அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைகக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு மாணவர் சேர்க்கை மத்திய அரசின் நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைகழக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
பி.ஆர்க் கலந்தாய்வில் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்களும் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ள இடங்கள் நீங்கலாக மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்த அண்ணா பல்கலைகழக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் முழுவதும் 6 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 12ம் தேதி பி.ஆர்க் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இதற்காக எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவு மாணவர்கள் 1,000 பிற பிரிவு மாணவர்கள் 2,000 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
இதுதொடர்பாக அறிவிக்கை ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் ஆன்லைன் பதிவு தொடங்கும். ஜூலை 31ம் தேதி, ஆன்லைன் பதிவு செய்ய கடைசி நாளாகும். ஆகஸ்ட் 7ம் தேதி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 12ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கும். ஆகஸ்ட் 18ம் தேதி நுழைவுத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.