யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/1/19

மாணவர்களுக்கு குஷியான செய்தி..! சூப்பர் சலுகை அறிவித்து அரசு அதிரடி..!

அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே பயணிக்க
அனுமதி அளிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கு அடையாள அட்டையே போதுமானது எனவும்,புதிய பயண அட்டை வழங்கு வரை, இந்த நடைமுறையை பின்பற்றுமாறு ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் 1.50 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஸ்மார்ட் கார்டு வடிவில் 1,791 பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த 3.10 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?நன்றி விகடன் :

ப்ரிட்ஜ்... அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம். இப்போதெல்லாம் டி.வி இல்லாத வீட்டை ஆச்சர்யமாகப் பார்ப்ப்பதுபோல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு ஃப்ரிட்ஜில் இட்லி மாவு தொடங்கி உணவுப் பொருள்களைச் சேமித்துவைப்பது அத்தனை எளிதான வேலையாகிவிட்டது. ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து, அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் சாப்பிடுவது சில நேரங்களில் ஆபத்தில் முடியும். எந்த உணவையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கலாம், எதை வைக்கக் கூடாது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளி விளக்குகிறார்...

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்

* பால்: பாலை வாங்கி சில மணி நேரங்களில் உபயோகித்து விடுவது நல்லது. அதிகபட்சம் ஒரு நாள் வரை பாதுகாத்துவைக்கலாம். அதற்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்த நினைப்பவர்கள், ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும் ஓரிரு தினங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
* வெண்ணெய்: அதிகக் கொழுப்புச்சத்து, குறைவான நீர்ச்சத்துக் கொண்டது வெண்ணெய். வெளிச்சம் அதிகம்படும் இடத்திலோ, காற்றோட்டமான இடத்திலோ வெண்ணெயைவைத்திருந்தால் ஓரிரு நாள்களில் கெட்டுப்போய்விடும். எனவே, அதிக நாள் வைத்திருந்து வெண்ணெயைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
சீஸ்
* சீஸ்: சீஸ் கெடாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்குக் கண்டிப்பாக ஃப்ரிட்ஜ் தேவை. சீஸை ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும்போது பிளாஸ்டிக் பையில் சுற்றி, காற்றே புகாமல் அடைத்துவைப்பார்கள் சிலர். அதைவிட கன்டெய்னர், சின்னச் சின்ன பெட்டிகளில் லேசான காற்றோட்டம் இருப்பதுபோல வைத்திருப்பது அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.
* இறைச்சி: அதிகக் குளிரான சூழலில், மிக அதிகமான நேரம் எந்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும், உணவு அதன் தன்மையைஅனிதா பாலமுருகன் இழந்துவிடும். குறிப்பாக, இறைச்சி வகைகள். சமைக்கப்படாத இறைச்சித் துண்டுகளை, ஓரிரு நாள்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். சமைத்த இறைச்சியை மூன்று நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் உணவின் இயல்பான தன்மை போய்விடும். வெளியே எடுக்கும்போது, கறியின் மேற்பரப்பு கடினமாக மாறியிருக்கும். அதைச் சூடுபடுத்திய பின்னரே, உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சியில் பாக்டீரியா வளர்வது அதிகமாக இருக்கும். எனவே, தனித் தனி அறைகள் கொண்ட ஃப்ரிட்ஜை இறைச்சியை வைக்கப்பயன்படுத்த வேண்டும்.
* தயிர்: இது, உறைவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளும். உறையும் வரை, தயிரை வெளியில் வைத்திருப்பதுதான் நல்லது. அதிக வெப்பநிலையில் தயிரை வெகுநேரத்துக்கு வைத்திருந்தால், அது திரிந்துபோய்விடும். எனவே, உறைந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நல்லது.
* மருந்து, மாத்திரைகள்: ஒவ்வொரு மாத்திரையிலும் சிரப்பிலும் எந்த வெப்பநிலையில் அதை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இன்சுலின் போன்ற மருந்துகளை, குளிர்ச்சியான நிலையில்தான் வைத்திருக்க வேண்டும். அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
உலர் பழங்கள்
* உலர் பழங்கள்: உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், பாதாம் போன்ற உலர் பழங்களின் ஆயுட்காலம் மாதக்கணக்கில் இருக்கும். இவற்றை எந்தச் சூழலில் சேமித்துவைத்தாலும், குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். அவற்றை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க விரும்புபவர்கள், ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.
* கொத்தமல்லி, கறிவேப்பிலை: இரண்டையும் சுத்தப்படுத்தி, காகிதத்தில் சுற்றி, சிறிது மஞ்சள்வைத்து கட்டிவிட வேண்டும். அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால், ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும்.
ஃப்ரிட்ஜ்
* கீரைகள்: கறிவேப்பிலை, கொத்தமல்லியைப்போலவேதான் கீரைகளும். பல வீடுகளில் ஒரு கட்டுக் கீரையை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாதிப் பாதியாகப் பயன்படுத்துவார்கள். சில நாள்கள் கழித்து கீரையைச் சமைத்தால், பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க ஃப்ரிட்ஜ் உதவும். மீதமான கீரைகளைச் சுத்தப்படுத்தி, ஒரு காகிதத்தில் சுற்றி, அதில் மஞ்சள் ஒன்றைப் போட்டுவைத்தல் கீரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். கீரையையும் இரண்டு நாள்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. 
* எலுமிச்சை, ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களை குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைத்திருந்தால், அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும். எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற அனைத்தையுமே அப்படிவைத்திருக்கலாம். எலுமிச்சையை இறுகக் கட்டாமல், லேசானக் காற்றோட்டத்தில் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அதேபோல, சமைப்பதற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்னர் அதை வெளியில் எடுத்துவைத்துவிடவேண்டியது அவசியம். 
கேரட்
* கேரட்: கேரட்டை அறையின் வெப்பநிலையில் வெளியில் வைத்திருந்தால் சில தினங்களில் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், விரைவில் கெடாமல் பாதுகாக்கலாம். கேரட்டை முதல் ஓரிரு நாள்களுக்குக் காற்றோட்டமாக, வெளியில் வைத்திருக்க வேண்டும். பிறகு ஃபிரிட்ஜில் வைக்கலாம்.  
* ஸ்ப்ரிங் ஆனியன் (Spring onions): வெங்காய வகைகளிலேயே, இது அதிக ஈரப்பதம் கொண்டது. எனவே, இதை இரண்டு நாள்களுக்கு மேல் வெளியில் வைத்திருக்கக் கூடாது. ஒன்றாகச் சேர்த்துக் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், சில வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
ஃப்ரிட்ஜ் என்பது, உணவின் வாழ்நாளை நீட்டிக்க உதவும் ஒரு சாதனம். அதற்காக அனைத்து உணவுப் பொருள்களையும் ஃப்ரிட்ஜில் சேமித்துவைத்துப் பயன்படுத்துவது, அதிக நாள்கள் வைத்திருந்து பயன்படுத்துவது தவறு.

PS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை!

GPF கணக்கு எண் பெற்று பின்னர் CPS ல் பணிபுரிந்து வரும் அரசு பணியாளர்களுக்கு, மீண்டும் CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை வழங்கியுள்ளார்.

Account by Adjustment | Treasuries Principal Secreatry Proceedings Transfer from CPS to GPF Account by Adjustment | Treasuries Principal Secreatry Proceedings
GPF கணக்கு எண் பெற்று பின்னர் CPS ல் பணிபுரிந்து வரும் அரசு பணியாளர்களுக்கு, மீண்டும் CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை வழங்கியுள்ளார்.



தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி சேனல் :

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. வருகிற 21-ந்தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

                   à®¤à®®à®¿à®´à®• அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி சேனல்

சென்னை:

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது.

தொலைக்காட்சி சேனல் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் சேனல் 200-வது நம்பரில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


பள்ளி மாணவர்களுக்கு பாடம் சம்பந்தமாக பயிற்சி, போட்டித்தேர்வு, கல்வி உதவித் தொகை தகவல் போன்றவைகள் பற்றிய நிகழ்ச்சிகள் நிபுணர்கள் மூலம் வழங்கப்படுகிறது.


மேலும் பள்ளிக்கல்வி துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நேரலை மூலம் நிபுணர்களிடம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 50 ஆசிரியர்கள் கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள். கல்வி தொலைக்காட்சி சேனலில் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

இதில் 15 விதமான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சிகள் ஒரே நாளில் இரண்டு முறைக்கு மேல் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.

இதன் மூலம் நிறைய மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு கல்வி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். #EducationTVChannel

நீதிக்கதை :


பறக்கும் போட்டி


அழகர் மலை காட்டுப் பகுதியில் புறாக்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஜிக், ஜங் என்ற இரண்டு புறாக்கள் நண்பர்களாக இருந்தன. எப்போதும் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்தன. இரண்டும் அங்குள்ள ‘கூக்கு’ பள்ளியில் படித்துவந்தன.


அந்தப் பள்ளியில் வேடன் வந்தால் எப்படித் தப்பிப்பது, காட்டு விலங்குகளுடன் எப்படிப் பழகுவது, காட்டை எப்படிப் பரமாரிப்பது, எந்தப் பருவத்தில் எந்தப் பக்கம் உணவு கிடைக்கும் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.

வேடனிடம் தப்பிய புறாக்கள்’, ‘எறும்பும் புறாவும்’ போன்ற கதைகள் அவற்றுக்குப் பாடங்களாக இருந்தன. புறாக்கள் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பறக்கும் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் புறாவே, அடுத்த வருடம் பள்ளியின் தலைவராக இருக்க முடியும்.

போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தது ஜிக்.

“இது என்ன சாதாரணப் போட்டின்னு நினைச்சிட்டியா ஜிக்? பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா?” என்று சிரித்தது மினு.

உடனே மற்ற புறாக்களும் சிரிக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்து ஜிக்கின் முகம் சுருங்கியது.

“ஏய் ஜிக், எதுக்கு இப்படி வருத்தப்படறே? பறப்பது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லை. நீ கலந்துக்கறே. போட்டியில் வென்று தலைவராகா விட்டாலும்கூடப் பரவாயில்லை. கலந்துகொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம்தான் முக்கியமானது. நானும் உன்னுடன் சேர்ந்து பயிற்சிக்கு வரேன். நீ கலந்துக்கறே” என்றது ஜங்.

“பறக்கும் பயிற்சி மட்டுமில்லை, உணவுக் கட்டுப்பாடும் ரொம்ப முக்கியம். நாங்க ஆசிரியர் சொல்வதைச் சாப்பிட்டோம். நீங்க ரெண்டு பேரும் கண்டதையும் தின்று, உடல் பெருத்துப் போயிருக்கீங்க. இதில் போட்டிக்குப் பறப்பதெல்லாம் முடியாத காரியம்” என்று மீண்டும் சிரித்தது மினு.

“நீ எதையும் கண்டுகொள்ளாதே. இன்றே பயிற்சியை ஆரம்பிப்போம்” என்று ஜிக்கை அழைத்துச் சென்றது ஜங்.

பயிற்சியின்போது திடீரென்று கீழே விழுந்தது ஜிக். வேடனின் அம்பு ஒன்று ஜிக்கின் காலைப் பதம் பார்த்துவிட்டது. உடனே அதை மறைவான இடத்தில் படுக்க வைத்து, பச்சிலையைப் பறித்து காயத்துக்கு மருந்திட்டது ஜங்.


இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தது ஜிக். அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை. மூன்றாவது நாள் பயிற்சிக்கு வந்துவிட்டது. சற்றுத் தூரம்கூடப் பறக்க முடியவில்லை.

“நல்லா இருக்கும்போதே உன்னால் முடியாதுன்னு சொன்னேன். இப்ப காயம் வேற. பேசாமல் ஓய்வெடு. அடுத்த வருஷம் போட்டியில் கலந்துக்க” என்றது மினு.

ஜிக் அதைக் கண்டுகொள்ளவில்லை.

அனைவரும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருந்தன. அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. புறாக்கள் மரங்களில் பதுங்கிக்கொண்டன. ஜிக்கும் ஜங்கும் மழையைப் பார்த்ததும் குஷியாகிவிட்டன. இரண்டும் மழையில் நனைந்தப்படி பறந்தன.

சிறிது தூரம் சென்றதும் போட்டி நினைவுக்கு வரவே, “ஜிக், மழையில் பறக்க வேண்டாம். ஏதாவது ஆகிவிடப் போகிறது” என்று குகையில் ஒதுங்கியது ஜங். ஆனால், ஜிக் வெகுநேரம் மழையில் நனைந்துவிட்டு வீடு சென்றது. மறுநாள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் , மாலை ஜிக்கைச் சந்தித்தது ஜங். மழையில் நனைந்ததால் காய்சலில் படுத்திருந்தது ஜிக். இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் சரியானது.

அன்று மாலை ஜிக்கைச் சந்தித்த ஜங், “நாளை மறுநாள் போட்டி. உனக்குக் களைப்பாக இருந்தால் போட்டியிலிருந்து விலகிவிடு. கலந்துகொள்ள நினைத்தால் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். முடிவு உன் கையில்” என்றது.

“என்னால் முடியும்னு தோணுது. நான் போட்டியில் பங்கேற்பேன்” என்றது ஜிக்.

“சரி, வா. கொஞ்ச தூரம் பறக்கலாம்” என்று வெளியில் அழைத்துச் சென்றது ஜங்.

கொஞ்சம் தூரம்கூடப் பறக்க முடியவில்லை. ஜிக்கின் உடல் வலித்தது. அப்படியே ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டது.

“நண்பா, உன்னால் முடியவில்லை என்றால் வேறு எவராலும் முடியாது. இந்த முறை நீதான் வெற்றி பெறப் போகிறாய். இன்னும் கொஞ்சம் பறப்போம்” என்று ஊக்கப்படுத்தியது ஜங்.

நம்பிக்கையோடு பறந்தது ஜிக். மறுநாள் பள்ளிக்குச் சென்றது. சோர்வான உடலைப் பார்த்து தோற்றுவிடும் என்று நினைத்தன சக புறாக்கள். பயிற்சிப் போட்டியில் மூன்றாம் இடம் வந்தது ஜிக்.

“காய்சலில் விழுந்த உன்னால் மூன்றாம் இடம் வர முடிகிறது என்றால், நாளை நடக்கும் போட்டியில் முழு மனதுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய். இப்போதே உன்னை வாழ்த்துகிறேன்” என்றது ஜங்.

ஜிக் மனதில் உற்சாகம் பொங்கியது. மறுநாள் போட்டி தொடங்கியது. வெற்றி பெறும் நம்பிக்கையில் பறக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஜிக்கின் வேகம் குறைந்தது. மற்ற புறாக்கள் வேகமாக அதை முந்திச் சென்றன. அருகே பறந்துவந்த ஜங், உற்சாகம் ஊட்டி வேகத்தை அதிகப்படுத்தியது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு விழா மேடைக்கு முதல் புறாவாக வந்துசேர்ந்தது ஜிக். அனைத்துப் புறாக்களும் ஆச்சரியத்தில் திகைத்தன. ஜிக்தான் அடுத்த பள்ளி தலைவர் என்று அறிவிக்கப்பட்டது.

மினுவும் சக நண்பர்களும் ஜிக்கிடம் மன்னிப்புக் கேட்டன.

3/1/19

இந்தாண்டு 29 வகை தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., பட்டியல்

சென்னை: 'குரூப் - 1, குரூப் - 2, வி.ஏ.ஓ., உட்பட, 29 வகை தேர்வுகள், இந்த ஆண்டு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டி தேர்வுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 4,365 காலியிடங்களை நிரப்பும் வகையில், 29 போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.அவற்றில் சில தேர்வுகள்:= துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கான, குரூப் - 1 தேர்வு, சமூக நலத்துறை பள்ளிகளுக்கான, உதவி கண்காணிப்பாளர் தேர்வு. இளநிலை ரசாயன வியல், உதவி ரசாயனவியலாளர் பதவிக்கான தேர்வு என, நான்கு தேர்வுகள், இந்த மாதம் அறிவிக்கப்படும்= மீன்வள துறை ஆய்வக உதவியாளர், வேலைவாய்ப்பு துறையில், சுருக்கெழுத்து உதவி பயிற்சி அதிகாரி, நெடுஞ்சாலை துறை இளநிலை வரைவு அதிகாரி, இன்ஜினியரிங் பணி போன்றவற்றுக்கு, பிப்ரவரியில் தேர்வு அறிவிக்கப்படுகிறது= அண்ணா நுாலக உதவி நுாலகர், அரசு சட்ட கல்லுாரி நுாலகர், மருத்துவ பணிகள் கழகத்தில் மருந்தாய்வாளர், இளநிலை ஆய்வு அலுவலர் பதவிகளுக்கு, மார்ச்சில் தேர்வு அறிவிக்கப்படும்= தலைமை செயலக பணியில், மொழி பெயர்ப்பாளர், இன்ஜினியரிங் பணி. அருங்காட்சியக காப்பாட்சியர், உதவி சுற்றுலா அதிகாரி போன்ற பதவிகளுக்கான தேர்வுகள்,ஏப்ரலிலும் நடக்கும். குரூப் - 2, தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள், மே மாதமும் அறிவிக்கப்படுகின்றன= கிராம நிர்வாக அலுவல ரான, வி.ஏ.ஓ., உதவி புவியியலாளர், கெமிக்கல் இன்ஜினியர் பதவி களுக்கு, ஜூன் நடக்கும். தமிழக தொழில்துறையில் கண்காணிப்பாளர் பதவிக்கு, ஜூலை; தமிழக சட்ட கல்வி துறையில், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஆகஸ்டிலும் தேர்வு அறிவிக்கப்பட உள்ளது= தமிழக கருவூல துறையில் கணக்கு அதிகாரி பதவிக்கு, நவம்பர்; வன துறை உதவி வன காப்பாளர் பதவிக்கு, டிசம்பரிலும் தேர்வுகள்அறிவிக்கப்பட உள்ளன.தேர்வு இணைப்பு இல்லைடி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு, குரூப் - 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்.இது தொடர்பாக, சமூக வலைதளங்களில், குரூப் - 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில், நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்.

கடுமையாகிறது 'ஆதார்' சட்டம் ரூ. 1 கோடி அபராதம் விதிப்பு?

புதுடில்லி : 'ஆதார்' சட்ட விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 


கடுமையாகிறது,ஆதார் சட்டம்,ரூ. 1 கோடி,அபராதம்,விதிப்பு?

ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதால், தனி நபர் ரகசியம் வெளியாகும் ஆபத்து இருப்பதாக, பலர் கவலை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஆதார் அடையாள அட்டை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையத்துக்கு, அரசின் பிற கட்டுப்பாட்டு அமைப்புகள் போல், அதிக அதிகாரங்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


ஆதார் தகவலை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், தற்போது, ஆதார் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், ஆதார் சட்டத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆதார் விதிகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். ஆதார் விதிகளை தொடர்ச்சியாக மீறி வரும் நிறுவனங்களுக்கு, ஒரு நாளைக்கு, 10 லட்சம் ரூபாய் வீதம், கூடுதலாக அபராதம் விதிக்கும் வகையிலும், புதிய விதிகள் வகுக்கப்பட உள்ளன. 

'ஆதார் இல்லை என்பதால், எந்த குழந்தைக்கும், அரசு வழங்கும் பயன்கள், சேவைகள் மறுக்கப்பட கூடாது' என, விதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது. ஆதார் சட்டத்தின் கீழ், யு.ஐ.டி.ஏ.ஐ., நிதியத்தை ஏற்படுத்தவும்,

மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஆதார் ஆணையத்துக்கு கிடைக்கும் வருவாய்க்கு, வரி விலக்கு அளிக்கவும், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. 

ஆதார் சட்ட திருத்த மசோதா, இந்திய டெலிகிராப் மசோதா, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட திருத்த மசோதா ஆகியவை, லோக்சபாவில், இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன

நீதிக்கதை



தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியை பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்வில் பல நன்மைகளை பெறலாம்.

தடைசெய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்!

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி!

CCE GRADE SHEET - FA(A), FA(B), SA

Image result for CCE GRADE SHEET - FA(A), FA(B), SA

சிப்' இல்லாத ATM கார்டு மூலம் இனி பணம் எடுக்க முடியாது

சிப்' இல்லாத ஏடிஎம் கார்டு மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாது . பழைய கார்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து விட்டு புதிய கார்டுகளை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது


மோசடி புகார்கள் அதிகரித்து வந்ததால், சிப், இல்லாத ஏடிஎம் கார்டுகள் ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இதனால் பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஏடிஎம் கார்டுகளை கொடுத்து , சிப் உள்ள புதிய கார்டுகளை பெற்று விட்டனர். இன்னும் புதிய ஏடிஎம் கார்டுகளை பெறாமல் உள்ளனர். 

அவர்களது டெபிட், கிரிடிட் கார்டுகள் நேற்று முதல் செயல்படவில்லை . குறிப்பாக சென்னையில் பல வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:- 'சிப்' இல்லாத டெபிட், கிரெடிட் ஏ.டி.எம். கார்டுகள் ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் வேலை செய்யாது என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் 'ஸ்வைப்' செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது. 

எனவே பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் கொடுத்து 'சிப்' வைத்த புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் பெயர் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் ஒரே நாளிலும், பெயருடன் கூடிய கார்டுகள் 7 நாட்கள் அவகாசத்திலும் வழங்கப்படுகிறது. சாதாரண வகை கார்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வருகிறது. மஞ்சள் நிற மாஸ்டர் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும் இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழக அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையில்,   சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து  சமூக நலத்துறை ஆய்வு நடத்தியுள்ளது.
ஆய்வின் முடிவில் 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில், இருபத்து ஐந்துக்கும் குறைவான மாணவர்களே படித்து வருவது தெரியவந்துள்ளது.


* குறைவான மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 821 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள்  படித்து வருகின்றனர்.


* இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் வேலூர் மாவட்டமும், மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம் மாவட்டமும் உள்ளன. சிவகங்கை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை மாவட்டங்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதி அமைந்துள்ள ஈரோடு மாவட்டம், எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 355 அரசு பள்ளிகள் குறைவான மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.


* சென்னையில், 55 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர்.  இந்த முடிவுகள் அனைத்தும் சமூகநலத்துறை மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*

கடலூர் மாவட்டம் வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் 21.01.2019 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது.*

*அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும் , பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.*

*அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 02.02.2019 சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும்.*

Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள்

காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவும்.


வருகைப்பதிவு செய்தபின் மாணவர் எவரேனும் வருகை புரிந்தால் மீண்டும் app ஐ Open செய்து குறிப்பிட்ட மாணவருக்கு பதிந்துள்ள A என்பதை மாற்றி P என சமர்ப்பிக்கவும்.

குறிப்பிட்ட அந்த மாணவர் தாமத வருகை என்று பதிவாகிவிடும்.

அவ்வாறே பள்ளிக்கு வந்த மாணவன் app இல் P பதிவு செய்தபின் ஏதேனும் காரணத்தால் வீட்டிற்குச் சென்று விட்டால்,P என்பதை மாற்றி A எனப் பதியவும்.இது Absconded என பதிவாகும்.

*தாமத வருகை மற்றும்*
*Absconded இவற்றை நாம் app இல் பார்க்க இயலாது*

இவற்றை அங்கீகரம் பெற்ற அதிகாரிகளின் Login இல்  மட்டுமே காண இயலும்.

53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம்

கோவையில், 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுவதால், அங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுக்க, ஒரே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது.

இதில், 3 ஆயிரத்து 133 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.இங்கு, தொடக்க வகுப்புகளுக்கு தனியாகவும், உயர்நிலை அல்லது மேல்நிலை வகுப்புக்கு தனியாகவும் என, இரு தலைமையாசிரியர்கள் உள்ளனர்.ஒரே வளாகத்தில் செயல்படும் இரு பள்ளிகளுக்கு, இரு தலைமையாசிரியர்கள் இருப்பதால், நிர்வாக ரீதியாக, சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, ஒரு தலைமையாசிரியரின் கீழ், அனைத்து வகுப்புகளையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவையில், 53 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன.

இங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதோடு, ஒரே தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மூலம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சி.இ.ஓ.,க்கள் கருத்துசென்னையில் சமீபத்தில் நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில், முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் இது குறித்து விவாதித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இனி ஒரு தலைமையாசிரியர் பணியிடம் மட்டுமே உருவாக்கலாம் என, இக்கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை கல்வித்துறை பின்பற்ற முடிவெடுத்துள்ளது.

அதிகாரபூர்வ தகவல் வந்தால் தெரியும்'மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,''கோவையில் 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. இதன் பட்டியலை, வட்டார வாரியாக, இயக்குனரகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம். தலைமையாசிரியர்களை கற்பித்தல் பணிகளில், ஈடுபடுத்துவது குறித்து, அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டால் தான் தெரியவரும்,'' என்றார்.

நீதிக்கதை :



நட்புக்கு ஏங்கிய புலி!


மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள ஓர் அடர்த்தியான காடு. அங்கே பெரிய மரங்களும் குகைகளும் பசுமையான புல்வெளிகளும் நிறைந்து இருந்தன.

பறவைகள் அங்கும் இங்கும் பறந்துகொண்டு கத்தும் சத்தம், விலங்குகள் குதித்தும் ஓடும் ஓசை, அருவியில் தண்ணீர் விழும் சத்தம் எல்லாம் சேர்ந்து ரம்மியமானா சூழலை உருவாக்கியிருந்தது.

மலை உச்சியில் ஒரு குகை. அந்தக் குகையில் புலி ஒன்று தனியே வசித்துவந்தது. அதுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. அதைப் பார்த்தாலே காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் சிதறி ஓடிவிடும். அதனால் யாரிடமும் சிரித்துப் பேசச்கூட முடியவில்லை. இதை நினைத்து புலி மிகவும் வருந்தியது. தனக்கு யாரும் நண்பராக வர மாட்டார்களா என்று ஏங்கியது.

அன்று வேட்டையாடச் செல்லும் வழியில், வேடன்  வைத்த பொறியில் மான் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்தது புலி.  உடனே அதைக் காப்பாற்ற முடிவெடுத்தது. புலி அருகில் வருவதைக் கண்ட மான், பயத்தில் நடுங்கியது. அருகில் சென்ற புலி, பொறியை ஒரே அடியில் அடித்து உடைத்தது. மான் வெளியே வந்தது. நிம்மதியாகச் சென்றுவிட்டது புலி.

மான் தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தியது. புலியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தது. மறுநாள் புலியின் குகைக்குச் சென்றது.

மானைக் கண்டதும் புலிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அருகில் சென்றால் பயப்படும் என்பதால், உள்ளே அமர்ந்தபடியே வந்த காரணத்தைக் கேட்டது.

“நேற்று உன்னைத் தவறாக நினைத்துவிட்டேன். அதற்கு மன்னிப்பும் என்னைக் காப்பாற்றியதற்கு நன்றியும் சொல்ல வந்தேன்” என்றது மான்.

“நன்றி எல்லாம் எனக்கு வேண்டாம். என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும்” என்றது புலி.

மானுக்குத் திக்கென்றது.

“உனக்கு நம்பிக்கை வரும்போது என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும். நீ கிளம்பு” என்றது புலி.

“இல்லை, இப்போதே உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிடப் போகிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டது மான்.


புலியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே மானுடன் கிளம்பியது. இதைப் பார்த்த சில விலங்குகள் ஆச்சரியமடைந்தன. சில விலங்குகள் மானை எச்சரித்தன. இன்னும் சில விலங்குகள் மானுக்கு மரியாதை அளித்தன.

நாட்கள் சென்றன. அன்று மான் காட்டில் தனியாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் வந்த சிங்கம், நல்ல வேட்டை என்று நினைத்தது. மெதுவாக மானை நோக்கிச் சென்றது. அப்போது மானைத் தேடிக்கொண்டு வந்த புலி, சிங்கத்தைப் பார்த்துவிட்டது. மானைக் காப்பாற்றும் அவசரத்தில் பாய்ந்துவந்தது.

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த மான், புலிதான் தன்னைத் தாக்க வருகிறது என்று எண்ணியது. சட்டென்று தாவிக் குதித்து ஓடியது.

மானைத் தப்பிக்க விட்ட புலி மீது சிங்கத்துக்குக் கோபம் வந்தது. உடனே சண்டைக்கு வந்தது. புலியும் சிங்கமும் சண்டையிடுவதைப் பார்த்து மற்ற விலங்குகள் ஆச்சரியமடைந்தன.

“நண்பனுக்காகப் புலி எப்படிச் சண்டை போடுகிறது!” என்றது குரங்கு.

“நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இதை உணராத மான் பயந்து ஓடிவிட்டது” என்றது யானை.

நீண்ட நேரச் சண்டையில் சிங்கம் காயமடைந்து, களைப்புற்றது.

“என் நண்பன் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய நினைத்த உனக்கு, இனி இந்தக் காட்டில் இடமில்லை. இப்பொழுதே ஓடிவிடு” என்று கோபத்துடன் கூறியது புலி.

விட்டால் போதும் என்று சிங்கமும் ஓடிவிட்டது.

நடந்ததை அறியாத மான் தன் கூட்டத்தினரிடம் சென்று,  புலியைத் திட்டித் தீர்த்தது.

“நடந்தது என்ன என்பதை அங்கே இருந்து பார்த்திருந்தால் உனக்குத் தெரிந்திருக்கும். நட்புக்காகச் சிங்கத்திடம் சண்டையிட்டது. புலிக்கும் காயம் அதிகம். பாவம் குகையில் தனியாக வலியோடு போராடிக்கொண்டிருக்கும்” என்றது ஒரு புள்ளிமான்.

“ஐயோ… தவறாக நினைத்துவிட்டேனே. இதோ மூலிகையை எடுத்துக்கொண்டு, புலியைச் சந்திக்கிறேன்” என்று கிளம்பியது மான்.

புலி வலியில் துடித்துக் கொண்டிருந்தது. மருந்திட்ட மான், “என்னை மன்னித்துவிடு. வேகமாக நீ வருவதைப் பார்த்தவுடன், நீ என் நண்பன் என்பதை மறந்து ஓடிவிட்டேன். இனி இப்படி நடக்க மாட்டேன்” என்றது மான்.

“நான் உயிரினங்களைக் கொன்று திங்கும் இனத்தைச் சேர்ந்தவன்தான். அதற்காக நண்பனைக் கொல்வேனா? உன்னோடு நட்பு உருவான நாளில் இருந்து இன்றுவரை உன்னை மட்டுமில்லை, மான்கள் இனத்தையே நான் கொல்வதில்லை. நட்பு என்ற பெயரில் கேடு நினைக்க என்னால் முடியாது. என்னுடன் சண்டையிட்டு நீ சென்றாலும் கூட உன்னையோ, உன் இனத்தையோ நான் வேட்டையாட மாட்டேன். அதனால் என் மீது எப்போதும் உனக்குச் சந்தேகம் வேண்டாம்” என்றது புலி.


மானும் புலியும் மீண்டும் ஒன்றாகச் சுற்ற ஆரம்பித்தன.

பிளஸ் 1 அகமதிப்பீட்டில், 'பூஜ்யம்' ஆசிரியர்கள் விளக்கம் தர, 'நோட்டீஸ்' :

பிளஸ் 1 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டில், பூஜ்யம் மதிப்பெண் அளித்தது ஏன்' என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க, இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தமிழகத்தில், 2018 மார்ச்சில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வு அமலுக்கு வந்தது. இந்த தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் என்பது, 100 ஆக குறைக்கப்பட்டது.மேலும், பாடவாரியாக, 10 மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படுகிறது. தொழிற்கல்வியில், செய்முறை இருக்கும் பாடங்களுக்கு மட்டும், தலா, 25 மதிப்பெண், அகமதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், 2017 - 18ம் கல்வியாண்டில் படித்த, பிளஸ் 1 மாணவர்களில், 20 சதவீதம் பேருக்கு, அகமதிப்பீட்டு மதிப்பெண், ஒன்று கூட வழங்காமல், பூஜ்யமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்களின் மொத்த மதிப்பெண் குறைந்ததும், தேர்ச்சி பெறாததும் தெரிய வந்துள்ளது.பள்ளி வருகை பதிவு, 75 சதவீதம் இருந்தால், அந்த மாணவருக்கு, ஒரு மதிப்பெண்ணை, அகமதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கலாம் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஒரு மதிப்பெண்ணையும், பல மாணவர்கள் பெறவில்லை. அப்படியென்றால், 20 சதவீத மாணவர்கள், 75 சதவீத நாட்கள் பள்ளிக்கு வராமல், தேர்வை எழுதினார்களா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்வாயிலாக, தலைமைஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம், நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.அதில், பல மாணவர்களுக்கு, பிளஸ் 1 தேர்வில், அக மதிப்பெண் பூஜ்யம் என, நிர்ணயித்தது ஏன்; 75 சதவீதம் வருகை பதிவு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்களா; பூஜ்யம் வழங்கிய ஆசிரியர்கள் யார் என்ற விபரத்தை தாக்கல் செய்யும்படிகூறப்பட்டுள்ளது

ஜனவரி மாத பள்ளி நாட்காட்டி:

இந்தாண்டு 29 வகை தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., பட்டியல் :

குரூப் - 1, குரூப் - 2, வி.ஏ.ஓ., உட்பட, 29 வகை தேர்வுகள், இந்த ஆண்டு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டி தேர்வுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 4,365 காலியிடங்களை நிரப்பும் வகையில், 29 போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.அவற்றில் சில தேர்வுகள்:= துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கான, குரூப் - 1 தேர்வு, சமூக நலத்துறை பள்ளிகளுக்கான, உதவி கண்காணிப்பாளர் தேர்வு. இளநிலை ரசாயன வியல், உதவி ரசாயனவியலாளர் பதவிக்கான தேர்வு என, நான்கு தேர்வுகள், இந்த மாதம் அறிவிக்கப்படும்= மீன்வள துறை ஆய்வக உதவியாளர், வேலைவாய்ப்பு துறையில், சுருக்கெழுத்து உதவி பயிற்சி அதிகாரி, நெடுஞ்சாலை துறை இளநிலை வரைவு அதிகாரி, இன்ஜினியரிங் பணி போன்றவற்றுக்கு, பிப்ரவரியில் தேர்வு அறிவிக்கப்படுகிறது= அண்ணா நுாலக உதவி நுாலகர், அரசு சட்ட கல்லுாரி நுாலகர், மருத்துவ பணிகள் கழகத்தில் மருந்தாய்வாளர், இளநிலை ஆய்வு அலுவலர் பதவிகளுக்கு, மார்ச்சில் தேர்வு அறிவிக்கப்படும்= 
தலைமை செயலக பணியில், மொழி பெயர்ப்பாளர், இன்ஜினியரிங் பணி. அருங்காட்சியக காப்பாட்சியர், உதவி சுற்றுலா அதிகாரி போன்ற பதவிகளுக்கான தேர்வுகள்,ஏப்ரலிலும் நடக்கும். குரூப் - 2, தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள், மே மாதமும் அறிவிக்கப்படுகின்றன= கிராம நிர்வாக அலுவல ரான, வி.ஏ.ஓ., உதவி புவியியலாளர், கெமிக்கல் இன்ஜினியர் பதவி களுக்கு, ஜூன் நடக்கும். தமிழக தொழில்துறையில் கண்காணிப்பாளர் பதவிக்கு, ஜூலை; தமிழக சட்ட கல்வி துறையில், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஆகஸ்டிலும் தேர்வு அறிவிக்கப்பட உள்ளது= தமிழக கருவூல துறையில் கணக்கு அதிகாரி பதவிக்கு, நவம்பர்; வன துறை உதவி வன காப்பாளர் பதவிக்கு, டிசம்பரிலும் தேர்வுகள்அறிவிக்கப்பட உள்ளன.தேர்வு இணைப்பு இல்லைடி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு, குரூப் - 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்.இது தொடர்பாக, சமூக வலைதளங்களில், குரூப் - 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில், நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்.