யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/4/18

தமிழகம் முழுவதும் 5-ஆம் தேதி முழு கடையடைப்பு- ஸ்டாலின்


அரசு உதவிபெறும் பள்ளியில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

வேலூர் மாவட்டம், மாதனூரில் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவிபெறும் இப்பள்ளியில் இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக
உதவியாளர், இரவு காவலாளி ஆகிய பணியிடங்கள் காலியாக இருந்தன.


 இந்த பணியிடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோரை பள்ளி நிர்வாகம் நியமித்தது. அந்த நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.

ஆனால், பள்ளியின் கோரிக்கை மனுவை கல்வித்துறை பரிசீலிக்கவில்லை. இதையடுத்து, தங்களது பள்ளியில் நிரப்பப்பட்ட பணியிடங்களுக்கான ஒப்புதலை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்தவழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத காலியிடங்களை நிரப்ப கல்வி நிறுவனத்திற்கு உரிமை உள்ளது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்று கூறிய நீதிபதி, சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு 2 வாரத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும்
நீட்டிக்கப்பட்டது.

அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது  குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்திய அரசு அதிரடி திட்டம்!

1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை
செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார்.


  தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள புத்தகத்தைவிட அதிக பக்கங்கள் இருக்கும். நிறைய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். 9 மற்றும் 11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடங்கள் உள்ளன.

பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முன்பாக அனுப்பப்பட்டுவிடும்.பக்கங்கள் அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் பிரிந்துபோகாமல் இருக்க முன்பைவிட கனமான, பளபளப்பான அட்டையால் பைண்டிங் செய்யப்படுகிறது. புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்தால் பக்கங்கள் பிரிந்துபோகாது என்பதால் லேமினேசன் செய்து வழங்கலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.

வருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு!

சென்னை 'வரும், 31க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

கடந்த, 2015------ - 2016 மற்றும், 2016 - 2017ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை, நாளைக்குள் தாக்கல் செய்வதற்கான பணிகளை, வருமான வரி
செலுத்துவோர், துரித கதியில் செய்து வருகின்றனர்.இந்த நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு, உதவி செய்வதற்காக, துறை சார்ந்த, 30பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இணையதளம் வழியாக தாக்கல் செய்ய முடியாதவர்களுக்கு, வருமான வரிக் கணக்கை தயார் செய்து கொடுக்க, தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான சிறப்பு கவுன்டர்கள், 22ம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகின்றன.


இதுகுறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரண்டு நிதியாண்டுகளுக்கான, வருமான வரி கணக்கை, நாளைக்குள் செலுத்த வேண்டும் என்பதற்காக, அரசு விடுமுறை தினங்களிலும், வருமான வரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல், நடப்பு நிதியாண்டு வருமான வரி கணக்கை, அடுத்த ஆண்டுக்குள் செலுத்தும் நடைமுறையை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.அதாவது, 2017 - 18ம் ஆண்டுக்கான வருமான வரியை, 2018 ஜூலை, 31க்குள் செலுத்த வேண்டும்; அதற்குப் பின், 2019 மார்ச், 31க்குள் செலுத்து வோருக்கு, 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சட்ட திருத்தத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.மேலும், நாளைக்குள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறுபவர்கள், இனி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவே முடியாது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கணக்கு தாக்கல் கட்டாயம்மாத ஊதியம் பெறுபவர்கள் சம்பளத்திலிருந்து, 10 சதவீத தொகை, டி.டி.எஸ்., என்ற வருமான வரிப் பிடித்தமாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் பிடிக்கப்படுகிறது. இவ்வாறு, டி.டி.எஸ்.,செலுத்துவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை என, கருதுகின்றனர். ஆனால், வரும் ஆண்டில் இருந்து, டி.டி.எஸ்., செலுத்தும் நபர்களுக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்டத் திருத்தத்தை, மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது; அவ்வாறுகணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, 1,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.20 லட்சம் பேருக்கு கடிதம்!வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, வருமான வரி அலுவலகம், தொடர்ந்து, நினைவூட்டல் கடிதம் அனுப்பி வருகிறது. இந்த நிலையில், 31ம் தேதி கடைசி என்பதால், அதற்கு முன், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு, இந்த மாதம் மட்டும், 20 லட்சம் பேருக்கு, நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்-Dailythanthi

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம்
மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது.

இதன்காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும்.

மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண
உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை, இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடுமையாக உயர்த்தி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, 151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது 11 சதவீத உயர்வு.

350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,304 அதிகம் ஆகும். அதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய சரக்கு லாரிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு ஆகும்.

12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள(6 சக்கர லாரி) வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் 367 நிர்ணயம். இது கடந்த ஆண்டை விட ரூ.3,468 அதிகம். அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்) வாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 ஆகும். கடந்த ஆண்டை விட ரூ.8 ஆயிரத்து 223 அதிகம் ஆகும். இது 26 சதவீத உயர்வு ஆகும். 40 ஆயிரத்திற்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 308 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5,284 அதிகம். அதாவது 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள் செல்லக்கூடிய வாகனம் ஆகியவற்றுக்கும் 17 சதவீதம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

23/3/18

பள்ளி மேலாண்மைக் குழுவினர்களுக்கான சிறப்பு கூட்டம்



அரசு பள்ளிகளுக்கு மட்டும்
23.03.2018 அன்று நடைபெற உள்ள இக்கூட்டத்திற்கு பள்ளி வங்கிக் கணக்கில் ரூ.1080 வரவு வைக்கப்பட்டுள்ளது
ஆனால் இதில் ரூ.540 மட்டும் செலவு செய்யப்பட வேண்டும். மீதத் தொகை ரூ.540 யை வட்டார வள மைய கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

23.03.2018
சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் சமூக தணிக்கை நடத்தப்பட வேண்டும்
இக்கூட்டத்தின் போது பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களின் கல்வித் தரம், மாணவர்களின் சேர்க்கை.... போன்றவை விவாதிக்கப்பட வேண்டும்
சமுக தணிக்கை படிவம் ஏற்கனவே பள்ளிகளுக்கு தரப்பட்டுள்ளது.இதை பூர்த்தி செய்ய வேண்டும்
பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்க வேண்டும்
இக்கூட்டத்தில் அனைத்து SMC உறுப்பினர்களும் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ள வேண்டும்
இக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தேநீர் செலவினம் மேற்கொள்ள வேண்டும்
இக்கூட்டத்தின் போது தேதி மற்றும் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் சமூக தணிக்மை என்ற விபரத்தோடு கூடிய 2×4 Flex அடித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
கூட்ட நிகழ்வின் Documentation with photo அனுப்பப்பட வேண்டும்

பிளஸ் 1 வினாத்தாள் ஆய்வுக்கு கமிட்டி?

பிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி
துறையில் நிபுணர் கமிட்டி அமைக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளவும், அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தவும்,
பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொது தேர்வில், மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கல்வியாளர்களும், மிகவும் தரமான வினாத்தாள்கள் என, பாராட்டியுள்ளனர்.ஆனால், மனப்பாட பயிற்சி மேற்கொண்ட மாணவர்கள், சிந்தித்து பதில் அளிக்க, சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போனஸ்; கருணை மதிப்பெண் வேண்டும் என, பெற்றோர், மாணவர்கள் கோரியுள்ளனர்.இந்நிலையில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனைப்படி, பிளஸ் 1 வினாத்தாளின் கடினத்தன்மை குறித்து ஆராய, நிபுணர் கமிட்டி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கமிட்டியில், பேராசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் இடம் பெறுவர் என, தெரிகிறது.பொது தேர்வுகள் முடிந்த பின், பிளஸ் 1 விடைத்தாள்கள், மே மாதம் திருத்தப்படும். அப்போது, மாணவர்கள் பெறும் அதிக பட்ச மதிப்பெண்ணை பொறுத்து, நிபுணர் கமிட்டி முடிவுகளை மேற்கொள்ளும். அதற்கு முன், எத்தனை கேள்விகள், மாணவர்களின் நுண்ணறிவை துாண்டின; எந்த கேள்வி களுக்கு பதில் எழுத, மாணவர்கள் திணறினர் என்பது உட்பட, பல்வேறு வகையில், ஆய்வு செய்யப்படும்.பின், மாணவர்களில் பெரும்பாலானோர், சரியாக பதில் எழுதாத கேள்விகள் அடையாளம் காணப்பட்டு, அந்த கேள்விகளுக்கு, கருணை; போனஸ் அல்லது சமநிலை மதிப்பெண் வழங்க, முடிவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைகொடுத்தது தமிழ் 2ம் தாள் : 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி!!!

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக 
இருந்ததால், முதல் தாளின் மதிப்பெண் இழப்பை ஈடு செய்யலாம் என, மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு துவங்கியது.
இந்த ஆண்டு பொது தேர்வுகளில், வினாத்தாள்முறை மாறியிருப்பதால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வுக்கு சென்றனர். அதேபோல், முதல் தாள் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது. இதுவரை மொழிப்பாடங்ளின் வினாத்தாள்களை பார்த்து, பெரும்பாலும், மாணவர்கள் அச்சப்படுவதில்லை. ஆனால், இந்த முறை, தமிழ் தேர்விலேயே, மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த அதிர்ச்சியுடன், நேற்று இரண்டாம் தாள் தேர்வுக்கு, மாணவர்கள் சென்றனர். ஆனால், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், வினாத்தாள் எளிமையாக இருந்தது. அதுவும் மாணவர்கள் பெரிதும் நம்பும், சரியான விடையை தேர்வு செய்யும், ஒரு மதிப்பெண் வினாக்கள், முழுமையாக எளிமையாக இருந்தன. வினாத்தாள் குறித்து, சிவகங்கை, கே.ஆர்.மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர், நீ.இளங்கோ கூறியதாவது: முதல் தாளில், மாணவர்கள் தவறவிட்ட மதிப்பெண்களை மீட்டு எடுக்கும் வகையில், இரண்டாம் தாள் எளிதாக இருந்தது. இதில், நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி, கிராமப்புற மாணவர்களும், தடுமாற்றமின்றி எழுதியுள்ளனர். ஒரு மதிப்பெண் பகுதி, கவிதை, பா நயம், கட்டுரை எழுதுதல் என அனைத்து பகுதிகளும், மாணவர்கள் பயிற்சி பெற்றவையாக இருந்தன. தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு குறித்த கேள்வி மட்டும், கொஞ்சம் யோசிக்க வைப் பதாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை "டேப்லட்" மூலம் பயிற்சி​


பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு 
நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்றது.மாணவ-மாணவிகள் வினாத்தாளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வினாக்கள் அவர்கள் படித்ததாகவோ, எதிர்பார்த்ததாகவோ இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமபட்டு தேர்வு எழுதினார்கள்.


தேர்வு எழுதிய மாணவிகள் பலர் அழுதுகொண்டே வெளியே வந்தனர். தேர்ச்சி பெறுவோமா? என்பதே சந்தேகமாக இருப்பதாக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர். கருணை மதிப்பெண் வழங்கினால் தான் தேர்ச்சி அடைய முடியும் என்றும் மாணவர்கள் கூறினார்கள்.

பிளஸ்-1 கணித தேர்வு கடினமாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

கேள்விகள் சரியாகத்தான் கேட்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பிளஸ்-1 தேர்வில் கணித பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது. 90-க்கு 90 மதிப்பெண்கள் எடுப்பது தான் சிரமம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வு வயது வரம்பு உயர்த்தப்படாது!

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது வரம்பை 60லிருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மார்ச் 21ஆம் தேதி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது, ‘மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு மாற்றப்படுகிறதா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங், “அரசிடம் அது போன்ற எந்தத் திட்டமும் இல்லை” என்று பதிலளித்தார். தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களின் ஓய்வு வயது வரம்பு 60லிருந்து 62 ஆக உயர்த்தப்படலாம் என்ற கூறப்பட்ட நிலையில், மத்தியப் பணியாளர் அமைச்சகம் அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதேநேரம், நாட்டிலுள்ள ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் விரைவில் அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச மாதாந்திரத் தொகையை உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் மற்றும் ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்பட்டால் ஆகும் செலவு ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கூறும்படி தொழிலாளர் சேமலாப நிதிய அமைப்பிடம் மத்திய தொழிலாளர் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.

பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் 
17.03.2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் "TNSchoolEducation" எனவும், பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும் அனைத்து ஆசிரியர்களையும் இதில் பங்கேற்கவும்  அறிவுரை கூறியுள்ளார்.பேஸ்புக் பக்கம் இல்லாதவர்கள் புதிய பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் இணையவும் அறிவுரை கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வி துறையின் முக்கிய நிகழ்வுகள்,அறிவிப்புகள் மற்றும் மாணவர்களுக்கான பாட சம்மந்தமான வீடியோக்கள்,புகைப்படங்கள்,இந்த பக்கத்தில் பகிரலாம்.ஆசிரியர்களின் புதிய முயற்சிகள், பள்ளி மற்றும் மாணவர்களின் ,புகைப்படங்கள் , விடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்.தொழில்நுட்ப உதவிகளுக்கு  தொடர்பு எண்கள் மகேஷ்-9444322538, ரவிக்குமார்-9788268911,
தாமரைச்செல்வன்-9444414417

https://www.facebook.com/tnschools
நன்றி
எஸ்.தாமரைச்செல்வன்,
மாநில தகவல் மேலாண்மை முறைமை (EMIS),
பள்ளிக்கல்வித்துறை ,
சென்னை,
9444414417,

அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சத்துணவு, அங்கன்வாடி 
மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.


 இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை சாராத நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தோட்டக்கலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துக்காக 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


 இதன் கீழ் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரக்கன்றுகள், வணிக மலர்ச் செடிகள் 40 சதவீதம் மானியத்தில் நடவு செய்து வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.



அதை தொடர்ந்து சமூகநலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளும், பழங்களும் கிடைக்கும் வகையில் முருங்கை, பப்பாளி செடிகளை நடவு செய்து வளர்க்க இடம் வசதியுள்ள அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


 அதற்காக, அனைத்து அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கும் முருங்கை மற்றும் பப்பாளிச் செடிகள் வழங்குவதற்காக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இச்செடிகளின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



 இத்திட்டத்தின் கீழ் 42,795 சத்துணவு மையங்களுக்கு 78,347 பப்பாளி மற்றும் 73,527 முருங்கை கன்றுகள் விநியோகிக்கப்பட உள்ளன.


 எனவே முருங்கை மற்றும் பப்பாளி வளர்ப்பதற்கு இடவசதியுள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையயங்கள் அந்தந்த மாவட்ட சமூகநலத்துறையின் வழியாக மாவட்ட தோட்டக்கலை இணை, துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்த 
எழுத்துப்பூர்வமான அறிக்கையை, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட், மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்களில் 2.21 லட்சம் பேர் ஆண்கள்.


19.1 லட்சம் பேர் பெண்கள். அதிகம் பிச்சைக்காரர்கள் இருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் 81,244 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.



66,000க்கு மேலான பிச்சைக்காரர்களின் மாநிலமான உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பீகார் மாநிலம் 30,000க்கு மேற்பட்ட பிச்சைக்காரர்களுடன் முன்றாவது இடத்தில் உள்ளது.


அதிசயமாக, தமிழ்நாடு இப்பட்டியலில் 33வது இடத்தில் உள்ளது. காரணம், தமிழகத்தில் 6,800 பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்களாம்!


அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிச்சைக்காரர்களில் பெண்கள் அதிகமாக உள்ளனர். யூனியன் பிரதேசங்களான டாமன் - டையூவில் 22 பிச்சைக்காரர்கள்தான் உள்ளனராம். லட்சத்தீவில் இரண்டே பேர் மட்டும்தான் பிச்சை எடுக்கிறார்களாம்.

மார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை

புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் 
இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.
ஆர்.சந்திரன்

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகளை மார்ச் 31க்குப் பின் பயன்படுத்த வேண்டாம் என வங்கி உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் பாரத மகிளா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பழைய வங்கியில் அவர்கள் பெற்றிருந்த காசோலையை பயன்படுத்த வரும் மார்ச் 31ம் தேதிதான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த காசோலைகள் செல்லத்தக்கவை அல்ல என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கித்துறையில் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, சிறு வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளை உருவாக்க நினைத்து காரியத்தில் இறங்கியுள்ள மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் பிக்கானூர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் போன்ற அதன் துணை நிறுவனங்களாக இயங்கி வந்த தனி வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் பெண்களுக்கென தனியாகத் தொடங்கப்பட்ட பாரத மகிளா வங்கியையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட்டனர்.

எனினும் அந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்னர் பெற்ற காசோலை போன்றவற்றை பயன்படுத்த சிறிது காலத்தக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு செப்டம்பர் 2017 வரை என கால வரம்பு அறிவிக்கப்பட்டது. அது பின்னர் டிசம்பர் 31ம் தேதி என தளர்த்தப்பட்டது. எனினும் பல வாடிக்கையாளர்கள் முழுமையாக மாறாமல் தொடர்ந்தது தெரிய வந்தது. அதனால், தற்போது பாரத ஸ்டேட் வங்கி இறுதி எச்சரிக்கையாக, புதிய நிதியாண்டில் இருந்து புதிய காசோலைகளை மட்டும்தான் பயன்படுத்தலாம். பழைய காசோலைகளை மார்ச் 31ம் தேதிக்கு முன்பு காசாக்கும் விதமாக பயன்படுத்தி விடும்படி கேட்டக கொண்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் பழைய காசோலைகளை புதிய ஆண்டில் பயன்படுத்த இயலாது என தெரிவித்துள்ளது.

மேலும், புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதேபோல, முந்தைய வங்கி பெயரில் ஆன்லைன் பேங்கிங் வசதி பெற்றிருநதால், அதே பெயரில் இ மெயில் முகவரியில், மொபைல் எண்ணில் தொடர்ந்து சேவை பெறலாம் எனவும், நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வசதிக்கு மட்டும் onlinesbi.com என்ற முகவரியில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வங்கிக் கிளைகளின் IFSC எண்களை மாற்றியுள்ளதாகவும் சுமார் 1300 கிளைகளுக்கு இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் பணி!!!

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: திட்ட உதவியாளர்

பணியிடம்: கோயம்புத்தூர்

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

ஊதியம்: மாதம் ரூ.8,000/-

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 20/4/18

நேர்முகத் தேர்வு நடைபெறுமிடம்: மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் திணைக்களம், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 046

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1fgMsE8Tvig1NiWH4g-q204_qOoDRhGUZ/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.