யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/12/18

Flash News - (staff fixation -6to 8 ,9-10 ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல் வெளியீடு




பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்? : மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பம்

பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தை மாற்றப்போவதாக, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளதால், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், பள்ளி கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற செங்கோட்டையன், ஓர் ஆண்டுக்கும் மேலாக, பள்ளி கல்வியின் நிர்வாக முறையிலும், கல்வி முறையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். பொதுமக்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் விரும்பிய பல திட்டங்களை, அவர் அமல்படுத்தியுள்ளார்.இருப்பினும், சில நடவடிக்கைகளில், அவர் அவ்வப்போது பின்வாங்கி, திட்டங்களை மாற்றி மாற்றி அறிவிப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிவித்தார். அதற்கு மாணவர்கள் தயாராகி, ஒரு தரப்பினர் பொது தேர்வும் எழுதி விட்ட நிலையில், அந்த தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கும் சேர்த்து, ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையும் மாற்றப்பட்டு, வழக்கம் போல், பிளஸ் 2வுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.'பிளஸ் 2, புதிய பாடத் திட்டத்தில், அதிக பாடங்கள் இருப்பதால், அதை குறைத்து, வேறு பாடத்திட்டம் அமைக்கப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.'புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையில் இருக்கும்' என, பேட்டிகளில் சவால் விட்ட அமைச்சர், தற்போது இவ்வாறு அறிவித்துள்ளது, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த அறிவிப்பால், தமிழக பாடத் திட்டம் நிரந்தர தன்மையையும், உறுதியையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைக்கப்படும் பாடத் திட்டத்தில் படித்தால், மாணவர்கள், மருத்துவ, இன்ஜினியரிங் படிப்பில், சி.பி.எஸ்.இ., மாணவர்களை மிஞ்சி, மேல்நிலை கல்வியை பெற முடியுமா என, பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் நிர்ணயம் செய்வது எப்படி? - இயக்குநர் சுற்றறிக்கை!

வட மாவட்ட அரசுப் பள்ளிகளில் 5472 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளது!

வட மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 5472 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளதாகவும் மேலும் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் 6,000 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்

ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

ஆங்கில வழி வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு வகுப்பிலும் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை


15-க்கு குறைவாக மாணவர்கள் இருந்தால், அந்த மாணவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்கு மாற்ற வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விபரங்களை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு!

அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் ஜனவரி 8 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் :

உயர் நீதிமன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் ஜனவரி 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று ஜாக்டோ ஜியோ மாநில  ஒருங்கிணைப்பாளர் மாயவன் நாகர்கோவிலில் தெரிவித்தார். ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பாக நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விளக்க கூட்டம், நாகர்கோவிலில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில  செயலாளர் ராஜ்குமார், தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கனகராஜ் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நாகராஜன், மரிய மிக்கேல், இளங்கோ, முருகன், மணிகண்டன் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு, ஜனவரி 7ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த 10ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள்  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை? தள்ளிப்போட காரணம் என்ன? 12ம் தேதிக்குள் அறிக்ைக சமர்ப்பிக்க வேண்டும் என்று  கூறியுள்ளனர். மேலும் 21 மாத நிலுவை தொகையை தரமுடியாது என்று கூறுவது ஏன்? 21 மாத நிலுவை தொகை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

 சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றோம். இவையும் 7ம் தேதி  பரிசீலிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம். எங்களது கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க வில்லையெனில், ஜனவரி 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.  போராட்டத்துக்கு தள்ளிவிடுவது அரசுதான். ஜாக்டோ ஜியோ போராட்டத்தை விரும்பவில்லை. இந்தநிலை ஏற்பட அரசு எடுத்து வருகின்ற முடிவுகளே காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் :

அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அஞ்சல் வழி கல்வி அல்லது மாலை நேரக் கல்லூரிகளில் சேர்ந்து பயில விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உயர் அலுவலர் அனுமதி வழங்கிட வேண்டும் .தவறும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதி படிப்பை தொடரலாம் :

10,+2 மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் பொதுத் தேர்வு வினாத்தாள்கள் இறுதி செய்யும் பணிகள் தீவிரம் :

TNPSC Group 2 Preliminary Result Published- Click Here To Download PDF:

17/12/18

School Morning Prayer Activities - 17.12.2018




பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 105

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

பழமொழி:

Every man is mad on some point

சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே

பொன்மொழி:

பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
ரஷ்யா

2) கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
டென்மார்க்

நீதிக்கதை :

நீதிக் கதைகள் – பேராசை பெரும் நஷ்டம்

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.


ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1.அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

2.பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது

3.கஜா புயலால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்கள் எவை? அதிகாரப்பூர்வ பட்டியலை அரசு வெளியிட்டது

4.பெய்ட்டி புயல்: ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை

5.உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

L.K.G மாணவர் சேர்க்கை தொடக்கம் -அரசு பள்ளியில் முதல் நாளிலேயே 52 பேர் சேர்ந்து சாதனை

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மேலும் ஒரு முறைகேடு குறைத்துக் காட்டப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை: தேர்வர்கள் குற்றச்சாட்டு

உயர்நிலைப்பள்ளிகளில் 295 வேதியியல் ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையை டிஆர்பி நிர்வாகம் திட்டமிட்டு குறைத்துக் காட்டுவதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கான 387 வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்தேர்வு செய்வதற்கான அறிவிக்கை 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

முதுகலை வேதியியல், பி.எட்  படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதற்காக எழுத்துத்தேர்வு 2017ம் ஆண்டு நடந்தது. தேர்வு நடந்து ஒரு வார காலத்துக்குபின், தற்காலிக விடைக்கையேடு வெளியிடப்பட்டது. அதில் 6 கேள்விகள் தவறாக உள்ளது  தொடர்பாக தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்திடம் ஆட்சேபனை தெரிவித்தனர். 


குறிப்பிட்ட கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்க டிஆர்பி நிர்வாகம் மறுத்த நிலையில், தென் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் 6 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை  நடந்து வந்தபோதே, சமுதாய பிரிவு வாரியாக மதிப்பெண் தகுதி பெற்ற, 92 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்த விசாரணையில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது உறுதியானது. அதற்கு உரிய மதிப்பெண் வழங்குவதாக டிஆர்பி அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து  குறிப்பிட்ட 6 தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதே கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் டிஆர்பிக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது. தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்தில் முறையிடுமாறும் உத்தரவிட்டது. இதுதொடர்பாக குறிப்பிட்ட தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்தை தொடர்புகொண்டபோது, குறிப்பிட்ட வழக்கில் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்த தேர்வர்களுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்க முடியும் என்று அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 


அனைத்து காலிப்பணியிடங்களும் நிரம்பிவிட்டதாக டிஆர்பி தேர்வர்களுக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளது. வெறும் 92 இடங்கள் மட்டுமே நிரப்பிவிட்டு, மீதமுள்ள 295  இடங்களை காலிப்பணியிடங்கள் பட்டியலில் டிஆர்பி  நிர்வாகம் காட்டவில்லை.
இதனால் தங்களுக்கான பணியிடங்களை வேறு நபர்களுக்கு டிஆர்பி அதிகாரிகள் முறைகேடாக விற்பனை செய்திருக்கலாம் என தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்கனவே பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, குறிப்பிட்ட தேர்வு சில மாதங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டதோடு, அதுதொடர்பாக  விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தேர்வாணையத்தின் விடை கையேடு இறுதியானதா?
ஆசிரியர் தேர்வு வாரியத்தை போல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும் தேர்வு முடிந்ததும், தற்காலிக விடைக்கையேடு வெளியிட்டு, ஆட்சேபனைகளை பெற்று இறுதி விடைக் கையேடு வெளியிடுகிறது. அதற்கு இணையதளம் மூலம்  மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வாணையத்தின் 2வது விடைக்கையேடே இறுதியானது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் உள்ள பள்ளிகளை தத்தெடுக்க அதிகாரிகளுக்கு CEO அறிவுரை

தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி: அரசு பள்ளி ஆசிரியர்கள் அவதி

ஆசிரியர்களுக்கு நடக்கும் தொடர் பயிற்சிகளால், அரையாண்டு தேர்வு நடத்த, ஆசிரியர்கள் இல்லாமல், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


சேலம் மாவட்டத்தில், பிளஸ் 1 வகுப்பு இரண்டாம் தொகுதி பாடப்புத்தகங்களுக்காக, ஒவ்வொரு பாட ஆசிரியர்களுக்கும், இரண்டு நாள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. டிச., 13, 14 மற்றும் 17,18 தேதிகளில், வேதியல் பாட ஆசிரியர்களுக்கு மேட்டுப்பட்டி, சேலம் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பயிற்சி நடைபெறுகிறது.

மாணவியரிடையே சத்தான உணவு மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு பள்ளியிலிருந்து இரண்டு பெண் ஆசிரியர்களுக்கு, இரண்டு நாள் பயிற்சியளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, கற்றல் அடைவு மற்றும் தேசிய அடைவு ஆய்வுக்கான செயல்பாடுகள் குறித்து, பாடவாரியாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் தலா இரண்டு நாள் பயிற்சி, டிச., 13 முதல் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட அத்தனை பயிற்சிகளும், அரையாண்டு தேர்வு நடத்தப்படும், டிச., 11 முதல், 22 வரை, நடக்கிறது. இதனால், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும்,குறைந்தது நான்கு ஆசிரியர்கள் வரை பயிற்சிக்குசெல்ல வேண்டியுள்ளது. அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாமல், பள்ளி தலைமை ஆசிரியர்கள், தவிப்புக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு நடக்கும் நேரத்தில், தொடர் பயிற்சிகள் திட்டமிட்டிருப்பது கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி ஆசிரியர்களையும், பகுதிநேர பணியாளர்களையும் வைத்து, பலரும் தேர்வு நடத்துகின்றனர்.

தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களுக்கான சந்தேகங்களுக்கு விளக்கம் தர முடியாத நிலை உள்ளது. தேர்வு முடிந்த பின், இப்பயிற்சிகளை திட்டமிட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்

NMMS தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித் தொகைக்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை வழங்கப்படுவதற்காக நடத்தப்படும் என்.எம்.எம்.எஸ். தேர்வு தமிழகம் முழுவதும் 521 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்க 1 லட்சத்து 44,427 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 96 சதவீத மாணவர்கள் தேர்வெழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


என்.எம்.எம்.எஸ். தேர்வு காலை, முற்பகல் என இரு கட்டங்களாக நடைபெற்றது.  முதல் கட்டமாக நடைபெற்ற மனத்திறன் தேர்வில் (ஙஅப) எண் தொடர்கள்,எழுத்து தொடர்கள்,ஆங்கில அகராதிப்படி எழுத்துகளை வரிசைப்படுத்துதல், தனித்த எண்ணை கண்டறிதல்,வெண் படங்கள் தொடர்பாக 90 வினாக்கள் இடம்பெற்றிருந்தன.  ஒவ்வொரு வினாவுக்கும்  ஒரு மதிப்பெண்.


இதைத் தொடர்ந்து முற்பகலில் படிப்பறிவுத் தேர்வில் (நஅப) ஏழாம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும்,  8-ஆ ம் வகுப்பு அறிவியல், கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் முதல் இரு பருவங்களிலிருந்தும் 90 வினாக்கள் இடம்பெற்றிருந்தன.  இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில் மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வெழுதினர்.  தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் கிடையாது.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில்,  என்.எம்.எம்.எஸ். தேர்வில் கணிதம்,  ஆங்கிலப் பகுதியில் இடம்பெற்றிருந்த வினாக்கள் சற்று கடினமாக இருந்தன.  பல வினாக்கள் நன்கு யோசித்து பதிலளிக்கக் கூடிய வகையில் இடம்பெற்றிருந்தன.

இருப்பினும் சமூக அறிவியல்,  அறிவியல் போன்ற பகுதிகளில் இடம்பெற்றிருந்த கேள்விகள் ஏற்கெனவே படித்தவை என்பதால் ஓரளவுக்கு எளிதாக பதிலளிக்க முடிந்தது என்றனர்

உயர்கல்வி முன் அனுமதி வழங்குவதில் தாமதம் 4 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் பள்ளி ஆசிரியர்கள்

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ரொக்கப்பரிசு… :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில், அரசு உதவி பெரும் மேல்நிலை பள்ளி விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் வளர்ச்சிக்காக, 1 கோடியே 20 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கை திறந்து வைத்து பேசினார்.

 அப்போது, தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திற்குள், ஆங்கில மொழியை கற்கும் வகையில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் திறக்கப் பட உள்ளதாக தெரிவித்தார்.

 ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருதும், மத்திய அரசு சார்பில் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருவதாக கூறினார். விடுப்பு இல்லாமல் பணியாற்றும் ஆசிரியரை ஊக்கப்படுத்த, பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் நற்சான்றிதழும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

பள்ளி ஆய்வு குறித்து BEO க்கு தெரிவிக்கும் புதிய நடைமுறை வேண்டாம் - BRTE வலியுறுத்தல்

மதுரையில் பள்ளிகள் ஆய்வில் புதிய நடைமுறை வேண்டாம் என ஆசிரியர் பயிற்றுனர்கள் (பி.ஆர்.டி.இ.,) வலியுறுத்தினர். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் கற்றல் கற்பித்தலை பி.ஆர் டி.இ.,க் கள் ஆய்வு செய்கின்றனர்.


தேசிய அடைவு ஆய் வில் (நாஸ்) மாநிலத்தில் மதுரை 27வது இடத்தில் இருப்பதால் பி.ஆர்டி.இ., ஆய்வை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி அவர்கள் ஆய்வுக்கு சென்றவுடன் சென்ற நேரம், பள்ளியில் இருப்பது போன்ற போட்டோவை வாட்ஸ்ஆப்பில் மேற்பார்வையாளர் மற்றும் பி.இ.ஓ.,க்களுக்கு அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவிட்டார்.
  
பி.ஆர்.டி.இ.,க்கள் கூறுகையில், "நாஸ் தேர்வு தேர்ச்சி குறைய ஆசிரியர், பி.இ.ஓ.,க்களுக்கும் பொறுப்பு உள்ளது. ஆய்வு அறிக்கை மேற்பார்வையாளரிடம் அளிக்கிறோம். துறைக்கு தொடர்பில்லாத பி.இ.ஒ.,க்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை வேண்டாம்," என்றனர்.
  
சி.இ.ஓ., கூறியதாவது:'நாஸ்'ல் முதல் ஐந்து இடத்திற்குள் மதுரை வர ஆசிரியர் ஒத்துழைப்பு அவசியம். பி.ஆர்.டி.இ.,கள் அனைத்து பள்ளிக்கும் செல்கின்றனர். இதனால் ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு வருவர். 1- 5ம் வகுப்பு வரை பி.இ.ஓ.,க்களுடன் தொடர்பு ஏற்படுத்த அவர்களிடம் ஆய்வு விவரம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. குறைகள் குறித்து பி.ஆர்.டி.இ., நேரில் தெரிவிக்கலாம். உரிய மாற்றம் செய்யப்படும் என்றார்.