யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/7/18

Primary  teacher  training
I'st  batch- 13.07.2018 & 14.07.2018.
2'nd batch - 16.07.2018 & 17.07.2018.
3'rd batch - 18.07.2018 &19.07.2018.
4'th batch -20.07.2018 &21.07.2018.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தின் முக்கிய அம்சங்கள்



லோக் ஆயுக்தா என்றால் என்ன?

பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு.

எத்தனை உறுப்பினர்கள்?
ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நான்கில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 

உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
முதலமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர்கள் ஆளுநரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.

யார் லோகாயுக்தா தலைவர்/உறுப்பினர் ஆக முடியும்?

பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி 
(அல்லது) ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
(அல்லது) ஊழல் தடுப்பு/பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர்

வேறு ஏதாவது வரையறைகள் உண்டா?
எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்க கூடாது
நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடாது
அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவராக இருக்க கூடாது
வேறு எந்த ஆதாய பதவிகளையும் (Office of Profit) வகிக்கக் கூடாது
45 வயதிற்கு குறைவாகவோ 70 வயதிற்கு மேலோ இருக்க கூடாது

உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள்.

லோக் ஆயுக்தா அமைப்பில் வேறு யாரேல்லாம் இருப்பார்கள்?
லோக் ஆயுக்தா செயலாளர் மற்றும் விசாரணை இயக்குனர் : அரசு கொடுக்கும் அதிகாரிகள் பட்டியலிலிருந்து லோக் ஆயுக்தா தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவர்கள் தவிர, இந்த அமைப்பு தடையின்றி செயல்படுவதற்கு தேவையான அலுவர்களை மாநில அரசு கொடுக்க வேண்டும்

லோக் ஆயுக்தா யாரையெல்லாம் விசாரிக்கலாம்?
இன்னாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்
இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்
இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
மாநில அரசு ஊழியர்கள்
அரசால் நிர்வகிக்கப்படும் அல்லது அரசின் நிதி பெறும் அமைப்புகள் / வாரியங்கள் / சங்கங்கள் / தன்னாட்சி அமைப்புகள்
இவர்கள் தவிர, பொது ஊழியர்களை ஊழல் செய்ய தூண்டும் அல்லது துணை போகும் எந்த நபரையும் விசாரிக்கலாம்.

வேறு என்னென்ன அதிகாரங்கள் உண்டு?

எந்த விசாரணையும் தொடங்கும் முன் யாரிடமும் முன் அனுமதி பெற தேவையில்லை
விசாரணையின் தேவைக்கேற்ப மாநில அரசின் எந்த அலுவலரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்
யாரை வேண்டுமானாலும் நேரில் வரவழைத்து விசாரிக்கலாம்
எந்த ஆவணத்தையும் கொடுக்கும்படி அரசிடம் கோரலாம்

எதையெல்லாம் விசாரிக்கக் கூடாது?

இந்திய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள்
பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வு
வழங்கப்படும் வெகுமதிகள் மற்றும் பரிசுகள்
உள்ளாட்சி நிதி தணிக்கையாளரின் கீழ் வரும் நபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
லோக் ஆயுக்தா அனுமதியுடன் பொது விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட விஷயங்கள்
லோக் ஆயுக்தா அமைவதற்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணைகள்
துன்புறுத்தல் அல்லது தேவையற்ற கால தாமதத்தை தவிர, வேறு எந்த காரணத்திற்கும் அரசு ஏற்படுத்திக்கொள்ளும் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது.
தானாக முன்வந்து (suo motu) புகார்களை பதிவு செய்ய முடியுமா? 
சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

வரும் புகார்களை எப்படி விசாரிப்பார்கள்?

புகார்களை விசாரணை செய்ய லோக் ஆயுக்தாவிற்கு தனி விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அது செயல்பாட்டிற்கு வரும் வரை மாநில அரசே விசாரணையில் உதவும். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை இந்த விசாரணைப்பிரிவு புலனாய்வு செய்யும். அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்படும். 

விசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய முடியுமா?

அப்படி ஒரு தேவை எழுவதாக லோக் ஆயுக்தா கருதினால், அரசு ஊழியரின் மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யலாம்.  அந்த பரிந்துரையை, எழுத்துப்பூர்வ வாதங்களை அளித்து நிராகரிக்க அரசுக்கு உரிமை உண்டு. இந்த சரத்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுந்தாது.

விசாரணை முடிந்த பின் என்ன நடக்கும்?

விசாரணைப்பிரிவு / லஞ்ச ஒழிப்புத்துறை தன் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆராய்ந்து புகார் சரியானதா இல்லையா என லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். புகாருக்கு உள்ளானவரும் தன் வாதங்களை வைக்க வாய்ப்பு வழங்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர் மீது அதிகாரம் கொண்ட அமைப்பிற்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யும். 

நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு எது?

அரசு ஊழியருக்கு தமிழக அரசு, 
சட்டமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர்,
அமைச்சர்களுக்கு முதலமைச்சர்,
முதலமைச்சருக்கு ஆளுநர்.

புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்டால்?
தவறான / அற்பத்தனமான புகார்கள் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சம் 1 ஆண்டு சிறை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கலாம்
போலி புகார் அளித்தவர் பாதிக்கப்பட்ட பொது ஊழியருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்
நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு இது பொருந்தாது

லோக் ஆயுக்தாவிற்கு எதிராகவே புகார் வந்தால்?
அதை லோக் ஆயுக்தா விசாரிக்காது. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை பணி நீக்கம் செய்ய தனி விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அது என்ன விதிகள்?
நீதிபதிகளை பணிநீக்கம் செய்வது போன்ற நீண்ட நடைமுறை :
45 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துடன் புகார் கொடுக்கப்பட வேண்டும். 
ஆளுநர் உத்தரவின் பேரில் புகாரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.
நிரூபிக்கப்பட்டால், பணி நீக்க ஆணையை ஆளுநர் வெளியிடுவார்.

"தனியார் பள்ளிகளை மிஞ்ச ப்ளான் ரெடி..." செம்மயா செக் வைத்த செங்கோட்டையன்!

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள முக்கிய தொழில்களை அடிப்படையாகக் கொண்டு திறன் பயிற்சி எனப்படும் புதிய பாடத் திட்டங்களை இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தனியார் பள்ளிகளை விஞ்சும் நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் +2 புதிய பாட மாற்றம் ஒரு வரலாற்றைப் படைக்கும் பாட மாற்றமாக அமையும். இந்தியாவில் 80 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தின் இந்த எண்ணிக்கை 1.60 லட்சமாக உள்ளது.



இதை மாற்றும் வகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில்களை அடிப்படையாகக் கொண்டு திறன் பயிற்சி எனப்படும் புதிய பாடத்திட்டத்தை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12 பாடத் திட்டங்கள் இணைக்கப்படும். இதனால், படித்து முடித்தவுடனேயே அந்தந்த பகுதிகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வியாக அது மாற்றப்படும்.

மாணவர்களுக்கு 500 இடங்களில் சிஏ பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. அந்தவகையில், தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழும்.



நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே நேரத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக 412 நீட் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் இருந்து பயிற்சிகள் தொடங்கும். சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 80 லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது: வழக்கம்போல பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு கடும் போட்டி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக திங்கள்கிழமை தொடங்கிய ஆன்லைன் கலந்தாய்வில் பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கான பெரும்பாலான இடங்கள் முதல் நாளிலேயே நிரம்பியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 67 இடங்கள் பூர்த்தியாகின. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வரலாற்றிலேயே மாணவர்கள் நேரில் வராமலேயே மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, குளறுபடிகள் ஏதும் நடைபெறாமல் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இருப்பினும் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பிற்பகலுக்குள் அது சரி செய்யப்பட்டது.
இதுகுறித்து மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு என்றாலும் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இடங்களைப் பூர்த்தி செய்ய முடியும். இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கும் மாணவர்கள் அதை 11-ஆம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 12-ஆம் தேதி எத்தனை காலி இடங்கள் உள்ளன, அவற்றுக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலேயே மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

ம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: நீட் கட்-ஆஃப் என்ன?

பயிற்சிக்கு பாடநூல் கொண்டுவராத ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை! -CEO PROCEEDINGS

அடுத்தாண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு:

புதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்கநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது  :

தமிழகத்தில் இனி வேலையின்மை என்ற நிலையை மாணவர்களுக்கு உருவாக்குகின்ற வகையில் பணிகள் நடைபெறுகிறது :

  வரும் கல்வியாண்டில் +2 புதிய பாடமாற்றம் ஒரு வரலாற்றை படைக்கும் பாடமாற்றமாக அமையும்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம்.- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

மாணவர் சேர்க்கை குறைந்ததால் அரசு முடிவு பட்டதாரிகளும் ஆசிரியர் பயிற்சியில் சேர அனுமதி 17–ந்தேதி கடைசி நாள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர சமீப காலமாக மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. எனவே ஆசிரியர் பயிற்சி முடித்த பலர் வேலைவாய்ப்பு இன்றி சிரமப்படுகிறார்கள். எனவே ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

நடப்பு கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சியில் சேர பிளஸ்–2 முடித்த மாணவ, மாணவிகள் 821 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அதில் கலந்தாய்வு நடத்தப்பட்டதில் 413 பேர் மட்டுமே ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தனர்.

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால் அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி பட்டதாரிகளும் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து பயில அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் சேர்ந்து பயில விரும்புவோர் நாளை(புதன்கிழமை) முதல் (www.tnscert.org) என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வருகிற 17–ந்தேதி கடைசி நாள் ஆகும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மாணவர்களை துன்புறுத்தியதாக கூறி ஆசிரியரிடம் ரூ1 லட்சம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் 2 பேர் கைது,

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இருக்காது: சி.பி.எஸ்.இ.,

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி., தரும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்தக்கோரி வழக்கு தொடப்பட்டது. இதுகுறித்த விசாரணையின் போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ., உத்திரவாதம் அளித்தது. தொடர்ந்து இந்த வழக்கை இரு வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்தி வைத்தது.

10/7/18

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதிவி உயர்வு - நெறிமுறைகள் வெளியீடு

காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும்.-சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


கூட்டுறவு சங்கத் தேர்தல்: 23ஆம் தேதி தீர்ப்பு!

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்
நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், வேட்பு மனு ஏற்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், உரிய விளக்கமின்றி மனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி திமுக கொறடா சக்கரபாணி, கூட்டுறவுச் சங்கங்களில் போட்டியிட்டவர்கள் என 400க்கும் அதிகமானோர் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றக் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூட்டுறவுச் சங்கத் தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5ஆவது கட்ட தேர்தல்களை நடத்தத் தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்தஉத்தரவை எதிர்த்துக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்தலாம் எனவும், முடிவுகளை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டதுடன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் மதுரை உயர் நீதிமன்றதில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து சுமார் 400க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்துத் தரப்புகளும் எழுத்துபூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி எழுத்துபூர்வமான வாதங்கள் கூட்டுறவு சங்க ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன. அதனையடுத்து இந்த வழக்குகளுக்கான தீர்ப்பு வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கை அளிக்க ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக்குழு தமது ஆய்வறிக்கையை கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை மத்திய அரசு அமைத்தது.

அந்தக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அறிக்கை வழங்கப்படாததால் கடந்த மாதம் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது 3-வது முறையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லோக் ஆயுக்தா அமைப்பு மற்றும் அதன் பணி என்ன?

 லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தெரிவுக்குழு அமைக்கப்படும். தெரிவுக் குழு தலைவராக முதல்–அமைச்சரும், உறுப்பினர்களாக சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் இருப்பார்கள். அந்த தெரிவுக் குழுவுக்கு பெயர் பட்டியலை
தயாரித்து வழங்க 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். தெரிவுக்குழு தேர்ந்தெடுக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

* லோக் ஆயுக்தா அமைப்புக்கு நீதிபதியோ, ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிர்வாகத்தில், விழிப்புணர்வில், நிதியில், சட்டத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவரோ தலைவராக நியமிக்கப்படுவார். ஏனைய 4 உறுப்பினர்களில் 2 பேர் நீதித்துறையை சார்ந்தவராக இருப்பார்கள். மீதமுள்ள 2 பேர் ஊழல் தடுப்பு உள்ளிட்ட கொள்கையில் 25 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள். தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்கும்போது அவர்களின் வயது 45–க்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

* மேலும், அரசின் துணை செயலாளர் நிலைக்கு குறையாதவர் லோக் ஆயுக்தா அமைப்பின் செயலாளராக நியமிக்கப்படுவார். அவரை அமைப்பின் தலைவர் தேர்வு செய்வார்.

* எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள், ஊராட்சி – நகராட்சி உறுப்பினர்கள், மத்திய – மாநில பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தேர்ந்தெடுக்க முடியாது.

* லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது. இதில், எது முதலில் வருகிறதோ அதுவரை பொறுப்பில் இருப்பார்கள்.

* லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படித்தொகையும், உறுப்பினர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் படித்தொகையும் வழங்கப்படும். இதற்கான நிதியை மாநில அரசு வழங்கும்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக் ஆயுக்தா இயங்கும். அதன் அதிகார வரம்புக்குள் முதல்–அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வருவார்கள்.

* குற்றம் நடைபெற்றதாகக் கருதப்படும் தேதியில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் அது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட வேண்டும்.

* அளிக்கப்படும் புகார்கள் மீது, புகார் பெறப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.

* பொய் புகார் அளித்தது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!!!

சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பள்ளிகளில் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. உலக சுகாதார அமைப்பு உடற்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 9,000 பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருப்பது விதிமீறல். ஆனால், இதனை மாநில அரசும் , சிபிஎஸ்இ நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. எனவே, உடற்கல்வியை பயிற்றுவிப்பது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உரிய விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்தமனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சிபிஎஸ்இ நிர்வாகத்தையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட உடற்கல்வி தொடர்புடைய வசதிகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET), ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம்(BIET), ஆரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (GTTI)ஆகியவற்றில், தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பு 2018-19 -ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு கடந்த ஜூன் 18 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை இணையதளத்தில்  (www.tnscert.org)விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு 821 பேர்விண்ணப்பித்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்களில் 713 தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதில், 413 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை அரசு ஆய்வு செய்ததில், கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தினால், இப்பள்ளிகளில் கற்றல் விளைவுகள் மேம்பட வாய்ப்புள்ளது என முடிவெடுக்கப்பட்டது.

எனவே, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு முடித்து, ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பமுள்ளவர்கள் இரண்டாண்டு (D.EI.Ed- Diploma in Elementary Education)  பட்டயப் படிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE)  வகுத்துள்ள விதிமுறைகளின்படி சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதள முகவரியில்(www.tnscert.org)   ஜூலை 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது: வழக்கம்போல பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு கடும் போட்டி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக திங்கள்கிழமை தொடங்கிய ஆன்லைன் கலந்தாய்வில் பி.எஸ்சி. வேளாண் 
படிப்புக்கான பெரும்பாலான இடங்கள் முதல் நாளிலேயே நிரம்பியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கடந்த 7-ஆம்தேதி நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 67 இடங்கள் பூர்த்தியாகின. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வரலாற்றிலேயே மாணவர்கள் நேரில் வராமலேயே மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, குளறுபடிகள் ஏதும் நடைபெறாமல் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இருப்பினும் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பிற்பகலுக்குள் அது சரி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு என்றாலும் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இடங்களைப் பூர்த்தி செய்ய முடியும். இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கும் மாணவர்கள் அதை 11-ஆம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 12-ஆம் தேதி எத்தனை காலி இடங்கள் உள்ளன, அவற்றுக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலேயே மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சில்பா அறிவிப்பு

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலய ஆடிதபசை முன்னிட்டு 27ம் தேதி நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி
நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

CPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும் -CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். -திண்டுக்கல் எங்கெல்ஸ்.

ரூ.22,891கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி அல்ல! மாநில
நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே!

CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.22,891 கோடியை PFRDA-விடம்செலுத்தக்கோரி போராடவில்லை.

அரசிற்கும், ஊழியர்களுக்கும் ஒருசேர பாதிப்பை ஏற்படுத்தும் *CPSதிட்டத்தையே முற்றாய் நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும்நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கை.

CPS-ஆல் ஊழியருக்குப் பாதிப்பா? அரசிற்கு பாதிப்பா?என்றால்இரண்டிற்கும் ஒரே பதில்,

*ஆம்!* என்பதே.

பழையஓய்வூதிய திட்டத்தின்படி அரசு தனது பங்காக எவ்விதத் தொகையும்
செலுத்த வேண்டிய அவசியமில்லை._

ஆனால், *CPS திட்டத்தில் பணியேற்கும் ஊழியருக்கான 10% தொகையைஊழியர்
பணியேற்ற மாதம் முதல் ஓய்வு பெறும் மாதம் வரை அரசு செலுத்தியாக
வேண்டும்.*

இப்படியாக 2003-ல் இருந்து கடந்த 2017 மார்ச் மாதம் வரை CPSதிட்டத்திற்காகத் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் & ஆசிரியர்களிடம் பிடித்தம்செய்த தொகை ரூ.11,000 கோடி.

இதற்கு ஈடாக தமிழக அரசு செலுத்திய பங்கு ஈடுத் தொகை ரூ.11,000 கோடி.

அரசு& அரசு ஊழியர்களின் CPS பங்குத் தொகைகளின் கூடுதலான இந்தரூ.22,891 கோடியை இன்னும் ஏன் PFRDA-விடம் செலுத்த வில்லை எனக்கேட்டுப் போராடவில்லை.

மாறாக,

CPS திட்டத்தால் அரசு தரப்பு செலுத்த வேண்டிய கட்டாயப் பங்குத்தொகையால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையிலிருந்து அரசு விடுபட,

CPS-ஐ முற்றிலுமாக நீக்கிவிட்டு, எங்களின் ரூ.,000 கோடியை வருங்காலவைப்பு நிதியில் சேர்த்து கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை எங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் .TET, TRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளால் அரசுப் பணியேற்கும்நபர்களின்
சராசரி பணிக்காலம் என்பது 35 ஆண்டுகள்.

அதேநபர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னான ஆயுட்காலம் என்பது சராசரியாக10 - 15 ஆண்டுகளே.

CPS திட்ட நடைமுறையில் ஊழியருக்காக *35 ஆண்டுகளும் மாதாமாதம் அரசுபெரும் தொகையை வழங்க வேண்டிய கட்டாயம்* உள்ளது.

ஆனால்,

பழையஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரின் ஓய்வுக்காலத்திற்குப்பின்னான 10 - 15 ஆண்டுகள் நிதி* ஒதுக்கினாலே போதுமானது.

இவ்வாறு ஒதுக்கும் நிதியானது 7 ஊதியக்குழுக்களை கடந்துள்ள நிலையிலும்ஒட்டுமொத்த செலவினத்தில் 14% மட்டுமே ஆகும்.

மேலும்,

NHIS உள்ளிட்ட திட்டங்களில் திருமணத்திற்குப் பின் ஊழியர்களின்
பெற்றோர்கள், அதன் பயன்களைத் துய்க்க இயலாத அனாதைகளாக அரசே
கொள்கை வகுத்துள்ளது.

இந்நிலையில் CPS-ல் இருந்து ஓய்வுபெறும் ஒரு நபருக்கு,

*குடும்பநலநிதி*
*மருத்துவக் காப்பீடு*
*பணிக்கொடை*
*மாதாந்திர ஓய்வூதியம்*
*உள்ளிட்ட எதுவுமே இல்லாத சூழலில்*
அவரிடமிருந்து பிடித்த தொகையிலும்100%-தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என்பது,

இந்நாட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அதன்பின் உயிருடன் வாழத்தகுதியற்றோர் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.


இவ்வாறாக, அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள்
நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும்,

CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு,

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் தேர்தல்கால & சட்டசபை அறிவிப்பின்படி,அரசின் நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கும்
படியாகத் தொடர்ந்து காலம் கடத்தாது

*அரசையும் அரசு ஊழியரையும் காக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனேநடைமுறைப்படுத்திட வேண்டும் .