யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/12/17

30,000 பேருக்கு மீண்டும் தேர்வு!

தொலைநிலை கல்வி திட்டம் மூலம் பொறியியலபடித்த 30,000 பட்டதாரிகள் பட்டத்தை செல்லுபடியாக்க, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பை தொலைநிலை கல்வி திட்டம் மூலம் வழங்கக்கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறை கூறுகிறது. ஆனால், சில தனியார் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பல்கலைகள், தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், உள்ளிட்ட தொழில்நுட்ப பட்டங்களை வழங்குவதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தொலைதூர கல்வி திட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கற்பிப்பதை ஏற்க முடியாது. பல தனியார் பல்கலைகள் தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், பட்டங்களை வழங்கியுள்ளன. அது செல்லாது வரும், 2018 - 19 கல்வி ஆண்டு முதல் இவ்வகை கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. உதய்பூரில் உள்ள ஜேஆர்என் ராஜஸ்தான் வித்யாபீட், ராஜஸ்தான் சுரு மாவட்டத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அன்வான்ஸ்ட் ஸ்டீஸ் இன் எஜூகேசன், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் அக்ரிகல்ச்சரல் இன்ஸ்டிடியூட், தமிழகத்தில் உள்ள விநாயகா மி‌ஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேசன் ஆகிய நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 2001 முதல் 2005 வரை தொலைதூர கல்வி திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்துத் தொழில்நுட்ப பட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த 4 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமாக பெறப்பட்ட தொகையை 2018 மே 31 ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ சார்பில் நடத்தப்படும் ஸ்கிரீனிங் டெஸ்டில், அவர்கள் வெற்றி பெற வேண்டும். 2018 அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாய்ப்புகளையும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னர் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்” என அவர்கள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், தொலைநிலை கல்வி திட்டத்தில் வழங்கிய பொறியியல் பட்டங்களைப் பல்கலைக்கழக மானியக்குழு நிறுத்தி வைத்தது. இதனால், இந்த நிறுவனங்களின் வாயிலாக பொறியியல் பட்டம் பெற்ற சுமார் 30,000 பொறியியல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவர்களுக்கான ஒரே தீர்வாக மே அல்லது ஜூன் மாதத்தில் ஒரு தேர்வு நடத்தப்படவுள்ளது. அதை எழுதுவதற்கு ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தங்கள் பட்டங்களை செல்லுபடி ஆக்க அவர்களுக்கு இதுவே ஒரே வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 

இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால், பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.
அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். 
மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்வு பயிற்சி: ஆசிரியர்கள் கோரிக்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கான, போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள், 'ஜே.இ.இ., நீட்' போன்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, எம்.பி.பி.எஸ்., படிக்கவும், தேசிய உயர் கல்வி நிறுவனத்தில் சேரவும், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 
தமிழகம் முழுவதும், 100 மையங்களில், இலவச பயிற்சி துவங்கப்பட்டது.
இந்த மையங்களின் எண்ணிக்கை, 500 ஆக உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் மையங்களின் எண்ணிக்கையை உயர்த்தவில்லை. அதனால், பெரும்பாலான மாணவர்களுக்கு, பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், போட்டி தேர்வு பயிற்சி மையம், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் வீடுகளில் இருந்து, வெகு தொலைவில் உள்ளது.
அதனால், மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. எனவே, போட்டி தேர்வு பயிற்சி திட்டம், கண்துடைப்பாக இல்லாமல், மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர். எனவே, கூடுதலாக பயிற்சி மையங்களை துவங்க வேண்டும் என்றும், அவை, பள்ளிக்கு அருகில் அமைய வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

தனியார் பள்ளி முதல்வர்களுக்கு கருத்தரங்கம் : அமெரிக்க கல்வி முறையை அறிய வாய்ப்பு

சென்னை: அமெரிக்காவில் கிடைக்கும் செயல்முறை கல்வி பயிற்சி வாய்ப்புகள் குறித்து, தனியார் பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கம், வரும், 9ல், சென்னையில் நடக்கிறது.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் 'கோ பார் குரு' நிறுவனம் இணைந்து, இதை நடத்துகின்றன.
அமெரிக்காவில் உள்ள கல்வி வாய்ப்பு, பள்ளி மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி மற்றும் மாணவர் கல்வி பரிமாற்ற வாய்ப்புகள் குறித்து, சென்னையில், வரும், 9ம் தேதி, கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
தாஜ் கோரமண்டல் ஓட்டலில், காலை, 9:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, 'எஜு கனெக்ட்' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடக்கிறது.
இதில், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., - ஐ.ஜி.சி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள் பங்கேற்கலாம்.
'தினமலர்' நாளிதழின், மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள்... 
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு, தமிழக பள்ளி, கல்லுாரி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லும், 'கோ பார் குரு' நிறுவனம் இணைந்து, நிகழ்ச்சியை நடத்துகின்றன.
அமெரிக்க துாதரகத்தின் கல்வி அதிகாரிகள், 'கோ பார் குரு' நிறுவன, சி.இ.ஓ., காயம்பூ ராமலிங்கம், மதுரை விஸ்வ வித்யாலயா குரூப் ஆப் ஸ்கூல்ஸ் முதல்வர், பி.சந்திரசேகரன் ஆகியோர் விளக்கம் தர உள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயர்களை, EDUCONNECT@GO4GURU.com என்ற இ - மெயிலிலும், 87542 55117, 99523 53851 என்ற தொலைபேசி எண்ணிலும், முன்பதிவு செய்து கொள்ளலாம். 
முன்பதிவு கட்டாயம்; அதேநேரம் அனுமதி கட்டணம் எதுவும் இல்லை.

மழை வெள்ளத்தால் திறன் தேர்வு ஒத்திவைப்பு

திண்டுக்கல்: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு மழையால் டிச., 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்துகிறது. இத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை மாதம் ரூ.500 வீதம் அரசு வழங்கும்.இத் தேர்வினை எழுதுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை ஆன்-லைனில் விண்ணப்பித்து இருந்தனர். இத் தேர்வு டிச., 9 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒக்கி புயல் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இத் தேர்வு தேர்வு டிச., 16 ம் தேதி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகரில் 21ல் அரசு விடுமுறை

இடைத்தேர்தலை ஒட்டி, டிச., 21ல், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், டிச., 21ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதையொட்டி அன்று, ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் வாக்காளர் கள், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்தால், அவர்களுக்கு ஓட்டுப்பதிவு தினமான, டிச., 21 அன்று, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக கல்வித்துறையில் நூலகர் மற்றும் உதவி நூலகர் பதவி TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்!!!

ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் pay band & Grade Pay க்கு பதிலாக தற்போது எழுத வேண்டியது -ஏற்கனவே இருந்த கிரேடு பே-க்கு நேராக உள்ள Level எண் மற்றும் ஊதிய விகிதம் எழுத வேண்டும்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6:00 மணிக்குமேல் சிறப்பு வகுப்புகள் நடத்த புதுச்சேரி அரசு தடை :

புதுச்சேரி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6 மணிக்குமேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடைவிதித்து அம்மாநில பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி இலக்கை கருத்தில் கொண்டு, சில அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில், இரவு வரை பாடம் நடத்துவதாக கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. மாணவர்கள் நீண்ட நேரம் படிப்பிலேயே, கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், அவர்கள் மனதளவில் சோர்வடைவதாகவும் பெற்றோர்கள் தரப்பில், கல்வித்துறைக்கு பல புகார்கள் வந்தன. மாணவர்கள் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாலை 6 மணிக்குள் சிறப்பு வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் எனவும், இந்த நடைமுறையை, கண்டிப்பாக அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என, புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, புதுச்சேரி மாநில அனைத்து பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் வெளியில் செல்வதை தடுத்து, படிப்பில் கவனம் செலுத்த மதிய உணவு இடைவேளை நேரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6/12/17

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிப உயர்வுக்கான தடையாணை இரத்து செய்யப் பட்டுள்ளதுடன் 250 முதுகலை ஆசிரியர்களையும் 630 பட்டதாரி ஆசிரியர்களையும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

TNTET Paper 2 VACANCIES : தமிழ்நாடு பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 2265 - CM CELL REPLY

ACTION PLAN FOR LATE BLOOMERS!!



தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

அரசுமேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகள் செயல்படுகின்றன.

இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால், பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.

அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம்.

மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

DIGITAL SR கணினி மயம் ஆவதில் ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்

ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் பணிப் பதிவேடு கணினி மயமாவது
  வரவேற்கத்தக்கதே

அதேவேளையில் ஏன் இந்த அவசரம்?

பல பணிப்பதிவேடுகளிலே முதல் பக்கத்தைத் தவிர வேறு பதிவுகள் இல்லை, பதிவுகளும் தவறாக உள்ளது.

பல ஆண்டு  தவறுகளை ஓரிரு நாளில் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?எப்படிக் களைய முடியும்?

Digital ஆக்குவதிலும் எண்ணிலடங்கா தவறுகள் .

தலைவலி  போய் திருகுவலி வந்தது போல் உள்ளது.

Digital ஆக்கியதில் அவசர கதியில் சரி பார்த்து விடுபட்டவைகளைச் சேர்க்க வாய்ப்பளிக்க வேண்டும்.

இதுதான் Final எனச்சொல்ல நாம் Foreign ல் இல்லை.

எனவேமீண்டும் மீண்டும் வாய்ப்புகள் தர வேண்டும்.

யாரோசெய்த தவறுக்கு ஊழியர் எப்படி இழக்க முடியும்.

மற்றதுறைகளை விட கல்வித்துறையில் மட்டும்ஏன் இந்த அவசரம்?

யாருக்கும் எள்ளளவும் பாதிப்பின்றி கணினிமயமாக்க சங்கங்கள் வலியுறுத்த வேண்டும்.,

தவறுகள் ஏற்படலாம் தவறில்லை அதை திருந்திக் கொள்ள மறுபடி மறுபடி வாய்ப்புகள் வழங்கவில்லை எனில் ஊழியருக்கு பெருத்த அடியே.

அதுவும் நம் நாட்டில் அவசர கதியில் எந்த ஒரு திட்டமானாலும் செயல்படுத்துவது வாய்ப்பு தராமலிருப்பது  வழக்கத்திற்கு மாறானது.

நாம்  நினைக்கலாம் நமக்கு விடுதல் இல்லை என ஆனால் நமக்கே தெரியாமல் தவறுகள் இருக்கலாம்.


எனவே  தவறுகள் திருத்த வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

30/11/17

8 - வது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்தல் ஜனவரி 1 - இல் ஊதிய உயர்வு பெறுபவர்களுக்கு 31.12.2015 அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அரசு அறிவுரை!


அதிகவேகமாக செல்வதை தடுக்க வாகனங்களில் கட்டுப்பாட்டுக் கருவி-சாலைபோக்குவரத்து துறை முடிவு!!!

                                      

மதிய உணவுத் திட்டத்தில் கம்பு சோறு: நிதி ஆயோக் பரிந்துரையால் மத்திய அரசு திட்டம்

ராகி, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் ஒன்றாக கம்பு விளங்குகிறது
. இதில் மற்ற தானியங்களை விட இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வறட்சிக் காலங்களிலும் இதன் விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே அதன் பயன்பாட்டை நாடு முழுவதிலும் ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய நிதி ஆயோக், மதிய உணவுத் திட்டத்தில் கம்பு சோறு அளிக்கவும், பொதுமக்களுக்கு ரேஷன் மூலமாக கம்பு தானியம் வினியோகிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, அதிக சத்துள்ள கம்பு தானியம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் எங்கள் அமைச்சகம் இறங்கியுள்ளது. மதிய உணவுக்கும் ரேஷன் கடைகளுக்கும் இதை விநியோகிக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. தற்போது கம்பு சேமிக்கும் வசதி குறைவாக இருப்பதால் அதை அதிகரித்த பிறகு இதன் விநியோக அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே குறைந்த நீரில் அதிக தானிய விளைச்சல் பெறுவது குறித்து இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலும் ஆய்வு செய்து வருகிறது. இதன் மீதான ஆய்வறிக்கையை கவுன்சில் விரைவில் வெளியிட உள்ளது. இதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் ‘விவசாயிகள் உற்பத்தி அமைப்பு’ என ஒன்றை ஏற்படுத்தி, கம்பு உள்ளிட்ட அனைத்து தானியங்களும் பயிரிடுதல் மற்றும் விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு உதவுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.

கம்பு நல்ல விளைச்சல் தந்தாலும்,அதற்கு ஆதரவு குறைவாக இருப்பதால் இதை விளைவிக்க விவசாயிகள் முன்வருவதில்லை என மத்திய அரசு கருதுகிறது. தற்போது வளரும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் இருப்பதால் அதை சரிசெய்யவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் கம்பு பயன்பாடு குறைந்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 72 % நகரங்கள், 73% கிராமங்களில் இதன் பயன்பாடு குறைந்துள்ளது. அரிசி பயன்பாடு 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதற்கு கம்பு உணவை சமூக அந்தஸ்துக்கு குறைவாக கருதுவதும் ஒரு காரணமாக உள்ளது. இந்நிலையில் அதை மதிய உணவு திட்டத்தில் விநியோகிக்க சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பும் என்பதும் மத்திய அரசின் அச்சமாக உள்ளது.

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்துடன் கூடிய 13 வகை கலவை சாதம் மற்றும் முட்டை மசாலாக்கள் வழங்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பனில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து 
நிலைகொண்டுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் தென் தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது.

புதன்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கை அம்பந்தோட்டாவிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரிக்கு 500 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. வியாழக்கிழமை வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருக்கும். இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, எஸ்.பி. பட்டிணம், கீழக்கரை, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் யாரும் ஆழமான கடற்பகுதிற்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பாம்பன் பகுதி மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் மணிக்கு 50 கி.மீ. வேகத்திற்கும் அதிகமாக காற்று வீசியதால் பாம்பன் ரயில் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.

BLO'S கணக்கெடுப்பு பணிக்கு 1மணிநேரம் முன்னதாக செல்ல ஆசிரியர்களுக்கு திருப்பூர் CEO- அனுமதி...

                                                  

ஆசிரியர் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து நடிகர் கமல் கருத்து!!!

பள்ளிவரும் பிள்ளைகள்,
பயின்றுவரும் கிள்ளைகள்;

தற்கொலைசெய்து சாவு!
இக்கொலையில் ஆசான்தானே காவு?
பள்ளி வருவது படிக்க- கூடாது
சுள்ளி எடுத்து அடிக்க,
ஆசிரியருக்கு கட்டுப்பாடு
ஆசு களைவதில் தட்டுப்பாடு ;
ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டும்,
வழுக்கிப் போனால் தடுக்க வேண்டும்;
தடுக்காவிட்டால் வேலைப்பழி!
தடுத்துவிட்டால் கொலைப்பழி?
கண்டிக்கவும் உரிமையில்லை!
தண்டிக்கவும் உரிமையில்லை!
அழைத்துவா பெற்றோரை,
அறியட்டுமுன் அக்கப்போரை;
இதுதான் ஆசானெடுத்த முடிவு!
இனிமேல் அவருக்குண்டா விடிவு?
'காப்பியடித்ததை' கண்டறிந்தால்
கைபிடித்திழுத்த 'காமுகன்' பட்டம்!
'தப்பென' கண்டித்தால்
தற்கொலையால் 'காலன்' பட்டம்!
அழியாத கல்வி கொடுத்தவன்,
அழிகிறானே குற்றம் தடுத்தவன்;
போதிக்கிறவன் பேச்சு,
பேதலித்தே போச்சு;
குருவென எம்மை வணங்கவும் வேண்டாம்,
எமனென எம்மிதயம் துளைக்கவும் வேண்டாம்;
எம்மிதயமும் சதையால்தானே ஆனது-இன்று
எம்வாழ்வுதானே சிதையாகிப் போனது!
வேதனையுடன்,
கமல்

வணங்குகிறோம் உம்மை எம் இன்னல்களை அறிந்து குரல் கொடுத்தமைக்கு...

இச்சமூகத்தை மாற்றிடலாம் என நினைத்து ஏமாற்றத்துடன் பணிபுரியும் ஓர்ஆசிரியர்