யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/6/17

பள்ளிக்கல்வி - பள்ளி மாணவிகளுக்கான வீர தீர செயல்களுக்கான "கல்பனா சாவ்லா" விருதுகள் - விண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்

கரூர் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் முகமது ரிஃபாத் தயாரித்த உலகத்திலேயே மிக மிகச் சிறிய சாட்டிலைட்டை( 64 கிராம்) விண்ணில் செலுத்தியது நாசா

பாடத்திட்ட மாற்றம் பதிவு செய்ய ஜூலை 2 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பாடத்திட்ட மாற்றம் குறித்த பணிக்குப் பதிவு செய்ய ஜூலை 2 -ஆம் தேதி வரை கால
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் வகையிலும், பிளஸ் 1 வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இப்பணிகளை அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கு பெற ஆர்வமுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிறுவனத்தின் இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ் -இல் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ஊர்ழ் தங்ள்ர்ன்ழ்ஸ்ரீங் டங்ழ்ள்ர்ய் ஊர்ழ் பங்ஷ்ற் ஆர்ர்ந் ரழ்ண்ற்ண்ய்ஞ் என்ற படிவத்தில் தங்களது விவரங்களை வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பதிவுக்கான காலம் ஜூலை 2 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - அரசு மற்றும் நிதிஉதவி பெறும் அரசு பள்ளிகளில் "திருவள்ளுவர் வெண்கல சிலை" நிறுவ அறிவுறுத்தல் - சிலை விலை பட்டியல் - இயக்குனர் செயல்முறைகள்



புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்
பதிலளித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.

அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை. தமிழகம் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.

இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு, 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான்,' என ஆணையம் பதிலளித்துள்ளது.


இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை; இதனை செயல்படுத்த வேண்டுமென, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

750 தனி ஊதியம் 1.1.2011க்குபிறகு நிர்ணயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பதிலளிக்க மதுரை , திருச்சி மண்டல தணிக்கை அலுவலர்களுக்கு தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம் ) அவர்களின் உத்தரவு !!!

தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகள் - ஆசிரியர்கள் குழப்பம்

தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல்
ஏற்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை சார்பில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆண்டு செயல்திட்டம் வெளியிடப்பட்டது.

இதில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பணி நாள்கள் 210 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆக., 5, செப்., 16, அக்., 7 ஆகிய 3 சனிக்கிழமைகளும், ஆண்டுத் தேர்வு முடிந்து ஏப்., 20, ஏப்., 23 முதல் ஏப்., 27, ஏப்., 30 ஆகிய 7 சனிக்கிழமைகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால் கடந்த காலங்களில் பயிற்சிக்காக அளிக்கப்பட்டு வந்த ஈடுசெய் விடுப்பும் ஆசிரியர்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

தொடக்க கல்வித்துறையின் இந்த அறிவிப்பை அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்கவில்லை. தேர்வுக்கு முன்பே பயிற்சிகளை முடிக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஜூன் 24ல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும், ஜூலை 1ல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இதனால் சிரமப்படுகிறோம் என்றனர்.

SSLC RETOTAL RESULTS PUBLISHING-PRESS RELEASE

NEET 2017 RESULT PUBLISHED

"உங்க பொண்ணை நம்ம ஸ்கூல் டாய்லெட்டைப் பயன்படுத்த சொல்வீங்களா சார்?" - ஆசிரியருக்கு மாணவியின் கேள்வி!

கற்றல் என்பது உரையாடல்களில் இருந்துதான் தொடங்குகிறது என்பார்கள். ஆனால், நமது கல்விச் சூழல், ஆசிரியர் கூறுவதை மாணவர்கள்
கேட்கும்விதமாவே உள்ளது. இது, ஒரு வழிப்பாதை போன்றது அல்லவா. மாணவர்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகப் பள்ளிக்கூடம் இருந்தால்தான் மகிழ்ச்சியோடு கற்பார்கள்.

பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல; ஆசிரியர் எனும் வழிகாட்டியை, நண்பர்கள் எனும் பெரும் உறவைப் பெறும் இடமும்கூட. ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பதோடு, தோழமையுடன் நடந்துகொண்டால், பள்ளியைவிட இனிமையான இடம் வேறு என்ன இருக்கப்போகிறது? ஆனால், ஆயிரம் ஆசிரியர்களில் தோழமையோடு பழகும் ஆசிரியர்கள் மிகச் சொற்பமானவர்களே. அவர்களில் ஒருவர்தான், மணிமாறன்.

 
அடுத்து, ஒரு மாணவன் வீட்டுப் பாடம் எழுதலை. அவன் வகுப்பு ஆசிரியர் தண்டனை கொடுத்திருக்கார். இது நடந்து சில நாள்கள் கழித்து, ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதைப் படிக்கும்போதே நடுங்கிட்டேன். 'சார், நான் அன்னிக்கு வீட்டுப் பாடம் எழுதாது தப்புதான். ஆனா, அன்னிக்கு முதல் நாள் இரவு எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரச் சண்டை. அம்மாவை அப்பா கடுமையா அடிச்சுட்டு வெளியே போயிட்டாரு. அம்மா அழுதுட்டே இருந்தாங்க. பக்கத்து வீட்டிலே இருந்தவங்க 'ஏதாச்சும் பண்ணிக்காதே'னு அம்மாகிட்ட சொன்னதைக் கேட்டேன். விடியற வரைக்கும் தூங்கவே இல்லை. அதனாலத்தான் வீட்டுப் பாடம் செய்யலை'னு எழுதியிருந்தான். அந்த மாணவனிடம் பேசித் தைரியம் சொன்னேன். அவன் பெற்றோரிடமும் பேசினேன்.

இப்படிப் பல கடிதங்கள், 'என் அப்பா வெளியூரில் இருக்கார். ரெண்டு நாளுக்கு ஒரு தடவை பேசுவார். நேத்துப் பேசும்போது, அம்மா போன்ல பேலன்ஸ் தீர்ந்துட்டதால நான் அப்பாவோடு பேசவே முடியல' என ஒரு மாணவி எழுந்திருந்தாள். உடனே என் போனிலிருந்து அவள் அப்பாவை அழைச்சுப் பேசவெச்சேன்.

சுவாரஸ்யமான இன்னொரு கடிதம் இருக்கு. 'சார், நம்ம ஸ்கூல்ல இருக்கிற பீரோ ரொம்ப பழசாயிட்டு. நாங்க பக்கத்துல போகும்போது எங்க மேல விழுந்துட்டா என்ன ஆகுறது? நீங்கதான் அநாவசியமா போலீஸ் ஸ்டேசன் போகணும்' என எழுதியிருந்தது. படிச்சு சிரிச்சாலும், உடனடியா அந்த பீரோவை மாற்றவும் முயற்சி எடுத்தேன். 'நான் இப்போ எட்டாவது படிக்கிறேன் சார். ஆறாவது படிக்கும்போது சில பொருள்களைத் திருடியிருக்கேன். இப்போ அப்படி செய்யறதில்லை. ஆனால், இப்பவும் நான் திருடுறதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றப்ப கஷ்டமா இருக்கு'னு ஒரு கடிதம். மாணவிகள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் எழுதியிருக்காங்க. என் மனைவியும் இதே பள்ளியில்தான் வேலை செய்யறாங்க. ஒரு கடிதம் தனி கவரில் இருந்தது. கவர் மீது 'இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டாம். டீச்சரிடம் கொடுக்கவும்' என்று இருந்தது. என் மனைவியிடம் கொடுத்தேன். ஒரு மாணவி, மாதவிலக்கு பற்றிய சந்தேகத்தை எழுதியிருந்ததாக என் மனைவி கூறினார்.



அடுத்து, ஒரு மாணவன் வீட்டுப் பாடம் எழுதலை. அவன் வகுப்பு ஆசிரியர் தண்டனை கொடுத்திருக்கார். இது நடந்து சில நாள்கள் கழித்து, ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதைப் படிக்கும்போதே நடுங்கிட்டேன். 'சார், நான் அன்னிக்கு வீட்டுப் பாடம் எழுதாது தப்புதான். ஆனா, அன்னிக்கு முதல் நாள் இரவு எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரச் சண்டை. அம்மாவை அப்பா கடுமையா அடிச்சுட்டு வெளியே போயிட்டாரு. அம்மா அழுதுட்டே இருந்தாங்க. பக்கத்து வீட்டிலே இருந்தவங்க 'ஏதாச்சும் பண்ணிக்காதே'னு அம்மாகிட்ட சொன்னதைக் கேட்டேன். விடியற வரைக்கும் தூங்கவே இல்லை. அதனாலத்தான் வீட்டுப் பாடம் செய்யலை'னு எழுதியிருந்தான். அந்த மாணவனிடம் பேசித் தைரியம் சொன்னேன். அவன் பெற்றோரிடமும் பேசினேன்.

இப்படிப் பல கடிதங்கள், 'என் அப்பா வெளியூரில் இருக்கார். ரெண்டு நாளுக்கு ஒரு தடவை பேசுவார். நேத்துப் பேசும்போது, அம்மா போன்ல பேலன்ஸ் தீர்ந்துட்டதால நான் அப்பாவோடு பேசவே முடியல' என ஒரு மாணவி எழுந்திருந்தாள். உடனே என் போனிலிருந்து அவள் அப்பாவை அழைச்சுப் பேசவெச்சேன்.

சுவாரஸ்யமான இன்னொரு கடிதம் இருக்கு. 'சார், நம்ம ஸ்கூல்ல இருக்கிற பீரோ ரொம்ப பழசாயிட்டு. நாங்க பக்கத்துல போகும்போது எங்க மேல விழுந்துட்டா என்ன ஆகுறது? நீங்கதான் அநாவசியமா போலீஸ் ஸ்டேசன் போகணும்' என எழுதியிருந்தது. படிச்சு சிரிச்சாலும், உடனடியா அந்த பீரோவை மாற்றவும் முயற்சி எடுத்தேன். 'நான் இப்போ எட்டாவது படிக்கிறேன் சார். ஆறாவது படிக்கும்போது சில பொருள்களைத் திருடியிருக்கேன். இப்போ அப்படி செய்யறதில்லை. ஆனால், இப்பவும் நான் திருடுறதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றப்ப கஷ்டமா இருக்கு'னு ஒரு கடிதம். மாணவிகள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் எழுதியிருக்காங்க. என் மனைவியும் இதே பள்ளியில்தான் வேலை செய்யறாங்க. ஒரு கடிதம் தனி கவரில் இருந்தது. கவர் மீது 'இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டாம். டீச்சரிடம் கொடுக்கவும்' என்று இருந்தது. என் மனைவியிடம் கொடுத்தேன். ஒரு மாணவி, மாதவிலக்கு பற்றிய சந்தேகத்தை எழுதியிருந்ததாக என் மனைவி கூறினார்.



ஒவ்வொரு மாணவருக்குள்ளும் சொல்வதற்கு எவ்வளவோ செய்திகள் இருக்கு. என் மீது புகார் சொல்லியும் கடிதங்கள் வந்திருக்கு. அந்த விஷயங்களில் என்னைச் சரிசெய்துகிட்டேன். மாணவர்களை இன்னும் நெருக்கமாக நேசிக்க, இந்தப் பெட்டி உதவுகிறது. எல்லாப் பள்ளிகளிலும் இதுபோன்ற கருத்துச் சுதந்திரப் பெட்டி இருக்கணும்" என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் ஆசிரியர் மணிமாறன்.

5TH STD - TERM 1 MIND MAPS - TAMIL

கோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரை

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்


நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
நீட்தேர்வில், அரசுப் பள்ளியில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மருத்துவப்
படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது.நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
 நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
நீட்தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை என்பது வேதனையான விஷயம்தான். ரேங்க் பட்டியலில் இல்லாவிட்டாலும் நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

வந்தவாசியைச் சேர்ந்த அன்புபாரதி, நிலாபாரதி சகோதரிகள். வந்தவாசி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் அன்பு பாரதியும் நிலா பாரதியும் பயின்றனர். நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அன்பு பாரதி 1165 மதிப்பெண்களும், நிலாபாரதி 1169 மதிபெண்களும் பெற்றனர். இதனையடுத்து அவர்கள் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகினர்.

நீட்தேர்வை எதிர்கொண்டது குறித்து அவர்கள் 'தி இந்து'விடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் ஐந்து நாட்கள் ஓய்வு எடுத்தோம். பின்னர் நீட் தேர்வுக்காக திட்டமிட்டோம். நீட் 2014 தேர்வு வினாத்தாள், எய்ம்ஸ் முந்தைய வினாத்தாள்களை வாங்கி பயிற்சி மேற்கொண்டோம். பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் எங்களுக்கு அந்தக் கேள்விகள் புதிதாக இருந்தன. அதனால், சிபிஎஸ்இ 11, 12 வகுப்பு புத்தகங்களை வாங்கிப் படித்தோம்.

அதன்பின்னரே எங்களால் அந்தக் கேள்வித்தாளில் இருந்த வினாக்களுக்கு பதில் அளிக்க முடிந்தது. நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமானால் சிபிஎஸ்இ தரத்துக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்" என்றனர்.


நீட்தேர்வில் அன்பு பாரதி 151 மதிப்பெண்களும் நிலாபாரதி 146 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குனர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



ஐந்தாம் வகுப்பு முதல் பருவ ஆங்கிலம் மன வரைப்படம்

No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.

PF" CALCULATION METHOD

உங்க PF பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் சட்டம்-1952 (அ) தொழிலாளர் சேமநல நிதி 1952 என்பது இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும்
விதமாக தொடங்கப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.

இதனால் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன. தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் தொழில் தருவோர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்து வட்டியுடன் ஒய்வின் முடிவில் தொழிலாளர்களுக்கு திருப்பி தரப்படும் . இந்தப் பங்களிப்புப் பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் திரும்ப பெற்று கொள்ளலாம்

1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் சேமநல நிதி திட்டத்துடன் சேர்த்து இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் இதனை செயல்படுத்தி வருகிறது .   ஒரு தொழிலாளரின் சம்பளம் ரூ. 15000 க்கு கீழ் எனில்  பிஎப் கட்டாயம். ஆனால் தொழிலாளரின் சம்பளம் ரூ.15000க்கு மேல் எனில் தொழிலாளர் விருப்பப்படாவிட்டால் பிஎப் பிடிக்க தேவையில்லை. 

தொழிலாளர் வாங்கும் சம்பளம் மற்றும் இதர படிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அதே 12 சதவிகிதத் தொகையை அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். இதில் 8.33 சதவிகிதத் தொகை தொழிலாளர்களது குடும்ப நல ஓய்வூதியத்திற்கும், மீதமுள்ள 3.67 சதவிகிதத் தொகை அந்தத் தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படும். பிஎப் பணத்துக்கு  ஆண்டுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

உதாரணமாக:
 ஒருவர் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி(டிஏ) சேர்த்து ரூ.25000  வாங்குகிறார் என்றால் அவரிடம் இருந்து 12 சதவீதம் அதாவது  ரூ. 3,000  பிஎப் பணம் பிடித்தம் செய்யப்படும்.  இதேபோல் நிறுவனமும் ரூ. 3,000 பணத்தை செலுத்தும். 
ஆனால் அதில் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. 25000 ரூபாயில் 3.67 சதவீதம் அதாவது ரூ. 917.50  பணத்தை தொழிலாளரின் பங்களிப்பாக அவரது கணக்கில் நிறுவனம் சேர்க்கும் .

இதேபோல் 25 ஆயிரம் ரூபாயில்  15 ஆயிரம் ரூபாயை கழித்துபோக மீதமுள்ள 10000த்தில் தான்  8.33 சதவீதம் பணத்தை (ரூ.832.50 காசு தான்)  தொழிலாளரின்  வைப்பு நிதி கணக்கில் சேர்க்கப்படும். ஆக மொத்தம் அவரது கணக்கில்   நிறுவனம் சார்பாக ரூ. 917.50+ரூ.832.50 சேர்த்து 1750 மாதந்தோறும் சேர்க்கப்படும். 

நில்லுங்க... 3000 ரூபாய் வர வேண்டுமே ஆனால் ரூ1750 தானே போடுகிறார்கள் என்று தோன்றுகிறதா?  ஏனெனில் மீதமுள்ள 1250 ரூபாய் பென்சன் திட்டத்துக்கு போய்விடும். அதுவும் கணக்குல சேர்த்துக்குவாங்க.

எனவேஓராண்டு முடிவில் அவர் கணக்கில் உள்ள பணத்துக்கு 8.65 சதவீத வட்டி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டு முடிவிலும்  இதேபோல் 8.65  வட்டி வழங்கப்படும்.  இப்ப கணக்கு போட்டு பாருங்க உங்க பிஎப் கணக்குல எவ்வளவு வரும்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம்.
பணத்தை எப்படி எடுப்பது?

ஒருவர் சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும் பொழுது அந்த உறுப்பினர் தனது வைப்புக் கணக்கை முடித்துக் கொண்டு பணத்தைப் பெறலாம். ஆனால் அந்த உறுப்பினர் வேறு ஒரு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் சேர்ந்தால் அவரது கணக்கு புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்படும்.

ஒருவர் பணியில்  இருந்து விலகிய பின்னர் 60 நாட்களாக வேலையில்லாமல் இருந்தாலோ, அல்லது  பிஎப் வசதி உள்ள நிறுவனத்தில்   வேலை செய்யாமல் இருந்தாலோ ,  பிஎப் கணக்கை முடித்துக்கொண்டு மொத்த பணத்தையும் எடுக்கலாம். ஆனால் வேலையில் இருக்கிறார் என்றால், அவர் 57 வயதில் தான் 90 சதவீத பணத்தை எடுக்க முடியும். இதேபோல் 58 வயதில் மீதமுள்ள 10 சதவீத பணத்தை எடுக்க முடியும்.

அரசு கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதி

அரசு கல்லுாரிகளில், கூடுதலாக, 20 சதவீதம் மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்து, விரைவில் உத்தரவு வழங்கப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - நீதிபதி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில், பொறியியல் கல்லுாரி துவக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் அன்பழகன்: அரசின் பரிசீலனையில் இல்லை.
நீதிபதி: உசிலம்பட்டியில் பொறியியல் கல்லுாரி அல்லது கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்: அரசு பரிசீலிக்கும்.

காங்., - ராமசாமி: காரைக்குடியில், அரசு கலை கல்லுாரி ஏற்படுத்த வேண்டும்; பெண்கள் கல்லுாரியும் வேண்டும். தற்போதுள்ள கல்லுாரியில் இடமில்லை எனக்கூறி, 61 மாணவர்களை
புறக்கணித்து உள்ளனர்.

அமைச்சர் அன்பழகன்: அரசு கல்லுாரிகளில், 20 சதவீதம் கூடுதல் மாணவர்களை சேர்க்க, விரைவில் உத்தரவு வழங்கப்படும். அதே போல், சுயநிதி
கல்லுாரிகளில், 10 சதவீதம்; அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 15 சதவீதம், கூடுதல் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால ரீசார்ஜ் சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விழாக்காலச் சிறப்புச் சலுகையாக ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.786, ரூ.599 மதிப்பில் சிறப்பு காம்போ வவுச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 786 காம்போ வவுச்சரில், ரூ.786 மதிப்புள்ள வாய்ஸ் அழைப்புகள், 3 எஆ டேட்டா ஆகியவை கிடைக்கும். இதற்கு 90 நாள்கள் வேலிடிட்டி. இச்சலுகை ஜூன் 21 முதல் 30 வரை அமலில் இருக்கும்.
ரூ.599 காம்போ வவுச்சரில், டாக் வேல்யூ ரூ.507 மெயின் அக்கவுன்ட்டிலும் ரூ.279 பிரத்யேக உபயோகமாக 30 நாள்களுக்கு மட்டும் தனிப்பட்ட கணக்கிலும் கிரெடிட் செய்யப்படும். 10 குறுஞ்செய்திகள் இலவசமாக அளிக்கப்படும். இதன் வேலிடிட்டி 30 நாள்கள் மட்டுமே. இச்சலுகை ஜூன் 21 முதல் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை 90 நாள்களுக்கு அமலில் இருக்கும்.
ரூ.60 மதிப்பிலான டாப்-அப் வவுச்சருக்கு ரூ.60 டாக்-டைமும், ரூ. 110-க்கு ரூ.115-ம், ரூ.210-க்கு ரூ.220-ம், ரூ.290-க்கு ரூ.310 என சிறப்பு டாக்வேல்யூ சலுகைகளாக அளிக்கப்படுகின்றன.

ரூ.310, ரூ.510, ரூ.610, ரூ.1,010, ரூ.1,510, ரூ.2,010 டாப்-அப் மதிப்புகளுக்கு முழு டாக்டைம் மற்றும் 10 சதவீதம் கூடுதல் டாக்டைமும், ரூ.3100, ரூ.5100 டாப்-அப் மதிப்புகளுக்கு முழு டாக்டைம் மற்றும் 20 சதவீத கூடுதல் டாக்டைம் என விழாக்காலச் சிறப்பு சலுகைகளாக வழங்கப்படுகின்றன. இச்சலுகைகள் அனைத்தும் ஜூன் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த ஆண்டு சிபிஎஸ்சி 10 - 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்பே தொடங்குகிறது

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுதேர்வுகள் நடத்தப்படும். இதற்கான கால அட்டவணையை சிபிஎஸ்சி அறிவிக்கும். ஆனால் இந்த வருடம் தேர்வை பிப்ரவரி மாதமே நடத்த முயன்று வருகின்றனர்.
இது பற்றி சிபிஎஸ்சி அதிகாரிகள், இந்த வருடம் பொது தேர்வை பிப்ரவரி மாதம் நடத்த இருக்கிறோம்.   இதனால் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் மாணவர்கள் ஜனவரி மாதமே ஆயத்த தேர்வுக்கு தயாராகிவிடுகின்றனர்.இந்த முடிவுக்கு காரணம் பரீட்சை தாளை மதிப்பீடு செய்வதில் ஏற்படும் பிரச்சனையே  என தெரிவிக்கின்றனர்.

மார்ச் மாதம் பரீட்சை நடைபெறும் போது கோடைகால விடுமுறையும்  சேர்ந்து வருகிறது. ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றுவிடுகின்றனர். இதனால் பரீட்சை தாளை திருத்துவதற்காக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளது.இதனால் தேர்வு மதிப்பீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகப்படியான மாணவர்கள் மறுமதிப்பீட்டலுக்கு விண்ணப்பிக்கின்றனர்.  2.47 சதவீதம் மாணவர்களிடமிருந்து மறுமதிப்பீட்டலுக்கான விண்ணப்பம் வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் பிப்ரவரி 15இல் தேர்வு நடத்துவது தேர்வு மதிப்பீட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என தெரிவிக்கின்றனர்.

இது பற்றி சிபிஎஸ்சி மூத்த அதிகாரி , தேர்வு மதிப்பீட்டலுக்கான வழிமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும். அதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவு தான் ஆசிரியர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டு மதிப்பீடு செய்தாலும் அதனை கூட்டி கணிணியில் பதியும் போது தவறு ஏற்பட்டு விடுகிறது. இதனால் இத்தவறுகளை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.சென்ற வருடத்தை விட இந்த வருடம் சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 2.82 சதவீதம் உயர்ந்துள்ளது.

மொத்தம் 11 இலட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 6,38,865 பேர் ஆண்கள் மற்றும் 4,60,026 பேர் பெண்கள். 10,678 பள்ளி மாணவர்களுக்காக 3,502 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

கலந்தாய்வின்போது மாணவர்களிடம் ஒப்புதல் பெறுவதும் அவசியம்: யுஜிசி உத்தரவு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டண விவரங்களை வெளியிடுவதுடன், அதைச் செலுத்துவதற்கான ஒப்புதலையும் மாணவர்களிடம் பெறுவது அவசியம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.


நீண்ட இழுபறிக்குப் பின்னர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான "நீட்' தகுதித் தேர்வு முடிவை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, தாமதமாகி வந்த இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்பை (எம்.பி.பி.எஸ்.) வழங்கும் 34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அவசர உத்தரவு ஒன்றை யுஜிசி பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு 34 நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு, சுகாதாரப் பணிகளுக்கான இயக்குநரகம் (டி.ஜி.ஹெச்.எஸ்.) சார்பில் நடத்தப்படும். இதில் மொழிச் சிறுபான்மை மற்றும் மதச் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும் சேர்த்துக் கொள்ளப்படும்.

மாநில ஒதுக்கீட்டுக்கு தனி கலந்தாய்வு: இதேபோல் அரசுக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொதுக் கலந்தாய்வு மாநில அரசு சார்பில் நடத்தப்படும். இந்த இரண்டு கட்ட கலந்தாய்வின்போதும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டண விவரத்தை மாணவர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், அந்தக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான ஒப்புதலையும் மாணவரிடம் கலந்தாய்வு அதிகாரிகள் பெற வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கோவை அம்ரிதா விஷ்வ வித்யபீடம், சென்னை சேலையூர் பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாதெமி, சென்னை எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை மீனாட்சி உயர்கல்வி ஆராய்ச்சி அகாதெமி, சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகிய 9 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பு வழங்கப்படுவதாக யுஜிசி பட்டியலிட்டுள்ளது.