தற்போது சிம் கார்டு வாங்க ஆதார் நகல் அல்லது வேறு எந்த புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தின் நகல், அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சரி பார்க்கும் வேலை தேவையில்லை.
ஆதார் எண்ணைச் சொன்னாலே போதும். செல்போன் நிறுவனங்களின் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள கைபேசியில், அந்த செல்போன் நிறுவனத்தின் செயலியை Open செய்து, கையடக்க விரல் ரேகை Scanner ஐ பொருத்தி, நமது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, மிகச் சிறிய விரல் ரேகை Scanner ல், நமது விரலை வைக்கச் சொல்கிறார்கள்.
அடுத்த நொடியே நம் புகைப்படத்துடன் கூடிய நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களும், சம்மந்தப் பட்ட செல்போன் நிறுவனத்தின் கைபேசியில் வருகிறது.
இதன் பின், சிம் கார்டு எண், அந்த சிம் கார்டுக்கான பத்து இலக்க மொபைல் எண்ணை பதிவு செய்து, செல்போன் நிறுவனத்தின் Terms and Conditions ல் டிக் செய்து, இதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்ற விதத்தில் மீண்டும் மிகச் சிறிய விரல் ரேகை ஸ்கேனரில் விரலை வைக்கச் சொல்கிறார்கள்.
நாம் அந்த செல்போன் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு விட்டோம், என்பதை உணர்த்த அந்த நிறுவனத்தின் செயலி உள்ள கைபேசியில் பச்சைக் கலரில் டிக் வந்து விடுகிறது.
அந்த நொடியே, புதிய சிம் கார்டு செயலாக்கம் செய்தாகி விட்டது. உடனே நீங்கள் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். அதுபோலவே உடனே சிம் கார்டு செயல்படுகிறது.
இதற்கு தேவை, தொடு திரை கைபேசி, விரல் ரேகை ஸ்கேன் செய்யும் கருவி, இவை செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலி மற்றும் இணைய தள இணைப்பு. அவ்வளவு தான்.
இப்போது ஆசிரியர்களின் ஆன்லைன் வருகைப் பதிவுக்கு இதை நடைமுறை படுத்த முடியுமா? எனப் பார்ப்போம்.
ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு, தலைமை ஆசிரியரின் கைபேசியில் ஆன்லைன் வருகைப் பதிவுக்கான செயலியை பதிவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியரிடம் கைவிரல் ரேகையை ஸ்கேன் செய்யும் கருவியை வழங்கி, அதனை தலைமை ஆசிரியரின் கைபேசியில் இணைத்து விட்டால், ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வருகைப் பதிவு தயார்.
இதற்கு அதிகபட்சம் ரூ,1000 தான் செலவாகும் என கூறப்படுகிறது.
பள்ளிக்கு வந்ததும் தலைமை ஆசிரியரின் கைபேசியில் ஆன்லைன் வருகை பதிவுக்கான செயலியை Open செய்து, நமது ஆதார் எண்ணை பதிவு செய்து, மொபைலுடன் இணைக்கப்பட்ட ஸ்கேனரில் விரல் ரேகை வைத்தால், நாம் பள்ளிக்கு வந்து விட்டோம் என பதிவாகும்.
எந்த நேரம் வருகையை பதிவு செய்தோம், எந்த இடத்திலிருந்து பதிவு செய்தோம் என்பது உள்ளிட்ட விவரங்கள் எமிஸ் இணையதள சர்வரில் பதிவாகி விடும்.
இம்முறை பதிவை, காலை 9.00 மணி, மதியம் 12.40 மணி, மதியம் 1.30 மணி மற்றும் மாலை 4.00 மணி என நான்கு வேளை பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை கட்டளையிட்டால், OP அடிக்கும் ஆசிரியர் களின் நிலை படு திண்டாட்டமாகி விடும்.
இது போன்ற முறை விரைவில் நடைமுறை படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
எது வந்தாலும் சந்திக்க தயாராகவே இருப்போம்!