறைகளை கணினி- இணைய நுட்பத்திற்கு எளிதாக மாற்றவும் முடியும். மாணவர்களுக்கு தகவல்களை கடத்தவும், கருத்துகளை பகிரவும் இது ஏற்றது.

வீட்டுப்பாடப் பயிற்சிக்கான தகவல்களையும், அதற்கு தேவையான உபகரணங்களையும் இணையத்தில் பதிவேற்றினால் எந்த மாணவரும் குழப்பமடையாமல் தெரிந்து கொள்வார்கள். கூச்சம் தவிர்த்து தங்கள் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்கவும் இணைய தகவல் தொடர்பு வசதியாக இருக்கவும், இதன் வழியே ஒவ்வொரு மாணவரின் திறமையை பாராட்டவும், குறைநிறைகளை தனிப்பட்ட முறையில் தெரிவித்து அவர்களை வழிநடத்தவும் முடியும். இதனால் சராசரி மாணவர்கள் மற்றவர் முன்னிலையில் அவமானம் அடைவதையும், கூச்சம் கொண்டு ஒதுங்கிச் செல்வதையும் தவிர்க்கலாம். தங்களுக்கென எளிமையான இணையப்பக்கத்தை உருவாக்குவது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகச்சுலபமானது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

வகுப்பறை நிர்வாகம்

ஆசிரியர்களின் வகுப்பறை நிர்வாகத் திறமை, மாணவர்களின் கற்றல் முறையில் நேர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது என்கிறது கற்றல் தொடர்பான ஆய்வுகள். சிறந்த மாணவர்கள் மற்றும் சவால் நிறைந்த சராசரி மாணவர்கள் என பலதரப்பட்ட மாணவர்களை கொண்டதுதான் வகுப்பறை. அனைவர் நலனிலும் அக்கறை கொண்டவர்களாக ஆசிரியர்கள் தங்கள் பார்வையை செலுத்த வேண்டும்.

நீங்கள் தனித்துவம் நிறைந்த ஆசிரியர் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். புதுமையும், எளிமையும் கொண்ட ஆசிரியர்களாக வலம் வருபவர்களின் பாடங்களில் மாணவர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல நேரங்களில் போதிப்பதைவிட மென்மையான வழிநடத்தல்கள் நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்பதை உணர்ந்தவர்கள் சிறந்த ஆசிரியர்கள்.

வகுப்புகள் பாடம் நடத்த மட்டுமல்ல, பண்பு வளர்க்கவும், மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை உருவாக்கவும்தான் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பழகும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பாட விளக்கங்களை நவீன மாற்றத்திற்கு ‘அப்டேட்’ செய்ய வேண்டும். காட்சிமுறை பாடங்களுக்கு உங்கள் வகுப்பை தயார் படுத்தியிருந்தால் நீங்கள் முன்மாதிரி ஆசிரியர்தான்.

தேவை சுயபரிசோதனை

மாணவர்களை மதிப்பிடுவதைப்போல தங்களையும் ஆசிரியர்கள் மதிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயம். மாணவர்கள் உங்கள் வகுப்புகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு, நீங்கள் பாடம் நடத்தும் முறையில் உள்ள குறைநிறைகள் உள்ளதா? என அறிய முற்பட வேண்டும்.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஒரு வீடியோவாக பதிவு செய்து தாங்களாக சுய பரிசோதனை செய்யலாம். வேகமாக பாடம் நடத்துகிறீர்களா, போதிய விளக்கம் அளிக்கவில்லையா, கண்டிப்பு மிகுந்திருக்கிறதா? கனிவு குறைந்திருக்கிறதா? அதிகமாக பாடச்சுமை கொடுக்கிறீர்களா? கடினமான பகுதியை சுலபமாக கற்பிக்க நீங்கள் என்ன வழிகளை கையாளுகிறீர்கள், சிறந்த மாணவர்களையும், சராசரி மாணவர்களையும், பின்தங்கிய மாணவர்களையும் சரிசமமாக நடத்துகிறீர்களா? பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற கவனம் செலுத்துகிறீர்களா? இதர நடை, உடை, பாவனைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது இன்றைய மாணவர்களை வழிநடத்த அவசியமான மாற்றமாகும்.

வகுப்பைத் தாண்டிய ஆசிரியர்கள்...

ஆசிரியர்கள் வகுப்பறை தாண்டியவர்களாக வலம் வர வேண்டியது அவசியம். பாடங்களைக் கடந்த விஷயங்களை மாணவர்களுடன் பகிர்வது முக்கியத் தேவையாக இருக்கிறது. அரசியல் அறிவு, சமூக அறிவு கொண்டவர்களாக ஆசிரியர்கள் வலம் வர வேண்டியது உள்ளது. அரசுக்கும், அரசு பிரதிநிதிகளுக்கும் தகவல்தொடர்பை ஏற்படுத்த ஆசிரியர்கள் பாலமாக இருக்க வேண்டும். தங்கள் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், நிதிகள் தாமதமின்றி பெற்றுத்தர ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புறவெளி கல்வியாக சுற்றுலா கல்வி மற்றும் நேரடி பயிற்சி கல்வியை அதிகப்படுத்த வேண்டும். இது மாணவர்களின் திறனை பெரிதும் வளர்க்கும்.

கற்பித்தலும், கற்றலும்...

கற்பித்தல் எளிதான பணியல்ல. அதை மாணவர்கள் எளிதாக உணர மாட்டார்கள். அதே நேரத்தில் கற்றலும் சாதாரணமான விஷயமல்ல. விருப்பமற்ற பாடங்களையும், அதிகப்படியான பாடங்களையும் அவர்கள் படித்தாக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். எனவே மாணவர்களும், ஆசிரியர்களும் அவசியம் தங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தியானம், யோகா, விருப்ப வாசிப்பு, ரசனையானதை ரசித்தல், வெளியே சென்று பொழுதுபோக்குதல் ஆகியவற்றின் மூலம் மனதை இலகுவாக்கி கற்றலில், கற்பித்தலில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.

கல்விச்சூழலானது ஆசிரியர் - மாணவர் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும்போது கற்றல் மேம்படுகிறது. ஆற்றலும், ஆளுமையும் வளர்கிறது. வளரட்டும்!

24/11/18

போரைத் தடுத்த புலவர்- நாடகம்_low

பகைவனுக்கு அருள்வாய்_low

தள்ளுவண்டி தள்ளியே _ Tamil Rhymes & Baby Song for Children _ Infobells_low

செல்லம் சாப்பிடுமாம் _ Tamil Rhymes for Children _ Infobells_low

கவனம் தேவை- சமூகவியல் 5 ஆம் வகுப்பு_low

கண்மணி பாப்பா பாடல்கள் Vol.3 _ Tamil Rhymes _ Infobells_low

உங்கள் பேனாவில் அருமையான மேஜிக் செய்யலாம் __ AMAZING pen magic TRICK rev...

உங்கள் பெயரில் Mobile RingTone வைப்பது எப்படி_ How To Set-Make-Create Na...

இங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH TH...

ஆங்கிலம் புரியிது, பேச முடியல - I Can Read, Write, Understand English Bu...

அறம் செய விரும்பு (Aram Seiya Virumbu) _ Aathichudi Kathaigal _ Tamil St...

அ சொல்லலாம் _ Tamil Rhymes for Children _ Infobells_low

How To Change Your Mobile Computer Mode In Tamil_low