யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/18

உடல்நலம் மருத்துவம்








































































தொடக்க பள்ளி ஆசிரியர்கள்அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம் LKG/UKG பாடம் கற்பிக்க உள்ளனர்.?

தமிழகம் முழுவதும், 2,381 அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 53 ஆயிரம் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை, பள்ளிகளில் சேர்க்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.


இதற்காக, சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 2,381 அங்கன்வாடிகளில் படிக்கும், 52 ஆயிரத்து, 933 பிள்ளைகளுக்கு, எல்.கே.ஜி., மற்றும், யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது.தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம், பாடம் கற்பிக்க உள்ளனர். இந்த மாணவர்களுக்கு, நான்கு ஜோடி சீருடை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் வழங்கப்பட உள்ளன.

வகுப்பு ஆசிரியர்களின் வருகைப்பதிவு பரிதாபங்கள்!

சமீப காலம் வரை  பள்ளிகளில் வருகைப்பதிவு முறை பதிவேடுகளில் பதிவிடுவதாக தான் இருந்தது.

தற்போது அதை டிஜிட்டல் ஆக்கும் முயற்சியாக TNSchools மொபைல் செயலி மூலமாக பதிய வேண்டும் என்று கொண்டு வந்ததன் மூலம் வகுப்பு ஆசிரியர்கள் படும் கஷ்டங்கள் கல்வித்துறை அதிகாரிகள் அறிவார்களா என்று தெரியவில்லை! 

#ஆசிரியர் தன் மொபைலில் மாணவர்களின் வருகையைப்  பதிவு செய்த பிறகும் பல சமயங்களில் விடுப்பு மாணவர்கள் செயலியில் அப்டேட் ஆவதில்லை.

#ஒரு ஆசிரியர் அவர் மொபைலில் வருகையைப் பதிவு செய்த பின் வேறொரு ஆசிரியரின் மொபைலில் அதே வகுப்பை பார்த்தால் வருகை பதிவு செய்யப்பட்டதாக காண்பிக்கவில்லை. மீண்டும் அந்த மொபைலில் வருகை பதிவு செய்தால் தான் அவர் மொபைலில் தெரிகிறது. 


#இப்படி ஒரு நிலையில் கல்வி உயரதிகாரிகள் அவர்கள் மொபைலில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் மொபைல் செயலியை உபயோகித்து வருகை பதிவு செய்திருக்கிறார்களா என்று கண்டறிய முற்பட்டால் அந்த பள்ளியில் மொபைல் செயலியை உபயோகப்படுத்தவில்லை என்பது போல தான் காண்பிக்கும்!

#பதிவு செய்த பிறகு Alert என்ற தலைப்பில் School login mismatch என்று ஒரு தகவல் வருகிறது. அதை க்ளிக் செய்து விட்டால் நாம் பதிவு செய்த வருகை மாயமாக மறைந்து விடுகிறது!

#மொபைல் செயலியில் 9:30 மணிக்குள் வருகையைப் பதிய வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அந்த மாணவர்கள் தாமத வருகை என்றாகி விடும். 9:30 மணிக்குள் என்ற கால அளவு இறை வணக்கத்திற்குரிய காலம். அந்த நேரத்தில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் இறை வணக்கக் கூடத்தில் இருப்பார்கள். 

#மதியமும் இந்த வருகைப்பதிவை மொபைல் செயலியில் பதிய வேண்டும். 


#மொபைல் செயலியில் பதிந்த பிறகும் Daily Report என்ற பகுதியில் வருகையைச் சரிபார்க்கும் போது ஆசிரியர்கள் பதிந்த வருகை  பல வகுப்புகளுக்கு entry ஆகவில்லை.

#ஒரே நேரத்தில் சர்வரை பல ஆசிரியர்கள் உபயோகப்படுத்துவதால் இணையத் தொடர்பு சரிவர கிடைப்பதில்லை.

#ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய பாடப்பகுதிகள் அதிகம் உள்ள நிலையில் இந்த மொபைல் செயலி மூலம் வருகைப் பதிவு மேற்கொள்வது அவர்களின் நேரத்தை வீணடிக்கிறது. 

#புதிய புதிய கற்றல் முறைகள், எண்ணற்ற பதிவேடுகள், கணினி மயமாக்கல் இவைகள் அனைத்தும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நினைத்து கல்வித்துறை கொண்டு வந்துள்ளது. 

#ஆனால் நடைமுறையில் இவை அனைத்தும் கல்வி கற்றுத்தருவதற்கான நேரத்தை வீணடிக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை! 

#தற்கால கல்வி முறையில் பயிலும் மாணவர்களை விட அந்த கால குருகுல முறையிலும் 1960-2000 வரையிலுமான காலக்கட்டத்தில் பயின்ற மாணவர்களின் அறிவுத்திறன் மேலோங்கி இருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவர். 

#கல்வித்துறையில் மாற்றம் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

#ஆனால் அவை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 

#ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும். 

#இவற்றை மனதில் வைத்து #மேதகு_கல்வி_அதிகாரிகளும் #மாண்புமிகு
#கல்வியமைச்சரும் ஆசிரியர்களின் துயர் களைய முன்வருவார்களா?

ஆங்கில வழி பிரிவுக்கு ஸ்பெஷல் ஆசிரியர்: வரும்26ல் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

ஆங்கில வழியில், 15 மாணவர்கள் படித்தால், பிரத்யேக ஆசிரியர் நியமித்து, வரும் 26ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.


அரசுப்பள்ளிகளில் கடந்த 2012 முதல், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டு, விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆறாம் வகுப்பில், இப்பிரிவு துவங்கிய போது சேர்ந்த மாணவர்கள், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் நியமிக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கைக்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது.

மாவட்டந்தோறும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, ஆங்கில வழி பிரிவுக்கு நியமிக்க, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 15 மாணவர்கள் ஆங்கில வழி பிரிவில் படித்தால், இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் வகுப்பு எடுப்பார்.

இதேபோல், ஒரு வகுப்பறையில், 60 மாணவர்களுக்கு மேல் படித்தால், புதிய பிரிவு துவங்க வேண்டும்.

மாவட்ட வாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களை நியமித்து, வரும் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில்,'கோவையில் உள்ள, 15 வட்டாரங்களிலும், ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் தயாரானதும், புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவர்' என்றனர்