யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/4/18

கணிதத்துக்கு மறுதேர்வு இல்லை : சி.பி.எஸ்.இ., மாணவர்கள் நிம்மதி

பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கு, மறுதேர்வு நடத்தப் போவதில்லை' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.
சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்பட்ட, 10ம் வகுப்பு கணித வினாத்தாளும், பிளஸ் 2 பொருளா தார வினாத்தாளும்,முன் கூட்டியே, 'லீக்' ஆனதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, பிளஸ் 2 பொருளாதார பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. 'டில்லி, மற்றும் ஹரியானா மாநிலங்களில் மட்டும், 10ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

பிரதிபலிப்பு : இதையடுத்து, சி.பி.எஸ்.இ.,க்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., மற்றும் கல்வி அமைச்சக அதிகாரிகள் கூட்டம், நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: வினாத்தாள் வெளியான விவகாரத்தில், போதிய சாட்சியங்கள் கிடைக்கவில்லை. ஒரு, இ - மெயில் புகாரின் அடிப்படையில், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் முடிவு எடுக்க விரும்பவில்லை.மேலும், வினாத்தாள் வெளியானதன் பிரதிபலிப்பு, மாணவர்களின் விடைத் தாள்களில் காணப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் தேர்வு நடத்துவது சரியில்லை. எனவே, 10ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு தேவையில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு முடிவு : இதற்கிடையே, 10ம் வகுப்பு கணித பாடத்தில், 'இன்டர்னல்' எனப்படும், உள்மதிப்பீட்டில் குறைவாகவும், பொதுத் தேர்வில் அதிகமாகவும் மதிப்பெண்பெறும் மாணவர்களின் தேர்வு முடிவு, கவனமுடன் ஆய்வு செய்யப்படவுள்ளதாக, சி.பி.எஸ்.இ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கூட்டுறவுச் சங்க தேர்தல்: ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாசிலாமணி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார்ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 26 -ஆம்தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. முதல் கட்டத் தேர்தல் திங்கள்கிழமை (ஏப்.2) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரின் வேட்புமனுக்களை அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். அப்படியே மனுக்களை வாங்கினாலும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. கூட்டுறவுச் சங்க விதிகளுக்குமுரணாக நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான அசோக்குமார் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, 'திமுகவினரின் வேட்புமனுக்கள் எதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு தேர்தல் அதிகாரிகள் கூறும் காரணங்கள் ஏற்கதக்கதல்ல. தமிழகம் முழுவதும் உள்ள 4,698 கூட்டுறவுச் சங்கங்களில் 92 சதவீத சங்கங்களுக்கு தேர்தல் நடத்தாமல் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்ட 332 சங்கங்களில் 97 சங்கங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இது கூட்டுறவுச் சங்க விதிகளுக்கு முரணாக உள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது சட்ட விரோதமானது' என வாதிட்டார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், 'தேர்தலில் முறைகேடு இருந்தால் சங்கத்தின் பதிவாளரிடம்தான் முறையிட வேண்டும். நேரடியாக வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் எஸ்.பழனிச்சாமியிடம், இந்தத் தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: ஆசிரியர்களுக்கு அரசு புதிய அனுமதி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத் துறை அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்தாம் வகுப்புபொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஒருவருவாய் மாவட்டத்துக்குள் அமைக்கப்பட்ட விடைத்தாள் மதிப்பீடு முகாம்களில், ஆசிரியர்கள் தங்களின் கல்வி மாவட்டத்துக்கு அருகில் உள்ள மற்றொரு கல்வி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தால், விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் பணியமர்த்தப்படலாம்.

அந்தக் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முகாமில் விடைத்தாள் திருத்தும் பணி, குறித்த தேதிக்குள் நிறைவடையாத சூழல் ஏற்பட்டால், மதிப்பீட்டுப் பணி முடிவடைந்த கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி முடிவடையாத முகாமுக்குச் சென்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை குறித்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது .

பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு.

அரசு நீட் நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: நாளை முதல் மீண்டும் தொடக்கம்

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால் 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான இலவச சிறப்பு வகுப்புகள் வியாழக்கிழமை (ஏப்.5) முதல் மீண்டும் நடைபெறவுள்ளன.

மத்திய அரசு நடத்தும் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக இலவசப் பயிற்சி மையங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு தொடங்கியது.
தொடக்கத்தில் 100 மையங்களில் 20,000 மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பயிற்சி, பிப்ரவரி மாத இறுதியில் 70,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஒரு ஊராட்சிக்கு ஒரு மையம் வீதம் மொத்தம் 412 மையங்களில் இந்த மையங்கள் செயல்பட்டுவந்தன.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கியதால் பிப்ரவரி 3-ஆவது வாரம் முதல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பிளஸ் 2 வகுப்பில் கணிதமும், அறிவியலும் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு திங்கள்கிழமையுடன் (ஏப்.2) பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதையடுத்து 412 பயிற்சி மையங்களிலும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஸ்பீடு அகாதெமி நிர்வாகிகள் ஆகியோர் கூறியது:-
நாடு முழுவதும் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் மட்டுமே இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு 8,233 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு 412 மையங்களிலும் ஏப்.5 முதல் ஏப்.20-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக அனைத்து நாள்களிலும் பயிற்சி வழங்கப்படும். ஏப்.20-ஆம் தேதிக்குப் பிறகு, தேர்வு மூலம் 2,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழகம் முழுவதும் 9 இடங்களில் விடுதியுடன் கூடிய இலவசப் பயிற்சி 15 நாள்கள் வழங்கப்படும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கும் வாய்ப்பு: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவர்களும் இதில் பங்கேற்கலாம். அதேபோன்று அரசுப் பள்ளிகளைச்சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் ஏப்.9- ஆம் தேதி பொதுத்தேர்வு முடிந்ததும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்றனர்.

திருச்சி மாவட்டம் - ஏப்ரல் 17 ம் தேதி உள்ளூர் விடுமுறை.

அரசுப்பள்ளியில் நடந்த சூரியன் FM ரேடியோ வின் "அச்சம் தவிர்" விழிப்புணர்வு நிகழ்ச்சி :

"அச்சம் தவிர்"சூரியன் FM ரேடியோ  வழங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (2/4/18  )திங்கள் மதியம் 2.00 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , இடைமலைப்பட்டிபுதூரில் நடைப்பெற்றது ......

ஐந்தில் ஒரு குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைக்கு எதிராக சமுதாய அக்கறையோடு சூரியன் எப்.எம்.நடந்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அச்சம் தவிர் .இது குழந்தைகளுக்கு தொடுதல் பற்றிய சரியான புரிதலையும் தவறான தொடுதலின் போது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் முயற்சி......




குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் போது எவ்வாறு தடுப்பது , தங்களை எவ்வாறு பாதுகாப்பது என்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை அளித்தனர் .பாலியல் கொடுமை பற்றிய விழிப்புணர்வை  குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் ....ஏனென்றால்  இது எந்த வயதிலும் நிகழலாம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புரிந்துகொள்வதோடு அவர்களிடம்  ஏற்படும் மாற்றங்களை  உடனடியாக கண்டறிய வேண்டும்
குழந்தைகள் வெளிப்படையாக பேசும் போது அவர்களை பெற்றோர்கள்  குற்ற உணர்வோடு பார்க்காதீர்கள் .விழிப்பணர்வு நிகழ்ச்சியை அருமையாக நடத்திய  திருமதி ராகிணி (Associate professor in Bishop heber  college)
திரு முத்து மாணிக்கம் (child
Development centre Trichy) மற்றும் சூரியன் Fm ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் பள்ளியின் சார்பில் நன்றி ..... “அச்சம் தவிர் “ விருதினை எம் பள்ளிக்கு வழங்கிய   சூரியன் Fmக்கு நன்றி !





காவிரி போராட்டங்களால் நாளை 'நீட்' பயிற்சி மையங்களை துவக்குவதில் சிக்கல் :

திண்டுக்கல்: காவிரி மேலாண்மை வாரிய போராட்டங்களால் அரசின் 'நீட்' தேர்வு பயிற்சிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மருத்துவ கல்லுாரியில் சேர 'நீட்' தேர்வை வெற்றி பெறுவதை மத்தியரசு கட்டாயமாக்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் நீட் தேர்வு குறித்து தமிழ் வழி மாணவர்களுக்கு சென்னை, ஈரோடு, துாத்துக்குடி (கோவில்பட்டி), திருவள்ளூர் (கும்மிடிப்பூண்டி), கோயம்புத்துார், விருதுநகர், திருச்சி மாவட்டத்தில் இரண்டு மையங்கள் என 9 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. 


ஆங்கில வழி மாணவர்களுக்கு மட்டும் ஈரோட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இங்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்ட மாணவர்களுக்கு திண்டுக்கல் நீட் தேர்வு பயிற்சி மையம் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரியில் செயல்பட உள்ளது.ஏப்., 5 ம் தேதி முதல் மே வரை நீட் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவிரி நதி நீர் பிரச்னைக்காக பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை ஏப்.5ம் தேதி வரை அறிவித்துஉள்ளன. இதனால் மாணவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் ஏப்.5ல் திட்டமிட்டபடி பயிற்சி துவங்குமா என்ற சந்தேகம் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ளது.

தேசிய தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு 10ஆம் இடம் :

பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.

மத்திய அரசு சார்பில், 2016 முதல், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், டில்லியில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், தேசிய அளவில் முதலிடத்தை, பெங்களூரில் உள்ள, இந்திய தேசிய அறிவியல் கல்வி நிறுவனம் பிடித்துள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., இரண்டாம் இடத்தையும், மும்பை, ஐ.ஐ.டி., மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.


தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான, அரசு பல்கலையான, அண்ணா பல்கலை, தேசிய அளவில், 10ம் இடம் பெற்று, சாதித்துள்ளது. கோவை அம்ரிதா பல்கலை, 15; பாரதியார் பல்கலை, 20; வி.ஐ.டி., - 24; சென்னை பல்கலை, 29 மற்றும் திருச்சி, என்.ஐ.டி., நிறுவனம், 31ம் இடத்தையும் பிடித்துள்ளன.

பாரத் கல்வி நிறுவனம், 35; தமிழ்நாடு வேளாண் பல்கலை, 40; காரைக்குடி அழகப்பா பல்கலை, 43; சாஸ்த்ரா கல்வி நிறுவனம், 54; ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 62ம் இடங்களை பெற்றுள்ளன. எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம், 63; கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, 64; சத்யபாமா கல்வி நிறுவனம், 68; சவிதா கல்வி நிறுவனம், 70ம் இடங்களை பெற்றுள்ளன.

சென்னை, எஸ்.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லுாரி, 73; கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்வி நிறுவனம், 75; மதுரை காமராஜர் பல்கலை, 81; தமிழ்நாடு கால்நடை பல்கலை, 92ம் இடங்களை பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலை, 94; மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி, 95 மற்றும் புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, 97ம் இடத்தை பெற்று, முதல், 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தரவரிசை பட்டியல், நேற்று வெளியானது. இதில், இன்ஜி., கல்லுாரிகள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி., மூன்றாவது ஆண்டாக, தொடர்ந்து முதல் இடம் பெற்று சாதித்துள்ளது. அண்ணா பல்கலை, 8; திருச்சி, என்.ஐ.டி., 11; வி.ஐ.டி., 16; பிட்ஸ் பிலானி பல்கலை, 17ம் இடங்களை பெற்றுள்ளன.

 கல்லுாரிகள் பிரிவில், திருச்சி பிஷப் ஹீபர், 3; சென்னை மாநில கல்லுாரி, 5; லயோலா கல்லுாரி, 6; சென்னை, எம்.சி.சி. கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 11; சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லுாரி, 22ம் இடங்களை பெற்றன

* மேலாண்மை, எம்.பி.ஏ., கல்லுாரிகள் பட்டியலில், திருச்சி, என்.ஐ.டி., 15; சென்னை கிரேட் லேக்ஸ் மேலாண் கல்வி நிறுவனம், 16; அண்ணா பல்கலை, 28; வி.ஐ.டி., 29; லயோலா கல்லுாரி, 32ம் இடங்களை பிடித்துள்ளன

* மருந்தியல் பிரிவில், நீலகிரி, ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி, 15; அண்ணாமலை பல்கலை, 20, ராமச்சந்திரா கல்வி நிறுவனம், 21ம் இடங்களை பெற்றுள்ளன

* மருத்துவ கல்வி பிரிவில், வேலுார் கிறிஸ்தவ கல்லுாரி, தேசிய அளவில், 3ம் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி, ஜிப்மர், 6ம் இடம்; சென்னை ராமச்சந்திரா கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 21; எஸ்.ஆர்.எம்., 22ம் இடத்தை பெற்றுள்ளன.

* கட்டடவியல் கல்லுாரிகள் பிரிவில், அண்ணா பல்கலை, 6ம் இடம் பெற்றுள்ளது. வேளாண் பிரிவில், தமிழக கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

11ம் வகுப்பு கணக்குப் பதிவியல் தேர்வு குறித்த கருத்து...

11 ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது ஏற்கனவே மொழி பாடமான தமிழ், ஆங்கிலம் முடிவடைந்த நிலையில் கலைப் பிரிவு மாணவர்களுக்கான முதன்மை பாடமான வணிகவியல் மற்றும்  பொருளாதாரம் ஆகிய தேர்வுகளும் முடிவடைந்தன. இந்நிலையில் நேற்று 3-4-2018 கணக்குப் பதிவியல் தேர்வு நடைப்பெற்றது அதில் 1மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் எளிமையாகவும் நேர மேலாண்மையும் சரியாக இருந்ததாகவும் ஆனால் 2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களில் அதிகமான நடவடிக்கைகள் கேட்கப்ப்ட்டதால்  போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் அணைத்து வினாக்களுக்கும் விடை தெரிந்திருந்தும்   விடையளிக்க நேரம் கிடைக்கவில்லை என்றும் மாணவர்கள் கூறினர். வினா அமைப்பு எளிமையாக இருந்தும் அணைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடியவில்லை என்று  ஆதங்கத்துடன் மாணவர்கள் கூறினர்.

இத்தேர்வு பற்றி மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல்  ஆசிரியர் பலவேச கிருஷ்ணன் கூறுகையில் 11ம் வகுப்பு கலைப் பிரிவு மாணவர்களுக்கு வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆகிய  இரண்டு தேர்வு வினாக்களுமே மிகவும் எளிமையாக இருந்தது. கணக்குப் பதிவியல் பாடத்தை பொருத்த வகையில் மாணவர்கள் முன்கூட்டியே நேர மேலாண்மை பற்றி திட்டமிட்டிருந்தால் மாணவர்கள் எளிதாக அணைத்து வினாக்களுக்கும் விடையளித்திருக்கலாம்  என கூறினார்

அனைத்து ஆசிரியர்களும் பணி முடிவடையாத முகாமுக்குச் சென்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை குறித்த தேதிக்குள் முடிக்க வேண்டும்:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத் துறை அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஒரு வருவாய் மாவட்டத்துக்குள் அமைக்கப்பட்ட விடைத்தாள் மதிப்பீடு முகாம்களில், ஆசிரியர்கள் தங்களின் கல்வி மாவட்டத்துக்கு அருகில் உள்ள மற்றொரு கல்வி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தால், விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் பணியமர்த்தப்படலாம்.
அந்தக் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முகாமில் விடைத்தாள் திருத்தும் பணி, குறித்த தேதிக்குள் நிறைவடையாத சூழல் ஏற்பட்டால், மதிப்பீட்டுப் பணி முடிவடைந்த கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி முடிவடையாத முகாமுக்குச் சென்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை குறித்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது .

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன வழி? ஆலோசனை சொல்கிறது அரசு:

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
* வெயில் காலத்தில், அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படலாம்
* பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் காலை, 10:00 மணி முதல், 3:00 மணி வரை, வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்
* தாகம் இல்லை என்றாலும், சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேற, தினமும், 2.5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
* அதிகளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், பனைநுங்கு, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பு சர்க்கரை கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து அதிக உள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற பழச்சாறும் சாப்பிடலாம்
* வெளியே செல்லும் போது, குடிநீர் மற்றும் குடை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை எளிதாக வெளியேற, மிருதுவான தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது, தலையில் பருத்தி துணி, துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்
* ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் அணிவதால், படர்தாமரை போன்ற சரும நோய்கள் ஏற்படும். அப்போது, ஸ்டீராய்டு கலந்த களிம்புகளை தடவக்கூடாது; சுய வைத்தியமும் செய்யக்கூடாது. தோல்டாக்டர்கரை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும்
* சூரிய ஒளி நேரடியாக படும், ஜன்னல் மற்றும் கதவு போன்றவற்றை திரைச்சீலைகளால் மூடி வைக்கவும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வரும் வகையில், ஜன்னல்களை திறந்து வைக்கலாம். காலை, மாலை இருவேளையும் குளிர்ந்த நீரால் குளிப்பது நல்லது
* வெயிலால் களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், வெப்பம் அதிகமுள்ள இடத்திலிருந்து, வெப்பம் குறைவான இடத்திற்கு செல்ல வேண்டும். தண்ணீர், எலுமிச்சை பழச்சாறு, உப்பு சர்க்கரை கரைசல் பருக வேண்டும்
* மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால் மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அருகில் உள்ள நபரை உதவிக்கு அழைக்கவும்
* மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். கூடுதல் உதவிக்கு, 104; 044 - 2435 0496; 2433 4811; 94443 40496; 93614 82899 என்ற, எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

கூட்டுறவுச் சங்க தேர்தல்: ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாசிலாமணி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 26 -ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. முதல் கட்டத் தேர்தல் திங்கள்கிழமை (ஏப்.2) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரின் வேட்புமனுக்களை அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். அப்படியே மனுக்களை வாங்கினாலும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. 
கூட்டுறவுச் சங்க விதிகளுக்கு முரணாக நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர். 
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான அசோக்குமார் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, 'திமுகவினரின் வேட்பு மனுக்கள் எதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு தேர்தல் அதிகாரிகள் கூறும் காரணங்கள் ஏற்கதக்கதல்ல. தமிழகம் முழுவதும் உள்ள 4,698 கூட்டுறவுச் சங்கங்களில் 92 சதவீத சங்கங்களுக்கு தேர்தல் நடத்தாமல் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்ட 332 சங்கங்களில் 97 சங்கங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இது கூட்டுறவுச் சங்க விதிகளுக்கு முரணாக உள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது சட்ட விரோதமானது' என வாதிட்டார். 
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், 'தேர்தலில் முறைகேடு இருந்தால் சங்கத்தின் பதிவாளரிடம்தான் முறையிட வேண்டும். நேரடியாக வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் எஸ்.பழனிச்சாமியிடம், இந்தத் தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் - செங்கோட்டையன்:

பகுதி நேர ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஸ்டெம் அகாடமி இணைந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கை இன்று நடத்தியது.

இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய பாடத்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் 3 ஆண்டுகளுக்குள் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்த நிலையில் 2 ஆண்டுகளில் கொண்டு வரப்படும். மேலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு சீருடை மாற்றப்படும் என்றார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதி நேரஆசிரியர் இடமாறுதலுக்கான கலந்தாய்வு இந்தாண்டு நடத்தப்படும். முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றார்.

அரசுப்பள்ளியில் படிப்பது பெருமையாக உள்ளது"- வைரலாகும் அரசுப்பள்ளி மாணவனின் பேச்சு

நான் சுமார் நான்கு மாதத்திற்கு முன் பஸ் அடிக்கடி வராத சாலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருக்கும் சமயம் 8ஆம் வகுப்பு அரசுப்பள்ளி சீருடை அணிந்தமணவன் ஒருவன் லிப்ட் கேட்டான். நான் போகும் வழியிலே 10 கிமீ அவனது வீடும் இருந்ததால் அவனை ஏற்றிக்கொண்டு அவனிடம் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் (எனக்கு தெரிந்தவரை) பற்றி விசாரித்தேன். ஆனால் அவன் அவரைப்பற்றி எனக்கு தெரியாது, இப்போது வேறு ஒருவர் இருக்கிறார் என்றான்.

உடன் நான் சென்ற வருடம்வரை அவர்தானே இருந்தார் 8ம் வகுப்பு படிக்கும் உனக்கு எப்படி அவர் தெரியாமல் இருக்கும் எனக்கேட்டேன்..??

அதற்கு அனது பதில்தான் என்னை இந்த பதிவையே தொகுக்க வைத்தது...!

*இனி ஆங்கிலமும் தமிழும் கலந்த பதில் அவனது வார்த்தையிலே:*

Sir, நான் last year வரைக்கும் ******** Schoolல (சுமாராக பீஸ் வாங்கும் தனியார் பள்ளி) தான் படிச்சேன். என் Father ஒரு Private companyல contract labour ஆ Work செஞ்சிட்டு இருந்தாரு, அப்போ எங்க Fatherக்கு Salary ஜாஸ்தியா இருந்துச்சி. ஆன இப்ப BHELல order குறைஞ்சி போய் அவங்க Companyக்கும் Contract சரியா கிடைக்கல. எங்க அப்பாவுக்கும் Income கொறஞ்சிபோச்சி. அதுனால அந்த அளவு Fees கட்டமுடியாம, அந்த Scoolல Continue பண்ணமுடியல..!

*அதுனால நான் இப்ப அதுக்கு பக்கத்து Government schoolல English medium படிச்சிட்டு இருக்கேண்ணே."*

அதற்குள் நான் இடைமறித்து,  'என்னப்பா சொல்லுற நீ...!! ஏற்கனவே நீ படிச்ச உங்க ஸ்கூல்ல படிக்கும் பசங்க,  நீ இப்ப படிக்கும்  ஸ்கூலப்பத்தியும் அங்க படிக்கும் பசங்களைப்பத்தியும் கேவலமா பாப்பீங்களே என்று எனக்கு தெரிந்த  நிலவரத்தை கேட்டேன்..!

அதற்கான அவனது பதில்:

"அட போங்க Sir, அங்க இருந்த வரைக்கும் நானும் அப்படித்தான் Feel பண்ணேன், ஆனா *இங்க வந்ததுக்கப்புறம் எவ்வளவு Jollyயா இருக்கேன்னு* தெரியுமா Sir...??.

*இங்க படிக்கிற Maximum students எங்கள மாதிரி Average family தான். எல்லாரும் எவ்வளவு நல்லா பழகறாங்க. பழைய School ல பசங்க என்னையெல்லாம் ரொம்ப இளக்காரமா பாப்பாங்க,  எங்கள மாதிரி Poor family students ஐ எதுலயும் சேத்துக்க மாட்டாங்க...!*

இங்க பெரும்பாலும் என்னை மாதிரி Students படிக்கறதால எந்த Difference ம் இல்லாம confident ஆ இருக்கோம் Sir.

அதுமட்டும் இல்ல sir, நா, அங்க இருக்குற வரைக்கும் Average student தான் சார். Class ல Fifty students இருந்தோம், நான் Thirty rankக்கு மேல தான் எடுப்பேன். Tution ல சேந்து படிக்க சொல்லுவாங்க. Fees கட்டவே எங்க Father ரொம்ப கஷ்டப்படுறாரு...!!

*அங்க Class teacher, other subject எடுக்குறவங்க High level englishல தான் Class எடுப்பாங்க. பாதிக்கு மேல Understand ஆகாது. அவங்கல்லாம் எங்களைப்போல Average students ஐ கண்டுக்கவே மாட்டாங்க, எப்ப பாத்தாலும் English புரியாத நீங்கள்ளாம் ஏந்தான் இந்த Schoolக்கு வந்து எங்க உசுர வாங்குறீங்கன்னு  மட்டம் தட்டகிட்டே இருப்பாங்க.*

ஆனா இந்த School எல்லா Teachersம் எவ்வளவு Care எடுத்து Average students க்கும் புரியர மாதிரி Superஆ Class எடுக்குறாங்க தெரியுமா....??

அங்க இருந்த வரை எனக்கெல்லாம் Confidence ஏ இல்ல Sir. ஆனா இப்பல்லாம் இவங்க Care எடுக்கறதால நல்லா படிக்கிறேன்..! Startingல இருந்த பயம் போய் இப்பல்லாம் நல்லா படிக்கிறேன் Sir...!!

*இப்பல்லாம் Fifth rank குள்ள எடுக்குறேன். நல்லா புரிஞ்சி படிக்கறதால 10th standard க்குள்ல At least school firstஆவது வந்துடுவேன் Sir...!! Definitely வந்துடுவேன் Sir, இப்பல்லாம் எனக்கு அந்த Hope நெறயவே இருக்குது...!!!*


*Government scool Teachers பத்தி யாருக்கும் Proper ஆ தெரிய மாட்டேங்குது..!!இவங்கல்லாம் Full effort ஓட எல்லாத்துக்கும் எவ்வளவு நல்லா சொல்லி குடுக்குறாங்க தெரியுமா...???*

நான் கூட பழைய Friends கிட்ட சொல்றேன். பேசாம இந்த Schoolக்கு வந்துருங்கடா. இங்க எந்த குறையும் இல்ல, இங்க படிக்கிறது நமக்கு கேவலமும் இல்ல, நீங்களும் என்ன மாதிரியே நல்லா வந்துருவீங்கன்னு...!!!
But அவங்க Parents க்கு அது புரியமாட்டேங்குது.

*ஏன் Sir இந்த Parents இப்படி இருக்காங்க...?? Hard work பண்ணுண காசையும் செலவழிச்சி... அந்த School ல பசங்கலுக்கு Studies ம் சரியில்லைங்க...!!!*

*எங்களப்பாருங்க எங்க Father ரோட Income Sufficient ஆ இல்லாட்டியும் என்னோட Education  செலவு ரொம்ப கொறஞ்சி போனதால இப்பல்லாம் ரொம்ப Happy யாத்தான் இருக்கோம் "*

சரிண்ணே, நான் இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சி. Okண்ணே.. ரொம்ப Thanksண்ணேன்னு சொல்லீட்டு.....

வண்டியை விட்டு இறங்கி புத்தக பைய தூக்கி தோள்ல போட்டுட்டு டாடா காமிச்சிட்டே நடந்து கிராமத்து குறுகலான சந்தில் மறைந்து போய் விட்டான்...!!!

*இன்று நாடே பேசிக்கொண்டிருக்கும் அரசுப்பள்ளிகளின் பெருமைகளையும் காசுமட்டுமே குறிக்கோளான தனியார் பள்ளிகளின்  அவலமான தரத்தையும் சிறுவன் ஒருவன் நெற்றிப்பொட்டில் அடித்தால் போல சொல்லிவிட்டு சிட்டாய் பறந்து விட்டான்...!!*

வாழ்க்கையில் இழந்ததை எண்ணி எந்தவித கவலையுமின்றி.... கிடைத்ததைக்கொண்டு வருத்தமேதுமில்லாமல்..... எளிமையாகவும்,  நிறைவாகவும் எதிர்கால லட்சியத்துடனும் வாழும் இவர்களிடமிருந்து நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று எண்ணியவாறு, நான் சிறிது நேரம் அங்கேயே சுயநினைவின்றி நின்று கொண்டிருந்தேன்...!!!
-நன்றி-யாரோ

ஆசிரியர் வேலைக்காக காத்திருப்பவரா நீங்கள்..? 3,030 காலியிடங்களுக்கான அறிவிப்பு!

அண்மையில் ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மறுதேர்வு, கல்லூரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3,030 காலி பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட்டுள்ளது.

1 பணி: வேளாண்மை பயிற்றுவிப்போர்
காலியிடங்கள்: 25
அறிவுப்பு வெளியாகும் தேதி: வரும் ஏப்ரல் முதல் வாரத்தில்.
எழுத்து தேர்வு: ஜூலை 14-ஆம் தேதி.
தேர்வு முடிவு: ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும்.

2. பணி: பாலிடெக்னிக் விரிவுரையாளர்.
காலியிடங்கள்: 1,065.
மறு தேர்வு: ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்வு முடிவு: செப்டம்பரில் வெளியிடப்படும்.
தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி: வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.

3. பணி: உதவி பேராசிரியர்
காலியிடங்கள்: 1,883
தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி: மே முதல் வாரத்தில் அறிவிப்பு.
சான்றிதழ் சரிபார்ப்பு: ஜூன் 2-வது வாரத்தில்.
முடிவு: ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்.

4. பணி: உதவி தொடக்க கல்வி அதிகாரி
காலியிடங்கள்: 57
தேர்வுக்கான அறிவுப்பு: ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்.
எழுத்துத் தேர்வு: செப்டம்பர் 15-ஆம் தேதி தேர்வு நடக்கிறது.
தேர்வு முடிவு: அக்டோபரில் வெளியாகும்.

5. பணி: ஆசிரியர் தகுதி தேர்வு
தேர்வுக்கான அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
முதல் தாள் தேர்வு: அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கானது.
இரண்டாம் தாள் தேர்வு: அக்டோபர் 7-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த தேர்வு இளங்கலை, முதுகலை படிப்புகளுடன், B.Ed., முடித்தவர்களுக்கானது.
தேர்வு முடிவுகள்: முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான முடிவு நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு தொடர்பான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Madurai Kamaraj University (DDE). B.Ed Spot Admission - 2018 -2020​- No Entrance Examination

DSE PROC - 10,11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு "தொடுவானம்" சிறப்பு பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்

காவிரி நதிநீர் கிடைத்த வரலாறு!!!

4/4/18

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு :

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு சென்னை: இளநிலை பட்டம் முடித்தவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.டெக் போன்ற, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில், 'டான்செட்' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே, 19, 20ல், நுழைவு தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. 23க்குள், விண்ணப்பிக்கலாம்.