யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/1/18

வருமானவரி சில குறிப்புகள்

1.வருமானவரி படிவம் 16
மே மாதம் 31 ஆம் தேதிக்குள் சம்பளப்பட்டுவாடா அலுவலரிடமிருந்து பெறப்பட வேண்டும்.
============

2.ஜுலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி படிவங்களை இணைய தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
==============
3.ஜூலை 31 ஆம் தேதிக்குப் பின்னர் ரூ5000 அபராதம் கட்டிய பின்னரே சமர்ப்பிக்க முடியும்
=============
4.ரூ 2,50,000 க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் கண்டிப்பாக வருமான வரி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
==============
5. 80 c....1,50,000 கழித்தபின்னர் cps  தொகை அதிகம் இருந்தால் ரூ 50,000 வரை 80 CCD (1B)   யில் மேலும் கழித்துக்கொள்ளலாம்.
==============
6.வீட்டுவாடகைப்படி மாதத்திற்கு ரூ 8333 வீதம் ஆண்டிற்கு ஒரு இலட்சம் வரை கழிக்கலாம்.அதற்கு மேல் கழிக்க வீட்டு உரிமையாளரின்  PAN NO
RECEIPTS
முதலியன சமர்ப்பிக்க வேண்டும்.
===============
7.உங்கள் பெற்றோருக்கு வீட்டு வாடகை தருவதன் மூலம் HRA படியை கழித்துக்கொள்ளலாம்.
=============
8. வரி விபரம்
ரூ 2,50,000-NIL
........................
2,50,001முதல் 5,00,000 முடிய
5%
அதிகபட்சம்
(ரூ 12,500)
........................
5,00,000 முதல்
10,00,000 முடிய
20%
அதிகபட்சம் (ரூ1,00,000)
.........................
ரூ 10,00,000 மேல் 30%
இதற்கு மேல் தாங்காது சாமி.
============
9. TAXABLE INCOME: ரூ வரை 3,50,000 வரை ரூ 2500 கழித்துக்கொள்ளலாம் .
==============
10.வழக்கம்போல் தொழில்வரி முழுவதையும் கழித்துக்கொள்ளலாம்.

DEE - ஊராட்சி / நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு கணக்குகள் அரசு தகவல் தொகுப்பு மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது-நிலுவைகள் விவரங்கள் சார்பு!

மொபைல் எண்னுடன் ஆதார் எண் இணைக்க டோல் - ஃபீரி 14546

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை வருகின்ற ஜனவரி 1 முதல் செயற்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.


மொபைல்-ஆதார்

மத்திய அரசின் அறிவிப்பின் படி பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதார் கார்டு எண்ணை இணைக்க அருகாமையில் உள்ள தொலைத்தொடர்பு ரீடெயிலரிடம் சென்று இணைக்கும் வகையிலான வழிமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருகின்ற ஐனவரி 1 முதல், ஆதார் எண்ணை இணைக்க மூன்று விதமான சுலபமான வழிமுறைகளை செயற்படுத்த உள்ளது. அதன் விபரம் பின் வருமாறு ;-

1 . மொபைல் எண் வாயிலாக ஐவிஆர்எஸ் ((IVRS)) எனப்படும் அழைப்பு வாயிலாக ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2 . OTP எனப்படுகின்ற ஒரு முறை கடவுச்சொல் கொண்டு மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது.
3. இறுதியாக, ஆதார் எண்ணை இணைக்க பிரத்தியேக ஆப் ஒன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல், ஏர்செல்,ஐடியா போன்ற பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரிடம் ஆதார் எண் இணைக்க மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற உள்ளது.
இதுவரை அருகாமையில் உள்ள ஸ்டோர்களுக்கு சென்று ஆதார் எண்னை இணைக்க வேண்டிய நிலை இருந்த சூழ்நிலையில், முதற்கட்டமாக ஆதார் இணைக்கப்பட வேண்டிய மொபைலில் இருந்து அழைக்கும் முறையை அறிந்து கொள்ள பினபற்ற வேண்டிய வழிமுறை பின் வருமாறு ;-
1 . உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற ஐவிஆர்எஸ் (IVRS) எனண்ணுக்கு அழையுங்கள்
2.அழைத்த பின்னர் மொழி தேர்ந்தெடுத்த பிறகு இந்திய பிரஜையா அல்லது வெளிநாட்டவரா என்ற கேள்விக்கு பதிவு செய்ய வேண்டிய எண்னை அழுத்திய பிறகு ஆதார் எண் இணைக்க என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. உங்கள் ஆதார் எண் பதிவு செய்த பிறகு உங்கள் ஆதார் எண் உறுதி செய்யப்பட உங்களது மொபைல் எண்னுக்கு OTP மெசேஜ் வந்து சேரும் அதனை உறுதிப்படுத்திய பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்ட எஸ்எம்எஸ் வந்து சேரும்.

உச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

அனைத்துவகை ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும்பணியாளர்கள் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வர - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

ஜாக்டோ ஜியோ -தொடர் முழக்க போராட்டம்- 06.01.2018- கோரிக்கைகள்



'நெட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை, பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான நெட் தேர்வு, நவம்பரில் நடந்தது; 9.30 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இவற்றை, cbsenet.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

பிளஸ் 2 தேர்வுக்கு இன்று 'தத்கல்' பதிவு

சென்னை, பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்று முதல், 'தத்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 பொது தேர்வை, நேரடியாக தனித்தேர்வர்கள் எழுதும் முறை, இந்த கல்வி ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.
அடுத்த ஆண்டு முதல், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 1 பொது தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே, பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியும்.அதனால், இந்த கல்வி ஆண்டில், வரும் மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொது தேர்வில் மட்டுமே, தனித்தேர்வர்கள், நேரடியாக பங்கேற்க முடியும். இதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.அதில், விண்ணப்பிக்க தவறியோர், 'தத்கல்' முறையில், இன்று முதல், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார். பதிவு செய்வதற்கான ஆன்லைன் மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

வேலூரில் ஜனவரி 6-ம் தேதி நடக்கிறது பாஸ்போர்ட் மேளா!

வேலூரில் ஜனவரி 6-ம் தேதி அன்று சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது. இந்த மேளா, வேலூரில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் நடைபெறும். சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இந்தச் சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்துகிறது.


வேலூர் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம், மற்ற வார நாள்களைப் போல் ஜனவரி 6-ம் தேதி அன்று இயங்கும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளப்படும். இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் அனைவரும், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண்ணை (ஏ.ஆர்.என்.) பெற்றுக் கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மேளாவில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம் கொண்ட ஏ.ஆர்.என். பதிவு எண் தாளை அச்சிட்டு எடுத்து வரவேண்டும். மேலும் தேவையான அனைத்து ஆவணங்களை அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். இந்த மேளாவிற்கான சந்திப்பு முன்பதிவு ஜனவரி 03, 2018 (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்குத் தொடங்கியது.

பாஸ்போர்ட் மேளா நாளன்று, குறித்த நேரத்திற்கான முன்பதிவு நேரம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) விண்ணப்பங்கள், நிறுத்திவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் வைத்திருப்போர் மற்றும் மையத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பம் செய்ய வருபவர்கள் இந்த மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக்: தேர்ச்சி பெறாதோர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் தேர்வு எழுத தொழில்நுட்பக் கல்வித் துறை சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில் வருகிற ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் பட்டயத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். அதனுடன் மதிப்பெண் பட்டியல் கட்டணம் ரூ. 30, பதிவுக் கட்டணம் ரூ. 25 கட்டணங்களையும் சேர்த்து மாணவர்கள் படித்த கல்லூரி முதல்வர் மூலமாகச் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். 
அவ்வாறு தேர்வுக்குப் பதிவு செய்ய பிப்ரவரி 7 கடைசி நாளாகும். அபராதத் தொகை ரூ. 100 செலுத்தி, பிப்ரவரி 14 வரை தேர்வுக்குப் பதிவு செய்யலாம். 
அதன் பிறகு, தட்கல் முறையில் ரூ. 500 அபராதம் செலுத்தி மார்ச் 9-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி குறைந்தது ஏன்? – அரசுப் பள்ளி ஆசிரியர்களை வருத்தெடுத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து, அந்தப் பள்ளியின் ஆசிரியர்களை ஆட்சியர் கந்தசாமி சரமாரியாக கேள்வி எழுப்பி எச்சரிக்கை விடுத்தார்.


▪ராந்தம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி திடீரென ஆய்வு நடத்தினார். பின்னர் செய்யாறு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஏன் குறைந்தது என அவர் கேள்வி எழுப்பியதற்கு ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டியதால் ஆட்சியர் ஆத்திரம் அடைந்தார். 6ஆம் வகுப்பில் இருந்தே முறையாக கற்றுக் கொடுத்து இருந்தால் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு ஏன் இந்த நிலை ஏற்படுகிறது என்று அவர் கடிந்து கொண்டார்.

▪ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு விட்டு, அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று கூறிய அவர், இதனால் தான் தனியார் பள்ளிகள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் கண்டித்தார். ஆசிரியர்கள் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.

▪இதையைடுத்து செய்யாறு கல்வி மாவட்ட மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நகைச்சவை நடிகர் தாமு கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்

3/1/18

டெபிட் கார்டு, பீம் செயலி சலுகை அமலுக்கு வந்தது

டெபிட் கார்டு, பீம் செயலி மூலம் ரூ.2,000 வரை பொருள்களை வாங்கினால் அதற்கு வர்த்தகர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்ற சலுகை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 பொருள்கள் விற்பனையில் டெபிட் கார்டு, பீம் செயலி வாயிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகையை வழங்க மத்திய அரசு கடந்த வாரம் முடிவு செய்தது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை வர்த்தகர்கள் செலுத்த வேண்டியதில்லை; அதனை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது.

 இந்நிலையில், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், "டிஜிட்டல் 2018 மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. டிசம்பருடன் முடிந்த காலாண்டில் பீம் செயலி மூலம் நடைபெற்ற பரிமாற்றம் 86 சதவீதம் அதிகரித்து ரூ.13,174 கோடியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
 பொருள்கள் விற்பனையின்போது, டெபிட், கிரெடிட் கார்டு, பீம் செயலி உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்காக வர்த்தகர்களிடம் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இக்கட்டணம், எம்டிஆர் என்றழைக்கப்படுகிறது.


 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில், பொருள்களின் வர்த்தகத்தில் டெபிட் கார்டு, பீம் செயலி பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகையை வழங்குவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை வர்த்தகர்கள் செலுத்த வேண்டியதில்லை; அதனை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி வரை இச்சலுகையை வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

750 தனி ஊதிய முரண்பாடுகளை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு

வருமான வரி கணக்கு உதவி மைய எண் மாற்றம்

ஆண்டு வருமான வரி கணக்கை, 'ஆன்லைன்' வாயிலாக தாக்கல் செய்வோருக்கான உதவி மைய எண் மாற்றப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கை, 'இ - பைலிங்' எனும், 'ஆன்லைன்' வழியில் தாக்கல்
செய்வோருக்காக, தனி உதவி மையத்தை வரித்துறை அமைத்துள்ளது. அதற்கு, புதிய எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வருமான வரித்துறையின்,www.incometaxindiaefiling.gov.inஎன்ற இணையளத்தில், ஆண்டு வரி கணக்கை தாக்கல் செய்வோர், 1800 103 0025 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் விளக்கம் பெறலாம். அது போல், 8049 612 2000 என்ற எண்ணிலும், 'இ - பைலிங்' தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அனுமதியின்றி சுற்றுலா : பள்ளிகளுக்கு தடை

தமிழகத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர, மற்ற வகுப்பு
மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான பணிகளை, பல பள்ளிகள் துவக்கியுள்ளன.

இதையடுத்து, 'அனுமதியின்றி மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது' என, பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள அனுப்பியுள்ள கடிதம்: மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, முன்அனுமதி பெற வேண்டும்.
கல்வித்துறை வகுத்துள்ள விதிகளை பின்பற்றி, மாணவர்களின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஆபத்தான இடங்களுக்கு, சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதிய உணவு திட்டத்தில் பால் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை!!

மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!
டெல்லி : அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துடன் பாலையும் சேர்த்து வழங்க மத்திய வேளாண் அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையை போக்கும் விதமாக மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை அளித்துள்ளது.



அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் இலவச மதிய உணவுத் திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. ஏழை மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கல்வி, கற்கவும், பசி இல்லாமல் கல்வியறிவு பெறவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


மதியஉணவுத் திட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்களுக்கு வாரம் இரு முறை சத்துணவில் முட்டை, காய்கறிகள், சுண்டல் மற்றும் கலவை சாதங்கள் என்று ஒரு பட்டியலையே ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.


குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

இந்நிலையில் நாடு முழுவதும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், குழந்தைகள் நல அமைச்சகம் ஆய்வு நடத்தியது. இதில் பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதால் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.




மாநிலங்களுக்கு கடிதம்

பால்வழங்க கடிதம்

இதன்அடிப்படையில் மத்திய வேளாண் அமைச்சகம் இன்று அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சத்துணவு வழங்கப்படும் மாநிலங்களில் மாணவர்களுக்கு பாலும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



சத்துணவில் பால்

சத்துணவோடு பால்

சத்துணவுடன் பாலையும் சேர்த்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக இதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மாநிலங்களை மத்திய வேளாண் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.




மதியஉணவுத் திட்டத்திலே குறை

மதியஉணவே சரியாக தரப்படுவதில்லை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதிய உணவுத் திட்டமே சரியாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ப்ரியா, அரசு மருத்துவமனையில் குடல்
வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 1500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளை பெற்று     வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


தனக்கு அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு நேற்றிரவு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியராக உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சேராமல், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றது பாராட்டுகளை பெற்றுள்ளது.

அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

24/12/17

TRB : விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு? விசாரணையை துவக்கியது போலீஸ்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் 
தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணிக்கு தேர்வு நடத்தி, நவ.,7ல் முடிவு வெளியிட்டது. தேர்ச்சி பெற்றவர்களில், இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, சிலர் ஆதாரங்களுடன், டி.ஆர்.பி.,க்கு புகார் மனுக்கள் அனுப்பினர். டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, பல தேர்வர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர், விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்ற, 1.33 லட்சம் பேர், இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது முதல், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும், டி.ஆர்.பி., அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு; முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.

புகார் மீது வழக்கு பதிவு செய்து, குற்றம் செய்தோரை கைது செய்து, சிறையில் அடைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு!!!

பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, எத்தனை பக்கங்களில் விடைத்தாள் வழங்கப்படும் 
என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டுமே, பொதுத்தேர்வு நடந்தது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கும், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி, செய்முறை தேர்வு, அகமதிப்பீட்டு முறை, தேர்வுக்கான மொத்த மதிப்பெண் ஆகியவை குறித்து, ஏற்கனவே அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து, முதன்மை விடைத்தாள்களில் எத்தனை பக்கங்கள் இருக்கும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு, 90 மதிப்பெண்களுக்கு, 30 பக்கங்களில் கோடிட்ட விடைத்தாள்கள் வழங்கப்படும். உயிரியலில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, தலா, 35 மதிப்பெண்களுக்கு, தனித்தனியாக எழுத, தலா, 22 பக்கங்களில், இரண்டு முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும்.

கணக்கியல் என்ற அக்கவுன்டன்சி பாடத்துக்கு, 90 மதிப்பெண்களுக்கு, தலா, 15 பக்கங்கள் கோடிட்டும், கோடிடப்படாமலும், மொத்தம், 30 பக்கங்கள் வழங்கப்படும். கணினி அறிவியல் உள்பட மற்ற பாடங்களுக்கு, 30 பக்கங்கள் கோடிடப்படாமல் வழங்கப்படும் என, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மாணவர் மன அழுத்தம் தீர 'ஹெல்ப் லைன்' அறிமுகம்!!

பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி 
ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.


ஆலோசனை மையம்

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், அவர்களுக்கு உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகளை விவரிக்கவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், கட்டணமில்லா தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட உள்ளது.
இனிமேல், '14417' என்ற எண்ணில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி ஊழியர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ரூ.1.98 கோடி

அவற்றில், உயர் கல்வி படிப்பதற்கான தகவல்கள், தேர்வு விபரங்கள், பாடத்திட்ட சந்தேகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு பிரச்னைகள்... நலத்திட்டம் கிடைக்காமை, மன அழுத்த பிரச்னைகள் போன்றவை குறித்து, மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்காக, தமிழக அரசு, 1.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், மாணவர்களுக்கு உடல்நலம், உளவியல் ஆலோசனைகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் விபரங்கள் குறித்த தகவல்களையும் வழங்க, திட்டமிடப்பட்டு உள்ளது.