யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/4/18

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு :

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு சென்னை: இளநிலை பட்டம் முடித்தவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.டெக் போன்ற, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில், 'டான்செட்' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே, 19, 20ல், நுழைவு தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. 23க்குள், விண்ணப்பிக்கலாம்.

இந்தாண்டு, மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

3 விதமான சீருடைகள்' கோபிசெட்டிப்பாளையம்: ''இந்தாண்டு, மூன்று வகையான சீருடைகள்
வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே, நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழக பள்ளிக்கல்வித் துறை, ஒவ்வொரு நாளும், ஒரு புதிய திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. தேர்வு முடிந்த பின், கோடை விடுமுறை விடப்படும். பள்ளி திறந்ததும், மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் நாளே, அந்த புத்தகங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நீட்' நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம்!!

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, இலவச சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன.
பிளஸ் 2 வகுப்பில், கணிதமும், அறிவியலும் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு, நேற்றுடன் தேர்வு முடிந்தது. பொது தேர்வுக்கு முன், 100 மையங்களில், ஒரு மாதமாக, நீட் பயிற்சி வகுப்புகள் நடந்தன. தேர்வு முடிந்ததால், மீண்டும் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.அதன்படி, தமிழக அரசின், 412 பயிற்சி மையங்களில், வரும், 5ம் தேதி முதல், பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன. இந்த வகுப்புகளை, சிறப்பு பயிற்சி பெற்ற, 150 அரசு பள்ளி ஆசிரியர்கள் நடத்த உள்ளனர்.இதற்கிடையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 9,000 மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 4,000 பேருக்கு, தமிழக அரசின் சார்பில், உணவு, இருப்பிட வசதியுடன், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.சென்னையில், அண்ணா பல்கலை, ஆர்.எம்.கே. இன்ஜி., கல்லுாரி, செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்டவற்றில், சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள், வரும், 9ம் தேதி துவங்க உள்ளன.வேறு எந்த மாநிலத்திலும், நீட் தேர்வுக்காக, அரசின் சார்பில் பயிற்சி வழங்கப்படாத நிலையில், தமிழகத்தில் தான் முதன்முதலாக, கட்டணமின்றி, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

பரீட்சையில பாஸ் பண்ணணுமா சூப்பர் டிப்ஸ்!! உ.பி.,யில், பிளஸ் 2 விடைத்தாளில், ரூபாய் நோட்டுகளை வைத்து, தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி, பல மாணவர்கள் கோரிக்கைகள் விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.,யில், 'பிளஸ் 2 தேர்வின் போது, முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார்; தேர்வுக்கு பயந்து 1.8 லட்சம் மாணவர்கள், முதல் நாள் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள், கடும் கண்காணிப்பின் கீழ் நடந்து முடிந்தன. தற்போது, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது.
முறைகேடுகளில் ஈடுபட முடியாததால், பல மாணவர்கள், விடைத் தாள்களில், தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி, ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சிலர், தங்கள் குடும்ப சூழலை கூறி, உருக்கமாக கடிதம் எழுதி உள்ளனர். சில மாணவர்கள், தங்கள் காதல் கதைகளைக் கூட, விடைத்தாள்களில் எழுதி உள்ளனர்.
'நான் தேர்ச்சி அடையவில்லை என்றால், என் தந்தை என்னை கொன்று விடுவார்' என, ஒரு மாணவர் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள், 50, 100, 500 ரூபாய் நோட்டுகளை, விடைத்தாளுடன் இணைத்து, தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு விடுதியில் தேர்தல் பணி:- அமைச்சர் அலுவலகம் சீல்!!!

                                      

தேர்வு எழுதியபோதே 50 பேர் கைது!!!

                                        

அறிவோம் சட்டம் - பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்!!!

அறிவோம் சட்டம் - விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய 
விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.

அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது. கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்ற வைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள்.


3. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்

பெண்களின் பாதுகாப்புக்காக தனிச்சட்டங்கள் பல உள்ளன என்பதையும் பிற சட்டங்கள் பலவற்றில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், பல சட்டப்பிரிவுகள் உள்ளன என்பதை பொதுவாக  நாம் அனைவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தனிச்சட்டங்கள் இயற்ற, அரசியல் சட்டப்பிரிவு 15(3) வகை செய்கிறது, அதனடிப் படையில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத் திற்காகவும் கீழ்க்கண்ட சட்டங்கள் இயற்றப்பட்டன.

1. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாது காத்தல் சட்டம், 2005,
2. வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961
3. The Immoral Traffic (prevention) Act
4. Muslim Women Protection of Rights on Divorce Act 1986
5. Family Couts Act 1984
6. National commission for Women Act 1990
7. Commission of Sati (prevention) Act 1987
8. Human Rights Act 1993
9. Women's Rights to property Act 1937.
10. The Divorce Act 1869.

இந்த சட்டங்கள் தவிர அரசியல் சட்டம், திருமணம் சட்டம், வாரிசு சட்டம், சுவிகாரச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சாட்டம், கருக்கலைப்பு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், பணியாளர் காப்பீட்டுச் சட்டம், போன்ற பல சட்டங்களிலும், பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு சட்டங்களையும் தனித்தனியாக பார்ப்போம்.

1) குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம் - 2005 ஒரு பெண்ணுடைய உடல் நலம், பாதுகாப்பு, உயிர், உடல், உறுப்பு அல்லது நல வாழ்வுக்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஊறு விளைவித்தல் அல்லது காயப்படுத்துதல் அல்லது அவ்வாறு செய்ய முயற்சித்தல், தகாத உடலுறுப்பு உணர்வுகளைப் புண்படுத்துதல், பொருளாதார ஊறு விளைவித்தல் அல்லது மதிப்புமிக்க காப்பீட்டு ஆவணங்களைப் பெறும் நோக்கத்தில் ஒரு பெண்ணை அல்லது அவரது உறவினரை மிரட்டும் வகையில் துன்புறத்துதல், தீங்கு செய்தல், காயம் ஏற்படுத்துதல் அல்லது பயமுறுத்துதல் ஆகியவை குடும்ப வன்முறையாகும்.

மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு அலுவலர்களை பணியமர்த்தும். அவர்கள் கூடுமானவரையில் பெண்களாக இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணுக்கு குடும்ப வன்முறை செய்யப்பட்டால் அவர் இந்தப் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தரவேண்டும். அந்த தகவலைப் பெற்ற அலுவலர் ஒரு அறிக்கையினை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் அனுப்ப வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்தின் பேரில் ஒரு பாதுகாப்பான தங்குமிடம் ஏற்பாடு செய்து அதன் விவரங் களை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் பாதுகாப்பு அலுவலர் அறிக்கை தரவேண்டும். அப் பெண் ணுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனையும் அந்த அலுவலர் செய்வார்.

இந்த பாதுகாப்பு அலுவலர் குற்றவியல் நடுவரின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் பணிபுரிய வேண்டும். இந்தச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி, மருத்துவம், நிதி மற்றும் இதர உதவிகளைச் செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண் குற்றவியல் நடுவரிடம் புகார் செய்யலாம். அப்புகாரைப் பெற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நாள்பற்றிய அறிவிப்பை பாதுகாப்பு அலுவலர் மூலமாக எதிர்வாதி மற்றும் பிற நபர்களுக்கு சார்வு செய்ய ஆணையிடலாம், குற்றவியல் நடுவர் இரு தரப்பாரையும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த உறுப்பினரிடம் ஆலோ சனை பெற உத்தரவிடலாம். வழக்கு விசாரணை குற்றவியல் நடுவரின் தனியறையில் நடத்தலாம்.

குடும்ப உறவு முறையிலுள்ள பெண் ஒருவருக்கு பங்கீடு செய்யப்பட்ட வீட்டில், உரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்குவதற்கு உரிமை உண்டு. அவ்வீட்டிலிருந்து அவரை சட்டப்படியில் அல்லாது வெளியேற்ற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சீதனம் அடங்கிய சொத்துக் களை உரிமை மாற்றம் செய்ய, வங்கி பாதுகாப்பு பெட்டகங்களை வங்கி கணக்குகளை பயன்படுத்த குற்றவியல் நடுவர் தடை விதிக்கலாம்.

குடும்ப வன்முறை தொடரவும் தடைவிதிக்கலாம். குடும்ப வன்முறை செய்யாமல் இருக்க எதிர்வாதியிடமிருந்து வாக்குறுதிப் பத்திரம் தருமாறு குற்றவியல் நடுவர் கோரலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உத்தரவிடலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் இழப்பீடு தர எதிர்வாதிக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிடலாம். இழப்பீடு வழங்க உத்தரவிடும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கைத் தரம், மன உளைச்சல், உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிய காயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கவும் குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் உண்டு, குற்றவியல் நடுவரின் ஆணைகளின் நகல்கள், புகார் கொடுத்தவர், எதிர்வாதி, காவல் நிலையம், தொண்டு நிறுவனம் ஆகிய வற்றிற்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு ஆணையை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை எதிர்வாதி மீறினால் ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.

குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஆணை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை நிறைவேற்றத் தவறும் பாதுகாப்பு அலுவலர் ஓராண்டு வரை நீடிக்கக் கூடிய சிறைத்தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.    

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

தமிழகத்தில் கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பன்யிடங்கள்: 896

பணியின் தன்மை: ஊராட்சி செயலர்

சம்பளம்: மாதம் ரூ.7,700/-

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 21 - 35க்குள்ளும். மற்ற வகுப்பினருக்கான வயது வரம்பு 21-30 க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ள, காஞ்சிபுரம் கடலூர் தேனி ஈரோடு திருவாரூர் திண்டுக்கல் பெரம்பலூர் கோவை திருவள்ளூர் கிருஷ்ணகிரி நீலகிரி அரியலூர் திருவண்ணாமலை தூத்துக்குடி விருதுநகர் வேலூர் திருநெல்வேலி கரூர் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசுடன் இணைந்து முதல் கட்டமாக 500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கவுள்ள 500 ஆசிரியர்களுக்கு,அமெரிக்க பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த உடன் மாற்றம் செய்யப்பட்ட புதிய சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப் படும்.

 நலிந்த பிரிவினருக்கு தொடக்கநிலை வகுப்புகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாட்களிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

அரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள்
அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?

அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி.

இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்?

சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்.

சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி


தி ஹிந்து

பொய் செய்தி பரப்பும் பத்திரிக்கையாளர்களின் அங்கீகாரம் பறிக்கப்படும் - மத்திய அரசு

சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகள் அதிக அளவில் 
நடமாடத் தொடங்கி விட்டன. சில பத்திரிக்கை நிறுவனங்களும், பத்திரிக்கையாளர்களும், தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி தவறான செய்திகளை பரப்பிவிடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா போன்ற நிறுவனங்கள், மக்களின் பொழுதுபோக்குகள், அபிமானங்களை பட்டியலிட்டு, அவர்களுக்கு பிடித்தவாறு பொய்யான செய்திகளை பரப்பி தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி செய்து வந்தது வெளித்திற்கு வந்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகமத் படேல்செய்தி ஊடகத்தில்  தவறான செய்திகளை சரிபார்க்கும் முயற்சி குறித்து கேள்வி எழுப்பினார்.

போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை நான் பாராட்டுகிறேன், ஆனால் என்னுடைய புரிதலுக்கான சில கேள்விகள்:

நேர்மையான நிருபர்களைத் துன்புறுத்துவதற்கு இந்த விதிகளை தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதற்கு உத்தரவாதம் என்ன?

யார் போலி செய்தி என்னவென்று தீர்மானிப்பவர்?  என்றெல்லாம் கேள்வி விடுத்து இருந்தார்.
I appreciate the attempt to control fake news but few questions for my understanding:
1.What is guarantee that these rules will not be misused to harass honest reporters?
2.Who is going to decide what constitutes fake news ?
1/2

— Ahmed Patel (@ahmedpatel) 2 April 2018
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் சும்ருதி இரானி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) மற்றும் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (என்.பி.ஏ) ஆகியவை அரசின் கட்டுபாட்டில் இல்லை.
Glad to see you awake @ahmedpatel ji whether a News article / broadcast is fake or not will be determined by PCI & NBA; both of whom I’m sure you know are not controlled/ operated by GOI.

— Smriti Z Irani (@smritiirani) 2 April 2018
மத்திய அரசு பொய் செய்தி பரப்பும் பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி இதுகுறித்து விரைவில் விதிகளை வகுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். விதிகளை மீறும் நிருபர்களை இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் தேசிய தொலைக்காட்சி கூட்டமைப்பு ஆகியவை முடிவு செய்யும் எனவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது ஒரு முறை விதிமீறினால் 6 மாத தடை, இரண்டு முறை என்றால் 1 ஆண்டு தடை, 3வது முறை விதிமீறயது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக அங்கீகாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை தடுக்கவும், புதிய விதிகள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக வருங்காலத்தில், பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சிக்கு என ஒரு தனி ஆணையம் உருவாகும் என தெரிவித்துள்ளது..

நடப்பு நிதி ஆண்டில் 6.8கோடி பேர் வருமானவரி அறிக்கை தாக்கல்!!!

                               

ஏப்ரல் 5-ம் தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 5-ம் தேதி திமுக நடத்தும் போராட்டத்துக்கு 10 போக்குவரத்து
தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஏப். 5-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் நடைபெற்ற 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளது*

டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வு தேதி நேற்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்பட்டது.

தமிழக கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான், எம்பிஏ, எம்சிஏ, போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும், ’டான்செட்’ நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். டான்செட் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.




தேர்வு மையங்கள்

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே 19மற்றும் 20ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. ஏப்ரல் 23ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைப் www.annauniv.edu/tancet2018 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலா

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை - கரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

பொறியியல் பட்டப்படிப்புக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழகத்தில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 3 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்து பணியாற்றி வருபவர்கள் பகுதி நேரமாக பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியுள்ளதாவது

“டிப்ளமோ முடித்துவிட்டு, தற்போது அரசு மற்றும் தனியார் பணியில் உள்ளவர்கள் பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில்  ஏப்ரல் 5ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பகுதி நேர பொறியியல் படிப்புக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின்னர் அதனை உரிய நகல் எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் கோவை தொழில்நுட்ப கல்லூரிக்கு மே 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் 300ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் 600ரூபாய் செலுத்த வேண்டும். தரவரிசை பட்டியல் மே 30ஆம் தேதி வெளியிடப்படும். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் சென்னை ஐஐடி!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை இன்று (ஏப்ரல் 3) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மும்பை ஐஐடி இரண்டாம் இடமும், டெல்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

மேலாண்மை நிறுவனங்களைப் பொறுத்தவரை அகமதாபாத் ஐஐஎம் முதலிடமும், பெங்களூர் ஐஐஎம் இரண்டாமிடமும், கொல்கத்தா ஐஐஎம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் முதலிடமும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை இரண்டாமிடமும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைகழகம் எட்டாவது இடத்தையும், மும்பை கெமிக்கல் தொழில்நுப்ட நிறுவனம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக் கல்லூரி மற்றும் பெங்களூர் தேசிய சட்டப் பள்ளி ஆகியவை அந்தந்த பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ளன.

இந்திய கல்வி நிறுவனங்களுக்கான 2017ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது.

தமிழக அரசசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்...

நடத்தை விதிகள் என்றால் என்ன?
அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ள
நடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.

தந்தை / வளர்ப்பு தந்தை

தாய் / வளர்ப்பு தாய்

கணவன்

மனைவி

மகன் / வளர்ப்பு மகன்

மகள் / வளர்ப்பு மகள்

சகோதரன்

சகோதரி

மனைவியின் தாய் மற்றும் தந்தை

கணவரின் தாய் மற்றும் தந்தை

சகோதரனின் மனைவி

சகோதரியின் கணவர்

மகளின் கணவர்

மகனின் மனைவி

இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.

உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணை :

தொலைதூரக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு ஊழியர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம்.

அரசாணை எண்  Ms. No - 200, P & A. R, dt - 19.401996 ன்படி அரசுப் பணியை தவிர எந்த பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. ( G. O. Ms - 893,P &  A. R, dt - 22.9.1983 மற்றும்  Rule 8(1)(aa)).ஆனால் Provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

தனியாக வகுப்பு நடத்துதல் :

எந்த ஆசிரியரும் தனிவகுப்பு(Tution) நடத்தக்கூடாது. Tution  நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் எதுவும் பெறாமல் மாணவர்களுக்கு Tution எடுக்க தடை ஏதும் இல்லை. (Rule 6(17)).

விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்பு :

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலகத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற
வேலைகளில் ஈடுபடக்கூடாது. (Provision 1 under rule 8(1)(a)).

அசையாச் சொத்து தொடர்பான விதிகள் :

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருவாயிலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். ( G. O. Ms - 3158, Public (service - A) Dept, dt - 27.9.1974).

அரசு வேலையில் இருக்கின்ற கணவன், மனைவி இரு சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத் தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ( Govt. Lr. No. 29546/80-4 P & A. R, dt - 22.10.1980).

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின் படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அந்த நிகழ்வை துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். சொத்து அறிக்கையில் மட்டும் காட்ட வேண்டும். (Rule 7(3).

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்த சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னர் பணிபுரிந்த மாவட்டமாக இருந்தால் இடம் மாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் சொத்து ஒன்றினை கையகப்படுத்த வேண்டும் . ( Rule 7(14).

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவே அல்லது விற்கவோ தடையில்லை. (Provision under rule 7(14)(a).

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. (Rule 7(16).

Record Sheet அல்லது Personal File - ஐ பராமரித்து வரும் அதிகாரி ஊழியர்களின் சொத்து விவரங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து ( Rule 7(9).

கீழே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7(2) as amended in G. O. Ms. No - 39, P & A. R. dt - 9.3.2010.

A Group Employees may Purchase upto Rs. 80,000/-

B Group Employees may Purchase upto Rs. 60,000/-

C Group Employees may Purchase upto Rs. 40,000/-

D Group Employees may Purchase upto Rs. 20,000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் முடிவில் சொத்து அறிக்கை ஒன்றை துறைத் தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ( Rule 7(3).

அரசு ஊழியரின் அரசியல் செல்வாக்கு :

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை அலுவலகத் தலைவர் கூப்பிட்டு தவறு என்று அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒரு அரசு ஊழியர் திரும்பவும் அரசியல் செல்வாக்கை கொண்டு வந்தால் அவரை துறைத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் அரசு ஊழியர் தொடர அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (Govt. Letter No  9637/A/95-1,P & A. R. (A) Dept, dt - 24.4.1995).

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். (G. O. Ms. No - 9, P & A. R (A) Dept, dt - 2.10.1985).

3/4/18

4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்வு

வரி செலுத்தலையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி' வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்படஉள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2015 - 16; 2016 - 17ம் ஆண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச், 31ல் முடிந்தது. இந்த அவகாசத்தில், முன்பை விட, இரண்டு மடங்கு அதிகமான நபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.அத்துடன், 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்று முதல் துவங்கியுள்ளது. ஜூலை, 31 வரை அபராதம் இன்றி, வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.

2019 மார்ச் வரை, அபராதத்துடன் வரி செலுத்த முடியும். இந்த ஆண்டில் வரி செலுத்தாமல், அரசை ஏமாற்றுவோரை கண்டறிய, பல உத்திகளை அதிகாரிகள் செயல்படுத்த உள்ளனர்.வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: வருவாயை காண்பிக்காமல், பல்வேறு வசதிகளை அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து, அவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வர, இந்த ஆண்டு, பல புதிய திட்டங்களை செயல்படுத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், பல ஆயிரம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் பட்டியலை, சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்தபெற்று, அதற்கான வருவாய் ஆதாரம் குறித்து விளக்கம் கோரவுள்ளனர்.

இதுதவிர, வேறு சில திட்டங்களை செயல்படுத்தவும், அதன் வாயிலாக, வரி கட்டாதவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது,கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.