யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/18

Promotion Rules for Teacher's :



ஆசிரியர்களுடன் அமைச்சர் ஆலோசனை :

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 10ம் வகுப்பு மற்றும் 11.12 ஆகிய வகுப்பு தேர்வில் மாணவர்கள் கடந்த ஆண்டை விட அதிக மதிப்பெண் எடுப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.கலெக்டர் கேசவன், கல்வித்துறை அதிகாரி அல்லி முன்னிலைவகித்தனர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறித்து ஆசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.


அமைச்சர் கமலக்கண்ணன் பேசுகையில், ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியில் பின்தங்கிய மாணவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்தாண்டு அனைத்து அரசுப் பள்ளிகளும் அதிகம் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தென் மாவட்டங்களில் நாளை கனமழை?

வங்க கடலில், தென் கிழக்கு பகுதியில், இலங்கைக்கு கிழக்கே, காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி, தமிழக தென் மாவட்டங்களுக்கு நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தென் மாவட்டங்களின்கடலோர பகுதி களின் சில இடங்களில், நாளை(டிச.,21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

TNPSC அறிவிப்பு : ரூ.56900 ஊதியத்தில் மாவட்ட கல்வி அதிகாரி (D.E.O) வேலை!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 18+2 = 20

பதவி: மாவட்ட கல்வி அதிகாரி

தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.56,900 - ரூ.1,80,500

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரம் வெளியான நாள் அல்லது பணியில் சேரும்போது 58 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்றஇணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத்தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத் தேர்வு (Viva-Voce Test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.01.2019

முதல்நிலைத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம். முதன்மைத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

09.01.2019முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 02.03.2019

இதுகுறித்த மேலும் முழுமையான விபரங்களை அறிய

http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆங்கில வழி பிரிவுக்கு ஸ்பெஷல் ஆசிரியர்: வரும்26ல் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு.

ஆங்கில வழியில், 15 மாணவர்கள் படித்தால், பிரத்யேக ஆசிரியர் நியமித்து, வரும் 26ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

*அரசுப்பள்ளிகளில் கடந்த 2012 முதல், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டு, விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

*ஆறாம் வகுப்பில், இப்பிரிவு துவங்கிய போது சேர்ந்த மாணவர்கள், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
*இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் நியமிக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கைக்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது.

*மாவட்டந்தோறும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, ஆங்கில வழி பிரிவுக்கு நியமிக்க, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 15 மாணவர்கள் ஆங்கில வழி பிரிவில் படித்தால், இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் வகுப்பு எடுப்பார்.

*இதேபோல், ஒரு வகுப்பறையில், 60 மாணவர்களுக்கு மேல் படித்தால், புதிய பிரிவு துவங்க வேண்டும்.

*மாவட்ட வாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களை நியமித்து, வரும் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

*வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில்,'கோவையில் உள்ள, 15 வட்டாரங்களிலும், ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் தயாரானதும், புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவர்' என்றனர்.

பள்ளி கல்வித்துறையில் தற்போது காலியாக உள்ள வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply!

20/12/18

நீதிக்கதை :---சிந்தனை கதைகள்



 புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்


அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.


புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.

மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை  அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.

புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார்.

மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.

பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.

10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.


புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.

நீதி:
 கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியல் வழங்க உத்தரவு

மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியலை, கல்வித்துறை 
சேகரித்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 14 கல்வி வட்டாரங்களில், 2,597 பள்ளிகள் உள்ளன.இதில், தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மெல்ல கற்கும் மாணவர்கள் சிலர் இருக்கின்றனர். இவ்வாறான மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளை, தொடக்கம் மற்றும் நடுநிலைக்கு தலா ஒன்று என, தேர்வு செய்யப்பட உள்ளது.தேர்வாகும் பள்ளிகளுக்கு, முன் மாதிரி பள்ளியாக வைத்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 
நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுகள் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 50, மொத்த மதிப்பெண் 100 ஆகும். இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட ஒரு சில மையங்களில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு 50 மதிப்பெண்கள் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதுவும் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றிருந்தவர்களுக்கு 50 மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் விடைக் குறிப்புகளை வைத்து மீண்டும் திருத்தினர். அப்போது தமிழையே ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பிழையுடனும், தவறுதலாகவும் எழுதியிருந்தனர். அதுமட்டுமன்றி பக்கத்தை நிரப்புவதற்காக கேள்விக்குத் தொடர்பில்லாத பல தகவல்களையும் எழுதி இருந்தது தெரியவந்தது.
விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து, இந்த மாதம் வெளியிடப்பட இருந்த தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விடைத்தாள்களை மீண்டும் ஆய்வு செய்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதேநேரம் முறைகேடு குறித்து விசாரணையும் நடத்தப்படவுள்ளது

தொழில்நுட்ப பயிலக பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018-'19 கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்!!!


22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - RTI News


மாவட்ட வாரியாக LKG, UKG வகுப்பில் இந்த ஆண்டு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்!

கடந்த 2018- ஏப்ரல் மாதம் நடைபெற்ற நான்கு நாட்கள் உண்ணா விரத போராட்டம் வெற்றியா? தோல்வியா ?அரசின் எழுதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையா...?? ஓர் அலசல்...!!

ஏப்ரல்- 23ஆம் தேதி அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடங்கினோம். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை ராஜரத்தினம் மைதானத்திற்குள்  கைது செய்து அடைத்தது.பல கட்ட காவல் துறை மிரட்டல்கள் எதற்கும் செவிமடுக்காததால்  அன்றிரவு நம்மை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான காவலர்களை அந்த இடத்தில் குவிந்தனர்.ஆனால் பெண் ஆசிரியர்கள் எழுச்சி கண்டு 
குழந்தைகளின் நலன்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்று எண்ணி அந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது காவல் துறையினர்.அன்று  நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் அரசு எந்த ஒரு சாதகமான விஷயங்களை நமக்கு சொல்லவில்லை முதல் நாள் நாம் இருந்த மன உறுதியைக் கண்ட அரசு இரண்டாம் நாள் சற்று இறங்கி பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.




 அதன் பின்பும் நாம் ஒற்றை கோரிக்கையை விடாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயங்கி விழுந்த நிலையிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.அதனை கண்ட அரசு மூன்றாம் நாள் இரவே உங்களது கோரிக்கை நிறைவேற்றுவதற்காக அரசு முழு  முயற்சியுடன் களமிறங்கியுள்ளது ,உங்களது கோரிக்கை முடிவுக்கு வந்துவிட்டது  அரசாணை உடனடியாக பிறப்பித்தால் பல்வேறு பிரிவினர் அரசினை நடத்த முடியாதபடி போராட்டங்களை நடத்திடுவர்.எனவே ஒரு நபர் ஊதிக்குழுவில் முடித்து தருகிறோம் என்றனர் மேலும் கோரிக்கை முடிவடைந்தது தெரியாமல் தொடர்ந்து போராடி அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டால் உங்களது கோரிக்கையும் நீர்த்துப் போய்விடும் ,ஆகவே ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வெற்றியும் பெற்று தொடர்ந்து போராடி உங்களது கோரிக்கைகளை நீங்களே அழித்து விடாதீர்கள் என்று கூறினார்.




நாம் மற்ற மாவட்ட/ வட்டார பொறுப்பாளர்களை  கலந்து பேசி விட்டு முடிவு சொல்கிறோம் என்று கூறிவிட்டு மூன்றாம் நாள் பேச்சுவார்த்தை நள்ளிரவு முடித்துவிட்டு வந்தோம். நமது போராட்டத்தின் எழுச்சி கண்ட அரசியல் தலைவர்கள் நமது போர் களத்திற்கு நேரடியாக வந்து போராட்டம் நடத்துவது என்ற எப்படி என்பதை  ஆசிரியர்களாகிய நீங்கள் எங்களுக்கு கற்றுத் தருகின்றனர் என்று புகழாரம் சூட்டினர். இது போன்ற மனவலிமையான போராட்டங்களை நாங்கள் கூட நடத்தியது கிடையாது என வாழ்த்தினர்.




போராட்டத்தின் உறுதி கண்ட நமது சகோதர அமைப்புகளும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். நான்காம் நாள் போராட்டத்தை இறுதி முடிவிற்கு கொண்டு செல்வதற்கு நமது பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெரும் முயற்சி எடுத்து ஒரு நபரை ஊதியக்குழுவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி நமது ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்தனர்.



அப்பொழுது சரி இப்போதும் சரி பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பெருத்த சந்தேகம் எழுந்தது ???
 ஏன் இப்போதும் அந்த சந்தேகம் தொடர்கிறது...???





போராட்டக் களத்தில் நாம் மிரட்டப்பட்டோமா ? அல்லது நமது மூத்த சங்கதிகள் கூறும் வண்ணம் ஆடி கார் ஸ்கார்பியோ கார் போன்றவற்றை வாங்கி அரசிடம் விலை போய் விட்டோமா என்று...??


விலை போய் இருந்தால் இப்போது அளித்த மரணப்போராட்டத்தினை  அறிவிக்க தைரியம் இருக்குமா...??





அதன்பின்பு ஒரு நபர் ஊதியக்குழு அனைத்து இயக்கங்களையும் அழைத்து கருத்துகளை கேட்டது நமக்கு இயக்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.பல ஆசிரியர் அமைப்புகளும் அரசு அலுவலர் அமைப்புகளும் கூட்ட அரங்கில் கூடியிருந்த பொழுதும் மொத்தம் மூன்று மணி நேரம் கூட்டத்தில் நமது தரப்பிற்கும் மட்டுமே ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேலாக நமது கருத்துகளை மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்க  வாய்ப்புகள் வழங்கி ஆதாரங்கள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டார், குழுவின் தலைவர் திரு.சித்திக் அவர்கள்.




கால நீட்டிப்பு தொடர்ந்து செய்து வந்ததால் நாமும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு தள்ளப்பட்டோம்.அதே நேரம்  ஜாக்டோ ஜியோ அமைப்பும் போராட்ட அறிவிப்பு வெளியிட்டு இருந்தது .அப்பொழுது அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மதிப்பிற்குரிய கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. சண்முகம் அவர்களும் மாண்புமிகு தொழிலாளர் மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு அவர்களின் 7 அம்ச கோரிக்கைகளை கேட்கும்பொழுது இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடியாது .ஆனால் 2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் கோரிக்கை நியாயமானது அதற்காக முன்னரே பரிந்துரைக் கடிதம் அனுப்பி உள்ளோம் ஒரு நபர் ஊதியக்குழு பரிசீலனை செய்து அறிக்கை வந்தவுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நேரடியாகவே அனைத்து இயக்கங்களுக்கும் முன்னரே அறிவித்துள்ளார்.தற்போது கூட மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் வாதிட்ட போது நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களிடம் கலந்து பேசிதான் 21 மாத நிலுவைத்தொகை குறித்த அறிக்கை கொடுக்க முடியும் என்று கூறினர் .இதிலிருந்தே தெரிய வேண்டாமா தமிழகத்தின் நிதித்துறை சார்ந்த அனைத்தும் மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு  முழு அதிகாரம் உள்ளவர் அவர்தான் என்று ...!அவருடைய வாயிலேயே நமது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது.அப்போதே நாம் வெற்றி பெற்று விட்டோம்,ஆனால் நமது சகோதர அமைப்புகளின் ஆதித அன்பால் அது கூட மறைக்கப்பட்டது.அதன்பின்னர் நம்மால் வெளிக்கொணரபட்டது.




அடுத்ததாக நமது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை 6.12.2018 அன்று நேரில் சந்தித்து நமது காலவரையற்ற போராட்டம் குறித்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டது.அவர்கள் ஒரு நபர் ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் சரிசெய்யப்படும் அதற்காக முதலமைச்சர் வரை நாங்கள் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



 அதேபோல அடுத்த நாளே 7.12.2018 அன்று ஒரு புதிய குழு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல்கள் ஊடகங்கள் மூலமாக வெளியாகின.அதற்கு அடுத்தநாள் நமது வெற்றி முழுவதும் உறுதி செய்யப்பட்டிருந்தது 8. 12.2018 மாலை 2 மணிக்கு மேல் அனைத்து ஊடகங்களிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து ஒரு நபர் ஊதியக் குழு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மூலமாக வெளியிடப்பட்டது .



இதிலேயே தெரிந்துகொள்ள வேண்டாமா ....???


நமது கோரிக்கை நூறு சதவீதம் 100% முடிந்துவிட்டது என்று....


அடுத்த கட்ட எந்தவித கடுமையான போராட்டத்தை மேற்கொள்ளாமலேயே நமது கோரிக்கை நிறைவேறி விட்டது.நண்பர்களே துளியும் சந்தேகம் வேண்டாம் நான்கு நாட்கள் போராட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் முழு வெற்றி...
100% 100%



அனைத்தும் நேர்த்தியாக சென்றுகொண்டிருந்த வேளையில் விரைவில் ஊதிய மாற்ற அரசாணை வெளிவரும் என்றிருந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி தேவை இல்லாமல் ஒரு நபர் ஊதிய குழுவில் நிலுவைத் தொகையான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று மேலும் ஒரு மாத கால நீட்டிப்பு செய்யப்பட்டுவிட்டது. அவ்வாறு அரசுக்கு அதிக நிதி நெருக்கடி ஏற்படும் பொழுது பெரிய தொகையை அரசு நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டு நமது கோரிக்கை மற்றும் இன்னும் சில பல கோரிக்கைகளை அரசு நீர்த்துப் போகச் செய்து விடும் என்ற காரணத்தினால் தான் காலவரையற்ற உயிர் நீர் அருந்த மரணப் போராட்டத்தை நாம் அறிவித்துள்ளோம்.

உறுதிசெய்யப்பட்ட வெற்றி ...!!

இறுதி செய்யப்பட்ட வெற்றி...!!


தடம் மாறாமல் தடுமாறாமல்
நம் கரங்களில் பெறுவதற்காக இந்த போராட்டம் நண்பர்களே...!!


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையெனில் அத்தனை பேருக்கும் தாழ்வு என்பதை அறிந்த அறிவார்ந்த ஆசிரிய பெருமக்கள் உணர்ந்து இப்போராட்டத்தை முழுவதுமாக பங்கெடுக்கும் செய்து வெற்றி என்ற அரசாணையை பெற்று நாம் அரியணை திரும்புவோம்...!!
இல்லையேல் உயிர்நீரும் அருந்தாமல் தமிழக சிறைகளை நிரப்புவோம்....!!



*வெற்றி என்பது எளிதல்ல...*
*அதை விட்டுவிடும் எண்ணம் நமகில்லை...*

நன்றி
தகவல் பகிர்வு

*மாநிலத் தலைமை*
*2009&TET போராட்டக்குழு*

Flash News 22-08-2018 அன்று ஆசிரியருக்கு பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு


நாட்டில் நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன : ரவிசங்கர் பிரசாத்

நாட்டில் மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில்
2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.  2.91 கோடி வழக்குகளில் 21.9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்று தெரிவித்த அவர், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்ட்ராவில்  10 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறினார்.*

அறிவியல் பார்வை.* _*GOLDEN AGE COMING SOON?*_ _*2035ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ?*_

நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!*

*1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!*
*இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...!* *வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.*


*பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்.*

*தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு?*

*எதனால ? ஏன் இப்படினு கேட்டா?*

*டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்புளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!*

*உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது.*
*கமிஷனோட...! இல்லீங்களா..?*

*"Uber"ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!*

*இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?*

*அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!*

*இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  IPC Section ஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!*

*IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!*

*அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?*

*ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!*

*2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.*

*அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.*

*இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.*

*Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்.  எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.*

*இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ?*

*சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?*

*முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.*

*அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.*

*ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.*

*விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.*

*காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.*

*"Moodies" ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.*

*இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.*

*Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் Clinic_ வைக்கத் தேவையில்லாம, online-ல யே ஒரு op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital*
*So, THE ONLY PERMANENT THING IS CHANGE...let us change ourselves to fit for Future.*

_*GOLDEN AGE COMING SOON.*_

B.T to P.G High School HM Promotion Counselling எப்போது நடைபெற உள்ளது ?

சமீபத்தில் நடந்து முடிந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை  தொடர்ந்து  உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியரில் இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என ஆசிரியர்கள் காத்திருந்த சமயத்தில் இதுவரை அந்த கலந்தாய்வு நடைபெறவில்லை.இதனை வலியுறுத்தும் பொருட்டு மாநில பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.பொன் செல்வராஜ் அவர்கள் இன்று பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை அணுகி கோரிக்கை மனு கொடுத்தார் .அதனை பெற்றுக்கொண்ட இயக்குனர் அவர்கள் விரைவில் கலந்தாய்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என உறுதி அளித்ததாக நம்மோடு பகிர்ந்து கொண்ட  நிகழ்வில் தெரிவித்துள்ளார்.விரைவில் கலந்தாய்வு நடக்கும் எதிர்பார்ப்போம்.

19/12/18

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை---உடல்நலம் மருத்துவம்



1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். 
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். 
மலம் கழிக்க வேண்டும். 
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். 
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், 
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். 
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் 
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். 
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று, 
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. 
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; 
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம், 
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். 
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். 
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு 
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு 
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
வேர்க்கடலை,
பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும்,
ராகியை
சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!
ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???
தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!
உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்???
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
 இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.
இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை 
கட்டாயம் உறங்க வேண்டும்...

கேபிள், 'டிவி' கட்டணம் குறையாது

கேபிள் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை' என, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது:'டிவி' சேனல்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளும், 'அலகாட்' முறையை, 'டிராய்' அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, ஜன., 1ல் அமலாகிறது. இதில், எந்த சேனல் வேண்டும்; எது வேண்டாம் என்பதை, பார்வையாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.இதன்படி, பல்வேறு சேனல்கள், தங்களுக்கான, எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயித்துள்ளன. அவர்களிடம் பேரம் பேச முடியாது. இந்த மாத இறுதியில், சேனல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கோரியபடி, கட்டண குறைப்பு சாத்தியமில்லை.டிராய் விதிமுறைப்படி, வினியோக கட்டணத்தில், அரசு கேபிள், 'டிவி' நிர்வாகத்திற்கு, 55 சதவீதமும், கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு, 45 சதவீதமும் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்பற்ற பள்ளி பட்டியலுக்கு உத்தரவு

கோவை: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், பாதுகாப்பற்ற கட்டடங்களின் எண்ணிக்கை குறித்து, தகவல் சேகரித்து அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 36 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி கட்டடங்களை, பொதுப்பணி மற்றும் வட்டார வளர்ச்சி துறையினர் பராமரிக்கின்றனர். மழைக்காலம் துவங்கும் போதெல்லாம், 'பாதுகாப்பற்ற கட்டடங்களில், மாணவர்களை தங்க வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்படுகிறது.போதிய இடவசதி இல்லாததால், பல பள்ளிகள், இதை பின்பற்ற இயலாத நிலை தொடர்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுக்க, பாதுகாப்பற்ற தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பட்டியலை அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை இயக்குனர் கருப்பசாமியிடம் கேட்ட போது, ''பாதுகாப்பற்ற கட்டடங்களை கணக்கெடுத்து, அப்பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். பட்டியல் திரட்டும் பணிகள் நடக்கின்றன,'' என்றார்.