யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/7/17

மாண்புமிகு கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலின் படி போட்டித் தேர்வுகளிக்கு பயிற்சி அளிக்கவும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டகங்கள் தயார்செய்யவும் விரும்பும் ஆசிரியர்கள் நிரப்பவும்.

TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த10 சந்தேகங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள்

1) Identification Cettificate ல் subject code இரண்டு கட்டம் உள்ளது
எவ்வாறு நிரப்புவது ( உதரணம் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் )

2)Identification Cettificate ல் பெயர் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா



 3)Identification Cettificate ல் கையெப்பம் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா

4)சுய விவர படிவத்தில் அனைத்தும் பெயர் உட்பட தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா

5)+2 இவற்றில் முக்கிய பாடம் என்ற கட்டத்தில் வரலாறு , கணிதம் , இப்படி படித்த முக்கிய பாடம் எழுத வேண்டுமா

6) D.T.Ed ல் முக்கிய பாடம் இல்லை அதில் எழுவும் எழுத வேண்டுமா  அதை நடத்தும் தேர்வு வாரியம் எது ( B.Lit with D.TEd=  B.Ed  தேர்வர்கள் மட்டும்)

7) பட்டப்படிப்பில் முக்கிய பாடம் எழுத வேண்டுமா அதில் எதுவும் துணைப்பாடம் எழுத வேண்டுமா

8) இடம் தேதி என்ற இடத்தில் நமது ஊர் எழுத வேண்டுமா அல்லது சான்றிதழ் சரிபார்க்கும் ஊர் அன்றைய தேதி எழுத வேண்டுமா

9) சுய விவர படிவத்தில் போட்டோவில் அரசிதழ் பெற்ற அலுவலரிடம் இரண்டு நகல்களில் கையெப்பாம் வாங்க வேண்டுமா(Identification Cettificate கண்டிப்பாக வாங்க வேண்டும்)


10) தேர்ச்சி பெற்ற மாதம் வருடம் என்ற கட்டத்தில் மேல் உள்ள தேர்வு எழுதிய மாதம் ஆண்டு எழுத வேண்டுமா அல்லது கீழ் உள்ள ரிசல்ட் தேதி மாதம் எழுத வேண்டுமா

மாண்புமிகு கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலின் படி போட்டித் தேர்வுகளிக்கு பயிற்சி அளிக்கவும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டகங்கள் தயார்செய்யவும் விரும்பும் ஆசிரியர்கள் நிரப்பவும்.

Welfare of Differently Abled Persons Department –Early Intervention Centre for children with Autism in Siragugal Special School, Thanjavur District-Sanction of Grant- Orders- Issued.

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தபள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர். பல்வேறு விதிகள் அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம்போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன. குளறுபடிகள் கண்டறிந்துள்ளது.

அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது - 'துக்ளக்' கட்டுரை

ஆசிரியர்கள் பற்றி 'துக்ளக்'கில் (12.7.2017) வெளி வந்த கட்டுரையின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்கு 'துக்ளக்'கில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர்கள்
கவனித்தார்களா என்று தெரியவில்லை, 'துக்ளக்' எழுதியுள்ளவை இதோ!)*

உண்மையான அக்கறை திருவாளர் அமைச்சர் பெருமகனுக்கோ, அவரது துறை அதிகாரிகளுக்கோ இருந்திருந்தால், எங்கெங்கோ பட்டி, தொட்டிகளில் 'பள்ளிக்கூடம்' என்ற பேரில் நின்று கொண்டிருக்கிற, எப்போது இடிந்து விழுவோம் என்று தெரியாத கட்டிடங்களைப் பற்றியோ, அதில் படிக்கிற ஏழை மாணவர்கள், அங்கு வேலை பார்க்கிற ஆசிரியர்கள் என்கிற பிழைப்புவாதிகளைப் பற்றியோ அமைச்சரின் அறிக்கை, பேட்டிகளில் வெறும் தகவல்களாவது வந்து விழுந்திருக்கும்.*

*அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்களின் கல்வித் தரம் ஒழுங்காக இருந்தால் அல்லவா மாணவர்களின் கல்வியில் தரம் வரும். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கே வருவதில்லை.*

*லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து, படித்து ஆசிரியர் வேலையில் சேருகிறவருக்கு, மாணவர்களின் படிப்பைப் பற்றி என்ன கவலை? மாணவர்கள் படித்தாலென்ன, கழுதை மேய்க்கப் போனாலென்ன? அவர்களுக்கு என்ன வந்தது? ரியல் எஸ்டேட், வட்டிக்குப் பணம் விடுவது, கடை கண்ணியைத் திறந்து வியாபாரம் செய்வது என்று சகல பிஸினஸ்களிலும் இறங்கி விட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கக் கூட நேரமில்லை.*

*ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைக்கு வருகிறார்களா, வேலைக்கு வந்தால் முழு வேலை நேரத்தையும் பள்ளிகளில்தான் செலவிடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க எந்த வழியுமில்லை. இதையெல்லாம்தான் நீதிபதி கிருபாகரன் தனது உத்திரவில் குறிப்பிட்டிருக்கிறார்.*

*இவ்வளவு மோசமான நிலையில், கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க தமிழர்களுக்கு என்ன பைத்தியமா பிடித் திருக்கிறது?*

ஆசிரியர்களே 'துக்ளக்'கை தெரிந்து கொள்வீர்!*

RTI - சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை..!

சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட
கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
இந்தியாவில் உள்ள தேசிய நெடுங்சாலைகளில் பயணம் செய்யும்போது கட்டாயம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் கார், லாரி என வாகனத்திற்கு வாகனம் மாறுபடும்

இந்தகட்டண விவகாரத்தை வைத்து, பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் கேட்டிருந்தார். அதற்கு விளக்கமளித்த அரசு, சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு வரி இல்லை என்றும் மாறாக அது சேவை கட்டணமாகவே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடியில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுங்கச்சாவடிகளில் மிக நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்கும் வாகனங்கள் 3 நிமிடங்களுக்கு மேல் நின்றால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிய வந்துள்ளது.

நம் மாணவர்களைத் தமிழக அரசும் கைவிடலாமா? - HINDU தலையங்கம்

பொதுமருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பட்டப் படிப்புகளுக்காக ‘நீட்’
தேர்வு எழுதியவர்களில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கித் தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்துசெய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் தமிழக மாணவர்களுக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது.
ஆக, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்காது என்றும், தமிழக சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் மாணவர்களை நம்ப வைத்துத் தமிழக அரசு ஏமாற்றியிருக்கிறது என்றுதான் கல்வியாளர்கள் பலரும் கருதுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சமுக நீதியையும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகளையும் ‘நீட்’ தேர்வும், உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பும் ஒரேயடியாகத் துடைத்துப்போட்டிருக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லையென்றால், மாநில அரசும் அப்படியே இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

‘நீட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் 72% மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கே சென்றுவிடும். தமிழ்நாட்டில் மருத்துவ சேவை சிறப்பாக நடப்பதற்கு முக்கிய காரணம், மருத்துவக் கல்வியின் முதுநிலை படிப்புகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குத் தரும் முன்னுரிமைதான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மருத்துவக் கல்வி என்பது முழுக்க முழுக்க இப்போது வணிகமயமாகிவிட்டதால், பொதுத் தகுதித் தேர்வு நடத்துவது தகுதியுள்ள மாணவர்களை அடையாளம் காண உதவுகிறது என்று கூறக்கூடும். ஆனால் அது அரசின் சமூக, பொருளாதார லட்சியங்களுக்கு முரணாக இருந்துவிடக் கூடாது. வெவ்வேறு வகையிலான பிராந்தியங்கள், பொருளாதாரப் பின்னணிகள், மொழிகள் உள்ள நாட்டில் எல்லோரும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்திலேயே படிக்க வேண்டும், ஒரே மாதிரியே தேர்வுகளை எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது.


இவ்விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து மத்திய அரசு ஒரு முடிவெடுக்க வேண்டும். அதற்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்த்து 48 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கு நம் மாணவர்கள்மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமென்றால், இந்த பலத்தைக் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நசுக்கப்பட்டதற்கு ஆளும் அதிமுகவும் ஒரு காரணம் என்ற அவப்பெயரை வரலாறு என்றென்றும் சொல்லிக்கொண்டிருக்கும்!

ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்தஊழியர்கள், தற்போது, பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, தமிழகம்
மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார்.

பழைய பென்ஷன் திட்டம் வந்தால் தான் -ஜெ.ஆன்மா சாந்தியடையும் அடித்து சொல்கிறது -ஜாக்டோ -ஜியோ

7ஆவது ஊதிய குழு குறித்து தமிழக நிதியமைச்சர் தகவல்

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
சென்னை:

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். ‘தனது மகள் கல்வியில் சிறந்த நிலையை நிச்சயம் அடைவாள்’, என்று உறுதியுடன் அவர் கூறுகிறார்.

“அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் சேர்க்கக்கூடாது?”, என்று சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்தநிலையில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

அவரது பெயர் லலிதா, பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் பதவி வகிப்பவர். கல்வித்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவரது ஒரே மகள் தருணிகா. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா தனது மகள் தருணிகாவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் நேற்று சேர்த்தார்.

பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய டாக்டராகவோ, என்ஜினீயராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ ஆக்கி பார்க்கவேண்டும் என்ற ஆசையில் நகரில் உள்ள பெரிய பள்ளிகள் சேர்ப்பார்கள்.

ஆனால் அரசு அதிகாரியாக இருந்தபோதிலும் எப்படி தன் மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? என்பது குறித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

‘ஏதாவது மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், நீ அதை உண்டாக்கி காட்டு’, என்ற பழமொழி உண்டு. என்னை பொறுத்தவரை சமுதாயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். அதை நான் பின்பற்றியிருப்பதாலேயே எனது மகளை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து இருக்கிறேன். இதுதான் எனது ஆசையாகவும் இருந்தது.

மாநகராட்சி பள்ளிகள் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இங்கு உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தரம் வாய்ந்ததாகவே மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய தினம் என் பிள்ளையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். அவள் நிச்சயம் இங்கு கல்வி கற்று சிறந்த நிலையை அடைவாள் என்பதில் உயரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை பின்பற்றி மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயரவேண்டும் என்பது தான் என் விருப்பம்.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை துணை கமிஷனராக கடந்த 2013 முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறேன். அப்போதே ‘என் வயிற்றில் வளரும் குழந்தையை நிச்சயம் மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும்’, என்று நினைத்தேன். இப்போது மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கமிஷனராக இருக்கும்போதே நினைத்ததை செயல்படுத்தி உள்ளேன்.

எனதுகணவர் சுமந்த் மற்றும் எனது பெற்றோர் ராஜேந்திரன்-தமிழரசி ஆகியோர் நான் எடுத்த முடிவு சரிதான் என்று அதனை வரவேற்று, எல்லா விதத்திலும் ஊக்கம் அளித்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா பெருமிதத்துடன் கூறினார்.


தனதுஒரே மகளை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

14/7/17

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த குழு: செங்கோட்டையன் அறிவிப்பு.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

செங்கோட்டையன் அறிவித்துள் ளார்.சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் க.பொன்முடி,
‘‘கடந்த 2012-ல் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதலில் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால்கூட போதும். ஆனால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.

இதனைவலியுறுத்தி சென்னையில் இன்று (ஜூலை 12) போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்’என்றார்.அவருக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘ஊதிய உயர்வு உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க குழு அமைத்து தீர்வு காணப்படும்’’ என்றார்.

CPS-புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை என்ன? : தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி:*

புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆய்வுகள் பற்றிய
அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு திட்ட செயலாக்க துறை முதன்மை செயலாளர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வேண்டாம்'... உயர் நீதிமன்றத்தில் மனு!

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அமைச்சர் செங்கோட்டையன் பல மாற்றங்களைத் தற்போது கொண்டுவந்துள்ளார். 'எதிர்வரும் காலங்களில்
பள்ளி கல்வியில் புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கலாம், எல்லா வகுப்புகளிலும் பாடத்திட்டங்கள் மாறலாம்' எனவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் 11-ம் வகுப்பையும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளைப்போல் அரசு பொதுத்தேர்வாக மாற்றியுள்ளார். சுமார் 37 ஆண்டுகளுக்குப் பின், 11-ம் வகுப்பு தேர்வு அரசு தேர்வாக மாறியுள்ளது. அதற்கு முன் 12-ம் வகுப்பு என்பதே இல்லாத சூழ்நிலையில்தான் இருந்துவந்துள்ளது. தற்போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்குப் பின், 11-ம் வகுப்பு தேர்வும் அரசுத் தேர்வாக மாறியுள்ளது.

இதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "தமிழக அரசு கடந்த மே மாதம் 22-ம் தேதி 11-ம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என அரசாணையை வெளியிட்டுள்ளது. இது அவசியமற்றது, 10-ம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாணவர்கள் உறக்கமின்றி கடினமாக உழைக்கின்றனர். அதற்காகத் தனியே டியூசனுக்கும் ஸ்பெஷல் கிளாசுக்கும் செல்கின்றனர். இதே போலவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற இரவு பகலாக கண் விழித்து உழைக்கின்றனர்.

இந்நிலையில், 11-ம் வகுப்பும் பொதுத்தேர்வு என்ற அரசாணையால் மாணவர்களும் அவரது பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவர். 10, 11, 12 ஆகிய 3 ஆண்டுகளும் பொதுத்தேர்வுகளுக்காக தூக்கமின்றி, கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கும், விரக்தி நிலைக்கும் ஆளாவர். எனவே 11-ம் வகுப்பு தேர்வையும் பொதுத்தேர்வாக நடத்த வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.


இந்தமனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போட்டிச்சூழல் அதிகமிருக்கும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக 11-ம் வகுப்பிலேயே 12-ம் வகுப்பு பாடத்தைத் படித்து மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் 11-ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் கடந்து வருகின்றர். இதனால் அதிக மதிப்பெண்களைப் பெற்றபோதிலும் உயர்கல்வி சென்றபின் மாணவர்கள், முதலாம் ஆண்டில் கஷ்டப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல தரப்பு வல்லுநர்களும் தெரிவித்தனர். அதனடிப்படையில், வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆலோசித்து அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PGTRB :முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விரைவில் 'கீ ஆன்சர்' வாரியதலைவர் தகவல்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்
ஜெகநாதன் தெரிவித்தார்.
அரசுமேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணிகளில் 1,663 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்பும் வகை யில் ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளி யிட்டிருந்தது. இத்தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 591 பேர் விண்ணப்பித்தனர். எழுத்துத் தேர்வு ஜூலை 2-ம் தேதி நடை பெற இருந்த நிலையில், தேர் வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக கூடுதலாக 1,712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து காலியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கடந்த 2-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் தேர் வெழுதினர். தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக பெரும்பாலான தேர்வர்கள் கவலை தெரிவித்தனர். தேர்வு முடிந்த அன்றைய தினமே தனியார் பயிற்சி மையங்கள் இணை யதளத்தில் உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) வெளியிட்டன. ஒருசில கேள்விகளுக்கான விடைகள் சரியாக தெரியாததால் அவற்றுக்கு விடைகள் குறிப் பிடப்படவில்லை. தனியார் பயிற்சி மையங்கள் கீ ஆன்சர் வெளி யிட்டாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் கீ ஆன்சர் தான் அதிகாரப்பூர்வமாக ஏற்கப் படும்.

வாரியத் தலைவர் விளக்கம் எனவே, தேர்வெழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் எப்போது கீ ஆன்சரை வெளியிடும்? என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருமான (பொறுப்பு) ஜெகநாதனிடம் கேட்டபோது, "முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான கீ ஆன்சரை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்தில் கீ ஆன்சர் வெளியிடப்படும்" என்றார்.

JACTO-GEO குழுவில் மேற்கொண்ட முடிவுகள் - பத்திரிக்கை அறிக்கை வெளியீடு



RTE படி ஆசிரியர் மாணவர் விகிதம்



826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் - கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால்,
அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசு தொடக்க பள்ளிகளில், சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. சில மாவட்டங்களில், மாணவர், ஆசிரியர் விகிதம் குறைவாகவும், சில மாவட்டங்களில், அதிகமாகவும் உள்ளது. இந்த பிரச்னையால், தொடக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், தமிழக பள்ளிகள் செயல்பாட்டை, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. இதில், பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழகத்தில், 817 தொடக்க பள்ளிகளிலும், ஒன்பது நடுநிலை பள்ளிகளிலும், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவது தெரிய வந்துள்ளது. இந்த ஒரு ஆசிரியரும், விடுப்பு எடுத்தாலோ அல்லது கல்வித்துறையின் வேறு பணிகளுக்கு சென்றாலோ, பாடம் நடத்த ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், 'ஓர் ஆசிரியர் பள்ளியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


ஆனால், தமிழகத்தில் மட்டும், ஓர் ஆசிரியர் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்றி, கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

இனி பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் குறை தீர் முறை

GRIEVANCE DAY IN DSE, DEE DIRECTOR OFFICE,DPI CAMPUS"
பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், குறை தீர் முறை அறிமுகமாகி உள்ளதை, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வரவேற்று உள்ளனர். சென்னை,
நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் என, பல இயக்குனர்களுக்கு தனியாக அலுவலகங்கள் உள்ளன. 


 அனைத்துக்கும் தலைமை அலுவலகமாக, பள்ளிக்கல்வி இயக்குனரகம் செயல்படுகிறது. மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், இடமாறுதல், ஓய்வூதிய பிரச்னை, பள்ளிகளின் அங்கீகாரம், நலத்திட்ட உதவிகள் என, அனைத்து நடவடிக்கைகளுக்கும், தலைமை அதிகாரியாக, பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்படுகிறார்.

கோரிக்கை : இதனால், ஆசிரியர்கள், ஊழியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க வருகின்றனர். பின், கோரிக்கை மனு நிலை குறித்து தெரிந்து கொள்ளவும், மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தவும், பல முறை அலையும் நிலை இருந்தது. இதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் முற்றுப்புள்ளி வைத்து, புதிய முறையை அறிமுகம் செய்துள்ளார்.

இயக்குனர் அலு வலகத்திற்கு வருவோரின், பெயர், முகவரி மற்றும் மொபைல்போன் எண்களும், அவர்களின் கோரிக்கை விபரங்களும், பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.பின், பார்வையாளர் களின் காத்திருப்பு அறைக்கே, இயக்குனர் வந்து குறைகளை கேட்கிறார். மனுவை, உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, பதில் அனுப்பும்படி உத்தரவிடுகிறார். கோரிக்கையின் நிலை, அது, சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பன போன்ற விபரங்களை, மனுதாரர்களுக்கு மொபைல் போனில் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மனு கொடுத்த ஒரு வாரத்திற்குள், மனுதாரர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரக ஊழியர்களே, போனில் தகவல் அளிக்கின்றனர்.


அலைச்சல் குறைவு : கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர்கள் எந்த துறை அதிகாரியை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர்களும், தனியார் பள்ளி நிர்வாகிகளும் கூறுகையில், 'இயக்குனரகத்தின் புதிய முறை, எங்களின் அலைச்சலை குறைத்துள்ளது. 'எங்களின் கோரிக்கையின் நிலை என்ன; அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையும், தெரிந்து கொள்ள முடிகிறது' என்றனர்.

CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,'' என, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன்
தெரிவித்தார்.


 மதுரையில் அவர் கூறியதாவது: ஏழாவது சம்பளக் கமிஷனை அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, ஜாக்டோ ஜியோ சார்பில் ஜூலை 18 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆக., 5 ம் தேதி சென்னையில் பேரணி நடக்கிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்பர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை 2003 ல் அமல்படுத்தியது முதல் 4.44 லட்சம் ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு 14 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என தெரியவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது எனில் மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக வேண்டும். ஆனால் இதுவரை மாநில அரசு அதில் இணையவில்லை. ஏற்கனவே இத்திட்டம் சாத்தியப்படாது என கைவிடப்பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஆயிரம் ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே புதிய

ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும், என்றார்.