யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/8/16

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

தமிழகத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் (பணியிடங்களின் எண்ணிக்கை 842) அனைத்தும் இணையதளம் மூலம் கலந்தாய்வுமுறையில் முழுமையாக நிரப்பப்பட்டன.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
""2016-17ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வின்போதுஇணையதளம் மூலம் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 325 தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. பொது மாறுதலுக்குப் பிறகு காலியாக இருந்த 517 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் விரும்பிய இடங்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் சரியாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து இணை இயக்குநர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று மேற்பார்வை செய்து வருகின்றனர் என்று பள்ளிக் கல்வி இயக்ககச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது

பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்து வதற்கான பேறுகால சலுகைகள் சட்டத் திருத்த மசோதா மாநிலங்கள வையில் நேற்றுநிறைவேறியது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து தயாரிக்கப் பட்ட இந்த மசோதாவை தொழி லாளர் நல அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தாக்கல் செய்தார்.

பள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு.

பள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்றஅனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: 
அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், தரமானவையாக இருக்க வேண்டும்.மதிய உணவு சமைத்ததும், மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன் மூன்று பேர் சாப்பிட்டு பார்க்க வேண்டும்; கண்டிப்பாக, ஒரு ஆசிரியர் மதிய உணவு முழுவதையும் சுவைத்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு.

அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. 
இதில் முக்கிய கட்டமான, பணி நிரவல் என்ற கட்டாய இடமாற்றம், நாளை துவங்குகிறது. அனைத்து மாவட்டங்களிலும், நாளையும், நாளை மறுதினமும், பணி நிரவல் கவுன்சிலிங் நடக்கிறது.

தொடக்க பள்ளிகளில், ஆசிரியர் - மாணவர் விகிதத்திற்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை, தேவைப்படும்பள்ளிக்கு மாற்றுவர்.இந்த கட்டாய இடமாற்றத்தில், ஒவ்வொரு ஆண்டும், பல தில்லுமுல்லுகள் நடப்பது உண்டு. அதனால், பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கும். இந்த ஆண்டு, எந்த பிரச்னைக்கும் வழியின்றி, பணி நிரவலை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட உத்தரவு.

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும், என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முதல்எழுத்து உள்பட தங்களின் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். 
ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதனை சரிவர பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளது. எனவே, அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் முதல் எழுத்துடன் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். இதனைமாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

IGNOU B.Ed - June 2016 Term End Exam Result Published...

பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை

TNPSC : GROUP - II MAINS HALL- TICKET PUBLISHED

கணினி ஆசிரியர்கள் 39000பேருக்கு தமிழக அரசு புதிய பணியிடஞ்களை உருவாக்கித் தரவேண்டும் -தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு வேண்டும்கோள்.

தமிழ்நாட்டில் பி.எட் கணினி அறிவியல் படித்த 39000 பேர்கள் இன்றுவேலையில்லாமல் உள்ளனர் அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கும் வகையில்புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.2011ஆம் கல்வியாண்டில் 6,7,8,9,10 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம்அறிமுகப்படுத்தப்பட்டு பாடபுத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு கொஞ்சம்மாணவர்களுக்கு வழங்கியும் கொஞ்சம் மாணவர்களுக்கு வழங்காமல் இருந்ததுஅதற்கக்குள் நான் போக விரும்பவில்லை. 
தற்போது தமிழ்நாட்டில் அந்தப்பாடபுத்தகமும்,பாடமும் கைவிடப்பட்டது என்பதை நான் அறிவேன் கைவிடப்பட்ட கணினிஅறிவியல் பாடபுத்தகங்களை மீண்டும் அமல்படுத்தி அதற்கு புதிய கணினி ஆசிரியர்கல்பணியிடங்களை உருவாக்கி தரவேண்டும்.

கழக ஆட்சியில் 1800தோற்றுவிக்கப்பட்ன தொடர்ந்து இந்த ஆட்சியிலும்39000பேர்கள்இன்றைக்கு வேலையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அவர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கும் வகையில் புதிய பணியிடங்கள் உருவாக்கி தரவேண்டும் என தமிழகஅரசுக்குவேண்டுகோள் வைக்க விரும்புகிறேன் -தங்கம் தென்னரசு.

திரு.கார்த்திக் சண்முகம்
மாநில துணைத்தலைவர் ,
9789140822
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்

TNPSC:Department Exam may 2016 Result Released

விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ 75,000/- விண்ணப்பப் படிவம்





செட்' தேர்வு முடிவு தாமதம் : பாதிக்கப்படும் பட்டதாரிகள்.

உதவி பேராசிரியர் தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவுகள், இன்னும் வெளியிடப்படாததால், பேராசிரியர் பணிக்கு செல்ல முடியாமல் பட்ட தாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192உதவி பேராசிரியர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன; 
இதற்கு வரும், 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; செப்., 7க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அளிக்க வேண்டும். ஆனால், விண்ணப்பிக்க முடியாமல் இளம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். காரணம், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, 'செட்' தகுதி தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்தது; 85 ஆயிரம் பேர் எழுதினர். ஆனால், தேர்வு நடந்து ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால், உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க முடியாமல், அவதிக்குஆளாகி உள்ளனர்.

அதேபோல், மனோன்மணியம், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைகளும், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. பலருக்கு தகுதிஇருந்தும், செட் தேர்வு முடிவு தாமதத்தால், பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பி.எட்., கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.
இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்; அவர்களில், 3,736 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள்.மாணவர் சேர்க்கை செயலர் தில்லைநாயகி வெளியிட்ட அறிவிப்பு: பி.எட்., கவுன்சிலிங், வரும், 22 முதல், 30 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் வரும், 17ம் தேதி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி இணையதளத்தில், (www.ladywillingdoniase.com) வெளியாகும். விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலமும், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலமும், அழைப்பு தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செப்., 2ல் வேலை நிறுத்தம் : மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பு.

''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும், செப்., 2ம் தேதி, முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்,'' என, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் துரைபாண்டியன் தெரிவித்தார். இச்சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு, ஆக., 15ல், சென்னையில் நடக்கிறது.
விடுதலைப் போராட்ட தியாகி சங்கரய்யா துவக்கி வைக்கிறார். ஆக., 16 முதல் 18ம் தேதிவரை அகில இந்திய மாநாடு நடத்தப்படுகிறது.சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர்கள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், 18 ஆயிரம் ரூபாயில் இருந்து, 26 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என போராடி வருகிறோம். இது தொடர்பாக, மத்திய அமைச்சர்களுடன்பேச்சு நடத்தியும், இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இது உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து, வரும், செப்., 2ம் தேதி முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இது குறித்து, மாநாட்டில் பேசி முடிவு செய்வோம். அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள், 45க்கும் மேற்பட்ட அகில இந்திய சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் விரயமாகும் ஆசிரியர் ஊதியம்

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; நடுநிலைப் பள்ளிகளில், 35 பேருக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.அதேபோல், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே, தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவார்; இல்லையென்றால், பணியில் இருக்கும் ஆசிரியரில் ஒருவர், தலைமை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தப்படுவார்.
ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடக்கும் போது, ஆசிரியர் - மாணவர் விகிதப்படி, அதிகமாக உள்ள ஆசிரியர்களை, கட்டாய பணி மாற்றம் செய்வர்; இந்த பணி நிரவல், அரசு பள்ளிகளுக்கு மட்டும் உண்டு. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசின் ஊதியம் மற்றும் சலுகைகள் பெறும் ஆசிரியர்கள் பலர், மாணவர் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர்; ஆனால், இவர்களுக்கு கட்டாய பணி மாறுதல் கிடையாது. எனவே, அரசின் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் பலர், பணியில்லாமல், வெறுமனே பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. அரசு நிதி விரயமாவதை தடுக்க, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களையும், கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது

தகுதியானோர் பட்டியல் வெளியிடாமல் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்

வரலாறு பாடத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாமலேயே, பதவி உயர்வு கவுன்சிலிங்கை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதற்கான கவுன்சிலிங் நடத்துவதற்கு முன்பே ஒவ்வொரு பாடத்திலும் தகுதியான பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும். அதில் ஆட்சேபனை இருந்தால் பட்டியல் சரி செய்யப்படும். ஆக., 22 ல் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சிலிங் நடப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் வரலாறு பாடத்திற்கான சீனியாரிட்டி பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், 'வரலாறு பாடத்தில் சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பட்டியலை வெளியிட கல்வித்துறை மறுத்துவருகிறது,' என்றனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகுதியான ஆசிரியர்கள் பட்டியலை இயக்குனரகத்திற்கு அனுப்பி விட்டோம். இயக்குனரகம் தான் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும்,' என்றார்.

B.Ed பயிற்சி: ஆசிரியருக்கு கெடுபிடி

தொடக்க, நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பல்கலைகளில் தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., படிக்கும்போது பள்ளியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற வேண்டும். தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளிகளில் பயிற்சி பெற வேண்டும். 
அதேபோல் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6 முதல் 8 ம் வகுப்புகளில் பயிற்சி பெறலாம் என, தொடக்கக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி பெறுவதால், அவற்றை பணிக்காலமாக கருத வேண்டு மென, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 'இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக விடுப்பு எடுத்தே பி.எட்., பயிற்சி பெற வேண்டும். அரசாணையில் குறிப்பிடாததால் பயிற்சியை பணிக்காலமாககருத முடியாது,' என தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம்உத்தரவிட்டுள்ளது.

திருக்குறள் பற்றிய ஆச்சர்யமான செய்திகள்!!!---கட்டுரைகள், கல்விச் செய்திகள்,

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330


* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.


* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இருஎழுத்துக்கள்-ளீ,ங

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

*திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

*திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

*திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

*திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

தொகுப்பு : ஆசிரியர் கார்த்திகேயன்

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு===கட்டுரைகள்,

மாணவர்களின் தரம் உயர..--கட்டுரைகள்,