யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/7/18

1,6,9,11 வகுப்பு பாடப்புத்தகங்கள் எளிமையா உள்ளனவா? என ஆய்வுக்கூட்டம்

குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக பாடநூல் ஆய்வுக்கூட்டம் சனியன்று நடந்தது. இக்கூட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர். 1,6,9,11 ஆம் வகுப்புப் பாடநூல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டாலும் நேரம் போதாமை காரணமாக முதல் வகுப்பு நூல்களுக்கானவை மட்டும் முன் வைத்து பேசப்பட்டது. பிற நூல்களுக்கு மீண்டும் விரைவில் கூடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு பாடநூல்களில் உள்ள நிறை குறைகளை ஆசிரியர்கள் பட்டியலிட தொகுத்திருக்கிறோம். தொகுத்தவற்றை மீண்டும் சரிபார்த்து உறுதிப்படுத்தியபின் பரிந்துரைகளை விரைவில் பதிவிடுகிறோம். அரசுக்கும் அளிக்கிறோம். பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தது மட்டுமல்லாமல் வெகு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் பங்கேற்றது பெருமகிழ்வைத் தந்தது. பேராசிரியர்களின் ஆதரவு போற்றத்தக்கது.

எம்.பி.பி.எஸ்.: அரசு கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள்:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை 1,329 மாணவர்களுக்கு: தமிழகத்தில் மொத்தம் 2,447 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன; இவற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில் 1,329 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 1,118 எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அனைத்துப் பிரிவினருக்கு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.
1,118 காலியிடங்கள்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 828 பேர் அழைக்கப்பட்டு, 813 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 719 இடங்கள் நிரம்பின. சென்னையில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பின. மூன்று நாள்கள் கலந்தாய்வின் முடிவில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் உள்ளன. இதுதவிர, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 29 இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், தனியார் கல்லூரிகளில் 59 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 808 இடங்கள் நிரம்பின.
4 இடங்கள்: பொதுப் பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு: தரவரிசைப் பட்டியலில் 1,418 -இலிருந்து 2,380 வரையிலான 963 அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு புதன்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.

தகுதித்தேர்வில் விலக்கு கிடைக்குமா : காத்திருக்கும் 5,500 ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் 5,500 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில்
நிரந்தர பணி இல்லாத பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 5,500 பேர் உள்ளனர். மத்திய இடைநிலை கல்வி வாரிய உத்தரவின்படி, பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.ஆனால், மாநிலங்கள் தமது கொள்கைக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நாட்களை தேர்வு செய்து, அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதன்படி கேரள அரசு, 2012 மார்ச் 31க்கு முன் பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடகா 2012 ஜூலை 28-வரை விலக்கு அளித்துள்ளது.அதுபோல் தமிழகத்தில் முன் தேதியிட்டு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன், துறை செயலாளரிடம் 5,500 ஆசிரியர்கள் மனு அளித்தனர். சென்னையில் நடந்த ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் இதனை வலியுறுத்தினர்.
ஆனால் இதுவரை அதற்கான உத்தரவு வராததால் 5,500 ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதி மறுகூட்டல், மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்குப் பின் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. 
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் புதன்கிழமை (ஜூலை 4) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டி.எல்.எட்., தேர்வு தேர்ச்சி: ஆசிரியைகளுக்கு சிக்கல்

தேசிய அளவில் தனியார் பள்ளிகளில் பி.எட்., தகுதி இல்லாத ஆசிரியர் மத்திய அரசின் தேசிய திறந்த வெளி கல்வி நிறுவனத்தின் (தி நேஷனல் ஓபன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூலிங் – என்.ஐ.ஓ.எஸ்.,) டி.எல்.எட்., (ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு) கல்வி தகுதி பெற வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டது.

டி.எல்.எட்., தகுதியை 2019க்குள் பெற வேண்டும் என்ற நிபந்தனையால் உடல் ரீதியான மற்றும் மகப்பேறு காலங்கள் போன்ற காரணங்களால் ஆசிரியைகள் பலர் இத்தகுதி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை 80 ஆயிரம் காலி இடங்கள்

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கையில், சிவில் பிரிவில், 13 ஆயிரத்து 874 இடங்கள் உட்பட, மொத்தம், 80 ஆயிரம் காலியிடங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்காக கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியில், கடந்த 30ல் துவங்கியது. பொதுப்பிரிவான சிவிலுக்கு நடந்து முடிந்துள்ளது. தற்போது மெக்கானிக்கல் பிரிவுக்கு நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள, 500 இன்ஜி., கல்லுாரிகளிலிருந்து, 20 சதவீத அடிப்படையில் சிவிலுக்கு, 15721 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2150 பேர் விண்ணப்பித்ததில், 1847 பேர் மட்டுமே பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்றனர். 13 ஆயிரத்து 874 இடங்கள் காலியாக உள்ளன.மெக்கானிக்கலை பொருத்தவரை, 21 ஆயிரத்து 670 இடங்களுக்கு, 4800 பேர் விண்ணப்பித்துள்ளனர். எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு, 50 ஆயிரத்து 989 இடங்களுக்கு, 4050 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 
நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட, 90 ஆயிரம் இடங்களில், 10 ஆயிரம் இடங்களே நிரம்பும் நிலை இருப்பதால், 80 ஆயிரம்காலி இடங்களுடன் கல்லுாரிகள் செயல்படும் நிலை உள்ளது.

4/7/18

சிறுபான்மையினர் பகுதிகளில் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்

சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு, சில பரிந்துரைகளை அளித்துள்ளது; அதன் விபரம்:சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர், பாகுபாடு மற்றும் பாலியல் சீண்டல்கள் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சிறுபான்மையினர் அதிகம் நிறைந்த பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்.இதன் மூலம், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் கல்வியறிவு பெறுவர். முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதிகளில், உருது நடுநிலைப் பள்ளிகள் துவங்க வேண்டும். அங்கு, தாய்மொழியாக உருது இருக்க வேண்டும்.இவ்வாறு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 விடைத்தாளில் கூட்டல் பிழை : ஆசிரியர்கள் உட்பட, 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்'

பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் ஏற்படுத்திய, ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர் கள், 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பின், தேர்வு முடிவுகள், மே, 16ல் வெளியாகின. இந்தத் தேர்வை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய, சலுகை வழங்கப்பட்டது.இந்த சலுகையை பயன்படுத்தி, 2,500க்கும் மேற்பட்டவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் மறுமதிப்பீடு முடிவுகள், இரு வாரங்களுக்கு முன் வெளியாகின. அதில், 1,000 மாணவர்களின் விடைத்தாளில், கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால், மதிப்பெண் மாறியது.இந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை ஆய்வு செய்து, அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய தலைமை அதிகாரிகள், துறை அலுவலர்கள் யார் யார் என, பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஆசிரியர்கள் உள்ளிட்ட, 1,000 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.விளக்கத்துக்கு சரியான பதில் அளிப்பவர்களை தவிர, மற்றவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தேர்வுத்துறையில் இருந்து ஆசிரியர்களின் பட்டியல், பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். 

எந்த தரவரிசைக்கு எந்த இன்ஜி., கல்லூரி? : 3 ஆண்டு விபரம் வெளியிட்டது பல்கலை

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எந்த தரவரிசைக்கு, எந்த கல்லுாரி கிடைக்கும் என்ற புதிய தகவலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதில், மூன்றாண்டு தரவரிசை எண்கள் இடம் பெற்றுள்ளன. 
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.04 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூன், 28ல் வெளியானது. ஜூலை, 10க்கு பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இந்நிலையில், தரவரிசையில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு, எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தை போக்கும் வகையில், அண்ணா பல்கலையில் இருந்து, புதிய வழிகாட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான, https://tnea.ac.in என்ற இணையதளத்தில், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.ஒவ்வொரு கல்லுாரியிலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், எந்த தரவரிசை எண் வரையிலான மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு கிடைத்தது. இன வாரியாக எவ்வளவு, 'கட் ஆப்' மதிப்பெண் தேவை, 2015 முதல், 2017 வரை, இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள், கல்லுாரி வாரியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொண்டால், கல்லுாரிகளை எளிதில் தேர்வு செய்ய முடியும். 

கால்நடை மருத்துவ படிப்பு : இன்று தரவரிசை பட்டியல்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு, உணவு தொழில்நுட்பம் போன்ற
படிப்புகளில், 360 இடங்கள் உள்ளன. அதேபோல, கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் போன்ற, பி.டெக்., படிப்புகளுக்கு, 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 12 ஆயிரத்து, 217 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியலை, சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இன்று காலை, வெளியிடப்படுகிறது. தமிழக கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர், பாலச்சந்திரன் வெளியிட உள்ளார்.

நீட் தேர்வு: வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஎஸ்இ.,க்கு நீதிபதிகள்  கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவை

* நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது? 

* நீட் வினாத்தாள் எதன் அடிப்படையில், தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.

* தமிழ் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட ஆங்கில வார்த்தையை, தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் போது, என்ன வார்த்தை என்று மாணவர்களுக்கு கற்று கொடுக்கபட்டுள்ளதா?

* கல்வி என்பது அனைவருக்கு சமமாக இருக்க வேண்டும்.

* சிபிஎஸ்இ-க்கு இணையாக, தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு படம் கற்பிக்கப்படுகிறதா?

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி, வழக்கின் விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

*IT returns தொடர்பான விளக்கங்கள்

நமதுநண்பர்கள் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.

அவைகள் குறித்து நமது நண்பர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் அவர்களிடம் கேட்கப்பட்டது அவர் தெரிவித்தவை:

✍🏻மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம் சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும்.

✍🏻 *அந்த ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தனிநபர் வருமான வரி தாக்கல் (IT return E-FILING) செய்ய வேண்டும்*.

✍🏻 ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

✍🏻 தற்போது வருமான வரி வரம்புக்குள் வராதவராக (Nil Tax) இருந்தாலும் ஆண்டு வருமானம் *2.5லட்சத்தை தாண்டினால்* கட்டாயம் வருமான வரி தாக்கல் (Nil Tax return E-filing) செய்ய வேண்டும்.

✍🏻 சம்பளம் வழங்கும் அலுவலர் E-TDS(24-Q) தாக்கல் செய்து அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் IT Return தாக்கல் செய்யாதபட்சதில் கட்டாயம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புதல் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த ஆண்டு முதல் கடுமையாக மேற்கொள்ளும்.

✍🏻 *அடுத்ததாக ஒரு வதந்தி, பலர் 5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார்கள் அது குறித்தும் கேட்கப்பட்டது*

✍🏻 5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் கட்டாயம் onlineலும் 5லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடையவர்கள் online லோ அல்லது வருமான வரி அலுவலகத்தில் offline லோ தாக்கல் செய்யலாம் என்பதை சிலர் தவறாக புரிந்துகொண்டு 5லட்சத்து குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கின்றனர்.

மேலும் ஒருசில ஊழியர்கள்

✍🏻 *சம்பளம் தவிர*
Fixed Deposits,
Shares,
Mutual Fund
உள்ளிட்ட *பிற முதலீடுகள்* ஏதேனும் செய்திருப்பின் அதன் மூலம் பெற்படும் *வட்டி, டிவிடென்ட்* போன்ற *ஆதாயத் தொகையும்* *26as படிவத்தில் update ஆகும்*.

✍🏻 அந்த ஆதாயத் தொகைக்கான வரியையும் நாம் *தனியாக செலுத்த வேண்டும்* அல்லது அதற்கு வரிகள் ஏதேனும் பிடிக்கப்பட்டிருந்தால் E-filing செய்யும்போது கணக்கு காட்டி அதிகமாக பிடித்தம் செய்தியிருப்பின் அந்த தொகையை திரும்ப பெறுதல் (refund),
குறைவாக பிடித்தம் செய்திருப்பின் மீதி வரியை செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

*வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31*

*கடைசி நேர இணையதள பிரச்சனைகளில் சிக்கி தவிப்பதற்கு பதிலாக இப்போதே செய்து விடுவது நல்லது.*

3/7/18

இன்று கிடைத்த ஒரு தகவல் பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றியது.


   30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.
   உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=
22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=
18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.
முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு.
    30ஆண்டுகளுக்கு  மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்
    அதாவது(30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் பேசிக் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய பேசிக் 20000ரூபாயாக ஆகிவிடும்.இப்போது இவர் கமுட்டேஷன் வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.
    பேசிக்கில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும்.பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.
  ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 20000ரூபாய்.இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 ,இதை
6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040(எட்டு லட்சத்து நாற்பது)ரூபாய் கமுட்டேஷன் கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள்.இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும்.(அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டுஇதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும்.பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.
   (பென்ஷன் வாங்குபவர் இறந்துதுவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)
  30 ஆண்டு முடித்த 40000ரூபாய் பேசிக்கும் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம்.இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.
   இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.
   ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும்.இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33.இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 
5333×120=639960ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும்.கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்
18100-5333=12767கிடைக்கும்.(18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)
    நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
   பணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 7%DA வழங்கப்படுகிறது.இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.
   40000க்கு 5000 DA என்றால் 12.5%DA வரும். இந்தளவுக்குத் தற்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இதையும் தாண்டும்.ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும்.
நன்றி


இது CPS ல் உள்ளவர்களுக்கு  பொருந்தாது

பொது பிரிவு மருத்துவ கவுன்சில் இன்று துவக்கம் : சிறப்பு பிரிவில், 40 பேருக்கு இடம் கிடைத்தது

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், 40 பேர் இடங்கள் பெற்றனர். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 5,757 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலில், 44 ஆயிரத்து, 332 பேர் தகுதி பெற்று உள்ளனர். மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல் நோக்கு மருத்துவமனை யில், நேற்று துவங்கியது.இதில், சிறப்பு பிரிவினர் எனப்படும், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என, 101 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 63 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.இது குறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 38 பேர்; பி.டி.எஸ்., படிப்பில், இரண்டு பேர் என, 40 பேருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டன.மாற்றுத் திறனாளிகள் தரவரிசை பட்டியலில் இடம் பெறாதவர்களும், கவுன்சிலிங் வளாகத்திற்கு நேற்று வந்திருந்தனர். அவர்களில், ஏற்க தகுதி வாய்ந்தவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.சிறப்பு பிரிவினர் பிரிவில், எட்டு பேர் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று நடைபெறுகிறது. இதில், தரவரிசை பட்டியலில், 444வது இடம் வரை உள்ளோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

1,6,9,11 ம் வகுப்புகளுக்கு QR CODE ல் அனைத்து வீடியோக்களையும் உள்ளடக்கிய தொகுப்பு. Q.R. Code Video Special

இந்த கல்வியாண்டில் புதிதாக வழங்கப்பட்டு உள்ள பாடப் புத்தகத்தில் உள்ள QR Code வீடியோக்கள் அனைத்து பாடத்திற்கும் YouTube தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. தேவையானவர்கள் பார்த்து பயன்பெறவும்.


நீங்கள் பதினோராம் வகுப்பு தமிழ் போதிக்கும் ஆசிரியரா? கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையான அனைத்து தமிழ் பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சிகள் (66 கானொளி) பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்
+1 தமிழ் Q.R Code Videos: Click here to download
பதினோராம் வகுப்பு விலங்கியல் முதல் தொகுதி பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து காணொளி காட்சிகள் (24 கானொளி) பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்
+1 விலங்கியல் Q.R.Code Videos: Click here to download
பதினோராம் வகுப்பு வரலாறு முதல் தொகுதி பாடப்புத்தகத்தில் உள்ள முதல் படத்திற்கான காணொளி காட்சிகள் பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்
+1 History QR Code Video: Click here to download
முதல் வகுப்பிற்கான Tamil Subject QR Code காணொளி காட்சிகள் (31 Videos) இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 Std Tamil QR Code videos : Click here to download
முதல் வகுப்பிற்கான English Subject QR Code காணொளி காட்சிகள் (15 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 Std English QR Code videos :Click here to download
முதல் வகுப்பிற்கான சூழ்நிலையியல் (EVS) Subject QR Code காணொளி காட்சிகள் (10 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
First STD EVS: Click here to download
முதல் வகுப்பிற்கான Maths Subject QR Code காணொளி காட்சிகள் (10 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
FIRST STD MATHS FIRST TERM: Click here to download
ஆறாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
6 Std Tamil QR Code videos :Click here to download
ஆறாம் வகுப்பு முதல் பருவம் அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது
6 Std Science QR Code videos :Click here to download
ஆறாம் வகுப்பு முதல் பருவம் சமூக அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
6 Std S0cial Science QR Code videos :Click here to download
ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
9 Std Tamil QR Code videos :Click here to download
ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது
9 Std Science QR Code videos : Click here to download
அறிவியல் பாடம் போதிக்கும் ஆசிரியர்களுக்காக உயர் நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு தேவையான 500க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில காணொளி காட்சி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

FLASH NEW : – 8 CEO’S TRANSFERRED – G.O 121 – ORDERS ISSUED



மாநில பாடத்திட்டத்தில் +2 படித்தவர்களுக்கு 70% எம்.பி.பி.எஸ். இடம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

மாநில பாடத்திட்டத்தில் +2 படித்தவர்களுக்கு 70% எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.


  சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவர்களுக்கு 30% எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். பொதுப்பிரிவினருக்கு நடக்கும் கலந்தாய்வின் முதல்நாளான இன்று 598 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

SCERT-புதிய பாடத்திட்டம்-புதிய பாடநூல்கள்-பாடக்கருத்துகளை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனை சார்பு

தொழில் பாடப் பிரிவை தவிர்க்கும் அரசுப் பள்ளிகள்

உடனடி PAN NUMBER திட்டம்!

புதிதாக பான் கார்டு பெற விரும்பும் தனி
நபர்களுக்கு, ஆதார் எண் அடிப்படையில், இணையம் வாயிலாக, உடனடியாக பான் எண் ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை, வருமான வரித்துறை துவக்கி உள்ளது. வருமான வரித்துறை, சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு விபரம்

ஆதார் எண் வைத்துள்ள, தகுதி உள்ள தனி நபர்களுக்கு, இணையம் வாயிலாக, உடனடியாக, 'இ - பான்' எண் ஒதுக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில், குறுகிய காலத்துக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது