யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/18

இயற்கை வாழ்வியல்முறை----உடல்நலம் மருத்துவம்,


இயற்கை வாழ்வியல்முறை
ஆண்மை பலமே
குடும்ப நலம்
 அருள்அருள் ஹெர்பல்ஸ்  💙 தயாரிப்பில்
அபார தாதுபுஷ்டி லேகியம்
செய்முறை விளக்கம்
பாதாம் பருப்பு– 100 கிராம்
பிஸ்தா பருப்பு– 100 கிராம்
பாதாம் பிசின் – 100 கிராம்
கசகசா– 100 கிராம்
பூனைக்காலி விதை – 100 கிராம்
அமுக்கிரான் கிழங்கு – 100 கிராம்
சாதிக்காய்- 100 கிராம்
சாதிப்பத்திரி – 100 கிராம்
சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
வால் மிளகு– 25 கிராம்
அரிசி திப்பிலி – 25 கிராம்
ஏல அரிசி – 25 கிராம்
கோரைக் கிழங்கு – 25 கிராம்
கடுக்காய்த் தோல்– 25 கிராம்
நெல்லிக்காய் தோல்– 25 கிராம்
தேன்– 500 கிராம்
குங்குமப்பூ– 5 மி.கிராம்
சர்க்கரை – 1 கிலோ
நெய் – 1 கிலோ
பசும்பால்
இளநீர்
செய்முறை
அமுக்கிரான் கிழங்கை உடைத்து மண் சட்டியில் 500 மி.லிட்டர் பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிக்காயை உடைத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் இளநீரும் 500 மி.லிட்டர் பசும்பாலையும் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிப்பத்திரி சுக்கு, மிளகு, வால் மிளகு, அரிசி திப்பிலி, ஏல அரிசி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், நெல்லிக்காய்  தோல் ஆகியவைகளை கல் உரலில் இடித்து வடிகட்டவேண்டும்.🌻🌻🌻🌻
அரைத்து பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், கசகசா, பூனைக்காலி விதை இவைகளை ஒன்றாக ஆட்டுக் கல்லில் நன்றாக ஆட்டிக் கொள்ளவேண்டும். சர்க்கரையை ஒரு இரும்புக் கடாயில் இடித்துப் போட்டு பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீர் விட்டு மூடி வைத்து 30 நிமிடங்கள் கழித்து தோலை நீக்கி கழுவித் துடைத்து அம்மியில் வெண்ணெய்ப் பதமாக அரைத்துக் கொள்ளவேண்டும்
பிஸ்தாப் பருப்பை ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் பசும்பாலை ஊற்றி 30 நிமிடங்கள் மூடி வைத்திருந்து பருப்பை முன்போல் அரைத்துக் கொள்ளவேண்டும்
பாதாம் பிசினை ஓர் கண்ணாடி பாத்திரத்தில் போட்டு 500 மி.லிட்டர் இளநீர் விட்டு 9 மணி நேரம் அரைத்துக் கொள்ளவேண்டும்
கசகசாவை 500 மி.லிட்டர் பசும்பாலில் ஊறவைத்து பாதாம் பிசினையும் கசகசாவையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.💑💑💑💑
பூனைக்காலி விதை 500 கிராம் வாங்கி ஓட்டைப் போக்கி எடை அளவு பருப்பை எடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி. லிட்டர் இளநீர் விட்டு மூடி விறகடுப்பில் வைத்து சிறு *தீயாக எரித்து இளநீர் சுண்டியதும் பருப்பை எடுத்து அரைத்துக் *கொள்ளவேண்டும் 500 மி.லிட்டர் தூய நீர் விட்டு விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து கொதி வந்ததும் அரைத்துள்ள பருப்பு வகைகளைப் போட்டு மர அகப்பையால் கிண்டவேண்டும்
ஒரு நிமிடங்கழித்து மற்ற மருந்துச் சரக்குகளையும் கொட்டி 5 நிமிடங்கள் கிண்டி தேன் ஊற்றி 3 நிமிடங்கள் கிண்டவேண்டும். இளகல் பதம் வந்ததும் இறக்கி நெய்யை உருக்கி ஊற்றி 10 நிமிடங்கள் கிண்டவேண்டும் கிண்டி முடித்த பின்பு குங்குமப்பூ 5 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும்
உபயோகிக்கும் முறை
10 வயது முதல் 16 வயது வரை சிறுவர்களுக்கு இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து 5 கிராம் இளகலுடன் பசும்பாலும் *சேர்த்து கொடுக்க *வேண்டும்
15 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கு 10 கிராம். 21 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு 15 கிராம். இந்த வயதுக்குள் திருமணமானவராக இருந்தால் காலை உணவுக்குப் பின்னும், இரவு உணவுக்குப் பின்னும் இரண்டு வேளை வீதம் எண்பது நாட்கள் சாப்பிடலாம்
26 வயது முதல் *30 வயது வரை உள்ளவர்களுக்கு முன் போல் 80 நாட்கள். 31 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 15 +15 + 15 * *கிராம் இளகல் 80 நாட்கள். காலை, பகல், இரவு உணவுக்குப் பின் 80 நாட்கள் 36 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இதே கணக்கில் மருந்தை சாப்பிட்டு வந்தால் நோய்கள் குறையும்
தீரும் நோய்கள்
ஆண்மைக் குறைப்பாடு, சிறுவர்களுக்கு உடல் இளைப்பு, குழந்தையின்மை ஆகிய நோய்கள் குறையும். உடல் நல்ல பலம் பெறும்
பத்தியம்

பழஞ்சோறு, மொச்சை, பூசணிக்காய், கோழிக் கறி, கருவாடு ஆகிய உணவு வகைகளை சாப்பிடக் கூடாது
குறிப்பு

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருந்துண்ணும் நாட்களில் பசிக் குறைவு ஏற்பட்டால் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். ஒரு வேளைக்கு ஐந்து கிராம் வீதம் குறைத்துக் கொள்ளவேண்டும்

இயற்கை வாழ்வியல் முறை----உடல்நலம் மருத்துவம்,


இயற்கை வாழ்வியல் முறை
உண்பதும் உறங்குவதும் தவமே
உணவு வெறும் சுவை உணர்வுக்கு மட்டுமில்லை. அதனைப் போல் உறக்கம் என்பதும் பொழுதை விரட்டும் வீண் செயலுமில்லை. ஊணும் உறக்கமும் உடலை உறுதி செய்து ஆயுளை விருத்தி செய்யும் அருமருந்துகள்.
உண்பதிலும் உறங்குவதிலும் ஒரு சுகம் கிடைக்கிறது. அதனால் உணவும் உறக்கமும் எல்லோருக்கும் பிடித்தமானவையாக இருக்கின்றன. உணவு வெறும் சுவை உணர்வுக்கு மட்டுமில்லை. அதனைப் போல் உறக்கம் என்பதும் பொழுதை விரட்டும் வீண் செயலுமில்லை. ஊணும் உறக்கமும் உடலை உறுதி செய்து ஆயுளை விருத்தி செய்யும் அருமருந்துகள். அளவான உணவும் ஆழ்ந்த உறக்கமும் மனிதனுக்கு வேண்டிய ஆற்றலை அள்ளித்தரும் வரங்கள். அதனால் இவையிரண்டும் மனிதனுக்கு மிகவும் அவசியமானவை. இதையுணர்ந்த முன்னோர் இவற்றிற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தனர். அதன் விளைவாக உணவு உட்கொள்ளும் முறையையும் உறங்குகின்ற வழிமுறையையும் கண்டறிந்து அவற்றைத் தவமாகவே போற்றினர்.
உணவு என்பது பண்பாட்டுடன் பிணைந்தது. பிறந்த இடம், வளரும் சூழலுக்கேற்பவே மனிதனுக்கு உணவுப் பழக்கம் அமைகிறது. தட்ப வெட்ப நிலைகளுக்கு ஏற்பவே தானியங்கள் விளைகின்றன. அந்தத் தட்பவெட்ப நிலைக்குத் தகுந்தவாறே அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கமும் அமைகிறது. இதனால் சொந்த பூமியில் விளைபவை சுவையானதாகவும் வயிற்றுக்கேற்ற உணவாகவும் கருதப்பட்டன. அதைத்தான் இன்று இயற்கை உணவு என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறோம். இக்காலம் எங்கோ விளையும் பல்வகை உணவு வகைகளைப் பரிமாறும் காலமாக மாறிவிட்டது.
ஒருவேளை உண்பவன் யோகி (தவஞானி), இரண்டு வேளை உண்பவன் போகி (இன்பம்விரும்பி), மூன்று வேளை உண்பவன் ரோகி (நோயாளி) என்று உணவு உண்ணும் வேளையை ஞானியர் கட்டுப்படுத்தினர். ஆனாலும் மூன்று வேளை உணவு என்பதே எல்லோருக்கும் ஏற்புடையதாகிவிட்டது. அதுவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகிப் போனது. எந்தச் சூழலானாலும் எந்த உணவு ஆனாலும் நம் முன்னோர் சொன்ன முறைகளைப் போற்றி உண்பது ஆரோக்கியத்தின் திறவு கோலாகும். மூன்றுவேளை உணவு நமக்குப் பழகிவிட்டது. அவசியமும் ஆகிப் போனது. எவை அந்த மூன்று வேளை?
காலை, மதியம், இரவு. இந்த மூன்று வேளையும் உணவு உண்ண வேண்டும். இது சரிதான். காலை எத்தனை மணிக்குச் சாப்பிட வேண்டும்? மதிய உணவு எப்போது? இரவு உணவு ஏழு மணிக்கா? எட்டு மணிக்கா? இந்த மணிக்கணக்கைத்தான் நம்முன்னோர் பசித்துப் புசிஎன்று சொல்லி வைத்தனர். பசித்துப் புசி என்பது வெற்று மொழியன்று.
அனுபவத்தில் கண்டெடுத்த ஞானமொழி. பசி என்பது சாப்பாட்டு நேரத்தைக் காட்ட வயிறு அடிக்கும் அறிவிப்பு மணி. உணவுக்கு விடுக்கும் அழைப்பு மணி. நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைப்பதற்கு நம் வயிற்றில் அமிலம் சுரக்கிறது. நாம் வழக்கமாகச் சாப்பிடும் நேரத்திற்கேற்ப அமிலமும் சுரக்கப் பழகிக் கொள்கிறது. நாம் சாப்பிடப் பிந்தினாலும் அமிலச் சுரப்பு தன்வேலையை உரிய நேரத்தில் தொடங்கி விடுகிறது. இதுதான் பசியின் அறிகுறி. இந்த நேரத்தில் தேவையான உணவை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
உண்ட உணவு செரித்தபின் நமக்கு உகந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பது நம் முன்னோர் சொல்லிவைத்த உண்மை. சாப்பிட வேண்டிய அளவு என்ன? ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? அதற்கும் அளவு சொல்கிறார் வள்ளுவர். நம் வயிற்றில் உள்ள அக்கினிதான் நாம் உண்ட உணவைச் செரிக்க வைக்கிறது. அதனால் நம் வயிற்றுத் தீயின்(உஷ்ணம்) அளவுக்கேற்பவே உண்ண வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. இதை உணர்ந்துதான், வயிறுமுட்டச் சாப்பிடாதே என்கின்றனர்.

ருசித்துப் புசிஎன்பது நம் முன்னோர் சொல்லி வைத்த இன்னொரு அனுபவ மொழி. அதாவது உணவை விருப்புடன் ரசித்துச் சாப்பிட என்று சலிப்புக் கொள்ளக் கூடாது. இப்படி மனத்தில் உண்டாகும் சலிப்பு வயிற்றையும் பாதிக்கிறது. மனம் சொல்வதைத்தான் வயிறு ஏற்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்தச் சாப்பாடு ஆனாலும் மன மகிழ்வோடு விரும்பியுண்டால் வயிறும் அதனைச் சந்தோஷமாக எற்றுக் கொள்ளும்.


உப்பில்லாக் கூழ் கூட அமிழ்தமாகிவிடும். வேறு நினைவில் சிந்தனையைச் செலுத்தாமல் உண்ணும் உணவில் மட்டும் கவனம் செலுத்தி, நன்கு மென்று உண்ணவேண்டும். இரைப்பைக்குப் பற்கள் கிடையாது. வாயினால் உணவை நன்கு மென்று விழுங்கினால் உண்ட உணவு எளிதில் செரிமானமாகிவிடும். நன்றாக மெல்லும்போதுதான் நாக்கு உணவின் ருசியை அறிய முடியும். இதனால்தான் நம் முன்னோர் ருசித்துப் புசி என்றனர்.
கைகால் கழுவி வாயைச் சுத்தமாக்கிய பின்னே உணவு உண்ண வேண்டும். கால்களில் ஈரம் உலரு முன்பே உண்ணுதல் உயர்ந்த பழக்கம். உண்டு முடித்தபின் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் சொல்லும் நம்முன்னோர் எந்தத்திசை நோக்கியிருந்து உணவு உண்ண வேண்டும் என்பதையும் அதற்கான பலனையும் குறிப்பிடுகின்றனர்.
கிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் மூன்று திசைகளைப் பார்த்து இருந்து உண்பது நல்லது. வடக்குப் பார்த்து உண்ணக்கூடாது. அது நல்லது இல்லை. இந்திரனுக்குரிய கிழக்குத் திசை நோக்கியிருந்து உண்டால் கல்வியும் ஆயுளும் பெருகும். எமதர்மனுக்குரிய தெற்கு நோக்கி உண்டால் புகழ் வளரும். மகாலட்சுமிக்குரிய மேற்குத்திசை நோக்கியிருந்து உண்டால் செல்வம் பெருகும். மற்றவர் வீடுகளுக்குச் செல்லும்போது மேற்கு நோக்கி இருந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டும் நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் வெட்ட வெளியிலும் உணவு உண்பது நம் முன்னோருக்கு ஏற்புடையது அல்ல.
நின்றும் நடந்தும் வெட்டவெளிப் பரப்பிலும் உணவு உண்ணும் பழக்கம் இப்போது நம்மிடையே மலிந்து வருகிறது. வித, விதமான உணவு வகைகளை மேஜையில் பரிமாறி, சூழ இருந்து கரண்டி, முள்கரண்டிகளால் எடுத்துண்ணும் வெளிநாட்டுக் கலாசாரம் இங்கு பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. எதை முதலில் சாப்பிடுவது? எதை எப்படிச் சாப்பிடுவது? என்ற குழப்பத்தில் பலர் தவிக்கின்றனர். இதனால் உணவு விடுதிகளிலும் விருந்து நிகழ்வுகளிலும் ஒருவர் சாப்பிடும் முறையே அவரை அடையாளப்படுத்தும் நிலைமை இப்போது உருவாகிவிட்டது. என்ன இருந்தாலும் வலது கையால் (சோற்றாங்கை) பிசைந்து அள்ளி உண்ணும் ருசிக்கு ஈடாகாது. இனிப்பை முதலிலும் கைப்பைக் கடைசியிலும் மற்ற சுவைகளை இடையிலும் உண்ண வேண்டும் என்பது முன்னோர் மொழிந்தது.
உணவைப் பற்றிச் சொன்ன நம் முன்னோர் உறக்கத்தைப் பற்றியும் சொல்லிச் சென்றுள்ளனர். உள்ளத்துக்கு ஓய்வு தந்து உடலுக்குத் தெம்பு தருவது உறக்கம். தூக்கம் நோயைத் துரத்தும் என்பது அறிவுபூர்வமான உண்மை. தூக்கத்திற்கு உகந்த நேரம் இரவு என்பதும் முன்னிரவில் துயின்று வைகறையில் துயில் எழ வேண்டும் என்பதும்? முன்னோர் வகுத்த நெறி. இரவில் தூங்காமல் இருந்தால், பயம், படபடப்பு, மந்தம், புத்திமயக்கம் போன்றவை உண்டாகும். கோபம், கவலை, வேண்டாத சிந்தனை போன்றவற்றைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு இறைவனை எண்ணித் துயிலச் சென்றால் நிம்மதியான தூக்கம் உடனே நம்மைத் தழுவும்.
நல்ல தூக்கத்திற்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும். எந்தத் திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பதையும் நம் முன்னோர் அறிவு பூர்வமாக வரையறுத்துள்ளனர். வடக்குத் திசையில் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்பது நம் மூதாதையர் கருத்து. உடம்பின் தலைப்பகுதியில் நேர் மின்னோட்டம் உள்ளது. பூமியின் வடக்கில் நேர்மின்னோட்டம் உள்ளது. இரண்டு நேர்மின்னோட்டம் ஒன்றையொன்று துரத்தும். இது மூளைக்கு நல்லது அல்ல. பூமியின் வடதிசையில் உள்ள காந்த ஈர்ப்பு சக்தி மூளையைப் பாதிக்கும்.
இது அறிவியல் உண்மை. இதை அறிந்தே நம் முன்னோர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் தலைவைத்துப் படுப்பதற்கு உகந்தவை. இதனை, “உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்குஎன்பதால் அறியலாம். உடம்பில் உள்ள ஈரம் உலர்ந்த பின்னே படுக்கைக்குச் செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்பவனைச் சாப்பாட்டு ராமன் என்றும் மிதமிஞ்சித் தூங்குபவனை கும்பகர்ணன் என்றும் இகழ்வதுண்டு. அப்படியின்றி, அளவோடு உண்டு, அயர்ந்து தூங்குபவர்களுக்கு ஊணும் உறக்கமும் உடம்பையும் உயிரையும் வளர்க்கும் உயர்ந்த தவமேயாகும்.

உடல்நலம் மருத்துவம்,


இயற்கை வாழ்வியல் முறை
சுண்டைக்காய் மருத்துவம்
கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு
நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம்
உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக
உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம்.
அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு
இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது
தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப்
பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில்
கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்
தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற
அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு
சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி,
சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான
சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம்
சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும்
சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை
சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன்
மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள்
கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம்
பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய்
மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது
பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.
எப்படி சுத்தப்படுத்துவது?
காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப்
பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி,
சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர்
உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு
கைகளால் லேசாக அவற்றை அலசினால்,
விதைகள் அடியில் தங்கும். விதைகளை
முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு
இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு,
சமையலுக்கு உபயோகிக்கலாம்.
உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து,
கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய
வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும்
மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது
சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை
சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு
விஷயங்களா என மலைக்க வைக்கிறது,
ஊட்டச்சத்து நிபுணரான ஹேமமாலினி
சொல்கிற தகவல்கள்...
* நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச்
சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய
ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான
மருத்துவக் குணங்கள் கொண்ட
சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல
குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண்
ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே
சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம்
உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து
விடும். நீரிழிவு, இதய நோய்கள் என
எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல்
பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு
ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின்
ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை
எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக
நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான
தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக்
கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா,
பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில்
உண்டு.
* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.
ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக்
குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி
இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி
குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த
அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த
சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது.
இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை
போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது
சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது
தெரியாது.
* சுண்டைக்காயை பச்சையாகவோ,
வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும்
சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில்
சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம்
வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன்,
காயங்களும் புண்களும் கூட ஆறும்.
* தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின்
போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும்
இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்
வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ
தையும் தடுக்கக் கூடியது.
 நரம்பு மண்டலத்துக்கு சக்தி
கொடுக்கக்கூடியது
சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும்
நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள
நல்ல குணங்கள் உதவக்கூடியவை.
* நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத்
தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது
தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம்
விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை
என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ,
அத்தனையையும் சுண்டைக்காயிலும்
செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான
சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான்
இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற
முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற
முடியும்.

* சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்
பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல
மருந்துத் தயாரிப்புகளுக்கு
உபயோகிக்கிறார்கள்.
* பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின்
ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று
கொடுப்பார்கள். அதில் பிரதானமாக
சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். 🍃🍃🍃
தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான
சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை
வெளியேற்றும் சக்தி கொண்டது அதில்
சேர்க்கப்படுகிற சுண்டைக்காய்.
சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய
என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது,
எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்